உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
கியூபா மாற வேண்டும்: புஷ் திகதி : Sunday, 09 Mar 2008, [saranya] கியூபா தொடர்பான அமெரிக்க கொள்கையில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால், அந்நாடு முதலில் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார். சமீபத்தில் பிடல் காஸ்ட்ரோ ஓய்வு பெற்றதையடுத்து கியூபா தொடர்பான அமெரிக்காவின் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பலரும் கூறியதை சுட்டிக்காட்டிய புஷ், உண்மையில் கியூபாதான் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கியூபாவின் கொள்கைகள் மாறாதவரை, அந்நாட்டின் மீது அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாது என்று அவர் கூறியுள்ளார். கியூபாவில் புதிய அதிபர் பதவியேற்றாலும் அதன் கொள்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எ…
-
- 1 reply
- 717 views
-
-
பிரபல எழுத்தாளர் சுஜாதா மரணம் சென்னை : சென்னையில் பிரபல எழுத்தாளர் சுஜாதா என அழைக்கப்படும் ரங்கராஜன் மரணமடைந்தார். அவருக்கு வயது 75. இவர் சிவாஜி, அந்நியன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தினமலர்
-
- 41 replies
- 9.8k views
-
-
நான்கு மாதத்துக்குப் பின்னர் சூரியனைக் கண்ட லாங்கியர்பைன் தீவு மக்கள் [08 - March - 2008] நான்கு மாத இருளுக்குப் பின் லாங்கியர்பைன் தீவு மக்கள் முதல் முறையாக சூரிய உதயத்தை அனுபவித்துள்ளனர். வடதுருவத்தில் இருந்து 1000. கி.மீ., தொலைவில் உள்ள தீவு லாங்கியர் பைன். வடபகுதியில் மனிதர்கள் வாழும் கடைசித் தீவு.இதற்கு அப்பால் மனிதர்கள் வசிக்க முடியாது. இந்தத் தீவை 100 ஆண்டுகளுக்கு முன் லாங்கியர் பைன் என்ற அமெரிக்கர் கண்டுபிடித்தார். அவர் பெயரிலேயே இத்தீவு அழைக்கப்படுகிறது. இந்தத் தீவில் பிரதான தொழில்சுரங்கம் தோண்டுவதுதான். இங்கு விமானநிலையம் இருக்கிறதுடன், இரண்டாயிரம் பேர் வசிக்கின்றனர். 15 குழந்தைகள் பள்ளிக்கூடமும் செயல்பட்டு வருகிறது. சூரியன் பூமத்திய …
-
- 0 replies
- 1k views
-
-
நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாத ரஜினிகாந்த் ஒரு அதிசய மனிதர் என சுயசரிதை வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் சோ புகழ்ந்து பேசினார். சென்னையில் ரஜினிகாந்த் சுயசரிதை வெளியிடப்பட்டது. துக்ளக் ஆசிரியர் சோ புத்கத்தை வெளியிட ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா பெற்றுக்கொண்டார். விழாவில் சோ பேசுகையில் ; ரஜினி காந்த் ஒரு அதிசய மனிதர். அவருக்கு ஆன்மிக கருத்துக்கள் மீது நம்பிக்கை உண்டு ஆனால் அவர் மதவாதியும் அல்ல. அரசியலை புரிந்து , அனைத்தையும் தெரிந்து கொண்டவர் ஆனால் அரசியல்வாதி அல்ல. அவர் நடிகர் ; ஆனால் நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாது. இது போன்ற உயர்ந்த விஷயங்கள் அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றன. அரசியலில் அவர் நுழைய முடிவு செய்திருந்தால் தமிழ் மக்களுக்கு பல நன்மைகள் செய்திருப்பார். நல்லதொ…
-
- 9 replies
- 3.2k views
-
-
தி.மு.க. ஆட்சியில் இந்தியா வசமிருந்த கச்சதீவு, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசால் இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தின் உரிமை சர்வதேச அளவில் பறிபோய் விட்டது என தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இன்று தமிழக மீனவர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகவுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், நான் முதலமைச்சராக இருந்தபோது கச்சதீவை நிரந்தர குத்தகைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பல முறை வற்புறுத்தினேன். ஆனால், மத்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அ.தி.மு.க. பொதுச் செயல…
