உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
இத்தாலியில் மூன்று மாதங்களுக்கு பின்னர் திரையரங்குகள் திறப்பு by : Jeyachandran Vithushan இத்தாலி தலைநகர் ரோமில், 3 மாதங்களுக்குப் பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு செல்வதற்கும் பொதுமக்கள் தயங்குகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தாக்கத்தின் தடுப்பு நடவடிக்கையாக திரையரங்கு வளாகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டதுடன், சமூக இடைவெளி கடைபிடிப்பதற்காக, இரண்டு பேருக்கு இடையே 2 இருக்கைகள் இன்றி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இருந்த போதும், இத்தாலியில், 34,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால், ஒரு சிலர் மட்டுமே திரையரங்குகளுக்கு வருகின்றனர். இதையடுத்து,…
-
- 0 replies
- 425 views
-
-
மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனா தலைநகர் பீஜிங்கில் மீண்டும் ஊரடங்கு பீஜிங் சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவத்தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தலைநகர் பீஜிங்கில் 2 பேர் உள்பட அந்த நாட்டில் புதிதாக 10 பேருக்கு தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. முடிவுக்கு வந்து விட்டது கொரோனா என்று கருதப்பட்டு வந்த நிலையில், புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 56 நாட்களுக்கு பிறகு, தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் பீஜிங்கில் நேற்று மேலும் 2 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்த பீஜிங்கில் அத…
-
- 11 replies
- 978 views
-
-
2020-ம் ஆண்டு முடியும்வரை எல்லையை மூடும் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன். 2020 ஆம் ஆண்டு முடியும்வரை ஆஸ்திரேலியாவில் எல்லைகள் மூடப்படும் என்று அந்நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் அவற்றின் அன்றாடச் செயல்பாடுகளிலிருந்து முற்றிலுமாக முடங்கியுள்ளன. கரோனா பரவலை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில் உலக நாடுகள் அனைத்தும் எல்லை மூடலைப் பின்பற்றி வருகின்றன இந்தச் சூழலில் ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் 75% கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது. எனினும் சில வி…
-
- 0 replies
- 412 views
-
-
எதிர்காலம் நாம் ஆவோம்! உலகம் முழுவதும் நாவல் கரோனா வைரஸ் பரவலால் மூடப்பட்டிருக்கும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும் 150 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக யுனெஸ்கோ மதிப்பிட்டுள்ளது. உலகம் முழுவதும் கல்வி கற்க முடியாமல், மனத்தளவில் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களும் அவநம்பிக்கை மனநிலையில் வாழும் மாணவர்களும் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் கைக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ‘பீ த ஃபியூச்சர்’ என்னும் பாடல் இணையம் வழியாக வெளியிடப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் ஓர் அங்கமான குளோபல் எஜுகேஷன் கொலிஷன் மூலம் தென்கொரியாவின் கே-பாப் கலைஞர்கள் இந்த இசைக் காணொலியை, மில்லேனேசியா புராஜெக்ட் வழியே யூடியூபில் வெளியிட்டிருக்கிறார்கள். தென்கொரியாவின் கே-பா…
-
- 0 replies
- 402 views
-
-
ஜப்பானின் மிகப்பெரிய கப்பல் ஒன்றில் தீ விபத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட பயணிகள் கப்பலில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ பல மணிநேர போராட்டத்தின் பின்னர் கப்பலில் பணிபுரிந்தவர்கள், தீயணைப்பு மற்றும் கடற்படைவீரர்கள் ஆகியோரினால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதோடு தீ விபத்தில் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான அசுகா II என்ற கப்பலின் மேல் தளத்தில் உள்ள ஒரு களஞ்சியசாலையில் தீப்பற்ற தொடங்கியதாக உள்ளூர் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இதன்போது கப்பலில் அத…
