Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. யாழ் உறவுகளை அன்புடன் அழைக்கின்றார்கள் .

    • 0 replies
    • 654 views
  2. புலிகளுக்குப் பின்னான தமிழ் அரசியல்:- இந்திய அமைதிப் படையினர் வெளியேறிக்கொண்டிருந்த பின்னணியில் நிலாந்தன் திசை பத்திரிகையில் அரசியல் பத்திகளை எழுதத் தொடங்கினார். அதிலிருந்து தொடக்கி இருபத்தியேழு ஆண்டுகளாக எழுதிவரும் அவர் ஈழநாதம், வீரகேசரி, தினக்குரல் ,உதயன் ஆகிய பத்திரிகைகளில் எழுதியுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக தினக்குரல் வார பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். தினக்குரலில் வரும் அவருடைய கட்டுரைகள் பின்னர் குளோபல் தமிழ் செய்திகள், பொங்குதமிழ், மாற்றம் Jds Lanka(Journalist for Democracy in SriLanka)போன்ற பல இணையத் தளங்களிலும் பிரசுரிக்கப்படுகின்றன. போர்க்காலங்களில் அவர் எழுதிய நூற்றுக் கணக்கான கட்டுரைகளை மீளப் பெறமுடியாத ஒ…

  3. 10 நாட்கள், 10 லட்சம் தலைப்புகள், ஒருகோடி புத்தகங்கள்; துவங்கியது சென்னை புத்தக கண்காட்சி! சென்னை; தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் 39 வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை தீவுத்திடலில் இன்று துவங்குகிறது. இதில் விகடனின் புதிய இலக்கிய வெளியீடான தடம் இதழுக்கென பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஆண்டுதோறும் சென்னையில் புத்தக கண்காட்சியை நடத்திவருகிறது. ஆண்டுதோறும் வாசகர்களுக்கு இந்த 10 தினங்கள் தீபாவளி கொண்டாட்டமாக இருக்கும். கோடிக்கணக்கான புத்தகங்களில் தங்கள் அறிவுப்பசிக்கு உகந்த புத்தகங்களை ஒரே இடத்தில் தேடி வாங்கிச்செல்வது அவர்களுக்கு பெரும்…

  4. http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1582:2013-06-26-01-40-41&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29

  5. எஸ்.ரா கதை சொல்லி கேட்பது ஒரு சுவாரஸ்யம். சுவாரஸ்யம் என்பதைவிட ஒரு மயக்கம் கொடுத்துவிடும். பிரசாத் ஸ்டுடியோ வாசலில் ஒருமுறை சந்தித்தபோது படிக்கத் தெரிந்த சிங்கத்தின் ஒன் லைனைரை கூறினார். குழந்தைகள் தினசரிகளை வாசிக்க வைக்க ஒரு சிறார் நாவல் என்றார். எஸ்.ரா செய்யப்போகும் மாயத்திற்காக காத்திருந்தேன். விறுவிறு வாசிப்பு. எட்டு வயது முதல் 12 வயது குழந்தைகளுக்கான புத்தகமாக வந்துள்ளது. அதைவிட சிறிய குழந்தைகளுக்கு வாசித்தும்காட்டலாம். ஒரு தினசரியில் வரும் பல்வேறு செய்திகளில் முக்கியத்துவத்தை ஒரு கற்பனைக்கதை மூலம் காட்டில் அமர்ந்து கதையில் போக்கினை கவனிக்க வைக்க முயல்கின்றார். ‘வாவ்’ என்ற சிங்கம் எப்படி செய்தித்தாள் வாசிக்க ஆரம்பிக்கின்றது, அதைப்பற்றிய செய்தி செய்தித்தாளில் வர …

  6. நூல் அறிமுகம் - சுப.சோமசுந்தரம் எனது நெருங்கிய நண்பர் பேரா.ச.தில்லைநாயகம் அவர்கள் திருக்குறளுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் காலத்துக்கேற்ற எளிய உரையொன்று அளித்திருக்கிறார்கள். இவ்வுரைநூல் இம்மாதம் (ஜூலை 2022) 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்திற்கு அடியேன் அளித்துள்ள அணிந்துரையும், நூலாசிரியர் பேரா.ச.தில்லைநாயகம் அளித்துள்ள நூன்முகமும் நூலுக்கான சிறந்த அறிமுகமாக இருக்கும் என நினைக்கிறேன். …

