Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வழக்கறிஞரான திருமதி தங்கேஸ்வரி அவர்கள் உலகில் முதன் முறையாக மலேசியாவில் சபாநாயகராக தெரிவு இன்று கூடிய பேரா சட்டமன்றக் கூட்டத்தில் தேசிய முன்னணி சார்பில் முன்மொழியப்பட்ட முன்னாள் பேரா மாநில ம.இ.கா மகளிர் பிரிவுத் தலைவியும் வழக்கறிஞருமான திருமதி தங்கேஸ்வரி சட்டமன்ற சபாநாயக்கராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது, பேரா மாநில சட்டமன்ற சபாநாயகராகத் திகழ்ந்த டத்தோ ஸ்ரீ எஸ்.கே தேவமணி துணையமைச்சராக நியமிக்கப்பட்டதையடுத்து, அப்பதவி திரும்பவும் ம.இ.கா உறுப்பினர் ஒருவருக்கே அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. இந்த நியமனம் குறித்து ம.இ.கா. துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ எஸ்.கே. தேவமணியும், தேசிய மகளிர் பிரிவு தலைவி மோகனா முனியாண்டியும் திருமதி தங்க…

    • 0 replies
    • 399 views
  2. அங்காரா: துருக்கியில் நடந்த இரண்டு கார் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 6 பேர் பலியாகியுள்ளனர். 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வான் என்ற இடத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசனை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு ஒன்றில், போலீஸ் அதிகாரி ஒருவர் மற்றும் இரண்டு பொது மக்கள் பலியானார்கள். 20 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில், ஈலாஜிக் என்ற நகரில் போலீஸ் தலைமையகத்தை குறிவைத்து நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு காரணமாக அருகிலிருந்த கார்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. http:…

  3. பிரித்தானிய பெண் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் இன்று மரணதண்டனை தீர்ப்பு Published on January 22, 2013-2:52 pm · பிரித்தானிய பெண் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் இன்று மரணதண்டனை தீர்ப்பு வழங்கி உள்ளது. லின்ட்சய் சன்டிபோர்ட் என்ற 56வயதுடைய பிரித்தானிய பெண் கடந்த வருடம் மே மாதம் பாலித்தீவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இப்பகுதிக்கு உல்லாச பிரயாணியாக வருகை தந்த இவர் தனது பயண பெட்டியில் 4.8கிலோ கிரோயின் போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. அரச வழக்கு தொடுநர் இவருக்கு 15ஆண்டுகள் சிறைத்த…

  4. முழு அளவிலான ராணுவத் தாக்குதலை பிரிட்டன் தாக்குப் பிடிக்க முடியாது: மூத்த தளபதி எச்சரிக்கை பிரிட்டன் மீது ஒரு முழு அளவிலான ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டால் அந்நாட்டில் உள்ள ஆயுதம் ஏந்திய படையினரால் பிரிட்டனை காப்பாற்ற முடியாது என மூத்த பிரிட்டிஷ் ராணுவ தளபதி ஒருவர் அரசாங்கத்தை எச்சரித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், கூட்டுப்படைகளின் தலைமை பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதற்குமுன் சர் ரிச்சர்ட் பரோன்ஸ், பிரிட்டிஷ் ஆயுத படையினர் குறித்த கடும் மதிப்பீடுகளை குறிப்பாணை மூலம் கூறியிருந்தார். பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் முக்கிய திறன்கள் ராணுவத்தில் இருந்து பறிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் படைகளுக்கான நிதி ஒதுக்கீடு தற்போது …

  5. டொரண்டோ நகரில் அதிகரித்து வரும் தொலைபேசி மற்றும் மொபைல்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய ஏரியா கோட் எண்களை அறிமுகப்படுத்த டொரண்டோ தொலைபெசித்துறை முடிவு செய்துள்ளது. இந்த புதிய ஏரியா கோட் எண்கள் மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் தெரிகிறது. இந்த புதிய எண்கள் வயர்லெஸ் மொபல்களுக்கு மிகவும் அத்தியாவசமானதாக இருக்கும். டொரண்டோ நகரில் 416 மற்றும் 647 போன்ற எண்கள் பயன்படுத்துவோர் இனி 437 என்ற எண்களை சேர்க்க வேண்டும். 905 மற்றும் 289 போன்ற எண்கள் பயன்படுத்தும் Ontario, including Ajax-Pickering, Brampton, Burlington, Hamilton, Markham, Milton, Mississauga, Oakville, Oshawa, Richmond Hill, St. Catharines and …

