Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நேரடிச் செய்தி பிரசுரிக்கப்பட்ட நேரம் 8:548:54 வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்கள் என்ன செய்வார்கள்? வேட்பாளர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் இந்த வாக்குப்பதிவு நாளானது ஒரு காத்திருப்பு நாள் போலதான் அமையும். என்ன செய்து கொண்டிருப்பார் டிரம்ப்? அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நேர்காணல் கொடுத்துக் கொண்டிருப்பார். அல்லது தொலைக்காட்சியில் வாக்குப்பதிவு குறித்த நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருப்பார். கடந்த மூன்று தினங்களாக 14 தேர்தல் பேரணிகளில் கலந்து கொ…

  2. மலிவான பொருட்களை விற்கும் நாட்டின் மிகப்பெரிய அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளம்! ஒன்றாரியோவில் சில வித்தியாசமான மற்றும் மலிவான பொருட்களை விற்கும் நாட்டின் மிகப்பெரிய அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜிசிசர்பிளஸ் (GCSurplus) எனும் வலைத்தளத்தின் ஊடாக லாரிகள் மற்றும் வேகப் படகுகள் மற்றும் அட்டைப் பெட்டிகள், பல் உபகரணங்கள் மற்றும் பழுதுபார்க்கும் கடை உபகரணங்கள் போன்றவற்றினை கொள்வனவு செய்யலாம். சில பொருட்கள் உபரி. அதாவது அரசாங்கம் தங்கள் கைகளில் அதிகமான பொருட்களை வைத்திருந்தது. பிற பொருட்கள் ஒரு குற்றத்தில் பயன்படுத்தப்பட்டதாக அல்லது சட்டவிரோதமாக சம்பாதித்த நிதியுடன் வாங்கப்பட்டதாக சந்தேகித்து ஆர்சிஎம்பி அல்லது ஒன்றாரியோ மாகாணக் பொலி…

  3. ஒசாமாவின் மகனின் மனைவி அல்ஹைதாவில் மிக முக்கிய உறுப்பினராக மாறுவார் என கருதிய புலனாய்வு அமைப்புகள் – ஈரானில் அவரையும் இலக்கு வைத்தது இஸ்ரேலின் இரகசிய புலனாய்வு அமைப்பு Rajeevan Arasaratnam November 15, 2020 ஒசாமாவின் மகனின் மனைவி அல்ஹைதாவில் மிக முக்கிய உறுப்பினராக மாறுவார் என கருதிய புலனாய்வு அமைப்புகள் – ஈரானில் அவரையும் இலக்கு வைத்தது இஸ்ரேலின் இரகசிய புலனாய்வு அமைப்பு2020-11-15T19:50:26+05:30அரசியல் களம், உலகம் LinkedInFacebookMore ஸ்வாட்டுடே – சிஎன்என் தினக்குரல் இணையம் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் இணைந்து அல்ஹைதாவின் மிக முக்கிய உறுப்பினர் ஒருவரைஈரானில் கொலை செய்துள்ளன. டிரம்ப்…

  4. ஃபைசெர் கோவிட் தடுப்பு மருந்து வறிய நாடுகளுக்கு உதவாது மில்லியன் அளவுகளைக் கனடா வாங்கியுள்ளது ஜேர்மனியைத் தளமாகக் கொண்டியங்கும் மருந்து தயாரிக்கும் நிறுவனமான ஃபைசெர் (Pfizer), BioNtech எனும் கோவிட் நோய்க்கான தடுப்பு மருந்தொன்றைத் தயாரித்துள்ளதாகவும் அது நோய்த்தடுப்பில் 90% வெற்றியைத் தருமெனவும் கடந்த திங்களன்று அறிவித்திருந்தது. ஆனால் அது அறிவிக்காத முக்கிய விடயம், அம் மருந்தைப் பாதுகாக்க 70 பாகை செல்சியஸுக்குக்கீழ் உறை நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை. நோய்த் தடுப்புக்கான மருந்தைத் தயாரிக்கும் போட்டியில் பல உலக மருந்து நிறுவனங்கள் இரவு பகலாக உழைக்கின்றன. மக்களின் பாதுகாப்பை முன்நிறுத்தாமல் பணம் சம்பாதிப்பதையே குறியாகக் கொண்டு இந் நிறுவனங்கள் செயற்படுகின…