  7. ஆல்பெர் காம்யு, 1960ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் உயிரிழந்தபோது அவர் கைப் பையில் வைத்திருந்த முடிக்கப்பெறாத நாவல்தான் ‘முதல் மனிதன்’. தற்போது தமிழில் வெளிவந்திருக்கும் இந்தப் படைப்பு குறித்த அறிமுகம் இது. முப்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் காம்யுவின் 'முதல் மனிதன்' என்ற நாவலை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வெ. ஸ்ரீராம் பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். புகழ்பெற்ற பிரெஞ்சு நூல்கள் பலவற்றின் மொழிபெயர்ப்புகளைத் தமிழில் தொடர்ந்து வெளியிட்டுவரும் க்ரியா பதிப்பகம் இதனையும் வழக்கமான நேர்த்தியோடு வெளியிட்டுள்ளது. காம்யுவின் 'முதல் மனிதன்' ஆதிமனிதனல்ல. முதல் மனிதனுக்குத் தந்தை இல்லை. அவனுக்கென்று மரபு எது…

    • 0 replies
    • 540 views
  8. சென்னை: இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது தமிழ் எழுத்தாளார் பூமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரின் 'அஞ்ஞாடி' என்ற நாவல் இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் பூமணியின் இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம். இவர் 1947 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி என்ற ஊரில் பிறந்தவர். பூமணி பல்வேறு இலக்கியப் பங்களிப்பை தமிழில் தொடர்ந்து செய்து வருகிறார். இவரின் வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், வெக்கை, நைவேத்தியம், பிறகு, வரப்புகள், வாய்க்கால் ஆகிய நாவல்கள் வாசகர்கள் மத்தியில் பிரபலமானவை. அஞ்ஞாடி நாவல் 19 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் சமணர் கழுவேற்றம், பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி, நாயக்க மன்னர்களின் வருகை, பாளையக்காரர்களிடை…

  9. சயந்தனின் ஆறா வடு குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன் 16 பெப்ரவரி 2012 ஈழத்தில் கவிதை அரசியல் மயப்பட்டிருப்பது போலவே இலக்கிய விமர்சனமும் அதி அரசியல்மயப்பட்டதாகத்தான் இருக்கிறது. கோவிந்தனின் புதியோர் உலகம் நாவலின்பின் முக்கியத்துவம் பெற்ற, விவாதிக்கப்பட்ட நாவல்களாக ஷோபா சக்தியின் கொரில்லாவும், விமல் குழந்தைவேலின் கசகறணம் போன்றனவும்தான் இருக்கின்றன. ஈழத்தின் அரசியல் விமர்சனத்தில் செயல்படுகிற அதே மன அமைவுதான் இலக்கிய விமர்சனத்திற்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலி ஆதரவு-எதிர்ப்பு எனும் இரு துருவப் பார்வையில் இருந்து ஏதேனும் ஒரு துருவத்தைச் தேர்ந்து கொண்டு எழுதுவதுதான் ஈழ இலக்கியத்தின் அரசியல்சார் தீவிரப் பண்பு என…

  10. வரலாற்றின் குற்றக் கிடங்கு November 29, 2025 — கருணாகரன் — ‘உலகின் சொர்க்கத்தீவு‘ (The paradise island of the world) என்று வர்ணிக்கப்படும் இலங்கையில், பொன்னும் மணியும் விளைவதற்குப் பதிலாக, மனிதப் புதைகுழிகளே விளைந்துள்ளன. இந்தப் புதைகுழிகளை விளைத்தவர்கள் (விதைத்தவர்கள்) அநேகமாக ஆட்சியாளர்களே. (இப்படியான காரியங்களைச் செய்வதில்தான் இவர்கள் கெட்டிக்காரர்கள். இப்பொழுது யாழ்ப்பாண நகரத்தில் உள்ள செம்மணியில் ஒரு புதைகுழி அகழ…

  11. பாரதத்தில் பாண்டவர்கள் துரியோதனன், கர்ணன், பீஷ்மர் துரோணர் அபி மன்யு கடோத்கஜன் அசுவத்தாமன் தவிர எமக்கு தெரிந்து பெரிதளவில் கொண்டாடப்பட்ட வீரர்கள் மிகக் குறைவு.தமிழ் பதிப்புகளில் அவற்றின் நீளம் கருதியோ..போதியளவு தகவல்கள் இல்லாமல் போனதாலோ அவர்கள் பற்றிய எந்த தகவல்களை தெரிவிக்காமலே முடித்து விடுகின்றனர்.. ஆனால் ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கும் வெண்முரசில் அவர்கள பற்றிய ஏராளமான தகவல்களை கொட்டுகிறார்..அவர்களின் வம்சாவளி ,நாடு, அவர்களின் மனைவி,பிள்ளைகள், இப்பிடி பல அவர்களில எனக்கு பிடித்த வீரர்களாக சாத்யகி,பூரிசிரஸ்வஸ்,பகதத்தன்,பாஹ்லீகர்..போன்றவர்களை குறிப்பிடலாம்.. வெண்முரசில் இப்போது 12ம் நாள் போர் நடந்து கொண்டிருக்கிறது.பீஷ்மர் 10ம் நாளில் விழுந்து விட 11ஆம் நாளில் துரோணர…

