உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26860 topics in this forum
-
உறையும் நீரில் 2000 பேர் நிர்வாணக் குளியல் அவுஸ்திரேலியாவின் டெர்வெண்ட் ஆற்றில் 3 பாகை செல்சியஸ் உறையும் நீரில் 2000 பேர் நிர்வாணக் குளியளில் ஈடுபட்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 22-ஆம் திகதி, ஆண்டிலேயே குறைந்த பகல் பொழுதை கொண்ட நாள் என்பதால் அதனை கொண்டாடும் விதமாக, கடந்த பத்தாண்டுகளாக இவ்விநோத செயலில் அந்நாட்டு மக்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1335979
-
- 1 reply
- 669 views
-
-
பெண் கைதிகளால் வெடித்த மோதல்; 41 பேர் உயிரிழப்பு மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் (Honduras) ,தாமரா (Tamara)பகுதியில் உள்ள சிறைச்சாலையில் நேற்றைய தினம் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்துள்ளது. இதில் 41 பெண் கைதிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர் எனவும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படுகாயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1335807
-
- 0 replies
- 446 views
-
-
பட மூலாதாரம்,REUTERS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க வெளியுறவுச் செயலளர் ஆண்டனி பிளிங்கென், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை திங்கட்கிழமையன்று (ஜூன் 19) சந்தித்தார். சீன தலைநகர் பீஜிங்கில் இச்சந்திப்பு நிகழ்ந்தது. சந்திப்பிற்குப் பிறகு, ஜின்பிங், “இருதரப்பும் சில குறிப்பிட்ட விஷயங்களில் முன்னேற்றத்தையும் ஒப்புதலையும் எட்டியிருக்கின்றன. இது மிக நல்ல விஷயம்,” என்று கூறியிருக்கிறார். மேலும், ஜின்பிங், “இச்சந்திப்பின் மூலம் அமெரிக்கா-சீனா உறவுகளை ஸ்திரப்படுத்துவதற்கு பிளிங்கென் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளைச் செய்வார் என்று நம்புகிறேன்,” என்றார். நாடுகளுக்கிடையிலான உறவுகள் பரஸ்பர மரியாதை மற்றும் நேர்மையை அடிப்படையாகக் …
-
- 3 replies
- 629 views
- 1 follower
-
-
இப்படி ஒரு இனங்களுக்கான மோதலை என் வாழ்நாளில் நான் யேர்மனியில் பார்த்ததில்லை” என யேர்மனிய பொலீஸ் அதிகாரி ஒருவர் அதிர்ச்சியுடன் அறிவித்திருக்கிறார். Nordrhein-Westfalen மாநிலத்தில் எசன் நகரில் சிரியா, லெபனான் இனக் குழுக்களிடயில் வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணி அளவில் மோதல் ஒன்று இடம் பெற்றிருந்தது . ஆரம்பத்தில் 70 முதல்80 வரையிலானோர் வரையில் பங்கு பற்றிய இந்த மோதல் 500 பேருக்கு மேலானோர் பங்கு பற்றும் அளவுக்கு விரவடைந்திருந்தது. எசன் நகரில் ஒரே குடியிருப்பில் வசிக்கும்இரண்டு குடும்பங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவே 16.06.2023 வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் இரத்தக் களறியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் சிறார்களுக்கிடையில் விளையாட்டின் போது ஏற்பட்ட சண்டையே அடிப்படையானது என அ…
-
- 4 replies
- 660 views
-
-
உக்ரேன் மீது அணு ஆயுதத் தாக்குதல்? அதிர்ச்சியில் உலக நாடுகள் ”தேவை ஏற்படின் உக்ரேன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷ்யா தயங்காது” என பெலரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார். உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரானது தற்போது தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் பெலரஸின் ஜனாதிபதியும் ரஷ்ய ஜனாதிபதியின் நெருங்கிய நண்பருமான அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ள இக்கருத்தானது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” எனது நாட்டின் மீது ஆக்கிரமிப்பு ஏதேனும் நடந்தால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் நாம் தயங்க மாட்டோம் . அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண…
-
- 22 replies
