நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் நாவலுக்கு அடுத்தபடியாக கல்கி எழுதிய நாவல்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சிவகாமியின் சபதம் நாவல்தான். அந்த நாவலின் கதையை சில நிமிடங்களில் தெரிந்துகொள்ளலாமா? 1940களில் கல்கி இதழில் வெளியாகி பரவலான கவனத்தை ஈர்த்த இந்த நாவல், பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிட்சுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டது. இந்த நாவலின் முக்கியமான பாத்திரங்கள்: பரஞ்சோதி, ஆடலரசி சிவகாமி, அவளுடைய தந்தையும் பல்லவ நாட்டின் தலைமைச் சிற்பியுமான ஆயனர்,…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
புத்தாண்டில் புதிய நாவல் அறிவிப்பை வெளியிட்ட தீபச்செல்வன் பூங்குன்றன் ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் தனது புதிய நாவல் குறித்த அழைப்பை புத்தாண்டு தினமான நேற்று வெளியிட்டிருந்தார். சைனைட் என்பதே தீபச்செல்வன் எழுதும் புதிய நாவலின் பெயர். நடுகல், பயங்கரவாதி நாவல்கள் வாயிலாக பெரும் கவனம் பெற்ற தீபச்செல்வன், நடுகல் சிங்கள மொழியாக்க நாவல் வாயிலாக சிங்கள மக்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தான் எழுதும் புதிய நாவலான சைனைட் குறித்து புத்தாண்டு தினத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் குறியீடாக கருதப்படும் சைனைட், போராளிகளின் கழுத்தில் தொங்கும் முக்கிய ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் …
-
- 0 replies
- 386 views
-
-
அந்தரம் sudumanalJune 28, 2015 நாவல் அறிமுகம் இந் நூலின் ஆசிரியர் தொ.பத்திநாதன் 1990 இல் போர்க் கெடுபிடி காரணமாக தனது பதினாறு வயதில் படிப்பையும் விட்டு தமிழகத்துக்கு அகதியாக போய்ச் சேர்ந்தார். மண்டபம் அகதி முகாமில் தொடங்கி பின் மதுரை மாவட்டம் உச்சப்பட்டி முகாமில் அகதி வாழ்க்கையை தொடர்ந்தார். 29 ஆண்டுகளின் பின் இலங்கையில் தனது பிறந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார். அந்த கதைசொல்லலோடு தொடங்கிய அந்தரம் பின் அகதிகள் முகாமினுள் புகுந்துகொள்கிறது. அந்தரம் நாவல் அவரது நான்காவது நூல். “தேவடியா பயலுக… அகதி நாய்ங்க. அவன் அக்கா தங்கச்சியை போய் ஏறவேண்டியதுதானே. அதான் சிங்களவன் இவன்கள சுட்டு கொல்லுறான். இந்த அகதி நாயளுக்கு நாம பாவம் என்று அடைக்கலம் கொடுத…
-
- 0 replies
- 513 views
-
-
புதியதோர் உலகம் ரவி (சுவிஸ்) – உள்ளும் புறமும் புதியதோர் உலகம் நாவலின் முதல் பதிப்பு 1985 இல் தீப்பொறி குழுவினரால் வெளியிடப்பட்டது. பின்னர் இந் நூலை பிரதிகள் செய்து, தானே அதை நூலாகக் கட்டி தோழர் சபாலிங்கம் பாரிஸ் இல் விநியோகித்தார். இதன் இரண்டாவது பதிப்பு 1997 இல் வெளிவந்தது. இதை தீப்பொறிக் குழுத் தோழர்கள் விடியல் பதிப்பகத்தினூடாக வெளியிட்டிருந்தார்கள். (புத்தக வடிவமைப்பை நான் செய்திருந்தேன்). இப்போ மூன்றாவது பதிப்பாக தமிழகத்தின் சிந்தன் புக்ஸ் 2023 இல் வெளியிடுகிறது. 37 வருட காலத்தின் பின்னும் இந்த நூல் மறுபதிப்பாக வருவது அதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது. இலக்கியத் தளம் என்பதைவிட அரசியல் தளத்தில் அதன் பேசு பொருள் இப்போதும் பொருந்துவனவாக இருப்பதே …
-
- 3 replies
