Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்திய வம்சாவளியினர் மீது கனடாவில் இனவெறி தாக்குதல்! இந்திய வம்சாவளியினர் மீது கனடாவில் இனவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வான்கூவர் நகரின் சம்மர்லேண்ட் பகுதியில் உள்ள ஒரு இந்திய வம்சாவளியினரின் வீடு, நள்ளிரவு நேரத்தில் குறிவைத்து தாக்கப்பட்டிருக்கிறது. அப்போது ரமேஷ் லேகி மற்றும் கிரண் லேகி தம்பதியர் மட்டுமே, வீட்டில் இருந்துள்ளனர். இரவு நேரம் என்பதால் அவர்கள் வெளியே வரவில்லை. விடிந்து பார்த்தபோது, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்திருந்தன. இன்னொரு அதிர்ச்சியாக, வீட்டுச் சுவர்களில் கெட்ட வார்த்தைகள், இனவெறியைக் குறிக்கும் ஓவியங்கள் மற்றும் ஆபாச படங்கள் வரையப்பட்டிருந்தன. இந்த சம்பவத்தை அறிந்த லேகி தம்பதியரின் மூன்று குழந்தைகளும், அதிகாலையிலேயே பெற்…

    • 2 replies
    • 590 views
  2. உக்ரேனிய விமானத்தின் கருப்புப் பெட்டியை பிரான்ஸிடம் ஒப்படைத்த ஈரானின் முடிவு வரவேற்கதக்கது: உக்ரேன் by : Anojkiyan 176 பேரது உயிர்களை காவு வாங்கிய உக்ரேனிய விமானத்தின் கருப்புப் பெட்டியை பிரான்ஸிடம் ஒப்படைக்க ஈரான் எடுத்த முடிவை வரவேற்பதாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskiy) தெரிவித்துள்ளார். அத்துடன், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த நிபுணர்களுடன், உக்ரேனிய வல்லுநர்கள் கருப்பு பெட்டியை டிகோடிங் செய்வதில் பங்கேற்பார்கள் என்று ஜெலென்ஸ்கி மேலும் கூறினார். பிரான்ஸ் தலைநகர் பரிஸுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்ட குறித்த கருப்புப் பெட்டியிலுள்ள விபரங்கள், இன்று ஆ…

    • 0 replies
    • 310 views
  3. அமெரிக்கா ஜார்ஜ் பிளாயிட் சம்பவம் போல் லண்டனிலும் ஒரு நிகழ்வு போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் லண்டன் லண்டனில் இஸ்லிங்டன் பகுதியில் பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோவில், இரண்டு அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கறுப்பினத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவரை நடைபாதையில் கழுத்தில் போலீசார் முழங்காலால் அழுத்துவதைக் காட்டும் காட்சி வெளியானது. இந்த வீடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், வியாழன்று போலீஸ் அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, மாநகர துணை போலீஸ் கமிஷனர் சர் ஸ்டீவ் ஹவுஸ் இந்த காட்சிகள் மிகவும் வருத்தமளிப்பது என்றும் இது போலீஸ் கண்காணிப்புக் குழுவுக்கு அனுப்பப்பட்டதாக…

  4. சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ்: "போர்க்கால அவசரநிலை" அமல் - என்ன நடக்கிறது அங்கே? 19 ஜூலை 2020, 04:43 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் Getty Images கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் "போர்க்கால அவசரநிலை" அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக 17 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமையன்று அந்த நகர அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதாகக் க…

  5. ஒலியை விட 17 மடங்கு வேகமாகச் செல்லும் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை வெற்றி! ஒலியைவிட 17 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஹைபர் சொனிக் (Hypersonic) ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. இந்த சோதனை, கடந்த மார்ச் இறுதியில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் நடைபெற்றதாக தற்போது அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒலியை விட 17 மடங்கு வேகமாக செல்லும் ஹைபர் சொனிக் ஏவுகணை குறித்து தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்துவந்தார். இந்நிலையில் சோதனை இடம்பெற்றமை குறித்து அமெரிக்க இராணுவம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை, அடுத்துவரும் நான்கு ஆண்டுகளில் பசுபிக் பெருங்கடலில் குறைந்தது 40 ஹைபர்சொனிக்…

