Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிலிப்பைன்ஸ் வெள்ளம்: உயிரிழப்பு எண்ணிக்கை 51ஆக உயர்வு- 19பேரைக் காணவில்லை! பேரழிவு தரும் வெள்ளத்தை அடுத்து பிலிப்பைன்ஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்தது மற்றும் 19 பேர் காணவில்லை. தெற்கு மிசாமிஸ் ஆக்சிடென்டல் மாகாணத்தில் வசிப்பவர்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தற்போது அவசரகால முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடலோர கிராமமான கபோல்-அனோனனில், தென்னை மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு, லேசான பொருட்களால் செய்யப்பட்ட குடிசைகள் ஏறக்குறைய தரைமட்டமாக்கப்பட்டன. தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை சபையின் படி, வடக்கு மின்டானாவ் பகுதி பேரழிவின் முக்கியப் புள்ளியாக உள்ளது. அங்கு 25பேர் உயிரிழந…

  2. சீன விமானிகளிற்கு பயிற்சி வழங்குவதற்காக 100,000 டொலர்களை பெற்றார் ; முன்னாள் விமானிக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டு By RAJEEBAN 03 JAN, 2023 | 11:25 AM அமெரிக்க மரைன் படைப்பிரிவின் முன்னாள் விமானி சீன விமானிகளிற்கு பயிற்சிகளை வழங்குவதற்கு 100,000 டொலர்களை பெற்றுக்கொண்டார் என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. டானியல் டகனிற்கு எதிராக அமெரிக்கா தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டுபத்திரத்தில் இ;வ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானந்தாங்கி கப்பல்களில் எவ்வாறு இறங்;குவது என பயிற்சிகளை வழங்குவதற்காக டானியல் டகன் 100,000 டொலர்களிற்கு மேல் பெற்றுக்கொண்டார் கொலம்பிய நீதிமன்றமொன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணத்தில் …

  3. மனித உடலை கொண்டு மனித உரம் தயாரிக்கும் சமீபத்திய அமெரிக்க மாநிலமாக மாறியது நியூயோர்க்! மனித உரம் என்று அழைக்கப்படுவதை அனுமதிக்கும் சமீபத்திய அமெரிக்க மாநிலமாக நியூயோர்க் மாறியுள்ளது. ஒரு நபர் இப்போது அவரது மரணத்திற்குப் பிறகு அவரது உடலை மண்ணாக மாற்ற முடியும். இது புதைக்கப்படுதல் அல்லது தகனம் செய்வதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றாகக் கருதப்படுகிறது. ‘இயற்கை கரிம குறைப்பு’ என்றும் அறியப்படுகிறது. ஒரு கொள்கலனில் மூடப்பட்ட பிறகு பல வாரங்களில் உடல் சிதைவதைப் பார்க்கிறது. 2019ஆம் ஆண்டில், வொஷிங்டன் இதை சட்டப்பூர்வமாக்கிய முதல் அமெரிக்க மாநிலமாகும். கொலராடோ, ஓரிகான், வெர்மான்ட் மற்றும் கலிபோர்னியா ஆகியவை இதைப் பின்பற்றின. எனவே,…

  4. பிரேசிலின் புதிய அதிபராக லுலா டா சில்வா பதவியேற்றார்! உலகின் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தீவிர வலதுசாரியான ஜெயீர் போல்சனரோவுக்கும், முன்னாள் அதிபரும் ஊழல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து விட்டு வந்துள்ள இடதுசாரி வேட்பாளருமான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கும் இடையில் பலப்பரீட்சை நடந்தது. கொரோனா தொற்றை கையாண்ட முறை, அமேசான் மழைக்காடுகள் அழிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஜெயீர் போல்சனரோ அரசு மக்களிடம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டதால் இந்த தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியானது. பிரேசில் தேர்தல் நடைமுறையின்படி அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்…

  5. முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட் காலமானார்!! முன்னாள் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பதவி விலகி கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, 95 வயதில் அவரது வத்திக்கான் இல்லத்தில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையை எட்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலம் அவர் வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013 இல், 1415 இல் கிரிகோரி XII க்குப் பிறகு விலகிய முதல் பாப்பரசர் இவர் ஆவார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2022/1318149

