Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உக்ரேன் மீது ரஷ்யா வான் தாக்குதல்: புடின் மற்றும் செலன்ஸ்கியை விமர்சித்த ட்ரம்ப். உக்ரேன் மீது ரஷ்யப் படையினர் நடத்திய வான் தாக்குதல் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் புடின் ‘முற்றிலும் பைத்தியமாகிவிட்டார்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். உக்ரேன் தலைநகா் கீவ் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 12 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் நேற்றைய தினம் தெரிவித்தனா். கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்ரேன் நாட்டை குறிவைத்து 298 ட்ரோன்கள், 69 ஏவுகணைகள் என மொத்தம் 367 ஆயுதங்கள் மூலம் மிகப்பெரும் வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியதாக உக்ரைன் விமானப் படை செய்தித் தொடா்பாளா் யூரி இஹ்னாத் தெரிவித்தாா். இந்நிலையில்…

  2. ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவிட்டால் 25% வரி விதிக்கப்படும் ! ட்ரம்ப் எச்சரிக்கை! ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவில்லை என்றால், இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்(Iphones) உற்பத்தியை இந்தியாவில் அதிகளவில் உற்பத்தி செய்து வருகின்ற நிலையில் இந்தியாவில் ஐபோன்கள் தயாரிக்கப்படுவதை டொனால்ட் ட்ரம்ப் விரும்பவில்லை. இந்நிலையில் ஐபோன் தயாரிப்பு குறித்து பேசியிருக்கும் ட்ரம்ப், “அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்றும் தான் நீண்ட காலமாக ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் (TIM COOK ) தெரிவித்து…

  3. காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் மருத்துவரின் 9 பிள்ளைகள் பலி - குழந்தை மருத்துவராக பல வருடங்களாக மருத்துவசேவையாற்றியவர் தனது அனைத்து சொந்தங்களையும் இழக்க நேரிட்ட தாங்க முடியாத கொடூரம் Published By: RAJEEBAN 25 MAY, 2025 | 11:00 AM காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் மருத்துவர் ஒருவரின் பத்து பிள்ளைகளில் 9 பிள்ளைகள் கொல்லப்பட்டனர். வைத்தியர் அலா அல் நஜார் என்பவரின் வீட்டை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் அவரது கணவரும் பிள்ளையொன்றும் காயமடைந்துள்ளனர் என நாசெர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவரின் உயிர்பிழைத்த 11 வயது மகனிற்கு சத்திரசிகிச்சையை மேற்கொண்ட பிரிட்டிஸ் மருத்துவர் கிரேஸ் குரூம் குழந்தை மருத்துவராக குழந்தைகள் சிறுவர்களிற்கு பல …

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆல்ட்ரிச் அமெஸ் கட்டுரை தகவல் எழுதியவர், மைல்ஸ் பர்க் பதவி, 25 மே 2025, 02:43 GMT சோவியத் ஒன்றியத்துக்கு அமெரிக்காவின் உளவுத் தகவல்களை விற்று 100-க்கும் மேற்பட்ட ரகசிய திட்டங்களை முறியடிக்க உதவி 10 மேற்கு உளவாளிகளின் இறப்புக்கும் காரணமாக இருந்த குற்றத்திற்காக ஆல்ட்ரிச் சிறையில் உள்ளார். 1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வருடம் பிப்ரவரியில் அமெஸால் துரோகம் இழைக்கப்பட்ட ஒரு உளவாளியிடம் பிபிசி பேசியது. 1985-ம் ஆண்டு அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவுக்கு வேலை பார்த்து வந்த சோவியத் ஏஜெண்ட்டுகள் ஒவ்வொருவராக காணாமல் போயினர். இந்த மேற்கத்திய உளவாளிகள் எல்லாம் சோவியத் உளவு அமைப்பான கேஜிபியால் பிடிக்கப்…

  5. ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி! எதிர்வரும் ஜூன் 01ஆம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தனது சமூக ஊடக பதவில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை எனவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். இதேவேளை, டிரம்பின் 50 சதவீத வரி அச்சுறுத்தலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதிலலிக்காத நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433062