  6. உலகத்தின் நாணயம் வழங்கும் தொகையில் அமெரிக்க நாணயத்தின் அளவு தொடர்ச்சியான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இன்று உலகின் நாணயச் சந்தையில் ஆறு ரில்லியன் டொலர்கள் பெறுமதியான பணத்தொகை புழக்கத்திலுள்ளது. அதன் 62 வீதத்தை இன்றும் அமெரிக்க டொலர்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. அமெரிக்க டொலர்களின் தொலை 3.2 ரில்லியன் ஆகும். இருந்த போதும் அமரிக்க டொலர் பதினைந்து வருட தொடர் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. ஜப்பானிய யென், சீன யுவான், சுவிஸ் பிராங் ஆகிய நாணயங்கள் சந்தையை ஆக்கிரமித்து வரும் அதேவேளை வேறு நாணயங்களும் சந்தையில் அமரிக்க நாணயத்தை நிரப்பி வருவதாக ஐ.எம்.எப் தெரிவிக்கின்றது. அமெரிக்க மக்களின் பெரும்பன்மையினர் நம்பவில்லை என்றாலும் டொ…

  7. இன்றைய நிகழ்ச்சியில், * உலகின் மிக நீண்டகால முடியாட்சியின் அரசராக பதவி வகித்த தாய்லாந்து மன்னர் எண்பத்தியெட்டாம் வயதில் காலமானார். * இஸ்லாமிய அரசு என்னும் அமைப்பில் இருந்து விலகியவர்கள் எங்கே போவார்கள்? அப்படிப்பட்டவர்கள் வடக்கு சிரியாவிலுள்ள ரகசிய முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது குறித்த பிபிசியின் பிரத்யேகத் தகவல்கள். * பிரிட்டிஷ் நிறுவனம் உருவாக்கும் ஓட்டுனரில்லா ட்ராக்டர்கள்; விவசாயத்தின் எதிர்காலம் இதுதானா? ஆராய்கிறது பிபிசி.

  8. அல்,கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து அவரது பெயரை ஐ.நா. நீக்கியுள்ளது. இருப்பினும், பின்லேடனின் சொத்துகள் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்த விடாமல் முட க்கி வைக்கும் நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தொடர்ந்து மேற்கொள்ளும்.பின்லேடன் கொல்லப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில் தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்து அவரது பெயரை தற்போது ஐ.நா. நீக்கியுள்ளது. அல்,கொய்தாவினருக்கு ஐ.நா. விதித்துள்ள தடை பட்டியலில் இப்போதும் 233 தீவிரவாதிகள், 63 அமைப்புகள், அறக்கட்டளைகள், நிறுவனங்கள் உள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=76992&category=WorldNews&language=tamil

  9. கனடிய பெண் போட்டோகிராபர் ஒருவர் ஈரானிய சிறை அதிகாரிகளால் கொல்லப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. கனடிய பெண் போட்டோகிராபர் Zahra Kazemi, கடந்த 2003 ஆம் ஆண்டு ஈரானில் அரசுக்கு எதிராக நடந்த ஒரு போராட்டத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை கைது செய்த ஈரானிய போலீஸார் சிறையில் அடைத்து துன்புறுத்தி கொலை செய்தனர். இதுகுறித்து அதிர்ச்சியடைந்த Zahra Kazemi மகன் ஈரான் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். வழக்கை திறமையாக நடத்திய ஈரான் அரசு தரப்பு வழக்கறிஞர்கள், Zahra Kazemi செய்தது சட்டவிரோதமே என்று நிரூபித்தனர். எனவே தீர்ப்பும் ஈரான் அரசுக்கு சாதகமாகவே வந்தது. ஆனாலும் தனக்கு நியாயம…

    • 0 replies
    • 442 views
  10. மும்பையில் தரையிறங்கிய விமானம் தாறுமாறாக ஓடி விபத்து - 140 பயணிகள் அருந்தப்பு! [Monday, 2013-03-11 09:48:32] மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய தனியார் விமானம், திடீரென சறுக்கிச் சென்று விபத்துக்கு உள்ளானது. அதிர்ஷ்டவசமாக, அதில் பயணம் செய்த, 140 பயணிகள் உயிர் தப்பினர்.சண்டிகர் நகரிலிருந்து, மும்பைக்கு, "இண்டிகோ' என்ற தனியார் பயணிகள் விமானம், நேற்று மதியம் வந்தது. மும்பை விமான நிலையத்தின், முக்கிய ஓடு பாதையில் விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்தது.அப்போது திடீரென, சறுக்கிய படி, ஓடுபாதையிலிருந்து விலகிய விமானம், அங்கிருந்த விளக்குகள், சிறு கம்பங்களை தகர்த்தது. எனினும், விமானி துரிதமாக செயல்பட்டு, விமானத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததால், அதில் பயணித்த, 140 பயணிகள் உயிர…

