சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
-
வாழ்வுநிலை vs வாழ்க்கைத்தரம் வாழ்வுநிலை, வாழ்க்கைத்தரம், இவற்றை முறையே ஆங்கிலத்தில் standard of living, quality of life என்பர். இவையிரண்டுமே கிட்டத்தட்ட ஒன்றுதான், ஆனால் வெவ்வேறானவை. சொத்து, வருமானம், அந்தஸ்து, உணவு, உடை, உறையுள் எல்லாமும் செழிக்க இருந்தால் அவருக்கான வாழ்வுநிலை மேம்பட்டதாகக் கருதலாம் ஒப்பீட்டளவில். ஒருவருக்கொருவர் ஒப்பீடுகள் நடக்கின்றன. ஏழை, பணக்காரன், நடுத்தரக்காரன் என்றெல்லாம் மதிப்பீடுகள் இடம் பெறுகின்றன. இயல்பாகவே, பணமிருப்பவருக்கு மருத்துவம், கல்வி, வாய்ப்புகள் என்பவை எளிதில் கிட்டிவிடும். ஆகவே அவரின் வாழ்வுநிலை மேம்பட்டது என்பதாகக் கருதப்படுகின்றது. பண்புகள், விழுமியம்(வேல்யூஸ்), இன்பம், உடல்நலம் முதலானவை நன்றாக இருப்பதாகக் கருதினால்,…
-
- 0 replies
- 618 views
- 1 follower
-
-
விளையாட்டும் வினையும்; காதலும் கலியாணமும் ரேச்சல் பிரைட்மன், இருபத்தி ஐந்து வயதான அமெரிக்க பெண். கல்லூரியில் படிப்பை முடித்து, காதலித்து கலியாணமும் செய்ய நிச்சயிக்க பட்டிருந்தது. வட அமெரிக்காவில் கலியாணத்துக்கு முன்னர் நடக்கும் ஒரு "செல்விக்கான களியாட்டம்" இவவுக்கும் நடந்தது. இவரின் தோழிகள் ஒரு நீச்சல் தடாகத்துடன் கூடிய களியாட்டத்தை ஒழுங்குபடுத்தினர். அதில் நடந்தது ஒரு அசம்பாவிதம். ரேச்சல் பிரைட்மன் அவர்களின் தோழி ஒருவர் அவரை விளையாட்டாக பின்னிருந்து நீச்சல் தடாகத்துள் தள்ளினார். தண்ணியுள் விழுந்த ரேச்சல் பிரைட்மன் உடனடியாக உணர்ந்தார் தனது உடலில் ஒரு பகுதி உணர்வற்று போய்விட்டதை. ஆம், தண்ணியுள் ஒரு தவறான விதத்தில் விழுந்ததால் அவரின் கழுத்து ஒரு வகையாக பாதிக்கப்பட…
-
- 0 replies
- 959 views
-
-
ஓடிப்போவதெல்லாம் உடன்போக்கு அல்ல - சுப. சோமசுந்தரம் இத்தலைப்பைப் பார்த்தவுடன் நான் என்னவோ காதலுக்கு எதிரானவன் என்று முடிவெடுத்து விட வேண்டாம். இலக்கியங்களில் அகப்பாடல்களைத் தேடித் தேடி ரசிப்பவன் நான். பக்தி இலக்கியங்களில் கூட அகம் காணுகிறவன் நான். நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் நாச்சியார் கண்ணனுடன் கொண்ட நாயகன் – நாயகி பாவனை, திருக்கோவையாரில் மணிவாசகர் தம்மையே தலைவியாகவும் சிவபெருமானைத் தலைவனாகவும் மேற்கொள்ளும் களவொழுக்கம் இவற்றையெல்லாம் தம்மை மறந்து ரசிக்காதார் அவனியில் யாரேனும் உளரோ ? தேடிச் சோறு நிதம் தின்று,…
-
- 0 replies
- 987 views
- 1 follower
-
-
'உயிரோட இருக்கும்போதே ஒரு குடும்பத்தையே காப்பாத்தினவன்தான் ஶ்ரீகாந்த. இறந்த பிறகும்கூட பல பேரோட குடும்பத்தைக் காப்பாத்திட்டு இருக்கான். இந்தப் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும். அந்த மனநிறைவுதான் எங்களுக்கு கிடைச்ச ஒரே ஆறுதல்' என்கிறார் ராஜா. மூளைச்சாவு அடைந்த தன் அண்ணன் மகன் ஸ்ரீகாந்த் பற்றி ராஜா நெகிழ்வோடு பேசிய வார்த்தைகள் இவை. சென்னை அண்ணாநகர் புது காலனியைச் சேர்ந்தவர் பழனி, பெயின்டராக வேலை பார்க்கிறார், மனைவி மல்லிகா அக்கம் பக்கத்தில் வீட்டு வேலை செய்துவருபவர். இவர்களின் மூத்த மகன் ஶ்ரீகாந்த். ஏழ்மை காரணமாக ஶ்ரீகாந்தால் மேல்படிப்பைத் தொடர முடியவில்லை. பள்ளிப் படிப்பை முடித்த பின்பு, மெடிக்கல் ரெப்பாக வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
