உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
கொலம்பியாவில் பணக்கார முதலைகளை உள்ளடக்கிய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆதரவு அரசுக்கு எதிராக போராடும் கொலம்பிய போராளிகள் அமைப்பான Farc அமைப்பின் முதன்னிலைத் தலைவர் ஒருவரையும் இதர 16 போராளிகளையும் கொலம்பியப்படைகள் ஈகுவடோர் நாட்டின் எல்லைக்குள் அத்துமீறிச் சென்று கொன்றதை அடுத்து கொலம்பியாவின் இரு எல்லைகளிலும் உள்ள வெனிசுவலா மற்றும் ஈகுவடோர் நாட்டுப்படைகள் தங்கள் நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கப் போவதாகக் கூறி கொலம்பிய எல்லையில் படைக் குவிப்பைச் செய்து வருகின்றன. இதனால் அங்கு போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இரண்டு நாடுகளும் தூதரக மட்ட உறவுகளையும் கொலம்பிய நாட்டின் அத்துமீறல் செயலை அடுத்து விலக்கிக் கொண்டுள்ளன. இச்சம்பவத்தை அம…
-
- 3 replies
- 939 views
-
-
இந்திய வம்சாவளி மக்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டதை ஏற்றுக்கொண்டார் மலேசிய அமைச்சர் சாமிவேலு [05 - March - 2008] மலேசியஅரசாங்கம் அங்கு வாழும் இந்திய வம்சாவளி மக்களின் தேவைகளை போதுமானளவில் நிறைவேற்றவில்லையென்பதை அந்நாட்டு அரசில் அங்கம் வகிக்கும் ஒரேயொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சரான டத்தோ சாமிவேலு ஏற்றக்கொண்டுள்ளார். மலேசியாவில் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாகக் கூறி இந்திய வம்சாவளி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். இவ் ஆர்ப்பாட்டங்களின் போது அரசில் அங்கம் வகிக்கும் இந்திய அமைச்சரான சாமிவேலு, இந்தியவம்சாவளியினரின் நலன்களுக்காக எதனையும் செய்யவில்லையென பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பிரதமர் அப்துல்லா படாவியின் தலைமையிலான ஆளும் பரிசான…
-
- 1 reply
- 627 views
-
-
ஹிலாரி கிளிண்டன் வெற்றி . Wednesday, 05 March, 2008 10:41 AM . டெக்சாஸ், மார்ச் 5: ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக ரோடி தீவு மாகாணத்தில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றுள்ளார். . ஓகியோவிலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரக் ஒபாமாவை பின்னுக்கு தள்ளி ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட ஹிலாரிக்கும், ஒபாமாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சில மாகாணங்களில் ஹிலாரியை விட அதிக வாக்குகள் பெற்று ஒபாமா முன்னிலை பெற்றிருந்த நிலையில், இரண்டாவது சூப்பர் டியூஸ்டே என்று வர்ணிக்கப்பட்ட நேற்றைய வா…
-
- 0 replies
- 783 views
-
-
Richard Boucher warned that "time is tight" இந்திய அணு உலைகள் மற்றும் இந்திய அணுசக்தி செயற்திட்டங்கள் தொடர்பில் அமெரிக்காவுடன், இந்திய மத்திய, மன்மோகன் சிங் தலைமையிலான சோனியா காந்தி வழிநடத்தும், நாடாளுமன்றத்தில் சிறுபான்மை பலம் கொண்ட காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு செய்து கொண்ட உடன்படிக்கையை ஒப்பந்தத்தில் உள்ள நகல்களுக்கும் கால இடைவெளிக்கும் ஏற்ப நடைமுறைப்படுத்த விரைந்து முன் வர வேண்டும் என்று அமெரிக்கா கடும் தொனியில் இந்தியாவை எச்சரித்திருக்கிறது. காங்கிரஸ் சிறுபான்மை அரசு அமெரிக்காவுடன் செய்து கொண்ட இவ்வுடன்படிக்கை தொடர்பில் அதன் கூட்டணியில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் எதிர்மாறான நிலையைக் கொண்டிருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவையும் எதிர்க்கட்…
-
- 0 replies
- 823 views
-
-
சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடலாம் அரசு உத்தரவு ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 2, 2008 சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருச்சிற்றம்பல மேடை உள்ளது. இந்த மேடையில் இருந்தபடி பக்தர்கள் தேவராம், திருமறை ஆகியவற்றைப் பாடுவார்கள். ஆனால் இதற்கு கோவில் தீக்ஷிதர்கள் தடை போட்டு விட்டனர். சமஸ்கிருதத்தில் தான் மந்திரங்கள் ஓத வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதை எதி்ர்த்து போராட்டங்கள் நடந்ததையடுத்து தமிழில் பாடலாம் ஆனால், மேடையில் இருந்து பாடக் கூடாது, கீழே உள் மண்டபத்தில் இருந்தபடிதான் பாட வேண்டும் என்றனர். இந் நிலையில்…
-
- 17 replies
- 2.8k views
-
-
காங். அதிரடி திட்டம்? . Monday, 03 March, 2008 01:49 PM . சென்னை, மார்ச் 3: தமிழ்நாட்டில் கட்சியை வலுப் படுத்தவும், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக 3வது அணியை ஏற்படுத்தவும் காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. . இதற்காக புதிதாக வளர்ந்து வரும் கட்சிகள் உட்பட அதிமுக, பிஜேபி தவிர்த்த கட்சிகளுடன் பேச்சு நடை பெற்று வருவதாக கூறப்படுகிறது. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், பாமக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் ஒரே கூட்டணியில் இருந்தாலும் அவர்களுக்கு இடையே பல்வேறு பிரச்சனைகளில் கருத்து வேறுபாடுகள் தோன்றுவதும், அவ்வப்போது சமரசம் ஏற்படுவதுமாக இருந்து வருகிறது. குறிப்ப…
-
- 1 reply
- 875 views
-
-
போர்முனைக்கு மீண்டும் செல்வேன் இளவரசர் ஹாரி இங்கிலாந்து இளவரசர் சார்லசின் இளையமகன் ஹாரி ஆப்கானிஸ்தான் போர்முனையில் இருந்து சமீபத்தில் தான் திரும்பினார். அவர் மீண்டும் போர்முனைக்கு செல்வதற்கு விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இன்னும் ஒரு ஆண்டுக்கு அவர் போர்முனைக்கு செல்வதை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது என்று தெரிவித்து உள்ளது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி ராணுவ கல்லூரியில் படித்து பயிற்சி பெற்றவர். அவர் போர்முனைக்கு சென்று யுத்த அனுபவம் பெற விரும்பினார். இதற்காக அவர் ஈராக் போர்முனைக்கு செல்ல விரும்பினார். அவர் அங்கு சென்றால் அவரை தீவிரவாதிகள் கடத்திச் செல்லப்போவதாக அறிவித்தனர். இதனால் அவர் ஈராக் செல்லும் திட்டத்தை அந்த…
-
- 3 replies
- 1.4k views
-
-
பாகிஸ்தான் சிறையில் 35 ஆண்டுகள் வாடிய இந்தியரை விடுவிக்க அரசாங்கம் முடிவு [04 - March - 2008] தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பாகிஸ்தான் சிறையில் 35 ஆண்டுகள் வாடிய இந்தியாவைச் சேர்ந்த தூக்குத் தண்டனைக் கைதியை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் மனித உரிமைக்கான அமைச்சர் அன்சார் புர்னே, லாகூர் சிறையைப் பார்வையிடச் சென்றபோது அங்கு காஷ்மீர் சிங் என்ற தூக்குத் தண்டனைக் கைதி 35 ஆண்டுகளாக வாடுவதை அறிந்தார். இதையடுத்து, பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பிடம் கருணை மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கருணை மனுவை ஏற்று காஷ்மீர் சிங்கை விடுவிக்க முஷாரப்பும் ஒப்புக் கொண்டார். உளவுக் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 1973 இல் ராவல்பிண்டியில் காஷ்மீர் சி…
-
- 1 reply
- 728 views
-
-
