Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆறரை கோடி தமிழ் மக்களுக்கு முதல்வராக இருக்கிற கருணாநிதியை மத வெறி சக்திகள் மிரட்டுவது கடும் கண்டனத்துக்குரியது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வ இந்து பிரஷத் அமைப்பைச் சேர்ந்த ராம்விலாஸ் வேதாந்தி என்பவர், முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிராக கொலை வெறியை தூண்டும் வகையில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு தமிழர்களை எல்லாம் திடுக்கிட வைத்துள்ளது. பெங்களூரில் முதல்வரின் மகள் செல்வியின் விட்டை தாக்கியவர்கள், தமிழக அரசு பேருந்து ஒன்றை தீவைத்து கொளுத்தி 2 தமிழர்களின் உயிரை பறித்தவர்களும், இந்த அமைப்பினை சேர்ந்தவர்கள் தான். இந்த மதவாத சக்திகளின் மிரட்டலை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இவர்களது …

  2. முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள பாஜக முன்னாள் எம்.பியும், வி.எச்.பியைச் சேர்ந்தவருமான சாமியார் வேதாந்தி மற்றும் பாஜக தலைவர் அத்வானி ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள், அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அத்வானி, வேதாந்தி ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. உடனடியாக வேதாந்தி தனது பேச்சைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் கோஷமிட்டனர். அபபோது செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறுகையில், முதல்வர் கருணாநிதிக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிர…

  3. கொரிய தீபகற்பமும் அணு ஆயுத அரசியலும் மு. இராமனாதன்ன் ந. முருகேச பாண்டியன் அக்டோபர் 9ஆம் தேதியன்று வடகொரியா பூமிக்கடியில் நிகழ்த்திய அணு ஆயுதச் சோதனை எழுப்பிய அதிர்வு ரிக்டர் அளவீட்டில் 4.2ஆக இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறது அமெரிக்காவின் நில அமைப்பியல் துறை. இதை வைத்து வடகொரியா சோதித்த அணுகுண்டு, 1945இல் ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டைவிட 20 மடங்கு சிறியதாக இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இது ஒப்பீட்டளவில் பலவீனமானதுதான். ஆனால் இந்தச் சோதனை வடகிழக்காசியாவின் பாதுகாப்பிலும் அமெரிக்காவின் செல்வாக்கிலும் சர்வதேச அணு ஆயுதக் கொள்கைகளிலும் உண்டாக்கிய பாதிப்புகள் பலமானவை. வாஷிங்டனில், பெய்ஜிங்கில், அதற்கப்பால் உலகெங்கிலும் அது உண்டாக்கிய அதிர்வலைகள் இன்னும் அடங்…

  4. விநாயகரை வழிபட்ட நடிகர் சல்மான் கான் மீது மத நடவடிக்கை லக்னெü, செப். 21: மும்பையில் விநாயகரை வழிபட்ட நடிகர் சல்மான் கான் மீது நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய அமைப்பு முடிவு செய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விநாயகரை கடலில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டபோது சல்மான் கானும் அவரது குடும்பத்தினரும் விநாயகரை வழிபட்டு, நடனமாடியதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. இதுகுறித்து பரேலியில் உள்ள இஃப்தா-மன்சார்-இ-இஸ்லாம் என்ற அமைப்பு அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. "எந்த ஒரு முஸ்லிமும்ம் சிலைகளை வழிபடக்கூடாது என்பது இஸ்லாத்தின் கோட்பாடாகும். அவ்வாறு சிலைகளை வழிபடுவர்கள் மீது இஸ்லாமிய நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். அதன்படி "கல்மா'வை அவர் பட…

  5. இரு வாரங்களுக்கு ஒரு மொழி வீதம் வழக்கொழிந்து வரும் உலக மொழிகள் [22 - September - 2007] [Font Size - A - A - A] உலகம் முழுவதிலும் வழக்கத்திலுள்ள 7000 மொழிகளில் இரு வாரங்களுக்கு ஒரு மொழிவீதம் அழிவடைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியா, சேர்பியா மற்றும் அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநில கிராமங்களின் மொழிகள் அழிவடைந்துவரும் அதேவேளை, இதற்கு பாரம்பரியத்திற்கும் வரலாற்றிற்கும் உருக்கொடுக்கும் மக்கள் மரணமடைந்து வருவதே காரணமென ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அருகிவரும் மொழிகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனமொன்று அழிவடையும் ஆபத்தை நெருங்கியுள்ள மொழிகளில் மிகவும் முக்கியமான 5 மொழிகள் உள்ளடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. மொழிகளை இ…