-
- 2 replies
- 1k views
-
-
இன்று இணைய உலா வந்தபோது கொஞ்சம் விதியாசமானதான பதிவர் பக்கத்தைப் பார்க்க முடிந்தது. இதனை மகிளிர் நாளின் முக்கியத்துவம் கருதி இதில் பதிவிடுகிறேன். கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா..? - ஆழிக்கரைமுத்து நமது மக்கள் இந்தக் கேள்வியை விடையில்லா கேள்வி என்பார்கள்..... பகுத்தறிவுக்கண்கொண்டு கண்டால் இவ்வுலகில் விடை இல்லாதது எதுவுமே இல்லை. பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு உயிரினமும் படிப்படியாகத் தோன்றின. இந்த பூமிப்பந்தானது கதிரவனிடம் இருந்து வந்தபொழுது கதிரவனைப்போல் மிகவும் வெப்பமாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பு புவியின் மேல் பகுதி குளிர்ந்தது. உட்பகுதி வெப்பமாகவே இருந்தது. அந்த வெப்பமும் குளிரும் சேரும் இடத்தில் ஒரு ஆ…
-
- 1 reply
- 935 views
-
-
ஈராக்கில் இரட்டைக் குண்டுத் தாக்குதல் 68 பேர் உடல் சிதறி பலி; 130 பேர் காயம் 3/7/2008 7:24:53 PM வீரகேசரி இணையம் - ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில், கடைத் தொகுதிகள் பல நிறைந்திருந்த பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 68 பேர் பலியாகியுள்ளதுடன் 130 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பக்தாத்திலிருந்து 2000 அமெரிக்கப் படையினர் வாபஸ் பெறப்பட்டு சில மணித்தியாலங்கள் கழித்தே இக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஈராக்கிய இராணுவம் தெரிவிக்கிறது. முதலாவது குண்டு வெடிப்பானது பக்தாத்தின் கர்ராடா பிரதேசத்திலுள்ள கடைத் தொகுதிகள் அமைந்திருந்த வீதியொன்றில் மறைவாக வைக்கப்பட்டிருந்த குண்டொன்றினை பயன்பட…
-
- 0 replies
- 546 views
-
-
ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீனா முடிவு? [07 - March - 2008] இளவயதினரின் எண்ணிக்கை குறைவடைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கவலையடைந்துள்ள சீனா நீண்டகாலமாக பின்பற்றி வரும் ஒரு குழந்தை திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது எதிர்காலத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துமெனக் கருதியே சீனா இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. உலகிலேயே, அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. பெருகி வரும் மக்கள் தொகையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க பல்வேறு முயற்சிகளை சீனா மேற்கொண்டது. `ஒரு குடும்பம் - ஒரு குழந்தை' என்ற திட்டத்தை கொண்டு வந்தது. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால், கருக்கலைப்பு உள்ளிட்ட பல்வேறு தண்டனைகள…
-
- 0 replies
- 606 views
-
-
பாகிஸ்தானில் கடந்த 1990-ம் ஆண்டு நடந்த 4 குண்டு வெடிப்புகளில் தொடர்பு உடையவர் என்று கூறி கைது செய்யப்பட்ட சரப்ஜித் சிங் என்ற இந்தியருக்கு அந்த நாட்டு கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. அவருக்கு எந்த நேரத்திலும் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற நிலை உள்ளது. இதற்கிடையே, கருணை காட்டி தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி சரப்ஜித் சிங் பாகிஸ்தான் அதிபர் முஷரப்புக்கு மனு அனுப்பி இருந்தார். அவரது கருணை மனுவை தீவிரமாக பரிசீலித்த முஷரப் அதை நிராகரித்து விட்டதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. பாகிஸ்தானில் 35 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காஷ்மீர் சிங் நேற்று முன்தினம் இந்தியா திரும்பின…
