Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தாய்வான் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு தாய்வானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் வெள்ளிக்கிழமை ரயிலொன்று தடம்புரண்டு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 36 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த விபத்தில் மேலும் 72 பேர் காயமடைந்துள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக ஆரம்ப கட்ட தகவல்கள் நால்வர் உயிரிழந்தாகவும் 20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தாகவும் கூறியிருந்தன. பல சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு தைப்பேவிலிருந்து டைதுங் நோக்கி பயணித்த எக்ஸ்பிரஸ் ரயிலொன்றே ஹுவாலியனுக்கு வடக்கே ஒரு சுரங்கப்பாதையில் தண்டவாளத்திலிருந்து இறங்கி, சுரங்கப்பாதையின் சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தீயண…

  2. எத்தியோப்பியாவில் துப்பாக்கி ஏந்தியவர்கள் முன்னெடுத்த தாக்குதல்களில் 30 பேர் பலி எத்தியோப்பியாவின் மத்திய ஒரோமியா பிராந்தியத்தில் அமைந்துள்ள கிராமமொன்றில் துப்பாக்கி ஏந்தியவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் மேலும் 12 பொதுமக்கள் காயமடைந்ததாகவும் எத்தியோப்பிய அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். தாக்குதலானது மத்திய அரசாங்கத்திற்கு சவால் விடும் வகையில் இன வன்முறையை தூண்டியுள்ளது. தாக்குதலை நேரில் கண்ட 50 வயதான முதியவர் ஒருவர், நாங்கள் கார்களை பயன்படுத்தி இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் சென்றதாகவும், 30 பேரை அடக்கம் செய்ததாகவும் கூறினார். அதேநேரம் முதியவரும் அவரது குடும்பத்…

    • 3 replies
    • 513 views
  3. 55 வயதிற்குட்பட்டவர்களுக்கான... அஸ்ட்ராஸெனாகா கொவிட்-19 தடுப்பூசி விநியோகம் இடைநிறுத்தம்! பெரும்பாலான மாகாணங்கள், 55 வயதிற்குட்பட்டவர்களிடையே அஸ்ட்ராஸெனாகா தடுப்பூசி விநியோகத்தை நிறுத்pயுள்ளது. முன்னதாக பிரின்ஸ் எட்வர்ட் தீவு, 18 முதல் 29 வயதுக்குட்பட்ட தகுதியுள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசிக்கான சந்திப்புகளை நடவடிக்கை எடுத்தது. இதன்மூலம் புதுப்பிப்பை அறிவித்த முதல் பிராந்தியமாக இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, கியூபெக் அதிகாரிகளும் 55 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தப் போவதாக அறிவித்தனர். அதே நாளில் மனிடோபா இதேபோன்ற புதுப்பிப்பைப் பகிர்ந்து கொண்டது. இதனிடையே அஸ்ட்ராஸெனாகா தடுப்பூசி விநியோகத்தை நிறுத்துமாறு கனடாவின் ந…

  4. பரிஸ் நகரம் 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாயை இழந்துள்ளது! கடந்த 2020ஆம் ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பரிஸ், 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இல் து பிரான்சுக்கான பிராந்திய சுற்றுலாத்துறை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகையே முடக்கிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால், பரிஸூக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதனால், விமான போக்குவரத்துக்கள், தங்குமிடங்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதற்கமைய பரிஸ் 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 33.1 மில்லியன் பயணிகள் வரத்த…

  5. தான்சானியா நாட்டு ஜனாதிபதியின் இறுதி ஊர்வலத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக அதிகரிப்பு தான்சானியா நாட்டின் ஜனாதிபதி ஜான் மகுஃபுலியின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்த 61 வயதான ஜான் மகுஃபுலி, சிகிச்சை பலனின்றி கடந்த 17ஆம் திகதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன. இதன்போது, ஜான் மகுஃபுலிக்கு இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இதனால் ஏற்பட்ட சன நெருக்கடியில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சன நெரிசலில் சிக்க…

