உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26602 topics in this forum
-
உலகிலேயே மிகப் பழைமையான செய்தித்தாள் என்ற பெருமையைப் பெற்ற Wiener Zeitung தனது வெயியீட்டை நிறுத்திக்கொண்டது. ஒஸ்திரியாவின் வியன்னாவை தளமாகக் கொண்டு இயங்கிய Wiener Zeitung, நேற்று (30) தனது இறுதி செய்தித்தாளை வௌியிட்டது. கிட்டத்தட்ட 320 ஆண்டுகள் தொடர்ந்து நாளிதழை வெளியிட்டு வந்த, அரசுக்கு சொந்தமான Wiener Zeitung செய்தித்தாள் நிறுவனம், நிதி நெருக்கடி காரணமாக, வருவாய் இழப்பை சந்தித்ததால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. Wiener Zeitung வெளியீட்டின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை, தனது செய்தித்தாளின் முகப்புப் பக்கத்தில், 116,840 நாட்கள், 3,839 மாதங்கள், 320 ஆண்டுகள், 12 அதிபர்கள், 2 குடியரசுகள், 1 நாளிதழ் என அச்சிட்டு, தனது செய்தித்தாளுக்கு தானே இறுதி அஞ்சலி செலுத்…
-
- 2 replies
- 569 views
- 1 follower
-
-
டைட்டானிக்கின் சிதைவுகளிற்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்து சென்ற நீர்மூழ்கியிலிருந்த அனைவரும் உயிரிழப்பு – அமெரிக்க கடற்படை Published By: Rajeeban 23 Jun, 2023 | 05:44 AM டைட்டானிக் நீர் மூழ்கியிலிருந்த ஐவரும் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது. டை;டானிக்கின் சிதைவுகளுக்கு அருகில் நீர்மூழ்கியின் சிதைவடைந்த ஐந்து பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக ரியர்அட்மிரல் ஜோன் மகுவர் உறுதிசெய்துள்ளார். கண்டுபிடிக்கப்பட்ட சிதைவுகள் ஒரு பேரழிவு வெடிப்பு இடம்பெற்றிருக்கலாம் என கருதக்கூடிய விதத்தில் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். நீர்…
-
- 30 replies
- 2.7k views
- 1 follower
-
-
Published By: SETHU 29 JUN, 2023 | 01:31 PM சுவீடனில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது, புனித குர் ஆன் நூல் எரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ஸ்டொக்ஹோமிலுள்ள பள்ளிவாசலுக்கு வெளியே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரால் புனித குர் ஆன் தீக்கிரையாக்கப்பட்டது. சல்வான் மோமிக்கா எனும் 37 வயதான நபரே இவ்வாறு குர் ஆன் நூலின் சில பக்கங்களை எரித்தார். இவர் சில வருடங்களுக்கு முன்னர் ஈராக்கிலிருந்து சுவீடனுக்கு வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சல்வான் மோமிக்கா அனுமதி கோரியிருந்தார். சுவீடன் பொலிஸார் அதற்கு அனுமதி வழங்கியிரு…
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
கென்யாவில் பயங்கர விபத்து; 48 பேர் உயிரிழப்பு மேற்கு கென்யாவில் லண்டியானி என்ற பகுதியில் நேற்றைய தினம் (30) வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறியொன்று வீதியில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது மோதியதில் 48 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இக்கொடூர விபத்தில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கொடூர விபத்து குறித்து அந்நாட்டு ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ உட்பட பல தலைவர்களும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். கென்யாவில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்த…
-
- 0 replies
- 219 views
-
-
ரஸ்யாவில் பெரும் குழப்பநிலை : வீதிகளில் இராணுவ வாகனங்கள் : கூலிப்படையினர் அரசாங்கத்திற்கு எதிராக கலகம் Published By: RAJEEBAN 24 JUN, 2023 | 07:12 AM ரஸ்ய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்த கூலிப்படையினர் ரஸ்ய அரசாங்கத்திற்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து ரஸ்யாவில் திடீர் குழப்ப நிலையேற்பட்டுள்ளது மொஸ்கோ உட்பட ரஸ்ய நகரங்களில் இராணுவ வாகனங்களை அவதானிக்க முடிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன ரஸ்ய தொலைக்காட்சி வழமையான நிகழ்ச்சிகளை இடைநிறுத்தி அவசர செய்திகளை வெளியிடுகின்றது. ரஸ்யாவில் உருவாகிவரும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்துவருவதாக அமெரிக்க ஜனாதிபதி தெர…