-
- 0 replies
- 633 views
-
-
இந்திய வாடகைத் தாய்களை நாடும் அமெரிக்கத் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [06 - March - 2008] இந்திய வாடகைத் தாய்களைத் தேடிவரும் அமெரிக்கத் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் குழந்தை பெறமுடியாமல் உள்ள தம்பதிகளுக்கு அவர்களின் கருவை சுமந்து குழந்தை பெற்றுத்தரும் வாடகைத் தாய் முறை பல ஆண்டாக நடைமுறையில் உள்ளது. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் இம்முறை இந்தியாவில் அறிமுகமானதுடன் குஜராத் உட்பட்ட சில மாநிலங்களில் வாடகைத் தாய்களை தனியார் மருத்துவமனைகள் தேர்வு செய்கின்றன. குழந்தையில்லா தம்பதிகளுக்கு அவர்கள் குழந்தையை பெற்றுத்தரும் பத்து மாதம் வரை, மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும். அவர்களுக்கு போஷாக்க…
-
- 1 reply
- 748 views
-
-
பில்கேட்சை முந்தினார் வாரன் பஃப்பே . Thursday, 06 March, 2008 10:36 AM . நியூயார்க், மார்ச் 6: மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்சை பின்னுக்கு தள்ளி அமெரிக்காவின் நிதி நிறுவன தலைவர் வாரன் பஃப்பே உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஆண்டுதோறும் உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டு வருகிறது. . இந்த ஆண்டிற்கான பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவின் பெர்க்ஷயர் ஹாத்வே நிதி நிறுவனத்தின் தலைவரான 77 வயதாகும் வாரன் பஃப்பே முதலிடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 62 பில்லியன் டாலராகும். கடந்த ஆண்டு இவரது சொத்து மதிப்பு 52 பில்லியன் டாலராக இருந்தது. பெரும் கோடீஸ்வரர் பட்டி…
-
- 1 reply
- 868 views
-
-
கொலம்பியாவில் பணக்கார முதலைகளை உள்ளடக்கிய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆதரவு அரசுக்கு எதிராக போராடும் கொலம்பிய போராளிகள் அமைப்பான Farc அமைப்பின் முதன்னிலைத் தலைவர் ஒருவரையும் இதர 16 போராளிகளையும் கொலம்பியப்படைகள் ஈகுவடோர் நாட்டின் எல்லைக்குள் அத்துமீறிச் சென்று கொன்றதை அடுத்து கொலம்பியாவின் இரு எல்லைகளிலும் உள்ள வெனிசுவலா மற்றும் ஈகுவடோர் நாட்டுப்படைகள் தங்கள் நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கப் போவதாகக் கூறி கொலம்பிய எல்லையில் படைக் குவிப்பைச் செய்து வருகின்றன. இதனால் அங்கு போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இரண்டு நாடுகளும் தூதரக மட்ட உறவுகளையும் கொலம்பிய நாட்டின் அத்துமீறல் செயலை அடுத்து விலக்கிக் கொண்டுள்ளன. இச்சம்பவத்தை அம…
-
- 3 replies
- 940 views
-
-
இந்திய வம்சாவளி மக்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டதை ஏற்றுக்கொண்டார் மலேசிய அமைச்சர் சாமிவேலு [05 - March - 2008] மலேசியஅரசாங்கம் அங்கு வாழும் இந்திய வம்சாவளி மக்களின் தேவைகளை போதுமானளவில் நிறைவேற்றவில்லையென்பதை அந்நாட்டு அரசில் அங்கம் வகிக்கும் ஒரேயொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சரான டத்தோ சாமிவேலு ஏற்றக்கொண்டுள்ளார். மலேசியாவில் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாகக் கூறி இந்திய வம்சாவளி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். இவ் ஆர்ப்பாட்டங்களின் போது அரசில் அங்கம் வகிக்கும் இந்திய அமைச்சரான சாமிவேலு, இந்தியவம்சாவளியினரின் நலன்களுக்காக எதனையும் செய்யவில்லையென பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பிரதமர் அப்துல்லா படாவியின் தலைமையிலான ஆளும் பரிசான…