  11. பொருளாதார வளர்ச்சியில் உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது பிரித்தானியா. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.6 பில்லியன் பவுண்டு எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த பிரித்தானியாவில் 3.9 மில்லியன் சிறுவர்கள் ஏழ்மையில் வாழ்ந்து வருகின்றனர். பிரித்தானியாவில் ஏழ்மையை அடியோடு ஒழிக்கும் வகையில் ஒட்டுமொத்த குடிமக்களுக்கும் யுனிவர்சல் அடிப்படை வருமானம் என்ற திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரபல அறிஞர் அலெக்ஸ் வில்லியம்ஸ் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். இதன் அடிப்படையில் ஒட்டு மொத்த பிரித்தானியர்களும் மணிக்கு 8.45 பவுண்டும், நாள் ஒன்றுக்கு சுமார் 70 பவுண்டும் ஊதியமாக பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்…

    • 8 replies
    • 913 views
  12. மெக்சிகோவின் மேற்கு பகுதியில் ஆத்திரமடைந்த ஆசிரியர்களின் குழு ஒன்று குவெரெரோ மாநிலத்தின் தலைநகர் சில்பசிங்கோவில் பல அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்களை எரித்திருக்கிறது. கோடாரிகள் மற்றும் தடிகள் சகிதம் வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் செனட்டரின் அலுவலகங்களை தாக்கி கணினிகளை வெளியே வீசியிருக்கிறார்கள். மாநில நாடாளுமன்ற கட்டிடத்தை பல நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாத்து வருகிறார்கள். அண்மைய கல்வி சீர்திருத்தம் மீளப்பெறப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் கோருகிறார்கள். இந்தச் சீர்திருத்தத்தின்படி ஆசிரியர்கள் சில தொழில்சார் பரீட்சைகளை எழுதியாக வேண்டும். இது பணம் கொடுத்து ஆசிரியர் பணியைப் பெறும் ஊழலை ஒழிக்கும் நோக்கிலானது. http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130425_mex…

  13. என்னங்க சார் உங்க சட்டம்? - ட்ரம்பை எதிர்க்கும் மார்க் சக்கர்பெர்க்! மார்க் சக்கர்பெர்க் vs பொனால்ட் டரம்ப்! அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப் புதிதாக பல்வேறு சட்டங்களை இயற்றும் முனைப்பில் இருக்கிறார். அவர் தேர்தல் பிரசாரத்தின் போது கூறியது போல அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். சுமார் 10 மில்லியன் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்களை சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்ப வேண்டும். இதற்காக 10 ஆயிரம் அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாகவும் உத்தரவிட்டுள்ளார். இதனால் வெளினாட்டவரை அதிகம் நம்பி இருக்கும் சிலிக்கான் வேலி கலக்கத்தில் உள்ளது. ட்ரம்ப் தேர்தலில் வெ…

  14. அகதிகள் தங்கள் குடும்பத்தைச் சேர்க்கத் தடை! – யேர்மனிய எதிர்க்கட்சி தேர்தல் வாக்குறுதி! 70 Views யேர்மனியின் தீவிர வலதுசாரிக் கட்சி அதன் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறது. குடியேற்றத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் கடுமையாக எதிர்த்துவருகின்ற ஏஎப்டி (Alternative für Deutschland-AfD) கட்சி, எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான தனது வாக்குறுதிகளில் அகதிகளுக்கு எதிரான கடும் நிலைப்பாடுகளை அறிவித்துள்ளது. ‘இயல்பான யேர்மனி’ (‘Germany. But normal.’) என்ற அர்த்தம் கொண்ட சுலோகத்தின் கீழ் அக்கட்சி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து யேர்மனியை வெளியேற்றுகின்ற டெக்ஸ…

