உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27019 topics in this forum
-
என்னை மருத்துவமனையில் சந்தித்த ஜேர்மனி அதிபருக்கு நன்றி: அலெக்ஸி நவால்னி நச்சு தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த போது, தன்னை சந்தித்த ஜேர்மனி அதிபருக்கு ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி நன்றி தெரிவித்துள்ளார். ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் அந்நாட்டு தலைநகர் பெர்லினில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரஷ்ய அரசியல் தலைவர் அலெக்ஸி நவால்னியை இரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியானது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான ஜேர்மனி வார இதழ் ஒன்றில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு எப்போது நடைபெற்றது என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்தத் தகவலை நவால்னி திங்கட்கிழமை உறுதிப்படுத்தினார். இதுகுறித்து அவர் தனது உத்தியோக…
-
- 0 replies
- 424 views
-
-
சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்... டிரம்ப் - ஜோ பிடன் இடையே முதல் நேரடி விவாதம் வாஷிங்டன் ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் நடைபெறும் இந்த விவாதம் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை இரவு 9.30 மணிக்கு தொடங்கியது. 90 நிமிடங்கள் நடைபெறும் இந்த விவாதத்தில் டிரம்பும் -ஜோ பிடனும் அனல் தெறிக்க பேசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்பும் ஒருவரை ஒருவர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஜோ பிடனை ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என டிரம்பும், டிரம்ப் வருமான வரி கணக்கு செலுத்துவதில்லை என ஜோ பிடனும் பரஸ்பர மோதலில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் ஜனாதிபதி …
-
- 0 replies
- 416 views
-
-
ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முறையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு இடைவெளிகள் இல்லாது குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொண்டதால் அதிகமானோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜெர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் ( Bielefeld) நகரில் 22.09.20 அன்று நடைபெற்ற குடும்ப நிகழ்வில் கலந்து கொண்ட 40 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு இந்நிகழ்வில் கலந்துகொண்ட மேலதிகமாக 50 இற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை குமமெர்ஸ்பாஹ் (Gummersbach) நகரிலும் தொடர்ச்சியாக பலர் கொரோனாத்தொற்றுக்கு உள்ளாகியுள்ளது. உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா …
-
- 47 replies
- 3.6k views
-
-
கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வட கொரியா கடல் எல்லைக்குள் ஊடுருவிய தென் கொரிய கப்பல்கள்! தங்களது கடல் எல்லைக்குள் தென் கொரிய கப்பல்கள் ஊடுருவியதாக, வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட தென் கொரிய அரசாங்க அதிகாரியின் உடலைத் தேடியே, தென் கொரிய கப்பல்கள் வட கொரியா எல்லைக்குள் நுழைந்ததாக கூறப்படுகின்றது. இதுகுறித்து வட கொரியா அரசாங்க செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘வட கொரிய கடல் எல்லைக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு அதிகாரியின் உடலைத் தேடி, தென் கொரியக் கப்பல்கள் அத்துமீறி அந்த எல்லைக்குள் நுழைந்தன. இதுபோன்ற ஊடுருவலை தென் கொரியா உடனடியாக நிறுத்த வேண்டும். அப்போது…