  6. சீனாவை உலுக்கும் கொரோனா: தகவல்களை பகிருமாறு WHO அறிவிப்பு கொவிட் நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருவதால், சீனாவின் கொவிட் பற்றிய தற்போதைய தகவல்களைப் பகிருமாறு என்று உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) சீன அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக சீனா பல கடுமையான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள போதும் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளோர் மற்றும் மரணங்கள் பற்றிய மேலதிக தகவல்களையும் தடுப்பூசிகள் பற்றிய புள்ளிவிவரங்களையும் WHO அதிகாரிகள் பார்க்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், தென் கொரியா, இந்தியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் சீனாவிலிர…

  7. அணு ஆயுத உற்பத்தியை வேகமாக அதிகரிக்குமாறு கிம் உத்தரவு ! அணு ஆயுதங்களின் உற்பதியை வேகமாக அதிகரிக்குமாறு வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை எதிர்கொள்ள ஒரு புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார். வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையிலிருந்து ஒரு குறுகிய தூர ஏவுகணையை சோதனை செய்த சில மணிநேரங்களுக்கு பின்னர் கிம் ஜொங் உன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். வட கொரியாவை தனிமைப்படுத்துவதற்கும் ஒடுக்குவதற்கும் வொஷிங்டனும் சியோலும் ஒரு சதித்திட்டத்தை மேற்கொள்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆகவே இராணுவ சக்தியை இரட்டிப்பாக்கவும் அமெரிக்கா மற…

  8. அமெரிக்கா: குளிர்கால சூறாவளியால் இருளில் மூழ்கிய 15 லட்சம் வீடுகள்; 20 கோடி பேருக்கு எச்சரிக்கை அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வந்த சூழலில், கடும் குளிர் அதற்கு எதிராக திரும்பியுள்ளது. திடீரென உருவான வெடிகுண்டு சூறாவளி எனப்படும் குளிர்கால புயலால் நேற்று 15 லட்சம் பேருக்குமின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி கிடந்தனர். இந்த வெடிகுண்டு சூறாவளி என்பது கனமழை அல்லது கடும் பனியை தோற்றுவிக்க கூடியது. கடற்கரை பகுதிகளில் வெள்ளம் ஏற்படுத்துவதுடன், சூறாவளி காற்றையும் வீச செய்யும். சில நீர்நிலைகளில் இதனால், பல அடி உயரத்திற்கு அலைகளும் எழுந்து காணப்பட்டன. குளிர்கால சூறாவளியால் நாடு முழுவதும் பனிபடர்ந்து சாலைகள் மூடப்பட்டு உள்ளன. விமான சேவை…

  9. வான வேடிக்கைகளோடு புத்தாண்டை வரவேற்ற ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மக்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிட்னியின் வானவேடிக்கை அதன் துறைமுகப் பாலம், ஓபரா ஹவுஸ் மற்றும் அதன் புகழ்பெற்ற துறைமுகத்தில் நடைபெற்றது. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2023ஆம் ஆண்டு பிறந்துவிட்ட உலகின் சில பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முழு வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. புதிய ஆண்டை முதன்முதலாக வரவேற்றது, பசிபிக் நாடான கிரிபாட்டி. அதைத் தொடர்ந்து ஒரு மணிநேரம் கழித்து நியூசிலாந்து புத்தாண்டைக் கொண்டாடியது. ஆஸ்திரேலிய நகரத்தின் புகழ்பெற்ற வானவேடிக்கைக் காட்சிகளைப்…

  10. உக்ரைன் மீது 120 ஏவுகணைகளை வீசி தாக்குதல் – 10 அம்ச அமைதி திட்டத்தை ஏற்க ரஷ்யா மறுப்பு Posted on December 30, 2022 by தென்னவள் 14 0 உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட அந்த நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ரஷ்ய ராணுவம் தரை, வான், கடல் வழியாக நேற்று 120 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பெரும் சேதம் ஏற்பட்டது. உக்ரைன் முன்மொழிந்துள்ள 10 அம்ச அமைதி திட்டத்தை ஏற்க ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய முயன்ற உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. கடந்த 10 மாதங்களுக்கு மேலாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நீடித்து வருகிறது. கடந்த நவம்பரில் இந்தோனேசிய…