  6. 100 கிராமங்கள் மூழ்கியது: சீனாவை தாக்கிய புயல் - 20 லட்சம் பேர் வீடு இழப்பு திகதி : வுரநளனயலஇ 18 ளுநி 2007இ ஜளுயசயலெயஸ சீனாவை வரலாறு காணாத வகையில் புயல் தாக்கியது. 1000 கிராம மங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்தனர். சீனாவின் தெற்கு பகுதியிலும் கிழக்கு பகுதியிலும் கடு மையான புயல் தாக்கியது. பலத்த காற்றுடன் கன மழையும் பெய்து வருகிறது. இந்த புயலுக்கு ஹவிபா' என்று பெய ரிடப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. மணிக்கு 165 மைல் வேகத்தில் புயல் காற்று தாக்கியதில் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தது. கடலில் 30 அடி உயரத்தில் ராட்சத அலைகள் எழுந் தன. கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. தாழ்வான பகுதிக…

    • 8 replies
    • 1.5k views
  7. கடந்த வாரம் இஸ்ரேலில் உள்ள இராணுவ முகாம் மீது, இஸ்ரேலால் பயங்கரவாத அமைப்பு என்று பட்டியலிடப்பட்டதும் பலஸ்தீனத்தின் காசாப் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமைப்பான கமாஸ் Qassam ஏவுகணைகள் கொண்டு தாக்கியதில் 70 இஸ்ரேல் படைவீரர்கள் காயமடைந்தனர். கமாஸ் அமெரிக்கா.. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றாலும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளாலும் பயங்கரவாத அமைப்பென்று பட்டியலிடப்பட்ட அமைப்பாகும். Qassam வகை ஏவுகணைகளுடன் கமாஸ் வீரர்கள். Qassam rockets (இலகுவாக ஏவக் கூடிய ஏவுகணைகள். தாக்குதல் வீச்சு எல்லை 6- 11 கிலோ மீற்றர்கள். எளிமையான தொழில்நுடம். ஆனால் மிகையான அச்சுறுத்தல்) இஸ்ரேலின் அதியுயர் தொழில்நுட்ப வளங்களையும் முறியடித்து கமாஸ் இந்தத் தாக்க…

  8. மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை, ஒரு செய்தியயை அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில், இருந்த வழக்கில், தொல்பொருள் ஆராய்ச்சித்துறை இன்று அதன் அறிக்கையயை சமர்பித்து இருக்கிறது. அதில் ராமர் இருந்தற்கான, வரலாற்றுப்பூர்வமான, சான்றுகள் ஏதும் இல்லை என்று சொல்லியிருக்கிறது. இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில், ராமர் பாலம் என்று கருதப்படுவதை முற்றாக மறுத்துள்ளது, மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை. தகவல் உதவி: Press unit Trust of India. http://news.digitaltoday.in/news/india.jsp...ory&id=8671 Sethusamudram project: Centre denies existence of Rama Press Trust of India New Delhi, September 12 In the midst of a political controve…

  9. http://www.reuters.com/news/video/videoStory?videoId=66263 அணு குண்டுக்கு நிகரான அழிவு சக்தி படைத்த வாக்யூம் குண்டு எனப்படும் தெர்மோபோரிக் குண்டினை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது. குண்டுகளுக்கு தந்தை என்று கூறப்படும் இந்த பயங்கர குண்டினை ரஷ்யா சோதித்து பார்த்துள்ளது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்புப் படை துணைத் தலைவர் அலெக்சாண்டர் ரக்ஷின் கூறுகையில், உலகின் முதலாவது தெர்மோபோரிக் குண்டினை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இது அணு குண்டு அல்லாத குண்டுகளில் மிகவும் பயங்கரமானது, அழிவு சக்தி அதிகம் கொண்டது. அதேசமயம், சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.அணு குண்டு ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்…