  6. சீனாவுடனான தொடர்புகளைப் பேணும் போது இலங்கை இழைத்த தவறு, எமக்கான பாடம் – பங்களாதேஷ் 25 Views சீனாவுடனான தொடர்புகளைப் பேணும் போது இலங்கை இழைத்த தவறுகளிலிருந்து தமது நாடு பாடம் கற்றுக்கொள்ளதாக பங்களாதேஷ் பிரதமர் ஹசீனாவின் வெளிவிவகார ஆலோசகர் கௌஹர் ரிஸ்வி தெரிவித்துள்ளார். மேலும் சீனாவுடனான தொடர்புகளின் போது மிகவும் சீரானதும் சரிவர அளவீடு செய்யப்பட்டதுமான முதலீட்டுக்கொள்ளையையே தாம் பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபோட்ரி போன்ற நாடுகள் சீனாவிடம் பெற்ற கடனை மீளச்செலுத்துவதற்கான ஆற்றலை இழந்துள்ளமையினால் அவற்றின் சொத்துக்கள் மீதான கட்டுப்பாட்டை சீனாவிற்கு நிர்பந்திக்க…

  7. பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: அவுஸ்ரேலியாவில் இரு அமைச்சர்கள் பதவி நீக்கம்! அவுஸ்ரேலியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிக்கிய இரு அமைச்சர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ், அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர் ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்கி பிரதமர் ஸ்கொட் மோரிசன் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதிலாக உட்துறை அமைச்சர் பீட்டர் தட்டனுக்கு பாதுகாப்புத் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்து. அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பெண்களுக்கான தொடர்ச்சியான பதவி உயர்வுகளையும் பிரதமர் அறிவித்தார். அவுஸ்ரேலிய அமைச்சரவையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களுக்கு அதிக பிரதிநிதித்து…

  8. பாதுகாப்பு துறையில் பணியாற்றும் நாய்கள்- குதிரைகளுக்கு ஓய்வூதியம்: போலந்து அரசாங்கம் திட்டம்! பொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு ஓய்வூதியம் வழங்க போலந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் மீட்புப் பணி, வெடிகுண்டு அகற்றுதல், தேடுதல் பணி எனப் பல உதவிகளைக் புரிந்துவரும் விலங்குகள், அரச வேலையில் இருந்து வெளியேறிய பிறகு அவற்றின் எதிர்காலத்தை சிந்தித்து இந்த தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது. இதுகுறித்து போலந்து உட்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசாங்கம் வேலை செய்யும் விலங்குகளால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. மேலும் பல குற்றங்கள் கண்டறியப்படுகின்றன. ஆகையால் அந்த விலங்குகளுக்கு நன்றி …

  9. மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: 90 பேருக்கும் மேல் சுட்டுக் கொலை பட மூலாதாரம், GETTY IMAGES மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் கண்மூடித் தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குழந்தைகள் உள்பட 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக அரசியல் கைதிகளுக்கான உதவி கூட்டமைப்பு (ஏ.ஏ.பி.பி) எனும் கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி மியாமரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபின், போராட்டக்காரர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்ட அதிக எண்ணிக்கை இதுவே ஆகும். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று ஏ.ஏ.பி.பி தெரிவிக்கிறது. மியான்மரில் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு …

  10. தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் தொடரும் நவகாலனீய அடக்குமுறைகள் 51 Views காலனீயக் குடியேற்றங்களை நிறுவும் நோக்குடன் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் இஸ்ரேல் யூத தேசிய நிதியம் மேற்குக் கரையிலுள்ள பாலஸ்தீன நிலங்களை வாங்கி, அவ்வாறு நிலங்களைக் கையகப்படுத்துவதைச் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயற்பாடு எனப் பெயரிட்டு அழைக்கிறது. தீவிர வலதுசாரிகளான இந்துத்துவ தேசிய அமைப்புகள் பாசிசத் தன்மையுள்ள தங்கள் கொள்கைகளை உலகம் பூராவும் பரப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன் அதனைக் காலனீயத்திலிருந்து மீளுதல் என்றும் இனவாதத்துக்கு எதிரானதென்றும் அழைக்கிறார்கள். அதேவேளை மியன்மாரில் இனவழிப்பை நியாயப்படுத்துகின்ற பௌத்த துறவிகள் ‘அமைதிக்கான சமயம்…