  15. 10 நாட்கள் இடைவெளியில் 8 பேருக்கு மரண தண்டனை; அமெரிக்க மாநிலம் அதிரடி! அமெரிக்காவின் ஆர்கென்ஸா மானிலத்தில் பத்து நாட்களுக்குள் மரண தண்டனைக் கைதிகள் எண்மருக்கு தண்டனைகள் நிறைவேற்றப்படவுள்ளன. ஆர்கென்ஸாவில் மொத்தமாக 34 மரண தண்டனைக் கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அதில், நான்கு கறுப்பினத்தவரும் நான்கு வெள்ளையர்களுமே பத்து நாட்கள் இடைவெளியில் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளனர். இவர்கள் எண்மரும் 1989 முதல் 1999ஆம் ஆண்டு காலப் பகுதியில் தண்டனை பெற்றவர்களாவர். இவர்களின் தண்டனை சுமார் இரண்டு தசாப்தங்களாக நிலுவையிலேயே நீண்டு வந்த நிலையில், 2015ஆம் ஆண்டு ஆர்கென்ஸா ஆளுனராகப் பதவியேற்ற ஆஸா ஹட்சின்சன் உடனடியாக தண்டனைகளை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளார்.…

  16. யார் இந்த காலித் மசூத்? இயக்கியவர்கள் யார்? லண்டன் தாக்குதலில் டுபட்ட நபர் 52 வயதுள்ள காலித் மசூத் என்று அடையாளம் கண்டுள்ள போலீசார், அவரது பெயரில் பல குழப்பங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். Image captionமசூத்தின் பள்ளிப்பருவ புகைப்படம் கிடைத்த நிலையில், அவரது புகைப்படத்தை போலீஸ் வெளியிட்டுள்ளது. காலித் மசூத், மூன்று குழந்தைகளின் தந்தை என்று நம்பப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் ஆட்ரியன் ரஸல் அஜோ என்ற பெயரில் இருந்ததாகக் கூறும் பெருநகர போலீசார், பல்வேறு மாற்றுப் பெயர்கள் அல்லது அழைக்கப்படும் பெயர்களைக் கொண்டிருப்பதால் பெரும் குழப்பமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த 1964-ஆம் ஆண்டு, கென்ட் மாகாணத்தில் டார்ட்ஃபோர்டு மாவட்டத்தில் …

  17. ஆகஸ்ட் 9 முதல், தற்போது அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். கனடாவிற்கு அத்தியாவசியமற்ற பயணம் மார்ச் 2020 முதல் தடைசெய்யப்பட்டுள்ளது, கோவிட் -19 பரவுவதைத் தணிக்க கனேடிய அரசாங்கம் அவசியம் என்று கூறியது. "COVID-19 தொற்றுநோய் சாதகமாக இருந்தால், செப்டம்பர் 7 முதல் சர்வதேச பயணிகள் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படலாம்" என்று கனேடிய அரசாங்கம் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முழுமையாக தடுப்பூசி போடாத அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் கனடாவுக்குள் நுழைவது தடைசெய்யப்படும். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அனைத்து அமெரிக்க குடிமக்களும் நிரந்தர குடியிரு…

  18. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற இங்கிலாந்துடன் பேச்சு வார்த்தை நடத்த தயார்: பிரதமர் ஏஞ்சலா அறிவிப்பு ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற இங்கிலாந்துடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார் மெக்சிகோ சிட்டி: ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை தொடங்குகிறபோது, தனது பெரும்பான்மையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கருதினார். இதற்காக பாராளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்தினார். ஆனால் அவரது கனவு நிறைவேறவில்லை. இருந்த ப…

  19. சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு இரத்து நியூயோர்க்கில் நடைபெறவிருந்த சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம், பூடான், பங்களாதேஷம், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள சார்க் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருந்தது. இந்த மாநாட்டிற்கு, நேபாளம் தலைமை ஏற்க இருந்த நிலையில், தலிபான் பிரதிநிதிகளையும், இந்த மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. தலிபான்களால் ஆளப்படும் போரால் பாதிக்கப்…

  20. ஆப்கானிஸ்தானில், 2,500 வீரர்களை வைத்திருக்குமாறு... பைடனுக்கு அறிவுறுத்தல் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்புகளைத் தொடர்ந்து வைத்திருக்குமாறு ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக அமெரிக்க உயர் இராணுவத் தலைவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் இருந்து மக்களை அவசரமாக வெளியேற்றியமை குறித்து நடத்தப்பட்டுள்ள விசாரணையிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுமார் 6 மணிநேரம் நடத்தப்பட்ட விசாரணையில் 2,500 வீரர்களை ஆப்கானிஸ்தானில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியதாக ஜெனரல் மார்க் மில்லி, ஜெனரல் ப்ரான்க் மெக்கன்ஸி ஆகிய இருவரும் கூறினர். ஆனால் அவ்வாறு ஆலோசனை பெற்றதாகத் தமக்கு நினைவு இல்லை என ஜனாதிப…

