உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26644 topics in this forum
-
2000 வருடங்கள் பழைமையான வெண்கலச் சிலைகள் கண்டுபிடிப்பு By DIGITAL DESK 3 09 NOV, 2022 | 04:29 PM 2,000 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட வெண்கலச் சிலைகள், வெந்நீர் ஊற்று ஒன்றின் சேற்றுக்குள்ளிருந்து தாம் கண்டுபிடித்துள்ளதாக இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். டஸ்கனி பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புதைந்திருந்த நிலையில், 24 வெண்கலச் சிலைகள் சேதமடையாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (08) தெரிவித்துள்ளனர். மேற்படி பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 5000 தங்க, வெள்ளி, வெண்கல நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை காணிக்கையாக செலுத்தப்பட்டவை என நம்பப்படுகிறது. …
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் - அவுஸ்திரேலிய நபருக்கு 129 வருட சிறைத்தண்டனை By RAJEEBAN 09 NOV, 2022 | 12:13 PM சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு அவுஸ்திரேலியா 129 வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. பிலிப்பைன்சில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஒருவருக்கே அவுஸ்திரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. துஸ்பிரயோகங்களில் ஈடுபடும் அனைவருக்கும் ஆள்கடத்தல் காரர்களிற்கும் இந்த தண்டனை உறுதியான செய்திகளை தெரிவிக்கும் என அரசதரப்பு வழக்குரைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். யுவதிகளை கடத்தி பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டிற்காக ஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவித்துவரு…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
கைப்பற்றப்பட்ட உக்ரேனிய நிலங்களை திருப்பி பெறுவதே முக்கிய நிபந்தனை என்கின்றது உக்ரைன் ! கைப்பற்றப்பட்ட உக்ரேனிய நிலங்கள் அனைத்தையும் திரும்பப் பெறுவதே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையின் முக்கிய நிபந்தனை என உக்ரைனின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார். உக்ரைனுகு நவீன வான் பாதுகாப்பு உபகரணங்கள், விமானங்கள், டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணை என்பன வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். பெப்ரவரி மாதம் பிற்பகுதியில் ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மேற்குலக நாடுகளிடம் இருந்து மேலதிக ஆயுதங்களுக்கு கிய்வ் பலமுறை அழைப்பு விடுத்துள்ளது. மேலும் உக்ரைன் ஜனாதிபதியின் முக்கிய நிபந்தனை உக்ரேனிய பிராந்திய ஒருமைப்பாட்…
-
- 13 replies
- 997 views
-
-
ஆஸ்திரேலியாவில் பூமிக்கு அடியில் வாழும் மக்கள் - ஏன் தெரியுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,கிளேர் ரிச்சர்ட்சன் பதவி,பிபிசி ஃப்யூச்சர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் கூபர் பெடி, ஆஸ்திரேலியாவின் ஒபல்(Opal) எனப்படும் தாதுக்கல் சுரங்கத் தொழிலின் மையமாக உள்ளது. இப்போது, அங்கு வசிப்பவர்களில் 60% பேர் நிலத்துக்கு அடியில் தான் வாழ்கின்றனர். மேலும், இந்த நகரம் வளம்குன்றா வாழ்க்கையைப் பொறுத்தவரை முன்னணியில் உள்ளது. கொப்புளிக்கும் வெப்பநிலையோடு, நாட்டின் தொலைதூரத்தில், எளிதில் அணுகமுடியாத வகையில் அமைந்துள்ளது. வழக்கமாக உள்ளூர் ஒபல் தாதுக்கல் சுரங்கங்களில் இருந்து மெல்லிய சிவ…
-
- 0 replies
- 330 views
- 1 follower
-
-
கோடீஸ்வரராக காட்டிக்கொண்டு மோசடி செய்த ஹஸ்பப்பிக்கு 11 வருட சிறை! அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு By DIGITAL DESK 3 08 NOV, 2022 | 03:06 PM தன்னை பெரும் கோடீஸ்வரராக, சமூகவலைத்தளங்களில் காட்டிக்கொண்டு, பலரிடம்மோசடி செய்த நைஜீரிய இன்ஸ்டாகிராம் பிரபலமான ஹஸ்பப்பி எனும் நபருக்கு அமெரிக்க நீதிமன்றமொன்று 11 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தனி ஜெட் விமானம், ஆடம்பர ரோல்ஸ் ரோய்ஸ் கார்கள், உல்லாச ஹோட்டல்களில் விடுதிகளில் விருந்து, விலை உயர்ந்த ஆடை அணிகலன்கள் என தனது ஆடம்பர வாழ்க்கையை, இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவு செய்து பிரபலமானவர் ஹஸ்பப்பி. நைஜிரியரான ஹஸ்பப்பி (Hushpuppi) ), மலேஷியா மற்றும் துபாயிலும் வசித்தார். …
