உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
இன்றைய (25/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், *மேன்செஸ்டர் தாக்குதல் புலனாய்வுத்தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்வதை நிறுத்தியது பிரிட்டன்! தகவல் கசிவை அடுத்து தடாலடி முடிவு. *அல் ஷபாப் தீவிரவாதிகளால் கடத்தி அடிமையாக்கப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள்! தாம் சந்தித்த கொடுமைகளை முதல் தடவையாக பிபிசியிடம் மனம் திறந்தனர்! *நூற்று இருபது மைல் தூரத்தில் இருந்து ஓடுபாதையை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்! லண்டன் சிட்டி விமானநிலையத்தில் அறிமுகமாகின்றது!
-
- 0 replies
- 322 views
-
-
'பிரிட்டனில் நியூகாசல் பகுதியில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குள் பலர் பிடித்து வைப்பு` பிரிட்டனில் நியூகாசல் பகுதியில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குள் கத்தியுடன் புகுந்த ஒருவர் பலரை பிடித்து வைத்திருப்பதாக போலிஸார் கூறுகின்றனர். Image captionஆட்கள் பணயம் பைக்கர் பகுதியில் கிளிஃபோர்ட் தெருவில் உள்ள அந்த அலுவலகத்துக்குள் ஆயுதபாணி நுழைந்துள்ளார். உள்ளே பல பணியாளர்கள் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக போலிஸார் கூறுகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த பகுதி தடுக்கப்பட்டுள்ளதுடன், போலிஸ் சமரச பேச்சுவார்த்தையாளர்களும் அங்கு வந்துள்ளனர். அந்த நபரை அந்த அலுவலகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்பாகவே தெரியும் என்றும் இதனை…
-
- 0 replies
- 319 views
-
-
பறக்கும் கணினியான F35C போர் விமானத்தை மீட்க அமெரிக்கா, சீனா மல்லுக்கட்டுவது ஏன்? கிளேர் ஹில்ஸ் பிபிசி நியூஸ், வாஷிங்டன் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, F35 போர் விமானம் கடலில் விழுந்த அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர் விமானத்தை, சீனர்கள் மீட்பதற்கு முன், தான் மீட்கவேண்டும் என்று அமெரிக்கா காலத்தோடு போட்டி போட்டு தேடிக்கொண்டிருக்கிறது. தென்சீனக் கடலில், அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி கப்பல் யூ எஸ் எஸ் கார்ல் வின்சனில் இருந்து புறப்பட்ட F35-C வகை அதிநவீன போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்கத் தரப்ப…
-
- 0 replies
- 278 views
- 1 follower
-
-
இந்தியாவின் அணு சக்தி சந்தை வளர்ந்து வரும் நிலையில், இங்கு அணுமின் நிலையத்தை அமைக்க தென் கொரியா விரும்புகிறது. ஆனால், மத்திய அரசு இதில் ஆர்வம் காட்டவில்லை. தென் கொரியாவின் அணுசக்தித் துறையைச் சேர்ந்த குழு, கடந்த நவம்பர் மாதம் இந்தியா வந்திருந்தது. அப்போது, இங்கு அணுமின் நிலையம் அமைப்பது தொடர்பான தங்களது நாட்டின் விருப்பத்தை அக்குழு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஏற்கெனவே ரஷிய உதவியுடன் தொடங்கப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளில் மீதமுள்ள 3 மற்றும் 4-வது உலைகளும், பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் தொடங்கப்பட்ட ஜைதாபூர் அணுமின் நிலையப் பணிகளும், அமெரிக்க உதவியுடன் தொடங்கப்பட்ட மித்தி வீர்தி அணுமின் நிலையப் பணிகளும் பல்வேறு காரணங்களால் தடைபட்டுள்ளன. எனவே, அப…
-
- 0 replies
- 406 views
-
-
மெக்ஸிகோ நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க நம்பிக்கைக்கு மத்தியில் தேடுதல் நடவடிக்கை தொடருகிறது, வட கொரியாவை அழிப்பேன் என்று கூறிய அமெரிக்க அதிபருக்கு வடகொரிய அதிபர் கடும் எச்சரிக்கை மற்றும் மீதேன் உண்ணும் பாக்டீரியாக்கள் அதை புரதமாக மாற்றுவது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 318 views
-
-