-
- 0 replies
- 597 views
-
-
3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டில் 750 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ஆண்டொன்றுக்கு வெறும் 55 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானவரி செலுத்தியதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. டிரம்ப் மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள், இருபது ஆண்டுகளுக்கும் மேலான வருமானவரி ஆவணங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக கூறும் அந்த செய்தித்தாள், கடந்த 15 ஆண்டுகாலத்தில் 10 ஆண்டுகள் ஒரு ரூபாய் கூட டிரம்ப் வருமான வரி செலுத்தவில்லை என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. …
-
- 0 replies
- 489 views
-
-
சீனாவில் சுமார் 16 ஆயிரம் மசூதிகள் தகர்ப்பு: அவுஸ்ரேலிய தன்னார்வ அமைப்பு தகவல்! சீனாவில் சுமார் 16 ஆயிரம் மசூதிகள் தகர்க்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியாவில் இயங்கும் தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவின் (ASPI) புள்ளியியல் தன்னார்வ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளில் 16,000 மசூதிகள் சீன அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று வருடங்களாக இந்த அழிப்பு நடவடிக்கைகளில் சீனா ஈடுப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின், வடமேற்கு மாகாணங்களில், உய்குர் மற்றும் டர்கிக் மொழிகள் பேசும், 10 இலட்சம் முஸ்லிம் மக்கள், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மதம் தொடர்பான தங்கள் சம்பிரதாயங்களை கைவிட மறுத்ததற்காக, இவர்களுக்கு …
-
- 1 reply
- 603 views
-
-
உலகின் மிக மதிப்பு மிக்க நோபல் பரிசை வெல்பவர்களுக்கான பணத் தொகை அதிகரிப்பு! உலகின் மிக மதிப்பு வாய்ந்த விருதான நோபல் பரிசு வெல்பவர்களுக்கு, நடப்பாண்டு முதல் 1 லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கூடுதலாக பரிசுத் தொகை வழங்கப்படும் என விருதுகளை மேற்பார்வையிடும் அறக்கட்டளை அறிவித்துள்ளது. நோர்வே நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது அமைதி, இயற்பியல், பொருளாதாரம், இலக்கியம், மருத்துவம் மற்றும் வேதியியல் ஆகியத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நோபல் பரிசுகளை வெல்பவர்கள் கூடுதலாக 1 லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களைக் பெறுவார்கள். இதற்கமைய பண பரிசு இந்த ஆண்டு 10 மில்லியன் க்ரோனர்க…
-
- 0 replies
- 397 views
-
-
தமது வாழ்க்கைத் துணைகளை கனடாவிற்கு அழைக்க விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தமது வாழ்க்கைத் துணைகளை கனடாவிற்கு அழைக்க விண்ணப்பித்தவர்களுக்கான ஒரு மகிழ்ச்சியான செய்தியொன்றை கனடாவின் குடிவரவு, அகதிகள் விவகாரங்கள் மற்றும் குடியகல்வு ஆகியவற்றுக்கு பொறு;பபான அமைச்சர் Honourable Marco E. L. Mendicino இன்று அறிவித்து மேற்படிச் செய்தி ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது அமைச்சர் Honourable Marco E. L. Mendicino அவர்கள்; ஏற்கெனவே தங்கள் வாழ்க்கைத் துணைகளை கனடாவிற்கு அழைக்கவிரும்பியவர்கள் மிக விரைவில் அவர்களை கடனாவிற்கு அழைக்கும் வகையில், வாழ்க்கை துணைகளை அழைக்க விண்ணப்பித்த…
-
- 3 replies
- 1.2k views
-
-
