Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரஸ்யாவின் கோர தாக்குதல் – உக்ரைனின் முக்கிய தளபதி மரணம் உக்ரேனிய ராணுவத்தினரால் டா வின்சி என கொண்டாடப்பட்ட முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்து ஜெலென்ஸ்கி நொறுங்கிப்போனதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது இளமை காலம் மொத்தமும் ரஷ்யாவுக்கும் அதன் பினாமிகளுக்கும் எதிராக சண்டையிட்டவர் இந்த டா வின்சி என புகழ்ந்துள்ளார் ஜெலென்ஸ்கி. 27 வயதான Dmytro Kotsiubailo இந்த வாரம் கிழக்கு நகரமான பக்முத்தில் கொல்லப்பட்டார். பக்முத் நகரமானது ஒருபக்கம் ரஷ்ய துருப்புகளாலும் மறுபக்கம் ரஷ்ய ஆதரவு வாக்னர் கூலிப்படையாலும் உக்கிரமாக தாக்கப்பட்டு வருகிறது. அந்த பக்முத் நகரை காக்கும் பொருட்டு, டா வின்சியின் ஓநாய்கள் என்ற பெயரில் செயல்பட்டு வந்த பிரிவுடன் இவர் களமிறங…

  2. எதிரிகளுக்கு எதிராக போரிட எட்டு இலட்சம் இளைஞர்கள் இராணுவத்தில் இணைவு: வடகொரியா தகவல்! அமெரிக்கா மற்றும் பிற எதிரிகளுக்கு எதிராக போரிட சுமார் 800,000 இளைஞர்கள் இராணுவ சேவைக்கு முன்வந்துள்ளதாக வடகொரியா கூறுவதாக அந்நாட்டு அரசு செய்தித்தாள் ரோடாங் சின்மம் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் எதிரிகளை முற்றிலும் அழித்து இரு கொரியாக்களையும் ஒன்றிணைப்பதாக புதிதாக இணையும் தன்னார்வத் தொண்டர்கள் உறுதியளித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) அரசு ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் இராணுவத்தில் சேர்வதற்கு அல்லது மீண்டும் சேர்வதற்கு கையெழுத்திட்டனர். நாட்டின் இளைஞர்களின் முன்னணிப் படை என்று வர்ணிக்கப்படும் சுமார் 800,000…

  3. காணாமல் போன சுமார் இரண்டரை டன் யுரேனியம் தாது கிழக்கு லிபியாவில் கண்டுபிடிப்பு! சர்வதேச அணுசக்தி முகமையால் காணாமல் போனதாகக் கூறப்படும் சுமார் இரண்டரை டன் யுரேனியம் தாது கண்டுபிடிக்கப்பட்டதாக கிழக்கு லிபியாவில் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன. சாட் எல்லைக்கு அருகில் தாதுவைக் கொண்ட பத்து பீப்பாய்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக படைகளின் ஊடகப் பிரிவின் தலைவர் கூறினார். யுரேனியம் கொள்கலன்கள் தெற்கு லிபியாவில் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் (மூன்று மைல்) தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆயுதப்படைகள்…

    • 0 replies
    • 309 views
  4. 'நான் திரும்ப வந்துவிட்டேன்' - சமூக ஊடகங்களில் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி Published By: T. Saranya 18 Mar, 2023 | 12:12 PM டொனால்ட் ட்ரம்பின் முடக்கப்பட்ட பேஸ்புக், யூடியூப் கணக்கு 2 ஆண்டுகளுக்கு பின் வழமைக்கு திரும்பியுள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2017 முதல் 2021 ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக செயல்பட்டு வந்தார். இதனிடையே, 2021 தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்து ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிபெற்றார். ஆனால், தனது தோல்வியை ஏற்க மறுத்த டொனால்ட் ட்ரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறை தூண்டும் வகையில் பேசினார். இத…

  5. பரபரப்பான சூழலில் மூன்று நாள் பயணமாக சீனா ஜனாதிபதி ரஷ்யா பயணம்! சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மூன்று நாட்கள் பயணமாக ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் அழைப்பை ஏற்று ரஷ்யா செல்லும் சீன ஜனாதிபதி, 22ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன ஜனாதிபதியின் பயணத்தை சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங்கும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பயணத்தின் போது ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் ஸி ஜின்பிங், உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான சமாதான முயற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுக…