- 3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் சவக்கிடங்கின் மேலாளர் பல ஆண்டுகளாக மனித உடல் உறுப்புக்களை விற்பனை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் செயல்படும் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் பிணவறையில் இருந்து இந்த உடல் உறுப்புக்கள் விற்பனை செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளளனர். அந்த பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல்களில் இருந்து மனித உறுப்புகள் சட்டவிரோதமாகத் திருடப்பட்டு, பின்னர் விற்பனை செய்யப்பட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விற்பனை தொடர்பாக ஹார்வர்ட் மருத்துவ…
-
- 0 replies
- 335 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,சுபம் கிஷோர் பதவி,பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு நிகராக வளரத் துடிக்கும் சீனா உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தனது தடத்தைப் பதித்து வருகிறது. இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்கும் இஸ்லாமிய நாடுகளிலும் அதன் செல்வாக்கு பெருகி வருகிறது. இது இந்தியாவுக்கு எந்த வகையில் நெருக்கடியை ஏற்படுத்தும்? சௌதி அரேபியா மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் 7 ஆண்டுகளில் முதன்முறையாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சந்தித்துகொண்டனர். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, இவ்விரு நாடுகளையும் சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் பல ஆண்டு…
-
- 1 reply
- 356 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,தீபக் மண்டல் பதவி,பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் செளதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஏறக்குறைய தொண்ணூறு ஆண்டுகள் பழமையான உறவு இன்று ஒரு முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ளது. சௌதி அரேபியா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதை விரும்பாத அமெரிக்கா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் விவகாரத்தில் அமெரிக்காவின் நெருக்குதலை பொறுத்துக்கொள்ள செளதி அரேபியா தயாராக இல்லை என்று ஒரு உளவுத்துறை ஆவணத்தை மேற்கோள்காட்டி அமெரிக்க செய்தித்தாள் 'வாஷிங்டன் போஸ்ட்' தெரிவித்துள்ளது. எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் தனது நாட்டின் முடி…
-
- 7 replies
- 686 views
- 1 follower
-
-
Published By: SETHU 19 JUN, 2023 | 05:54 PM ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரைப் பிரதேசத்தில் இஸ்ரேலிய படையினர் இன்று நடத்திய முற்றுகையில் பலஸ்தீனியர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து நடந்த மோதல்களில் இஸ்ரேலிய படையினர் 7 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகொப்டர் மூலமும் இஸ்ரேலியப் படையினர் தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது. 4 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் 61 பேர் வன்முறைகளில் காயடைந்தனர் என பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 15 வயதான அஹ்மத் சகீர் என்பவரும் கொல்லப்பட்டதாக அவ்வமைச்சு தெரிவித்துள்ளது, கொல்லப்பட்டவர்களில் ஒருவரான அபு சாரியா (29) தனது…
-
- 1 reply
- 512 views
- 1 follower
-
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா ரஸ்ய ஜனாதிபதி புட்டினிடம் கோாிக்கை விடுத்துள்ளாா். உக்ரைன் மற்றும் ரஸ்யாவுக்டையேயான போர் 1½ ஆண்டாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டுவர ஆப்ரிக்க அமைதி இயக்கம் என்ற பெயரில் தென் ஆபிரிக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தென் ஆபிரிக்கா, எகிப்து, செனகல், கொங்கோ-பிராசாவில்லி, கொமுமா ரோஸ், ஜாம்பியா, உகாண்டா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை கொண்ட ஆபிரிக்க குழு, தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா தலைமையில் உக்ரைன் சென்று அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இதனையடுத்து ரஸ்யாவுக்கு சென்ற குறித்த ஆபிரி…
-
- 3 replies