  6. கொரோனா தாக்கத்துக்கு 3 மாதங்களுக்கு முன்பே டிரம்பை எச்சரித்த நிபுணர்கள்; அறிக்கை தகவல் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு வல்லரசான அமெரிக்கா அதிக இலக்காகி உள்ளது. அந்நாட்டில் 35 லட்சம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1.3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்டோரை கொரோனா பாதித்துள்ளது. எனினும், வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். ஆனால், சீனா உடனடியாக ஊரடங்கை அமல்படுத்தியதில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இன்று ஊரடங்கை தளர்த்தி அந்நாட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப…

  7. உலகை மிரட்டும் கொரோனா....4 நாட்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு உலகளாவிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் வெள்ளிக்கிழமை 1.4 கோடிய கடந்துவிட்டது எனவும், முதன் முறையாக கடந்த 100 மணி நேரத்திற்குள் 10 லட்சம் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் ராய்டர்ஸ் செய்து நிறுவனம் தெரிவித்துள்ளது முதல் வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் கடைசியில் சீனாவில் பதிவாகியது, மேலும் 10 லட்சம் பாதிப்புகளை எட்ட மூன்று மாதங்கள் ஆனது. ஜூலை 13 அன்று பதிவு செய்யப்பட்ட 1.3 கோடியில் ல் இருந்து 1.4 கோடி வழக்குகள் ஏற நான்கு நாட்கள் மட்டுமே ஆகி உள்ளது. அரசாங்க அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ராய்ட்டர்ஸ் தகவல்படி கொரோனா நோய் அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருவதை காட்டுகிறது, இது உ…

  8. தென் சீன கடல் சர்ச்சை: அமெரிக்கா - சீனா இடையே மேலும் மோதலை உருவாக்குகிறதா? Getty Images தென் சீன கடலோரப் பகுதியில் உள்ள வளங்களைக் கைப்பற்றுவதற்கு சீனா நாட்டம் காட்டுவது ``முழுக்க சட்ட விரோதமானது'' என்று அண்மையில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பியோ தெரிவித்தார். எரிசக்தி வளம் மிகுந்திருக்கும் வாய்ப்புள்ள சர்ச்சைக்குரிய நீர் எல்லைப் பகுதியை ``கட்டுப்படுத்துவதற்கு அடாவடித்தனமான செயல்களில் ஈடுபடும்'' சீனாவின் செயல்பாடுகளுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகள் பகுதியில் பல ஆண்டுகளாக சீனா ராணுவ தளங்களை உருவாக்கி வருவது ``உண்மைகள் மற்றும் சர்வதேச சட்டத்தை வெளிப்ப…

    • 1 reply
    • 667 views
  9. உத்தேச மேற்குக்கரை இணைப்புத் திட்டம்: இஸ்ரேலிடம் இலங்கை முக்கிய கோரிக்கை by : Yuganthini உத்தேச மேற்குக்கரை இணைப்புத் திட்டத்தை கைவிடுமாறு இலங்கை இஸ்ரேல் அரசாங்கத்தை கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பதில் நிரந்தர பிரதிநிதி தயானி மெண்டிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் 44 ஆவது அமர்வில் உரையாற்றியபோதே குறித்த கோரிக்கையினை விடுத்துள்ளார். பாலஸ்தீன மக்களின் நிலைமை குறித்து ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மைக்கேல் லிங்க் ஐக்கிய நாடுகள் அமர்வில் அறிக்கையொன்றினை முன்வைத்தார். குறித்த அறிக்கை தொடர்பாக ஆராய்ந்த இலங்கை, தனது நிலைப்பாட்டை பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்து…