அறம் போற்றுவது அவசியம் தொகுப்பு: என். கௌரி அறம் 2020' என்ற ஐந்து நாள் இணையவழிப் பயிற்சி வகுப்புகளை 'இந்து தமிழ் திசை' நாளிதழ், கல்வியாளர்கள் சங்கமம், முதலுலகின் மூத்தகுடி, கோவை கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி ஆகியவை இணைந்து ஒருங்கிணைத்திருந்தன. ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பில், ஆசிரியர்கள், மாணவர்கள், இந்து தமிழ் திசை வாசகர்கள் என முந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அன்றாடம் கலந்துகொண்டார்கள். பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட பேச்சாளர்களுடைய உரையின் சுருக்கமான தொகுப்பு. மனிதம் போற்றுவோம் முனைவர். சொ. சுப்பையா, முன்னாள் துணைவேந்தர், அழகப்பா பல்கலைக்கழகம் …
-
- 0 replies
- 1k views
-
-
சீனாவின் `கட்டாய' பிரம்மசாரிகள்! வெளியே சிரிப்பு, உள்ளே வெறுப்பு தனிமையிலே இனிமை காண முடியுமா? என்பது தமிழ் திரைப்பட பாடல். உலகிலுள்ள எல்லாமே இரண்டு இரண்டாக வாழும்போது, இருக்கும் போது, நாம் அவ்வாறு இல்லாமல் இருந்துவிட முடியுமா? என்பதை அழுத்தமாக சொல்லியிருப்பார் கவிஞர் கண்ணதாசன். ஆனால், சீனாவின் ஆன்குய் மாகாணத்தில் லாவ்யா கிராமத்தில், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பல ஆண்கள் தங்களுடைய வாழ்க்கையை பிரம்மசாரிகளாகவே தொடரும் நிலை இன்றைய சீனாவில் கூர்மையாகி வரும் சமூகச் சிக்கல்களை எடுத்துகாட்டுகிறது. என்னதான் பிரச்சனை? சியோங் ஜிகன், உடனடியாக தன்னுடைய கிராமத்தின் சாலை வசதியை குறை சொல்லத் தொடங்கிவிடுகிறார். ”இந்த இடம் தனிமைப்படுத்தப்பட்டுள்…
-
- 0 replies
- 923 views
-
-
அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை DEA/V.GIANNELLA/ Getty Images Image caption ஊர்ப்பருந்து மலேசியாவில் லினாஸ் என்ற நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று குற்ற…
-
- 0 replies
- 601 views
-
-
ஆதிவாசி எனும் கள உறவின் "[size=5]வாயாடவில்லை எந்தன் வாலாடுது - நான்[/size] [size=5]வம்பு செய்யவில்லை விதி விளையாடுது[/size][size=5][size=4]" கையெழுத்து (தலையெழுத்து) பகுதியில் உள்ள [/size][size=4]இந்த வசனத்தில் பல கருத்துகள் அடங்கியிருக்கு. நல்ல கருத்து ஆதிவாசி.[/size][/size] [size=5][size=4]விதியை யார் தீர்மானிக்கின்றார்கள், விளைவு நம் கையிலா அல்லது மற்றவர்கள் மீது பழியை போட & ஒரு தப்பை மறைக்க இந்த சொல்ல பயன் படுத்துகின்றோமா?[/size][/size] [size=5][size=4]இது எம்மில் உள்ள பலகீனத்தை காட்டுகின்றதா? [/size][/size] [size=5][size=4]விரும்பினால் உங்கள் பொன்னான கருத்துகளை பகிருங்கள் எனக்காக அல்ல பலருக்கு உதவும்.[/size][/size] [size=5][size=4]====…
-
- 0 replies
- 782 views
-
-