- 480 views
-
-
செவ்வாய், 19 ஏப்ரல், 2022 கறுப்பு : அறிஞர் தொ.பரமசிவன் இயற்கை பல்வேறு நிறங்களை உடையது. இயற்கையின் நிறங்களில் மனிதன் சுவை, அழகு, பயன் ஆகியவற்றைக் கண்டான். எனவே அவன் படைத்த செயற்கைப் பொருள்கள் பல நிறங்களில் அமைந்தன. இக்காலத்தில் நிறத்தையும் குறிக்கும் ‘வண்ணம்' என்ற சொல் அக்காலத்தில் அழகு, இசை, ஒழுங்கு ஆகிய பொருள்களை மட்டுமே தந்தது. எல்லா இயற்கைப் பொருள்களிலும் நிறவேறுபாடு இருப்பது போல, மனித உடம்பிலும் அதாவது, தோலிலும் நிற வேறுபாடுகள் உண்டு. அந்த வேறுபாடுகள் இன்றைய உலகில் வறுமைக்கு அல்லது வளமைக்கு, உயர்வுக்கு அல்லது தாழ்வுக்கு, அதிகாரத்திற்கு அல்லது அடிமைத்தனத்திற்கு, ஒடுக்கும…
-
- 0 replies
- 598 views
- 1 follower
-
-
தமிழர் திருநாளில் கிளிநொச்சியில் தீபச்செல்வனின் பயங்கரவாதி வெளியீடு ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீட்டு விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. நடுகல் நாவல் வாயிலாக தமிழர்கள் மத்தியில் மாத்திரமின்றி சிங்களவர்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஏற்படுத்திய தீபச்செல்வனின் இரண்டாவது நாவல் பயங்கரவாதி. தமிழ்நாட்டில் உள்ள டிஸ்கவரி புக்பேலஸ் இந் நூலை வெளியிட்டுள்ளது. இன்று கிளிநொச்சியில் 3மணிக்கு கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறை தலைவர் பேராசிரியர் கலாநிதி ரகுராம் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொள்கிறார். அத்துடன் முன்னாள் …
-
- 2 replies
- 804 views
-
-
"கால்களின் கேள்விகளின்" வெற்றி "கால்களின் கேள்விகள்" நூலின் முதற்பதிப்பு தீர்ந்து விட்டதென அறிந்து மகிழ்கிறேன்! நான் இவ்வருடத்திற்கான நூல்களை தயார் பண்ணும் போது உயிர்மையில் வெளிவரப் போகும் நூல்களில் மோடி குறித்த நூலே கவனம் பெறுமென நினைத்தேன். மாற்றுத்திறனாளிகள் குறித்த விவாதங்களில் அக்கறை செலுத்துவோர் மிகவும் குறைவு என நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக நிகழ்ந்துவிட்டது. இந்த புத்தகத்தில் உள்ள உணர்வெழுச்சியான, அந்தரங்கமான பகுதிகள், இதன் கோபம், இதிலுள்ள தனித்துவமான பார்வை வாசகர்களை கவர்ந்திருக்கிறது என நினைக்கிறேன். மேலும் தமிழ் பிரபா கொடுத்த அற்புதமான அறிமுகம், வாசகர்களின் பரஸ்பரம் வாய்வழி பரிந்துரை இந்நூலை பரவலாக கொண்டு போயிருக்கி…
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
அஷ்வ கோசரின் புத்தசரிதம் - ஆங்கில மூலத்திலிருந்து. சிலவருடங்களுக்கு முன் இந்திய தத்துவஞானி அஷ்வகோசரின் புத்த சரிதம் என்னும் நூலைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அந்த சமஸ்கிரத நூலை எட்வாட் B. கொவெல் என்னும் ஆங்கில அறிஞர் எடிட் செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். அதில் புத்த பெருமானின் பிறப்பு வரையான பகுதிகளை மொழிபெயர்த்துப் பார்த்தேன். கம்பியூட்டரில் தொலைந்துபோன அந்தப்பகுதி தற்போதுதான் கையிற் கிடைத்தது. அதை எனது தவறுகளுடன் சேர்த்து 2023 இல் தற்போது முகநூலில் வெளியிடுகிறேன். பிடித்தவர்கள் வாசித்துவிட்டுத் தங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள் அது மேற்கொண்டு அந்த நூலை மொழிபெயர்த்து முடிக்க மிகவும் உதவியாயிருக்கும். …