  11. புடினை கடுமையாக விமர்சித்த ரஷ்ய எம்.பி..! இந்தியாவில் மர்ம மரணம் – தொடரும் விசாரணை புடினின் உக்ரைன் போரை கடுமையாக விமர்சித்த ரஷ்யாவின் பணக்கார எம்.பி. இந்தியாவில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் பணக்கார எம். பி.களில் ஒருவரும், அதிபர் விளாடிமிர் புட்டினின் தீவிர விமர்சகருமான பாவெல் அன்டோவ் (Pavel Antov), இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் உள்ள விடுதியில் இருந்து மர்மமான முறையில் விழுந்து இறந்து கிடந்தார். கோடீஸ்வரர் பாவெல் அன்டோவ் தனது 66 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட ஒடிசாவின் Rayagada பகுதியில் விடுமுறையில் இருந்தார். அவர் மாடியில் இருந்து குதித்ததாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், ரஷ்ய தூதரக ஜெனரல் அலெக்ஸி இடம…

  12. இஸ்ரேல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றாா் நெதன்யாகு By DIGITAL DESK 2 30 DEC, 2022 | 09:27 AM இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு 6ஆவது முறையாக வியாழக்கிழமை (டிச.29) பொறுப்பேற்றாா். 73 வயதாகும் அவா், நாட்டில் மிக நீண்ட காலமாக பிரதமராக இருந்தவா் என்ற பெருமையை ஏற்கெனவே பெற்றுள்ளாா். கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேல் நாடாளுமன்றத் தோ்தல்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அமைக்கப்பட்ட அரசுகள் அடுத்தடுத்து கவிழ்ந்தன. இந்த நிலையில், மூன்றே ஆண்டுகளில் 4-ஆவதாக கடந்த நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் நெதன்யாகுவின் கட்சிக்கு 32 இடங்கள் கிடைத்தன. ஆட்சிமைக்க 61 இடங்கள் தேவையான…

  13. தென்னாபிரிக்காவில் எரிவாயு கொள்கலன் லொறி வெடித்ததில் 8 பேர் உயிரிழப்பு : பலர் காயம் 25 DEC, 2022 | 03:15 PM தென்னாபிரிக்காவில் எரிவாயு கொள்கலன் லொறி வெடித்துச் சிதறிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். அரச அவசர சேவை செய்தித் தொடர்பாளர் வில்லியம் என்ட்லாடி தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் சென்று கொண்டிருந்த எரிவாயு கொள்கலன் லொறி ஒன்று, பாலம் ஒன்றின் அடியில் சிக்கிக் கொண்டது. அந்த லொறியை நகர்த்த முயன்றபோது அது பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர் என்றும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும் பலியானோர் எ…

  14. ரஷ்ய வீரர்களின் விந்தணுக்களை பாதுகாக்க கோரிக்கை - யுக்ரேன் போருக்கு சென்றவர்களுக்காக கேட்கப்படும் சலுகை கட்டுரை தகவல் எழுதியவர்,பால் கிர்பி பதவி,பிபிசி செய்தியாளர் 47 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேன் போருக்கு அழைக்கப்பட்ட ரஷ்யப் படை வீரர்கள் தங்களுடைய விந்தணுக்களை கிரையோவங்கியில் (விந்தணுக்களை சேமிக்கும் வங்கி) சேமித்து வைத்து கொள்ளலாம் என ரஷ்யாவின் முன்னணி வழக்கறிஞர் கூறியுள்ளார். இது குறித்து அரசு செய்தி நிறுவனமான டாஸிடம் பேசிய ரஷ்ய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் இகோர் ட்ரூனோவ், படை வீரர்கள் தங்களது விந்தணுக்களை இலவசமாக சேமித்…