22 செப்டெம்பர் 2020 பட மூலாதாரம், Getty Images "கம்போடியாவை சேர்ந்த ஒரு இளம் பெண்ணாக, நான் பாதுகாப்பாக எண்ணி வெளியே செல்லவும், எனக்கு சௌகரியமான ஆடைகளை அணியவும் விரும்புகிறேன். நான் அணியும் உடைகள் மூலம் என்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். அது, அரசாங்கத்தால் மட்டுப்படுத்தப்படுவதை நான் விரும்பவில்லை" என்று அவர் கூறுகிறார். "குட்டை பாவாடைகளை அணியும் பெண்களை கட்டுப்படுத்த சட்டங்களை அமல்படுத்துவதற்கு பதிலாக கலாசார மரபுகளை நிலைநிறுத்த வேறு வழிகள் உள்ளன என்று நான் நம்புகிறேன்." கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட இவரது இணையவழி கோரிக்கை மனுவுக்கு ஆதரவு தெரிவித்து இதுவரை 21,000க்கும் மேற்பட்டோர் …
-
- 5 replies
- 1.8k views
-
-
டாஸ்மேனியாவில்.. கரையொதுங்கிய, திமிங்கலங்களில் 380 திமிங்கலங்கள் உயிரிழப்பு. அவுஸ்ரேலியாவின் தெற்கு கடற்கரையில் சிக்கித் தவித்த 470 திமிங்கலங்களில் பெரும்பாலானவை இறந்துவிட்டன என்று அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளனர். டாஸ்மேனியா மேற்கு கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன. இவற்றை மீட்கும் பணிகள் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடுமையான மற்றும் ஆபத்தான மீட்பு முயற்சிகளுக்குப் பின் குறைந்தது 380 திமிங்கலங்கள் இறந்துவிட்டன என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். டாஸ்மேனியா கடற்பகுதிகள் திமிங்கலங்கள் அதிகளவில் காணப்பட்டாலும் ஒரேயடியாக திமிங்கலங்கள் கரையொதுங்கியதை கடந்த 10 வ…
-
- 0 replies
- 536 views
-
-
கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம் என நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பொதுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார். இது அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. பெருந்தொற்றுக்கு, சீனா பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என டிரம்ப் தெரிவித்தார். இதனையடுத்து, உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின்பிங், "எந்த நாட்டுடனும் பனிப்போரில் ஈடுபடும் நோக்கம் சீனாவுக்கு இல்லை" என தெரிவித்தார். பல்வேறு காரணங்களால், உலகின் இந்த இரு சக்தி வாய்ந்த நாடுகளுக்கு இடையேயான உறவு மோசமடைந்து இருக்கிறது. இந்த ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுக்கூட்டம் பெரும்பாலும் காணொளி காட்சி வாயிலாகவே நடைபெ…
-
- 0 replies
- 773 views
-
-
கொரோனா உயிரிழப்பு : அமெரிக்காவில் 2 இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளதாக ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் (Johns Hopkins University) புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை அமெரிக்காவில் கொரோனாவால் 6.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இது வேறு எந்த நாட்டையும் விட அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வடக்கு டகோட்டா மற்றும் உட்டா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இந்த மைல்கலை எட்டியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று புதிய இறப்பு எண்ணிக்கை ஒரு "பயங்கரமான விஷயம்" என்றும், சீ…
-
- 0 replies
- 599 views
-
-
கொரோனா காலத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளமையால், பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோரின் பிறப்புறுப்பு அகற்றப்படும் என்று நைஜீரியா நாட்டில் கடுமையான சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், நைஜீரியா நாட்டில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், சட்டங்களை கடுமையாக்க அந்நாடு முடிவு செய்தது. புதிய சட்டத்தின் பிரகாரம் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஆண்களின் பிறப்புறுப்புகள் அகற்றப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை துஷ்பிரய…