  5. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் எத்தியோப்பிய மத்திய அரசுக்கும் இடையே மூண்ட போர் காரணமாக குழந்தையோடு சூடான் நாட்டுக்குள் நுழைந்த எத்தியோப்பியப் பெண். எத்தியோப்பியா நாட்டின் டீக்ரே பிராந்தியத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகள் மீதும், பக்கத்து நாடான எரித்ரியா தலைநகர் மீதும் ராக்கெட் வீசி தாக்குதல் நடந்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்களும், ராஜீயத் துறையினரும் தெரிவிக்கின்றனர். இந்த சண்டையில் மாட்டிக்கொண்ட மக்கள் எத்தியோப்பியாவில் இருந்து வெளியேறி பக்கத்து நாடான சூடானுக்கு அகதிகளாக செல்கின்றனர். எத்தியோப்பிப் பிரதமர் அபிய் அகமது அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவரது தலைமையிலான…

  6. சீனாவுக்கு சாதகமான வர்த்தக ஒப்பந்தத்தில் 15 ஆசிய நாடுகள் கையெழுத்து பெய்ஜிங், தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகள், அதனுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள பிற கூட்டணி நாடுகளுக்கு, (FTA) இடையில் முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம்தான் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு(RCEP). ஆசியான் அமைப்பைச் சேர்ந்த 10 தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்கொரியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய பிற நாடுகள் என மொத்தம் 16 உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஆர்சிஈபி தற்போது இந்தியா விலகியுள்ளத்தைத் தொடர்ந்து 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ள கூட்டமைப்பாக மாறியுள்ளது. உலக மக்கள் தொகையில் சுமார் பாதி அளவைக் கொண்டிருந…

  7. ருமேனியா: கொரோனா வைத்தியசாலையில் தீ விபத்து – 10 பேர் உயிரிழப்பு ருமேனியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் பின்னர் அதை ஒட்டிய அறைக்கு தீ பரவியது என்றும் இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவர் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கிழக்கு ருமேனிய நகரமான ஐயாசியில் உள்ள கொரோனாவிற்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைக்கு எஞ்சியிருக்கும் ஆறு நோயாளிகள்…

  8. ஐக்கிய அரபு அமீரகத்தில் சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி உரிமம் இன்றி மதுபானங்களை வைத்திருத்தல், விற்பனை செய்தல் ஆகிய செயல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 21 வயதுக்கு கீழுள்ளவர்கள் மது அருந்தவும் அவர்களுக்கு மதுவை விற்கவும் அனுமதிக்கப்படவில்லை. திருமணம் ஆகாத ஆண், பெண் இருவரும் ஒன்றாக வசிப்பது குற்றமாக கருதப்பட்டுவந்த நிலையில், இனி இருவரும் சேர்ந்து வாழ்வது குற்றமாக கருதப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், 14 வயதுக்கு உட்பட்டவர்களுடன் அல்லது மனநோயாளிகளுடன் சம்மதத்தின் பேரில் தொடர்பில் இருந்தாலும் குற்றமாகக் கருதப்படும். ஆணவக் கொலைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகச் சட்ட…

  9. லிபியாவில் கடலில் கவிழ்ந்த இரு படகுகள்: 94 அகதிகள் பரிதாபமாக பலி! லிபியாவின் மத்திய தரைக்கடல் பகுதியில் இன்று ஒரே நாளில் இடம்பெற்ற இரு படகு விபத்துக்களில் 94 குடியேற்றவாசிகள் உயிரிழந்தள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லிபியா நாட்டின் திரிபோலி இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹாம்ஸ் என்ற நகரின் பகுதிக்குள் அமைந்துள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 120க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட குறித்த விபத்தில் படகு கவிழ்ந்து 74 குடியேற்றவாசிகளை பரிதாபமாக உயிரிழந்தனர். இத…

  10. மருந்து நிறுவனங்களின் தரவுகளைத் திருட முயற்சிப்பதாக ரஷ்யா மற்றும் வடகொரியா மீது மைக்ரோசொப்ட் குற்றச்சாட்டு! November 14, 2020 ரஷ்யா மற்றும் வடகொரியாவைச் சேர்ந்த அரசு ஆதரவுடைய ஹக்கர்கள், உலகின் முன்னணி மருந்து நிறுவனங்களின் தரவுகளை திருட முயன்றதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில் நடைபெற்ற இந்த ஹக்கிங் முயற்சியில் பெரும்பாலானவை தோல்வி அடைந்துள்ளது. ஆனால் எத்தனை முயற்சிகள் வெற்றி பெற்றது அல்லது அத்துமீறல்களின் தீவிரத்தன்மை என்ன என்பது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை. பெரும்பாலான அத்துமீறல்கள் கொரோனாத் தொற்றுத் தடுப்பூசி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும், இந்தியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களில் நடந்துள்ள…

