உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் சூழலை பயன்படுத்தி, பயங்கரவாதிகள் தங்களது கைவரிசைகளை காட்டும் அபாயம் உள்ளதாக ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) கூறியுள்ளார். வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கொரோனோ குறித்து பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். கொரோனா போன்ற ஆபத்தான வைரசுகளை வைத்து உயிரி பயங்கரவாத தாக்குதலை சில அமைப்புகள் நடத்த முற்படலாம் என்ற அவர், கொரோனா தொற்று சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் என அச்சம் தெரிவித்தார். கொரோனா தொற்றை கையாளுவதில் நமக்கு ஏற்பட்டுள்ள இயலாமை பயங்கரவாதிகளுக்கு துணை போய் விடக்கூடாது என்றும் அவர் உறுப்பு நாடுகளை கேட்டுக் கொண்டுள்ள…
-
- 0 replies
- 410 views
-
-
தென்கொரியாவில் குணமடைந்த கொரோனா வைரஸ் நோயாளிகள் பலர் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயிலிருந்து மீண்டுள்ளனர் என கருதப்படும் 91 நோயாளிகள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தென்கொரியாவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையைம் தெரிவித்துள்ளது. குணமடைந்தவர்களிற்கு மீண்டும் நோய் எப்படி தொற்றியது என்பதை உறுதி செய்யமுடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீண்டும் தொற்றிற்குள்ளாகவில்லை மாறாக நோயாளிகளிடம் மீண்டும் மீள் உற்பத்தியாகியுள்ளது என செய்தியாளர் மாநாட்டில் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தவறானசோதனைகளும் இதற்கு காரணமாகயிருக்கலாம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் இந்த நோய்க்கான நோய் எதி…
-
- 0 replies
- 293 views
-
-
கொரோனா வைரஸ் எவரையும் தாக்கலாம் ஆனால் சில சமூகத்தினர் ஏனையவர்களை விட அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன என பிபிசி தெரிவித்துள்ளது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் இனசிறுபான்மை குழுக்களின் மீது அளவுக்கதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன என பிபிசி தெரிவித்துள்ளது. தீவிரகிசிச்சை பிரிவின் தேசிய கணக்காய்வு ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 35 வீதமானவர்கள் சிறுபான்மை மற்றும் கருப்பினத்தை சேர்ந்தவர்கள் என பிபிசி தெரிவித்துள்ளது. இங்கிலாந்து வேல்ஸ் வடஅயர்லாந்து மருத்துவமனைகளில் தீவிரகிசிச்சை பிரிவுகளில் உள்ள 2000 நோயாளிகள் மத்தியில் மேற்க…
-
- 4 replies
- 676 views
-
-
கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் கொரோனா உயிரியல் கிருமியின் தொற்றினால் உலக அரசியலின் ஒழுங்கு மாற்றத்திற்குள்ளாகிறது. ஆசியாவை விட ஐரோப்பாவே அதிக இழப்புக்களை எதிர் கொண்டு வருகிறது. சீனாவில் தோன்றியது எனக் கூறினாலும் ஐரோப்பாவே பலியிடப்படும் தேசமாக மாறிவருகின்றது. இருபதாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தங்களில் இவ்வகை போர் ஒன்று பற்றிய எச்சரிக்கைகளும் ஆங்காங்கே சிறிய அளவிலான தாக்குதல்களும் நடந்தேறியிருக்கின்றன. இவ்வகை யுத்தம் ஒன்று பற்றிய எதிர்வு கூறல்கள் நிகழ்ந்தே வந்துள்ளன. இது ஒரு மூன்றாம் உலக யுத்தமாக மாறியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பு ஆயிரக்கணக்கான சிறிய யுத்தங்கள் நிகழ்ந்தன. அவை அனைத்தும் பலத்துக்கும் பலவ…
-
- 1 reply
- 482 views
-
-
கொரோனா வைரஸை உலகம் எப்படி வென்று கொண்டிருக்கிறது? இந்த ஐந்து செய்திகள் நிச்சயம் உங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை தரும்
-
- 0 replies
- 381 views
-
-