  6. பிரான்ஸ் ஓய்வூதிய எதிர்ப்பு: பரிஸில் மோதல்! நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் ஓய்வூதிய சீர்திருத்தங்களை கட்டாயப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து பரிஸில் பொலிஸார் போராட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஓய்வுபெறும் வயதை 62லிருந்து 64ஆக உயர்த்தியதன் எதிரொலியாக பிளேஸ் டி லா கான்கார்டில் கூட்டம் கூடியது. இந்தத் திட்டங்கள் இரண்டு மாதங்கள் சூடான அரசியல் விவாதங்களையும் வேலைநிறுத்தங்களையும் தூண்டின. இறுதியாக, பிரதமர் எலிசபெத் போர்ன் அரசியலமைப்பின் 49:3-ஐப் பயன்படுத்தினார். இது சட்டமன்றத்தில் வாக்கெடுப்பைத் தவிர்க்க அரசாங்கத்தை அனுமதித்தது. பெரும்பான்மையை பெறுவதற்கான உத்தரவாதம் இல்லாததால், சர்ச்சைக்குரிய சட்…

    • 10 replies
    • 750 views
  7. அமெரிக்காவிடமிருந்து 220 சீர்வேக ஏவுகணை வாங்குகிறது அவுஸ்திரேலியா Published By: SETHU 17 MAR, 2023 | 11:34 AM அவுஸ்திரேலியாவுக்கு 220 சீர்வேக ஏவுகணைகளை (cruise missiles) விநியோகிப்பதற்கு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அனுமதி அளித்துள்ளது. டொமாஹாக் ஏவுகணைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளும் இவற்றில் அடங்கும். இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்க காங்கிரஸின் சம்மதம் பெறப்பட வேண்டும் என்பது குறிப்படத்தக்கது. அக்கஸ் (Aukus) உடன்படிக்கையில் கீழ் அமெரிக்காவிடமிருந்து அவுஸ்திரேலியா கொள்வனவு செய்யவுள்ள நீர்மூழ்கிகளால் இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படவுள்ளன. உண்மையில் அவசியமான ஆற்றல்களை இந்த ஏவுகணைகள் வழங்கும் என …

  8. உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் தெரிவு உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று (15) நெதர்லாந்தில் நடைபெற்ற Skytrax World Airport Awards இல் உலகின் சிறந்த விமான நிலையமாக சாங்கி விமான நிலையம் விருது பெற்றதுடன், சிறந்த உணவு வசதிகள் கொண்ட விமான நிலையம் மற்றும் உலகின் சிறந்த ஓய்வு வசதிகள் கொண்ட விமான நிலையம் என விருது வழங்கப்பட்டது. முதல் இருபது விமான நிலையங்களில் கத்தாரின் டோஹா ஹமாத் விமான நிலையம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை ஜப்பானின் டோக்கியோ ஹனேடா பிடித்துள்ளது. https://thinakkural.lk/article/245157

  9. உலக தூக்க தினம்: மொபைல் எந்த அளவுக்கு தூக்கத்தை கெடுக்கிறது - மீள்வது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் உலக தூக்க தினம் மார்ச் 17ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி இந்த கட்டுரையை வழங்குகிறோம். ஒரு நாள் முழுவதற்குமான அலுவலக பணிகளுக்கு பின் வீட்டுக்கு செல்லும் உங்களின் முக்கிய தேவை என்னவாக இருக்கும்? சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இதற்கான பதில் தூக்கமாகவே இருக்கும். முந்தைய நாளின் களைப்பில் இருந்து விடுபடவும், இன்றைய நாளை புத்துணர்ச்சியோடு தொடங்கவும் நல…

  10. தென் கொரியா- ஜப்பான் தலைவர்கள் சந்திப்பு ஏன் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது? பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, தென் கொரிய அதிபர் யூன் மற்றும் ஜப்பான் பிரதமர் கிஷிடா (ஜோ பிடனின் இடது மற்றும் வலதுபுறத்தில் அமர்ந்துள்ளனர்) கடந்த ஜூன் மாதம் நேட்டோ மாட்ரிட் பேச்சுவார்த்தை போன்ற உச்சிமாநாட்டில் சந்தித்தனர். கட்டுரை தகவல் எழுதியவர்,ஜீன் மெக்கன்சி - சியோலில் இருந்து பதவி,பிபிசி செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் தென் கொரியா மற்றும் ஜப்பான் நாட்டு தலைவர்கள் வியாழனன்று டோக்கியோவில் சந்தித்து பேசியுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவி…

