உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
Published By: RAJEEBAN 17 MAY, 2023 | 11:01 AM மெல்பேர்னின் மேற்குபகுதியில் இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்தில் சிக்கிய மாணவர்களின் அவயங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட பேருந்தின் மீது பின்னால் வந்த டிரக்மோதியது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எக்ஸ்போர்ட் ஆரம்ப பாடசாலையிலிருந்து 45 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்த பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.சந்தியில் வலதுபுறம் திரும்பும்போது பின்னால் வந்த டிரக் மோதியதில் பேருந்து கவிழந்ததில் மாணவர்கள் பலர் கடும் காயங்களிற்குள்ளானார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டிரக்சாரதிக்கு எதிராக நான்க…
-
- 0 replies
- 655 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவை நோக்கி படகில் வந்துகொண்டிருந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் 85 பேர் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் இப்படகை பெப்ரவரி 19 ஆம் நாளில் இருந்து அவதானித்து வந்ததாகவும் இவர்கள் பயணம் செய்த படகு, கடற்பயணத்துக்கு உகந்தது அல்ல என்று அறிந்தவுடன், பெப்ரவரி 20 ஆம் நாள் அதிகாலை வேளையில் படகை வழிமறித்த கடற்படைப் படையினர், அவர்களை அப்படகில் இருந்து தமது கடற்படைக் கலத்துக்கு மாற்றியதாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஹெவின் அன்ட்ரூஸ் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும்…
-
- 4 replies
- 1.3k views
-
-
அவுஸ்திரேலியாவை புரட்டிப் போட்ட புழுதிப் புயல் அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் நேற்று கடுமையான புழுதிப் புயல் வீசியுள்ளது. சுமார் 500 கிலோ மீற்றர் பரப்பளவுக்கு வீசிய இந்தப் புயலில் சிட்னி முதல் பல நகரங்கள் பாதிக்கப்பட்டதுடன், வானமும் செம்மஞ்சள் நிறமாக மாறிக் காணப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், அந்த நாடு கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், இந்தப் புழுதிப்புயல் வீசியதால் வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் விமானப் போக்குவரத்தும் பாதிப்படைந்தன. குறித்த புயலில் சிக்குண்டோர் சுவாசிப்பதில் சிரமத்தினை எதிர்கொண்டதுடன் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள், பொதுமக்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோள் வி…
-
- 1 reply
- 658 views
-
-
அவுஸ்த்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபல உணவு விடுதியொன்றினுள் புகுந்துகொண்டுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளான ஐஸிஸ் குழுவினர், அங்கேயிருந்த மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதுடன், வெளியிலிருந்து பொலிஸார் நடத்தவிருக்கும் எந்தவிதமான தாக்குதல்களையும் தடுப்பதற்காக பணயக்கைதிகளை கண்ணாடி யன்னல்களின் முன்னால் கைகளை உயர்த்தியபடி நிற்க வைத்திருக்கிறார்கள். யன்னல் ஒன்றின் முன்னால், "அல்லாவே ஒரே கடவுள், வெறொருவரில்லை" என்கிற இஸ்லாமிய அடிப்படைவாதப் பதாதையும் தொங்கவிடப்பட்டிருக்கிறது. சிட்னியின் பிரபல சனநடமாட்டம் மிகுந்த மார்ட்டீன் பிளேஸ் எனும் பகுதியில் அமைந்திருந்த இந்த உணவகத்தினுள் காலை 10 மணிக்குச் சற்றுமுண்ணர் நுழைந்த பயங்கரவாதிகள் இந்த பணயக்கைத்திகளை…
-
- 35 replies
- 2.8k views
-
-
அவுஸ்த்திரேலியாவை உலுக்கிய இரு தமிழர்களின் வங்கிக் காசட்டை மோசடி இலங்கையைப் பிறப்பிடமாகவும் இங்கிலாந்து மற்றும் கணடாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டு சர்வதேச அளவில் வங்கிக் கடனட்டை மோசடிகள் பலவற்றில் ஈடுபட்டு வந்த இரு தமிழர்களை அவுஸ்த்திரேலியப் போலிசார் அண்மையில் கைது செய்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த 36 வயதுடைய இளங்கோவன் கணேஷமூர்த்தி மற்றும் கணடாவைச் சேர்ந்த 31 வயதுடைய ருக்ஷாந் செல்வராஜா ஆகிய இருவருமே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டவர்களாவர். மேற்கு அவுஸ்த்திரேலிய மாநிலமான பேர்த்திலுள்ள சுமார் 20 இற்கும் மேற்பட்ட மக்டொனால்ட் உணவு விடுதிகளில் "டிரைவ் இன்" பகுதியால் உள்நுழைந்து பணியாளர் வேறு வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் தறுணத்தைப் பார்த…