சாட் இராணுவத்தின் தாக்குதலில் 1000 பேகோஹராம் தீவிரவாதிகள் பலி! மத்திய ஆபிரிக்க நாடான சாட் டின் மேற்கு பகுதியில் போகோஹராம் தீவிரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கையில் சுமார் ஆயிரம் பேகோஹராம் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது. சாட்டின் இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மார்ச் 31 ஆம் திகதி சாட்டின் எல்லைப் பகுதிகளிலும், நைஜர் மற்றும் நைஜீரியாவின் பகுதிளிலும் ஆரம்பிக்கப்பட்ட பேகோஹராம் தீவிரவாதிகளுக்கு எதிரான இந்த தாக்குதல் நடவடிக்கையானது புதன்கிழமை முடிவடைந்துள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையில் 52 சாடியன் இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், அனைத்து தீவிரவாதிகளும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டும் உள்ளனர். …
-
- 0 replies
- 597 views
-
-
கொரோனா சூழ்நிலையால் பிரித்தானியாவில் அவசரகால நிலை பிரகடனபடுத்தப்பட்டு அரசாங்கத்தால் பல நடைமுறைகள் முடக்கப்பட்டுள்ளன. சில வேலைத் தளங்கள் மூடப்பட்டுள்ளன. சிலர் வீட்டில் இருந்து வேலை செய்ய பணிக்கபட்டுள்ளனர். சுயதொழில் செய்வோர் , பகுதி நேரமாக வேலை செய்வோர் , ஒப்பந்தம் இல்லமால் வேலை செய்தோர் , பதிவுகள் இன்றி கைகளில் சம்பளம் வாங்கி வேலை செய்தோர் , வேலை செய்ய அனுமதி இல்லாதவர்கள் , இந்த நாட்டில் தங்கி வாழ அனுமதி மறுக்கபட்டவர்கள் என பலரும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். வைரஸ் தாக்கத்தில் இருந்து எப்பிடி தப்பிப்பது என்ற பயம் ஒருபுறமும், தமது வாழ்க்கையினை எவ்வாறு கொண்டு நகர்த்துவது என்ற யோசனை மறுபுறமும் ஒவ்வொருத்தரையும் ஆட்கொண்டுள்ளது. உலகமே இவ்வாறான நெருக்கடி நிலையை …
-
- 0 replies
- 428 views
-
-
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் - மோனிகா லெவின்ஸ்கி உறவை அம்பலப்படுத்திய பெண் மரணம் 9 ஏப்ரல் 2020 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டன் மற்றும் வெள்ளை மாளிகையில் பணி புரிந்த மோனிகா லெவின்ஸ்கி ஆகியோர் இடையே இருந்த உறவை வெளிப்படுத்திய முன்னாள் அரசுப் பணியாளர் லிண்டா…
-
- 0 replies
- 799 views
- 1 follower
-
-
அசோசியேட்டட் பிரஸ் நவம்பர் தேர்தலிற்கான களம் தயாராகியுள்ளது ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோபிடென் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது,எதிர்பாராத இடர்கள் எதுவும் ஏற்பட்டால் மாத்திரமே இந்த நிலை மாறும். அவர் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை எதிர்த்து போட்டியிடுவார். பேர்னி சான்டெர்ஸ் தனது பிரச்சாரத்தினை முடிவிற்கு கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளதை தொடர்ந்தே இந்த நிலை உருவாகியுள்ளது. யூன் வரையில் தேர்தலில் உத்தியோகபூர்வமாக நிறுத்தப்படுவதற்கு அவசியமான பிரதிநிதிகளின் எண்ணிக்கை ஜோ பிடெனிற்கு கிடைக்காது. ஆனால் ஜனநாயக கட்சியை சேர்ந்த எவரும் போட்டியிடுவதற்கு இல்லாத நிலையில் அவரே வேட்பாளர் என்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவின் மி…
-
- 0 replies
- 531 views
-
-
உலகப் பொருளாதாரம் மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சியடையும்- உலக வர்த்தக அமைப்பு by : Litharsan கொரோனா வைரஸ் பரவல் மிகப்பெரிய பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ரொபேர்டோ அஸிவெடோ (Roberto Azevêdo) தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனா தொற்று நோய் உலகில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்து விட்டதாக ஜெனீவா நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் குறிப்பிட்டுள்ளார். வைரஸ் தொற்றுநோயால் 2020ஆம் ஆண்டில் உலகளாவிய வர்த்தக வளர்ச்சி 13 முதல் 32 வீதம் வரை, அதாவது மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த எண்ணிக்கை மேலும் மோசமாக இ…
-
- 0 replies
- 270 views
-
-