    • 0 replies
    • 531 views
  10. தொடர்ச்சியான தீ - வெடிப்பு சம்பவங்கள்: துறைமுக தீவிபத்து குறித்து ஈரான் அதிகாரிகள் விசாரணை! பாரசீக வளைகுடாவில் உள்ள ஈரானின் தென்மேற்கு துறைமுகமான புஷெஹரில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து குறித்து, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட இந்த பாரிய தீவிபத்தில், குறைந்தது ஏழு கப்பல்கள் தீக்கிரையாகியதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் அணுசக்தி நிலையத்தை குறிவைத்து சந்தேகங்களை எழுப்பிய தீ மற்றும் வெடிப்புகளின் தொடர்ச்சியான சம்பவமாக இது பார்க்கப்படுகின்றது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் போது தெற்கு துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பல் கட்டடத்தில் கருப்பு புகை காற்றில் பறப்பதைக் காட்டும் புகைப்படத்தை அதிகாரப்ப…

  11. உய்குர் முஸ்லீம்கள் துன்புறுத்தப்படவில்லை: உறுதிப்படுத்த சீனா வருமாறு பொம்பியோவுக்கு அழைப்பு! உய்குர் முஸ்லீம்கள் துன்புறுத்தப்படவில்லை என்பதை அறிந்துக் கொள்வதற்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோவை நாட்டுக்கு வருமாறு சீனா அழைப்பு விடுத்துள்ளது. சீனாவில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களுக்கு, அமெரிக்க அரசு அண்மையில் சில தடையுத்தரவுகளை அறிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு நாட்டுக்குள் நுழைய சீன அரசு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் (கொவிட்-19) விவகாரத்தில் நீடித்துவரும் மோதலுக்கு இடையில், இந்த விடயமும…

  12. பிரேஸில் ஜனாதிபதிக்கு மீண்டும் கொவிட்-19 தொற்று: மலேரியா மருந்தை பயன்படுத்துவதாக தகவல்! பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகமொன்று நேற்று (புதன்கிழமை) அளித்த செவ்வியிலேயே 65 வயதான ஜெய்ர் போல்சனாரோ, இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று நோயிலிருந்து இன்னும் தான் குணமடையவில்லை என்று போல்சனாரோ குறிப்பிட்டுள்ளார். சில தினங்களில் மீண்டும் பரிசோதனை செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிரேசிலியாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும், அங்கிருந்து இணைய வழி காணொளியின் மூலம் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் கூறினார…

  13. ஜேர்மனியில் இரண்டாவது கொரோனா அலை உருவாகக் கூடும் என எச்சரிக்கை! ஜேர்மனியில் இரண்டாவது கொரோனா அலை உருவாகக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜேர்மனிய சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். கொரோனா இன்னமும் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொணடுவரப்படாத நிலையில், கடற்கரை ஒன்றில் கூட்டம் கூட்டமாக ஜேர்மனியர் கூடி பார்ட்டிகள் கொண்டாடும் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஐரோப்பிய ஒன்றியம் எல்லைகள் திறந்ததும் ஜேர்மனியர்கள் அதிகம் விரும்பும் கடற்கரையான ஸ்பெயினிலுள்ள Mallorca கடற்கரையில் பார்ட்டிகளுக்காக கூட்டம் கூட்டமாக கூடும் புகைப்படங்களே இவ்வாறு வெளியாகியுள்ளன. இந்தநிலையில் ஜேர்மனியில் இரண்டாவத…

  14. ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் வீரியம் குறைவடைந்துள்ளது! ஐரோப்பிய நாடுகளில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்பெய்னில் நேற்று(செவ்வாய்கிழமை) மாத்திரம் 666 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மூவர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். அங்கு நேற்று வரையான காலப்பகுதியில் மூன்று இலட்சத்து மூவாயிரத்து 699 கொரோனா தொற்றாளர்கள் பாதிவாகியுள்ளதுடன், 28 ஆயிரத்து 409 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று இத்தாலியிலும் நேற்றைய தினம் 114 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 17 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். அங்கு நேற்று வரையான காலப்பகுதியில் இரண்டு இலட்சத்து 43 ஆயிரத்து 344 கொரோனா தொற்றா…