  21. வடகொரியாவிலிருந்து கோமா நிலையில் அனுப்பப்பட்ட அமெரிக்க மாணவர் மரணமடைந்திருப்பது குறித்த செய்தி; கானாவில் அதிகரிக்கும் கும்பல் கொலைகள் குறித்த நேரடித்தகவல்கள் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்திருப்பது குறித்த செய்தி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  22. $300 மில்லியன் மதிப்புள்ள போதைபொருள் கடத்திய மூன்று கனடியர்கள் மெல்போர்னின் அதிரடி கைது. $300 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய கனடா நாட்டை சேர்ந்த மூன்று நபர்களை நேற்று ஆஸ்திரேலியா போலீஸ் அதிரடியாக கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 650 கிலோ எடையுடையது என்றும் தெரியவந்துள்ளது. கனடாவை சேர்ந்த Catherine McNaughton, 30, Edmond Proko, 46, and James Kelsey, 27 ஆகிய மூன்று நபர்கள் நேற்று மெல்போர்ன் நகரில் ஒரு மர்ம காரில் சந்தேகத்துக்கு இடமாக சென்று கொண்டிருந்தபோது, அவர்களை ஆஸ்திரேலிய போலீஸார் விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் 650 கிலோகிராம் எடையுள்ள சுமார் $300 மில்லியன் மதிப்புள்ள போதைப்ப…

    • 0 replies
    • 324 views
  23. ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் ஒளிந்திருப்பதாகக் கூறப்படுவதை அந்நாட்டு பிரதமர் யுசுப் ரசா கிலானி மறுத்துள்ளார். லண்டனில் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுணைச் சந்தித்துப் பேசிய பிறகு நடந்த செய்தியாளர் மாநாட்டில் அவர் இதைத் தெரிவித்தார். ஒசாமா பின் லேதனைக் கண்டுபிடிக்க பாகிஸ்தான் முனைப்புக் காட்டவில்லை என்று கோர்டன் பிறவுண் சென்ற வாரம் கூறியிருந்தது பற்றி கேட்டபோதே பாகிஸ்தான் பிரதமர் மேற்கண்டவாறு மறுப்பு தெரிவித்தார். தெற்கு வாசிரிஸ்தான் போன்ற பகுதிகளில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தன்னுடைய நாட்டு இராணுவம் வெற்றி பெற்று வருவதாகவும் அவர் கூறினார். மூலம்: http://www.inneram.com/200912054909/2009-12-05-05-26-37

  24. பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது பிரித்தானியா கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரித்தானியா பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. அதன்படி நாட்டுக்குள் நுழைவதற்கு முன்னர் பயணிகளுக்கு கட்டாயமாக பி.சி.ஆர்.பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அரசாங்கம் கூறியுள்ளது. இந்த இறுக்கமான கட்டுப்பாடுகள் செவ்வாய்கிழமை முதல் அமலுக்கு வரும் என சுகாதார அமைச்சின் செயலாளர் சஜித் ஜாவிட் தெரிவித்தார். அதன்படி 12 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைவரும் புறப்படுவதற்கு அதிகபட்சம் 48 மணிநேரத்திற்கு முன் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நாட்டுக்கு வந்த இரண்டு நாட்களுக்குள் கொரோனா தொற்று இல்லை என்பதை கண்டறியும் வரையே தனிப்பட…

  25. உக்ரைனின்... எல்லையோர மாகாணத்திலுள்ள மழலையர் பாடசாலையின் மீது குண்டுவீச்சு: போருக்கு வழிவகுக்குமா? உக்ரைனின் எல்லையோர மாகாணமான டான்பஸ் மாகாணத்தில் மழலையர் பாடசாலையின் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா என்ற நகரில் அமைந்துள்ள மழலையர் பாடசாலையின் மீதே நேற்று (வியாழக்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது, ஒரு ஆசிரியரும், காவலாளியும் காயம் அடைந்தனர். 32 குண்டுகள் நகரின் மீது விழுந்ததாகவும், ஒரு ராணுவ வீரர் காயமடைந்ததாகவும், மின்சார விநியோகம் தடைபட்டதாகவும் உக்ரைன் இராணுவம் கூறியது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரேனிய கிராமமான ஸ்டானிட்சியா-லுகன்ஸ்காவில் 20…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.