உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26643 topics in this forum
-
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கள அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்- ஜி. ராமகிருஷ்ணன் சென்னை: மதுரை, கீழடி அருகில் களஅருங்காட்சியகம் அமைக்கவேண்டும் என்று தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். கோவை வன்முறை சம்பவத்தை காவல்துறையினர் தடுக்க முயற்சி செய்யவில்லை என்றும் ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரைக்கு அருகில் உள்ள கீழடி கிராமத்தில் கடந்த இரண்டாண்டுகளாக மத்திய தொல்லியல்துறையின் சார்பில் அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற அகழ்வாய்வில் 5 ஆயிரத்து 300 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. 71 தமிழ் பிராமி எழுத்துக்கள் சுடுமண் பானை ஓடுகளில் கிடைத்துள்ளன. அதில் பிராகிருதம் உள்ளிட்ட வேற்றுமொழி பெயர்களும் இடம் பெற்றுள்ளன. கிர…
-
- 2 replies
- 561 views
-
-
பெற்றோர், தாத்தா,பாட்டியை கனடாவுக்கு அழைப்பதற்கான புதிய திட்டம் ஆரம்பம்.! பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோரை கனடாவுக்கு அழைப்பதற்கான குலுக்கல் முறையிலான கனடிய அரசாங்கத்தின் புதிய திட்டம் இந்த மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகின்றது. கொரோனா பெரும் தொற்றால் தாமதமடைந்த இந்தப் புதிய திட்டம் குறித்த விபரங்களை கனடிய குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டிசினோ (Marco Mendicino) நேற்று அறிவித்தார். கனடாவுக்கு பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரை அழைக்க விரும்பும் கனடியர்களும் நிரந்தர குடியிருப்பாளர்களும் இணையத்தில் https://www.canada.ca/en/immigration-refugees-citizenship.html படிவத்தை பூர்த்தி செய்யலாம் என அமைச்சர் மார்கோ மெண்டிசினோ கூறினார். கனடாவிற்கு தங்க…
-
- 0 replies
- 553 views
-
-
அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத்தாக்குதலில் அல் கயிதாவின் இரு மூத்த உறுப்பினர்கள் பலி ஆஃப்கானிஸ்தானில் உள்ள குனார் மாகாணத்தில், இந்த வார தொடக்கத்தில், அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத்தாக்குதலில் அல் கயிதா அமைப்பை சேர்ந்த இரு மூத்த உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ஆஃப்கானிஸ்தானின் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கோப்புப்படம் அல் கயிதாவின் வட கிழக்கு ஆஃப்கானிஸ்தானின் தலைவர் ஃபரூக் அல்-கட்டானி மற்றும் அவருடைய உதவியாளருமான பிலால் அல்-உடாபி ஆகியோர் கொல்லப்பட்டிருப்பதாக காபுலில் வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், செளதியில் பிறந்த கத்தார் பிரஜையான அல்-கட்டானியை, மிகவும் தேடப்படு…
-
- 0 replies
- 281 views
-
-
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு இளைஞன் டீன் ஏஜ் இளம்பெண் ஒருவருக்கு ஃபேஸ்புக் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டான். ஐந்து வருடங்களுக்கு தன்னுடைய குடும்பத்தில் உள்ள இளம்பெண், சமூக வலைத்தளங்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வுக்கு பழிவாங்கியதாக விசாரணையில் திடுக்கிடும் தகவலை வெளிப்படுத்தியுள்ளான். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் Charles Andrew Capps, என்ற 21 வயது இளைஞர் 14 வயது இளம்பெண் ஒருவருக்கு தொடர்ச்சியாக ஃபேஸ்புக மூலம் ஆபாச படங்களை அனுப்பியதோடு, தன்னோடு பாலியல் உறவு வைக்க கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. இந்த விஷயத்தை அறிந்த இளம்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் டெக்சாஸ் காவல்துறையினர் ஐ.ப…
-
- 1 reply
- 512 views
-
-
இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி? வணக்கம், நேற்று டொரண்டோ ஸ்டாரில ஒரு கட்டுரை வாசிச்சன். அதில அடுத்த இந்தியப்பிரதமராக மன்மோகன் சிங்கிற்கு பிறகு ராகுல் காந்தி வர வாய்ப்பு இருக்கின்றது என்று சொல்லப்பட்டு இருந்திச்சிது. ஜவகர்லால் நேரு 17 வருசங்கள், இந்திரா காந்தி அம்மையார் 16 வருசங்கள், ராஜீவ் காந்தி 07 வருசங்கள், இந்த வரிசையில ராகுல் காந்தியும் இந்தியப் பிரதமராக வரக்கூடும் என்று சொல்லப்படுகிது. நாப்பது வயசு சொச்சத்தில ராஜீவ் காந்தி பிரதமராக வந்து ஆயுத ஊழல் குற்றச்சாட்டில சம்மந்தப்பட்டதுடன் மட்டும் அல்லாது அவரது அனுபவமற்ற அரசியல் வாழ்வு இந்திய நாட்டையே மிகுந்த சிக்கல்களில கொண்டுபோய் விட்டிச்சிது. தற்போது உள்ள மிகவும் நெருக்கடியான இக்கட்டான உல…
-
- 0 replies
- 1k views
-
-
ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட்டால் பேரழிவு ஏற்படும்: டிரம்புக்கு சி.ஐ.ஏ. இயக்குனர் எச்சரிக்கை அமெரிக்காவில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு சி.ஐ.ஏ. இயக்குனர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு சி.ஐ.ஏ. இயக்குனர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து சி.ஐ.ஏ. இயக்குநர் ஜான் பிரன்னன் கூறியதாவது:- அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை தான் கைவிடப் போவதாக டொனால்டு டிரம்ப் அச்சு…
-
- 0 replies
- 287 views
-
-
அவுஸ்ரேலிய காட்டுத்தீயில் 60,000 கோலா கரடிகள் உயிரிழப்பு! அவுஸ்ரேலியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஏற்பட்ட காட்டுத் தீயில் 60,000 கோலா கரடிகள் உயிரிழந்துள்ளதாக உலகளாவிய நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலகளாவிய நிதி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அவுஸ்ரேலியாவின் கிழக்குப் பகுதியில் காடுகள் அடர்ந்த 10 மில்லியன் ஹெக்டேர் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் காட்டுத் தீ பரவியது. இதில் 2,000 வீடுகள் எரிந்தன. 28 பேர் இறந்தனர். இந்த காட்டுத் தீயில் அரிய வகை விலங்குகள் உட்பட லட்சக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழந்தன. தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் காட்டுத் தீ பற்றி எரிந்தது. இதில் 3 பில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் உயிரிழந்தன. கோலா கரடி…
-
- 0 replies
- 374 views
-
-
அமெரிக்க நகர மேயராக இந்திய பெண் தேர்வு கலிபோர்னியா மாநிலத்தின் கூப்பர்டீனோ நகர மேயராக தேர்வு செய்யப்பட்ட சவீதா வைத்தியநாதனுக்கு அவரது மகள் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தின் முக்கிய நகராக விளங்கும் கூப்பர்டீனோ நகரின் புதிய மேயராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ளதால் உலக அளவில் பிரபல நகராக கூப்பர்டீனோ விளங்குகிறது. இந்நிலையில் இந்நகரில் முதல்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சவீதா வைத்தியநாதன் என்ற பெண் கடந்த வாரம் புதிய மேயராக பதவியேற்றார். எம்பிஏ பட்டதாரியான சவீதா, உயர்ந…
-
- 0 replies
- 274 views
-
-
1999 ஆம் ஆண்டு இராணுவ புரட்சி மூலம் அகற்றப்பட்ட அவரது ஆட்சி மீண்டும் 14 வருடங்களின் பின் பாகிஸ்தான் மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்திருக்கின்றார்.... விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எதிலும் எப்பிடியும் எவ்விதமாகவும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்..... வாழ்த்துக்கள்
-
- 0 replies
- 460 views
-
-
பிரித்தானியாவில் கேப்சி உணவில் அருவறுக்கதக்க பொருள் இருந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டான் சிம்ப்சன் என்ற 22 வயது இளைஞன் தனது காதலி ஷெர்லியுடன் Suffolk, Ipswich பகுதியில் உள்ள கேப்சி உணவக கிளைக்கு சென்றுள்ளார். இருவரும் ஆர்டர் செய்த உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது உணவில் அலகுடன் கோழி மண்டையோடு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ஜோர்டான் சிம்ப்சன், என் தாத்தா பறவை ஆர்வலர் அவரிடம் அந்த பாகத்தை கொடுத்து சோதனை செய்தோம். அதில், அது அலகுடனான கோழியின் மண்டையோடு என உறுதியானது. இது மிகவும் அருவறுக்கதக்க விடயம். இதன் மூலம் உணவகத்தின் தரத்தை நான் உணர்ந்துள்ளேன். இனி குறித்த…