-
- 1 reply
- 629 views
-
-
ஹிலாரி கிளிண்டன் வெற்றி . Wednesday, 05 March, 2008 10:41 AM . டெக்சாஸ், மார்ச் 5: ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக ரோடி தீவு மாகாணத்தில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றுள்ளார். . ஓகியோவிலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரக் ஒபாமாவை பின்னுக்கு தள்ளி ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட ஹிலாரிக்கும், ஒபாமாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சில மாகாணங்களில் ஹிலாரியை விட அதிக வாக்குகள் பெற்று ஒபாமா முன்னிலை பெற்றிருந்த நிலையில், இரண்டாவது சூப்பர் டியூஸ்டே என்று வர்ணிக்கப்பட்ட நேற்றைய வா…
-
- 0 replies
- 785 views
-
-
Richard Boucher warned that "time is tight" இந்திய அணு உலைகள் மற்றும் இந்திய அணுசக்தி செயற்திட்டங்கள் தொடர்பில் அமெரிக்காவுடன், இந்திய மத்திய, மன்மோகன் சிங் தலைமையிலான சோனியா காந்தி வழிநடத்தும், நாடாளுமன்றத்தில் சிறுபான்மை பலம் கொண்ட காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு செய்து கொண்ட உடன்படிக்கையை ஒப்பந்தத்தில் உள்ள நகல்களுக்கும் கால இடைவெளிக்கும் ஏற்ப நடைமுறைப்படுத்த விரைந்து முன் வர வேண்டும் என்று அமெரிக்கா கடும் தொனியில் இந்தியாவை எச்சரித்திருக்கிறது. காங்கிரஸ் சிறுபான்மை அரசு அமெரிக்காவுடன் செய்து கொண்ட இவ்வுடன்படிக்கை தொடர்பில் அதன் கூட்டணியில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் எதிர்மாறான நிலையைக் கொண்டிருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவையும் எதிர்க்கட்…
-
- 0 replies
- 826 views
-
-
சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடலாம் அரசு உத்தரவு ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 2, 2008 சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருச்சிற்றம்பல மேடை உள்ளது. இந்த மேடையில் இருந்தபடி பக்தர்கள் தேவராம், திருமறை ஆகியவற்றைப் பாடுவார்கள். ஆனால் இதற்கு கோவில் தீக்ஷிதர்கள் தடை போட்டு விட்டனர். சமஸ்கிருதத்தில் தான் மந்திரங்கள் ஓத வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதை எதி்ர்த்து போராட்டங்கள் நடந்ததையடுத்து தமிழில் பாடலாம் ஆனால், மேடையில் இருந்து பாடக் கூடாது, கீழே உள் மண்டபத்தில் இருந்தபடிதான் பாட வேண்டும் என்றனர். இந் நிலையில்…
-
- 17 replies
- 2.8k views
-
-
காங். அதிரடி திட்டம்? . Monday, 03 March, 2008 01:49 PM . சென்னை, மார்ச் 3: தமிழ்நாட்டில் கட்சியை வலுப் படுத்தவும், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக 3வது அணியை ஏற்படுத்தவும் காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. . இதற்காக புதிதாக வளர்ந்து வரும் கட்சிகள் உட்பட அதிமுக, பிஜேபி தவிர்த்த கட்சிகளுடன் பேச்சு நடை பெற்று வருவதாக கூறப்படுகிறது. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், பாமக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் ஒரே கூட்டணியில் இருந்தாலும் அவர்களுக்கு இடையே பல்வேறு பிரச்சனைகளில் கருத்து வேறுபாடுகள் தோன்றுவதும், அவ்வப்போது சமரசம் ஏற்படுவதுமாக இருந்து வருகிறது. குறிப்ப…
