Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உக்ரைனில்... புட்டின், இனப்படுகொலையை நடத்துகின்றார்... என அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம் உக்ரைனில் சர்வாதிகாரியான விளாடிமிர் புடின் இனப்படுகொலையை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன்முறையாக தெரிவித்துள்ளார். மேலும் உக்ரேனியனாக இருக்க முடியும் என்ற எண்ணத்தை புடின் துடைக்க முயற்சிக்கிறார் என்பதும் தெளிவாகின்றது என ஜோ பைடன் குறிப்பிட்டார். அத்தோடு உக்ரைனில் ரஷ்யர்கள் செய்த கொடூரமான விடயங்கள் குறித்து இன்னும் பல சான்றுகள் வெளிவருவதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த சான்றுகள் தொடர்பாக ஆராய சர்வதேச வழக்கறிஞர்களிடம் வழங்குவோம் என்றும் ஆனால் படுகொலை என்பது தனக்கு உறுதியாக தோன்றுவதாகவும் பைடன் குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1…

  2. தென்னாபிரிக்காவில் வெள்ளத்தில் சிக்கி 60 பேர் பலி : 70 ஆண்டுகால இந்து கோயில் சேதம் தென்னாபிரிக்கா நாட்டின் டர்பன் மாகாணம் குவாஹுலு-நடாலா நகரில் (10) ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பெய்த கனமழையால் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். பல வீடுகள் சேதமடைந்தன. வீதிகள் துண்டிக்கப்பட்டன. இதற்கிடையே வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். மாயமான பலரை த…

  3. யுக்ரேன் போரிலிருந்து தப்பித்து இந்திய காதலனை கரம்பிடித்த பெண் - நெகிழ்ச்சியான காதல் கதை கீதா பாண்டே பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANUBHAV BHASIN படக்குறிப்பு, அனா - அனுபவ் திருமணத்தின்போது கடந்த மாதம் யுக்ரேன் தலைநகர் கீயவில் குண்டுமழை பொழிந்தபோது, அடுக்குமாடி குடியிருப்பில் தான் வாடகைக்கு இருந்த வீட்டைப் பூட்டிவிட்டு, இரண்டே டி ஷர்ட்டுகள் மற்றும் திருமணத்திற்காக தன் பாட்டி அன்பளிப்பாக வழங்கிய காபி மெஷினை மட்டும் எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு தப்பித்து வந்தார் அனா ஹொரோடெட்ஸ்கா. ஐடி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த 30 வயதான அன…

  4. Mariupol இல்... 10,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளனர் – நகர முதல்வர் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து தெற்கு துறைமுகத்தில் குறைந்தது 10 ஆயிரம் பொதுமக்கள் இறந்துள்ளனர் என மரியுபோல் நகர முதலவர் தெரிவித்துள்ளார். மரியுபோலில் இன்னும் 120,000 பொதுமக்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருந்து ஆகியவை அவசரமாகத் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். இதேவேளை இறந்தவர்களின் உடல்களை சேகரித்து வணிக வளாகங்களில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் ரஷ்ய இராணுவம் வைக்கின்றது என்ற குறைபாடுகளும் கிடைத்துள்ளதாக கூறினார். https://athavannews.com/2022/1276419

  5. கிழக்கில்... ரஷ்யாவின் தாக்குதல்களை, முறியடித்துள்ளதாக... உக்ரேனிய படைகள் அறிவிப்பு உக்ரைனின் கிழக்கு எல்லைக்கு அருகே ரஷ்யாவில் எதிரிப் படைகள் மீண்டும் ஒருங்கிணைத்து வருவதாக உக்ரேனிய ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன. ரஷ்யா கிழக்கில் புதிய தாக்குதலுக்கான தயார்படுத்தல்களுக்காக இராணுவ வாகனங்களை நகர்த்தி வருவதாகவும் உக்ரைனின் இராணுவம் அறிவித்துள்ளது. இருப்பினும் டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில், ஆறு தாக்குதல்களை முறியடித்ததாகவும், நான்கு டாங்கிகள், பல ரஷ்ய வாகனங்களை அழித்ததாகவும் உக்ரைனின் இராணுவம் கூறுகிறது. மேலும் ஒரு விமானம் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் உட்பட ஏழு வான் இலக்குகளைத் தாக்கியதாகவும் உக்ரைனின் இராணுவம் அறிவித்துள்ளது. டான்ப…