-
- 0 replies
- 242 views
-
-
ஊரடங்கு: ஸ்வீடனிலிருந்து ஒரு செய்தி! ஒருங்கிணைந்த திட்டமிடலுக்காக ஸ்வீடனை மேற்கோள் காட்டி விவாதித்த காலம் மாறி, இப்போது அந்த நாடு கரோனாவை எப்படி அணுகுகிறது என்ற விவாதம் தொடங்கியிருக்கிறது. அதற்கான முக்கியக் காரணம், கிருமியுடன் வாழ்தல் எனும் நிலைப்பாட்டை ஸ்வீடனே அறிமுகப்படுத்தியது. விளைவாக, அச்சத்திலிருந்து உலகம் வெளியே வர வழிவகுத்தது. அந்த அணுகுமுறை ஸ்வீடனுக்கு முழுமையான பலனை அளித்திருக்கிறதா? ஸ்வீடனின் தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்நெல் கரோனாவுக்கு முன்னால் எந்தெந்தத் தொற்றுநோய்கள் கொள்ளைநோய்களாக மாறின, தடுப்பூசிகளோ சரியான மருந்து மாத்திரைகளோ இல்லாதபோது அவையெல்லாம் எப்படிக் குறைந்தன என்ற பழைய வரலாறுகளை ஆழ்ந்து கவனித்து ஒரு முடிவுக்கு வந்தார். மு…
-
- 1 reply
- 871 views
-
-
வடகொரியா - தென்கொரியா பிரச்சனை: எல்லை அலுவலகம் தகர்ப்பு, தயார் நிலையில் ராணுவம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS வடகொரிய - தென்கொரிய எல்லையில், அமைந்துள்ள கேசாங் நகரில் இருக்கும் இருநாட்டு பொது தகவல் தொடர்பு அலுவலகம், வடகொரியாவால் தகர்க்கப்பட்டுள்ளது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. …
-
- 1 reply
- 526 views
-
-
இனி எந்தப் போராக இருந்தாலும் வெற்றி நமக்கு மட்டுமே: ட்ரம்ப் ஆவேச பேச்சு இனி எந்தப் போராக இருந்தாலும் அதில் வெற்றி நமக்கு மட்டுமே என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஓக்லஹாமாவில் உள்ள அமெரிக்க இராணுவ பயிற்சி நிலையத்தில், அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் பயிற்சி நிறைவு செய்தவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நம் இராணுவத்தின் அடிப்படை கொள்கையை மீட்க உள்ளோம். வெளிநாடுகளில் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்படுத்துவது அவர்களுடைய பணி அல்ல. நம் நாட்டை, எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதே, இராணுவத்தின் முக்கிய நோக்கமாகும். முடிவே இல்லாமல் நடந்த…
-
- 2 replies
- 625 views
-
-
ஜேர்மனியில் இருந்து அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறும் திட்டத்தை உறுதிசெய்தார் ட்ரம்ப்! by : Anojkiyan 9,500 அமெரிக்க துருப்புக்களை ஜேர்மனியில் உள்ள தளங்களில் இருந்து திரும்பப் பெறும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். ஐரோப்பாவின் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (நேட்டோ) அதன் கூட்டமைப்புகளுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்த மாத தொடக்கத்தில் வீரர்கள் குறைப்பு பற்றிய வதந்திகள் அமெரிக்க ஊடகங்களால் பரப்பப்பட்டன. இந்த பின்னணியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. வெள்ளை மாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றிய அவர், ‘மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2…
-
- 3 replies
- 681 views
-
-
இந்தியாவை விட பாகிஸ்தான், சீனாவிடம் அதிக அணுஆயுதங்கள் - சர்வதேச அமைப்பு தகவல் லண்டன்: சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் என்ற அமைப்பு, ஆண்டுதோறும் அணு ஆயுத நிலவரம் தொடர்பாக தகவல்களை திரட்டி அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- உலக அளவில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய 9 அணுஆயுத நாடுகள் உள்ளன. இந்த நாடுகளிடம் உள்ள மொத்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 400 ஆகும். இது, கடந்த ஜனவரி மாத நிலவரம் ஆகும். கடந்த ஆண்டு இந்த நாடுகளிடம் மொத்தம் 13 ஆயிரத்து 865 அணு ஆயுதங்கள் இருந்தன. மிகவ…
-
- 1 reply
- 564 views
-
-