-
- 7 replies
- 1.2k views
-
-
கோவிட் -19: நோர்வேயின் எதிர்வினையும் ‘நோர்டிக்’ நம்பிக்கையின் ஜனுஸ் முகமும் Thomas uylland Eriksen, பேராசிரியர், சமூக மானிடவியல் துறை தமிழாக்கம்: ரூபன் சிவராஜா இன்று நாம் முகம் கொடுக்கும் நிகழ்வு எம் வாழ்நாளில் நாம் அனுபவிக்கின்ற மிகப் பாரதூரமான உலகளாவிய நிகழ்வு என்பதைத் தாமதமாகவேனும் பெரும்பான்மையினர் உணரத் தலைப்படடுள்ளனர். குறைந்தபட்சம் ஐரோப்பாவில் அது உணரப்பட்டுள்ளது. நாம் செய்வதறியாது தடுமாறிய இந்த நிலையை ‘நெருக்கடி’ எனும் சொற்பிரயோகத்தினூடாகக் குறிப்பிடுவது ஒரு வகையில் குறைமதிப்பீடாகும். இந்தப் பூமியில் நாம் ஏழரை பில்லியனுக்கு மேலுள்ளோம். அம்மக்களில் இதனால் பாதிக்கப்படாதவர்கள் யாரேனும் இருப்பின் அவர்கள் மிகச் சொற்பமானவர்களே. இதனை எழுதிக் கொண்டிருக்கும் …
-
- 0 replies
- 406 views
-
-
தளபதி சுலைமானியைக் கொன்ற அமெரிக்காவைப் பழிவாங்குவோம் - ஈரான் ராணுவ ஜெனரல் எச்சரிக்கை..! உலகில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முக்கியமான நாடாக கருதப்படுவது ஈரான். உள்நாட்டுக் கலவரங்கள் பயங்கரவாதம் அதிக அளவில் இருந்தாலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் அதிக லாபம் ஈட்டும் வளர்ச்சி அடைந்த நாடாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் ஈரான் புரட்சிப்படைத் ராணுவ தளபதி குவாசம் சுலைமானி அமெரிக்க ட்ரோன் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இது ஈரானில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமீபத்திய அமெரிக்கா- ஈரான் மோதல் போக்கு காரணமாக தங்கள் நாட்டு தளபதியைக் கொன்ற அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்த…
-
- 0 replies
- 526 views
-
-
'டிக்டொக்' மற்றும் 'வீ செட்' க்கு அமெரிக்காவில் தடை சீன நிறுவனத்திற்கு சொந்தமான, டிக்டொக் மற்றும் வீ செட் செயலிகளை பதிவிறக்குவதற்கான தடையை நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் தடைவிதிக்க அமெரிக்கா நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள முறுவல் நிலையை அடுத்து டிரம்ப் நிர்வாகம் சீனாவிற்கு சொந்தமான செயலிகள் அமரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதாக கூறி அதனை தடை செய்வது குறித்து ஆராய்ந்து வந்தது. இந்நிலையில், டிக்டொக் மற்றும் வீ செட் செயலிகளுக்கான தடையை ஞாயிற்றுக்கிழமை செயல்படுத்தவுள்ளது. இதனையடுத்து சீன மொழி பேசுபவர்களிடையே பாரிய பயன்பாட்டைக்கொண்ட வீசெட்டையும் அப்பிள், கூகுள் இயக்கப்படும் ஒன்லைன் சந்தைக…
-
- 1 reply
- 524 views
-
-
கொரோனாவால் பட்டினிச்சாவுகள் நிகழும் – ஐ.நா எச்சரிக்கை உள்நாட்டுக் குழப்பங்கள் மற்றும் வறுமைகளால் பாதிக்கப்பட்ட நாடுகள் கொரோனாவினால் மேலும் கடுமையாகப் பாதிப்படையும் என ஐ.நா எச்சரித்துள்ளது. உலக உணவு அமைப்பின் இயக்குனர் (WFP) David Beasley கூறும் பொழுது, உலகளவில் பட்டினிச்சாவுகள் அதிகரிக்கும் எனக் கவலை தெரிவித்துள்ளார். மேலும் இந் நிலையினை சரி செய்ய 17 டிரில்லியன் டொலர் அளவிற்கு செலவுகள் பல நாடுகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலக உணவுத்திட்டத்தின் மூலமாக இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 138 மில்லியன் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை 85 மில்லியன் மக்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது. கையிருப்…