  6. நியூயோர்க்கில் துப்பாக்கிச் சூடு : 13 பேர் காயம் நியூயோர்க் - புரூக்ளினிலுள்ள சுரங்க ரயில் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சுமார் 13 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை அந்நாட்டு நேரப்படி 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட துப்பாக்கிதாரி தலைமறைவாகியுள்ள நிலையில், அதரிகாரிகள் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, புரூக்ளின் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதால் தீவிரவாதிகளின் தாக்குதலாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. htt…

    • 4 replies
    • 341 views
  7. மரியுபோலில்.... இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதா? பிரித்தானியா விசாரணை! உக்ரைனில் முற்றுகையிடப்பட்ட மரியுபோல் நகரத்தில், ரஷ்ய இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளைத் தொடர்ந்து, விபரங்களைச் சரிபார்க்க பிரித்தானியா அவசரமாகச் செயற்பட்டு வருகிறது என்று வெளியுறவுச் செயலாளர் லிஸ் டிரஸ் கூறியுள்ளார். மரியுபோலில் எந்த உறுதிப்படுத்தப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது போரின் கடுமையான விரிவாக்கம் என்று லிஸ் டிரஸ் கூறினார். உக்ரைனின் ஜனாதிபதியான வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, தனது இரவு நேர காணொளி உரையைப் பயன்படுத்தி ரஷ்யா அத்தகைய சட்டவிரோத ஆயுதங்களை நிலைநிறுத்தலாம் என்று எச்சரித்தார். ஆனால் அவர்கள் ஏற்கனவே அவ்வாறு செய்ததாக அவர் கூறவில்…

  8. உக்ரைனின்... வான் பாதுகாப்பு அமைப்புகளை, அழித்துள்ளதாக... ரஷ்யா அறிவிப்பு! உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. தங்களது தரைப் படையினருக்கு வான்வழியாகப் பாதுகாப்பு கொடுப்பதில் ஏற்பட்ட தோல்வியையடுத்து இந்த நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. இந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு ஸ்லோவேகியா அளித்ததாகத் தெரியவந்துள்ள நிலையில், அந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என அந்த நாடு தெரிவித்துள்ளது. டினிப்ரோ என்ற இடத்தில் இந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்ததாக ரஷ்ய இராணுவம் கூறியுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளை மிகோலாய், கார்கிவ் பிராந்தியங்களிலும் அழித…

  9. 24 ரஷ்ய தூதரக ஊழியர்களை... நாட்டை விட்டு வெளியேறுமாறு, குரேஷியா அறிவிப்பு! 24 ரஷ்ய தூதரக ஊழியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய ஐரோப்பிய நாடான குரேஷியா கூறியுள்ளது. அந்த 24 பேரில் 18 தூதரக அதிகாரிகளும் அடங்குவர். மேலும், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் 6 பேரை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இதேபோன்ற நகர்வுகளைத் தொடர்ந்து குரேஷிய வெளியுறவு அமைச்சகம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது. உக்ரைன் மீதான மிருகத்தனமான ஆக்கிரமிப்பு மற்றும் (அங்கு) செய்யப்பட்ட பல குற்றங்கள் மீதான எதிர்ப்பில் ரஷ்ய தூதர் அழைக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜாக்ரெப்பில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் தூதரகத்தின் நிர்வாக த…

  10. பிரித்தானியாவில், வாழ்க்கைச் செலவுகள்... அதிகரிப்பு: கடைகளில், விற்பனை குறைந்துள்ளது! அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவின் அழுத்தத்தின் கீழ் வீட்டு வரவு செலவுத் திட்டங்கள் வருவதால் கடைகளில் விற்பனை குறைந்துள்ளது என்று பிரித்தானிய சில்லறை வணிகக் கூட்டமைப்பு (பிஆர்சி) தெரிவித்துள்ளது. புதிய புள்ளிவிபரங்கள் மார்ச் மாதத்திற்கான விற்பனை வளர்ச்சி இந்த ஆண்டு இதுவரை அதன் மெதுவான வீதத்தில் உயர்ந்துள்ளது. பிரித்தானிய சில்லறை விற்பனை 12 மாதங்களுக்கு முந்தையதை விட 0.4 சதவீதம் குறைந்துள்ளது. மில்லியன் கணக்கானவர்கள் அதிக எரிசக்தி கட்டணங்கள் மற்றும் வரிகளை சமாளிக்க வேண்டியிருக்கும் நிலையில் இந்த தகவல் வந்துள்ளது. மக்களின் நிதி மீதான அழுத்தம் மற்றும் …