நியூசிலாந்தில் மீண்டும் கரோனா பாதிப்பு: இருவருக்குத் தொற்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கரோனா தொற்று இல்லாத நாடாக நியூசிலாந்து அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இருவருக்கு கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதத்துக்கும் மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸை எதிர்கொண்டு வருகின்றன. கரோனா வைரஸிலிருந்து விடுபட அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் செய்வதறியாமல் தவித்து வரும் சூழலில் நியூசிலாந்து சிறப்பான நடவடிக்கைகளைக் கையாண்டு கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நியூசிலாந்து கரோனா வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சில தளர்வுகளை அரசு கொண்டுவந்தது. ஆனால், எல்லைக்…
-
- 0 replies
- 310 views
-
-
பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் இருவரை காணவில்லை! பாகிஸ்தான் – இஸ்லாமாபாத்தில் பணிபுரியும் இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் இன்று (15) காலை முதல் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அந்நாட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உளவுத்துறையின் பிடியில் அவர்கள் சிக்கியிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் இந்தியாவில் பணிபுரிந்த பாகிஸ்தான் தூதரகத்தின் உயர் ஆணைய அதிகாரிகள் இருவர் உளவு பார்த்தாக குற்றஞ்சாட்டி இந்திய அரசால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இந்திய தூதரகத்தில் பணிபுரியும் கவுரவ் அலுவாலியா என்ற பொறுப்பதிகாரியை பாகிஸ்தான் உள…
-
- 9 replies
- 1k views
-
-
ஜேர்மனியில் கொவிட்-19 உயிரிழப்பு குறைந்தது- தொற்று வீதம் அதிகரித்தது! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு வெகுவாக குறைவடைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 248பேர் பாதிப்படைந்ததோடு, 3பேர் உயிழந்துள்ளனர். எனினும், கொவிட்-19 வைரஸ் பரவும் தொற்று வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோயின் பரவலுக்கான திறனை அளவிடும் ஜேர்மனியின் 7 நாள் வைரஸ் இனப்பெருக்கம் வீதம் ஞாயிற்றுக்கிழமை 1 முதல் 1.09 வரையிலான முக்கியமான மதிப்பை விட உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கள்கிழமை) முதல் ஐரோப்பிய ஒன்றிய பயணிகளுக்கு ஜேர்மனி தனது நில எல்லைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னதாக இந்த செய்தி…
-
- 0 replies
- 355 views
-
-
3 கிலோ தங்கத்தினை விட்டுசென்றவர் யார் - தேடுகிறது சுவிஸ் ரயில் பயணங்களில். போனை துளைக்கலாம், பெர்சினை பணத்துடன் துளைக்கலாம். தங்க கட்டிகளை, அதுவும் 3கிலோ சுத்தமான கட்டிகளை துளைத்து, அதாவது ரயிலில் விட்டு செல்வீர்களா? கடந்த அக்டோபர் மாதம் சுவிஸ் நாட்டில், செயின்ட் கலன் ஸ்டேஷனுக்கும், லூசெர்ன் ஸ்டேஷனுக்கும் இடையே ரயில் செல்லும் போது, அநாதரவாக கிடந்த பையினுள் இருந்த £152,000 ($191,000) பெறுமதியான 3கிலோ தங்க கட்டிகள் அதன் உரிமையாளர் வந்து பெற்றுக் கொள்ளும் வரை, லூசெர்ன் அரச வழக்குகள் தொடரின் அலுவலகத்தில் காத்திருக்கின்ற்ன. உரியவர்கள் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இடையில் வந்து பெற்றுக் கொள்ள முடியும். அதன் பின்னர் அது அனாதரவு சொத்தாக அரசு எடுத்துக் கொள்ளும்…
-
- 6 replies
- 859 views
-
-
உளவு பார்த்ததாக ரஷ்யாவில் முன்னாள் அமெரிக்க கடற்படை வீரருக்கு 16 ஆண்டுகள் சிறை முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரான பால் வீலன் உளவு குற்றச்சாட்டில் ரஷ்ய நீதிமன்றத்தால் 16 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதிவு: ஜூன் 15, 2020 16:16 PM மாஸ்கோ அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் அயர்லாந்து பாஸ்போர்ட்களை வைத்திருக்கும் வீலன், ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு படையினரால் 2018 டிசம்பர் 28 அன்று மாஸ்கோ ஓட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார். 50 வயதான பால் வீலன் இரகசிய தகவல்களைக் கொண்ட கணினி ஃபிளாஷ் டிரைவோடு பிடிபட்டதாக ரஷ்ய தரப்பில் கூறப்பட்டது. குற்றவாளி அல்ல என்று வாதிட்ட வீலன், தான் ஒரு வலையில் சிக்க வைக்கப்பட்டிருப்பதாகவும்…