  15. சுவிஸில் நாளொன்றுக்கு சுமார் 3.5 மில்லியன் முகக்கவசங்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல்! சுவிஸில் நாளொன்றுக்கு சுமார் 3.5 மில்லியன் முகக்கவசங்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே சுவிஸில் மாத்திரம் தினமும் 3.5 மில்லியன் முகக்கவசங்கள் பயன்படுத்தப்படுவதாக பெடரல் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. மருத்துவ துறையில் மட்டும் 1.5 முதல் 2 மில்லியன் முகக்கவசங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், கடைகளுக்கு செல்லும் மக்கள் முகக்கவசங்களை பயன்படுத்துகின…

  16. சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்திற்கு பிரித்தானிய அரசாங்கம் தடை சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்திற்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஹூவாவி நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்திற்கு அனுமதியளிப்பதற்கு பிரித்தானிய பிரதமர் தீர்மானித்திருந்தார். எனினும், கொரோனா வைரஸ் குறித்த விபரங்களை மூடி மறைத்ததாகவும் ஹொங் கொங் மீது தனது அதிகாரத்தை வரம்பு மீறி செலுத்தியதாகவும் சீன அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையிலேயே தற்போது 5ஜி தொழிநுட்பத்திற்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதேவேளை, பிரித்தானிய பாதுகாப்பு சபை கூட்டம் இன்று நடைபெ…

  17. உலகளவில் கொரோனா பாதிப்பு 1.36 கோடியாக அதிகரிப்பு;அமெரிக்காவில் ஒரே நாளில் 70,914 பேர்பாதிப்பு உலகளவில் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.36 கோடியாக அதிகரித்து உள்ளது.அமெரிக்காவில் ஒரே நாளில் 70,914 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பதிவு: ஜூலை 16, 2020 07:34 AM வாஷிங்டன் உலகம் முழுவதும் கொரோனாவால் 1,36,89,917 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,03,6499 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 59,616 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,86,774 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 70,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண…

  18. சீனாவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை: ஹாங்காங் சுயாட்சி சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கையான ஹாங்காங் சுயாட்சி சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார். பதிவு: ஜூலை 16, 2020 04:01 AM வாஷிங்டன், ஹாங்காங் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு அண்மை காலமாக சீனாவுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வந்ததால் அவற்றை ஒடுக்கும் விதமாக புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா கொண்டு வந்துள்ளது. இது ஹாங்காங்கின் சுதந்திரத்தையும் சுயாட்சியும் பறிக்கும் செயல் என அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக இந்த விவகாரத்தில் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிற…

  19. ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரித்தானியர்கள் புகைப்பழக்கத்தினை கைவிட்டுள்ளதாக தகவல்! ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரித்தானியர்கள் புகைபிடிப்பதை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லண்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் மற்றும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வு ஒன்றின் போதே குறித்த விடயம் தெரியவந்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து ஜூன் மாதத்தின் இறுதிவரைக்குமான காலகட்டத்தில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆய்வில் 1.1 மில்லியன் பிரித்தானியர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக கைவிட்டுள்ளதோடு, மேலும் 440,000 பேர் புகை பிடிப்பதை விட முயற்சி செய்துகொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இளைஞர்களைப் பொருத்தவரை, வீட்டை விட்டு தொலை…

  20. அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு சீனாவிற்குள் நுழைய தடை! பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு நாட்டுக்குள் நுழைய சீன அரசு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களுக்கு, அமெரிக்க அரசு சில தடையுத்தரவுகளை அறிவித்த சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவின் உத்தரவின் படி, சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் சாமுவல் பிரவுன்பேக், நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஸ் ஸ்மித், செனட்டர் மார்கோ ரூபியோ மற்றும் டெட் க்ரூஸ் ஆகியோருக்கு நாட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக…