-
- 0 replies
- 383 views
-
-
Through The Fire Zones காலத்தைக் கைப்பற்றிய நூல் ! வன்னிப் போர்க்களத்தை குறுக்கறுத்து அதன் அவலத்தை முன்வைக்கிற நூல் இது. புகைப்பட ஊடகவியலாளர் அமரதாஸ் இன் 400 பக்கங்களைக் கொண்ட இந் நூலில் உள்ளடக்கப்பட்டிருக்கிற இந் நிழற்படங்கள் கறுப்பு வெள்ளை என சொல்லப்படுகிற சாம்பல்நிற (grey) வடிவில் உள்ளன. A4 தாள் அளவீட்டில் வந்திருக்கிறது. இது ஒரு வரலாற்று ஆவணமாக பார்க்கப்படக் கூடியது. புலிகளின் நிழல் அரசு கட்டியமைக்கப்பட்டிருந்த வன்னி பிரதேசத்துள் ஒரு சுயாதீன புகைப்பட ஊடகவியலாளராக அமரதாஸ் இருக்க முடிந்தது ஒரு அதிர்ஷ்டம்தான். போர்க்கள படப்பிடிப்பு சூழல் என்பது உயிர் ஆபத்து நிறைந்தது மட்டுமல்ல, உளவியல் தாக்கங்களையும் ஏற்படுத்த வல்லது. உயிர் அறுந்து போகிற அல்லது மோ…
-
- 0 replies
- 485 views
-
-
நிலத்தொடர்பற்ற சமூகம் - சிரேஷ்ட விரிவுரையாளர் யசோதரா கதிர்காமர் தம்பி 14 NOV, 2022 | 12:25 PM முன்னாள் பிரதியமைச்சா் பீ.பீ. தேவராஜ் எழுதிய ‘இலங்கை மலையகத் தமிழா் வரலாற்றின் சில துளிகள்’ நுால் வெளியீட்டு நிகழ்வு கடந்த சனிக்கிழமை 13ஆம் திகதி கொழும்பு 7 இல் அமைந்துள்ள இந்திய கலாச்சார நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான அபிவிருத்திகள் கிளையின் பணிப்பாளர் எஸ். முரளிதரன், கொழும்பு, நாவல திறந்த பல்கலைக்கழக சட்டக்கல்விப்பிரிவின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான யசோதரா கதிர்காமர் தம்பி மற்றும் கொழும்பில் வாழும் மலையக வர்த்தக சமூ…
-
- 0 replies
- 320 views
-
-
திருக்கோணேஸ்வரம் நூல் பற்றி... By PONMALAR 16 NOV, 2022 | 02:40 PM திருக்கோணேஸ்வரம் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பல நாடுகளில் கோணேஸ்வரம் பற்றிய தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், பிரான்ஸியர் என்ற அன்னியரின் ஆதிக்கத்துக்குள் திருக்கோணமலை கொண்டுவரப்பட்டமை அதற்குரிய காரணங்களாக இருக்கலாம். இதனால் தான் என்னவோ 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான போர்த்துக்கீச பாதிரியார் குவைறோஸ் தன் குறிப்பொன்றில் ‘கீழைத்தேயத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாத மக்களின் ரோமாபுரி திருக்கோணேஸ்வரம்’ என வர்ணித்துள்ளார் என்ற தொடரும் திருக…
-
- 0 replies
- 460 views
-
-
மாபெரும் தாய் – வாசிப்பு EditorOctober 23, 2022 “My Poetry has obviously more in common with distinguished contemporaries in America than with anything written in England”- T.S.Eliot புலம் பெயர்வைப் பேசக்கூடிய இலக்கியம் உலகில் நிறைய இருக்கின்றன. ஒன்று, தனிப்பட்ட அரசியல் காரணங்களால் நடப்பது. இன்னொன்று, போர்ச் சூழலால் நிகழ்வது. அதிலும் ஒரே மொழியைச் சேர்ந்த (பழைமான மொழி என்கிற பெருமையைக் கொண்ட) இனத்தின் ஒரு நிலம் செல்வாக்கோடும் செழிப்போடும் ஆட்சியில் கோலோச்சியிருக்கிறபோது பிறிதொரு நிலம் அடிமையில் நசுக்கப்பட்டும் விரட்டப்படுவதுமான முரணான தன்மையில் நிலம் மீள போராடும் விதியைக் கொண்டிருப்பது தமிழ் ஈழம் மட்டும்தான். இதுமாதிரியான புவியியல் அமைவின் பின்னணியில் இலக…
-
- 1 reply
- 608 views
-
-