  11. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் குறைந்தது! உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று (16) கணிசமானளவு குறைந்துள்ளது. அதன்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 67.90 அமெரிக்க டொலர்களாக உள்ளது. பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.5 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது. ரஷ்ய – யுக்ரைன் மோதலால் உயர்ந்து வந்த மசகு எண்ணெய் விலை, 2021 ஆம் ஆண்டுக்கு பின், இத்தகைய அளவுக்கு சரிந்துள்ளது. மோதலின் ஆரம்ப காலத்தில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கு மேல் உயர்ந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/245118

  12. அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் ரஷ்ய ஜெட் மோதல் ஐரோப்பாவின் கருங்கடல் பகுதியில் அமெரிக்க MQ-9 ரீப்பர் வகை ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தின்மீது ரஷ்ய Su-27 ஜெட் போர் விமானம் மோதியதாக அமெரிக்க இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவத்தின் ஐரோப்பிய பிரிவு இந்த மோதலை உறுதிப்படுத்தி தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க விமானப்படை தளபதி ஜேம்ஸ் ஹெக்கர் வெளியிட்டுள்ள தகவலில், “எங்கள் MQ-9 விமானம் சர்வதேச வான்வெளியில் வழக்கமான செயல்பாடுகளை நடத்திக்கொண்டிருந்தபோது, ரஷ்ய விமானத்தால் இடைமறித்து தாக்கப்பட்டது. இதன் விளைவாக MQ-9 விபத்துக்குள்ளாகி முழுமையான இழப்பு ஏற்பட்டது. உண்மையில், ரஷ்யர்களின் இந்த பாதுகாப்பற்ற செயலால் கிட்டத்தட்ட இரண்டு விமானங்களும் ப…

  13. மாற்றுத்திறனாளி 'கடற்கன்னி'களுக்கு மன மகிழ்ச்சி தரும் திருவிழா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இது உலகின் மிகப்பெரிய கடற்கன்னி திருவிழா என்று கருதப்படுகிறது எல்லாவித திறனுடையவர்களும் இதில் பங்கேற்கிறார்கள். ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக கடற்கன்னியாக மாறி இந்த ‘மெர்மெய்டிங்’ விளையாட்டில் பங்கேற்கிறார் ச்சோபோ. இவர் பலருக்கும் உற்சாகம் அளிக்கும் இந்த திருவிழா பற்றிய வண்ணமயமான வீடியோ. https://www.facebook.com/BBCnewsTamil/videos/1237095993591126/ https://www.bbc.com/tamil/articles/c884qq705q2o

  14. கல்லூரி அனுமதி கடிதம் போலி: கனடாவிலிருந்து நாடு கடத்தலை எதிர்நோக்கும் 700 இந்திய மாணவர்கள் Published By: SETHU 16 MAR, 2023 | 11:25 AM சுமார் 700 இந்திய மாணவர்கள் கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது. கனேடிய விசா பெறுவதற்காக, கனேடிய கல்வி நிறுவனங்களில் அனுமதி பெற்றுள்ளதாக வழங்கப்பட்ட கடிதங்கள் போலியானவை எனத் தெரியவந்தமையே இதற்கான காரணம். கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரகம் இம்மாணவர்களுக்கு நாடு கடத்தல்; அறிவித்தலை வழங்கியுள்ளதுதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இம்மாணவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரிலுள்ள முகவர் ஒருவர் ஊடாக 2018, 2019 …

  15. அடுத்தடுத்து திவாலாகும் வங்கிகள்: 2008-ம் ஆண்டு நெருக்கடி மீண்டும் திரும்புகிறதா? அமெரிக்காவில் நடப்பது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 2 வங்கிகள் அடுத்தடுத்து திவாலாகியுள்ளன. இதனால், உலகையே உலுக்கிய 2008-ம் ஆண்டு நெருக்கடி மீண்டும் வரப் போகிறதா? என்ற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்க வங்கிகள் திவாலானது ஏன்? அதனை சமாளிக்க அந்நாட்டின் மத்திய வங்கி (ஃபெடரல் ரிசர்வ்) என்ன செய்கிறது? அதன் தாக்கம் உலகளவில் எப்படி இருக்கும்? அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம் சான்டாகிளாரா நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த சிலிகன் வேலி வங்கி (SVB) திவாலாகியுள்ளத…