இமயமாக உயர்ந்த மக்கள் தலைவர் ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தியும்இ விடுதலைப் பெற்ற நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றும் பகைவர்களின் இடைவிடாத அழிப்பு வேலைகளிலிருந்து காத்தும் 32 ஆண்டு காலமாக ஈடுஇணையில்லாத தொண்டாற்றிய பெருமைக்குரியவர் பிடல் காஸ்ட்ரோ. சின்னஞ்சிறிய கியூபா நாட்டினை சர்வதிகார ஆட்சியிலிருந்து மீட்பதற்காக போராடிய பிடல் காஸ்ட்ரோவும் அவரது அற்புதமான தோழன் சேகுவேராவும் உலக வரலாற்றில் உன்னதமான இடத்தை பெற்றுள்ளனர். காஸ்ட்ரோவின் ஆட்சியை கவிழ்க்கவும்இ அவரைப் படுகொலை செய்யவும் அமெரிக்க வல்லரசு இடைவிடாது முயற்சி செய்தது. உலக வல்லரசான அமெரிக்காவின் நயவஞ்சகத்தை பிடல் காஸ்ட்ரோ வெற்றிகரமாக முறியடித்தார். இதன் விள…
-
- 0 replies
- 696 views
-
-
ஜெர்மனி சூறாவளி-பெரும் விமான விபத்து தவிர்ப்பு செவ்வாய்க்கிழமை, மார்ச் 4, 2008 ஹேம்பர்க்: கடும் சூறாவளிக் காற்றுக்கு இடையே ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் தரையிறங்க முயன்ற விமானம் தட்டுத்தடுமாறி, ரன் வேயில் இறக்கை மோதிய நிலையில் மீண்டும் வானி்ல் பாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மியூனிக் நகரில் இருந்து லுப்தான்ஸா நிறுவனத்துக்கு சொந்தமான அந்த ஏர்பஸ் 320 ரக விமானம் 131 பயணிகளுடன் ஹாம்பர்க் வந்தது. அப்போது அங்கு திடீரென கடும் சூறாவளிக் காற்று வீசியது. இந் நிலையில் விமானத்தை தரையிறக்கினர் விமானிகள். சுமார் 144 மைல் வேகத்தில் தரையிறங்கிய அந்த விமானம் ரன் வேயை எட்டியபோது சூறாவளிக் காற்றால் தள்ளாடியது. விமானம் ரன் வேயை விட்டு விலகி இடதுபுறமாக…
-
- 3 replies
- 1.2k views
-
-
டெக்சாஸ்: ஒபாமா, ஹிலாரி மோதல் . Tuesday, 04 March, 2008 10:52 AM . டெக்சாஸ், மார்ச் 4: அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக டெக்சாஸ் மற்றும் ஓகியோ மாகாணங்களில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. . இந்த வாக்குப்பதிவில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விரும்பும் கருப்பின தலைவரான பாரக் ஒபாமாவிற்கும், முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த மாதம் 5ந் தேதி நடைபெற்ற முதல் சூப்பர் டியூஸ்டே வாக்குப்பதிவுக்கு பிறகு தொடர்ந்து பல்வேறு மாகாணங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவுகளில் 11 இடங்களில் வெற்றி பெற்று பாரக் ஒபாமா முன…
-
- 0 replies
- 560 views
-
-
மகா அழுக்கான நகரம் மும்பை-நெரிசல் நகரம் சென்னை! திங்கள்கிழமை, மார்ச் 3, 2008 நியூயார்க்: உலகின் மிகவும் அசுத்தமான, சுகாதார சீர்கேடு நிறைந்த 25 நகரங்களில் இந்தியாவின் மும்பையும், டெல்லியும் இடம் பிடித்துள்ளன. மக்கள் நெருக்கம் மிக அதிகம் உள்ள 20 நகரங்களில் சென்னை உள்ளிட்ட 3 இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன. அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழில்தான் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை அவ்வப்போது வெளியிட்டு வரும் போர்ப்ஸ், தற்போது உலகின் அழுக்கான 25 நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உலகின் அழுக்கான நகரங்கள் பட்டியலில் மும்பையும், டெல்லியும் இடம் பிடித்துள்ளன. மகா அழுக்கு நகரங்களின் வரிசையில் மும்பைக்கு 7வது இடம் …
-
- 1 reply
- 816 views
-
-
தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு செல்ல அரசு தடை?! ராமேஸ்வரம்: கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் திருவிழாவில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்ள அரசு தடை விதித்துள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக முன்பு இருந்த கச்சத்தீவு பின்னர் இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது. இருப்பினும் தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் தங்களது வலைகளை உலர்த்திக் கொள்ளவும், ஓய்வு எடுக்கவும் உரிமை வழங்கப்பட்டது. இருப்பினும், இலங்கை படைகள், தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பக்கம் வந்தாலே ஒன்று சுடுகிறது அல்லது பிடித்துக் கொண்டு போய் இலங்கை சிறைகளில் அடைக்கிறது. கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த பல ஆண்டுக…