    • 13 replies
    • 2.9k views
  10. லண்டனில் வங்கிக் கொள்ளை இருவர் சுட்டுக்கொலை என்றும் தகவல் கூறுகின்றது . ITN - 13.09.2007 18:03Two shot dead as police foil bank raidTwo robbers have been shot dead after armed police foiled a raid on a security van outside a bank.One died at the scene in Chandlers Ford, Hampshire, and a second was taken to hospital where he was later pronounced dead.The shooting, involving the Metropolitan Police Flying Squad, happened at a branch of the HSBC.Witnesses described one of the robbers holding a gun to the head of a security guard before he was shot by police.A Scotland Yard spokesman said: "The object of the operation was to prevent and apprehend those believed…

    • 6 replies
    • 1.9k views
  11. சேது கால்வாய்: இலங்கையுடன் சேர்ந்து சதி செய்வோரை வெல்வோம் - கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 16, 2007 ஈரோடு: இலங்கையுடன் சேர்ந்து சேது சமுத்திரத் திட்டத்தை தடுக்க முயலுவோரின் சதிச் செயல்களை முறியடித்து அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ஈரோட்டில் திமுக முப்பெரும் விழா நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசுகையில், திராவிட இயக்கத்தை வீழ்த்துவதற்காக நடைபெறுகின்ற முயற்சிகளில் ஒன்றாக நாம் நிறைவேற்ற இன்றைக்கு முனைந்திருக்கின்ற ஒரு பெரிய திட்டத்தை குழி தோண்டிப் புதைக்க சில குள்ளநரிகள், சில சூழ்ச்சிக்காரர்கள், சில குடிலர்கள் முயற்சி மேற்கொண்டிருப்பதை நம்முடைய இ…

  12. ஐரோப்பிய ஒன்றியத்தின் நீல அட்டை September 15th, 2007 அமெரிக்காவின் கிரீன் கார்ட் போலவே இங்கிலாந்து உட்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குடிபுக 2 கோடி நீல அட்டைகளை தகுதியுள்ள ஆசியர்களுக்கும் ஆப்ரிக்கர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தரவுள்ளது. இந்ததிட்டம் அடுத்தமாதம் வெளியிடப்படும். International Europe mulls 'blue card' for Asian migrants London, Sept. 15 (PTI): Good news for those planning to emigrate to Europe. The European countries, including Britain, may soon open their borders to an extra 20 million workers from Asia. Yes, the European Union is planning to introduce a new 'blue card' scheme modelled on the American 'green card' work permit, the…

    • 2 replies
    • 1.6k views
  13. பிரிட்டிஷ் விசா மோசடிக் குற்றச்சாட்டில் மூவருக்கு 53 கோடி ரூபா அபராதம் வீரகேசரி நாளேடு பிரிட்டனில் கல்விகற்பதற்கான மாணவர் விசா பெறுவது தொடர்பாக மோசடிக் குற்றம்சுமத்தப்பட்ட இலங்கையர் இருவர் உட்பட மூவர் 23இலட்சம் ஸ்ரேலிங் பவுண்களை (சுமார் 53 கோடி ரூபா) அபராதமாக செலுத்த வேண்டுமென பிரிட்டிஷ் நீதிமன்றமொன்று நேற்றுமுன்தினம் உத்தரவிட்டுள்ளது. ஆறுமுகம் கனகேஸ்வரன் (56), பொன்னு துரை புவனேந்திரன் (52), ஹரி பீட்டர் வில்ஸன் (48) ஆகியோருக்கு எதிராகவே இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது. 150க்கும் அதிகமானோருக்கு பிரிட்டனில் தங்கியிருப்பதற்கு உதவுவதற்காக போலி ஆவணங்களையும் தகவல்களையும் வழங்கியமை தொடர்பான வழக்கில் இவர்கள் குற்றத்தை தொடர்பான வழக்கில் இவர்கள் குற்றத்தை ஒப்புக்…