-
- 1 reply
- 511 views
-
-
ஜெர்மனியில் துருக்கிப் பிரஜைகள் உளவு பார்க்கப்படுவதனை ஏற்க முடியாது ஜெர்மனியில் துரக்கியப் பிரஜைகள் அந்நாட்டு உளவுப் பிரிவினரால் கண்காணிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பனை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள ஜெர்மனிய அரசாங்கம் ஜெர்மனிக்குள் வெளிநாட்டு உளவாளிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் வாழ்ந்து வரும் துருக்கிப் பிரஜைகள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் கண்காணிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஜெர்மனியின் சட்ட திட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வெளிநாட்டு உளவாளிகளுக்கு தேவையான வகையில் நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் ஜெர…
-
- 1 reply
- 290 views
-
-
தெலுங்கானா போல கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரி 2வது நாளாக முழு அடைப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இன்றைய முழு அடைப்பின் போது தனி மாநிலம் கோரி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலத்தில் இருந்து டார்ஜிலிங் மலை பிரதேசத்தை பிரித்து தனி மாநிலம் அமைக்கக் கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்ற நிலையில் கூர்க்காலாந்து கோரிக்கையும் தீவிரமடைந்துள்ளது. நேற்று முதல் 3 நாள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. டார்ஜிலிங் உள்ளிட்ட கூர்க்காலாந்து பகுதிகளில் நேற்றைப் போல இன்றும் முழு அளவில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தன. …
-
- 0 replies
- 269 views
-
-
இந்தியாவின் மும்பை நகரில் வியாழனன்று பெண் ஊடகவியலாளர் ஒருவர் பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக அந்நகர பொலிசார் கூறுகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த வேறு நான்கு சந்தேக நபர்களையும் விரைவில் கைதுசெய்வோம் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். சந்தேகநபர்களின் தோற்றத்தைக் காட்டும் வரைபடங்கள் காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது அந்நேரம் அப்பெண்ணோடு சென்றிருந்த உடன் வேலைபார்க்கும் ஆண் ஒருவர் கட்டிவைத்து தாக்கப்பட்டுள்ளார்.கைவிடப்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஒன்றை பணிக்காகபடமெடுக்கச் சென்றிருந்தபோது இந்த 22 வயதுப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். சென்ற வருடம் தேசிய அளவில் பெரும்…
-
- 2 replies
- 445 views
-
-
உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில்... கனேடிய தொழிலதிபருக்கு, சீனாவில் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை! தங்கள் நாட்டில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் மைக்கேல் ஸ்பாவோருக்கு சீன நீதிமன்றம், 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இரண்டரை வருடங்களுக்கும் மேல் சீனாவில் சிறை வைக்கப்பட்டிருந்த மைக்கேல் ஸ்பாவோர், மீதான வழக்கு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கெனவே, போதை மருந்து வழக்கில் கனடா நாட்டைச் சேர்ந்த ரொபர்ட் லாய்டுக்கு, சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்த ஒருநாளுக்கு பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு சீனாவின் முன்னணி தகவல் தொழில…
-
- 0 replies
- 418 views
-
-
மருத்துவ பரிசோதனைக்காக, அமெரிக்கா சென்றுள்ள, காங்கிரஸ் தலைவர் சோனியா, இந்த வார இறுதியில் நாடு திரும்புவார் என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.காங்கிரஸ் தலைவர் சோனியா, 2011ம் ஆண்டில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, "ஸ்லோன் கேட்டரிங்' மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள் ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், என்ன மாதிரியான பிரச்னைக்கு, அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. ஸ்லோன் கேட்டரிங் மருத்துவமனை, புற்றுநோய் சிகிச்சைக்கு பெயர் பெற்றது என்பதால், புற்றுநோய் தொடர்பான சிகிச்சை, சோனியாவுக்கு அளிக்கப்பட்டுஇருக்கலாம் என, நம்பப்பட்டது. சமீபத்தில் முடிவட…