யுக்ரேனை கொரியா போல இரண்டாக உடைக்க நினைக்கும் ரஷ்யா: யுக்ரேன் உளவுத் துறை 50 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS கொரியாவைப் போல யுக்ரேனை இரண்டாகப் பிளக்க ரஷ்யா முயல்வதாக யுக்ரேன் நாட்டு ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது. யுக்ரேன் முழுவவதையும் கைப்பற்றும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், யுக்ரேனை இரண்டாக உடைத்து ஒன்றை ரஷ்ய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சி நடப்பதாக யுக்ரேன் ராணுவ உளவுத் துறையின் தலைவர் கைரைலோ புடனோவ் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார். யுக்ரேனில் 'வட கொரியா, தென் கொரியா' போல ஒரு பிளவை உருவாக்க ரஷ்யா முயல்வதாகவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய படையெடுப்பு …
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
வட கொரியா மீது போரா? : அமெரிக்கா மறுப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தனது நாட்டின் மீது போர் பிரகடனம் செய்திருப்பதாக அமெரிக்கவை குற்றஞ்சாட்டும் வட கொரியாவின் ஓர் அறிக்கையை அமெரிக்கா அபத்தமான யோசனை என்று கூறி புறக்கணித்துள்ளது. விளம்பரம் அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானங்களை சுட்டுத்தள்ளும் உரிமை எங்களுக்கு இருக…
-
- 0 replies
- 393 views
-
-
மெல்போர்ன்: காதலனை அடித்துக் கொலை செய்த ஆஸ்திரேலிய பெண், பிணத்தை சாப்பிட திட்டமிட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்பெண் பிணத்தை தான் சாப்பிட விரும்பியதோடு மட்டுமல்லாமல் தன் நண்பனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி 'விருத்துக்கு வருகிறாயா' என்றும் அழைத்துள்ளார். மெல்போர்னில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 2008ம் ஆண்டு டேவிட் வாகன் என்பவர் தன் காதலியால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை மெல்போர்ன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. காதலனைக் கொன்றதாக மாலேஹன் என்ற 29 வயது பெண் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். ஆனால் தான் மன நலம் குன்றியிருந்ததாகவும், அதனால் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மாலே…
-
- 0 replies
- 516 views
-
-
அறிவுச் சோதனை வைத்துக்கொள்ளுவோமா? ராஜீய செயலர் டில்லர்சனுக்கு டிரம்ப் சவால் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மூர்க்கர் என்று அந்நாட்டு ராஜீய செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் சொன்னதாகக் கூறப்படுவதைப் பற்றி கேட்டபோது, அவருக்கும் எனக்கும் ஐ.க்யூ. டெஸ்ட் எனப்படும் அறிவுச் சோதனை வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டு டிரம்ப் சவால் விடுத்துள்ளார். படத்தின் காப…
-
- 0 replies
- 214 views
-
-
கிழக்கு திமோர் கடற்கரையில்... நிலநடுக்கம்: இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு, சுனாமி எச்சரிக்கை! கிழக்கு திமோர் கடற்கரையில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) கிழக்கு திமோருக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே பிளவுபட்டுள்ள திமோர் தீவின் கிழக்கு முனையில் இருந்து 51.4 கிமீ (32 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமியை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம் என இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உயிரிழப்பு…
-
- 0 replies
- 168 views
-
-