-
- 0 replies
- 426 views
-
-
உச்சநீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் மெட்டாஸ்டேடிக் கணைய புற்றுநோயின் சிக்கல்களால் வெள்ளிக்கிழமை இறந்தார் என்று நீதிமன்றம் அறிவித்தது. அவருக்கு வயது 87. கின்ஸ்பர்க் 1993 இல் ஜனாதிபதி பில் கிளிண்டனால் நியமிக்கப்பட்டார் மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் நீதிமன்றத்தின் தாராளவாத பிரிவின் மிக மூத்த உறுப்பினராக பணியாற்றினார், கருக்கலைப்பு உரிமைகள், ஒரே பாலின திருமணம், வாக்களிக்கும் உரிமைகள் உள்ளிட்ட அன்றைய மிகவும் பிளவுபட்ட சமூக பிரச்சினைகள் குறித்து முற்போக்கான வாக்குகளை தொடர்ந்து வழங்கினார். குடியேற்றம், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் உறுதிப்படுத்தும் நடவடிக்கை. வழியில், அவர் ஒரு ராக் ஸ்டார் வகை அந்தஸ்தை உருவாக்கி, "மோசமான R.B.G." தாராளவாத பார்வையாளர்களுக்கு முன்பாக…
-
- 5 replies
- 794 views
- 1 follower
-
-
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீது முன்னாள் மொடல் அழகி பாலியல் குற்றச்சாட்டு! Ilango BharathySeptember 18, 2020 அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீண்டும் போட்டியிடவுள்ளதோடு அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோய் பிடன்(Joe Biden) களமிறங்கியுள்ளார். மேலும் தேர்தல் நெருங்குவதால் இரு கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றன. இந் நிலையில் மொடல் அழகியான எமி டோரிஸ் (Amy Dorris) என்பவர் டொனால்ட் ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். இது குறித்து புகழ்பெற்ற கார்டியன் பத்திரிகைக்குச் ச…
-
- 0 replies
- 564 views
-
-
டெக் நிறுவனங்கள் vs செய்தி நிறுவனங்கள்... ஆஸ்திரேலியாவில் என்ன நடக்கிறது?! செய்தி நிறுவனங்களின் செய்திகளை வைத்துதான் தனிப்பெரும் நிறுவனங்களாக இந்த டெக் நிறுவனங்கள் வளர்ந்துள்ளன என்கிறது ஆஸ்திரேலிய அரசு. கூகுள், ஃபேஸ்புக் தங்கள் சேவைகளில் இடம்பெறும் செய்திகளுக்குக் குறிப்பிட்ட தொகையைச் செய்தி நிறுவனங்களுக்குச் செலுத்தும் வகையில் புதிய வரையறைகளைக் கொண்டு வர ஆஸ்திரேலியா அரசு திட்டம் ஒன்றை வகுத்துக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் இந்தக் கொள்கைக்கு டெக் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. டெக் உலகில் சில வாரங்களாகவே இந்தப் பஞ்சாயத்துதான் முக்கிய பேசுபொருளாக இருந்து வருகிறது. …
-
- 0 replies
- 621 views
-
-
ட்றம்பிற்கு நோபல் பரிசு? | மத்திய கிழக்கின் இரகசிய நகர்வுகள் சிவதாசன் ‘ஆபிரஹாம் ஒப்பந்தம்’ தயார், நோபல் பரிசு தயாரா? ட்றம்ப் பற்றி என்ன செய்தி வந்தாலும் அதை உண்மை பார்க்குமளவுக்கு (fact check) அவர் தன்னைத் தானே ஒரு நகைச்சுவை நாயகனாக்கியிருக்கிறார். அவரது பேச்சுக்களும், நடவடிக்கைகளும் அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் முக்காடு போட வைத்தாலும் உலகம் அதனால் ஏகப்பட்ட நன்மைகளை அனுபவித்து வருகிறது என்பது ஒரு கணிப்பு. இக் காரணங்களுக்காக, ட்றம்ப் ஒரு ‘தற்செயல் ராஜதந்திரி’ (accidental diplomat) என அரசியல் ஞானிகள் அழைக்கவாரம்பித்திருக்கிறார்கள். தனக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் என அவர் எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அது ஒரு கோமாள…
-
- 3 replies
- 636 views
-
-