  12. எழுத்தின் அதிகாரம்: ஓலைச்சுவடி, புத்தகம் முதல் டிவிட்டர் வரை அபிலாஷ் சந்திரன் எழுத்தாளர்களை விட வாசகர்கள் அதிக அறிவாளிகள் என்பது என் அனுமானம். எழுத்தாளர்களுக்கு தம் அறிவை இன்னும் புத்திசாலித்தனமாக, தர்க்கபூர்வமாக, கூர்மையாக வெளிப்படுத்த தெரிகிறது. அவர்களிடத்து இந்த மொழி தரும் ஒரு தன்னம்பிக்கை இயல்பாக இயங்குகிறது. ஆயிரமாண்டு அறிவையும் நுண்ணுணர்வையும் தன்னிடத்து கொண்டுள்ள மொழியில் புழங்கும் போது இயல்பாய் அவற்றை கடன் பெறும் எழுத்தாளன், ஒவ்வொரு சொல்லின் பின்னும் தான் எதிர்கொண்ட ஐரோப்பிய கல்வியின் செறிவை கண்டுள்ள எழுத்தாளன் தன் எதிரில் தேரும் கவச குண்டலமும் அற்று நிற்கும் வாசகனை விட மேலானவனாக தன்னை காட்டி விட இயலும். அது உண்மையில் எழுத்தின் வன்மை. எழுத்தாளனின் மேன்மை …

  13. அன்னாவும், ஸோபியாவும், நம் வாசிப்புக்களும்... இளங்கோ-டிசே 1. தஸ்தயேவ்ஸ்கியின் அன்னாவையும், டால்ஸ்டாயின் ஸோபியாவையும் புரிந்துகொள்வது என்பது மிகவும் சிக்கலானது. அதேபோன்று தஸதயேவ்ஸ்கியும், டால்ஸ்டாயும் மதிப்பிடும்போது அவர்கள் வாழ்ந்த காலத்தையும், அதன் பின்னணிகளையும் விளங்கிக் கொள்ளுதல் அவசியமாகும். படைப்பாளிகளைப் போல, அவர்களின் துணைகளினூடாக வரும் 'கதைகளும்' வாசகர்களைச் சலனமடையச் செய்கின்றன. இவற்றில் பல படைப்பாளிகளுக்கு ஏற்கனவே இருக்கும் 'திருவுரு'க்களை மேலும் செதுக்குகின்றன. சில அவர்கள் மேல் ஏற்றப்பட்ட விம்பங்களைச் சிதைக்கவும் செய்கின்றன. படைப்பாளிகள் நமது அகவுலகத்தில் தத்தம் படைப்புக்களினூடாக நெருக்கம் கொள்கின்றனர். அதேவேளை இந்த நெருக்கமானது, படைப்பின் உச்ச…

  14. Through The Fire Zones காலத்தைக் கைப்பற்றிய நூல் ! வன்னிப் போர்க்களத்தை குறுக்கறுத்து அதன் அவலத்தை முன்வைக்கிற நூல் இது. புகைப்பட ஊடகவியலாளர் அமரதாஸ் இன் 400 பக்கங்களைக் கொண்ட இந் நூலில் உள்ளடக்கப்பட்டிருக்கிற இந் நிழற்படங்கள் கறுப்பு வெள்ளை என சொல்லப்படுகிற சாம்பல்நிற (grey) வடிவில் உள்ளன. A4 தாள் அளவீட்டில் வந்திருக்கிறது. இது ஒரு வரலாற்று ஆவணமாக பார்க்கப்படக் கூடியது. புலிகளின் நிழல் அரசு கட்டியமைக்கப்பட்டிருந்த வன்னி பிரதேசத்துள் ஒரு சுயாதீன புகைப்பட ஊடகவியலாளராக அமரதாஸ் இருக்க முடிந்தது ஒரு அதிர்ஷ்டம்தான். போர்க்கள படப்பிடிப்பு சூழல் என்பது உயிர் ஆபத்து நிறைந்தது மட்டுமல்ல, உளவியல் தாக்கங்களையும் ஏற்படுத்த வல்லது. உயிர் அறுந்து போகிற அல்லது மோ…