படிக்கட்டுகள். நுழைவு குழு. பொருட்கள். கதவுகள். பூட்டுகள். வடிவமைப்பு » காற்றோட்டம் அறிவியல் பார்வையில் காதல் என்றால் என்ன: உணர்வுகளின் வேதியியல். அறிவியலின் பார்வையில் காதல். காதலர்களின் மனதில் என்ன நடக்கிறது? காதல் என்றால் என்ன விஞ்ஞானிகளே அறிவியல் பார்வையில் காதல் என்றால் என்ன: உணர்வுகளின் வேதியியல். அறிவியலின் பார்வையில் காதல். காதலர்களின் மனதில் என்ன நடக்கிறது? காதல் என்றால் என்ன விஞ்ஞானிகளே மிகவும் தெளிவான பதிவுகள் மற்றும் உணர்ச்சிகள் அவர்கள் காதலிக்கும்போது, வெறித்தனமாக காதலிக்கும்போது அவர்களுக்கு வரும். மேலும் காதலில் விழும் இந்த நிலையில், மனித மூளையில் ஒரு …
-
- 0 replies
- 849 views
-
-
"சிந்து சம வெளியில் ஏறு தழுவல்" / "Bull fighting in Indus valley" மொஹெஞ்ச தாரோவில் கண்டெடுக்கப்பட்ட, ஏறு தழுவல் கல் முத்திரை, நீலகிரி மாவட்டத்தில் கரிக்கியூர் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட 3500-4000 ஆண்டுகளுக்கு முந்தைய காளை துரத்தும் பாறை ஓவியம், சேலம் மாவட்ட அருங்காட்சியகத்தில் உள்ள ஏறு தழுவல் கல்வெட்டு என்பன ஜல்லிக்கட்டு என இன்று அழைக்கப்படும் எருதுவேட்டை என்ற மாடு பிடிக்கும் அல்லது ஏறு தழுவும் விளையாட்டுக்கு பண்டைய சாட்சியாக உள்ளன. ஏறு தழுவல் என்பது காளையை அடக்கி அமைதி ஆக்குபவருக்கு மாட்டின் கொம்புகளில் முன்னமே துணியில் கட்டி வைத்துள்ள 'சல்லி காசை' அல்லது 'நகைகளை' பரிசாக கொடுக்கும் ஒரு வீர விளையாட்டு ஆகும்.இது இன்றைய வடிவில், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்…
-
- 0 replies
- 554 views
-
-
இந்த கட்டுரைகள் யாவும் பல தளங்களில் படித்து தொகுத்தவை தனி தனியாக குறிப்பிட முடியவில்லை நன்றி மகிழ்ச்சியாக வாழ்வதற்கான ஒரே ஒரு இரகசியம் ஒவ்வொரு நாளும் பிறத்தல் வேண்டும். ஒவ்வொரு நாளும் பிறப்பதற்கு அதற்கு முதல் நாள் இறத்தல் வேண்டும். உறக்கம் இறப்பாகவும் விழிப்பு பிறப்பாகவும் இருத்தல் வேண்டும். புதிதாகப் பிறக்கும் போது அன்று நாம் முகம் கொடுக்கும் ஒவ்வொன்றும் புதுமை. ஒப்பீடுக்கு இடமில்லாத புதிய அனுபவம். ஒவ்வொன்றும் அழகு. ஒவ்வொன்றும் அற்புதம். ஒவ்வொன்றும் தனித்துவம். நேற்றயவைகள் எதுவும் இல்லை. எல்லாமே புதியவை. நேற்றயவர்கள் எவரும் இல்லை. எல்லோரும் புதியவர்கள். இன்றைய அனைத்தும் உறக்கம் வரைதான். நாளைய விழிப்பு புதிய பிறப்பு. மீண்டும் எல்லாமே புதுமை, ஆச்சரியம், அற்புதம். 'வார்த்தை…
-
- 0 replies
- 1.3k views
-
-
முடிதிருத்தும் பணி செய்து தனது குடும்ப வறுமையை போக்க முயற்சி செய்து வரும் எட்டாம் வகுப்பு மாணவி பிந்து பிரியா, பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்
-
- 0 replies
- 510 views
-
-
உண்மயில் திருமண முறைகள் மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட ஜாதிகளுக்கு ஏற்றவாறு பல உண்டு.நான் அறிந்த வரையில் ஈழத் தமிழர்களின் திருமண முறையில் மணமகள் மணமகன் காலில் விழுந்து வணங்குவதென்பது அவர்களின் வழக்கத்தில் இல்லாத ஒன்று.ஆனால் வேறு ஜாதிகளில் இருக்கலாம்.மலையகம்,இந்தியாவி ல் மொட்டை வெள்ளாளர் என்ற ஜாதியினர் இருக்கின்றார்கள். அவர்களுக்கு 40க்கு மேற்பட்ட கோத்திரமும் உண்டு இவர்களின் திருமணத்தில் ஐயருக்கு பெரிதாக வேலையில்லை.அவர்களுடைய அரசாணிப்பூசாரி என்பவரே முக்கால்வாசித் திருமணத்தையும் முடித்து விடுவார்.இவர்களின் திருமணத்திலே நெல் அளக்கும் முறையும்,வந்திருக்கும் பங்காளிமுறை உறவினர்களும் மணமகள் மணமகனுக்கு மாலை போடுவதிலேயே நேரம் போய்விடும்.அடுத்தது ஆசாரியாக்கள்(விஸ்வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
