Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் - Published By: RAJEEBAN 13 JUN, 2025 | 06:52 AM ஈரான்மீது தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரான் ஆளில்லா விமானதாக்குதலையும் ஏவுகணை தாக்குதலையும் மேற்கொள்ளலாம் என்பதால் அவசரகாலநிலையை பிரகடனம் செய்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது இஸ்ரேல் பெருமளவு அணுசக்தி அணுவாயுத இலக்குகளையும் இராணுவ இலக்குகளையும் தாக்குவதாக இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் முன்கூட்டிய தாக்குதலை தொடர்ந்து ஈரான் ஆளில்லா விமான தாக்குதலையும் ஏவுகணை தாக்குதலையும் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/217320 ஈரானின் புரட்சிகர காவல்படையின் தலைவர் இஸ்ரேலி…

  2. 13 JUL, 2025 | 06:36 PM மத்திய காசாவில் நீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடல்களை நுசெரெய்த் அல் அவ்தா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள அவசரசேவை பிரிவினர் ஏழு சிறுவர்கள்; உட்பட 16 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். நுசெய்ரெத் அகதிமுகாமில் தண்ணீர்விநியோகத்தில் ஈடுபட்டிருந்த வாகனத்திற்கு அருகில் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல் இடம்பெற்றது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை தொழில்நுட்ப கோளாறினால் பொதுமக்கள் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இஸ்ரேல் இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாதி இலக்கு…

  3. மிக மோசமான இழப்புகளை எதிர்கொண்டாலும் - தோற்கடிக்கப்படவில்லை - ஹமாஸ் உயிரிழப்பை ஏற்படுத்தும் வலுவுடன் கெரில்லா போர் தந்திரோபாயங்களை பயன்படுத்த ஆரம்பிக்கின்றது - சிஎன்என் Published By: RAJEEBAN 14 JUL, 2025 | 02:56 PM காசாவில் நடந்த இந்த திடீர் தாக்குதல் அந்த தாக்குதல் இடம்பெற்ற பகுதியை போலவே அதிர்ச்சியளிப்பதாகயிருந்தது. . திங்கட்கிழமை இரவு இஸ்ரேலிய இராணுவவீரர்கள் குழு ஒன்று எல்லை வேலியில் இருந்து ஒரு மைல் தொலைவில் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் பயன்படுத்தும் பாதையைக் கடந்து சென்றபோது ஒரு குண்டு வெடித்தது. தொலைதூரத்தில் இயக்கப்பட்ட இது தீவிர ஆர்த்தடாக்ஸ் வீரர்களைக் கொண்ட ஒரு பிரிவான நெட்சா யெஹுதா பட்டாலியனின் துருப்புக்களை துடைத்தெறிந்தது. இரண்டாவது குண்டு வெடித்தபோது ம…

  4. தேனீக்களை உளவாளிகளாக பயன்படுத்த சீனா திட்டம்! தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, அவற்றை தமது தேவைக்கு ஏற்ப பயணிக்க வைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. தேனீக்கள் இயற்கை பேரிடர், தீவிரவாத தடுப்புக்கு உதவும் என்று கூறப்பட்டாலும், தேனீக்களை உளவாளிகளாகவும் பயன்படுத்த முடியும். உயிரினங்களைக் கருவிகள் வாயிலாகக் கட்டுப்படுத்தும், ‘சைபோர்க்’ (Cyborg technology) என்ற தொழில்நுட்பம் தொடர்பாகப் பல நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன. இந்த வகையில், தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, தம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் முயற்சியில், சீனாவைச் சேர்ந்த பீஜிங் தொழில்நுட்ப மையத்தின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, 74 மில்லி கிராம் எடையுள்ள சிறிய கருவி ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். அவற…

  5. 14 JUL, 2025 | 10:50 AM இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரான் ஜனாதிபதிக்கு காயமேற்பட்டது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த மாதம் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரான் ஜனாதிபதி மசூட் பெசெஸ்கியானிற்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் அதிஉயர் பாதுகாப்பு பேரவையின் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த மிகவும் இரகசியமான பகுதியொன்றின் ( நிலத்திற்கு கீழே அமைக்கப்பட்டிருந்தது) நுழைவாயில்கள் மற்றும் அந்த இடத்திற்கு செல்லும் பகுதிகளை இலக்குவைத்து ஜூன் 16ம் திகதி இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது என ஈரான் அரசாங்கத்தின் பார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஜனாதிபதியும் ஏனையவர்களும் அவசர சூழ்நிலைகளின் போது வெளியேறுவதற்கான பகுதி ஊடாக தப்பிச்செ…