- 417 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,CITY OF MESA 18 ஜூன் 2023 அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள ‘மெஸா’ என்ற சுற்றுலா தளம், ஆட்டிஸம் குறைபாடு உடையவர்கள் எந்தவொரு அசௌகரியமும் இன்றி சுற்றி பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதற்கு வழிகாட்டியாக இருந்தவர் ‘விசிட் மெஸா’ (visit mesa) சுற்றுலா பணியகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் கார்சியா. கடந்த 2018ஆம் ஆண்டு, மார்க் காசியா, ஆட்டிஸம் குறைபாடுள்ள தனது மகனுடன் குடும்ப சுற்றுலாவிற்கு சென்றிருந்தார். ஆனால் அங்கே அவருக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டது. ஆட்டிஸம் குறைபாடுள்ள தனது மகனை அங்கே அனைவரும் வினோதமாக பார்ப்பதும், சுற்றுலா வழிகாட்டியாக இருந்தவர் தனது மகனிடம் பொறுமையின்மையை கடைபிடித்ததும் அவ…
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
பாராளுமன்றத்தின் சக்தி வாய்ந்த நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவுஸ்திரேலிய பாராளுமன்ற எம்.பி கூறியுள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய பாராளுமன்ற எம்.பி .லிடியா தோர்ப். இவர், சக எம்.பி.யான டேவிட் வான் மீது பாலியல் குற்றச்சாட்டை பாராளுமன்ற அவையில் முன்வைத்திருக்கிறார். பாராளுமன்ற அவையில் கண்ணீர் மல்க லிடியா பேசும்போது, “ நான் இந்த பாராளுமன்றத்தின் சக்தி வாய்ந்த நபரான டேவிட் வானால் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். அவர் படிக்கட்டில் தள்ளி என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இதே போன்ற நிகழ்வு இங்கு பலருக்கும் நடந்துள்ளது. அவர்கள் தங்கள் பணிக்காக இதனை வெளியே கூறாமல் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர் செய்தது …
-
- 4 replies
- 512 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,EPA-EFE படக்குறிப்பு, பாலிஸ்தீனத்தில் புதிதாக உருவெடுத்துள்ள 'லயன்ஸ் டென் ' போன்ற போராட்டக் குழுக்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,யூசப் எல்டின் பதவி,பிபிசி உலக சேவை 17 ஜூன் 2023, 06:22 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு கூட இதுநாள்வரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் 30 வயதுக்குட்பட்ட பாலஸ்தீன இளைஞர்கள். பாலஸ்தீன தலைமை மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர்களில் பலர் கூறுகின்றனர். இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையேயான பிரச்னைக்கு ‘இரண்டு நாடுகளின் தீர்வு’ எனு…
-
- 0 replies
- 344 views
- 1 follower
-
-
கிரேக்க நாட்டின் பெலோபொன்னீஸ் தீபகற்பத்தின் கடற்கரையிலிருந்து 47 கடல் மைல்தூரத்தில் உள்ள சர்வதேசக் கடலில் கப்பல் கவிழ்ந்ததில் பலர் இறந்துள்ளதாக கிரேக்கஅதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை அதிகாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. லிபியாவில் உள்ளடோப்ரூக்கில் இருந்து இத்தாலிக்கு நோக்கிப் புறப்பட்ட அந்தக் கப்பலில்500பேர்வரையில் இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவிக்கிறார்கள். இதுவரையில்104 பேர் மட்டுமே மீட்க பட்டிருக்கிறார்கள். இந்தக் கப்பலில் பயணம்செய்தவர்கள் பெரும்பாலும் சிரியா, எகிப்து மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர்கள்என்று செய்திகள் தெரிவிக்கின்றன. செவ்வாயன்று, சர்வதேசக் கடலில் பயணித்த இந்தக் கப்பலைப் பற்றிய தகவலைஇத்தாலிய அதிகார…
-
- 3 replies
- 449 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 16 JUN, 2023 | 05:45 AM கனடாவின் மனிட்டோபா மாகாணத்தில் சிரேஸ்ட பிரஜைகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தும் டிரக்கும் மோதி விபத்துக்குள்ளானதில் 15க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். வின்னிபெக்கிற்கு மேற்கே சுமார் 170 கிலோமீற்றர் தொலைவில் கார்பெரி;க்கு வடக்கே இரண்டு நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடம்த்தில் டிரக் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற உடனேயே பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்பதை நாங்கள் உணர்ந்தோம் கனடாவின் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 15 பேர் உயிரிழந்துள்ளனர் 10 பேர் மருத்துவமனைகளிற்கு எடுத்துச்செல்லப்பட்…