-
- 1 reply
- 878 views
-
-
போர்முனைக்கு மீண்டும் செல்வேன் இளவரசர் ஹாரி இங்கிலாந்து இளவரசர் சார்லசின் இளையமகன் ஹாரி ஆப்கானிஸ்தான் போர்முனையில் இருந்து சமீபத்தில் தான் திரும்பினார். அவர் மீண்டும் போர்முனைக்கு செல்வதற்கு விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இன்னும் ஒரு ஆண்டுக்கு அவர் போர்முனைக்கு செல்வதை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது என்று தெரிவித்து உள்ளது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி ராணுவ கல்லூரியில் படித்து பயிற்சி பெற்றவர். அவர் போர்முனைக்கு சென்று யுத்த அனுபவம் பெற விரும்பினார். இதற்காக அவர் ஈராக் போர்முனைக்கு செல்ல விரும்பினார். அவர் அங்கு சென்றால் அவரை தீவிரவாதிகள் கடத்திச் செல்லப்போவதாக அறிவித்தனர். இதனால் அவர் ஈராக் செல்லும் திட்டத்தை அந்த…
-
- 3 replies
- 1.4k views
-
-
பாகிஸ்தான் சிறையில் 35 ஆண்டுகள் வாடிய இந்தியரை விடுவிக்க அரசாங்கம் முடிவு [04 - March - 2008] தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பாகிஸ்தான் சிறையில் 35 ஆண்டுகள் வாடிய இந்தியாவைச் சேர்ந்த தூக்குத் தண்டனைக் கைதியை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் மனித உரிமைக்கான அமைச்சர் அன்சார் புர்னே, லாகூர் சிறையைப் பார்வையிடச் சென்றபோது அங்கு காஷ்மீர் சிங் என்ற தூக்குத் தண்டனைக் கைதி 35 ஆண்டுகளாக வாடுவதை அறிந்தார். இதையடுத்து, பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பிடம் கருணை மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கருணை மனுவை ஏற்று காஷ்மீர் சிங்கை விடுவிக்க முஷாரப்பும் ஒப்புக் கொண்டார். உளவுக் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 1973 இல் ராவல்பிண்டியில் காஷ்மீர் சி…
-
- 1 reply
- 729 views
-
-
இமயமாக உயர்ந்த மக்கள் தலைவர் ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தியும்இ விடுதலைப் பெற்ற நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றும் பகைவர்களின் இடைவிடாத அழிப்பு வேலைகளிலிருந்து காத்தும் 32 ஆண்டு காலமாக ஈடுஇணையில்லாத தொண்டாற்றிய பெருமைக்குரியவர் பிடல் காஸ்ட்ரோ. சின்னஞ்சிறிய கியூபா நாட்டினை சர்வதிகார ஆட்சியிலிருந்து மீட்பதற்காக போராடிய பிடல் காஸ்ட்ரோவும் அவரது அற்புதமான தோழன் சேகுவேராவும் உலக வரலாற்றில் உன்னதமான இடத்தை பெற்றுள்ளனர். காஸ்ட்ரோவின் ஆட்சியை கவிழ்க்கவும்இ அவரைப் படுகொலை செய்யவும் அமெரிக்க வல்லரசு இடைவிடாது முயற்சி செய்தது. உலக வல்லரசான அமெரிக்காவின் நயவஞ்சகத்தை பிடல் காஸ்ட்ரோ வெற்றிகரமாக முறியடித்தார். இதன் விள…
-
- 0 replies
- 699 views
-
-
ஜெர்மனி சூறாவளி-பெரும் விமான விபத்து தவிர்ப்பு செவ்வாய்க்கிழமை, மார்ச் 4, 2008 ஹேம்பர்க்: கடும் சூறாவளிக் காற்றுக்கு இடையே ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் தரையிறங்க முயன்ற விமானம் தட்டுத்தடுமாறி, ரன் வேயில் இறக்கை மோதிய நிலையில் மீண்டும் வானி்ல் பாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மியூனிக் நகரில் இருந்து லுப்தான்ஸா நிறுவனத்துக்கு சொந்தமான அந்த ஏர்பஸ் 320 ரக விமானம் 131 பயணிகளுடன் ஹாம்பர்க் வந்தது. அப்போது அங்கு திடீரென கடும் சூறாவளிக் காற்று வீசியது. இந் நிலையில் விமானத்தை தரையிறக்கினர் விமானிகள். சுமார் 144 மைல் வேகத்தில் தரையிறங்கிய அந்த விமானம் ரன் வேயை எட்டியபோது சூறாவளிக் காற்றால் தள்ளாடியது. விமானம் ரன் வேயை விட்டு விலகி இடதுபுறமாக…