  6. உக்ரேனுக்கு சக்திவாய்ந்த ஏவுகணைகளை வழங்குவதாக ட்ரம்ப் அறிவிப்பு! ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராட உக்ரேனுக்கு உதவுவதற்காக அமெரிக்கா பேட்ரியாட் (Patriot) வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அனுப்பும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்தார். வொஷிங்டன் டிசிக்கு வெளியே உள்ள கூட்டுத் தளமான ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், உக்ரேனுக்கு எத்தனை அமைப்புகள் அனுப்பப்படும் என்பதைக் குறிப்பிடவில்லை. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், மொஸ்கோவின் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கு முன்பு அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, உக்ரேனில…

  7. அமெரிக்காவுடன், மீண்டும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் ஈரான் தயார்! அமெரிக்காவுடன், மீண்டும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் தயார் என, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி தெரிவித்தார். அணுசக்தி பயன்பாடு தொடர்பில், அமெரிக்காவுடன், ஈரான் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததுடன் யுரேனியம் செறிவூட்டலை 4 சதவீதத்திற்குள் குறைக்க அமெரிக்கா வலியுறுத்தியது. காரணம், யுரேனியத்தை 90 சதவீதத்திற்கு மேல் செறிவூட்டினால், அதை அணு ஆயுதமாக மாற்ற முடியும். இதற்கிடையே, அமெரிக்காவின் திட்டத்தை ஈரான் நிராகரித்தது. அதைத் தொடர்ந்தே, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலை ஈரான் எதிர்கொண்டது. இந்நிலையில், “எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என உறுதியளித்தால், அண…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ஸ்டெபனி ஹெகார்டி 3 மணி நேரங்களுக்கு முன்னர் நம்ரதா நங்கியாவும் அவரது கணவரும் இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்வது குறித்து தங்களது ஐந்து வயது மகள் பிறந்தது முதலே சிந்தித்து வருகின்றனர். ஆனால் எப்போதும் அவர்கள் முன் வந்து நிற்கும் கேள்வி: 'அந்த குழந்தைக்கு தேவையான செலவுகளை நம்மால் சமாளிக்கமுடியுமா?' மும்பையில் வசித்து வரும் நம்ரதா மருந்துகடையில் பணியாற்றுகிறார். அவரது கணவர் ஒரு டயர் கம்பெனியில் பணியாற்றுகிறார். ஆனால் ஒரு குழந்தைக்கான செலவுகளே அதிகமாக இருக்கிறது. பள்ளி கட்டணம், பள்ளி பேருந்து, நீச்சல் வகுப்புகள், பொது மருத்துவரிடம் செல்வது கூட அதிக செலவு ஏற்படுத்தக்கூடியதுதான். ஆனால் நம்ரதா வளரும் போது வேறு விதமாக இருந்தது,"நாங்கள் வெற…

  9. இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த ஐநா அறிக்கையாளருக்கு எதிராக தடைகள் - அமெரிக்கா அறிவிப்பு Published By: RAJEEBAN 10 JUL, 2025 | 11:35 AM காசாமீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த ஐக்கியநாடுகள் அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிசிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கர்கள் இஸ்ரேலியர்களிற்கு எதிராக ஐசிசி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்கும் விதத்தில் செயற்பட்டமைக்காக பிரான்செஸ்காவிற்கு எதிராக தடைகளை விதிப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஐநா அறிக்கையாளராக செயற்படுவதற்கு பிரான்செஸ்கா பொருத்தமற்றவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர…

  10. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்ஸிக்கோவிற்கு 30 % வரி! ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பு! மெக்ஸிக்கோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 30 % வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றது முதல் பரஸ்பர வரிவிதிப்பு என்ற பெயரில் பல்வேறு நாடுகளுக்கு வரி விதித்து வருகிறார். இந்த நிலையில் எதிர்வரும் ஒகஸ்ட் 1ம் திகதி முதல் மெக்ஸிக்கோ, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 30 % வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் நேற்று (12) அறிவித்துள்ளார். மேலும், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு(Ursula von der Leyen) எழுதிய கடிதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தொடர்ச்சியான வர்த்தக பற்றாக்குறைகள் விரக்தியை ஏற்படுத்துகிறது எனவும் அவர் …