-
- 3 replies
- 577 views
-
-
ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஆட்சி அமைக்க அனுமதி கோருகிறார் தெரீசா மே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஆட்சி அமைப்பதற்காக, பிரிட்டிஷ் ராணியிடமிருந்து அனுமதி பெறுவதற்கு பிரிட்டிஷ் நேரப்படி 12.30 மணிக்கு தெரீசா மே பக்கிங்ஹாம் அரண்மனைக்கு செல்லவிருக்கிறார். படத்தின் காப்புரிமைPA அவருடைய பெரும்பான்மையற்ற நிர்வாகத்தை ஜனநாயக ஒன்றியக் கட்சி ( டி.யூ.பி) ஆதரிக்கும் என்ற புரிதலோடு பிரதமர் பதவியில் தொடருவதற்கு தெரீசா மே முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இன்னும் ஒரு தொகுதியின் முடிவு அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 326 இருக்கைகளில் 8 குறைவாக கன்சர்வேட்டிவ் கட்சி உள்ளது. "தொழிலா…
-
- 3 replies
- 487 views
-
-
அருணாச்சால்ப்பிரதேசத்திற்கு இன்று காலை வந்திறங்கிய திபெத் பவுத்த மதத் தலைவர் தலாய் லாமா, தனது இந்த இந்தியப் பயணம் சீனா நினைப்பது போல் அரசியல் ரீதியானது அல்ல என்றும் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை என்று தலாய் லாமா தெரிவித்துள்ளார். டவாங்கில் இன்று காலை வந்திறங்கிய தலாய் லாமாவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. "தான் எங்கு சென்றாலும் சீனா எனக்கு எதிராக பிரச்சாரம் செய்வது வழக்கம்தான். நான் ஏதோ பிரிவினைவாத இயக்கத்தை வளர்த்தெடுப்பதாக சீனாவின் கம்யூனிச அரசு குற்றம் சாட்டுவதில் எந்த ஒரு அடிப்படை உண்மையும் இல்லை". என்று அவர் மியூசியம் ஒன்றை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார். என்னுடைய இந்த வருகை அ…
-
- 0 replies
- 875 views
-
-
பாதிரியார் தன்னை கற்பழித்ததோடு, கொலை மிரட்டலும் விடுப்பதாக, பாதிக்கப்பட்ட பெண், திருச்சி மகளிர் போலீசில் புகார் அளித்தார். திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசில், பூங்கோதை நேற்று அளித்த புகார் மனு விவரம்:சிதம்பரத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகளான நான், சில ஆண்டுக்கு முன், சுந்தரவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்தேன். வரதட்சணை விவகாரம் தொடர்பாக கணவரை பிரிந்து வாழ்ந்தேன்.திருச்சி செவன்த் டே கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பாதிரியார் சுதாகர், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள சிறுவர் விடுதியில், காப்பாளராக எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தார்.இதை பயன்படுத்தி, அடிக்கடி அங்கு வந்த பாதிரியார் சுதாகர், கட்டாயப்படுத்தி என்னை கற்பழித்தார். வேறு ஒருவருக்கு என்னை திருமணம…
-
- 1 reply
- 1.5k views
-
-
8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் 50வது தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1971ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற்ற ஆறு அரபு நாடுகள் ஒன்றிணைந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆன நாளே அங்கு தேசிய நாள். அபு தாபி, அஜ்மன், துபாய், ஃபுஜய்ரா, ஷார்ஜா, அம் அல் குவெய்ன் ஆகிய ஆறு நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய அரபு எமிரேட்சுடன் 1972ல் ராஸ் அல் காய்மா இணைந்தது. எமிரேட்ஸின் வளர்ச்சி அபு தாபியைத் தலைநகரமாகக் கொண்டிருக்கும் இந்த நாடு, 1950களில் பெரிதும் பாலைவன பூமியாகவே இருந்தது. அப்பிரதேசத்தின் எண்ணெய் வளங்கள் கண்டறியப்பட்டு, 1962ல் எண்ணெய் ஏற்றுமதி துவங…
-
- 8 replies
- 649 views
-
-