இதய நோய் ஆபத்துக்களிலிருந்து 'திருமண பந்தம்' பாதுகாக்கும்: ஆய்வு தகவல் ஒருவரின் உடல்நலத்தை மேம்படுத்தும் அம்சமாகதிருமணம் உள்ளது என்று கண்டறிந்த ஆய்வாளர்கள், உடலில் அதிக அளவு கொழுப்பு போன்ற முக்கிய இதய நோய் ஆபத்து காரணிகளால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், திருமணத்தால் அவரின் ஆயுள் அதிகரிப்பு சாத்தியப்படலாம் என்று தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைKUZMICHSTUDIO/GETTY இதய நலன் தொடர்பான மாநாடொன்றில், பிரிட்டனை சேர்ந்த ஏறக்குறைய 1 மில்லியன் வயது வந்தோரிடம் நடத்தப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, நம் உடல் நலனை நாம் சிறப்பாக கவனித்துக் கொள்வதற்கு ஒரு அன்பான துணை தூண்டுகோலாக இருப்பார் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 602 views
-
-
துணிவே துணை என தனித்து பயணிக்கும் பெண்கள் பெண்களின் இடம் சமையலறை என்ற காலம் வேகமாக மாறிவருகிறது. பெரும்பாலான துறைகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் கல்வி கற்பது மட்டுமல்ல பணியிலும் சிறந்து விளங்குகிறார்கள். ஆனால் பொழுதுபோக்கு என்று வரும்போது பெண்கள் தமது குடும்பத்திற்கே முன்னுரிமை அளிப்பது தான் அதிகம். துணிவே துணை என தனித்து பயணிக்கும் பெண்கள் ஆண்களை போல தமக்கு பிடித்த இடங்களுக்கு தமது நண்பர்களுடனோ அல்லது தனியாகவோ பெண்கள் சுற்றுலா செல்வதில்லை. ஆனால் அந்த நிலைமை தற்போது மாறிவருகிறது. தனியாகவே சுற்றுலா செல்ல பல பெண்கள் தொடங்கிவிட்டனர். அதேபோல பெண்கள் குழுவாக பயணம் செய்யும் போக்கும் தற்போது அதிகரித்துவருகின்றது. சிலர் சிந…
-
- 0 replies
- 1.1k views
-
-
முதலாளிகள் வேலையாட்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? [size=2] [/size][size=3] [size=4]ஒரு நிறுவனமோ அல்லது கடையோ செழிப்பாக இருக்க, செம்மையான முறையில் செயல்பட முதலாளியும், தொழிலாளியும் ஆரோக்கியமான மனோநிலையில் இருக்க வேண்டும். முதலாளிகள் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் வேலையாட்கள் அற்புதமாக செயல்படுவார்கள். அதற்கான சில டிப்ஸ் பின்வருமாறு: 1. வெற்றிக்கான 80/20 சட்டத்தை எப்போதும் நினைவில் கொண்டிருங்கள். அதாவது எண்பது சதவீத நேரங்களில் நான் சரியான தீர்மானங்களை எடுப்பேன். ஆனால் இருபது சதவீத நேரங்களில் நானும் தவறான தீர்மானங்கள் எடுக்கிறேன். தவறுகளைச் செய்கிறேன். அல்லது சிறப்பாக செய்திருக்க மாட்டேன். என்னுடைய பணியாளர்களுக்கும் இதே 80/20 சட்டத்தின்ப…
-
- 0 replies
- 653 views
-
-
சில நாட்களுக்கு முன்பு படித்தது. யார் சொன்னாங்கனு சரியாத் தெரியல, ஆனா படிக்க நல்லா இருந்தது. என்ன சொல்லியிருக்காங்கனா, "Try" என்கிற வார்த்தையை அகராதியிலிருந்து விலக்கிவிடுவது நல்லதுனு சொல்லியிருக்காங்க. சரி அப்படி என்ன தான் அந்த வார்த்தைல பிரச்சனைனு பாக்கலாம். Try என்ற சொல் நம்முடைய மூளைக்கு வெற்றிய மறைச்சு, தோல்விக்கான வழிய காட்டுதாம். என்னடா சிறுபிள்ளைத்தனமாக இருக்குனு நீங்க நினைக்கிற மாதிரி தாங்க நானும் நினைச்சேன். மேல படிச்சாத்தான் இது கூட ஒரு விதத்துல சரீன்னு பட்டுது. ஒரு உதாரணத்தோட விளக்கியிருக்காங்க. ஒரு குழந்தைக் கிட்ட ஒரு பென்சில் தந்து, "Try dropping this pencil" அப்படீன்னு சொல்றதா வெச்சிக்குவோம். அந்தக் குழந்தை என்ன பண்ணும்? பென்சிலக் கீழ போடும். அந்த…