The Seven Moons of Maali Almeida – ஷெஹான் கருணாதிலகவின் நாவல் குறித்து ஒரு மதிப்புரையும் உரையாடலும் EditorOctober 23, 2022 தமிழில்: ஜிஃப்ரி ஹாசன் மதிப்புரை- ஜேம்ஸ் வோல்ட்டன் அகதா கிறிஸ்டி, சல்மான் ருஷ்டி, ரேமண்ட் சாண்ட்லர், ஜான் லீ கேரே ஆகியோரை ஒரே நேரத்தில் நினைவுபடுத்தும் பல நாவல்கள் இருக்க முடியாது – ஆனால் இந்நாவல் அதனைச்செய்கிறது. The Seven Moons of Maali Almeida (புக்கர் பரிசுக்கான குறும் பட்டியலில் இடம்பெற்றது) உண்மையில் இதனை ஒரு ஹூடனிட் (Whodunit) நாவலாக விபரிக்க முடியும். (Whodunit – என்பது ஒரு கொலையைப் பற்றிய கதை அல்லது நாவலாகும். ஆனால் அந்நாவலில் இறுதிவரை கொலையாளியின் அடையாளம் வெளிப்படுத்தப்படுவதே இல்லை- மொ.பெ.) 1990 ஆம் ஆண்டு…
-
- 0 replies
- 263 views
-
-
வரலாற்றை அரசியலாகப் பார்க்கக்கூடாது - முன்னாள் வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் By VISHNU 19 OCT, 2022 | 09:39 PM (எம்.நியூட்டன்) வரலாற்றை அரசியலாகப் பார்க்கக்கூடாது அதனை வரலாறக பார்க்கப்படவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக முன்னாள் வரலாற்றுத்துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழக வேந்தர் தகைசார் வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.பத்மநாதனின் திருக்கேதீஸ்வரம் திருக்றுகோணேஸ்வரம் பற்றிய மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா இன்று (18) புதன்கிழமை யாழ்.பல்கலைக்கழ கையாலபதி கலையரங்கில் யாழ்.பல்கலைக்கழ துணைவேந்தர் பேராசிரியர் சி. சற்குணராஜா தலைமையில் இடம்பெற்றபோது நிகழ்வில் கருத்துரையாற்றுகையிலேயே …
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
இலங்கை எழுத்தாளருக்கு புக்கர் பரிசு! PrakashOct 18, 2022 08:51AM ஷேர் செய்ய : 2022ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக பெற்றுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் நாவலுக்கு ஆண்டுதோறும் புக்கர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசு இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக பெற்றிருக்கிறார். இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு, உலகம் முழுவதிலும் இருந்து 169 நாவல்கள் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டன. இதில், இறுதிப் போட்டிக்கு தேர்வான 6 புத்தகங்களில் இருந்து இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய நாவலுக்கு இந்த ஆண்டிற்கான புக…
-
- 0 replies
- 285 views
-
-
நீலகண்டம் முக்கியமான தமிழ் நாவல்கள் நான் ஒரு அந்தரங்கமான பட்டியல் போட்டால் அதில் சுனில் கிருஷ்ணனின் “நீலகண்டம்” இருக்கும். தமிழில் ஊனம் குறித்து வந்துள்ள ஒரு சில நாவல்களில் பெற்றோரின் தரப்பில் இருந்து குழந்தையின் ஊனத்தைப் பற்றி பேசும் தனித்துவமான படைப்பு இது. மரபணு கோளாறு கொண்ட குழந்தை ஒன்றை தெரியாமல் தத்தெடுக்கும் ஒரு தம்பதியின் வாழ்வில் வருகிற சிக்கல்களும், அதை இருவரும் தத்தம் வழிகளில் கையாள முயல்வதுமே நாவலின் களம். ஒரு நாவலை வாசிக்கையில் அங்கிங்கே நம் கவனம் பிசகாமல் நமது மொத்த கவனமும், ஏதோ கண்ணுக்கு முன்னால் அது ரத்தமும் சதையுமாக நிகழ்வதைப் போல, அதிலேயே குவிந்திருக்க வேண்டும். நான் அப்படியான ஒரு ஈர்ப்புடன், கொந்தளிப்புடனே “நீலகண்…
