சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
சிறுவர், சிறுமிகளை வெவ்வேறு விதங்களில் பாதிக்கும் மன அழுத்தம் - ஆய்வு மிகுந்த மன அழுத்தம் ஏற்படுத்தும் நிகழ்வுகள்,சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் மூளைகளை வெவ்வேறு வழிகளில் பாதிக்கும் என ஸ்டான்பஃர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக, அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் மூளையில், இன்சுலா ( insula) என்று அழைக்கப்படும், உணர்ச்சிகள் மற்றும் பிறர் உணர்வுகளைப் புரிந்து கொண்டு பகிர்ந்து கொள்ளும் தன்மை ஆகியவைகளுடன் தொடர்புள்ள ஒரு பகுதி அளவில் சிறியதாக இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மூளையில், இன்சுலாவின் அளவு வழக்கத்தை விடப் பெரிய அளவில் இருந்தது. இந்தத் தகவல், சிறுவர…
-
- 0 replies
- 453 views
-
-
பதினெட்டுக்குள்ளே 1 - மீறல்களும் உரிமைகளும்! | குழந்தைகள் மென்மையானவர்கள்... அவர்களை பூக்களைப் போல கையாள வேண்டும். | இணையத்தில் படித்ததாக நண்பர் ஒருவர் சொன்ன கதை இது. இரு ரயில் தண்டவாளங்கள் அருகருகே உள்ளன. ஒரு தண்டவாளத்தில் ரயில் எப்போதும் வராது. மற்றொன்றில் ரயில் வந்துகொண்டே இருக்கும். ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடுகிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரயில் வருகிறது. தூரத்தில் இருக்கும் நீங்கள் அதைப் பார்க்கிறீர்கள். அருகில் ட்ராக் மாற்றும் கருவி இருந்தால் யாரைக் காப்பாற்றுவீர்கள். இப்படி ஒரு கேள்வி ஒரு கூட்ட…
-
- 0 replies
- 615 views
-
-
வாட்சப்பில் பாலியல் அவமானத்துக்கு ஆளான பெண் தற்கொலை வாட்சப்பில் பாலியல் அவமானத்துக்கு ஆளான பெண் தற்கொலை (காணொளி) இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் பல நன்மைகளை அடைந்துள்ள போதும், சம அளவில் தீமைகளும் வளர்ந்து வருகின்றன அதில் பெரும்பாலானவை பெண்களையே பாதிக்கின்றன. குறிப்பாக பாலியல் குற்றங்கள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகின்றன;அவ்வாறாக உள்ள பல்வேறு சம்பவங்களை படம் பிடித்து காட்டுகிறது பிபிசியின் அரபிக் பிரிவின் ஷேம் ஆன்லைன் என்ற தொடர். அந்த வரிசையில் இந்தியாவில் நடந்த ஒரு சம்பவம் இந்த காணொளியில். தயாரித்தவர் பிபிசி இந்திப் பிரிவின் திவ்யா ஆர்யா. இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் சுகாதார ஊழியராக பணியாற்றிய 40 வயது பெண், தான் கூட்டு பாலியல் வல்லுறவுக்க…
-
- 0 replies
- 801 views
-
-
வாழ்வின் மிக நீளமான ஆண்டு எது? அதை எப்படித் தீர்மானிப்பது? யோசித்துப் பார்த்தால் குறிப்பிடத்தகுந்த அனுபவங்களை, புதிய மனிதர்களை, புதிய இடங்களை, மறக்கமுடியாத பயணங்களை மேற்கொண்ட ஆண்டு மிக நீளமானதாயிருக்கும். எனக்கு தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு மிக நீளமானதாயிருந்திருக்கிறது. தொடர்ந்து அடுத்த வருடமும்! தொண்ணூற்று ஐந்தாமாண்டில் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இரண்டு பாரிய இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முதல் இரண்டு தவணைகள் மட்டுமே பாடசாலை நடைபெற்றது. அதில் நான்கு விடுமுறைகள் வேறு. ‘முன்னேறிப் பாய்தல்’ நடவடிக்கை தோற்றதும், இராணுவத்தின் அடுத்த நடவடிக்கை 'ரிவிரச' ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆவணி மாத பாடசாலை விடுமுறை அப்படியே விடுமுறையாகவே நீண்டது. அந்த முறை நல்லூர்த் …