  11. துருப்புக்களின், எண்ணிக்கையை... அதிகரிக்க ரஷ்யா முயற்சி – பிரிட்டன் குற்றச்சாட்டு 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களை இணைத்து துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரஷ்யா முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெருகிவரும் இழப்புகளுக்கு ஈடுகொடுக்கும் விதமாக ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மால்டோவாவில் உள்ள அங்கீகரிக்கப்படாத டிரான்ஸ்னிஸ்ட்ரியா பகுதியில் இருந்து ஆட்சேர்ப்பு முயற்சி இடம்பெறுவதாகவும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து எத்தனை வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதை மொஸ்கோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இ…

  12. உக்ரைன் மீண்டும் எழுச்சி பெறும் – பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீதான அழுத்தத்தை வாரந்தோறும் அதிகரிக்கவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். கியூவிற்கு திடீர் விஜயம் செய்த பின்னர் அங்கு கருத்து தெரிவித்த அவர், தமது பங்காளிகளுடன் இணைந்து பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கப் போவதாக கூறினார். சுதந்திர இறையாண்மை கொண்ட உக்ரைன் மீண்டும் எழுச்சி பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக உக்ரைன் மக்களின் வீரத்திற்கும், தைரியத்திற்கும் நன்றி என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1276116

    • 7 replies
    • 450 views
  13. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு, உக்ரைனுக்கு மட்டுமானதல்ல – உக்ரைன் ஜனாதிபதி எச்சரிக்கை ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உக்ரைனுக்கு மட்டுமானதல்ல என்றும் முழு ஐரோப்பாவும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது என்றும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்ய எரிசக்தி பொருட்கள் மீது முழுமையான தடை விதிக்கவும், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை வழங்கவும் மேற்குலக நாடுகளை அவர் கேட்டுக்கொண்டார். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் குவிந்து வருவதால், கடுமையான போருக்கு உக்ரைன் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி கூறினார். இது ஒரு கடினமான போராக இருக்கும் என்றும் இதில் தங்கள் வெற்றியை நம்புவதாகவும் தெரிவித்த அவர், இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்க இராஜதந்திர வழிகளைத் தேடுவதாக…

  14. பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: இமானுவல் மேக்ரான்- மரீனே லீ பென் இடையே கடும் போட்டி! பிரான்ஸில் அடுத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான முதல்கட்டத் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் 27.6 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். அதேபோல அவருக்கு கடும் சவாலாக திகழ்ந்த தீவிர வலதுசாரிக் கொள்கையுடைய சட்டத்தரணி மரீனே லீ பென், 23.0 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் உள்ள ஜீன் லூக் மெலன்சோன் 22.2 சதவீத வாக்குகளை பெற்றார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற முதல் சுற்றில் சுமார் 48.7 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க அழைக்கப்பட்டனர். 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாலை 5 மணிக்குள், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 65 சதவீதம் பேர் வாக்கள…

    • 5 replies
    • 332 views
  15. ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு... ரஷ்யாவும், உக்ரைனும்... சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும்: போப் பிரான்சிஸ்! ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ரஷ்யாவும் உக்ரைனும் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். வத்திகானிலுள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஏதுவாக ஈஸ்டர் பண்டிகையையொட்டி உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு நாடுகளின் தலைவர்கள் சில தியாகங்களைச் செய்…