அணு குண்டுகளை ஏந்திச் சென்று தாக்கக்கூடிய அக்னி-1 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. ஒரிசா மாநிலம் பாலசூரில் உள்ள வீலர் தீவிலிருந்து அக்னி-1 ஏவுகணை, வியாழக்கிழமை வெற்றிகரமாக ஏவப்பட்டது. அக்னி-1 ஏவுகணை தரையிலிருந்து 700 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்த சோதனை எவ்வித இடையூறின்றி, வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்று ஒருங்கிணைந்த சோதனைப் பிரிவு (ஐடிஆர்) இயக்குநர் எஸ்.பி. தாஸ் தெரிவித்தார். இந்த ஏவுகணை முற்றிலும் உள்நாட்டிலேயே, இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. திட எரிபொருள் மூலம் இயங்கும் இந்த ஏவுகணை வியாழக்கிழமை காலை 10.10 மணி அளவில் ஏவி சோதித்துப் பார்க்கப்பட்டது. சோதனையின்போது அனைத்து நிகழ்வுகளும் கன கச்சிதமாக இருந்த…
-
- 0 replies
- 495 views
-
-
உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றம்! ரஷ்யா உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக்கொண்டதற்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்துள்ளன. மேலும் சீனா மற்றும் இந்தியா உட்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன. ரஷ்யாவைத் தவிர, பெலாரஸ், வடகொரியா, சிரியா மற்றும் நிகரகுவா ஆகிய நான்கு நாடுகள் வாக்கெடுப்பை நிராகரித்தன. ரஷ்யா படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவிற்கு எதிராக பதிவான அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் இதுவாகும். உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாதம் இராணுவ நடவடிக்கையை தொடங்கிய ரஷ்…
-
- 0 replies
- 173 views
-
-
விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற எழு சுற்று அமைதிப் பேச்சுக்களின் போதும் அதில் பங்குபற்றிய அரசதரப்பு பிரதிநிதிகளுக்காக சிறிலங்கா அரசு சுமார் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாவை செலவிட்டுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றின் நேற்றைய அமர்வின்போதும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அரசதரப்பின் பிரதம கொறடா ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மேற்கண்ட தகவலை தெரிவித்தார். தாய்லாந்து சட்டாகிப்பில் ஆரம்பித்த முதல் கட்ட அமைதிப் பேச்சில் கலந்துகொண்ட அரசு தரப்பு குழுவினருக்கு 7 லட்சத்து 83 ஆயிரத்து 964 ருபாவும் அங்கு நடைபெற்ற இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களுக்கு 16 லட்சம் ரூபாவும் நோர்வேயில் நடைபெற்ற மூன்றாம் சுற்று பேச்சுக்களுக்கு 25 லட்சம் ர…
-
- 0 replies
- 909 views
-
-
உலகப் பார்வை: ''கேட்டலோனியா ஸ்பெயினிடம் இருந்து சுதந்திரத்தை விட, சுயாட்சியை பெறலாம்'' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். "சுவிஸ் பாணியிலான கூட்டாட்சி சுயாட்சியை பெறலாம்" படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஸ்பெயினிடம் இருந்து முழு சுதந்திரத்தை பெறுவதை விட, சுவிஸ் பாணியி…
-
- 0 replies
- 236 views
-
-
உலகப் பார்வை: பிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பிரிட்டனின் உள்துறை செயலர் பதவி விலகல் படத்தின் காப்புரிமைAFP சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் "கவனக்குறைவுடன் எம்பிக்களை வழிநடத்திய" பிரிட்டனின் உள்துறைச் செயலர் அம்பர் ரட் தவறுக்கு பொறுப்பேற்று அப்பதவியிலிருந்து விலகியுள்ளார். வரலாறு படைத்த அவெஞ்சர்ஸ் ஹாலிவுட் திரைப்படம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES சமீபத்தில் வெளியான "அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்" என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியான முதல் வார இறுதியில் 630 மி…
-
- 0 replies
- 315 views
-
-