  6. Published By: DIGITAL DESK 2 24 MAY, 2025 | 09:01 PM டென்மார்க் அரசு, தனது நாட்டில் ஓய்வூதிய வயதை 70 ஆக உயர்த்தும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் டென்மார்க், ஐரோப்பாவில் ஓய்வூதிய வயதை 70-க்கு உயர்த்தும் முதல் நாடாக மாறியுள்ளது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டத்திற்கு 81 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 21 பேர் எதிராகவும் வாக்களித்தனர். புதிய சட்டம் 1970 டிசம்பர் 31க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போதைய ஓய்வூதிய வயது சுமார் 67 ஆக இருந்தாலும், 1967 ஜனவரி 1 பிறந்தவர்களுக்கு அது 69 வரை உயரக்கூடியதாகும். இந்த உயர்வு, எதிர்கால சந்ததிகளுக்கு நிலையான சமூக நலன்கள் வழங்கும் நோக்கில் அமல்படுத்தப்படுகிறது என ஊதிய அமைச்சர் அண்ணே ஹால்ஸ்போ ஜோர்ஜன…

  7. ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் 12பேர் படுகாயம்! ஜெர்மனியில் ஹம்பர்க் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் அந்நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் ஹம்பர்க் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக்கொண்டு இருந்தவர்கள் மீது திடீரென மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் இவர்களில் மூன்று பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கத்தியால் தாக்கிய நபரை அங்கிருந்த பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளதுடன் கத்தி குத்து தாக்குதல் நடத்தியவரின் நோக்கம் குறித்தும் அவரது பின்னணி குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://at…

  8. 15 APR, 2025 | 12:30 PM சிவில் உரிமைகள் சட்டங்களை நிலை நிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக் கழகங்களுக்கு நிதி கிடைக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கான 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிவில் உரிமைகள் சட்டங்களை நிலை நிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதி கிடைக்காது. கடந்த சில ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களில் கற்றல் நடவடிக்கைகள் சீர்குலைந்து வருகிறது. யூத மாணவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. பல்கலைக்கழகங்கள் இந்தப் பிரச்சினையைத் த…

  9. பட மூலாதாரம்,BBC/PUNEET KUMAR படக்குறிப்பு, எலி கோஹன் கட்டுரை தகவல் எழுதியவர், பரத் சர்மா பதவி, பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலின் புகழ்பெற்ற உளவாளி எலி கோஹன் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இஸ்ரேலிய அரசாங்கம், அதன் உளவுத்துறை அமைப்பான மொசாட், ஒரு நட்பு நாட்டின் உளவுத்துறை முகமையுடன் இணைந்து ஒரு ரகசிய மற்றும் சிக்கலான நடவடிக்கையை (Covert operation) மேற்கொண்டதாகக் கூறுகிறது. இந்த நடவடிக்கையின் மூலம், எலி கோஹன் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்களை சிரியாவிலிருந்து இஸ்ரேலுக்குக் கொண்டு வர முடிந்தது. இஸ்ரேலின் கூற்றுப்படி இந்த ரகசிய நடவடிக்கையில், எலி கோஹனின் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் உள்பட சுமார் 2500 ஆவணங்கள் சிரியாவிலிருந்து இஸ்ரேலுக…

  10. Published By: RAJEEBAN 23 MAY, 2025 | 11:02 AM டொனால்ட் டிரம்பின் ஆதரவு இல்லாமலே இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகின்றது என சிஎன்என் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கடந்த சில மாதங்களில் பல மடங்காக அதிகரித்துள்ளன என அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா அந்த நாட்டுடன் மேற்கொள்ளவுள்ள பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால்,இஸ்ரேல் அதன் பின்னர் தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் அணுசக்தி கட்டமைப்பின் மீது தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என இஸ்ரேலின் கடும்போக்குவாதிகள் பி…