-
- 9 replies
- 3.2k views
-
-
அவுஸ்ரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைமையகத்தில் பொலிஸார் தீவிர சோதனை! அவுஸ்ரேலிய பொது ஊடக நிறுவனமான அவுஸ்திரேலிய ஒலி/ஔிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் அந்த நாட்டின் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். நீதிமன்ற சோதனை ஆணையுடன் அவர்கள் இந்த சோதனையை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரண்டு ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி பணிப்பாளர் ஆகியோரின் பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் அவுஸ்ரேலிய படையினர் முறையற்ற வகையில் நடந்துக் கொண்டமை தொடர்பாக வெளியாக்கப்பட்ட செய்திகள் தொடர்பில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இன்று காலை அவுஸ்ரேலிய பொலிஸார் பெண் செய்திய…
-
- 0 replies
- 489 views
-
-
அவுஸ்ரேலிய காட்டுத்தீயில் 60,000 கோலா கரடிகள் உயிரிழப்பு! அவுஸ்ரேலியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஏற்பட்ட காட்டுத் தீயில் 60,000 கோலா கரடிகள் உயிரிழந்துள்ளதாக உலகளாவிய நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலகளாவிய நிதி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அவுஸ்ரேலியாவின் கிழக்குப் பகுதியில் காடுகள் அடர்ந்த 10 மில்லியன் ஹெக்டேர் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் காட்டுத் தீ பரவியது. இதில் 2,000 வீடுகள் எரிந்தன. 28 பேர் இறந்தனர். இந்த காட்டுத் தீயில் அரிய வகை விலங்குகள் உட்பட லட்சக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழந்தன. தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் காட்டுத் தீ பற்றி எரிந்தது. இதில் 3 பில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் உயிரிழந்தன. கோலா கரடி…
-
- 0 replies
- 377 views
-
-
அவுஸ்ரேலிய பிரதமராக... அந்தனி அல்பனிஸ், தெரிவு. நேற்று இடம்பெற்ற அவுஸ்ரேலிய பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று தொழில் கட்சி சார்பில் போட்டியிட்ட அந்தனி அல்பனிஸ் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர் தொழில் கட்சியில் இருந்து அவுஸ்ரேலியாவின் பிரதமராக ஒருவர் தெரிவாகியுள்ளார். இந்த தேர்தலில் லிபரல் கட்சி தலைவர் ஸ்கொட் மொரிசன் மற்றும் தொழில் கட்சி தலைவர் அந்தனி ஆல்பனிஸ் ஆகியோருக்கு இடையில் போட்டி நிலவியிருந்தது. அவுஸ்ரேலியாவில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மொத்த 151 உறுப்பினர் இடங்களில் 76 இனை கைப்பற்ற வேண்டியது அவசியமாகும். தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அந்தனி அல்பானிஸ் தலைமையிலான தொழில் கட்சி 72 இடங்களை கைப்பற்…
-
- 29 replies
- 2.9k views
- 1 follower
-
-
அவுஸ்திரேலிய விமானமான காண்ட்டாஸ் விமானத்தில் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து மெல்போர்ன் நோக்கிப் பயணித்த அவுஸ்திரேலியப் பெண்மணியொருவர் உணவுப் பொட்டலத்தில் உயிர்ப்புழுக்கள் இருந்தது கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். கடந்த வியாழனன்று காண்ட்டாஸ் விமானத்தில் பயணித்த அப்பெண், இருக்கை விளக்கை ஒளிரச் செய்யாமலேயே தனக்கு அளிக்கப்பட்ட உலர்பழங்கள், பருப்புகள் கொண்ட உணவுப்பொட்டலத்தை பிரித்து உண்ணத் தொடங்கியுள்ளார். "முதலில் சுவை வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன்; உடனடியாக விளக்கை ஒளிரச் செய்து பார்த்தேன், பொட்டலம் முழுதும் லார்வா எனப்படும் கூட்டுப்புழுக்களைக் கண்டு அதிர்ந்தேன்" என்கிறார் 42 வயதான விக்டோரியா க்ளெவன் என்கிற அப்பெண்மணி "தூக்கிவாரிப் போட்டது; பேச முடியவில்லை. அதிர…
-
- 4 replies
- 533 views
-
-