ஜேர்மனியில் ஹிட்லரின் படங்களைப் பகிர்ந்து கொண்ட 29 பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்! ஜேர்மனியில் வலதுசாரி கருத்துக்களைப் பரப்பிய, 29 பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடோல்ஃப் ஹிட்லரின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டதற்காகவும், கறுப்பின மக்கள் சுட்டுக் கொல்லப்படுவது மற்றும் எரிவாயு அறைகளில் அகதிகளைக் காட்டும் வன்முறை நவ-நாஜி பிரச்சாரங்களுக்காகவும் இவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். என்.ஆர்.டபிள்யூ உட்துறை அமைச்சர் ஹெர்பர்ட் ரியால் ஒரு விசாரணையைத் தொடங்கி, இந்த சம்பவத்தை ‘என்.ஆர்.டபிள்யூ பொலிஸாருக்கு அவமானம்’ என்று முத்திரை குத்தியுள்ளார். 34 பொலிஸ் நிலையங்கள் மற்றும் தனியார் வீடுகளில் 200க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ச…
-
- 0 replies
- 392 views
-
-
பரம எதிரியான இஸ்ரேலுடன் உறவு: ஐக்கிய இராச்சியம், பஹ்ரைனுக்கு ஈரான் விடுத்துள்ள அறிவிப்பு பரம எதிரியான இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டதன் மூலம் உண்டாகும் விளைவுகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளே பொறுப்பாகும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் வெள்ளை மாளிகையில் இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில் ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் தினமும் குற்றங்களைச் செய்து வருகிறது எனவும் இஸ்ரேலுக்கு உங்கள் கைகளை எவ்வாறு கொடுக்க முடியும் எனவும் ஈரான் ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். மத்திய கிழக்குப் பகு…
-
- 0 replies
- 550 views
-
-
எலிசபெத் மகாராணியை அரச தலைவர் பதவியிலிருந்து நீக்க பார்படோஸ் திட்டம்! எலிசபெத் மகாராணியை அரச தலைவர் பதவியிலிருந்து நீக்கி, பார்படோஸ் குடியரசாக மாற விரும்புகிறது என கரீபியன் நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 1966ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற முன்னாள் பிரித்தானிய காலனியான பார்படோஸ், ஒரு காலத்தில் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த, வேறு சில நாடுகளைப் போலவே முடியாட்சியுடன் முறையான தொடர்பைப் பேணி வருகின்றது. இந்தநிலையில் பார்படோஸ் ஆனுனர் ஜெனரல் சாண்ட்ரா மேசன் நாட்டின் பிரதமர் மியா மோட்லி சார்பில் நிகழ்த்திய உரையில், ‘எங்கள் காலனித்துவ கடந்த காலத்தை முற்றிலுமாக விட்டுவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. பார்படியர்கள் ஒரு பார்பேடிய நாட்டுத் தலைவரை விரும்புக…
-
- 0 replies
- 339 views
-
-
‘கொரோனா பரவலை தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை’: ஐ.நா. ”கொரோனா பரவலை தடுக்க, சமூக இடைவெளி தீர்வாகாது ” எனக் குறிப்பிட்ட ஐ.நா.,வின், 75வது பொதுச்சபை கூட்டத்தின் தலைவர், வோல்கன் போஸ்கிர், (Volkan Bozkir) “உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, கொரோனாவிற்குத் தீர்வு காண முடியும்,” எனத் தெரிவித்துள்ளார். நேற்று, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொதுச் சபையின், 75வது ஆண்டு பொதுக் கூட்டம் துவங்கியது. இதில், முக கவசத்துடன் வந்த, உறுப்பு நாடுகளின் துாதர்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தமது இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். இந்நிலையில், இக்கூட்டத்தில் உரையாற்றிய வோல்கன் போஸ்கிர், “ஐ.நா.,வின், 75வது ஆண்டு திட்டங்கள் அனைத்தும், கடந்த ஆறு ம…
-
- 0 replies
- 505 views
-