  11. தைவான் மீதான சாத்தியமான போரில் நட்பு நாடுகளின் பங்கு குறித்து அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டும் என்று FT தெரிவித்துள்ளது. தைவானைப் பாதுகாக்க அமெரிக்காவே வெற்று காசோலை உத்தரவாதத்தை வழங்காததால், இந்த கோரிக்கை டோக்கியோ மற்றும் கான்பெர்ரா இரண்டையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தைவான் ஜலசந்தியில் எழுந்துள்ள அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, தீவு அதன் பாதுகாப்பை கணிசமாக வலுப்படுத்தியுள்ளது. இங்கே, அக்டோபரில் தைவான் ஜனாதிபதி லாய் சிங்-டே தளத்திற்கு விஜயம் செய்தபோது, ஹ்சியுங் ஃபெங் III மொபைல் ஏவுகணை ஏவுகணைக்கு முன்னால் ஒரு சிப்பாய் காணப்படுகிறார். ( புகைப்பட உரிமை : REUTERS/TYRONE SIU ) ஜெருசலேம் போஸ்ட் ஸ்டாஃப் எழுதியது ஜூலை 12, 2025…

    • 0 replies
    • 135 views
  12. நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம் - உலக நாடுகள் வர்த்தக உறவுகளை துண்டிக்கவேண்டும் - ஐநா அறிக்கையாளர் 03 JUL, 2025 | 03:52 PM காசா நிலவரம் தொடர்பில் உலக நாடுகள் இஸ்ரேலுடனான வர்த்தக தொடர்புகளை துண்டிக்கவேண்டும் என ஐநாவின் அறிக்கையாளர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தனது அறிக்கையை வெளியிட்டுள்ள உரையாற்றியுள்ள ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன பகுதிகளிற்கான ஐநாவின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம் என தெரிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் நிலைமை ஊழிக்காலம் போன்றது என அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவை உறுப்பினர்கள் …

  13. காசாவில் ஊட்டச்சத்து மருந்திற்காக வரிசையில் காத்துநின்றவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - சிறுவர்கள் உட்பட பலர் பலி 11 JUL, 2025 | 10:13 AM மத்திய காசாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் முன் ஊட்டச்சத்து மருந்துகளுக்காக வரிசையில் நின்றவர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டவரிசையில் எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட குறைந்தது 15 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஒரு மருத்துவமனை தெரிவித்துள்ளது. டெய்ர் அல்-பலாவில் உள்ள அல்-அக்ஸா மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்ட காணொளி மருத்துவர்கள் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது பல குழந்தைகள் மற்றும் பிறரின் உடல்கள் தரையில் கிடப்பதைக் . காண்பித்துள்ளது. இந்த மருத்துவமனையை நடத்தும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட உதவி குழுவான ப்ராஜெக்ட் ஹோப்,…

    • 1 reply
    • 113 views
  14. அகதிகளைப் பரிமாற்ற பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா திட்டம்! பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் ‘One in, One out‘ எனப்படும் புதிய திட்டத்தின் கீழ், அகதிகளை பரிமாற்றும் முயற்சியை தொடங்கியுள்ளன. இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு நேற்றைய தினம் வெளியானது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் பிரித்தானிய விஜயத்தினை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்தல் மற்றும் அகதிகளை கட்டுப்படுத்தவே இத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ், சிறு படகுகள் மூலம் இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகள் பிரான்ஸுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர். இதற்குப் பதிலாக, பிரான்ஸில் இருந்து அங்கீகாரம் பெற்ற…