  15. அஷ்வ கோசரின் புத்தசரிதம் - ஆங்கில மூலத்திலிருந்து. சிலவருடங்களுக்கு முன் இந்திய தத்துவஞானி அஷ்வகோசரின் புத்த சரிதம் என்னும் நூலைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அந்த சமஸ்கிரத நூலை எட்வாட் B. கொவெல் என்னும் ஆங்கில அறிஞர் எடிட் செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். அதில் புத்த பெருமானின் பிறப்பு வரையான பகுதிகளை மொழிபெயர்த்துப் பார்த்தேன். கம்பியூட்டரில் தொலைந்துபோன அந்தப்பகுதி தற்போதுதான் கையிற் கிடைத்தது. அதை எனது தவறுகளுடன் சேர்த்து 2023 இல் தற்போது முகநூலில் வெளியிடுகிறேன். பிடித்தவர்கள் வாசித்துவிட்டுத் தங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள் அது மேற்கொண்டு அந்த நூலை மொழிபெயர்த்து முடிக்க மிகவும் உதவியாயிருக்கும். …

    • 0 replies
    • 385 views
  16. புத்தாண்டில் புதிய நாவல் அறிவிப்பை வெளியிட்ட தீபச்செல்வன் பூங்குன்றன் ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் தனது புதிய நாவல் குறித்த அழைப்பை புத்தாண்டு தினமான நேற்று வெளியிட்டிருந்தார். சைனைட் என்பதே தீபச்செல்வன் எழுதும் புதிய நாவலின் பெயர். நடுகல், பயங்கரவாதி நாவல்கள் வாயிலாக பெரும் கவனம் பெற்ற தீபச்செல்வன், நடுகல் சிங்கள மொழியாக்க நாவல் வாயிலாக சிங்கள மக்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தான் எழுதும் புதிய நாவலான சைனைட் குறித்து புத்தாண்டு தினத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் குறியீடாக கருதப்படும் சைனைட், போராளிகளின் கழுத்தில் தொங்கும் முக்கிய ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் …

  17. Mubarak Abdul Majeeth 23 hrs · முபாற‌க் அப்துல் ம‌ஜீத் எழுதிய‌ இல‌ங்கையின் முத‌ல் பூர்வீக‌ம் முஸ்லிம்க‌ளே என்ற‌ நூலை காத்தான்குடியில் பின்வ‌ரும் முக‌வ‌ரியில் பெற‌லாம். யுனிக‌ம் புக் ஷொப் பிர‌தான‌ வீதி காத்தான்குடி. 0779114100

    • 0 replies
    • 629 views
  18. [size=4][size=6]கொரில்லா ஈழத்து அரசியல் நாவல்கள் [/size] [/size] [size=4]யமுனா ராஜேந்திரன் [/size] [size=4]“ஒரு யுத்தச் சூழல் மக்கள் வாழ்நிலையின் சகலதளங்களிலும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பிரதிபலிப்புகள் எதிர்வினைகள் என்பன பற்றிய அச்சமில்லாத விசாரணைக்கான ஒரு வெளி தேவையாகிறது. விடுதலைப் போராட்டமும். வீரமும் பெருந்தியாகங்களும் திடசித்தமும் அரசியல் நிலைமைகளின் ஒரு பரிணாமமாய் அமைந்த நிலையில் ஈவிரக்கமற்ற கொலைகளும் வதைமுகாம்களும், சர்வாதிகார அகங்காரமும் மறுபுறம் செழிக்கலாயி…

  19. மனப்பிறழ்வின் நாட்குறிப்பேடு அஷேரா – தி.லலிதகோபன் அறிமுகம் சயந்தன் கதிர் என்று அழைக்கப்படும் சயந்தன் அவர்களின் மூன்றாவது நாவல் பிரதி அல்லது ஆதிரைக்கு பின்னரான பிரசவம் என்றோ இந்த அறிமுகத்தினை சுருக்கமாக நான் கடந்து விடலாம். ஆனால் அதற்கு அப்பாலும் சில செய்திகளை சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. முதன்முதலாக “ஆதிரை” என்ற பெயரினை முகநூலின் மூலமாக கேள்வியுற்றதன் பின்னர் நான் அந்த நூலினை வாசிப்புக்காக தேட முற்பட்டதன் காரணம் “ஆதிரை” என்ற பெயர் என்னுள் ஏற்படுத்தியிருந்த மயக்கமே. இதை பிரமிள் அவர்களின் மொழிதலில் குறிப்பிடுவதானால் “இடையறாத உன்பெயர் நிலவிலிருந்திறங்கி என்மீது சொரியும் ஓர் ரத்தப் பெருக்கு.” எனலாம். ஆனாலும் ஆதிரைக்கான எனது காத்திருப்பின் நாட்கள் சுமார் ஐ…