அவுஸ்ரேலியப் பத்திரிகையாளர் சீனாவில் கைது! சீன அரச தொலைக்காட்சியின் தொகுப்பாளராகப் பணியாற்றிய அவுஸ்ரேலியப் பத்திரிகையாளர் செங் லீ, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அரச இரகசியங்களை வழங்கியதற்காக சட்ட ரீதியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். செங் லீ சீனாவில் தடுத்து வைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், விசாரணைக்காக சந்தேகத்தின் பேரில் சீன அரசாங்கம் முறையாகக் கைதுசெய்துள்ளது. கடந்த ஆண்டு ஓகஸ்ட்டில் செங் லீ, ஒரு வகையான தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதுடன் இந்தக் காவல், வழக்கறிஞர்களை அணுகுவதற்கான வாய்ப்பை மறுத்து ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைத்து விசாரிக்க சீனக் காவல்துறையை அனுமதிக்கிறது. இதேவேளை, செங் லீயை முறையாகக் கைதுசெய்வது குறித்து கடந்த வார இ…
-
- 0 replies
- 520 views
-
-
அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் பொப் ஹோக் காலமானார் அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் தொழிற்கட்சித் தலைவர் பொப் ஹோக் தனது 89ஆவது வயதில் காலமானார். முன்னாள் பிரதமர் தனது வீட்டில் இயற்கை மரணம் அடைந்ததாக அவரது மனைவி இன்று (வியாழக்கிழமை) ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அவரது மரணத்தை அடுத்து அரசியல் தலைவர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பொருளாதாரம் நவீனமயமாக்கப்பட்ட சீர்திருத்தங்களைக் கொண்டு 1983 முதல் 1991 வரை நாட்டை அவர் வழி நடத்தியிருந்தார். மேலும் அவர் அவுஸ்ரேலியாவின் மத்திய-இடது தொழிற்கட்சி சார்பாக நீண்ட காலமாக பிரதமராக பணியாற்றியிருந்தார். 1947ஆம் ஆண்டில் தொழிற்கட்சியில் இணைந்த அவர் 1953இல் ஒக்ஸ்ஃபோ…
-
- 0 replies
- 467 views
-
-
அவுஸ்ரேலியாவில் "ஸ்ட்ரோபெரி" பழங்களில் ஊசி – பெண்ணொருவர் கைது அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் ஸ்ட்ரோபெரி பழங்களில் ஊசிகள் இருந்த சம்பவம் தொடர்பாக பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு நீண்ட, கடினமான விசாரணைக்கு பின்னர் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் ஸ்ட்ரோபெரி பழங்களில் ஊசி இருப்பது கண்டறிப்பட்டமை அவுஸ்ரேலியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து நாடளாவிய ரீதியாக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டது. ஸ்ட்ரோபெரி பழங்களில் ஊசி இருப்பதாக சுமார் 100 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் அதில் சில போலியானவை என்பதுடன், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற…
-
- 0 replies
- 680 views
-
-
அவுஸ்ரேலியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் மழை: காட்டுத் தீ அணைந்தது! அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் மழை பெய்துள்ளதால், வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ஏற்பட்டிருந்த காட்டுத்தீ அணைந்துள்ளது. சிட்னி நகரில் கடந்த 4 நாட்களில் 391.6 மி.மீ. மழை பெய்துள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால், கடந்த மாதங்களாக காட்டுத்தீயினால் கடும் இழப்புகளை சந்தித்து வந்த மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக, நியூ சௌத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் மோரிஸ் கூறுகையில், ”அவுஸ்ரேலியாவின் 30 இடங்களில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது. எதிர்வரும் நாட்களில் …
-
- 0 replies
- 349 views
-
-
அவுஸ்ரேலியாவில் ஐந்து மில்லியன் மக்கள் ஆறு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை! கொரோனா வைரஸுக்கு (கொவிட்-19) எதிரான அவுஸ்ரேலியாவின் போராட்டத்தின் அடுத்த கட்டம், தொடங்கியுள்ளது. ஆம்! மெல்பேர்ன், மார்னிங்டன் தீபகற்பம் மற்றும் மிட்செல் ஷைர் முழுவதும் ஐந்து மில்லியன் மக்கள் அத்தியாவசிய காரணங்களைத் தவிர்த்து, அடுத்த ஆறு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் எங்கும் சோதனைச் சாவடிகள் அமைத்து, நகரத்தை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்படுமென பொலிஸார் கூறுகின்றனர். விக்டோரியா மாநிலத்தில் 191 புதிய நோய்த்தொற்றுகள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை முடக்கநிலை அறிவிக்கப்பட்டது. இது தொற்றுநோய் தொடங்கியதிலிர…
-
- 3 replies
- 682 views
-
-
அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி பிரயோகம் : நால்வர் உயிரிழப்பு அவுஸ்ரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். அவுஸ்ரேலியாவின் டார்வின் பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐரோப்பியர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/அவுஸ்ரேலிய-துப்பாக்கி-பி/
-
- 0 replies
- 419 views
-
-
அவுஸ்ரேலியாவில் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயங்கர மழை பெய்துள்ளது. இதனால் சிட்னி நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அவுஸ்ரேலியாவில் கடந்த 2007ம் ஆண்டு கன மழை பெய்தது. சூறாவளி காற்றில் மரங்கள் சாய்ந்தன. தகவல் தொடர்பு ஒயர்கள் அறுந்தன. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன்பின், நேற்று பயங்கர சூறாவளி காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இதில் நியூ சவுத் வேல்ஸ் பகுதி முழுவதும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. சிட்னி நகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக உள்ளது. பெரிய பெரிய டிராக்டர்கள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சிட்னியில் மட்டும் 4.7 அங்குலம் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். கன மழை காரணமாக பஸ், ரயில் ப…
-
- 2 replies
- 537 views
-
-
அவுஸ்ரேலியாவில் பற்றியெரியும் நிலக்கரிச் சுரங்கம்! – நகர மக்களை வெளியேற உத்தரவு. [saturday, 2014-03-01 20:45:59] அவுஸ்ரேலியாவின் மோர்வெல் நகர மக்களை ஊரை விட்டு வெளியேறி விடுமாறு அந்நாட்டு அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. அந்நகரம் அருகே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள தீயால், அப்பகுதி முழுவதுமே புகை சூழ்ந்துள்ளது. இதனால் பெரும்பாலான மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நகரில் உள்ள சுமார் 14 ஆயிரம் பேரும் அங்கிருந்து வெளியேற அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. மெல்போர்ன் நகரின் கிழக்கே லாட்ரோபி வேலி பகுதியில் இந்த இடம் அமைந்துள்ளது. இது தொடர்பாக அவுஸ்ரேலிய அரசு மேலும் கூறியிருப்பதாவது: சுரங்கத்தில் பற்றியுள்ள தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடு…
-
- 0 replies
- 347 views
-
-
அவுஸ்ரேலியாவில் காட்டுத்தீ மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.விக்டோரியா மற்றும் தென் அவுஸ்ரேலியா மாநிலங்களில் ஆபத்து. http://www.sbs.com.au/news/article/1158402/'Safer-places'-designated-as-fires-
-
- 1 reply
- 830 views
-
-
அவுஸ்ரேலியாவில் மீண்டும் கொரோனா தொற்று: அடுத்த 24 மணிநேரம் மிகவும் சிக்கலானது!! அவுஸ்ரேலியாவில் மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியமானதாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. விக்டோரியா மாநிலத்தில் இன்று புதன்கிழமை Cகொரோனா தொற்றின் புதிய கொத்து மூன்று நாட்களில் 15 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுஸ்ரேலிய கால்பந்து லீக் போட்டியில் கலந்து கொண்ட சுமார் 23,400 பேரில் ஒருவருக்கு தொற்று உறுதியாகிய நிலையில் ஆயிரக்கணக்கான இரசிகர்களை சுய தனிமைப்படுத்தபட்டுள்ளனர். இதேவேளை நகரில் உள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற உட்புற இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்ட நிலையில் …
-
- 0 replies
- 333 views
-
-
அவுஸ்ரேலியாவில் விமான விபத்து! – 5 பேர் பலி. [saturday, 2014-03-22 17:55:42] அவுஸ்ரேலியாவின் குயின்லாந்து மகாணத்தில் உள்ள பிரிஸ்பேன் அருகே செஸன்னா 206 என்ற விமானம் ஸ்கைடிரைவ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது., பின்னர் கபூல்சர் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் பயணம் செய்த 5 பேர் பலியாயினர். இந்த விபத்து காரணமாக கபூல்சர் விமானநிலையம் உடனடியாக மூடப்பட்டது. விமானத்தில் இருந்து தீயை அணைத்த அதிகாரிகள் உயிரிந்த 5 பேரின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். http://www.seithy.com/breifNews.php?newsID=106242&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 488 views
-
-