ஆப்கான் பெண்கள் பல்கலையில் கற்கத் தடை: தாலிபான் அரசுக்கு அமெரிக்கா கண்டனம் By Digital Desk 2 21 Dec, 2022 | 10:56 AM ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தாலிபான்கள் விதித்துள்ள இடைக்கால தடைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு இடைக்கால தடை விதித்துள்ள தலிபான்களின் முடிவை அமெரிக்கா கண்டிக்கிறது. இந்த மோசமான முடிவுவானது ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது கூடுதல் கட்டுப…
-
- 0 replies
- 180 views
-
-
துருக்கி நிலநடுக்கம்: கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு சடலமாக கண்டெடுப்பு! துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு தனது வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் இறந்து கிடந்ததை அவரது முகவர் உறுதிப்படுத்தியுள்ளார். கானா தேசிய வீரரான 31 வயது கிறிஸ்டியன் அட்சு, பிரீமியர் லீக் அணிகளான எவர்டன், செல்சியா மற்றும் நியூகேஸில் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். பெப்ரவரி 6ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து அட்சுவை காணவில்லை, தற்போது இது ஹடேயின் அன்டாக்யாவில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு இடிபாடுகளில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய அணி அல்-ரேட் உடனான ஒரு சீசனுக்கு…
-
- 0 replies
- 677 views
-
-
-வெளிநாட்டு செய்திச் சேவை- நேட்டோவின் தாக்குதலில் சேர்பிய படைகள் தோற்கடிக்கப்பட்டு 8 வருடங்களுக்குப் பின்னர் கொசோவோ முழுமையாக சுதந்திர நாடாக மிளிர்வதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கொசோவோ இதன் மூலம் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கும் சர்வதேச அமைப்புகளான ஐக்கிய நாடுகள், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றவற்றில் உறுப்புரிமை பெறுவதற்குமான உரிமையை பெற்றுள்ளது. மேலும், முன்னாள் யுகொஸ்லாவியா, சேர்பியா போன்றவற்றிற்கு உரிய பொருளாதார சொத்துகள் மற்றும் கடன்கள் மீதான தனது உரிமையையும் கொசோவோ பெறுகின்றது. எனினும் ஐக்கிய நாடுகளின் இந்த திட்டம் சேர்பியாவை சீற்றமடையச் செய்யலாம் என சுட்டிக் காட்டப்படுகின்றது. வியன்னாவில் இது குறித்து யோசனைகள் ஆராயப்பட்…
-
- 0 replies
- 927 views
-
-
யூதர்களும் பாலஸ்தீனர்களும் சமாதான வாழ்க்கையால் மட்டுமே புராதனமான ஜெருசலேமைக் காப்பாற்ற முடியும். சில வாரங்களுக்கு முன்னால் ஜெருசலேம் நகரின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 2 பாலஸ்தீன இளைஞர்கள் நகரின் மேற்கு ஓரத்தில் இருந்த யூத வழிபாட்டுத் தலத்துக்குள் நுழைந்து தாக்கினார்கள். அங்கு வழிபட்டுக்கொண்டிருந்தவர்களில் 4 பேரைக் கொன்றார்கள், மேலும் பலரைக் காயப்படுத்தினார்கள். தாக்குதல் நடத்திய 2 இளைஞர்களும் பிறகு சுட்டுக்கொல்லப்பட்டார்கள். பாலஸ்தீனர்களில் பயங்கரவாதிகள் இந்தப் படுகொலையைக் கொண்டாடினார்கள். மிதவாதிகள் கண்டித்தார்கள். இதற்குப் பழிவாங்கும் வகையில் பயங்கரவாதிகளில் ஒருவரின் வீட்டை இஸ்ரேலிய ராணுவம் தரைமட்டமாக்கியது. மற்றவர்களின் வீட்டையும் தகர்க்கப்போவதாக எச்சரித்தது. …
-
- 0 replies
- 719 views
-
-
புதுடெல்லி, ஜனவரி மாதம் 26 ந்தேதி நடைபெறும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. பிரதமர் மோடியும் ஒபாமா வுடன் போனில் பேசியும், நேரில் சந்தித்தபோதும் அழைப்பு விடுத்தார். இதை அதிபர் ஒபாமா ஏற்றுக் கொண்டார். அவரது இந்தியப் பயணத்தை அமெரிக்க அரசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பின்பு நடைபெறும் குடியரசு தின விழாக்களில் அமெரிக்க நாட்டு அதிபர் ஒருவர் பங்கேற்க இருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் ஒபாமாவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து கவுரவிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. ஒபாமா வருகையை யொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிபர் ஒபாமா தீவிர வாதி…