  11. பிரித்தானியாவின் விசேட கடவுச் சீட்டை ஏற்க வேண்டாமென சில நாடுகளிடம் ஹொங்கொங் கோரிக்கை! பிரித்தானியாவின் விசேட கடவுச் சீட்டுக்களை ஏற்க வேண்டாம் என ஹொங்கொங் அரசாங்கம் சில வெளிநாட்டு அரசாங்கங்களைக் கேட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வேலை செய்யும் குடிமக்களின் விடுமுறை விசாக்களுக்கு விண்ணப்பிக்கப் பயன்படுத்தும் பிரித்தானிய தேசிய வெளிநாட்டு கடவுச்சீட்டை ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறு 14 நாடுகளிடம் கூறியுள்ளது. அதில், கடந்த ஜனவரி 31ஆம் திகதியில் இருந்து பிரித்தானிய தேசிய வெளிநாட்டு கடவுச்சீட்டை செல்லுபடியாகும் பயண ஆவணமாகக் கருதவில்லை எனவும், இதற்குப் பதிலாக ஹொங்கொங் கடவுச்சீட்டைப் பயன்படுத்த வேண்டும் என்று கோர…

  12. ஏவுகணைகளை ஏவி மீண்டும் பதற்றத்தை அதிகரித்தது வடகொரியா வட கொரியா ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக ஒரு ஜோடி கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடலுக்குள் ஏவி சோதனை செய்துள்ளது. வட கொரியா தனது கிழக்கு கடற்பரப்பில் இரண்டு சந்தேகத்திற்குரிய ஏவுகணைகளை இன்று ஏவியது என்று ஜப்பானிய பிரதமர் சுகா யோஷிஹைட் வியாழக்கிழமை தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களின் கீழ் வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கை டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக பதற்றத்தைத் தூண்டுவதாகவும், வட கொரியா கொள்கையை இறுதி செய்யும் பைடன் நிர்வாகத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளத…

    • 1 reply
    • 584 views
  13. தடுப்பூசி ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாடுகளை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம் தடுப்பூசி ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாடுகளை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. நாடுகளுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மதிக்க அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தவறியதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியிருந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவுள்ளன. அதன்படி இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் வியாழக்கிழமை ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறித்த திட்டங்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவுஸ்ரேலியாவுக்கு 250,000 டோஸ் கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையை இத்தாலிய அரசாங்கம் தடுத்திருந்தது. இந்த நடவடிக்கைக்கு சில வாரங்களுக்குப் பின்னர் மில்…

  14. பிரித்தானியாவில் காரணமின்றி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் எவருக்கும் 5,000 பவுண்டுகள் அபராதம்! புதிய கொரோனா வைரஸ் சட்டங்களின் ஒரு பகுதியாக, பிரித்தானியாவில் காரணமின்றி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் எவருக்கும் 5,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கும் சட்டம், அடுத்த வாரம் நடைமுறைக்கு வர உள்ளது. இன்று (திங்கட்கிழமை) வீட்டில் தங்கும் விதி முடிவடைகின்ற போதிலும், வெளிநாட்டு விடுமுறைகள் தற்போது அனுமதிக்கப்படவில்லை. கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான தற்போதைய திட்டத்தின் கீழ், பிரித்தானியாவில் மக்கள் விடுமுறைக்கு வெளிநாடு செல்லக்கூடிய ஆரம்ப திகதி மே 17 ஆகும். இருப்பினும், ஐரோப்பாவில் கொவிட் நிகழ்வுகளின் மற்றொரு எழுச்சி, ஐரோப்பா முழுவதும் தடுப்பூசிகளின் மெதுவான வெளியீடு ஆக…