தெற்காசியாவிலேயே மிகப் பெரிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடிய பாகிஸ்தான் கோப்புப் படம்: பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாட்டத்தின்போது தெற்காசியாவிலேயே மிகப் மிகப்பெரிய கொடியை ஏற்றி தனது 70-வது சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளது பாகிஸ்தான். பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை ஓட்டி இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகா எல்லையில் 120 அடி நீளமும் 180 அடி அகலமும் கொண்ட பாகிஸ்தானின் தேசியக் கொடி, 400 அடி உயரம் கொண்ட கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இதன் மூலம் தெற்காசியாவின் மிகப் பெரிய தேசியக் கொடியை ஏற்றிய பெருமை பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து பாக…
-
- 0 replies
- 248 views
-
-
“உங்களிடம் எல்லாம் இருக்கிறது; ஒன்றை தவிர” – இம்ரான் கான் மீது முன்னாள் மனைவி விமர்சனம் தன்னிடம் அனைத்தும் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதை அவரது முன்னாள் மனைவி ரேஹாம் கான் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளதாார சரிவுக்கும், பண வீக்கத்துக்கும் பிரதமர் இம்ரான் கான் தான் காரணம் என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வரும் எதிர்க்கட்சிகள், அவரது அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது நாளை மறுதினம் (ஏப்.3) வாக்க…
-
- 0 replies
- 498 views
-
-
காங்கிரஸ்சாரின் தாக்குதலில் காயமடைந்த தமிழர் முன்னேற்றப் படை தலைவி கி.வீரலட்சுமி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற சத்தியமூர்த்திபவன் முற்றுகைப்பொரட்டத்தின போது காங்கிரசாரின் தாக்குதலில் காயமடைந்த தமிழர் முன்னேற்ற படை தலைவி கி.வீரலட்சுமி மற்றும் தொண்டர்கள் 7 பேர் பலத்த காயங்கள் அடைந்த நிலையில் தற்போது சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். http://www.sankathi24.com/news/38898/64//d,fullart.aspx
-
- 1 reply
- 515 views
-
-
ரஷ்ய, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருமாறு வலியுறுத்தல் -சி.எல்.சிசில்- பல மாதங்களாக நீடித்து வரும் ரஷ்ய – உக்ரைன் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் இதனை வலியுறுத்தி வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையும், பல்வேறு நாடுகளும் உக்ரைனில் ரஷியாவின் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறுவதாகும் எ…
-
- 2 replies
- 365 views
-
-
வட கொரியாவில்... கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த, இராணுவத்துக்கு... கிம் அழைப்பு! வடகொரியாவில் கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த இராணுவத்துக்கு அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்துள்ளார். மக்களுக்கு மருந்துகளை விநியோகிக்க உதவுமாறு இராணுவத்திற்கு கிம் ஜோங் உன், உத்தரவிட்டுள்ளார். வடகொரியாவில் கொவிட் தொற்று பரவியுள்ளதாக செய்தி வெளியானதில் இருந்து, இதுவரை 50பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தடுப்பூசி போடப்படாத மக்கள் மூலம் நோய் பரவுவதை மெதுவாக்கும் முயற்சியில் கிம் நாடு தழுவிய முடக்கநிலை கட்டுப்பாடுகளுக்கு உத்தரவிட்ட போதிலும், வடகொரியா ‘காய்ச்சல்’ என்று குறிப்பிடுவதன் மூலம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நோய்வாய்ப…
-
- 0 replies
- 144 views
-
-
உலக ரத்த கொடையாளர் தினம்: 'பாம்பே ஓ' ரத்தப் பிரிவை தானம் செய்யும் கொடை உள்ளங்கள் பி. சுதாகர் பிபிசி தமிழுக்காக 13 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES உலக ரத்த கொடையாளர் தினம் ஜூன் 14 ஆம் தேதி ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கமே, ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, அவர்களின் ரத்த வகையை அறிந்து கொள்வதோடு, 'உயிர்காக்க' உதிரம் (ரத்தம்) கொடுக்க வேண்டுமென்பதே. ரத்த தானம் வழங்க ஆண், பெண் இருபாலரும் முன்வரும்போதும் அதற்கான தேவை என்னமோ அதிகரிக்கவே செய்கிறது. ரத்தம் இல்லாமல் நிறைய அறுவை சிகிச்சைகள் தள்ளிப் போயிருக்கின்றன. உங்கள…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-