-
- 0 replies
- 1.1k views
-
-
கனவுகளைக் கைப்பற்றுவோம் ஒரு கட்டடம் கட்டுவதற்கு முன், முதலில் மண்ணைப் பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு செயலில் இறங்கும் முன் முதலில் நம் மனதை சுய பரிசோதனை செய்ய வேண்டும். ஹா... ஹா... இந்தத் தொழில் முனைவுத் தொடரில் நுழைவதற்கு முன் மனசை ஃபிரெஷ்சாக வைத்துக் கொள்ள முதலில் ஒரு குட்டிக் கதை. ஓஷோவின் கதை இது. படிச்சு சிரிச்சுட்டு அப்புறம் விஷயத்துக்குப் போவோம். ஓகே. ஒரு சாமியார், ஒரு டாக்டர், ஓர் அரசியல்வாதி மூவரும் ஒருநாள் கூடிப் பேசிக் கொண்டிருந்த போது, யாருடைய தொழில் மிகவும் பழமையானது என ஒரு கேள்வி வந்தது. "மனிதனின் முதல் செயலே பிரார்த்தனை செய்து கடவுளுக்கு தன் நன்றியைத் தெரிவித்ததாகும். எனவே என் தொழில்தான் பழமையானது!" என்றார் சாமியார். "சுத்த அபத்தம்! கடவுள் பெண்ணைப் …
-
- 18 replies
- 26.9k views
-
-
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரத்தில் உள்ள வைர நகை வியாபாரி ஒருவர் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு கார், வீடு மற்றும் நகை ஆகியவற்றை தீபாவளி போனஸாக அள்ளிக் கொடுத்திருக்கிறார். சூரத் நகரத்தில் வசிப்பவர் சவ்ஜி தோலாக்கியா. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 70களில் வேலைதேடி சூரத்துக்கு வந்தார். அங்கு தன் உறவினர் ஒருவரிடம் சென்று வியா பாரம் தொடங்குவதற்குக் கடன் பெற்றார். அதை வைத்துக்கொண்டு அவர் சிறிய அளவில் வைர வியாபாரத்தைத் தொடங்கினார். 1992ம் ஆண்டு ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் எனும் வைர வியாபார நிறுவனத்தைத் தொடங் கினார். கடந்த 20 ஆண்டுகளில் ஓராண்டுக்கு ரூ.6,000 கோடி லாபம் ஈட்டும் நிறுவனமாக அதை மேம்படுத்தினார். தற்போது சூரத், மும்பை மற்றும் வெளிநாடுகளில் இந…
-
- 0 replies
- 677 views
-
-
மணமுறிவுக்கு மனமுறிவு காரணமாகலாமா? சமீபத்தில் மகான் ராகவேந்திரரை தரிசிக்க நண்பர்கள் குழாமுடன் மந்த்ராலயம் சென்றிருந்தேன். அதிஅற்புதமான தரிசனம் கிடைத்தது. பல்வேறு உலக விஷயங்களை பேசிக்கொண்டே சென்றோம். அதில் மிக முக்கியமாக என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்தது, என்னை அழைத்துச்சென்ற வழக்கறிஞரின் பேச்சுதான். ‘‘என்ன அண்ணா, கோர்ட் கேஸ் எல்லாம் எப்படி போயிட்டிருக்கு?’’ என்று அவரிடம் நான் கேட்டதுதான் தாமதம். ‘‘இப்ப எல்லாம் Family courtதான் - குடும்ப நீதிமன்றம்தான் - சோறு போடுது!’’ என்றார். ஒருநாளைக்கு பணக்காரர்களிலிருந்து பரம ஏழைகள்வரை சமூகத்தின் அத்தனை தரப்பினரும் இங்கே படையெடுத்து வருகிறார்கள் என்று தகவல் தந்தார். ‘‘இதற்கு முக்கிய காரணம் Ego-தான். நீயா நானா போட்டிதான்…
-
- 1 reply
- 917 views
-
-
25 வருடமாக இருவரும், மகனின் பிறந்தநாள் அன்று எடுத்த படங்கள்..பார்த்துக் கொண்டே போங்கள்... கடைசிப் படத்தில்... உங்களது கண்ணில் நீர் கசிந்தால்.... நாம் பொறுப்பல்ல.. 1987 மகனின் முதலாவது பிறந்த நாள் அழகான ஒரு கவிதைத்தனமான ஓவியம்...