-
- 21 replies
- 1.3k views
- 1 follower
-
-
ரஷ்ய அதிபர் புதினின் நாட்கள் எண்ணப்படுகின்றனவா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதிபர் புதினின் ஆதிக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என யுக்ரேன் கருதுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர்,ஜெரோமி போவன் பதவி,பிபிசி நியூஸ், கீவ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேன் தலைநகரின் கவனம் முழுவதும் வாக்னர் படைகள், அதன் தலைவர் எவ்கெனி ப்ரிகோஜின், வாக்னர் கிளர்ச்சியினால் புதின் சந்திக்கவிருக்கும் சவால்கள் மற்றும் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் ஆகியவற்றின் மீது குவிந்திருக்கிறது. ரஷ்யாவுக்குள் நிலவும் தற்போதைய அரசியல் பிரச்சினைகளை ம…
-
- 0 replies
- 395 views
- 1 follower
-
-
தொடங்குகிறது விண்வெளிச் சுற்றுலா - கட்டணம் எத்தனை கோடி தெரியுமா? பட மூலாதாரம்,VIRGIN GALACTIC படக்குறிப்பு, விர்ஜின் கேலக்டிக் விமானம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விண்வெளி சுற்றுலா நிறுவனமான 'விர்ஜின் கேலக்டிக்' தனது முதல் வணிக விமான சேவையை தொடங்க உள்ளது. இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அந்நிறுவனம், இச்சேவை இன்று (ஜுன் 29-ம் தேதி) தொடங்கும் என கூறியுள்ளது. வணிக ரீதியான பயணத்தைத் தொடங்கும் இந்த முதல் விமானத்துக்கு 'கேலக்டிக் 01' என பெயரிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இரண்டாவது வணிக ரீதியான விண்வெளி விமானமான 'கேலக்டிக் 02' வரும் ஆகஸ்ட் மாதத்தில்…
-
- 10 replies
- 944 views
- 1 follower
-
-
சிறைச்சாலையில் அதிகரிக்கும் விந்தணுக் கடத்தல்; இதுவரை 100 குழந்தைகள் பிறப்பு இஸ்ரேலின் ரேமன் சிறைச்சாலையில் இருந்து பாலஸ்தீனியர் ஒருவர் பாலஸ்தீனிய கைதியின் விந்தணுக்களைப் போத்தல் ஒன்றில் அடைத்து கடத்து முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனிய சிறைக் கைதிகளின் விந்தணுக்கள் கடத்திச்செல்லப்பட்டு பாலஸ்தீனத்தில் உள்ள அவர்களது மனைவிகளிடம் ஒப்படைக்கப்பட்டு ஐ.வி.எப். எனப்படும் சிகிச்சை முறை மூலம் அவர்களைக் கர்ப்பமடையவைக்கும் செயற்பாடு இடம்பெற்றுவருவதாகத் தெ…
-
- 2 replies
- 453 views
-
-
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரான்ஸ் ஜனாதிபதி: வைரலாகும் வீடியோ பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் பீர் அருந்திய வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீடியோவில் அவர் ஒரு முழு பீர் போத்தலை 17 செக்கன்களில் குடிப்பதும் அவரை பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் உற்சாகப்படுத்துவது போன்றும் உள்ளது. இந்நிலையில் ஒரு நாட்டின் ஜனாதிபதி பொதுவெளியில் இப்படியா செயற்படுவது எனப் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். https://athavannews.com/2023/1336361
-
- 15 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,WWW.GA-ASI.COM படக்குறிப்பு, MQ-9B ரக ஆளில்லா விமானம் கட்டுரை தகவல் எழுதியவர்,ராகவேந்திரா ராவ் பதவி,பிபிசி செய்திகள் 55 நிமிடங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்க பயணத்தின் போது, அந்நாட்டிடமிருந்து 31 ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை வாங்கும் இந்தியாவின் திட்டம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தான் இந்த தகவல் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அண்மையில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஜெனரல் அட்டாமிக்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்…
-
- 29 replies