-
- 0 replies
- 349 views
-
-
அவதூறு வழக்கில் பிரபல ஊடகவியலாளர் குற்றவாளியென தீர்ப்பு! பிலிப்பைன்ஸின் பிரபல ஊடகவியலாளர் மரியா ரேஸா, இணையவழி அவதூறு வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் இன்றுதீர்ப்பளித்துள்ளது. 56 வயதான மரியா ரேஸா, பிலிப்பைன்ஸ் ரெப்ளர் செய்தி இணையத்தள நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் ஆவார். குறித்த வழக்கில் ரெப்ளர் தளத்தின் முன்னாள் எழுத்தாளர் ஒருவரும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நிலைவையில் உள்ள மேன்முறையீட்டின் அடிப்படையில் இவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 6 வருட சிறைத்தண்டனையை எதிர்நோக்குகின்றனர். வர்த்தகர் ஒருவருக்கும் முன்னாள் நீதிபதி ஒருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து 2012 ஆம் ஆண்டு வெளியிடப்ப…
-
- 1 reply
- 435 views
-
-
அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று அமெரிக்காவில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் புளோரிடா மற்றும் டெக்சாஸ் போன்ற மாகாணங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் சேர்க்கை அதிகரித்து அங்குள்ள மருத்துவமனைகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளன. அலபாமா மாகாணத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தெற்கு கரோலினா மாகாணத்தில் சுமார் 77% மருத்துவ சேர்க்கை நிறைவடைந்துவிட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,000 பேருக்கு …
-
- 0 replies
- 409 views
-
-
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு கொரோனா தொற்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 67 வயதுடைய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான கிலானி முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. கிலானியின் மகன் காசிம் கிலானி தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் “இம்ரான் கான் அரசாங்கத்திற்கும் பாகிஸ்தானின் தேசிய பொறுப்புக்கூறல் பணியகத்திற்கும் நன்றி. நீங்கள் வெற்றிகரமாக எனது தந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். அவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார். http://athavannews.com/பாகிஸ…
-
- 0 replies
- 331 views
-
-
கொரோனாவை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? - உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுகிறது கொரோனா வைரஸ் தொற்று பல நாடுகளில் உச்சம் தொடும் வேளையில், அதை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுகிறது. பதிவு: ஜூன் 15, 2020 04:45 AM ஜெனீவா, உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால செயல் இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரேயான், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் காணொலி காட்சி வழியாக நிருபர்களிடம் பேசினார். கொரோனா வைரஸ் பரவல் பற்றி அவர் சில கருத்துக்களை கூறினார். அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் தொற்று பரவல் இன்னும் பல நாடுகளில் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக உலகளாவிய தெற்க…
-
- 0 replies
- 425 views
-
-
சீனாவில் திரவ எரிவாயு டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 19 பேர் பலி: 166 பேர் காயம் சீனாவின் ஜிஜியாங் மாகாணம் ஷென்யாங் - கைகோயு எக்ஸ்பிரஸ்வே சாலையில் திரவ எரிவாயு ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரி திடீரென வெடித்து சிதறியது. விபத்து ஏற்பட்டதும் டேங்கர் லாரி அருகில் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலை ஒர்க்ஸ்ஷாப் மீது பயங்கரமாக மோதியது. இதனால் அந்த இடங்கள் இடிந்து விழுந்ததுடன் தீப்பிடித்து எரிந்தன. 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் மீட்பு பணியில் ஈடுபட்டன. இதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 166 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தின் போது சாலையில் சென்ற வாகனங்களும் த…