-
- 2 replies
- 886 views
-
-
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? சென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்ட கொடுமையான செய்தி, எந்த அரசியல் கட்சிகளையும் உலுக்கவில்லையா? என் மகள் பிரம்மிக்கு 11 வயது. ஏழாம் வகுப்பு படிக்கிறாள். பள்ளிக்குப் போகிற அக்கறை இல்லாமல் காலையில் சில நாட்கள் வெகுநேரம் தூங்குவாள். அவளைப் பள்ளிக்குக் கொண்டுசேர்ப்பதற்குள் படாத பாடு பட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நாளில் கண்ணில் பட்டது அந்தச் செய்தி. தாம்பரம் பேருந்து நிலையத்தில் செப்டம்பர் 26 அன்று அதிகாலை 4 மணி இருளில் 11 வயதுச் சிறுமி அழுகையோடு அலைந்திருக்கிறாள். அவளது அம்மாவும் அப்பாவும் பிரிந்துவிட்டார்கள். ஏழாம் வகுப்பைப் பாதியில் நிறுத்தி, ஆயிரம் ரூபாய்க்குத…
-
- 0 replies
- 923 views
-
-
உலகளவில், ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துகிறார்கள்: ஆய்வு மது அருந்தும் விஷயத்தில், உலகில் ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துவதாக உலக அளவில் மது அருந்தும் பழக்கம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று காட்டுகிறது. கடந்த 1891ம் ஆண்டிலிருந்து 2001ம் ஆண்டுக்கிடையேயான கால கட்டத்தில் பிறந்த 40 லட்சம் நபர்களை ஆராய்ந்த இந்த ஆய்வு , ஆண்கள்தான் அதிகம் குடித்து, அதன் காரணமாக உடல் நலப் பிரச்சனைகளில் சிக்கிய சாத்தியக்கூறு இருந்ததாகக் காட்டியது. ஆனால் தற்போதைய தலைமுறை இந்த இடைவெளியை ஏறக்குறையக் குறைத்துவிட்டதாக பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையின் அறிக்கை கூறுகிறது. சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆற்றும் பங்கு மாறிவருவது , மது அ…
-
- 0 replies
- 485 views
-
-
காதலிப்பவர்கள் எல்லாம் ஏன் திருமணம் செய்ய வேண்டும்? Abilash Chandran இந்த வார குமுதம் லைபில் ப்ரியா தம்பி தனது “மாயநதி” பத்தியில் இளம் வயதில் திருமணமாகி வாழ்க்கையை தொலைக்கும் பெண்களைப் பற்றி எழுதியிருக்கிறார் (ஆண்களின் நிலையும் இவ்விசயத்தில் அவலம் தான் என்றும் சொல்கிறார்.). அவர் தன் ஊரில் இவ்வாறு இளம்வயதில் ஓடிப் போகும் பெண்கள் பற்றி தற்போது அதிகம் கேள்விப்படுவதாய் சொல்கிறார். அவர் சொல்வது குமரி மாவட்ட நாகர்கோயில் பகுதி என நினைக்கிறேன். என் ஊர் பத்மநாபபுரம். எங்கள் ஊரின் மண்ணின் குணமோ நீரின் சுவையோ அங்குள்ள இளம் பெண்கள் முணுக்கென்றால் காதல் வயப்படுவார்கள். சுற்றுவட்டார கிராமத்து ஆண்கள் இதை அறிந்து எங்கள் ஊரில் வட்டமடிப்பார்கள். இதற்கு ஒரு காரணம் இப்பெண…
-
- 0 replies
- 1.1k views
-
-
ராபின் ஷர்மாவின் "நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" " The Monk who sold his Ferrari " புத்தகம் எழுதிய ராபின் ஷர்மாவின் மற்றொரு புத்தகம் " நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" (Who will cry when you die?). “நீ பிறந்த போது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா மகிழும்" என செண்டிமெண்டாக பேசும் ராபின் ஷர்மா இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்: 1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள். 2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையு…