- 2.1k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஜெர்மனியை சேர்ந்த பெண்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர இராக் மற்றும் சிரியாவுக்கு பயணித்தது தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றங்களில் பல வழக்குகள் விசாரணையில் உள்ளன (கோப்பு படம்) கட்டுரை தகவல் எழுதியவர்,கேத்ரின் ஆம்ஸ்ட்ராங் பதவி,பிபிசி செய்திகள் 25 ஜூன் 2023, 07:00 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்து செயலாற்றி வந்த ஜெர்மனியை சேர்ந்த பெண்ணுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜெர்மனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. குர்தி மொழி பேசும் யாஸதி மதத்தைச் சேர்ந்த சிறுபா…
-
- 7 replies
- 726 views
- 1 follower
-
-
பேச்சுவார்த்தைக்குத் தயார்; ஆனால் ஒரு நிபந்தனை. - ரஷ்ய ஜனாதிபதி புட்டின் - நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரஷ்யா கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. அதே சமயம் உக்ரேனும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரு நாடுகளுக்கு இடையேயும் இடம்பெற்றுவரும் போரானது உக்கிரமடைந்து வருகின்றது. குறிப்பாக நேற்றைய தினம் உக்ரேனின் Kryvyi Rih நகரில் ரஷ்யா மேற்கொண்ட வான் வழித் தாக்குதலில் 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் 25 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் உக்…
-
- 75 replies
- 5.3k views
-
-
பட மூலாதாரம்,SYNTHETAIC/PLANET LABS PBC படக்குறிப்பு, ஜப்பான் மீது உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் பலூனின் செயற்கைக்கோள் படம் 27 ஜூன் 2023, 08:00 GMT சீனாவின் உளவு பலூன் திட்டம் தொடர்பான பல புதிய ஆதாரங்கள், தற்போது பிபிசிக்கு கிடைத்துள்ளது. ஜப்பான் மற்றும் தைவான் ஆகிய நாடுகளுக்கு மேல் பறந்துகொண்டிருந்த பலூன்கள், சீனாவின் உளவு பலூன்கள்தான் என்பது தெரியவந்துள்ளது. தங்களது நாட்டின் மேல் இந்த பலூன்கள் பறந்துகொண்டிருந்ததை ஜப்பான் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அந்த பலூன்களை சுட்டு வீழ்த்துவதற்கு தாங்கள் தயாராக இருந்ததாகவும் ஜப்பான் கூறியுள்ளது. பிபிசி வெளியிட்டுள்ள ஆதாரங்கள் க…
-
- 1 reply
- 492 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 27 JUN, 2023 | 09:22 AM அமெரிக்காவின் சியாட்டில் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய புற்றுநோய் மையம், புற்றுநோய்க்கு தடுப்பூசிகள் உட்பட பிற நோய் எதிர்ப்பு சிகிச்சைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசிக்கான ஆராய்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளதாக அதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சியாட்டில் தேசிய புற்றுநோய் மையத்தின் மூத்த விஞ்ஞானியான வைத்தியர் ஜேம்ஸ் குல்லி தெரிவிக்கையில், "புற்றுநோய் சிகிச்சையில் அடுத்த பெரிய முன்னேற்றம் தடுப்பூசியாக இருக்கும். பல ஆண்டுகளாக வரையறுக்கப்பட்ட வெ…
-
- 1 reply
- 513 views
- 1 follower
-
-
Published By: SETHU 26 JUN, 2023 | 09:15 AM சிரியாவில் ரஷ்யா நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என யுத்த கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இரு சிறார்கள் உட்பட 9 பொதுமக்களும் அடங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இட்லிப் பிராந்தியத்திலுள்ள ஜஸ்ர் அல் சுகுர் நகரிலுள்ள சந்தையொன்றில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இவ்வருடம் சிரியாவில் ஒரே தடவையில் அதிக எண்ணிக்கையானோர் கொல்லப்பட்ட ரஷ்ய தாக்குதல் இதுவாகும் என மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகத்தின் தலைவர் ரமி அப்தேல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கிளர்ச்சியாளர்கள் நடத்தி…
-
- 0 replies