-
- 0 replies
- 302 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,ரூபர்ட் விங்க்ஃபீல்ட் - ஹேயஸ் பதவி,பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது, அகுடா தீவுக்கூட்டம். இது பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சொந்தமான மிக ஏழ்மையான தீவுப் பகுதி. இங்கு வாழும் 13,000 மக்களுக்குக் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரேயொரு மருத்துவர்தான் இருந்துள்ளார். அலெனா என்ற 28 வயதே ஆன அந்த சாகச மருத்துவர், கோவிட் பெருந்தொற்றைத் தன்னால் சமாளிக்க முடிந்த அளவுக்கு, அந்நாட்டின் மோசமான மருத்துவத் துறையின் நிலைமையையும் அரசாங்கத்தையும் சமாளிக்க முடியவில்லை என்கிறார். 13,000 மக்கள்; ஒரே மருத்துவர் …
-
- 0 replies
- 358 views
- 1 follower
-
-
Published By: SETHU 13 JUN, 2023 | 04:14 PM இங்கிலாந்தின் நோட்டிங்ஹாம் நகரில் இன்று அதிகாலை மூவரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை, அந்நகரில் வேன் ஒன்றினால் மோதப்பட்ட மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, நோட்டிங்ஹாம் நகரம் முடக்கப்பட்டுள்ளதுடன் அந்நகர வீதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.00 மணியளவில் இல்கேஸ்டன் வீதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். அங்கு இருவரின் சடலங்களை பொலிஸார் கண்டனர். மெக்தலா வீpதியிலும் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின், மில்டன் வீத…
-
- 6 replies
- 532 views
- 1 follower
-
-
டிரம்பின் ஜனாதிபதி கனவிற்கு மீண்டும் ஆபத்து – புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தியது நீதிமன்றம் Published By: Rajeeban 09 Jun, 2023 | 06:14 AM வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பின்னர் இரகசிய ஆவணங்களை கையாண்டவிதம் குறித்து அமெரிக்க நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பின்னரும் தான் இரகசிய ஆவணங்களை வைத்திருந்ததாக டிரம்ப் தெரி…
-
- 16 replies
- 967 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,THOR PEDERSEN படக்குறிப்பு, வீட்டிலிருந்து தார் புறப்பட்டுச் சென்ற பின் பத்தாண்டுகள் கழித்து தமது வீட்டுக்கு மீண்டும் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார் 13 ஜூன் 2023, 05:55 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் நீங்கள் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்யவேண்டும் என்று எப்போதாவது கனவு கண்டிருக்கிறீர்களா? உலகம் முழுவதும் வெறும் 300க்கும் குறைவானவர்களே அது போன்ற கனவை நனவாக்கியுள்ளனர். அவர்களில் மூன்று பேர் மட்டுமே அனைத்து நாடுகளுக்கும் இருமுறை சென்றுள்ளனர்; இதே முயற்சியில் இடுபட்ட இரண்டு பேர் பின்னர் வீடு திரும்பவே இல்லை. ஆனால் டென்மார்க்கைச் சேர்ந்…
-
- 9 replies
- 648 views
- 1 follower
-
-
கியூபாவில் இராணுவ சக்தியை நிலை நிறுத்த சீனா முயற்சி : அமெரிக்கா குற்றச்சாட்டு! கியூபாவை தளமாகக் கொண்ட, சீன உளவு நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் பதிலளித்துள்ளார். கியூபாவில் பல ஆண்டுகளாக உளவுப்பிரிவை சீனா இயக்கி வருவதையும், 2019ல் அதை மேம்படுத்தியதையும் அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்திய நிலையில் அவர் இதனை கூறியுள்ளார். உலகம் முழுவதும் சீனா தமது வெளிநாட்டு தளவாட அடிப்படையிலான உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் பல முக்கியமான முயற்சிகளில் ஒன்றே கியூபா நடவடிக்கை என கூறியுள்ளார். மேலும் சீனாவின் நோக்கம் இராணுவ சக்தியை அதிக தூரத்தில் நிலைநிறுத்துவதே என்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் குற…
-
- 9 replies