-
- 2 replies
- 6.6k views
-
-
-
- 1 reply
- 735 views
-
-
101 பசுமை வீடுகள். கோவை மாவட்டத்தில் ஓடந்துறை ஒரு வித்தியாசமான கிராமம். அடிக்கடி அரசு அதிகாரிகளுடன் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வண்டியைக் கட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். உள்ளாட்சி நிர்வாகம் குறித்து பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள் களை கட்டுகின்றன. ஒரு கண்காட்சிபோல காட்சியளிக்கிறது ஓடந்துறை. ஆனால், இந்தக் கண்காட்சிக்கு பார்வையாளர் கட்டணம் உண்டு. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பார்வையிட்டால் ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும். வெளிநாட்டு ஆய்வாளர்களுக்கு கட்டணம் தனி. ஆய்வு மாணவர்களுக்கு இலவசம். கடந்த 10 ஆண்டுகளில் தனது கிராமத்துக்காக விதவிதமாக பணத்தை சேமித்து வருகிறார் பஞ்சாயத்துத் தலைவி லிங்கம்மாள். அத்தனையும் ஆச்சர்ய ரகங்கள்! பார்வையாளர் கட்டணம் உண்டு …
-
- 5 replies
- 2.7k views
-
-
'மனைவி தனியுரிமை கோருவது கணவர் மீதான கொடுமை அல்ல': தில்லி உயர் நீதிமன்றம்! 'திருமணமான ஒரு பெண், தன்னுடைய புகுந்த வீட்டில் தனியுரிமையை (பிரைவசி) கோருவதை, கணவரைக் கொடுமைப்படுத்துவதாகக் கருத முடியாது. எனவே இதன் அடிப்படையில் கணவருக்கு விவாகரத்து வழங்க முடியாது' என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது. கடந்த 2003-இல் திருமணம் செய்து கொண்ட ஒருவர், தன் மனைவி கூட்டுக் குடும்பத்தில் வாழ விருப்பம் இல்லாததால் தனிக் குடித்தனம் நடத்த வற்புறுத்துவதாகவும் அதற்காக தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி தில்லி கீழமை நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி 2010-ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, 'தனிமை என்பது அவரவரது அடிப்படை உரிமை என்பதால் தனிக் குடித…
-
- 0 replies
- 609 views
-
-
ஒரு தொழிலகம் மற்றும் வீடு உன்னதமான நிலையை அடைவதற்கு உதவும் ஐந்து அடிப்படை செய்கைகளை உள்ளடக்கிய ஐந்து ஜப்பானிய சொற்களால் விவரிக்கப்படுவதை ஐந்து 'எஸ்' என்கிறோம். செய்ரி- - அப்புறப்படுத்துதல்செய்டன் - ஒழுங்கு படுத்துதல்செய்சோ - துப்புரவாக்குதல்செய்கெட்சு - நிர்ணயித்தல்சிட்சுகே - பயிற்சியும் கட்டுப்பாடும்சேப்டி - பாதுகாப்பு இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மற்றும் தொழிற்சாலையிலும் பல்வேறு மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது. ஐந்து 'எஸ்' செயல்களை செய்வதற்கு எல்லா இடமும் பொருத்தமான இடமே. வாடிக்கையாளர்கள் திருப்தி அடைந்தால் மட்டுமே தொழிற்சாலை நிரந்தரமாக இயங்க முடியும் என்ற ஒரு கட்டாயமான சூழ்நிலை உருவாகி வருகிறது.தொழிற்சாலைகள் 2000-ம் ஆண்…
-
- 0 replies
