Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின்... வீட்டில், குண்டு தாக்குதல் ! காபூலில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டை தீவிரவாதிகள் தாக்கியதில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லா கான் மொஹமட் வீட்டில் இல்லாத நேரத்தில் கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றதுடன் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சரின் குடும்பத்தினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்றும் தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நகரங்களில் மோதல் அதிகரித்து வரும் நிலையில் வன்முறையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. பாதுகாப்பு சபை அழைப்பு விடுத்துள்ளது. …

  2. மாலியில்... இடம்பெற்ற, பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழப்பு! மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தியொன்று அதன் எதிர்த்திசையில் பயணித்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது, பேருந்தில் பயணித்த 41 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 33 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக ஆபத்தான வீதிகளை கொண்டுள்ள மாலியில் ஒரு இலட்சம் மக்கள் தொகையில் 26 இறப்புகள் பதிவாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது. https://athavannews.c…

  3. எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கப்பல்... கடத்தற்காரர்களால் விடுவிப்பு ஓமான் வளைகுடாவில் எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கப்பலை பறிமுதல் செய்தவர்கள் கப்பலை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கப்பலில் சென்ற அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பனாமா-கொடியுடன் சென்ற எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கடத்தல் முடிவடைந்துவிட்டதாக இபிரித்தானிய கடல் பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி அருகே குறித்த டேங்கர் கப்பல் சென்ற போது, 9 ஆயுதமேந்திய நபர்களால் நேற்று செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டது. கப்பலை யார் கைப்பற்றினார்கள் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகாத நிலையில் ஈரானியப் படைகளே கடத்…

  4. அமெரிக்க படைகள் வெளியேறியதே... ஆப்கானில் வன்முறை அதிகரித்திருப்பதற்கு காரணம்: ஆப்கான் ஜனாதிபதி ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் அவசர அவசரமாக வெளியேறியதே நாட்டில் வன்முறை அதிகரித்திருப்பதற்கு காரணம் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அவசர கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஆப்கான் அரசாங்கத்துக்கும் தலிபான்களுக்கும் இடையே பேச்சுவார்த்தையை நடத்த அவசரமாக (அமெரிக்காவால்) முன்வைக்கப்பட்ட திட்டமானது அமைதியை ஏற்படுத்தத் தவறியதுடன், ஆப்கான் மக்களிடையே சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாகாண தலைநகரங்கள் மற்றும் பெரிய நகர்ப்புற ப…

  5. சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா: வூஹானில் 1.1 கோடி பேருக்கு பரிசோதனை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சிறிய எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளதால் சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் கோவிட்-19 பரிசோதனை நடத்த அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டின் இறுதியில் உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று இங்குதான் கண்டறியப்பட்டது. அதன் பின்பு சுமார் 1.1 கோடி மக்கள்தொகை கொண்ட இந்த நகரம் உலகெங்கும் பேசுபொருள் ஆனது. வூஹானில் ஓராண்டு காலத்துக்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் பாதிக்கப்பட்டது கண்டறியப்படாத சூழல…

  6. "வூஹான்" ஆய்வகத்திலிருந்துதான்... கொவிட் வைரஸ் கசிந்தது: அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்! சீனாவின் வூஹான் நகரத்தில் உள்ள ஆய்வகத்திலிருந்துதான், கொரோனா வைரஸ் (கொவிட்-19) கசிந்தது என அமெரிக்க குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மைக் மெக்கால் தலைமையிலான குழு நேற்று (திங்கட்கிழமை) ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டனர். இதில் ‘வூஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா தீநுண்மி கசிந்ததற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன. 2019, செப்டம்பர் 12ஆம் திகதிக்கு முன்னரே இது நிகழ்ந்திருக்க வேண்டும். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்த…

  7. ஆப்கானிஸ்தானின்... மூன்று முக்கிய நகரங்களில், தலிபான்கள் உக்கிர தாக்குதல்! ஆப்கானிஸ்தானின் ஹெராத், லஷ்கர் கா, காந்தஹார் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் தலிபான்கள் உக்கிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அரசப் படைகளால் எவ்வளவு நேரம் தலிபான்களின் தாக்குதல்களுக்கு தாக்குபிடிக்க முடியும் எனத் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான காந்தஹாரில் உள்ள விமான நிலையத்தை, குறைந்தபட்சம் மூன்று ஏவுகணைகள் தாக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. காந்தஹார் மாகாணம் தலிபான்களின் பிடியில் செல்லும் அபாயம் இருப்பதாக, அம்மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். இந்நகரத்தை தங்களின் தற்கால…