-
- 0 replies
- 626 views
-
-
காசாப் பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் கடந்த சில வாரங்களாக காசா பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களில் பல சிறுவர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 சிறுவர்கள் உட்பட 20 பலஸ்தீனப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் இத்தாக்குதல்களை ஐநாவோ அல்லது அமெரிக்க ஊதுகுழல் மனித உரிமை அமைப்புக்களோ அல்லது ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது அமெரிக்காவோ கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..! இஸ்ரேலை ஒட்டியே சிறீலங்காவும் தமிழர் தாயகத்திலும் பொதுமக்களை இலக்கு வைத்துக் கொலைக்களம் விரித்துள்ளது.
-
- 2 replies
- 964 views
-
-
திருக்கடையூர் ஆலயத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் மாலை மாற்றிக் கொண்டனர் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா நாகை மாவட்டத்தில் உள்ள பிரபல ஆலயம் ஒன்றில் தனது தோழி சசிகலாவுடன் மாலை மாற்றிக்கொண்டுள்ளார். இன்றுதான் ஜெயலலிதா அறுபதாவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். அதை முன்னிட்டே நேற்றைய வழிபாடுகள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தில்தான் அறுபதை வயதை அடையும் தம்பதியர் அத்தகைய ஆராதனைகளை நடத்துவர் என்பதாலும், பெண்கள் இருவர் மாலை மாற்றிக்கொண்டதாலும், இது குறித்து தமிழக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுள்ளது. http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml
-
- 46 replies
- 12.5k views
-
-
மாஸ்கோவின் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களுக்கு பொது மன்னிப்பு ரஷ்யாவில் தஜ்கிஸ்தான் குடியேற்றக்காரர்கள் சிலர்ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் தங்கியுள்ள சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களுக்கு ரஷ்ய அதிகாரிகள் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளனர். மாஸ்கோவில் சுமார் பத்து லட்சம் குடியேற்றக்காரர்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. மாஸ்கோ மேயர் அலுவலகம் வழங்கியுள்ள இந்தப் பொதுமன்னிப்பு, மத்திய ஆசியாவைச் சேர்ந்த குடியேற்றக்காரர்களுக்கு வழங்கப்படுகிறது. தங்களைப் பதிவு செய்துகொள்ளவும், வேலை தேடிக்கொள்ளவும் அவர்களுக்கு ஒரு மாத காலம் தரப்படுகிறது. வெளிநாட்டவருக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகம் இருப்பதாலும், பொலிசார் மீதான அச்சம் காரணமாகவும் பலர் தங்களைப் பதிவு செய்துகொள்ள மு…
-
- 0 replies
- 705 views
-
-
பீய்ஜிங் விமான நிலையத்தில் 'உலகின் மிகப் பெரிய' புதிய பயணிகள் தளம் பீய்ஜிங்கின் புதிய விமான பயணிகள் தளம் சீனத் தலைநகர் பீய்ஜிங்கின் விமான நிலையத்தில் புதிய டெர்மினல் அதாவது பயணிகள் தளம் ஒன்று இன்று உத்தியோகப்பூர்வமாகத் திறக்கப்பட்டு, முதன்முதலாக பயணிகளை வரவேற்றுள்ளது. இவ்வாண்டில் பின்னர் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின்போது ஏராளமான பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்கள் இத்தளத்தைப் பயன்படுத்துவார்கள். உலகின் மிகப் பெரிய விமான பயணிகள் தளம் இதுதான் என்று சீனா கூறுகிறது. 170 கால்பந்தாட்ட மைதானங்களின் பரப்பளவு கொண்டது அது. பிரிட்டிஷ் கட்டிட வடிவமைப்பாளர் நோர்மன் ஃபாஸ்டர் இதனை வடிவமைத்துள்ளார். நான்கே ஆண்டுகளில் ஐம்பதாயி…