-
- 1 reply
- 424 views
-
-
சே குவேரா பிறந்த தினம்: சில முக்கிய குறிப்புகள் கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ 'சே' குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா. ஞாயிறன்று, மருத்துவராக இருந்து கொரில்லாப் போராளியாக உருவெடுத்த இந்தப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் புரட்சியாளரின் 92வது பிறந்தநாள். அவரது வாழ்வின் முக்கிய மைல்கற்களாக இருந்த நிகழ்வுகளை தொகுத்தளிக்கிறோம். சே குவேரா, தமது வாழ்நாள் தோழராக விளங்கிய பிடல் காஸ்ட்ரோவை 1955இல் மெக்சிகோவில் சந்தித்தார். பிடலின் ஜூலை 26 இயக்கத்தில் இணைந்து கியூபா…
-
- 1 reply
- 2.5k views
-
-
சே குவேரா பிறந்த தினம்: சில முக்கிய குறிப்புகள் Keystone கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ 'சே' குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா. ஞாயிறன்று, மருத்துவராக இருந்து கொரில்லாப் போராளியாக உருவெடுத்த இந்தப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் புரட்சியாளரின் 92வது பிறந்தநாள். அவரது வாழ்வின் முக்கிய மைல்கற்களாக இருந்த நிகழ்வுகளை தொகுத்தளிக்கிறோம். சே குவேரா, தமது வாழ்நாள் தோழராக விளங்கிய பிடல் காஸ்ட்ரோவை 1955இல் மெக்சிகோவில் சந்தித்தார். பிடலின் ஜூலை 26 இயக்கத்தில் இணைந்து கியூபா…
-
- 0 replies
- 531 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் எளிமையான முறையில் பிறந்த நாளை கொண்டாடிய மகாராணி கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் ஆண்டுதோறும் ட்ரூப்பிங் தி கலர் அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டதால் நேற்று (சனிக்கிழமை) இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடியுள்ளார். மகாராணியின் பிறந்தநாள் விழா பிரித்தானிய அரச குடும்பத்தில் கொண்டாடப்படும் மிகப்பெரிய விழாவாகும். குறிப்பாக ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் சூழ ஆடம்பரமான முறையில் இராணுவ வீரர்களின் அணிவகுப்பில் நடைபெறும். இந்நிலையில் இந்த வருடத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணத்தால் எளிமையான முறையில் சம்பிரதாயத்துக்காக நேற்று இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்பு 195…
-
- 0 replies
- 363 views
-
-
சீனாவில் எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறியதில் 19 பேர் உயிரிழப்பு, 172 பேர் காயம் சீனாவில் எரிபொருள் தாங்கி ஒன்று வெடித்து சிதறியதால் 19 பேர் உயிரழந்ததுடன் 172 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள ஜேஜியாங் மாகாணத்தின் வென்லிங் என்ற நகரில் நேற்று (சனிக்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றது. நெடுஞ்சாலையொன்றில் சென்றுகொண்டிருந்த எரிபொருள் தாங்கி வெடித்தத்தில் அருகிலிருந்த வீடுகள், தொழிற்சாலைகள் சேதமடைந்ததுடன் பாரிய தீ பரவி பல வாகனங்களும் தீக்கிரையாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 172 பேர் தொடரந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று …
-
- 0 replies
- 341 views
-
-
2013 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அவுஸ்ரேலிய பிரஜைக்கு மரண தண்டனை விதித்த சீனா! 2013 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவுஸ்ரேலிய பிரஜை ஒருவருக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. பயணப்பையில் 7.5 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அவுஸ்ரேலிய அரசாங்கம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது குறித்து மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அத்தோடு 2013இல் கைதான நபருக்கு இப்போது ஏன் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறித்துத் தெளிவான தகவல் வெளியாகவில்லை. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் வர்த்தக மோ…
-
- 0 replies
- 403 views
-