  15. எத்தியோப்பியாவில் முடிவுக்கு வந்தது உள்நாட்டு போர் 30 Dec, 2022 | 09:11 AM ஆபிரிக்க ஒன்றியத்துடனான ஒப்பந்தம் மூலம் எத்தியோப்பியாவில் உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வந்தது. இந்த போரில் அப்பாவி மக்கள் 600-க்கும் மேற்பட்டோர் கலவரக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து அந்த பகுதியில் நெருக்கடி நிலையை எத்தியோப்பியா அரசு அறிவித்தது. இதனால் நாட்டின் ஏனைய நகரங்களுடனான போக்குவரத்து வசதி திடீரென துண்டிக்கப்பட்டது. மேலும் தொலைபேசி சேவைகளும் நிறுத்த…

  16. சூகிக்கு மேலும் 7 ஆண்டுகால சிறை மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆங் சான் சூகிக்கு எதிராக மீதமுள்ள ஐந்து குற்றச்சாட்டுகள் மீதான தீர்ப்பை மியான்மர் ராணுவ நீதிமன்றம் இன்று (30) வழங்கியுள்ளது. மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (77 வயது). இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி ஆங் சாங் சூகியின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதை தொடர்ந்து ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்…

  17. உஸ்பெகிஸ்தானில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு! இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக, உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் நொய்டா நகரை சேர்ந்த மரியோன் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் டாக்-1 மேக்ஸ் என்ற மருந்தை இருமலுக்காக குடித்த 21 குழந்தைகளில் 18 குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அனைத்து குழந்தைகளும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக, பெற்றோர்கள் அல்லது மருந்தக விற்பனையாளர்களால் பரிந்துரைக்கப்பட்டு மரு…

  18. வரலாறை சமகாலத்துடன் இணைக்கும் புழுக்கள் ஓர் மருத்துவ அதிசயம் - ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் மிகப் பரந்த நிலப்பரப்பை ஆண்ட மங்கோலிய பேரரசர் கெங்கிஸ் கானுக்கும், அமெரிக்க உள்நாட்டுப் போருக்கும், பிரிட்டிஷ் மருத்துவ சேவைக்கும் தொடர்பு இருக்கிறதா? இது என்ன மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக இருக்கிறதே என்று எண்ணத் தொன்றுகிறதா? மேலே கூறிய மூன்றுமே ஒரே புள்ளியில் இணையவே செய்கின்றன. அவை தான் புழுக்கள். ஆம்... இறந்த விலங்குகளின் உடல்கள் மீதும், நாள்பட்ட புண்கள் மீதும் நெளியக் கூடிய, நீங்கள் அருவெருப்புடன் நோக்கும் அதே புழுக்கள் தான். சளி, இ…

  19. பனியால் உறைந்தது நயாகரா நீர்வீழ்ச்சி By T. SARANYA 28 DEC, 2022 | 04:56 PM அமெரிக்காவில் நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி பனியில் உறைந்து போய் காணப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அமெரிக்காவில் கடந்த நான்கு நாட்களாக பனிப்புயல் வீசுகிறது. நாடு முழுவதும் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டிருக்கும் நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் பனிப்பொழிவால், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியில் உறைந்துள்ளன. மின்சாரம் தடைபட்டுள்ளது. போக்குவரத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பனிப்புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபதை கடந்துள்ளது. பனிப்பொழிவு…

  20. உக்ரைன் மீது தொடர் ஏவுகணை தாக்குதல் - நூற்றிற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன By RAJEEBAN 29 DEC, 2022 | 02:56 PM உக்ரைன் நகரங்களின் மீது ரஸ்யா 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. வியாழக்கிழமை காலை உக்ரைன் நகரங்களை இலக்குவைத்து ரஸ்யா 100க்கும் அதிகமான ஏவுகணைகளை செலுத்தியதை தொடர்ந்து ரஸ்யாவின் பல நகரங்களில் ஏவுகணை எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒலித்தன. உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். தலைநகர் உட்பட பல நகரங்களில் ஏவுகணை வெடிப்புசத்தங்கள் கேட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன ஏவுகணை அலை தாக்குதல் எ…