-
- 0 replies
- 609 views
-
-
ஹிட்லரின் கொலைப்பட்டியலில் சாப்ளின ஹிட்லரின் நாஜிப்படைகளிம் கொலை பட்டியலில் காலஞ்சென்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் இடம் பெற்றிருந்ததாக, தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1930ம் ஆண்டில் வெளியான ஜூடென் செஹன் டிக் ஆன் (ஜூவீஸ் ஆர் வாச்சிங் யு) என்ற நூல், அடுத்த மாதம் 6ம் தேதி ஏலத்திற்கு வருகிறது. இதில் இத்தகவல் வெளியாகியுள்ளது. யூதர்களுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்ட டாக்டர் ஜோகன்வோன் லியர்ஸ் இதன் ஆசிரியர். நாஜிக்களின் ஆதரவு நூலாக கருதப்பட்ட இதில், யூத இன முக்கிய புள்ளிகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. இதில், கொல்லப்பட வேண்டிய கலைஞர்களின் பட்டியல் பிரிவில் சார்லி சாப்ளினையும் நாஜி அரசு சேர்த்திருந்ததாக, நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இந்நூலின் ஒரு பிர…
-
- 0 replies
- 841 views
-
-
பிரபல எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை சனிக்கிழமை, மார்ச் 1, 2008 சென்னை: பிரபல தமிழ் எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் சென்னையில் இன்று தற்கொலை செய்து கொண்டார். எழுத்தாளர் சுஜாதாவின் மறைவினால் தமிழ் எழுத்துலகம் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் இன்னொரு பெரும் அதிர்ச்சியாக பிரபல எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் 67 வயதில் தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தி வந்துள்ளது. ராம் மோகன் என்ற இயற்பெயர் கொண்ட ஸ்டெல்லா புரூஸ் இளமை ததும்பும் பல சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார். சுஜாதாவைப் போலவே இவரது எழுத்துக்களிலும் இயல்பும், இளமையும் நளினமாக நடைபோடும். 67 வயதான ஸ்டெல்லா புரூஸ், சமீப காலமாக வறுமையில் வாடி வந்தார். கோடம்போக்கம் யுனைட்டெட் இந்தியா காலனியில் தனத…
-
- 2 replies
- 1.4k views
-
-
வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் மரத்தினாலான கார் கண்டுபிடிப்பு [29 - February - 2008] வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் முழுக்க முழுக்க மரத்தினால் கார் ஒன்றை வடிவமைத்துள்ளனர். ஜோ ஹோர்மோன் என்பவரின் தலைமையில் வடிவமைக்கப்பட்ட இப்புதிய வகை விளையாட்டுக் கார் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. மணிக்கு 240 மைல் வேகத்தில் செல்லும் இந்தக் காருக்கு `ஸ்பிளின்டர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேப்பிள்பிளைவுட், எம்.டி.எப். மரங்களின் மூலம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மரத்தால் வடிவமைக்கப்பட்டு இருப்பதால் இதன் எடையும் போர்ஷே காரின் எடையை விட 240 கிலோ குறைவாக 1,134 கிலோ கொண்டுள்ளது. `அலுமினியம்…
-
- 1 reply
- 948 views
-
-
ஆப்கானில் இளவரசர் ஹாரி . Friday, 29 February, 2008 02:30 PM . லண்டன், பிப்.29: ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்து வரும் சண்டையில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி பங்கெடுத்துள்ளதாக புதிய தகவல் வெளியாகிவுள்ளது. . கடந்த கிருஸ்துமஸ் பண்டிகை முதலே இளவரசர் ஹாரி "புல்லட் மேக்னட்' என்ற புனை பெயரில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் ஒரு சாதாரண வீரனாக செயல்பட்டு வருகிறார் என்று "தி டிரட்ஜ் ரிப்போர்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஈராக்கிற்கு சென்று இளவரசர் ஹாரி போர் பயிற்சி பெற திட்டமிடப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த திட்டம் கைவிடப்பட்டு, ஆப்கானிஸ் தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் போர…