  14. சுவிஸ் குடியுரிமை வழங்குவதில் பாரபட்சம் சுவிஸில் வெளிநாட்டவர் குடியுரிமை பெறுவது வெகு சிரமம் சுவிட்சர்லாந்து நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற குடியுரிமை பெறுவதற்கான நடைமுறைகள், பெரிதும் பாரபட்சமானவை என்றும், பலரது கருத்தில் அவை, இனவாதத் தன்மை கொண்டவை என்றும் ஒரு புதிய அறிக்கை கூறுகின்றது. இந்த அறிக்கையை வெளியிட்ட அந்த நாட்டின், இனப் பாகுபாடு குறித்த சமஸ்டி ஆணைக்குழு, குடியுரிமை வழங்குவதற்கான சுவிஸின் நடைமுறைகளில் பெரும் மாற்றங்கள் தேவை என்று பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக ஒருவரது குடியுரிமைக்கான விண்ணப்பத்தை முடிவு செய்வது தொடர்பில், ஒரு சமூகத்தின் வாக்கெடுப்புக்கு அவற்றை விடும் நடைமுறையில் மாற்றங்கள் தேவை என்று அது கூறுகிறது. சுவிஸில…

    • 13 replies
    • 3.2k views
  15. கருணையிலும் பார்க்க பணத்தைப் பெரிதாக மதிக்கும் சீனா [14 - September - 2007] [Font Size - A - A - A] -அன்ரோனேற்றா பெஸ்லோவா- பெய்ஜிங், 2008 ஆம் வருட ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பெய்ஜிங்கில் நடைபெற இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவரும் சீனா, வருடாந்தம் தூக்கிலிடப்படுவோர் தொகையைக் குறைக்க வேண்டுமென்ற அழுத்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதன் மூலம் கொலைக் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைகளை ஆயுட்கால சிறைத் தண்டனையாக குறைப்பதற்கான பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. ஆனால், இந்த முயற்சி குறித்து எதிர் வாதங்கள் எழுந்துள்ளன. தென் மாகாணமான குவாங்தோங்கில் கொலைச் சம்வங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் …

  16. அணுகுண்டுகளுடன் பறந்த அமெரிக்க விமானம் தவறுதலாக இடம்பெற்ற பரபரப்பு சம்பவம் [07 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] அமெரிக்காவில் உள்ள மினாட் விமானப்படை தளத்தில் இருந்து பி.52 ரக போர் விமானம் ஒன்று குண்டுகளை ஏற்றிக் கொண்டு போசிர் சிட்டி விமான தளத்துக்கு சென்றது. இதில் மற்ற குண்டுகளுக்கு பதிலாக தவறுதலாக 5 அணுகுண்டுகளை ஏற்றி அனுப்பி விட்டனர். விமானம் அங்கு சென்றடைந்த பிறகு தான் அணுகுண்டுகள் ஏற்றப்பட்ட விஷயமே தெரிய வந்தது. குண்டுகளை அனுப்பிய பிறகு வெடிகுண்டு களஞ்சியத்தில் இருப்புகளை சரி பார்த்தபோது 5 அணு குண்டுகள் மாயமாகி இருந்தன. அப்போது தான் அவற்றை தவறுதலாக விமானத்தில் ஏற்றி அனுப்பி இருப்பதை உணர்ந்தனர். உலகிலேயே மிக அபாயகரமான அணுகுண்டுகள் அவை, வ…

    • 14 replies
    • 2.9k views
  17. தெற்காசியாவில் `இஸ்ரேலை' உருவாக்க மேற்குலகு முயற்சி [07 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] *தடுத்து நிறுத்த சீனாவை உதவிக்கு அழைக்கிறார் வீரவன்ஸ மேற்குலகின் தாராள பொருளாதாரக் கொள்கை காரணமாக இலங்கை பாரிய இழப்புகளைச் சந்தித்திருப்பதாகவும் நாட்டின் இறைமைக்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும் ஜே.வி.பி. பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ எமது நாட்டைத் துண்டாடி தெற்காசியாவில் ஒரு இஸ்ரேலை தோற்றுவிக்க மேற்குலகம் முயன்று வருவதாகவும் தெரிவித்திருக்கின்றார். மேற்குலகச் சக்திகளின் இந்தச் சதித் திட்டத்தை முறியடிப்பதற்கு சீனா அதன் பங்களிப்பைச் செய்ய வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். …