- 278 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY 24 ஜூன் 2023, 02:47 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டைட்டானிக் கப்பலை தேடிச் சென்ற ‘டைட்டன் நீர்மூழ்கியின்’ உள்ளிருந்தே வெடிப்பு நிகழ்ந்து விபத்திற்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது. அதில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துள்ளனர். கடலின் மேற்பரப்பிலிருந்து 4000 மீட்டர் ஆழத்திற்குச் செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அங்கே பல அசம்பாவிதங்கள் நடக்கலாம். மிகக் குறிப்பாக டைட்டானிக் கப்பலின் சிதைவுகள், அட்லாண்டிக் பெருங்கடலில் 3800 மீட்டர் ஆழத்தில் பொதிந்து கிடக்கின்றன. அத்தனை பெரிய ஆழத்திற்குள் சூரிய ஒளிகளால் ஊடுருவ முடியாது. இதனால் இப்பகுதியை ‘midnight zone’ என்…
-
- 0 replies
- 310 views
- 1 follower
-
-
செயற்கை இறைச்சிக்கு அமெரிக்கா பச்சைக் கொடி கொழுப்பு, எலும்பு இல்லாமல் ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் கோழி இறைச்சிக்கு சிங்கப்பூரைத் தொடர்ந்து அமெரிக்க அரசும் தற்போது மக்களுக்கு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. கோழியைக் கொல்லாமல், அதன் இறைச்சியிலோ அல்லது கருமுட்டையில் இருந்தோ பிரித்தெடுக்கப்படும் செல்களுக்கு ஊட்டச்சத்து செலுத்தி உருவாக்கப்படும் இவ் இறைச்சியானது முதன்முதலில் சிங்கப்பூரில் விற்பனைக்கு வந்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனையடுத்தே தற்போது அமெரிக்க அரசும் அதனை உற்பத்தி செய்து விற்க 2 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. எவ்வாறு இருப்பினும் குறித்த இறைச்சி ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டது என்பதை வாடிக்கை…
-
- 0 replies
- 452 views
-
-
உறையும் நீரில் 2000 பேர் நிர்வாணக் குளியல் அவுஸ்திரேலியாவின் டெர்வெண்ட் ஆற்றில் 3 பாகை செல்சியஸ் உறையும் நீரில் 2000 பேர் நிர்வாணக் குளியளில் ஈடுபட்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 22-ஆம் திகதி, ஆண்டிலேயே குறைந்த பகல் பொழுதை கொண்ட நாள் என்பதால் அதனை கொண்டாடும் விதமாக, கடந்த பத்தாண்டுகளாக இவ்விநோத செயலில் அந்நாட்டு மக்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1335979
-
- 1 reply
- 664 views
-
-
பெண் கைதிகளால் வெடித்த மோதல்; 41 பேர் உயிரிழப்பு மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் (Honduras) ,தாமரா (Tamara)பகுதியில் உள்ள சிறைச்சாலையில் நேற்றைய தினம் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்துள்ளது. இதில் 41 பெண் கைதிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர் எனவும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படுகாயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1335807
-
- 0 replies
- 439 views
-
-
பட மூலாதாரம்,REUTERS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க வெளியுறவுச் செயலளர் ஆண்டனி பிளிங்கென், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை திங்கட்கிழமையன்று (ஜூன் 19) சந்தித்தார். சீன தலைநகர் பீஜிங்கில் இச்சந்திப்பு நிகழ்ந்தது. சந்திப்பிற்குப் பிறகு, ஜின்பிங், “இருதரப்பும் சில குறிப்பிட்ட விஷயங்களில் முன்னேற்றத்தையும் ஒப்புதலையும் எட்டியிருக்கின்றன. இது மிக நல்ல விஷயம்,” என்று கூறியிருக்கிறார். மேலும், ஜின்பிங், “இச்சந்திப்பின் மூலம் அமெரிக்கா-சீனா உறவுகளை ஸ்திரப்படுத்துவதற்கு பிளிங்கென் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளைச் செய்வார் என்று நம்புகிறேன்,” என்றார். நாடுகளுக்கிடையிலான உறவுகள் பரஸ்பர மரியாதை மற்றும் நேர்மையை அடிப்படையாகக் …
-
- 3 replies
- 624 views
- 1 follower
-
-