  11. தீர்ப்பதற்கு மிகவும் கடினமான சைப்பிரஸ் சிக்கல் – ஒரு புதிய திருப்பம் 82 Views மத்தியதரைப் பிரதேசத்தில் இம் மாதத் தொடக்கத்தில் நிலவிய கடும் பதற்ற நிலையின் நடுவில், வட சைப்பிரஸ், தனது அதிபருக்கான தேர்தலை நடத்தியிருக்கிறது. ஒக்ரோபர் மாதம் 18ஆம் திகதி தேசிய ஒற்றுமைக் கட்சியைச் சேர்ந்த (National Unity Party) ஏர்சின் டட்டார் (Ersin Tatar) பதவியில் இருக்கின்ற அதிபர் முஸ்ரபா அக்கிஞ்சிக்கு (Mustafa Akinici) எதிராகப் போட்டியிட்டு 51.74 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்திருக்கிறார். நீண்ட காலமாகத் தொடர்கின்ற பல பிணக்குகளை உள்ளடக்கிச் ‘சைப்பிரஸ் பிரச்சினை’ என்ற பெயரில் அறியப்படுகின்ற சிக்கல் தொடர்பாக, கிரேக்க மக்களைக் கொண்ட…

  12. `பதற்றமானவர், பக்குவப்படாமல் இருக்கிறார்!’ - ராகுல் காந்தி குறித்து ஒபாமா தினேஷ் ராமையா ஒபாமா ( Instagram ) 768 பக்கங்கள் கொண்ட ஒபாமா-வின் `எ பிராமிஸ்டு லேண்ட்’ புத்தகம் நவம்பர் 17-ம் தேதி விற்பனைக்கு வர இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறித்து, தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, `பதற்றத்தோடு இருப்பவர், பக்குப்படாமல் இருக்கிறார்’ என்று விமர்சித்துள்ளார். பராக் ஒபாமா, எ பிராமிஸ்டு லேண்ட் என்ற பெயரில் தமது நினைவுகளைப் புத்தகமாக எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் உலகத் தலைவர்கள், அமெரிக்க அதிபர் பதவியில் இருந்தபோது நடந்த சம்பவங்கள், திருமண…

  13. இருக்கு ஆனா இல்லை... எலான் மஸ்க்கை புலம்பவிட்ட கொரோனா டெஸ்டிங்! ம.காசி விஸ்வநாதன் எலான் மஸ்க் | Elon Musk ( Wikimedia Commons ) "ஒரே மாதிரியான டெஸ்ட், ஒரே சாதனம், எடுத்த செவிலியர் கூட ஒரே ஆள்தான். ஆனால் டெஸ்ட் ரிசல்ட் மட்டும் வேறு வந்திருக்கிறது" எனப் பொங்கியிருக்கிறார் எலான் மஸ்க். டெக் ஜீனியஸாக பலராலும் அறியப்படுபவர் எலான் மஸ்க். அதிநவீன மின்சார கார்கள் தயாரிக்கும் டெஸ்லாவின் நிறுவனர் மற்றும் CEO. இது அல்லாமல் ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க் போன்ற நிறுவனங்கள் மூலம் வருங்கால தொழில்நுட்பங்களை அறுவடை செய்துவருபவர். இருந்தும் கொரோனா விஷயத்தில் இவர் தெரிவித்த பல கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகின. அது பற்றிய செய்தியைக் கீழ்க்காணும் லிங…

  14. ‘கொரோனா வைரஸ் பிறழ்வு தடுப்பூசியையும் பாதிக்கும்’ - ஆய்வில் அதிர்ச்சி தகவல் வாஷிங்டன், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்கும், பரிசோதிக்கும் நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், அந்த வைரசின் தற்போதைய நிலை குறித்தும் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. அந்தவகையில் வைரசின் பிறழ்வு நிலை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதில் கொரோனா வைரசின் பொதுவான பிறழ்வு உலகம் முழுவதும் வேகமாக பரவுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக ‘டி614ஜி’ என்ற கொரோனாவின் திரிபு, சீனாவின் உகானில் தோன்றிய வைரசை விட 10 மடங்கு அதிகமாக பரவுவதாகவும், சுவாசப்பாதையில் இது பெரும் இடையூறு…