அவுஸ்ரேலியாவில்... தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு, சில கட்டுப்பாடுகள்! அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் முடக்க நிலை முடிவுக்கு வரும்போது தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாத நடுப்பகுதியிலிருந்து சிட்னியில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் சமூக ஒன்றுகூடல்கள் சிலவற்றில் கலந்துகொள்ள முடியாது என நியூ சவுத் வேல்ஸ் மாநில முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் டிசம்பரிலிருந்து கடைகள், உணவகங்கள், பொழுதுபோக்கு இடங்கள் போன்றவற்றில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். https://athavanne…
-
- 0 replies
- 335 views
-
-
அவுஸ்ரேலியாவை கண்டுபிடித்தவரின் கல்லறை லண்டனில் கண்டுபிடிப்பு! அவுஸ்ரேலிய கண்டத்தினை முதன்முதலில் கண்டுபிடித்தவரின் கல்லறை லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லண்டனின் யூஸ்டன் (Euston) ரயில் நிலையத்திற்கு அருகே இந்த கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவுஸ்ரேலிய கண்டத்தினை முதன்முதலில் கண்டுபிடித்த பிரித்தானிய கடற்படைத் தளபதியான மத்யூ ஃப்ளிண்டர்ஸ் (Matthew Flinders) இன் கல்லறையே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் 1814ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி அடக்கம் செய்யப்பட்டிருந்தார். இறப்பதற்கு முன்னர் அவர் அவுஸ்ரேலியாவில் 1802ஆம் ஆண்டு முதல் 1803ஆம் ஆண்டுவரை பல்வேறு ஆய்வுகளையும் முன்னெடுத்திருந்தார். பிரித்தானிய கடற்ப…
-
- 3 replies
- 776 views
-
-
அவுஸ்விட்ச் மரண முகாமிலிருந்த நாஜிக்களின் பெயர்கள் வெளியீடு ஜெர்மனி ஆக்கிரமித்திருந்த போலந்தில் அவுஸ்விட்ச் மரண முகாமிலிருந்த நாஜி தளபதிகள் மற்றும் பாதுகாவலர்களின் மிகவும் விரிவான பட்டியலை போலாந்தின் தேசிய நினைவு நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. அவுஸ்விட்ச் மரண முகாமிலிருந்த நாஜிக்களின் பெயர்கள் வெளியீடு அவுஸ்விட்ச் ராணுவ முகாம் பட்டியலில் சுமார் 9,000 பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில், சிலவற்றில் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவுஸ்விட்ச் ஒரு போலாந்தின் முகாம் என்ற பொய்யை எதிர்த்து இந்த பட்டியல் போராடும் என்று நிறுவனத்தின் தலைவர் யரோஸ்வாஃப் ஸரேக் கருத்து தெரிவித்துள்ளார். அவுஸ்வி…
-
- 3 replies
- 459 views
-
-
அஸர்பைஜான் – ஆர்மீனியா மோதல்: ரஷ்யா எச்சரிக்கை அஸர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவுக்கு இடையே மீண்டும் போர் தொடர்வதால் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. இருநாடுகளுக்கும் நடுவே உள்ள நாகோர்னோ, காரபாக் பகுதிக்காக இரு நாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு அமைதி உடன்படிக்கை ஏற்பட்ட போதிலும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருவதால் போர் மீண்டும் தொடர்ந்து வருகிறது. அஜர்பைஜான் படைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் குடியேற்றங்கள் மீது ஷெல் தாக்குதல் மேற்கொண்டதாக ஆர்மீனியா குற்றம் சாட்டியது. அதேநேரம், அஸர்பைஜான் படைகள் இரவில் அஸ்கெரான் மற்றும் மார்டூனியில் குடியேற்றங்கள் மீது பீரங்கிகளை வீசியதாக நாகோர்னோ-கராபாக் அதிகாரிகள் தெரிவிக்க…
-
- 0 replies
- 579 views
-
-
அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பயன்படுத்த போவதில்லை என டென்மார்க் அறிவிப்பு அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பயன்படுத்த போவதில்லை என டென்மார்க் அறிவித்துள்ளது. அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 40 ஆயிரம் பேரில் ஒருவருக்கு மோசமான பக்க விளைவுகள் ஏற்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக டென்மார்க் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேநேரம், தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்களுக்கு ரத்த உறைதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், தடுப்பூசி குறித்து அந்தந்த நாடுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என ஐரோப்பிய ஒன்றிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1209911
-
- 0 replies
- 208 views
-