  8. இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல்: உண்மைகளை அறிய முயற்சிப்பதாக பிரித்தானியா தெரிவிப்பு உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இஸ்ரேல் நாட்டின் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, உண்மைகளை அறிய முயற்சிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 300 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு பகுதியில் உள்ள மாசிரா தீவுக்கு அருகே அரேபியன் கடலில் சென்று கொண்டிருந்த இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீது நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பிரித்தானிய மற்றும் ரோமேனியாவைச் சேர்ந்த இரண்டு கப்பல் ஊழியர்கள் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். இந்தநிலையில் இத்தாக்குதலுக்கு பின்னணியில் ஈரான் இருப்…

    • 1 reply
    • 388 views
  9. உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு கேபரான்: உலகின் மூன்றாவது பெரிய வைரம் ஆப்பிரிக்க நாடான போஸ்ட்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1095 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 காரட் அளவு கொண்டதாகும். அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய வைரம் போஸ்ட்வானா நாட்டில் 2015 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 1,109 காரட் அளவு ஆகும். இந்நிலையில், 1,098 காரட் அளவுடன் உலகின் மூன்றாவது பெரிய வைரம் போஸ்ட்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லி மீட்டர் தடிமனும் கொண்டுள்ள…

    • 15 replies
    • 1.3k views
  10. சீனாவில் நான்ஜிங் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று தற்போது ஐந்து மாகாணங்களுக்கும் தலைநகர் பெய்ஜிங் நகருக்கும் பரவ தொடங்கியுள்ளது. வுஹானுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் தொற்று பரவுகிறது என அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. முதன்முதலில் நகரின் கூட்ட நெரிசல் மிகுந்த விமான நிலையத்தில் ஜூலை 20ஆம் தேதியன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அப்போதிலிருந்து இதுவரை 200 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்ஜிங் நகரிலிருந்து வரும் விமானங்கள் அனைத்தும் ஆகஸ்டு 11ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் நகர் முழுவதும் கொரோனா தொற்று பரிசோதனையை மேற்கொள்ளும் முயற்சியை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள…

  11. சீனாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் யாருக்கும் தங்கள் மண்ணில் அடைக்கலம் அளிக்கப்படாது: தலிபான்கள்! சீனாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் யாருக்கும் தங்கள் மண்ணில் அடைக்கலம் அளிக்கப்படாது என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முல்லா அப்துல் கனி பரதார் தலைமையிலான தலிபான் தூதுக் குழு, வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தலிபான் பிரதிநிதிகள் இந்த கருத்தினை வெளியிட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தலிபான் பிரதிநிதிகள், ‘சீனா நம்பகத்தன்மை மிகுந்த நாடு’ என தெரிவித்தனர். இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஷாவ் லிஜியான் கூறுகையில், ‘இந்…

    • 3 replies
    • 530 views
  12. சிவப்பு பட்டியலில் இருக்கும், நாடுகளுக்கு சென்றால்... மூன்று ஆண்டுகளுக்கு பயணத் தடை – சவூதி அரேபியா அரசாங்கத்தின் அனுமதி இன்றி சிவப்பு பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு சென்றால், மூன்று ஆண்டுகளுக்கு பயணத் தடை விதிக்கப்படும் என சவூதி அரேபியா அரசாங்கம் எச்சரித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக, ஆப்கானிஸ்தான், அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, லெபனான், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, துருக்கி, வியட்நாம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் சிவப்பு பட்டியலில் உள்ளன. ஆகவே இந்த நாடுகளுக்கு நேரடியாகவோ அல்லது வேறொரு நாடு வழியாகவோ பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சென்றால் பயணத் தடை விதிக்கப்படும் என அற…

  13. சில அமெரிக்கர்கள்... சீனாவை கற்பனை செய்யப்பட்ட எதிரியாக சித்தரிப்பதே இருதரப்பு உறவு விரிசலுக்கான காரணம்! சில அமெரிக்கர்கள் சீனாவை கற்பனை செய்யப்பட்ட எதிரியாக சித்தரிப்பதே, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் கடுமையான சிரமங்களை எதிர் கொள்வதற்கான அடிப்படை காரணம் என சீன துணை வெளியுறவு அமைச்சர் ஸீ பெங் தெரிவித்துள்ளார். அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர் வெண்டி ஷெர்மன், சீனா சென்றுள்ள நிலையில், இந்த கருத்து வெளிவந்துள்ளது. வெண்டி ஷெர்மன் அங்கு அமெரிக்கா- சீனா உறவுக்கு பொறுப்பான சீனாவின் துணை வெளியுறவு அமைச்சர் ஸீ பெங் மற்றும் வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகிய இருவரையும் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், இதுகுறித்து சீன துணை வெளியுறவு அமைச்சர் ஸீ…