-
- 0 replies
- 742 views
-
-
மும்பை தாஜ்மகால் ஓட்டலில் காபி குடிக்க வேண்டும் என்ற 82 வயது மூதாட்டியின் ஆசை நிறைவேறவில்லை. சாதாரண ரப்பர் செருப்புகள் அணிந்து சென்றதால், அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து நிர்வாகம் வெளியேற்றி விட்டது.... மேலும் http://isoorya.blogspot.com/ http://tickala.blogspot.com/
-
- 3 replies
- 1.2k views
-
-
உலகில் 35 சதவீதம் பேரை மலேரியா தாக்கும் அபாயம் உலகின் 35 சதவீதம் பேர் மலேரியா நோய் தாக்கும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பதாக பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட வரைபட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. உலகின் மலேரியா நோயின் அபாயம் குறித்து ஆராய்வதற்காக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பேராசிரியர் பாப் ஸ்னோ தலைமயில் "மேப்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. கென்ய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவரும் இந்த அமைப்புக்கு "வெல்கம்' என்ற தன்னார்வ நிறுவனம் நிதியுதவி செய்து வருகிறது. உலகின் எந்தெந்தப் பகுதிகளிலெல்லாம் மலேரியா இருக்கிறது என்பது குறித்து இந்த அமைப்பு வரைபட அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் சுமார் 237 கோடி பேர் மலேரியா தாக்க…
-
- 0 replies
- 724 views
-
-
இன்னும் 760 கோடி ஆண்டுகளில் பூமியை சூரியன் விழுங்கும் அபாயம் [26 - February - 2008] இன்னும் 760 கோடி ஆண்டுகளில் பூமியை சூரியன் விழுங்கிவிடுமென வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; சூரியன் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே வருவதால் ஏற்படும் அதிக வெப்பத்தின் காரணமாக பூமியிலுள்ள புல், பூண்டுகள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடுவதுடன், கடல்கள் முற்றாக வற்றிப் போய்விடும். எனினும், அடுத்த நூற்றாண்டுகளில் ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஒரு, சிறு கிரகத்தை புவி ஈர்ப்பு எல்லைக்குள் கொண்டுவந்து மோதவைத்து பூமியின் சுற்றுவட்டப் பாதையை மாற்றுவதன் மூலம் அழிவிலிருந்து பூமியையும் மனித இனத்தையும் காப்பாற…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஈராக்கிய ஆயுதக்குழுவினால் 12 நேபாளிகள் கொலை செய்யப்பட்ட காட்சி இணையத்தில் [28 - February - 2008] *21 பொது மக்கள் ஆயுதக் குழுவினால் கடத்தல் பாக்தாத்: ஈராக்கின் ஆயுதக் குழுவொன்று நேபாளத்தைச் சேர்ந்த 12 தொழிலாளர்களை கொலை செய்த காட்சியை உள்ளடக்கிய ஒளிநாடாவொன்று இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத் தொழிலாளர்கள் அமெரிக்காவுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ள நேபாளக் கம்பனியொன்றில் பணிபுரிந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது. அன்ஸார்- அல்- சுன்னா என தன்னை அழைத்துக் கொள்ளும் இவ்வாயுதக் குழுவினால் வெளியிடப்பட்ட ஒளி நாடாவில் போராளியொருவர் சிரச் சேதம் செய்யப்பட்ட தொழிலாளியொருவருக்கு அருகில் கத்தியுடன் நிற்கும் காட்சி காண்பிக்கப்பட்டுள்ளது. 2004 இலும் சமையல…
-
- 0 replies
- 973 views
-