இப்படி ஒரு இனங்களுக்கான மோதலை என் வாழ்நாளில் நான் யேர்மனியில் பார்த்ததில்லை” என யேர்மனிய பொலீஸ் அதிகாரி ஒருவர் அதிர்ச்சியுடன் அறிவித்திருக்கிறார். Nordrhein-Westfalen மாநிலத்தில் எசன் நகரில் சிரியா, லெபனான் இனக் குழுக்களிடயில் வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணி அளவில் மோதல் ஒன்று இடம் பெற்றிருந்தது . ஆரம்பத்தில் 70 முதல்80 வரையிலானோர் வரையில் பங்கு பற்றிய இந்த மோதல் 500 பேருக்கு மேலானோர் பங்கு பற்றும் அளவுக்கு விரவடைந்திருந்தது. எசன் நகரில் ஒரே குடியிருப்பில் வசிக்கும்இரண்டு குடும்பங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவே 16.06.2023 வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் இரத்தக் களறியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் சிறார்களுக்கிடையில் விளையாட்டின் போது ஏற்பட்ட சண்டையே அடிப்படையானது என அ…
-
- 4 replies
- 653 views
-
-
உக்ரேன் மீது அணு ஆயுதத் தாக்குதல்? அதிர்ச்சியில் உலக நாடுகள் ”தேவை ஏற்படின் உக்ரேன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷ்யா தயங்காது” என பெலரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார். உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரானது தற்போது தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் பெலரஸின் ஜனாதிபதியும் ரஷ்ய ஜனாதிபதியின் நெருங்கிய நண்பருமான அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ள இக்கருத்தானது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” எனது நாட்டின் மீது ஆக்கிரமிப்பு ஏதேனும் நடந்தால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் நாம் தயங்க மாட்டோம் . அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண…
-
- 22 replies
- 2.9k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் சவக்கிடங்கின் மேலாளர் பல ஆண்டுகளாக மனித உடல் உறுப்புக்களை விற்பனை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் செயல்படும் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் பிணவறையில் இருந்து இந்த உடல் உறுப்புக்கள் விற்பனை செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளளனர். அந்த பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல்களில் இருந்து மனித உறுப்புகள் சட்டவிரோதமாகத் திருடப்பட்டு, பின்னர் விற்பனை செய்யப்பட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விற்பனை தொடர்பாக ஹார்வர்ட் மருத்துவ…
-
- 0 replies
- 329 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,சுபம் கிஷோர் பதவி,பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு நிகராக வளரத் துடிக்கும் சீனா உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தனது தடத்தைப் பதித்து வருகிறது. இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்கும் இஸ்லாமிய நாடுகளிலும் அதன் செல்வாக்கு பெருகி வருகிறது. இது இந்தியாவுக்கு எந்த வகையில் நெருக்கடியை ஏற்படுத்தும்? சௌதி அரேபியா மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் 7 ஆண்டுகளில் முதன்முறையாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சந்தித்துகொண்டனர். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, இவ்விரு நாடுகளையும் சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் பல ஆண்டு…
-
- 1 reply
- 346 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,தீபக் மண்டல் பதவி,பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் செளதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஏறக்குறைய தொண்ணூறு ஆண்டுகள் பழமையான உறவு இன்று ஒரு முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ளது. சௌதி அரேபியா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதை விரும்பாத அமெரிக்கா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் விவகாரத்தில் அமெரிக்காவின் நெருக்குதலை பொறுத்துக்கொள்ள செளதி அரேபியா தயாராக இல்லை என்று ஒரு உளவுத்துறை ஆவணத்தை மேற்கோள்காட்டி அமெரிக்க செய்தித்தாள் 'வாஷிங்டன் போஸ்ட்' தெரிவித்துள்ளது. எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் தனது நாட்டின் முடி…
-
- 7 replies
- 669 views
- 1 follower
-