  15. வடக்கு மொசாம்பிக்கில் பயங்கரவாதிகளின் வெறிச்செயல்! 50க்கும் மேற்பட்டோரின் தலைகள் துண்டிப்பு November 11, 2020 வடக்கு மொசாம்பிக்கில் பயங்கரவாதிகளால் கடந்த மூன்று நாட்களில் 50க்கும் மேற்பட்டோர் தலைகள் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் வடக்கு மொசாம்பிக்கிலுள்ள கபோ டெல்கடோ (Cabo Delgado ) மாகாணத்தில் Muatide என்ற கிராமத்தில் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் அங்குள்ள காற்பந்து மைதானத்தை தங்கள் கொலைக் களமாக மாற்றிய பயங்கரவாதிகள் அங்குள்ள கிராம மக்களை தலைகீழாக தொங்கவிட்டு தலைகளை வெட்டி கொன்றதாகக் கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/88046

  16. ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் – பிரான்ஸ் பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரான்சில் இரண்டு மற்றும் வியன்னாவில் ஒன்று என மூன்று பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார். ஜேர்மனி, ஒஸ்திரியா, நெதர்லாந்து தலைவர்களுடன் பயங்கரவாத எதிர்ப்பு மூலோபாயம் குறித்த மாநாட்டிற்கு பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இவ்வாறு கூறியுள்ளார். ஐரோப்பாவின் விசா இல்லாத ஷெங்கன் பகுதியின் வெளிப்புற எல்லைகள் எவ்வாறு மெருகூட்டப்…

  17. கொரோனா அச்சத்தால் டென்மார்க்கில் பலியாகப் போகும் 1.7 கோடி மிங்க்குகள் ! November 8, 2020 கொரோனாத் தொற்றுப் பரவலைத் தடுத்து நிறுத்த டென்மார்க் அரசு பண்ணைகளில் வளரும் 17 மில்லியனுக்கும் அதிகமான மிங்க் (( minks )) எனப்படும் கொறி வகை விலங்குகளைக் கொல்ல முடிவெடுத்துள்ளது. மிங்க் விலங்குகளின் ரோமங்கள் விலை உயர்ந்தவை என்பதாலும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களுக்கு மதிப்பு அதிகம் என்பதாலும் டென்மார்க்கில் 1,139 பண்ணைகளில் சுமார் 17 மில்லியன் மிங்க்குகள் வளர்க்கப்படுகின்றன. மிங்க்குகளிடமிருந்து பெறப்படும் ரோம வர்த்தகத்தில் டென்மார்க் உலகளவில் முக்கிய இடம் வகிக்கிறது. இந்நிலையில் டென்மார்க் பண்ணைகளில் வளர்க்கப்படும் மிங்க்குகள் பல கொரோனா நோய்த் …

  18. சவுதியில் பிரெஞ்சுத் தூதர் பங்குபற்றிய போர் நினைவு நிகழ்வில் குண்டுவெடிப்பு – உயிர் தப்பிய இராஜதந்திரிகள் Bharati November 11, 2020 சவுதியில் பிரெஞ்சுத் தூதர் பங்குபற்றிய போர் நினைவு நிகழ்வில் குண்டுவெடிப்பு – உயிர் தப்பிய இராஜதந்திரிகள்2020-11-11T20:17:00+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore பாரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன் சவுதி அரேபியாவில் பிரெஞ்சு தூதர் உட்பட வெளிநாட்டு ராஜதந்திரிகள் கலந்துகொண்ட நிகழ்வில் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதனால் சிலர் காயமடைந்துள்ளனர். ஜெட்டா நகரில் உள்ள முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கான இடுகாடு ஒன்றிலேயே குண்டுத்தாக்குதல் நடந்திருக்கிறது. …

  19. தாய்வானுடனான பேச்சுவார்த்தையை நிறுத்தவும்- அமெரிக்காவிடம் சீனா வலியுறுத்து! அமெரிக்கா-தாய்வான் இடையே இம்மாதத்தில் பொருளாதார பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் சென் செர்ன்சி தலைமையிலான ஒரு சிறிய தூதுக்குழுவை தைவான் அமெரிக்காவுகு அனுப்பவுள்ளது. நவம்பர் 20ஆம் திகதி அமெரிக்க-தாய்வான் பொருளாதார செழிப்பு கூட்டாண்மை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தாய்வானுடனான உறவை அதிகரிப்பதை நிறுத்துமாறு சீனா அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளது. மற்ற நாடுகளுடன் உத்தியோகபூர்வ உறவுகளை உருவாக்குவதற்கான உரிமை இல்லாத சுயாட்சி தீவான தாய்வானை சீனா தனது சொந்த பிரதேசமாகக் கருதுகிறது. இந்நிலையில், தாய்வானுட…