  16. வெளிநாட்டு IT நிபுணர்கள் ரஷ்யாவில் தொழில் பெறுவதற்கான நடைமுறைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன: ரஷ்ய உள்துறை அமைச்சு Published By: Sethu 15 Mar, 2023 | 04:38 PM வெளிநாடுகளைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப (IT) நிபுணர்கள் ரஷ்யாவில் பணியாற்றுவதற்கு வேலை அனுமதிப்பத்திரம் வதிவிட அனுமதி பெறும் நடைமுறைகளை தான் இலகுபடுத்தியுள்ளதாக ரஷ்ய அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து வெளியேறிய தகவல் தொழில்நுட்பவியல் நிபுணர்களால் ஏற்பட்ட வெற்றிடங்களையடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பையடுத்து, ஆட்திரட்டல் திட்டமொன…

    • 4 replies
    • 800 views
  17. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஈரான்- சவுதி இணக்கம்! மத்திய கிழக்கு பிராந்திய போட்டியாளர்களான ஈரான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளும், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஒப்புக்கொண்டன. துண்டிக்கப்பட்ட உறவுகளை மீட்டெடுக்க இரு நாடுகளும் இடையே சீனா, மேற்கொண்ட நான்கு நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இது சாத்தியமாகியுள்ளது. நல்லிணக்கத்திற்கான முயற்சியில் முதலாவதாக, இரு நாடுகளும் இரண்டு மாதங்களுக்குள் தூதரகங்களை மீண்டும் திறப்பதாக தெரிவித்தன. அவர்கள் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை மீண்டும் நிறுவுவார்கள். இந்த அறிவிப்பை அமெரிக்கா எச்சரிக்கையுடன் வரவேற்றது. இதுகுறித்து கருத்த…

  18. சர்வதேச அளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் Published By: RAJEEBAN 15 MAR, 2023 | 11:04 AM ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி, ஆய்வு நிறுவனம், ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி குறித்த வருடாந்திர அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2022-ம் ஆண்டில் சர்வதேச அளவில் அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 40% ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. இரண்டாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. அந்த நாட்டில் இருந்து…

  19. செளதி, இரான் இடையிலான நெருக்கம் இந்தியா மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,கமலேஷ் மட்டேனி பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பத்து ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களில் ஒன்று வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் மாறி வரும் உறவுகள். இந்தியாவில் ஆட்சி மாற்றத்துடன் இந்தப் பிராந்தியம், அதிக ஆழத்துடனும் செயல் உத்தி கண்ணோட்டத்துடனும் பார்க்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் மாறி வரும் உறவு குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டபோது, அ…

  20. கூலிப்படையினரை விமர்சிப்போருக்கு 15 வருட சிறை: ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகாரம் Published By: SETHU 14 MAR, 2023 | 06:20 PM கூலிப்படையினரை விமர்சிப்போருக்கு 15 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கும் சட்டமூலத்துக்கு ஆதரவாக ரஷ்ய பாராளுமன்ற கீழ் அவை உறுப்பினர்கள் இன்று வாக்களித்துள்ளனர். உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில், உக்ரேனுக்கு எதிராக வாக்னர் குழு எனும் தனியார் கூலிப்படையினரும் போரிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 'தொண்டர் படையினரை' விமர்சிப்போருக்கு 15 வருடங்கள் வரையான தண்டனை விதிக்கும் சட்டமூலத்துக்கு ஆதரவாக ரஷ்ய பாராளுமன்றத்தின் கீழ் அவை உறுப்பினர்கள் இன்று வாக்களித்தனர். …

  21. உலகின் வலுவான ராணுவம் : சீன அதிபர் ஷீ ஜின்பிங் பேச்சு… ‘சீனாவின் தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலனுக்காக, ராணுவத்தை ஒருவரும் அசைக்க முடியாத இரும்பு பெருஞ்சுவராக உருவாக்குவேன்,” என, சீன அதிபர் ஷீ ஜின்பிங் தெரிவித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அதிபர் ஷீ ஜின்பிங், அந்நாட்டு அதிபராகவும், ராணுவ தலைவராகவும் மூன்றாவது முறையாக சமீபத்தில் தேர்வானார். அந்நாட்டில் அதிபர் பதவி வகித்த கம்யூ., தலைவர் மாசேதுங் உட்பட, வேறு எந்த தலைவரும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அதிபர் பதவியில் நீடித்தது இல்லை. இந்நிலையில், சீன பார்லி மென்டின் நிறைவு விழாவில், 3,000 உறுப்பினர்கள் முன்னிலையில் அதிபர் ஷீ ஜின்பிங் பேசியதாவது:மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை தான்…