  15. ஜேர்மனியில்... மூன்று வாரங்கள், நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல் ஈஸ்டர் விடுமுறையை நிறுத்தி கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக மூன்று வாரங்கள் நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை ஜேர்மனி அறிவித்துள்ளது. பிராந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அதிபர் அங்கலா மேர்க்கெல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ஏப்ரல் முதலாம் திகதி முதல் 5 வரை கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையானதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஈஸ்டர் பண்டிகைக்கு ஐந்து நாட்கள், ஜேர்மனியர்கள் வீட்டிலேயே தங்க வேண்டும் என்றும் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://athavannew…

  16. சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் வாழும் சிறுபான்மை வீகர் முஸ்லிம்கள் மீது, சீனா மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம்சாட்டி சீன அதிகாரிகள் மீது பல மேற்கத்திய நாடுகள் தடைகளை விதித்திருக்கின்றன. சீனாவின் வட மேற்குப் பகுதியில் இருக்கும் ஷின்ஜியாங் பகுதியில் வீகர் இஸ்லாமியர்களை ஒரு முகாமில் அடைத்து வைத்திருக்கிறது சீனா. அம்முகாமில் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும், கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியாக, சீன அதிகாரிகள் மீதான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. சீனாவும் ஐரோப்பிய அதிகாரி…

  17. அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு – போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் உயிரிழப்பு அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பவுல்டர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர், திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்தபடி ஓடினர்.இது குறித்து தகவலறிந்து அங்கு போலீசார் விரைந்து வந்தனர். சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளே இருந்ததால், போலீசார் அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். அப்போது அந்த நபர் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு போலீஸ் அதிகார…

  18. 2020ஆம் ஆண்டில் இறப்பு வீதம் ஏழு சதவீதமாக உயர்வு! 2020ஆம் ஆண்டில் பொதுவாக எதிர்பார்க்கப்பட்டதை விட 7 சதவீதம், அதிகமான இறப்புகளை பிரித்தானியா பதிவுசெய்துள்ளது. இது ஐரோப்பாவில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும் என தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகத்தின் தரவுகள் காட்டுகின்றன. பிரித்தானியாவிற்குள், இங்கிலாந்தின் இறப்பு வீதம் ஆண்டு முழுவதும் எதிர்பார்த்த அளவை விட 8 சதவீதம், ஸ்கொட்லாந்தில் 6 சதவீதம், வடக்கு அயர்லாந்து 5 சதவீதம் மற்றும் வேல்ஸ் 4 சதவீதம் ஆகும். 2020ஆம் ஆண்டு இலையுதிர்கால அலைகளின் போது, போலந்து, ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளும் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்தன. தேசிய புள்ளிவிபரங்களுக்கான தரவுகள், இந்த ஆண்டு பிரித்தானியா மற்…

  19. உலகின் வலிமையான இராணுவமாக சீனா: அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா! உலகின் வலிமையான இராணுவமாக சீனாவின் இராணுவம் உள்ளதாக பாதுகாப்பு வலைத்தளமான மிலிட்ரி டைரக்ட் (Military Direct) தெரிவித்துள்ளது. குறித்த வலைத்தளத்தின் ஆய்வு அறிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் ரஷ்யா மூன்றாவது இடத்திலும் இராணுவ வலிமையைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியா நான்காம் இடத்திலும் பிரான்ஸ் ஐந்தாமிடத்திலும் பிரித்தானியான ஒன்பதாம் இடத்திலும் உள்ளன. இராணுவத்துக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு, படை வீரர்களின் எண்ணிக்கை, முப்படைகளின் படைக்கலன்களின் தொகை, அணு வளங்கள், நவீன கருவிகள், படை வீரர்கள…