-
- 0 replies
- 731 views
-
-
2020 முதல் 2030 புதிய பாதையில் பெண்களின் பத்தாண்டு 2030 வரையிலான புதிய பத்தாண்டு பெண்களுக்கானது. கடந்த நூறு ஆண்டுகளில் நடந்ததைவிட அதிக மாற்றங்கள் பெண்களின் உலகத்தில் வருகிற பத்தாண்டுகளில் தோன்றும். விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். அறிவும், ஆற்றலும், தன்னம்பிக்கையும் நிறைந்த பெண்களுக்கான காலமாக இந்த பத்தாண்டுகள் இருக்கும்.அதில் பெண்கள் உலகம் சந்திக்கும், சாதிக்கும் விஷயங்கள் என்னென்னவாக இருக்கும் என்பது தெரியுமா? வருகிற பத்தாண்டுகளில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய எந்திர மனிதர்கள் உருவாக்கப்பட்டு விடுவார்கள். அதற்கான ஆராய்ச்சிகள் உச்சகட்டத்தை அடைந்திருக்கின்றன. மனிதர்கள் காட்டுவதை போன்ற அன்பு, கருணை, கோபம், மகிழ்ச…
-
- 0 replies
- 587 views
-
-
போருக்கு பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள் 48 Views போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் தற்கொலை வீதங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை மிகவும் வேதனைக்குரிய விடயமாக உள்ளது. தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும், அவை போதியளவில் மக்களுக்கு பயனளிக்கவில்லை என்றே கூற முடியும். வடக்கின் 5 மாவட்டங்களில் இருந்தும் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு நோயாளார்கள் மாற்றப்படுவது வழமை. அந்த தகவலின் அடிப்படையில், கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து தற்கொலைகள் எண்ணிக்கையளவில் வீழ்ச்சி கண்டுள்ள போதிலும், வருடாந்தம் 500இற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலைக்கு முயன்…
-
- 0 replies
- 765 views
-
-
பின்னடைவை உருவாக்க 10 நடைமுறை வழிகள் பின்னடைவை உருவாக்க 10 நடைமுறை வழிகள் - உளவியல் உள்ளடக்கம்: பின்னடைவு என்றால் என்ன? இழப்பு சூழ்நிலையை சமாளிக்கும் திறன் பின்னடைவை உருவாக்க 10 வழிகள் 1. குடும்பத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவு உறவுகளை ஏற்படுத்துங்கள் 2. நெருக்கடிகளை தீர்க்க முடியாத தடைகளாகப் பார்ப்பதைத் தவிர்க்கவும் 3. மாற்றம் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் 4. உங்கள் இலக்குகளை நோக்கி ஓட்டுங்கள் 5. தீர்க்கமான நடவடிக்கை எடுங்கள் 6. உங்களை கண்டறிய வாய்ப்புகளைத் தேடுங்கள் 7. உங்கள் தொடர்பு மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை மே…
-
- 0 replies
- 344 views
-
-