  16. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனாக்: "என் மனைவி அக்ஷதா மூர்த்தி வரி ஏய்ப்பு செய்யவில்லை" 37 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனாக் தனது மனைவியும் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளுமான அக்ஷதா மூர்த்தி மீதான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் மனைவிக்கு ஆதரவாக பேசி உள்ளார். அக்ஷதா 'பிரிட்டனில் குடியில்லாதவர்' (non domicile) என அங்கீகரிக்கும்படி கேட்பதற்கு எதிராக வரும் தகவல்கள் அவரின் "நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்" திட்டமிட்டு செய்யப்படுவதாக ரிஷி சுனாக் குற்றம்சாட்டியுள்ளார். 'பிரிட்டனில் குடியில்லாதவர்' என்ற நிலையைக் கோருவதன் மூலம் அவர…

  17. யுக்ரேன் போர்: கண் முன்னாள் மகள், கணவர் கொல்லப்பட்டதைப் பார்த்த பெண் விவரிக்கும் துயரக் கதை அன்னா ஃபாஸ்டர் பிபிசி நியூஸ், கீயவ், யுக்ரேன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, விக்டோரியா கவலேன்கோ விக்டோரியா கவலேன்கோ அந்த தருணத்தை நன்றாக நினைவில் வைத்திருக்கிறார். "அங்கு குண்டு வெடிப்பு நடந்தது. துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்டது. அது என் காதை அடைத்தது. காரின் பின்னால் உள்ள கண்ணாடி உடைந்தது. 'காரில் இருந்து வெளியில் செல்' என்று என் கணவர் கத்தினார். அந்த நாளில் நடந்த கொடூரம் கற்பனை செய்யமுடியாதது. குறிப்பு: இந்த கட்டுரையில் வரும் கா…

  18. உக்ரேன் ஜனாதிபதியை சந்தித்தார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உக்ரேன் தலைநகர் கீவ்வுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து 45 நாளாகிறது. இராணுவ கட்டமைப்புகளை தகர்க்கப் போவதாக கூறி போர்தொடுத்த ரஷ்யா, அடுக்குமாடி குடியிருப்புகள், வைத்தியசாலைகள், அரசு கட்டிடங்கள், குண்டு வீச்சு தவிர்ப்பு புகலிடங்கள் என தாக்குதல் வரம்பை நீட்டித்தது. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்ற முடிந்தும் வெற்றி பெறாத நிலையில் ரஷ்ய படைகள் தனது கவனத்தை இப்போது கிழக்கு உக்ரைன் மீது திருப்பி உள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரேனுக்கு அமெரிக…

  19. யுக்ரேன்: “மின்சாரத்தை இழந்திருந்தால், அது பேரழிவாக இருந்திருக்கும்” – ரஷ்ய கட்டுப்பாட்டில் செர்னோபில் எப்படியிருந்தது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, பொறியாளர் வலேரி செமனோவ் வடக்கு யுக்ரேனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையம், படையெடுப்பின் முதல் நாளிலேயே ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்டது. தற்போது மீண்டும் யுக்ரேன் கட்டுப்பாட்டிற்கே வந்துள்ளது. பிபிசியின் யோகிதா லிமாயே ரஷ்ய படைகள் வெளியேறிய பிறகு அணுமின் நிலையத்தின் உள்ளே சென்ற முதல் செய்தியாளர்களில் ஒருவர். பிப்ரவரி 24-ஆம் தேதி பிற்பகலில், ரஷ்ய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் செர்னோபிலை சுற்றி வளைத்து, பெலாரஷ்ய எல்லையிலிருந்து யு…

  20. உக்ரைனுக்கு... 100 மில்லியன் பவுண்டுகள், மதிப்புள்ள ஆயுதங்களை.. வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவிப்பு! ரயில் நிலையத்தில் அகதிகள் மீது மனசாட்சியற்ற குண்டுவீச்சுக்கு பிறகு, உக்ரைனுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை பிரித்தானியா பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். ஸ்டார்ஸ்ட்ரீக் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் 800 டேங் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட கூடுதல் இராணுவ உபகரணங்களை பிரித்தானியா அனுப்பும் என்று பிரதமர் உறுதியளித்தார். கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்கில் உள்ள ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 50பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர். இந்த த…

  21. உக்ரைனில்... ரயில் நிலையம் மீதான ரொக்கெட் தாக்குதலில், குறைந்தது 50பேர் உயிரிழப்பு! கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்கில் உள்ள ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 50பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட இத்தாக்குதலில் முந்ததைய உயிரிழப்பு எண்ணிக்கை 39 என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளதாக டொனெட்ஸ்க் ஆளுனர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென உக்ரைனிய அதிகாரிகள் கூறுகின்றனர். இதுதொடர்பாக உக்ரைன் ரயில்வே வெளி…