  21. டுவிட்டர் சிஇஓ பதவியை விரைவில் இராஜினாமா செய்கிறேன் ; ஒரு முட்டாளை தேடிப்பிடிப்பேன் - எலான் மஸ்க் By Digital Desk 2 21 Dec, 2022 | 09:44 AM டுவிட்டர் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியை (சிஇஓ) இராஜினாமா செய்வதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "டுவிட்டர் பிரதம நிறைவேற்று அதிகாரி (சிஇஓ) பதவியை நான் விரைவில் இராஜினாமா செய்கிறேன். அந்த பதவிக்கு ஒரு முட்டாளை தேடிப்பிடித்துவிட்டு இராஜினாமா செய்வேன். அதன் பின்னர் மென்பொருள், சர்வர் அணிகளை மட்டும் ஏற்று நடத்துவேன்" என்று பதிவிட்டுள்ளார். எலான் மஸ்க் டுவிட்டர் ந…

  22. நீங்கள் ஒருபோதும் தனியாக நிற்க மாட்டீர்கள்: உக்ரைன் ஜனாதிபதிக்கு பைடன் ஆறுதல்! ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் எப்போதும் தனித்து நிற்காது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர் தனது முதல் வெளிநாட்டு பயணமான அமெரிக்கா சென்ற உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, நேற்று (புதன்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது, உக்ரைனுக்கு அதிநவீன பேட்ரியாட் வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொருத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உட்பட மேலும் 2 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ உதவிகளுக்கான தொகுப்பினை பைடன் உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற கூட்டு ஊடகவியல…

    • 54 replies
    • 2.9k views
  23. மூளையை முடக்கும் அமீபா தொற்று : புதிய நோய்க்கு தென்கொரியாவில் முதல் உயிரிழப்பு By DIGITAL DESK 2 28 DEC, 2022 | 10:02 AM நாக்லேரியா ஃபாவ்லேரி (Naegleria fowleri) எனப்படும் நோய் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தென்கொரிய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. 1960களில் ஆஸ்திரேலியாவில் புதிய உயிர்க்கொல்லி நோய் கிருமி கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது நாக்லேரியா ஃபாவ்லேரி எனப்படும் அந்த ஒரு செல் உயிரி மனித மூளையை முடக்கி திடீர் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் குழந்தைகள் நல மருத்துவமனையின் மருத்துவ நிபுணரான மால்கொம் ஃப்லோர் என்பவர்தான் இந்த நோய்க் கிருமியை முதன் முதலில் கண்டுபிடித்து. …

  24. ரஷ்யா - யுக்ரேன் போர்: 2023-ல் நடக்க வாய்ப்புள்ள 5 சாத்தியங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கி பத்து மாதங்கள் கடந்துவிட்டன. போரில் ஈடுபட்டுள்ள இந்த இரண்டு நாடுகளிலும் 2023இல் களநிகழ்வுகள் எவ்வாறு அமையும் என்பதை ராணுவ ஆய்வாளர்கள் சிலரிடம் கேட்டோம். வரும் ஆண்டிலாவது இந்த போர் நிறைவடையுமா? அப்படி நடந்தால் அம்முடிவு போர்க்களத்தில் அமையுமா அல்லது பேச்சுவார்த்தை மேசையில் அமையுமா? இல்லையென்றால் 2024ஆம் ஆண்டும் இப்போர் தொடருமா? "முக்கியத்துவம் பெறும் வசந்தகாலம்" மைக்கேல் கிளார்க், பிரிட்டன், எக்ஸிடெர் உத்தியியல் ஆய்வுகள் நி…

  25. ரஷ்யா – உக்ரைன் போரில் அமைதிக்கு மத்தியஸ்தம் செய்ய வேண்டும் : மோடியிடம் ஜெலென்ஸ்கி கோரிக்கை உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமாதான பேச்சுக்கு இந்திய பிரதமர் மோடியின் உதவியை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கோரியுள்ளார். திங்களன்று ஜெலென்ஸ்கிக்கும் மோடிக்கும் இடையே நடந்த தொலைபேசி அழைப்பின் போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். உக்ரைனுடன் இணைந்திருக்கும் மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் இருந்தபோதிலும், இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகின்றது. சீனாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. …

    • 18 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.