  14. பிரித்தானியாவில்... ஆயிரக்கணக்கான மக்கள், உணவை அணுக போராடுகிறார்கள்: ஆய்வில் தகவல்! பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொரு ஆறு உள்ளூர் அதிகார சபைகளில் ஒன்றில் பசியின் வீதம், தேசிய சராசரியை விட 150 சதவீதம் அதிகம் என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. ஷெஃபீல்ட் பல்கலைக்கழகம் மற்றும் உணவு அறக்கட்டளை மேற்கொண்ட இந்த ஆய்வில், உணவுப் பாதுகாப்பின்மையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாக விக்கோம்பே அடையாளங் காணப்பட்டுள்ளது. பக்கிங்ஹாம்ஷையரில் 14 சதவீத மக்கள் பசியுடன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 சதவீத மக்கள் உணவை அணுக முடியாமல் தவிக்கின்றனர். யார்க்ஷயரில் 13 சதவீத மக்கள் பசியுடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஐந்து பெரியவர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவ…

    • 4 replies
    • 532 views
  15. எல்லையில் படைகளை குவிக்கும் இந்தியா | இந்தியாவுடன் இணையுமா அமெரிக்கா

    • 5 replies
    • 671 views
  16. பிரேசிலில் கொரோனாவால் ஐந்தரை இலட்சம் பேர் உயிரிழப்பு பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை ஐந்தரை இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று கொரோனாவால் 578 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இறப்பு எண்ணிக்கை 550,502 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, பிரேசிலில் கொரோனாவால் கர்ப்பிணித் தாய்மார்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். அத்தோடு, கொரோனா வைரஸால் உயிரிழந்த கர்ப்பிணித் தாய்மார்களில் ஐந்து பேரில் ஒருவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு வசதியும், மூன்று பேரில் ஒருவருக்கு வென்டிலேட்டர் வசதியும் கிடைத்திருக்கவி…

  17. ஈராக்கில்... இஸ்லாமிய அரச பயங்கரவாதிகளை, எதிர்த்துப் போராட இனி அமெரிக்க துருப்புக்கள் தேவையில்லை! நாட்டில் இஸ்லாமிய அரச பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்கு, அமெரிக்க போர் துருப்புக்கள் இனி தேவையில்லை என ஈராக் பிரதமர் முஸ்தஃபா அல்-காதிமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்கவுள்ள நிலையில், அவரது இந்த கருத்து வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இந்த வாரம் பைடன் நிர்வாக அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, மறுசீரமைப்பிற்கான கால அட்டவணை இருக்கும். ஈராக்கின் பாதுகாப்புப் படைகளும் இராணுவமும், அமெரிக்க தலைமையிலான கூட்டணி துருப்புக்கள் இல்லாமல் நாட்டைக் காக்கும் திறன் கொண்டவை. ஈராக் பாதுகாப்புப…

  18. பருவநிலை மாற்றம்: உலகின் வயிற்றில் புளியை கரைக்க போகும் ஐபிசிசி அறிக்கை: விஞ்ஞானிகள் எழுத தொடங்கினர் மேட் மெக்கிராத் சுற்றுச்சூழல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,JUSTIN SULLIVAN படக்குறிப்பு, வரலாறு காணாத வகையில் வற்றிய கலிபோர்னியா ஏரி ஒன்று. பேய் மழையும் பெருவெள்ளமும் ஒரு பக்கம் பல நாடுகளை உருக்குலைக்கின்றன. மறுபுறம், காட்டுத் தீயும், வெப்பமும் பல நாடுகளை கதிகலங்கச் செய்கின்றன. இயற்கை பேரிடர்கள் பேரபாயமாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இவற்றால் புவி என்ன மாதிரியான ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது? தீர்வு என்ன என…

  19. வன்முறை போராட்டங்களின் பின் துனிசியா பிரதமர் பதவி நீக்கம் நாடு முழுவதும் வன்முறை போராட்டங்கள் வெடித்ததை அடுத்து துனிசியாவின் ஜனாதிபதி, பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சியை பதவி நீக்கம் செய்து பாராளுமன்றத்தை இடைநீக்கம் செய்துள்ளார். கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தை அரசாங்கம் தவறாக கையாள்வது தொடர்பாக பல துனிசிய நகரங்களில் வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளது. இந் நிலையில் ஒரு புதிய பிரதமரின் உதவியுடன் நிறைவேற்று அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கைஸ் சையத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாராளுமன்றம் இடையே அதிகாரங்களை பிரிக்கும் துனிசியாவின் 2014 அரசியலமைப்பிற்கு இது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. பல நகரங்களில் …