இத்தாலியில் மற்றுதொரு விபரீதம் : 850 அடி நீளமான பாலம் இடிந்து வீழ்ந்தது இத்தாலியின்மிகப்பெரிய 850 அடி நீளமுடைய பாலம் இடிந்து விழுந்துள்ளது. இத்தாலியின் மாஸா கராரா மாகாணத்தில் அல்பியானோ மாக்ராவில் உள்ள மாக்ரா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலம் ஒன்றே இன்று காலை இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. எனினும், கொவிட் -19 காரணமாக முடக்கப்பட்டுள்ள இத்தாலியில், பாலம் இடிந்து விழும் போது இரு வாகனங்கள் மட்டுமே பயணித்துள்ளன. இந்நிலையில் குறித்த விபத்தில் இரண்டு சாரதிகள் மட்டும் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயங்களுக்கு உள்ளாகியவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/79583
-
- 4 replies
- 602 views
-
-
இயல்பு நிலைக்கு திரும்புகிறதா இத்தாலி? இத்தாலியில் இந்த மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்படலாம் என அந்நாட்டின் பிரதமர் குசெப் கொன்டே தெரிவித்துள்ளார்.அங்கு வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து பிரிட்டன் ஊடகங்களுக்கு அவர் அளித்த முதல் பேட்டியிலேயே அவர் இந்தத் தகவலை தெரிவித்தார்.விஞ்ஞானிகள் உறுதி செய்தால், இந்த மாத இறுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்குவோம். அந்த நடவடிக்கை படிப்படியாக எடுக்கப்படும்” என்றும் பிபிசியிடம் பேசிய அவர் கூறினார். இத்தாலியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் வீதம் மெதுவாக குறைந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரிக்க தற்போது அது ஒரு சதவீதமாக உள்ளது.அதேபோல…
-
- 0 replies
- 369 views
-
-
கொரோனாவின் தீவிர பரவல்: உலக அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நாள்! உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் தற்போது ஒவ்வொரு நாள் பொழுதிலும் ஆயிரக்கணக்கான மரணங்களை ஏற்படுத்தி வருகின்றது. உலக நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணிநேரங்களில் அமெரிக்காவில் மட்டும் ஆயிரத்து 900ஐயும் தாண்டி மனித உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இந்நிலையில் உலக அளவில் 14 இலட்சத்து 31 ஆயிரத்து 706 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணங்கள் 80 ஆயிரத்தைக் கடந்து தற்போது 82 ஆயிரத்து 80 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு இதுவரை 3 இலட்சத்து 2 ஆயிரத்து 149 பேர் குணமடைந்துள்ள போது…
-
- 0 replies
- 325 views
-
-
கொரோனா வைரசுக்குச் சூட்டிய ‘வுஹான் வைரஸ்’ என்ற அடைமொழியை கைவிடுகிறது அமெரிக்கா! கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றாக மாறிவிட்டதாலும் அதைக் கட்டுப்படுத்த சீனாவின் உதவி வேண்டும் என்பதாலும் ‘வுஹான் வைரஸ்’ என்ற அடைமொழியை விட்டுவிட அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்கா, தனக்குத் தேவையான முகக் கவசங்கள் உள்ளிட்ட 50 சதவிகித தனிநபர் பாதுகாப்பு உபகரணங்ளுக்கு சீனாவை நம்பியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோவும் அடிக்கடி பயன்படுத்தும் ‘வுஹான்’ வைரஸ் என்ற சொல் அமெரிக்காவின் அகராதியில் இருந்து மறைகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகளுக்கு இடையில் மிகுந்த ஒத்துழைப்பு தேவை என்பதால் சீனாவை குறிவைத்து பேசப்பட்ட குறித்த அ…
-
- 0 replies
- 294 views
-
-
மாடிசன்: அமெரிக்காவில், விஸ்கான்சின் மாகாண மக்கள், கொரோனா பரவல் அச்சமின்றி, ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கான, 'பிரைமரி' தேர்தலில், பல மணிநேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து, ஓட்டுப் போட்டனர். எனினும், மில்வாகீ நகரில்,180 வாக்குச்சாவடிகளில், ஐந்தில் மட்டுமே ஓட்டுப் பதிவு நடைபெற்றது. நுாற்றுக்கணக்கான தேர்தல் பணியாளர்கள், வைரஸ் பாதிப்பிற்கு அஞ்சி, பணிக்கு வருவதை தவிர்த்தனர். இந்த இக்கட்டான இத்தருணத்தில், ஜனாதிபதி தேர்தலை தள்ளி வைக்க, ஜனநாயக கட்சி கோருகிறது. ஆனால், டிரம்பின் குடியரசு கட்சி, திட்டமிட்டபடி, நவம்பரில் தேர்தல் நடத்துவதில் உறுதியாக உள்ளது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2517550