  20. நியாண்டர்தால் மனிதர்கள் நம் முன்னோர்களுடன் போரிட்டார்களா? 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன? நிக்கோலஸ் ஆர் லாங்ரிச் பிபிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நியாண்டர்தால் மனிதர்கள் அழிந்து போனதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனாலும், அந்தக் காலத்தில் வாழ்ந்த நமது மனித மூதாதையர்களுடன் ஏற்பட்ட போரில் அவர்கள் அழிந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பரிணாம உயிரியல் வல்லுநர் நிக்கோலஸ் லாங்ரிச் தெரிவித்துள்ளார். சுமார் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மனித இனம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு ஆ…

  21. அடாத்தாக தங்கியிருந்து அடம்பிடித்தால் வெள்ளை மாளிகையிலிருந்து ட்ரம்பை வெளியேற்ற தயாராகும் ரகஸிய சேவையினர் Bharati November 12, 2020 அடாத்தாக தங்கியிருந்து அடம்பிடித்தால் வெள்ளை மாளிகையிலிருந்து ட்ரம்பை வெளியேற்ற தயாராகும் ரகஸிய சேவையினர்2020-11-12T06:52:53+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore கார்த்திகேசு குமாரதாஸன் ஜனநாயகக் கட்சியினது பாரம்பரியக் கோட்டையான ஜோர்ஜியா மாநிலத்தில் வாக்குகள் முழுமையாக மீள எண்ணப்பட்டு வருகின்றன. அங்கு பைடன் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன. ட்ரம்ப் அணியினரது வேண்டுகோளுக்கு அமைய முழு வாக்குகளும் அங்கு மீள…

  22. பஹ்ரைன் பிரதமர் காலமானார் November 11, 2020 பஹ்ரைன் பிரதமர் (84 வயது) கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் இன்று காலமானார். உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைனின் இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா நவம்பர் 24, 1935ஆம் ஆண்டு பிறந்தவர். பஹ்ரைன் இளவரசர் மற்றும் அரசியல்வாதியுமான இவர் ஓகஸ்ட் 15, 1971 ஆம் ஆண்டு பஹ்ரைன் சுதந்திரம் பெற்றதிலிருந்து பிரதமராக இருந்து வந்துள்ளார். உலகின் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர். அமெரிக்காவிலிருந்து பூதவுடல் சொந்த வீட்டிற்கு வந்த பின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்…

  23. போர்க் குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள, கொசாவோ ஜனாதிபதி நெதர்லாந்துக்கு அழைத்து வரப்பட்டார்! போர்க் குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள கொசாவோ ஜனாதிபதி ஹஷீம் தாச்சி, வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 1998-98 ஆண்டுகளில் செர்பியாவிடமிருந்து விடுதலை பெறுவதற்காக நடைபெற்ற போரில், அப்போது படைப் பிரிவு தளபதியாக இருந்த ஹஷீம் தாச்சி போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக அவரும், கொசாவோ விடுதலைப் படையின் மேலும் இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு தி ஹேக் நகருக்கு விமானம் மூலம் வெள்ளிக்கிழமை அழைத்து வரப்ப…

  24. ரோஹிங்கியார்களை வாக்களிப்பில் உள்ளீர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் மியன்மருக்கு அறிவுறுத்தல் ரோஹிங்கிய முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை வாக்களிப்பு நடவடிக்கையில் உள்ளீர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் திங்களன்று மியன்மாறுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ரோஹிங்கிய சமூகம் உட்பட நாட்டின் அனைத்து இன, மத மற்றும் சிறுபான்மை குழுக்களை முழுமையாக தேர்தல் கடமைகளில் உள்ளீர்த்து, அனைவரின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துமாறும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் செய்தித் தொடர்பாளர் நபிலா மஸ்ராலி ஒரு அறிக்கையில் மியன்மாரிடம் வலியுறுத்தியுள்ளார். 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியக் குழு மியான்மரை சர்வதேச தரங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க தேர்தல் ஒழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.