  18. ஒரிசாவில் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கின்றன வாந்திபேதியால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி இந்தியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரிசா மாநிலத்தின் ஒரு மாவட்டம் காலஹந்தி. பெரும் அளவில் பழங்குடியின மக்கள் வாழும் அந்த மாவட்டத்தில் கடந்த சில வாரங்களில் வாந்திபேதி நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியுள்ளது. இந்தியாவில் மிகவும் அதிகமான வறுமையில் சிக்கியுள்ள மாவட்டங்களில் காலஹந்தியும் ஒன்று. சமீப காலத்தில் அங்கு பலர் இறப்பதற்கு வாந்திபேதிதான் காரணம் என்று கூறப்பட்டாலும், அப்பகுதியிலுள்ள மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் உரிய முறையில் மக்களுக்கு சென்றடைவதில்லை என்பதும் இறப்புகளுக்கு ஒரு காரணமாகும் என்று சமீபத்தில் அங்கு சென்றிருந்த பிபிசியின் செய்தியாளர…

  19. 4வது மனைவி மூலம் 90வயதில் குழந்தைக்கு தந்தையான விவசாயி ராஜஸ்தான் மாநிலம் பாஞ்சிமிலி கிராமத்தில் வசித்து வருபவர் நானுராம் ஜோகி, 90 வயதாகும் இவருக்கு 4 மனைவிகள் 20மகன்-மகள் உள்ளனர். 20க்கும் மேற் பட்ட பேரக்குழந்தைகள் இருக் கிறார்கள். விவசாயியான இவர் தன் வாரிசுகள் மற்றும் உறவினர் கள் 109 பேருடன் மிகப்பெரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். இவரது விவசாய வருமானத்தின் பெரும்பகுதி குடும்பத்தின் உணவு, உடை, கல்வி செலவுகளுக்கு சரியாகி விடுகிறது. 21-வது குழந்தை 20குழந்தைகள் பெற்ற பிறகும் நானுராம் ஜோகிக்கு ஆசை விடவில்லை. 90 வய திலும் தன் ஆண்மையை நிரூபிக்கும் வகையில் அவர் தன் 4-வது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் அவரது 4-வது மனைவி சபுரி கர்ப்ப…

    • 25 replies
    • 5.9k views
  20. வங்களாவிரிகுடாவில் அமெரிக்கா உட்பட 4 நாடுகள் கடற்படை பயிற்சி வீரகேசரி இணையம் வங்காள விரிகுடாவில் அமெரிக்கா , ஜப்பான், சிங்கப்பூர், அவுஸ்திரேலியா உட்பட 4 நாடுகளைச் சேர்ந்த கடற்படையினர் இன்று பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர். 27 கப்பல்களும் படகுகளும் இப் பயிற்சியில் பயன்படுத்தப்படவுள்ளன. இக் கடற்படைபயிற்சிகள் மிக பெரிய அளவில் முன்னெடுக்கப்படுவதுடன், நாடுகளிடையே நல்லுறவை மேம்படுத்தி படை பலத்தை மேம்படுத்த உதவும் என தெரிவிக்கப்படுகிறது.வங்காள விரிகுடாவில் இடம் பெறும் இப்பயிற்சிகள் இந்தியாவின் கிழக்கு பகுதியிலிருந்டு ஆரம்பித்து அந்தமான் மற்றும் இந்தோனேஷியா வரை இஅடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  21. ஞாயிறு 12-08-2007 00:07 மணி தமிழீழம் [மயூரன்] படகுகளில் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றால் நெடுமாறனைக் கைது செய்யுமாறு கடற்படையினருக்கு உத்தரவு தமிழ் நாட்டில் இருந்து படகுகள் மூலம் உணவுப் பொருட்களை எடுத்தவரும் முயற்ச்சியில் பழ நெடுமாறன் ஈடுபட்டால் அவரை கைது செய்யுமாறு இந்திய மற்றும் இலங்கை கடற்படையினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் உள்ள மக்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் உணவுப் பொருட்களை உரிய வகையில் அனுப்பி வைக்காதமையை கண்டித்து பழ நெடுமாறன் தலைமையிலான ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் தமிழகத்தில் இருந்து உணவுப் பொருட்களை யாழ்பாபணத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை யாழ்பாணத்திற…