-
- 0 replies
- 362 views
-
-
2019ம் ஆண்டு இறுதியில் சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் கொஞ்சம் கொஞ்சமாக பின்னர் வேகமாக உலக நாடுகளிலேயும் பரவி பல உயிர்களை கொன்றொழித்துவரும் நிலையில் பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 708 பேர் உயிரிழந்துள்ளதாக இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக பிரித்தானியாவில் உயிரிழப்புக்களும் தொற்றுநோயாளார்களின் எண்ணிக்கையும் மிகமிக வேகமாக அதிகரித்து வருவது கண்கூடு. இந்நிலையில் 24 மணிநேரத்தினுள் எந்தவொரு சுகவீனமுமின்றி நல்ல சுகாதார நிலைமையைக்கொண்ட 5 வயது குழந்தை உட்பட 708 பேர் உயிரிழந்துள்ளமையோடு இதுவரையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4313 ஆக காணப்படுகின்றது. கொரோனா தாக்கத்தின் பிடியில் இருந்து விடுபடவேண்டும…
-
- 13 replies
- 854 views
-
-
https://m.facebook.com/iamPokkisham/videos/644747872738556/
-
- 0 replies
- 474 views
-
-
பிரான்ஸ் – சுவிஸ் – அரியாலை: பரவியது எப்படி? 👤by admin சுவிசில் இருந்து தமிழர் தாயகத்துக்கு வருகை தந்திருந்த போதகர் ஒருவரினால் யாழ்ப்பாணம் அரியாலையில் நடந்த ஒன்றுகூடலின் ஊடாகவே தமிழர்தாயகப் பகுதிக்குள் “கொரோனா” புகுந்தது என்ற செய்தி தாயகத்தை மட்டுமல்ல, புலம்பெயர் தமிழர்களையும் அதிர்ச்சிக்கும் கோபத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. வளர்ந்த நாடுகள் பலவுமே கொரோனாவோடு போராடிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழர் தாயகம் எவ்வாறு கொரோனாவுக்கு முகங்கொடுக்கப் போகின்றது என்ற கவலையும் அச்சமும் புலம்பெயர் தமிழர்களிடத்தில் பரவலாக காணப்படுகின்றது. இதுபோலவே பிரான்சிலும் போதகர் ஒருவரின் ஒன்றுகூடலினாலேயே பிரான்ஸ் முழுவதும் கொரோனா பரவக் க…
-
- 0 replies
- 587 views
-
-
உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை ஒரே நாளில் திணறவைத்துள்ளது. உலக நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 2 மணிநேரங்களில் ஆயிரத்து 800ஐயும் தாண்டி மனித உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இந்தச் செய்தி பதிவிடும்வரை ஒருநாளில் 1845 பேர் அங்கு மரணித்துள்ளதுடன் புதிய நோயாளர்கள் 27 ஆயிரத்து 178 பேர் அடையாளங்காப்பட்டுள்ளனர். அத்துடன் மொத்த உயிரிழப்பு 12ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, மொத்தமாக 3 இலட்சத்து 94ஆயிரத்து 182 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் அமெரிக்காவில் இதுவரை 21ஆயிரத்து 571 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ள நிலையில் சிகிச்சை பெறுவோரில் ஆயிரத்து 169 பேர் கவலைக்குரிய நிலையில் உள…
-
- 4 replies
- 1.2k views
-
-
ஆபிரிக்க மக்கள் மீது, கொரோனா தடுப்பூசியை சோதிக்க அனுமதிக்க முடியாது- உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை ஆபிரிக்க மண்ணில் அந்நாட்டு மக்களுக்குப் பரிசோதித்துப் பார்ப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். எனவே, இனவெறி பிடித்துள்ள சில ஆய்வாளர்களுக்கு இதுபோன்ற எதேச்சதிகார புத்தி மாறவேண்டும் என ஜெனிவாவில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “சில இனவெறி (பிரான்ஸ் ஆய்வாளர்கள் இருவர்) பிடித்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை ஆப்பிரிக்க மக்களின் உடலில் செலுத்திப…
-
- 2 replies
- 844 views
-
-