  21. ஆப்கானில் உள்ள 5 இராணுவத் தளங்களை மூடியது அமெரிக்கா நான்கு மாதங்களுக்கு முன்னர் தலிபானியர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பகுதியாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐந்து இராணுவ தளங்களை அமெரிக்கா மூடியதாக பென்டகன் அதிகாரி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. ஹெல்மண்ட், உருஸ்கான், பக்திகா மற்றும் லக்மன் ஆகிய மாகாணங்களில் உள்ள இராணுவத் தளங்களையே அமெரிக்கா இவ்வாறு மூடியுள்ளது. 2001 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலீபான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இடம்பெற்று வரும் மிக நீண்ட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு இரு தரப்புகளுக்குமிடையே ஒப்பந்தம் கடந்த பெப்ரவரி மாதம் கைச்சாத்திடப்பட்டது. கட்டாரின் தலைநகர் டோஹாவில் பல மாத பேச்சுவா…

  22. கொரோனா வைரஸ் கட்டுக்குள் : பெரும் மகிழ்ச்சியில் பெல்ஜியம் மக்கள் பெல்ஜியம் மார்ச் மாதத்திற்கு பிற்பட்ட காலப்பகுதியில் முதன்முறையாக 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கபட்ட நாடுகளில் ஒன்றாக விளங்கிய பெல்ஜியத்தில் மார்ச் 10 ஆம் திகதிக்கு பின் முதல் முறையாக நேற்று முன்தினம் 24 மணி நேரத்தில் புதிய கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. எனினும் நேற்றைய தினம் 05 இறப்புகள் பதிவாகியுள்ளதுடன், 94 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். ஏப்ரலில் தினசரி இறப்பு எண்ணிக்கை 343 ஆக இருந்து வந்துள்ள நிலையில், தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்…

  23. கொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் -உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை சுகாதாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறினால் கொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பதிவு: ஜூலை 14, 2020 06:51 AM ஜெனீவா சுகாதாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறினால் கொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பிய, ஆசிய நாடுகள் பல கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன.இருப்பினும் இன்னமும் பல நாடுகள் தவறான திசையில் வேகமாக ச…

  24. அமெரிக்காவில் 17 ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு அனுமதி 17 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அனுமதி வழங்கியுள்ளது. நான்கு கூட்டாட்சி கைதிகளுக்கான மரண தண்டனைகளை திங்கட்கிழமை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தன. எனினும் நீதித்துறைக்கு எதிராக தீர்க்கப்படாத சட்ட சவால்கள் தொடர்ந்தும் இருப்பதாக தெரிவித்து அமெரிக்காவின் இண்டியானா மாநில தெற்கு மாவட்ட நீதமன்றம் திங்களன்று தீர்ப்பளித்த பின்னர் பல மரணதண்டனை நிறைவேற்றங்கள் தாமதமாகின. அதாவது அமெரிக்காவின் ஒக்லஹோமாவை மாநிலத்தைச் சேர்ந்த 47 வயதுடைய டேனியல் லீ என்பவர் கடந்த 1999 ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 3 பேரை கொடூரமாக கொலை செய்தார். இந்த வழக்கி…

  25. கொவிட்-19 தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு செலுத்தி அதில் வெற்றிபெற்றது ரஷ்யா! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பு மருந்தினை மனிதர்கள் மீது செலுத்தி, சோதனை நடத்தி அதில் வெற்றிபெற்றுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் முழு வீச்சுடன் களமிறங்கியுள்ளன. இந்தநிலையில் சோதனை நடவடிக்கையில் ஜேர்மனி, அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் தீவிர ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக குறித்த நாடுகள் பல பில்லியன் டொலர் கணக்கான தொகையினையும் செலவு செய்துள்ளது. இந்த நிலையில் இந்த முயற்சியில் ரஷ்யா வெற்றி கண்டுள்ளதாக சொசோனோவ் பல்கலைக்கழகம…

    • 2 replies
    • 446 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.