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
இந்தியாவை மீண்டும் பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புடின் By DIGITAL DESK 5 08 NOV, 2022 | 11:00 AM இந்தியர்களை 'திறமையானவர்கள்' என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புகழ்ந்துள்ளார். மேலும் புடினின் உரையின் ரொய்ட்டர்ஸ் மொழிபெயர்ப்பின்படி, இந்தியா வளர்ச்சியின் அடிப்படையில் சிறந்த முடிவுகளை அடையும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார். நவம்பர் 4 ரஷ்ய ஐக்கிய தினத்தில் உரையாற்றும் போது, இந்தியாவுக்கு அதிக திறன் உள்ளது என்று ரஷ்ய ஜனாதிபதி பாராட்டியுள்ளார். இந்தியா அதன் வளர்ச்சியின் அடிப்படையில் சிறந்த முடிவுகளை அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை பில்லியன் மக்களுக்கு இது சாத்தியமாக அமையும…
-
- 2 replies
- 226 views
- 1 follower
-
-
குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்குமாறு இலோன் மஸ்க் சிபாரிசு By DIGITAL DESK 3 08 NOV, 2022 | 10:33 AM அமெரிக்காவில் இன்று நடைபெறும் தேர்தல்களில் குடியரசுக் கட்சியினருக்கு வாக்களிக்குமாறு தான் சிபாரிசு செய்வதாக டுவிட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளரும் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரருமான இலோன் மஸ்க் கூறியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற கீழ்சபையின் அனைத்து 435 உறுப்பினர்களும், 100 செனட் உறுப்பினர்களில் 35 பேரும் 39 மாநிலங்கள், பிராந்தியங்களின் ஆளுநர்களும் இத்தேர்தல்களில் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் நடுப்பகுதியில் இத்தேர்தல்கள் நடைபெறுவதால், இடைக்காலத் தேர்தல்கள் என இத்த…
-
- 2 replies
- 236 views
- 1 follower
-
-
கனேடிய தேர்தல்களில் சீனா தலையீடு : ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு By DIGITAL DESK 3 08 NOV, 2022 | 12:58 PM கனேடிய தேர்தல்களில் தலையீடு செய்வதற்கு சீனா முயற்சிப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருரோனா குற்றம் சுமத்தியுள்ளார். கனேடிய நிறுவனங்களை இலக்கு வைத்து, ஜனநாயகத்துடன் ஆக்ரோஷாமான விளையாட்டு நடத்துவதாக பிரதமர் ட்ரூடோ விமர்சித்துள்ளார். கனடாவில் அண்மைக்கால தேர்தல்களில் சீனாவின் ஆதரவு பெற்ற வலையமைப்பு ஒன்றை கனேடிய புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளதாக செய்தி வெளியானதையடுத்து பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ இவ்வாறு கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு கனடாவின் சமஷ்டி தேர்தல்களில் குறைந்தபட்சம் 11 பேர் சீனாவின் ஆதரவைப் பெற்றிரு…
-
- 11 replies
- 994 views
- 1 follower
-
-
சரிந்த சுரங்கம், காபி தூளை சாப்பிட்டு 9 நாட்களாக உயிரைப் பிடித்திருந்த தொழிலாளர்கள் - எங்கே? பென் டொபையாஸ் பிபிசி நியூஸ் 7 நவம்பர் 2022 பட மூலாதாரம்,NEWS1 தென் கொரியாவில் இடிந்து விழுந்த துத்தநாக சுரங்கத்தில் ஒன்பது நாட்களாகச் சிக்கி, காபி பவுடரைச் சாப்பிட்டு உயிர் பிழைத்துக் கொண்டிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். 62, 56 வயதுடைய ஆண்கள், நெருப்பு மூட்டி, நெகிழியால் கூடாரம் அமைத்து வெப்பத்தைத் தக்க வைத்து இருந்ததாக நம்பப்படுகிறது. அவர்களுடைய உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் தலைநகர் சியோலில் ஏற்பட்ட நெரிச…
-
- 1 reply
- 476 views
- 1 follower
-
-
ரஷ்யாவிற்கு இரகசியமாக ஆயுதங்களை அனுப்புவதாக கூறும் அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரித்தது வடகொரியா! உக்ரைனில் நடந்த போருக்காக ரஷ்யாவிற்கு இரகசியமாக ஆயுதங்களை அனுப்புவதாக அமெரிக்கா கூறியதை வட கொரியா நிராகரித்துள்ளது. ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்கவில்லை என்றும் அவ்வாறு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது. வட கொரியா ரஷ்யாவிற்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பீரங்கி குண்டுகளை வழங்குவதாக அமெரிக்காவிடம் தகவல் இருப்பதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி கடந்த வாரம் கூறியதை அடுத்து, அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ.இன் இந்த அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) வந்துள்ளது. …