  22. சென்னை: புட்டபர்த்தி சாய்பாபாவை காலில் விழுந்து வணங்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மரணமடைந்தார். சென்னையைச் சேர்ந்தவர் ஜி.கே.ராமன் (76). சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தவர், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றின் தலைவராக தற்போது இருந்து வந்தார். சாய்பாபாவின் தீவிர பக்தர் ராமன். இந்த நிலையில் புட்டபர்த்திக்குச் சென்ற ராமன், நேற்று பாபாவை தரிசித்தார். பாபாவின் காலடியில் விழுந்து வணங்கியுள்ளார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பாபாவின் காலடியிலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். ராமனின் உடல் சென்னைக்குக் கொண்டு வரப்படவுள்ளது http://thatstamil.oneindia.in/news/2007/08...of-saibaba.html

  23. 2003 இல் சதாம் குசைன் அணுகுண்டு உட்பட மனிதப் பேரழிவு இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்று கற்பனைக் கதை கட்டிக்கொண்டு ஈராக்கை ஆக்கிரமித்து எண்ணை வளத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கும் அமெரிக்க, பிரித்தானிய ஆக்கிரமிப்பு இராணுவங்களில் பஸ்ரா என்ற தென் ஈராக்கிய நகரில் நிலை கொண்டிருந்த பிரித்தானிய இராணுவம் அங்கிருந்து முற்றாக வெளியேறிக் கொண்டுள்ளது. பிற இடங்களில் இருந்தும் மெது மெதுவாக வெளியேறி வருகின்றது. பாஸ்ராவை விட்டு ஓடும் பிரித்தானிய இராணுவம். பிரித்தானிய இராணுவ வெளியேற்றத்தை ஈராக்கியப் போராளிகள் தங்கள் வெற்றியாகக் கொண்டாடி வரும் அதேவேளை தாங்கள் வெளியேறி வரும் பகுதிகளில் தங்களால் பயிற்றப்பட்ட ஈராக்கிய கூலிப்படைகளை பிரித்தானிய இராணுவம் நிறுத்தி வருகின்றது. …

  24. ஈராக்கின் பஸ்ரா நகரிலுள்ள பிரிட்டிஷ் படைகள் முழுவதையும் அங்கிருந்து விலக்கிக் கொள்வதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அங்கிருந்த முகாமொன்றிலிருந்த பிரிட்டிஷ் படைகள் வெளியேற்றப்பட்டுள்ளன. இந் நகரில் பாரிய மோதல்கள் எதுவும் இடம்பெறாமையினால் இதனை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமென ஈராக்கிய படைகள் தெரிவித்ததைத் தொடர்ந்தே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்நகரிலுள்ள சதாம் ஹுசைனின் மாளிகையில் முகாம் அமைத்துள்ள ஏனைய 500 படையினரும் விலக்கிக் கொள்ளப்படவுள்ள அதேவேளை, எதிர்காலத்தில் பஸ்ரா நகருக்கு வெளியிலுள்ள படைத்தளத்திலேயே பிரிட்டிஷ் படைகளுக்கான முகாம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் விடயம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ; குறிப்பி…

    • 3 replies
    • 1.2k views
  25. ."நீங்கள் சைவமா? அசைவமா?' என்று கேட்டால், "நான் நுõறு சதவீதம் சைவம் தான்' என்று நீங்கள் சொல்வீர்கள்! ஆனால், நீங்கள் சைவம் என்றாலும், அசைவம் தான்! எப்படி தெரியுமா? நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், படியுங்கள்: மருந்துக்கடையில் வாங்கும் "கேப்சூல்'களில் 99 சதவீதம், அசைவத்தால் ஆனது. மிருகங்களின் கொழுப்பில் இருந்து தான், "கேப்சூல்'களின் ஓடுகள் தயாரிக்கப்படுகின்றன. சர்வதேச நிறுவனங்களும், மிருக கொழுப்பில் இருந்துதான், "கேப்சூல்' ஓடுகளை தயார் செய்கின்றன. இந்தியாவில் உள்ள நிறுவனங்ளில் 90 சதவீதம் வெளியிடும் "கேப்சூல்'கள் அசைவம் தான். அரியானாவில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழக பயோடெக்னாலஜி மையத்தின் இயக்குனர் டாக்டர் பசந்த் குமார் பகேரா, இது பற்றி ஆராய்ச்சி செய்தார். மிருக கொழுப்ப…

    • 6 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.