மோடி மிகப்பெரிய மனிதர்- பாராட்டிய ட்ரம்ப் by : Yuganthini இந்தியாவில் இருந்து 2.90 கோடி ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வாங்கியுள்ளோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் பிரதமர் மோடி மிகப்பெரிய மனிதர் எனவும் பாராட்டியுள்ளார். மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ரோக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக வழங்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்குப் பின், குறித்த மாத்திரைகளின் ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மாதம் 25-ம் திகதி தடை செய்தது. னினும் கொ…
-
- 1 reply
- 571 views
-
-
கொரோனாவின் தீவிர பரவல்: உலக அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நாள்! by : Litharsan உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் தற்போது ஒவ்வொரு நாள் பொழுதிலும் ஆயிரக்கணக்கான மரணங்களை ஏற்படுத்தி வருகின்றது. உலக நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணிநேரங்களில் அமெரிக்காவில் மட்டும் ஆயிரத்து 900ஐயும் தாண்டி மனித உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இந்நிலையில் உலக அளவில் 14 இலட்சத்து 31 ஆயிரத்து 706 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணங்கள் 80 ஆயிரத்தைக் கடந்து தற்போது 82 ஆயிரத்து 80 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து வி…
-
- 0 replies
- 372 views
-
-
இயல்பு நிலைக்கு திரும்பியது சீனாவின் வூகான் நகரம் கொரோனா வைரஸ் முதலில் பரவ ஆரம்பித்த சீனாவின் வூகான் நகரில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. வீடுகளில் அடைபட்டு கிடந்த மக்கள் இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் ஊரை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் குறைவடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் மெல்ல மெல்ல அப்பகுதி கொரோனாவில் இருந்து விடுபடுகிறது. இதன் பலனாக வூகானில் இருந்து ஹூபேய் மாகாணத்திற்குள்ளாக ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. முதல் ரயில் இன்று(புதன்கிழமை) காலை புறப்பட்டுச் சென்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் 276 பயணிகள் பயணித்தனர். இதே போன்று நெடுஞ்சாலைகளும…
-
- 3 replies
- 592 views
-
-
சீனாவிடமிருந்து பிற நாடுகள் ஆர்டர் செய்யும் மருத்துவ உபகரணங்களை அதிகப் பணம் கொடுத்து அமெரிக்கா தட்டிப் பறிப்பதாக ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் இந்தச் சூழலில் சர்வதேச பதற்றமும் பெருமளவில் அதிகரித்துள்ளது. உலக அளவில் வைரஸ் தொற்று அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும் அடுத்தடுத்த இடங்களில் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் போதிய மருத்துவப் படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்புப் பொருள்கள் இல்லாமலும் வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமலும் அரசுகள் திணறி வருகின்றன. ஜெர்மனி AP அதிலும் குறிப்பாக முதல் இடத்தில் உள்ள அமெரிக்…
-
- 5 replies
- 1.4k views
-
-
சவுதி-ரஷ்யா பேச்சில் தாமதம்: கச்சாய் எண்ணெய் விலையில் சடுதியான வீழ்ச்சி! சவுதி அரேபியா, ரஷ்யா இடையே கச்சா எண்ணெய் வழங்கல் தொடர்பான பேச்சுவார்த்தை இணக்கமின்றி தள்ளிப்போவதால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை இருபது டொலருக்கும் குறைவாகக் காணப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக அளவில் கச்சா எண்ணெய்யின் தேவை குறைந்த நிலையில் எண்ணெய் வழங்கலில் சவூதி அரேபியா, ரஷ்யா இடையே ஏற்பட்ட போட்டியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விலை வீழ்ச்சியைத் தடுக்க வழங்கலைக் குறைப்பது தொடர்பாக சவூதி அரேபியா, ரஷ்யா இடையே இன்று (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் வியாழக்கிழமைக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் விலை ஒ…
-
- 3 replies
- 524 views
-