- 793 views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
1992ம் ஆண்டு GITEX என அழைக்கப்படும் Gulf Information & Technology Exhibition உச்சக்கட்டத்தில் இருந்த நேரம். அமீர்கத்திற்கு ஆப்பிள் டீலராக இருந்ததால் வருடா வருடம் எங்களுக்கு அந்த எக்ஸ்போவில் அரங்கம் அமைத்துக் கொள்ள முன்னுரிமை தரப்படும் அப்படி அந்த ஆண்டு 60 சதுர அடி அமைத்துக் கொள்ள இடம் ஒதுக்கப்பட்டது. எங்கள் உரிமையாளர் அரபி முதுகலை படித்தவன். சடையன் வா இங்கே எனக் கூப்பிட்டு இந்த ஆண்டு நம் அரங்கம் நெ 1 ஆக இருக்க வேண்டும். ஆபீஸ் ஊழியர்கள் அனைவரையும் பயன் படுத்திக் கொள் அரங்கம் எல்லோராலும் பேசப்பட வேண்டும் மேலும் இந்த ஆண்டு நம் அரங்கை பார்வையிட ஷேக் மொஹம்மது வருகிறார் கூடவே அமெரிக்காவிலிருந்து ஸ்டீவ் ஜாப் வருகிறார், எனச் சொல்லி விட்டு புறப்பட்டு விட்டான் அரபி. என்ன ச…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஆண்கள் பள்ளியில் பெண்களுக்கு உடை கட்டுப்பாடு: கொந்தளிக்கும் கொழும்பு மக்கள் காரசாரமான விவாதத்தை சமூக வலைதங்களில் உருவாக்கியுள்ள அறிவிப்பு பலகை இலங்கையிலுள்ள ஆண்கள் பள்ளிக்கூடத்தின் அறிவிப்பு பலகையில் காணப்படும் பெண்கள் என்ன அணிய வேண்டும் என்ற விவரங்கள் சமூக வலைதளங்களில் சூடான விவாதங்களை எழுப்பியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பிலுள்ள மக்கள் இது தொடர்பாக ஏன் கோபமடைந்துள்ளனர் என்பதை பிபிசியின் ஆயிஷா பெரேரா விளக்குகிறார். இதனை பார்த்தவுடன், இக்கால அழகை விவரிக்கும் தரமற்ற பத்திரிகையின் பக்கம் என்று நீங்கள் நினைத்தால், உங்களை மன்னித்துவிடலாம். கொழும்பின் உயர்தர தனியார் பள்ளிகளில் ஒன்றான புனித ஜோசப் கல்லூரியில் அனைவரும் பார்க்க, வைக்கப்பட்டிருந்த அ…
-
- 2 replies
- 1.4k views
-
-
தொடராத காதல்களும் தொடரும் கொலைகளும் சமீபகாலமாக பத்திரிகைகளில் அடிக்கடி வரும் செய்திகளில் மிக முக்கியமான ஒன்று காதல் தோல்வியும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் கொலைகளும், தற்கொலைகளும், கோர நிகழ்வுகளும்தான். வாழும் உலகில் காதல்கள் ஏன் தோல்வி அடைகின்றன. அதனைத் தொடர்ந்து ஏன் இப்படிப்பட்ட அதிர்ச்சி சம்பவங்களும் நடக்கின்றன? பெரும்பாலான இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் காதலைப் பற்றிய சரியான கண்ணோட்டமோ தெளிவான சிந்தனையோ இருப்பதில்லை. பருவவயதில் எழும் ஒரு உத்வேக உணர்வுக்கு காதல் என பெயர் சூட்டி, அது நிறைவேறாது போனால், காதலையும் கொலைசெய்து, தாங்களும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நான்கைந்து முறை ஒருவரை ஒருவர் பார்ப்பதும், அப்புறம் சிரிப்பதும், கடிதம் கொடுப்…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஜீரணிக்க முடியாத உண்மை -முகம்மது தம்பி மரைக்கார் அந்தப் பெண்ணுக்கு 42 வயதைத் தாண்டியிருந்தது. பல்கலைக்கழகத்தில் கற்கும் ஆண் மகன், உயர்தரம் படித்து முடித்த பெண் பிள்ளை வீட்டில் இருந்தனர். ஒருநாள் தனது கணவருடன் வைத்தியர் ஒருவரை சந்திக்க வந்திருந்த