  15. வரி அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெனால்ட் ட்ரம்பின் சூப்பர் மேன் அவதாரம்! உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து, தனது கட்டண அச்சுறுத்தால் சந்தை ஏற்ற இறக்கங்களைத் குழப்பத்தில் ஆழ்த்தி வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, வெள்ளை மாளிகை ‘சூப்பர்மேன்’ என்று சித்தரித்துள்ளது. 79 வயதான அவரை “நம்பிக்கையின் சின்னம்” என்று அழைத்த வெள்ளை மாளிகை, ஜேம்ஸ் கன் இயக்கிய சூப்பர்மேன் திரைப்படம் வெள்ளிக்கிழமை (11) வெளியானதைத் தொடர்ந்து, சூப்பர்மேன் கதாப்பாத்திரத்தில் AI-உருவாக்கிய ட்ரம்பின் படத்தை வெளியிட்டது. வெள்ளை மாளிகை அல்லது ட்ரம்ப்பால் AI-உருவாக்கப்பட்ட படங்களைப் பகிர்வது புதுமையல்ல. கடந்த மே மாதம் போப் லியோ தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி போப் போன்ற AI-உ…

  16. கனேடிய பொருட்களுக்கு 35% வரி விதித்த ட்ரம்ப்! எதிர்வரும் ஒகஸ்ட் 1 முதல் கனேடிய பொருட்களுக்கு 35% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெரும்பாலான வர்த்தக பங்காளிகள் மீது 15% அல்லது 20% மொத்த வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியதோடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதன் பொருட்களுக்கான புதிய வரி விகிதத்தை விரைவில் அறிவிப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில், புதிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு நாடுகளும் சுயமாக விதித்துக் கொண்ட காலக்கெடுவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மேற்கண்ட அறிவிப்பு வந்துள்ளது. கனடா மீதான அண்மைய வரிகளை ட்ரம்ப் வியாழக்கிழமை (10) சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அதில், கனடாவுக்கான புதிய வரிகள் ஒகஸ்ட் 1 முதல…

  17. செங்கடல் பகுதியில் கப்பல் மீது ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - மூவர் பலி Published By: RAJEEBAN 10 JUL, 2025 | 09:31 AM செங்கடல் பகுதியில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் கப்பலொன்றின் மீது மேற்கொண்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். லைபீரிய கொடியுடன் 25 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த கிரேக்கத்தை சேர்ந்த எட்டேர்னிட்டி சி என்ற சரக்கு கப்பல் மீது சிறிய படகுகளில் இருந்து ஆர்பிஜி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செவ்வாய்கிழமை முழுவதும் இந்த தாக்குதல் இடம்பெற்றது அதன் பின்னரே மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகின என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலை நோக்கி சென்றுகொண்டிருந்த கப்பலையே தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ள ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் பலரை கைதுசெய்துள்ள…

    • 1 reply
    • 163 views
  18. போராட்டக்காரர்களை கொல்ல உத்தரவிட்ட ஷேக் ஹசீனா – வெளியான ஆடியோ பதிவு கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி, வங்கதேசத்தில் மாணவர்கள் சூரையாடியதாகக் கூறப்பட்ட மெட்ரோ ரயில் நிலையத்தை ஷேக் ஹசீனா பார்வையிட்டபோது... கட்டுரை தகவல் கிறிஸ்டோபர் கில்ஸ், ரித்தி ஜா, ரஃபித் ஹுசைன் & தாரேகுஸ்ஸமன் ஷிமுல் பிபிசி ஐ புலனாய்வு பிரிவு & பிபிசி வங்க மொழி சேவை 10 ஜூலை 2025, 05:27 GMT கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு எதிராக கொடிய அடக்குமுறையைக் கையாள அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா அனுமதி அளித்ததாக, அவரது தொலைபேசி அழைப்புகளில் ஒன்றின் ஆடியோ பதிவு காட்டுகிறது. இந்த ஆடியோ பதிவு பிபிசி ஐ குழுவினரால் சரிபார்க்கப்பட்டது. கடந்த …

  19. அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுப்போம்! – பிரேசில் ஜனாதிபதி. அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா ( Lula da Silva) தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரேசிலில் இருந்து வரும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா, தங்களது இறையாண்மை நிலையை வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பிரேசிலில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்படும் என்று நேற்று அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது” ‘பிர…

  20. 09 JUL, 2025 | 02:48 PM சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தங்களது வான்பரப்பினை பயன்படுத்துவதற்கு ஏன் என இத்தாலி கிரேக்கம் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெளிவுபடுத்தவேண்டும் என ஐநாவின் பாலஸ்தீனத்திற்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐசிசி தேடும் பெஞ்சமின் நெட்டன்யபாகுவிற்கு தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் இத்தாலி பிரான்ஸ் கிரேக்கம் ஆகிய நாடுகள் அனுமளியளித்தது ஏன் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவை கைதுசெய்யவேண்டிய கடப்பாட்டை இந்த நாடுகள் கொண்டுள்ளன என தெரிவித்துள்ளார். சர்வதேச சட்ட ஒழுங்கை மீறும் ஒவ்வொரு அரசியல் …