- 846 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜூன் 14ஆம் தேதியான இன்று உலக ரத்ததான தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறதுப. ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்தும் அதன் முக்கியத்துவம் மற்றும் பலன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம். உலக ரத்த தானத்திற்கான கருப்பொருள் ஒவ்வொரு ஆண்டும் மாறும். அந்த வகையில், ‘ரத்தம் கொடுங்கள், பிளாஸ்மா கொடுங்கள், உயிரைப் பகிர்ந்து கொள்ளுங்கள், அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்பதே இந்தாண்டிற்கான கருப்பொருள். இந்தாண்டு கருப்பொருள் தொடர்ச்சியான ரத்ததானம் மற்றும் பிளாஸ்மா தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. ரத்தம் மற்றும் பிளாஸ்மா தா…
-
- 0 replies
- 518 views
- 1 follower
-
-
எவரெஸ்ட் சிகர மலையேற்றத்தின்போது, ஆபத்தில் மாட்டிக்கொண்ட ஒரு மலையேற்ற வீரரை, நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவர் காப்பாற்றியிருக்கிறார் .அவருடைய பெயர் கெல்ஜி ஷெர்பா இந்த மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக, எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தன்னுடைய பயணத்தை கெல்ஜி கைவிட்டிருக்கிறார்.ஆபத்தில் இருந்த மலையேற்ற வீரரை, கெல்ஜி ஷெர்பா தன்னுடைய தோளில் சுமந்துகொண்டு, கீழே பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்துள்ளார். இந்த மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக, எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தன்னுடைய பயணத்தை கெல்ஜி கைவிட்டிருக்கிறார்.ஆபத்தில் இருந்த மலையேற்ற வீரரை, கெல்ஜி ஷெர்பா தன்னுடைய தோளில் சுமந்துகொண்டு, கீழே பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்துள்ளார். எவரெஸ்ட்ட…
-
- 2 replies
- 280 views
- 1 follower
-
-
யாரும் மரணிக்கக் கூடாது; கிம் உத்தரவு வடகொரியாவில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையும், பட்டினியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்கொலைக்கு முயல்வதைத் தேசத் துரோகக் குற்றமாக அறிவித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜொன் உன், அவ்வாறு முயற்சி செய்பவர்களுக்கு தகுந்த தண்டனை விதிக்கப்படுமெனவும் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. https://athavannews.com/2023/1334472
-
- 4 replies
- 341 views
-
-
மேற்கத்திய நாடுகளை எதிர்க்கும் நாடுகளுடன் நட்புறவு : தென் அமெரிக்கா செல்கின்றார் ஈரான் ஜனாதிபதி மேற்கத்திய நாடுகளை எதிர்க்கும் நட்பு நாடுகளுடன் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் தென் அமெரிக்காவில் மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளதாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அறிவித்துள்ளார். இன்று அதிகாலையில் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி, வெனிசுவேலா, கியூபா மற்றும் நிகரகுவா மற்றும் அமெரிக்காவின் பொருளாதார தடை அறிவிக்கப்பட்ட நாடுகளுக்கும் அரசமுறைப் பயணத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்ராஹிம் ரைசி ஜனாதிபதியாக பதவியேற்று 21 மாதங்களில் மேற்கொள்ளும் 13வது வெளிநாட்டுப் பயணம் இது என்றும்…
-
- 0 replies
- 190 views
-
-
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார் ! பாலியல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து மீண்டு வந்த இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 86வது வயதில் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சைபெற்றுவந்த அவர் மிலனில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையில் இறந்ததாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முதன்முதலில் 1994 இல் பதவிக்கு வந்த பெர்லுஸ்கோனி 2011 வரை நான்கு அரசாங்கங்களை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பெர்லுஸ்கோனியின் மரணம் ஒரு பெரிய வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ளதாக இத்தாலியின் பாதுகாப்பு அமைச்சர் கைடோ குரோசெட்டோ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/13…
-
- 0 replies
- 139 views
-