-
- 3 replies
- 611 views
-
-
துட்டன்காமூன் மட்டுமே தனது ஆட்சிக்கு அப்பால், தனது நாட்டைப் பாதுகாத்து கவனித்துக்கொண்ட ஒரே பார்வோ மன்னன். துட்டன்காமூன் மட்டுமே தனது ஆட்சிக்கு அப்பால், தனது நாட்டைப் பாதுகாத்து கவனித்துக்கொண்ட ஒரே பார்வோ மன்னன்., ஏனெனில் அவர் தொடர்ந்து கொடையளிப்பவராக இருந்தார். 2022 துட்டன்காமுனின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இவை அனைத்தும் 1922ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதிதான் தொடங்கியது. எகிப்தின் லக்சரில் உள்ள கிங்ஸ் பள்ளத்தாக்கில் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹோவர்ட் கார்ட்டர் மற்றும் அவரது குழுவினருக்கு தண்ணீர் எடுக்கும்போது ஒரு சிறுவன் கல் தடுக்கி விழுந்தான். அந்த செயல்தான், கார்ட்டர் மற்றும் அவரது த…
-
- 0 replies
- 432 views
- 1 follower
-
-
எண்ணெய் திருட்டு விவகாரம் - கப்பலை விசாரணைக்கு உட்படுத்துகின்றது நைஜீரியா – 8 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் By RAJEEBAN 07 NOV, 2022 | 10:18 AM இலங்கை பணியாளர்கள் உட்பட பலர் சம்பந்தப்பட்ட கப்பல் விவகாரம் குறித்து நைஜீரியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. எண்ணெய் திருட்டில் ஈடுபட்டதாக ஈக்குவடோரியல் கினியாவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பல் தொடர்பிலேயே நைஜீரியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஹெரோய்க் எடன் என்ற பாரிய எண்ணெய்கப்பலில் 8 இலங்கையர்கள் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நைஜீரியாவில் எண்ணெய் திருட்டில் ஈடுபட்டதாக குறிப்பிட்ட கப்பலை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக ஈக்குவடோரியல் கினியா விசாரணைகளை …
-
- 0 replies
- 422 views
- 1 follower
-
-
23000 கிலோ எடையுடைய சீனாவின் ரொக்கெட் பசிபிக் கடலில் விழுந்தது By DIGITAL DESK 2 07 NOV, 2022 | 10:26 AM சீனாவின் கட்டுபாட்டை இழந்த 23 தொன் ரொக்கெட்டின் உதிரிப்பாகங்கள் பூமியின் பசிபிக் கடலில் விழுந்துள்ளது. சீனா விண்வெளியில் தனக்கு என்று விண்வெளி ஆராய்ச்சி கூடத்தைக் கட்டி வருகிறது. இந்த நிலையில் அதற்காக மெங்க்டியன் என்ற கடைசி தொகுதி பூமியில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி ரொக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. அதற்கு லாங் மார்ச் 5பி என்று பெயர் சூட்டப்பட்டது. தானாக தரையிறங்கும் இயக்கம் சரியாக வடிவமைக்கப்படாததால் லாங் மார்ச் 5பி (Long March 5B )கட்டுப்பாட்டை இழந்து பூமியில் விண்வெளி பாதையில் நுழைந்தது…
-
- 1 reply
- 278 views
- 1 follower
-
-
தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் 2 மகன்களும் அவுஸ்திரேலியாவில் சடலங்களாக மீட்பு 07 NOV, 2022 | 07:59 AM அவுஸ்திரேலியாவின் கன்பராவில் அமைந்துள்ள குளம் ஒன்றிலிருந்து தமிழ் குடும்பத்தை சேர்ந்த தாயும் இரு மகன்மாரும் சலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் சனிக்கிழமை (5) காலையில் தாயினதும் ஒரு மகனினதும் சடலங்கள் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், மற்றைய மகனான பிரணவ் விவேகானந்தன் என்பவர் காணாமல் போன நிலையில் அவுஸ்திரேலிய பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பின்னர் காணாமல் போயிருந்த மற்றைய மகனினது சடலமும் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இறப…
-
- 2 replies
- 814 views
- 1 follower
-
-
இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான அவசரத் தேவை எழுந்துள்ளதாக ஜப்பான் அறிவிப்பு! ஜப்பானுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், அந்நாட்டு இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான, அவசரத் தேவை எழுந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார். வடகொரியாவின் தொடர்ச்சியான அணு ஆயுத ஏவுகணை சோதனை முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உள்ளிட்டவற்றின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜப்பானின் டோக்கியோவுக்கு தென்மேற்கே உள்ள சாகாமி வளைகுடாவில் ‘சர்வதேச கடற்படை திறனாய்வு’ என்ற பெயரில் நடைபெற்ற கடற்படை கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு க…
-
- 0 replies
- 140 views
-
-
அடுத்த ஆண்டு மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு பொது விடுமுறை: பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு! அடுத்த ஆண்டு மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவைக் கொண்டாட ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை அளிக்கப்படும் என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து மே 8ஆம் திகதி திங்கட்கிழமை வங்கி விடுமுறை வரும் என்று சுனக் கூறினார். 73 வயதான சார்லஸ், தனது தாயார் இரண்டாம் எலிசபெத் இறந்தவுடன் தானாகவே மன்னரானார். சில நாட்களுக்குப் பிறகு, செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் நடந்த விழாவில் அவர் ஐக்கிய இராச்சியத்தின் புதிய மன்னராக முறையாக உறுதிப்படுத்தப்பட்டார். 1953ஆம் ஆண்…
-
- 0 replies
- 383 views
-
-
ஏரியில் விழுந்து நொருங்கிய பயணிகள் விமானம்..! டான்சானியாவில் அதிர்ச்சி சம்பவம்! டான்சானியா நாட்டில் பயணிகளை ஏற்றி சென்ற உள்நாட்டு விமானம் ஒன்று ஏரியில் விழுந்து மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டான்சானியாவில் சுமார் 40 பயணிகள் மற்றும் விமானிகளுடன் புறப்பட்ட ப்ரெசிஷன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான உள்நாட்டு விமானம் ஒன்று புகோபா விமான நிலையம் நோக்கி புறப்பட்டது. இன்று காலை புகோபா விமான நிலையத்தை நெருங்கியிருந்த நிலையில் விமான நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாக விக்டோரியா ஏரியில் விழுந்தது. …
-
- 1 reply
- 291 views
- 1 follower
-
-
ரஷ்யாவுக்கு ட்ரோன்களை விநியோகித்ததாக ஈரான் ஒப்புதல் By DIGITAL DESK 3 05 NOV, 2022 | 06:51 PM ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) தான் அனுப்பியதாக ஈரான் முதல் தடவையாக இன்று ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், யுக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு முன்னரே அவை அனுப்பப்பட்டவை என ஈரான் கூறியுள்ளது. யுக்ரைன் யுத்தத்துக்கு பல மாதங்களுக்கு முன்னர், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஆளில்லா விhமனங்களை ரஷ்யாவுக்கு நாம் விநியோகித்தோம் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைய்ன் அமீர் அப்தோலாஹியன் கூறினார் என ஈரானின் ஐ.ஆர்.என்.ஏ. செய்திச் சேவை தெரிவித்தது. ஈரானில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தியதாக யுக்ரைனும் அதன் மேற்கு…
-
- 3 replies
- 827 views
- 1 follower
-
-
கடினமான காலங்களில் ஒன்றிணைந்து செயற்பட சீனா- ஜேர்மனி உறுதி! மூன்று ஆண்டுகளில் முதல்முறையாக ஜி7 நாடுகளின் தலைவர் ஒருவரின் முதல் பயணத்தின் போது ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை சந்தித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், நேருக்கு நேர் சந்திப்பின் போது, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், உலக அமைதிக்காக மாற்றம் மற்றும் கடினமான காலங்களில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என உறுதி பூண்டனர். பதற்றமான காலங்களில் இரு தலைவர்களும் நேரில் சந்திப்பது நல்லது எனவும் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கிற்கு சிக்கல்களை உருவாக்குகிறது என்றும் இதன்போது ஷோல்ஸ் ஸிக்கு தெரிவித்தார்.…
-
- 12 replies
- 1k views
- 1 follower
-
-