  21. Published By: DIGITAL DESK 3 09 JUL, 2025 | 12:42 PM பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மார்சேயில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி ஒன்பது தீயணைப்பு வீரர்கள், 22 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 110 பேர் காயமடைந்துள்ளனர் என பிரான்ஸ் உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. மார்சேய் பகுதியை சென்று பார்வையிட்ட உள்நாட்டு அமைச்சர் புருனோ ரீடெய்லியூ அங்கு அவர் உள்ளூர் அதிகாரிகளைச் சந்தித்தார். தற்போது தீயை அணைக்கும் பணியில் 800 தீயணைப்பு வீரர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். "கடற்படை தீயணைப்பு வீரர்கள் கையில் குழாய்களுடன் கொரில்லாப் போரை நடத்தி வருகின்றனர்" என மார்சேயின் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையை மேற்கோள் காட்…

  22. சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் தொடர்வதில் சிக்கல்! சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் (Xi Jinping) தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) அண்மைக்காலமாக பொது வெளிகளில் தோன்றுவதைத் தவிர்த்து வருகின்றார். சீனாவில் ஜனாதிபதியாக இருக்கும் நபர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றால் அதிகார மாற்றம் ஏற்படும் என்பது கடந்த கால வரலாறு. இதனால் அவர் விரைவில் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது நடக்கும் பட்சத்தில் சீனாவின் புதிய ஜனாதிபதியாக யார் வருவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனாவில் ஒற்றை கட்சி ஆட்சி முறை உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தான் பிரதானமாக உள்ளது. ச…

    • 2 replies
    • 319 views
  23. 09 JUL, 2025 | 10:33 AM பெண்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தியமைக்காக தலிபான் தலைவர்களிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. தலிபானின் இரண்டு முக்கிய தலைவர்களிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 2021ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து தலிபானின் உயர் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சதா மற்றும் தலைமை நீதிபதி அப்துல் ஹக்கீம் ஹக்கானி ஆகியோர் பெண்கள் மற்றும் சிறுமிகளை நடத்திய விதத்தின் மூலம் மனித குலத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டனர் என நம்புவதற்கான நியாயமான காரணங்கள் உள்ளன சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் அவர்கள் பெண்கள் சிறுமிகளிற்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் 12 வயத…

  24. காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தை; ட்ரம்ப் – நெதன்யாகு இடையே நடைபெற்ற சந்திப்பு! காசாவில் நடந்து வரும் போர் குறித்து விவாதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் செவ்வாய்க்கிழமை (08) மாலை இரண்டாவது முறையாக சந்தித்தனர். 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொள்ள வேண்டிய ஒரே ஒரு நிபந்தனை மீதமுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகத்தின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் கூறியதை அடுத்து இந்த சந்திப்பு நடந்தது. செவ்வாயன்று 5:00 EST (21:00 GMT) மணிக்குப் பிறகு நெதன்யாகு வெள்ளை மாளிகைக்கு நுழைந்து ட்ரம்புடன் சந்திப்பினை மேற்கொண்டார். இந்தச் சந்திப்புக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவல்லை. இந்த சந்திப்புக்கு முன்னதா…

  25. இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ; பாலி தீவுக்கான விமான சேவைகள் இரத்து Published By: DIGITAL DESK 3 18 JUN, 2025 | 10:49 AM இந்தோனேசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமான பாலி தீவுக்குக் கிழக்கே எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. பாலி தீவின் கிழக்குப் பகுதியிலுள்ள புளோரஸ் தீவில் 1,703 மீட்டர் உயமுடைய இரட்டை சிகரங்களைக் கொண்ட “மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி” (Mount Lewotobi Laki-Laki) எரிமலை செவ்வாய்க்கிழமை (18) முதல் வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது. எரிமலை வெடித்து சிதறி வானத்தில் கோபுரம் போன்று 10 கிலோ மீற்றர் உயரத்துக்கு அதன் சாம்பல் வெளியேறியுள்ளது. இதனால் பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இரத்து செய்யப்பட்டுள்ள விமானங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.