அந்தப் பெண், தான் கர்ப்பம் தரித்திருப்பதாகக் கூறினார். அந்த வயதுக் கர்ப்பம் தமக்கு அவமானத்தைத் தேடித் தந்துவிடும் என்று அந்தப் பெண்ணும் அவரின் கணவரும் அச்சப்பட்டனர். இந்த வயதில் தனது தாய் கர்ப்பம் தரித்திருக்கின்றமையால், தான் அவமானத்தை உணர்வதாக தங்கள் மகள் கூறியமையை அந்தத் தாய் வருத்தத்துடன் தெரிவித்தார். இதனால், தனது கர்ப்பத்தைக் கலைத்து விடுவதற்குத் தாம் தீர்மானித்துள்ளதாக அந்தப் பெண்ணும்…
-
- 0 replies
- 1.1k views
-
-
பணக்கார உலகுக்கான சூத்திரம் எது? உலகம் செல்வம் மிக்கதாக இருக்கிறது, இனி மேலும் செல்வந்த உலகமாகும். கவலையை விடுங்கள். நாம் எல்லோருமே பணக்காரர்கள் இல்லைதான்; 100 கோடிப் பேர் அல்லது அதற்கும் மேற்பட்டோர் ஒரு நாளைக்கு 3 டாலர்கள் (80 ரூபாய்) அல்லது அதற்கும் குறைவான ஊதியத்துடன்தான் நாளை ஓட்டுகின்றனர். 1800-வது ஆண்டு வரையில் எல்லோருமே இந்த 3 டாலர்களுக்கும் குறைவான ஊதியத்தைத்தான் பெற்றுவந்தனர். செல்வம் சேருவது 17-வது நூற்றாண்டில், ஹாலந்தில்தான் முதலில் தொடங்கியது. 18-வது நூற்றாண்டில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அமெரிக்கக் காலனிகளுக்குப் பரவியது. இப்போது உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது. செல்வம் க…
-
- 1 reply
- 1.1k views
-
-
நா.முத்துக்குமார்: எளிய சொற்களின் காதலன் யுகபாரதி நா.முத்துக்குமார், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பழசான பராமரிக்கப்படாத ஒரு மிதிவண்டியில் என்னை சந்திக்க வந்திருந்தான். பத்திரிகையில் வெளிவந்திருந்த என்னுடைய சிறிய கவிதை ஒன்று அவனுக்குப் பிடித்திருந்தது. அந்தக் கவிதையை பாராட்டி தேநீர் வாங்கிக்கொடுத்தான். தேநீரை மட்டுமே வாங்கித்தரும் வசதிதான் அப்போதிருந்தது. அந்தத் தேநீரில் நிறைவடையும் மனம்தான் எனக்கும் இருந்தது. முத்துக்குமார் என்னை சந்திக்க வந்தபோதே எழுத்தாளர் சுஜாதாவால் அவனுடைய தூர் கவிதை சிலாகிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், பரவலான கவனிப்பை பெற்றிருந்த கவிஞனாக அவன் இருந்தான். அவன் அளவுக்கு எழுதவோ அறிமுகமோ பெற்றிராத என்னை அவன் சந்திக்க வந்தது ஒருவிதத்தில் …
-
- 6 replies
- 5k views
-
-
-
சீனாவின் `கட்டாய' பிரம்மசாரிகள்! வெளியே சிரிப்பு, உள்ளே வெறுப்பு தனிமையிலே இனிமை காண முடியுமா? என்பது தமிழ் திரைப்பட பாடல். உலகிலுள்ள எல்லாமே இரண்டு இரண்டாக வாழும்போது, இருக்கும் போது, நாம் அவ்வாறு இல்லாமல் இருந்துவிட முடியுமா? என்பதை அழுத்தமாக சொல்லியிருப்பார் கவிஞர் கண்ணதாசன். ஆனால், சீனாவின் ஆன்குய் மாகாணத்தில் லாவ்யா கிராமத்தில், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பல ஆண்கள் தங்களுடைய வாழ்க்கையை பிரம்மசாரிகளாகவே தொடரும் நிலை இன்றைய சீனாவில் கூர்மையாகி வரும் சமூகச் சிக்கல்களை எடுத்துகாட்டுகிறது. என்னதான் பிரச்சனை? சியோங் ஜிகன், உடனடியாக தன்னுடைய கிராமத்தின் சாலை வசதியை குறை சொல்லத் தொடங்கிவிடுகிறார். ”இந்த இடம் தனிமைப்படுத்தப்பட்டுள்…
-
- 0 replies
- 923 views
-