-
- 0 replies
- 597 views
- 1 follower
-
-
பேசாப் பொருளை பேசத் துணிந்த நூல் பீட்டர் துரைராஜ் லதா எழுதிய இந்த நூல் பாலியல் கல்வி தொடர்பான நூல்.பொய்மைகளை, போலித்தனங்களை தவிர்த்து, பெண் குழந்தைகள் தொடர்பான உண்மையான அக்கறை சார்ந்து நேர்பட எழுதப்பட்ட நூல்! இந்த நூலின் தாக்கம் ஆண்,பெண் பாலியல் உறவில், சமூக உறவில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் ‘காமம் குறித்த உரையாடலை ஒப்பனைகள் இல்லாமல் முகத்தில் அறைந்த மாதிரி பேசிச் செல்லும் புத்தகம்’ என்கிற குங்குமம் தோழி ஆசிரியரான மகேஸ்வரியின் கூற்று சரியானதே! ‘எனக்கான தாக்கங்கள், மற்ற மனிதர்களுடனான என் விவாதங்கள், என் அனுபவங்கள், என்னுடன் மனம் திறந்து பகிர்ந்த சில நண்பர்களின் அனுபவங்கள் இவையே இந்தப் புத்தகத்தின் அடித்தளம்’ என்று முன்னுரையில…
-
- 0 replies
- 422 views
-
-
குஞ்சரம் ஊர்ந்தோர் ஜேகே யாழ்ப்பாண நகருக்கு கிழக்கே அமைந்துள்ள பாசையூர் கிராமத்தில் மீன் சந்தை ஒன்று தினமும் கூடுவதுண்டு. அங்கே காலை வேளைகளில் மீன் வாங்கச் செல்பவர்களுக்கு அந்த ஐயாவைத் தெரிந்திருக்கலாம். சந்தைக் கட்டடத்தின் கடற்கரைப் பக்க வாசலுக்கு அருகே ஒரு கதிரையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு மிதப்பாக அமர்ந்திருந்தபடி அந்த வயோதிபர் சந்தையின் சந்தடிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார். அந்தச் சந்தையே தன்னால்தான் இயங்குகிறது என்பதுபோல அங்கு நிற்கும் ஏல வியாபாரிகளையும் மீனவர்களையும் ஏய்த்தவண்ணம் இருப்பார். இடையிடையே பத்திரிகையை எடுத்து வாசிப்பார். மீன் வாங்க வந்தவர்களுக்கு அறிவுரை கூறுவார். ஒருநாள் ஆர்வமிகுதியில் வாங்கிய மீன்களைக் கழுவி அறுத்துக் கொடுக்கும…
-
- 1 reply
- 633 views
-
-
Salam Alaik Book Launch Event | SHOBSAKTHI SPEECH | ஷோபாசக்தி பேச்சு
-
- 0 replies
- 709 views
-
-
நூல் அறிமுகம் - சுப.சோமசுந்தரம் எனது நெருங்கிய நண்பர் பேரா.ச.தில்லைநாயகம் அவர்கள் திருக்குறளுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் காலத்துக்கேற்ற எளிய உரையொன்று அளித்திருக்கிறார்கள். இவ்வுரைநூல் இம்மாதம் (ஜூலை 2022) 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்திற்கு அடியேன் அளித்துள்ள அணிந்துரையும், நூலாசிரியர் பேரா.ச.தில்லைநாயகம் அளித்துள்ள நூன்முகமும் நூலுக்கான சிறந்த அறிமுகமாக இருக்கும் என நினைக்கிறேன். …
-
- 0 replies
- 593 views
- 1 follower
-
-
பெருமாள் முருகன் ஏற்படுத்தும் நம்பிக்கை நேற்று நண்பர் பௌத்த ஐயனாருடன் பெருமாள் முருகனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். ஜெய்ப்பூர் புத்தக விழாவில் பெருமாள் முருகனின் மொழியாக்க நாவல்களை வாங்கி அவரிடம் கையெழுத்துப் பெற (ஆங்கிலத்தில் மட்டும் வாசிக்கும்) வாசகர்களின் ஒரு நெடிய வரிசை நின்ற காட்சியைப் பற்றி ஐயனார் என்னிடம் குறிப்பிட்டார். இன்று பெருமாள் முருகனுக்கு உலகம் முழுக்க வாசகர்கள் தோன்றி விட்டார்கள். வாஷிங்டன் டைம்ஸில் அவருடைய நாவல்களுக்கு மதிப்புரை வருகிறது. இந்திய ஆங்கில படைப்பாளிகளான அருந்ததி ராய், அமிதாவ் கோஷ் கூட அடையாத இடத்தை ஒரு தமிழ் எழுத்தாளர் அடைந்திருப்பது ஒரு சாதாரண விசயம் அல்ல. நாம் இதை பொறாமையால் கவனிக்காததைப்…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