கனடாவில் அதிகரித்து வரும் குரங்கம்மை நோய் By T. SARANYA 05 NOV, 2022 | 10:32 AM கனடாவில் மொத்தம் 1,444 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒட்டாவா, கனடாவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 9 பேருக்கு மட்டுமே புதிதாக பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தன. இந்த பாதிப்பு அதிகரிப்பும் தொடர்ந்து குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில், திடீரென தொற்று எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. இதன்படி, கனடாவில் மொத்தம் 1,444 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சிகிச்சைக்காகi வைத்தியசாலையில் சேர்ந்துள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 42 ஆக உ…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
சீனாவில் பணியாற்றிய அமெரிக்க விமானப்படையின் முன்னாள் விமானவோட்டி அவுஸ்திரேலியாவில் கைது By RAJEEBAN 04 NOV, 2022 | 12:46 PM சீனாவில் பணியாற்றிய அமெரிக்க விமானப்படையின் முன்னாள் விமானியொருவர் அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க மரைன் படைப்பிரிவிற்காக பணியாற்றிய டக்கன் (54) ஒக்டோபர் 21 ம் திகதி அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சீனா மேற்குலகின் ஓய்வுபெற்ற விமானவோட்டிகளை வேலைக்கு சேர்த்துக்கொள்வது குறித்து பிரிட்டன் எச்சரிக்கை விடுத்த அதேதினத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் வேண்டுகோளை தொடர்ந்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தகவல்…
-
- 0 replies
- 443 views
- 1 follower
-
-
பஹ்ரெய்னில் பாப்பரசர் பிரான்சிஸ் By DIGITAL DESK 3 04 NOV, 2022 | 02:12 PM பஹ்ரெனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ், பஹ்ரெய்ன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபாவை சந்தித்து கலந்துரையாடினார். பாப்பரசர் பிரான்சிஸ் 4 நாள் விஜயம் மேற்கொண்டுநேற்று வியாழக்கிழமை பிற்பகல் பஹ்ரெய்னை சென்றடைந்தார். மத்திய கிழக்கு நாடான பஹ்ரெய்னுக்கு பாப்பரசர் ஒருவர் விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும். ஷாகீர் றோயல் அரண்மனையில், கலந்துரையாடலுக்கான பஹ்ரெய்ன் மன்றத்தின் நிகழ்விலும் பாப்பரசர் இன்று பங்குபற்றினார். பஹ்ரெய்ன் மன்னர் ஹமத் பின் இஸா அல் கலீபா, முடிக்குரிய இளவரசர் சல்மான் பின் …
-
- 0 replies
- 440 views
- 1 follower
-
-
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானை உயிரிழப்பு By T. SARANYA 04 NOV, 2022 | 03:42 PM ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானை என்ற பெருமை கென்யாவில் உள்ள டிடா என்ற யானையை உயிரிழந்துள்ளது. நைரோபி, உலகில் சுமார் 50 ஆயிரம் யானைகள் உள்ளன. அவற்றில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக ஆப்பிரிக்காவில் உள்ளன. யானைகளை அழிவில் இருந்து காக்க பல்வேறு நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனிடையே, ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானை என்ற பெருமை கென்யாவில் உள்ள டிடா என்ற யானை கொண்டிருந்தது. 60 முதல் 65 வயது கொண்ட இந்த யானை கென்யாவின் டிசவோ கிழக்கு தேசிய பூங்காவில் வாழ்ந்து வந்தது. இந்நிலையில், வயது ம…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
புட்டின் வந்தால் நான் வரமாட்டேன்: உக்ரேன் ஜனாதிபதி இந்தோனேசியாலில் நடைபெறவுள்ள ‘ஜி20’ அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு தனது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அந்த மாநாட்டு வருகைதருவாராயின் தான் வரமாட்டேன் என்று அறிவித்துள்ளார். ‘ஜி20’ அரச தலைவர்கள் மாநாடு, எதிர்வரும் 15, 16 ஆம் திகதிகளில் இந்தோனேசியாவின் ஜனாதிபதி யோகோ விடோடோவின் தலைமையில் இந்தோனேசியாவில் நடைபெறவுள்ளது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/படடன-வநதல-நன-வரமடடன-உகரன-ஜனதபத/50-306837
-
- 6 replies
- 763 views
-
-
மசகு எண்ணெய் விலை மேலும் குறைந்தது 04 NOV, 2022 | 11:28 AM உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மேலும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் எரிபொருள் கேள்வி குறைந்ததாலும் அமெரிக்காவில் வட்டி விகிதம் மீண்டும் உயரும் என்ற யூகத்தாலும் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 94.45 டொலர் வரை குறைந்துள்ளது. https://www.virakesari.lk/article/139098
-
- 0 replies
- 264 views
- 1 follower
-