  22. இஸ்ரேலில்... அதிகரித்து வரும் தாக்குதல்கள்: அனைத்து பாதுகாப்புப் படைகளுக்கும் சிறப்பு அதிகாரம்! இஸ்ரேலில் தாக்குதல்கள் அதிகரித்து வருவதைத் தடுக்கும் முயற்சியில், இஸ்ரேலியப் பிரதமர் நஃப்தலி பென்னட், அனைத்து பாதுகாப்புப் படைகளுக்கும் முழு சுதந்திரம் வழங்கியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) பாலஸ்தீனியர் ஒருவர் நெரிசலான டெல் அவிவ் பொழுதுபோக்கு பகுதியில் மூன்று பேரைக் கொன்றது மற்றும் 16பேர் காயத்திற்கு வழிவகுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து இஸ்ரேலியப் பிரதமர் நஃப்தலி பென்னட் கூறுகையில், ‘இந்தப் போருக்கு வரம்புகள் இல்லை மற்றும் இருக்காது. பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்காக நாங்கள் இராணுவம், ஷின் பெட் (உள்நாட்டு பாதுகாப்பு …

  23. லண்டன், கனரி வோர்ப்பில்... இரசாயன கசிவு – நுற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு, நிலமை கட்டுப்படுத்தப்பட்டது! லண்டன் கனரி வோர்ப் பகுதியில் உள்ள ஹெல்த் கிளப்பில் ரசாயன பதார்த்தம் வெளியேறியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கபோட் சதுக்கத்தில் (Cabot Square) உள்ள முகவரியில் ரசாயன வாசனை வந்ததாக கூறி லண்டன் தீயணைப்புப் படை (LFB) சேவையின் பணியாளர்கள் அழைக்கப்பட்டதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இரசாயனங்களின் கலவையானது கட்டிடத்தில் அதிக அளவு புகை மற்றும் நீராவியை ஏற்படுத்தியதாக குறிப்பிட்ட தீயணைப்பு படையணி, சம்பவ இடத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் லண்டன்அம்புலன்ஸ் சேவையினரின் சிகிச்சையை பெற்றதாகவும் குறிப்பிட்…

  24. புட்டினின்... மகள்களுக்கு எதிராக, அமெரிக்கா பொருளாதாரத் தடை! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மகள்கள் உட்பட அவருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்தப் பட்டியலில் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குடும்பம் மற்றும் முக்கிய வங்கிகளும் அடங்கும். உக்ரைனின் புச்சா நகரில் இடம்பெற்றதாக கூறப்படும் படுகொலைகள் தொடர்பாக ரஷ்யா மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ‘பொறுப்புள்ள நாடுகள் ஒன்றிணைந்து இந்த குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைக்க வேண்டும்’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். புடினின் மகள்களான கேடரினா விளாடிமிரோவ்னா டிகோனோவா மற்றும் மரியா விளாடிமிரோவ்னா வொரொன்ட்சோவா ஆகியோர் புடின…

  25. புதிய அணு உலைகளை நிர்மாணிக்க, பிரித்தானியா திட்டம்! பிரித்தானியாவின் புதிய ஆற்றல் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக ஏற்கனவே உள்ள தளங்களில் மேலும் எட்டு அணு உலைகளை கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் எரிசக்தி சுதந்திரத்தை அதிகரிப்பது மற்றும் விலைவாசி உயர்வைச் சமாளிப்பது ஆகியவற்றை இலக்காகக் கொண்ட இந்தத் திட்டம், காற்று, ஹைட்ரஜன் மற்றும் சூரிய உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களையும் உள்ளடக்கியது. ஆனால், வல்லுநர்கள் ஆற்றல் திறன் மற்றும் வீட்டு இன்சுலேஷனை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த அழைப்பு விடுத்துள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு எரிவாயு விலையை இன்னும் உயர்த்திய பின்னர் நுகர்வோர் எரிசக்தி கட்டணங்களை எதிர்கொள்கின்றனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.