இலண்டன் புத்தகக் கண்காட்சி ! - தகவல்: பெளசர் - நிகழ்வுகள் 23 ஜூன் 2022 BOOK EXHIBITION - WEMBLEY 26TH JUNE 22- SUNDAY Time: 10am to 8pm We cordially invite you to a book exhibition with 500 titles. London Tamil Centre 253, East Lane, Wembley, Middlesex, HAO 3NN Available train service on Sunday: Jubilee line - Wembley Park, bus 483 towards Harrow then bus 245 Alperton. Bakerloo line - North Wembley Station, walk 3mins On Sunday, there is free parking at the by-roads. நூல் கண்காட்சி அரங்கில் புதிய நூல்களின் அறிமுகங…
-
- 0 replies
- 292 views
-
-
ஊடகவியலாளர் நடேசனின்... நினைவேந்தலும் , நூல் வெளியீடும்! யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசன் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. நாவலர் கலாச்சார மண்டபம்,பிப3.30 மணிக்கு யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன்,தலைமையில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில் நடேசன் தொடர்பில் அவருடன் ஊடகப்பணியாற்றிய சக ஊடகவியலாளர்கள்,செயற்பாட்டாளர்களென பலரது நினைவுகூரலுடன் வெளிவந்துள்ள நூல் அறிமுகமும் வெளியீடும் நடைபெறவுள்ளது. அதேவேளை “நடேசனின் ஊடகத்துறை பயணம்” தொடர்பிலான நினைவுரைகளுடன் ஞாபகார்த்த நினைவுப்பேரூரையினை யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கோசலை மதன்…
-
- 0 replies
- 416 views
-
-
பிரபாகரனின் இறுதி 3 நாட்கள் May 10, 2022 பொறுப்புத் துறப்பு: இணைத்தவர் இப்பதிவில் விடுதலைப் புலிப் போராளிகளை பயங்கரவாதிகள் எனச் சுட்டுவதை ஏற்றுக்கொள்ளவில்லை. By Maj. Gen. Kamal Gunaratne தமிழில் Rajh Selvapathi (முன்னாள் ஐ. நா. சபை உத்தியோகத்தர், கிளிநொச்சி) (முன்) கதைச்சுருக்கம் 800x800 சதுர மீற்றர் நிலப்பரப்புக்குள் மூன்றுபக்கமும் இராணுவத்தினரால் சூழப்பட்ட நிலையில் தப்பிப்பதற்காக மூர்க்கத்தனமாக முயன்று கொண்டிருந்த பயங்கரவாதிகளின் கடைசி மணித்துளிகளை மீட்டி பார்ப்பது முக்கியமானது என நான் நம்புகின்றேன். முன்பே கூறியது போல் மே 17 விடிகாலை பொழுதில் நந்திகடல் நீரேரியின் மேற்கு கரையோரத்தில் இருந்த ம…
-
- 0 replies
- 817 views
-
-
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபொழுது சென்னை மாகாணத்தில் அடங்கியிருந்த மாவட்டங்கள் குறித்த கையேடுகளை (Gazetteer) வெளியிட்டனர். அவ்வகையில் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, செங்கற்பட்டு, வடார்க்காடு, தொன்னார்க்காடு முதலிய 9 மாவட்டங்களுக்குக் கையேடுகள் வந்துள்ளன. அந்தவகையில் இலங்கையின் வன்னி மாவட்டத்துக்கு ஒரு கையேடு வெளிவந்துள்ளது. அதனை எழுதியவர் ஜே.பி.லூயிஸ்(J.P.Lewis). இவர் எழுதிய நூல் வன்னி மாவட்டங்கள் (A Manual of the vanni Districts) என்பதாகும். இந்தக் கையேடு 1895 இல் வெளிவந்துள்ளது. இந்தக் கையேட்டில் வன்னி, முல்லைத்தீவு மாவட்டங்கள் குறித்த அரிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலத்தில் முதல்பதிப்பு கண்ட இந்த நூலினை மொழிபெயர்த்து இரண்ட…
-
- 1 reply
- 843 views
- 1 follower
-