“அருவருப்பான தோற்றம் கொண்ட ஆணோ பெண்ணோ காதலிக்கப்பட்டதாக வரலாறு உண்டா?”... கொஞ்சம் யோசித்த பின்னர் பதிவைப் படியுங்கள். அன்பு, பாசம், நேசம், கோபம், தாபம், காதல், காமம் போன்றவை அன்றாடம் நம்மை ஆளுகிற உணர்ச்சிகளைக் குறிக்கும் சொற்கள். இந்தப் பதிவுக்குத் தொடர்புடைய அன்பு, கருணை, காமம், காதல் ஆகிய பதங்களுக்கான பொருள் வேறுபாட்டையும், அந்த உணர்ச்சிகள் நம்முள் ஏற்படுத்தும் விளைவுகளையும் முதலில் தெரிந்து கொள்வோம். அன்பு: ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் பற்றுதல். இந்த உணர்ச்சிக்கு ஆட்படுவதால் ஏற்படும் விளைவு, ஒருவர் நலனில் இன்னொருவர் அக்கறை கொள்ளுதல்; உதவுதல். கருணை: சொந்தமோ பந்தமோ இல்லாதவர் மீதும் செலுத்துகிற அன்பு. இதன் விளைவு, பிரதி பலன் கருதாமல் உதவுதல். காமம்: கவர்ச்ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறுவர், சிறுமிகளை வெவ்வேறு விதங்களில் பாதிக்கும் மன அழுத்தம் - ஆய்வு மிகுந்த மன அழுத்தம் ஏற்படுத்தும் நிகழ்வுகள்,சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் மூளைகளை வெவ்வேறு வழிகளில் பாதிக்கும் என ஸ்டான்பஃர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக, அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் மூளையில், இன்சுலா ( insula) என்று அழைக்கப்படும், உணர்ச்சிகள் மற்றும் பிறர் உணர்வுகளைப் புரிந்து கொண்டு பகிர்ந்து கொள்ளும் தன்மை ஆகியவைகளுடன் தொடர்புள்ள ஒரு பகுதி அளவில் சிறியதாக இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மூளையில், இன்சுலாவின் அளவு வழக்கத்தை விடப் பெரிய அளவில் இருந்தது. இந்தத் தகவல், சிறுவர…
-
- 0 replies
- 453 views
-
-
குழித்துறையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே படகு ஓட்டி வாழ்க்கையை நடத்தும் மூதாட்டி ரத்னபாய். படகு மூலம் தினமும் நூற்றுக்கணக்கானோர் ஆற்றைக் கடக்க உதவுவதை, மேற்கொண்டு 81 வயதிலும் உழைப்பின் மகிமையை உணர்த்தி வருகிறார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர். பள்ளிக் குழந்தைகள் முதல்... குழித்துறை பகுதியில் ஓடும் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கிறது அஞ்சாலிக் கடவு கிராமம். இங்கு ஆற்றின் ஒரு கரை விளாத்துறை ஊராட் சியிலும், மறுகரை மெது கும்மல் ஊராட்சியிலும் இருக் கிறது. இப்பகுதியில் ஆற்றைக் கடந்தால் 200 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் மறுகரைக்கு சென்று விடலாம். அதுவே சாலை வழியாக செல்ல வேண்டுமானால் 12 கிலோ மீட்டர் தூரம் சுற்ற வேண்டும். …
-
- 0 replies
- 670 views
-
-
திரைப்பட நாயகிகள் வெறும் பண்டமா? நயன்தாரா | கோப்பு படம் பெண்களைப் பண்டமாக்கிக் காட்சிப்படுத்துவது தமிழ்த் திரைப்படங்களுக்குப் புதிதில்லை. அந்த வழக்கத்தையொட்டித் திருவாய் மலர்ந்திருக்கிறார் திரைப்பட இயக்குநர் சுராஜ். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கத்தி சண்டை’ படத்தைத் தொடர்ந்து இணையதளம் ஒன்றுக்கு இவர் அளித்த பேட்டியில் “நாயகிகள் முழுமையாக உடையணிந்து நடிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பணம் கொடுத்துத் திரையரங்குக்கு வருகிறவர்கள் நடிகைகளைக் கவர்ச்சியாகப் பார்க்கத்தான் விரும்புவார்கள்” என்று சொல்லியிருக்கிறார். அதோடு, “ஆடை வடிவமைப்பாளர், முட்டிவரை மூடியபடி இருக்கிற உடையைக் கொண்டுவந்தால் அவற்றை நான் ஆங்காங்கே க…
-
- 0 replies
- 436 views
-