    • 2 replies
    • 950 views
  20. அரை நூற்றாண்டில் அவுஸ்திரேலியாவில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு வார இறுதியில் அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் பெய்த கனமழையால் சில பகுதிகளில் அரை நூற்றாண்டில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இதனால் ஆயிரக்கணக்கானவர்களை வெளியேற்றப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதமாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸில் மட்டும், 12 பகுதிகளுக்கு வெள்ள அபாயமும் வெளியேற்றும் எச்சரிக்கைகளும் வெளியிடப்பட்டன. 8 மில்லியன் மக்களுடன் அவுஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இது உள்ளது. அவுஸ்திரேலிய வானிலை ஆய்வகத்தைச் சேர்ந்த ஜொனாதன் ஹவ், மழை மற்றும் பலத்த காற்று இரண்டுமே பேரழிவை ஏற்படுத்துவதாகவும், ஞாயிற்று…

  21. மலேசியாவுடனான தூதரக உறவுகளை துண்டித்தது வடகொரியா 35 Views மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வட கொரியாவை சேர்ந்த, முன் சோல் மியோங் என்பவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ள அமெரிக்கா அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி மலேசிய அரசை கேட்டுக்கொண்டது. இதனை ஏற்று, முன் சோல் மியோங்கை அமெரிக்காவுக்கு நாடு கடத்த மலேசிய கோர்ட்டு அண்மையில் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மலேசியாவுடனான தூதரக உறவை துண்டிப்பதாக அறிவித்துள்ளது வட கொரியா. இதுகுறித்து வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மலேசியாவில் வசிக்கும் ஒரு வடகொரியருக்கு எதிராக அமெரிக்கா விதித்த பண மோசடி குற்றச்சா…

  22. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்- இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? பதிவு: மார்ச் 19, 2021 22:30 IST சுகாதாரம், கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. சென்னை மெரினா கடற்கரை உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியல், ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியானது. மொத்தம் 149 நாடுகள் மதி…

    • 0 replies
    • 613 views
  23. அல்ஜீரிய சுதந்திரப் போராட்டத்தின் உயர்மட்ட ஆளுமையை பிரெஞ்சு அரசு கொலை செய்தது 35 Views பிரெஞ்சு அதிபரின் ஒப்புதல் அல்ஜீரியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணி வகித்த முக்கிய ஆளுமை ஒருவரைப் பிரெஞ்சு இராணுவ வீரர்கள் கொலைசெய்து பின்னர் அதனை மூடிமறைத்ததாக பிரெஞ்சு அதிபர் மக்ரோன் (Macron) முதல் தடவையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். தமது காலனீய காலத்துக் குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பிரெஞ்சு அரசின் கொள்கையில் இது மிக அண்மைக்கால முயற்சியாகும். அலி பூமென்ஜெல்லின் (Ali Boumendjel) நான்கு பேரப்பிள்ளைகளைச் சந்தித்த மக்ரோன், குறிப்பிட்ட சட்டத்தரணி தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதைசெய்யப்பட்டு 1957ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் திகதி அல…

    • 1 reply
    • 669 views
  24. கொரோனா தொற்று பல ஆண்டுகளாக தொடர்ந்தால் அது பருவகால நோயாக மாறும் : ஐ.நா. எச்சரிக்கை பதிவு: மார்ச் 18, 2021 09:11 AM கொரோனா தொற்று பல ஆண்டுகளாக தொடர்ந்தால் அது பருவகால நோயாக உருவாகும் என ஐக்கிய நாடுகள் சபை கூறி உள்ளது. ஜெனீவா சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.18 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 1…

  25. கோவிட் தொற்று புரளிக்குப் பிறகு இறந்த தான்சானியா அதிபர் ஜான் மகுஃபூலி பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, 2015ம் ஆண்டு முதல் முதலில் அதிபர் ஆன மகுஃபூலி. தான்சானியா அதிபர் ஜான் மகுஃபூலி (வயது 61) இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார் நாட்டின் துணை அதிப சமியா சுலுஹு ஹாசன். முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக புரளி பரவியது. இவர் கொரோனா வைரஸ் குறித்தே சந்தேகங்களை எழுப்பிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு வாரங்களாக பொது வெளியில் காணப்படாமல் இருந்த நிலையில் டார் எஸ் சலாம் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் இதயக் கோளாறு காரணமாக அவர் இறந்துவிட்டதாக அரசுத் தொலைக்காட்சி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.