  22. ஊபர், லிப்ட் நிறுவனங்களின் சாரதிகள் ஒப்பந்தக்காரர்களே: கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு Published By: SETHU 14 MAR, 2023 | 10:26 AM ஊபர், லிப்ட் மற்றும் ஏனையை செயலிகள் அடிப்படையிலான நிறுவனங்கள், தமது சாரதிகளை ஊழியர்களாக அல்லாமல், சுயாதீன ஒப்பந்தக்காரர்களாக நடத்தலாம் என அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளி;ததுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் ஊபர், லிப்ட் (Uber, Lyft) போன்ற நிறுவனங்கள் சாரதிகளை சுயாதீன ஒப்பந்தக்காரர்களாக நடத்துவதற்னு அனுமதி வழங்கும் திட்டத்துக்கு 2020 நவம்பரில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் மக்களால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதனால் இந்நிறுவனங்கள் ஊழியர்களு…

  23. பாரிய பனிப்பாறை அண்டார்டிகாவின் பிரண்ட் பனிக்கட்டியை உடைத்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகின் பாரிய பனிப்பாறைகள் பிரித்தானிய விஞ்ஞானிகள் உலகின் பாரிய இரண்டு பனிப்பாறைகளை கண்காணித்து வருகின்றனர். அவற்றில் ஒன்று கிரேட்டர் லண்டன் அளவுடையது என்றும், மற்றொன்று கார்ன்வால் அளவுடையது என்றும் கூறப்படுகிறது. பிரித்தானிய அண்டார்டிக் சர்வேயின் ஹாலி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து திரும்பிய பனிப்பாறை நிபுணர் மருத்துவர் ஆலிவர் மார்ஷ், இது கன்றை ஈன்றுவது போன்ற இது எங்களுக்கு தெரிந்தது என குறிப்பிட்டார். ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில், A81 என்ற பாரிய பனிக்கட்டி அண்டார்டிகாவின் பிரண்ட் ஐஸ் ஷெல்ஃப்பில் இருந்து விட…

  24. பனியில் உறைந்த காருக்குள் சிக்கிய 81 வயது முதியவர் ஒரு வாரத்திற்கும் மேலாக இனிப்பு மற்றும் குரோசண்ட்களை சாப்பிட்டு உயிர் பிழைத்துள்ளார். பனியில் காருக்குள் சிக்கித் தவித்த முதியவர் கலிபோர்னியாவில் பனி மூடிய சாலையில் சிக்கித் தவித்த முதியவர் ஒரு வாரத்திற்கும் மேலாக இனிப்புகள் மற்றும் குரோசண்ட் பாண்களை சாப்பிட்டு உயிர் பிழைத்தார். இச்சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. 81 வயதான ஜெர்ரி ஜோரெட் (Jerry Jouret), கலிபோர்னியாவின் பிக் பைனில் உள்ள தனது வீட்டிலிருந்து நெவாடாவின் கார்ட்னெர்வில்லில் உள்ள தனது குடும்ப வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். Inyo County Sheriff's Office இனிப்புகள் மற்றும் குரோசண்ட் பிப்ரவரி 24 அன்று தனது…

  25. சீனாவின் ஜனாதிபதியாக 3 ஆவது தடவையாக ஸீ ஜின்பிங் தெரிவு Published By: Sethu 10 Mar, 2023 | 09:42 AM சீனாவின் ஜனாதிபதி ஸீ ஜின்பிங், 3 ஆவது தடவையாகவும் அந்நாட்டின் நாடாளுமன்றத்தினால் இன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மேலும் 5 வருடங்களுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் ஸீ ஜின்பிங் நியமிக்கப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அவரின் 3 ஆவது ஜனாதிபதி பதவிக்காலத்தை நாடாளுமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. சீனாவின் வரலாற்றில் மாவோ சேதுங்குக்குப் பின்னர் மிகச் சக்திவாய்ந்த தலைவராக விளங்குகிறார். 69 வயதான ஸீ ஜின்பிங்,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.