-
- 0 replies
- 259 views
-
-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டியே தீருவோம் என்று கேரளத்தின் புதிய முதல் அமைச்சர் உம்மன் சாண்டி கடந்த 4 நாட்களுக்குள் 2வது முறையாக கூறி உள்ளார். 5 ஆண்டுக்காலம் கேரளத்தில் ஆட்சி நடத்திய மார்க்சிஸ்ட் கட்சி முதல் அமைச்சர் அச்சுதானந்தன் புதிய அணை கட்டுவோம் என்று கூறி வந்தார். அவரது அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை பொறுப்பு வகித்த பிரேமச்சந்திரன், பென்னிகுக், கட்டிய அணையை உடைப்போம் என்றும் புதிய அணை கட்டுவோம் என்றும் தொடர்ந்து சொன்னார். முல்லைப் பெரியாறு அணையில், 999 ஆண்டுகளுக்கான பாசன உரிமையைத் தமிழகம் பெற்று இருக்கிறது. கேரள அரசு கட்டத் திட்டமிடுகின்ற புதிய அணை, பள்ளத்தில் இடத்தில் அமைவத…
-
- 0 replies
- 567 views
-
-
Published By: RAJEEBAN 05 OCT, 2023 | 08:45 PM சிரிய இராணுவத்தின் பயிற்சிக்கல்லூரி மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் ஆளில்லா விமானதாக்குதலில் 60 இராணுவத்தினரும் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். கடேட்களின் குடும்பத்தினர் கலந்துகொண்ட பட்டமளிப்பு நிகழ்வை இலக்குவைத்து ஹோம்சில் உள்ள இராணுவபயிற்சிக்கல்லூரி பல ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றதாக சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத அமைப்பே தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள சிரிய இராணுவம் அமைப்பின் பெயரை குறிப்பிடவில்லை. ஜிகாத்தீவிரவாதிகளும் கிளர்ச்சிக்காரர்களும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள பகுதியிலிருந்தே தாக்குதல் இடம்பெற்றுள்ளது. htt…
-
- 0 replies
- 366 views
- 1 follower
-
-
இப்படுக்கொலையை தடுத்து நிறுத்த லட்சம் தமிழர்களாய் குடும்பத்துடன் ஒன்று திரள்வோம். இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பீச் ரயில் நிலையம் அருகில், சென்னை நாள்: 20.08.2011, சனிக்கிழமை, காலை 10 மணிக்கு. மரண தண்டனைக்கு எதிரான இயக்கம்
-
- 0 replies
- 654 views
-
-
ஊடகவியலாளர் கஷோக்கியின் சடலத்தை கொண்டுசெல்லும் காணொளி வெளியானது! துருக்கியிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடற்பாகங்களுடன் சிலர் செல்லும் காணொளி வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஊடகவியலாளரை கொலைசெய்த பின்னர் சவுதி அரேபியாவை சேர்ந்த சிலர் கஷோக்கியின் உடல் பாகங்களை கொண்டு செல்வதை காண்பிக்கும் காணொளியினை துருக்கி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. துருக்கியின் புலனாய்வு பிரிவினருக்கு நெருக்கமான ஊடகமொன்றே இந்த காணொளியினை வெளியிட்டுள்ளது. ஊடகவியலாளர் கொல்லப்பட்ட தினத்தன்று கொலையில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த துருக்கிக்கான சவுதி அரேபிய தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு செல்வதையே காணொளி காண்பித்துள்ளது. …
-
- 0 replies
- 591 views
-
-
படத்தின் காப்புரிமை AFP வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் இந்த மாதத்தில் இரண்டாவது அணுஆயுத மாநாடு நடத்தவுள்ளதாக தனது ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையில் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ''மகத்துவத்தை தேர்வு செய்தல்'' (Choosing Greatness) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு தான் ஆற்றிய உரையில் பேசிய டிரம்ப், எல்லை சுவர் கட்டுவது தொடர்பாக மீண்டும் வலியுறுத்தி பேசினார். இதற்கிடையே இது குறித்த ஒரு மறுதலிப்பில் அமெரிக்காவின் மதிப்புகள் மற்றும் மாண்புகளை டிரம்ப் கைவிடுவதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். …
-
- 0 replies
- 446 views
-