  20. படித்தோம் சொல்கின்றோம்: நீடித்த போரின் வலி சுமந்த மக்களின் கதைகளைப்பேசும் "வன்னியாச்சி"! வன்னிபெருநிலப்பரப்பின் ஓலங்களை படைப்பிலக்கியத்தில் ஒலிக்கச்செய்த தாமரைச்செல்வி! முருகபூபதி நீடித்த போரினால் வலிசுமந்த மக்களின் கதைகளைச்சொல்லும் தாமரைச்செல்வியின் " வன்னியாச்சி" பெரும் கதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 37 கதைகளையும், ஜீவநதியில் இம்மாதம் வெளியான அவனும் அவளும் என்ற சிறுகதையையும் சேர்த்து மொத்தம் 38 கதைகளையும் படித்து முடித்த தருணத்தில், தமிழ் ஊடகங்களில் " அரசின் மகா வலி - தமிழருக்கு மன வலி " என்ற தலைப்பிலும் தொனியிலும் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மக்கள் வலிசுமந்த மேனியராகவே கடந்த மூன்றரை தசாப்த காலமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை, தனது கதைகளின் ஊடாக பத…

  21. -க. அகரன் இறுதி யுத்த காலத்தில், குடும்பத்தினருடன் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் சிலரது விவரங்கள் அடங்கிய நூல் ஒன்று, வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், இன்று (01) வௌயிடப்பட்டது. சிறுவர் தினத்தை முன்னிட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி, வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களால், வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்னால், இன்று (01) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே, இந்த நூல் வெளியிடப்பட்டது. http://www.tamilmirror.lk/வன்னி/உறவுகளால்-நூல்-வெளியீடு/72-239430

    • 0 replies
    • 353 views
  22. ஐமீல் ஹத்மலிடம் ஒரு விசித்திரமான பழக்கமிருந்தது, அவன் கண்ணாடி முன் அமர்ந்தபடி தன் பிம்பத்தின் முன்பாகப் பகடையை உருட்டி சூதாடிக்கொண்டிருப்பான். சில வேளைகளில் அவனுடன் சூதாடுவதற்கு வரும் உமர் கேட்டதுண்டு “ஜமீல் உன்னோடு நீயே ஏன் சூதாடுகிறாய்.” “ஒருவனுக்குத் தன்னைத் தவிர வேறு ஏமாற்றாத துணை ஏதிருக்கக்கூடும்.” “தன்னை ஆராதிப்பவர்களைக் கண்டிருக்கிறேன், இது என்ன பழக்கம், தன்னைத் தானே பழிவாங்கிக் கொள்வதா?” “உமர், இது சிறு வயது பழக்கம். கண்ணாடி பார்க்கத் தொடங்கிய முதல் நாளை நீ மறந்திருப்பாய், என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை, நான் இப்படித்தானிருப்பேன் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது விளக்க முடியாத அதிர்ச்சி. ஆனால் மெல்ல ந…

    • 0 replies
    • 410 views
  23. அலெக்ஸாண்டரின் இந்தியா நோக்கிய படையெடுப்பு உண்மையாகவே அவனின் உலகத்தை பிடிக்கும் ஆசையின் பகுதியா? அல்லது வேறு ஏதோ ஒரு இரகசியத்தை தேடி வந்தானா? அப்படி 25000 மைல்கள் வரை வந்தவன் சிந்து நதி தீரம்(இன்றைய பஞ்சாப் /பாகிஸ்தான் பகுதிகள்?) உடன் திரும்பியதற்கான காரணம் என்ன? அவன் தேடி வந்த இரகசியத்தை அவன் கண்டறிந்து அதை அடைந்து விட்டதனாலா? அல்லது அவனின் படையினரின் எதிர்ப்பா? களைப்பா? ####################### ஒலிம்பியாஸிடம் ( அலெக்ஸாண்டரின் அம்மா) தூரதேசத்து துறவி ஒருவரினால் 5 கட்டளைகள் எழுதப்பட்ட கன சதுரமும் ஆட்டு தோலில் எழுதிய குறிப்பு மற்றும் வரை படங்களும் கொடுத்து இவற்றை அவன் சரியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அப்படி நிறைவேற்றுவானாயின் அவள் எதிர்பார்ப்பதை அவன் அடைவான் அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.