-
- 3 replies
- 1.2k views
-
-
டெக்சாஸ்: ஒபாமா, ஹிலாரி மோதல் . Tuesday, 04 March, 2008 10:52 AM . டெக்சாஸ், மார்ச் 4: அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக டெக்சாஸ் மற்றும் ஓகியோ மாகாணங்களில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. . இந்த வாக்குப்பதிவில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விரும்பும் கருப்பின தலைவரான பாரக் ஒபாமாவிற்கும், முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த மாதம் 5ந் தேதி நடைபெற்ற முதல் சூப்பர் டியூஸ்டே வாக்குப்பதிவுக்கு பிறகு தொடர்ந்து பல்வேறு மாகாணங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவுகளில் 11 இடங்களில் வெற்றி பெற்று பாரக் ஒபாமா முன…
-
- 0 replies
- 563 views
-
-
மகா அழுக்கான நகரம் மும்பை-நெரிசல் நகரம் சென்னை! திங்கள்கிழமை, மார்ச் 3, 2008 நியூயார்க்: உலகின் மிகவும் அசுத்தமான, சுகாதார சீர்கேடு நிறைந்த 25 நகரங்களில் இந்தியாவின் மும்பையும், டெல்லியும் இடம் பிடித்துள்ளன. மக்கள் நெருக்கம் மிக அதிகம் உள்ள 20 நகரங்களில் சென்னை உள்ளிட்ட 3 இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன. அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழில்தான் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை அவ்வப்போது வெளியிட்டு வரும் போர்ப்ஸ், தற்போது உலகின் அழுக்கான 25 நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உலகின் அழுக்கான நகரங்கள் பட்டியலில் மும்பையும், டெல்லியும் இடம் பிடித்துள்ளன. மகா அழுக்கு நகரங்களின் வரிசையில் மும்பைக்கு 7வது இடம் …
-
- 1 reply
- 819 views
-
-
தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு செல்ல அரசு தடை?! ராமேஸ்வரம்: கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் திருவிழாவில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்ள அரசு தடை விதித்துள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக முன்பு இருந்த கச்சத்தீவு பின்னர் இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது. இருப்பினும் தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் தங்களது வலைகளை உலர்த்திக் கொள்ளவும், ஓய்வு எடுக்கவும் உரிமை வழங்கப்பட்டது. இருப்பினும், இலங்கை படைகள், தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பக்கம் வந்தாலே ஒன்று சுடுகிறது அல்லது பிடித்துக் கொண்டு போய் இலங்கை சிறைகளில் அடைக்கிறது. கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த பல ஆண்டுக…
-
- 0 replies
- 628 views
-
-
காசாப் பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் கடந்த சில வாரங்களாக காசா பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களில் பல சிறுவர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 சிறுவர்கள் உட்பட 20 பலஸ்தீனப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் இத்தாக்குதல்களை ஐநாவோ அல்லது அமெரிக்க ஊதுகுழல் மனித உரிமை அமைப்புக்களோ அல்லது ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது அமெரிக்காவோ கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..! இஸ்ரேலை ஒட்டியே சிறீலங்காவும் தமிழர் தாயகத்திலும் பொதுமக்களை இலக்கு வைத்துக் கொலைக்களம் விரித்துள்ளது.
-
- 2 replies
- 965 views
-