  20. ஆப்கான் பாதுகாப்பு படையின் சிறப்பு நடவடிக்கையில் 24 மணிநேரத்தில் 262 தலிபானியர்கள் பலி ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை (ஜூலை 24) தங்கள் பாதுகாப்புப் படையினர் பல்வேறு மாகாணங்களில் 262 தலிபான் பயங்கரவாதிகளை வெறும் 24 மணி நேரத்தில் கொன்றதாகக் கூறியுள்ளது. ஆப்கானிய படைகளின் விசேட நடவடிக்கைகளின் போது 176 தலிபான் பயங்கரவாதிகள் காயமடைந்துள்ளதாகவும், 21 மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் செயலிழக்கம் செய்யப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் லக்மான், நங்கர்ஹார், நூரிஸ்தான், குனார், கஸ்னி, பக்தியா, காந்தஹார், ஹெராத், பால்க், ஜோவ்ஜன், ஹெல்மண்ட், குண்டுஸ் மற்றும் கபீசா ஆகிய மாகாணங்களில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரி…

  21. வர்த்தக மோதல் : அமெரிக்கா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது சீனா !! அமெரிக்காவின் சில தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக சீனா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஹொங்கொங்கில் சீன அதிகாரிகள் மீதான சமீபத்திய அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவின் முன்னாள் வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக இந்த தடைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பிரதி செயலாளர் வெண்டி ஷெர்மன் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பாரிய ஜனநாயக சார்பு போராட்டங்களுக்கு பதிலளிக்கும்…

  22. கட்டாய தடுப்பூசி திட்டம் : போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் கட்டாய தடுப்பூசி திட்டத்திற்கு எதிப்பு தெரிவித்து சனிக்கிழமை மத்திய ஏதென்ஸில் கூடியிருந்த மக்களை கலைக்க கிரேக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக கிரேக்க நாடாளுமன்றத்திற்கு வெளியே 4,000 க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில எதிர்ப்பாளர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் இதற்கு பதிலளிக்கும் வகையில் கண்ணீர்ப்புகை வீசியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு தொற்று பரவ தொடங்கியதில் இருந்து கிரேக்கத்தில் 12,890 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 11 மில்லியன் மக்கள் தொகையில் சு…

  23. டோக்கியோ ஒலிம்பிக்கில், கொவிட் பாதிப்பை தவிர்க்க முடியாது: உலக சுகாதார அமைப்பு! டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கூறுகையில், ‘கொரோனா பாதிப்பு புள்ளிவிபரத்தின் மூலம், ஒலிம்பிக் தொடரில் வைரஸ் பாதிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. வைரஸ் பிரச்சினையை முற்றிலும் ஒழிப்பதென்பது முடியாத காரியம். விளையாட்டு வீரர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விரைவாக அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த வேண்டும். இதன்மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம். ஆனால், உலகில் வழங்கப்பட்ட தடுப்பூசியில், 75 சதவீதத்தை, 10 நாடுகள் மட்டுமே பங்கு போட்டுக் கொண்டுள்ளன. உலகின் ப…

  24. பெகாசஸ் விவகாரம்: தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்டிய பிரான்ஸ் ஜனாதிபதி! பூதாகரமாக வெடித்துள்ள பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்டியுள்ளார். இதுகுறித்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் கூறுகையில், ‘இந்த விவகாரத்தை ஜனாதிபதி உன்னிப்பாகவும் தீவிரமாகவும் கவனித்துவருகிறார். பெகாசஸ் விவகாரம் மற்றும் ஃசைபர் பாதுகாப்பு குறித்து விவாதிக்க திட்டமிடப்படாத தேசிய பாதுகாப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார். பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் உலகின் முக்கியப் ஊடகவியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்களின் தொலைப்பேசிகளை அவர்கள் சார்ந்த நாட்டின் அரசாங்கமே உளவு பார்த்தது…

  25. குரங்கம்மை பாதிப்பு: அமெரிக்காவில் 200 பேரை தேடிக் கொண்டிருக்கும் அதிகாரிகள் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவின் 27 மாகாணங்களில் 200 பேருக்கும் மேற்பட்டோர் அரிய வகை குரங்கம்மையால் (Monkey pox) பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்புள்ள 200 பேரைக் கண்டறியும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் நைஜீரியாவில் இருந்து அமெரிக்காவின் டெக்சாஸிற்கு வந்த ஒரு நபர் மூலம் மக்களுக்கு இது பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 2003ஆம் ஆண்டுக்கு பிறகு, அமெரிக்காவில் குரங்கம்மை இருப்பது கண்டறியப்பட்ட முதல் நபர் இவர்தான் என்று கருதப்படுகிறது. அந்த நபர் மருத்துவமனையி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.