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கேரி ஓ'டோனோகு பதவி, பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், வெளிநாட்டு தலைவர்கள் அமெரிக்க அதிபர் அலுவலகத்திற்கு செல்வதற்கு அழைப்பு கிடைப்பதை ஒரு புறம் பெருமையான விஷயமாகக் கருதலாம். ஆனால் அதே நேரத்தில் அனைவர் முன்னிலையில் விமர்சிக்கப்படுவதற்கும், அவமானப்படுத்தப்படுவதற்கான அபாயமும் அந்த அழைப்பில் உள்ளது என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ராமபோசாவுக்கும் இடையே நடந்த சந்திப்பு அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. மங்கலான விளக்குகள், நீண்ட வீடியோ ஒன்றின் திரையிடல் மற்றும…

  12. சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்! இங்கிலாந்து மேல் நீதிமன்றத்தின் தடை உத்தரவின் மூலம், சாகோஸ் தீவுகள் (Chagos Islands) ஒப்பந்தத்தை முடிப்பதில் இருந்து அந் நாட்டு அரசாங்கம் தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளது. வரும் சில மணிநேரங்களில் மொரிஷியஸிடம் தீவுக்கூட்டத்தின் இறையாண்மையை இங்கிலாந்து ஒப்படைக்கும் ஒரு ஒப்பந்தத்தை அமைச்சர்கள் முடிப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வியாழக்கிழமை அதிகாலை இங்கிலாந்து வெளிவிவகார அலுவலகத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அவசரகாலத் தடை உத்தரவில், நீதிபதி கூஸ், இந்த ஒப்பந்தம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க முன்னர் வழக்குத் தொடர்ந்த பெர்ட்ரிஸ் பாம்பேவுக்கு “இடைக்கால நிவாரணம்” அளித்தார். திருமதி பாம்பே ஒரு சாகோசியன் பெண், இந்த ஒ…

    • 5 replies
    • 315 views
  13. 22 MAY, 2025 | 12:33 PM ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் இராஜதந்திரிகள் குழுவினரை நோக்கி இஸ்ரேலிய படையினர் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்தமைக்கு பல உலக நாடுகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. ஜெனின் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த இராஜதந்திரிகளை நோக்கி இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எவரும் பாதிக்கப்படவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபடுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. ஏழு துப்பாக்கி வேட்டுகளையாவது வீடியோவில் கேட்க முடிகின்றது. அனுமதியளிக்கப்பட்ட பகுதியிலிருந்து அவர்கள் விலகியதன் காரணமாகவே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், அவர்களை எச்சரிக்கும் விதத்தில் வானை ந…

  14. மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி! ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வியாழக்கிழமை அன்று மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாஸ்கோவை இலக்காகக் கொண்டு ஏவப்பட்ட 35 உக்ரைனிய ட்ரோன்கள் உட்பட, மொத்தம் 105 ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளன. இந்தத் தாக்குதல் காரணமாக மாஸ்கோவைச் சுற்றியுள்ள விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின், “விழுந்த சிதைவுகளை அகற்றும் பணியில் அவசர சேவை வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்று டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். இது கடந்த ஒரு நாளுக்கு முன்பு மாஸ்கோ மீது 27 ட்ரோன்கள் ஏவப்பட்ட நிலையில் வ…

  15. உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சுட்டுக்கொலை May 21, 2025 6:52 pm உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் ஆலோசகராக செயற்பட்டு வந்த ஆண்ட்ரி போர்ட்னோவ். அடையாளந் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள பாடசாலையொன்றிற்கு அருகில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் ஆண்ட்ரி போர்ட்னோவ். 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவராக பணியாற்றிய இவர், விக்டர் யானுகோவிச்சுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தார். விக்டர் யானுகோவிச் ஆட்சிக் காலத்தின்போது பெரும்பாலும் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்ப…

  16. ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும் - ரஷ்ய ஜனாதிபதியுடன் ட்ரம்ப் 2 மணி நேர தொலைபேசி உரையாடல் PrashahiniMay 20, 2025 ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடனான 2 மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக தளத்தில் ’‘ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். இது குறித்து ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன் எனது 2 மணி நேர உரையாடலை நிறைவு செய்தேன். அது மிகவும் சிறப்பாக நடந்தது என நான் நம்புகிறேன். ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர் நிறுத்தம் தொடர்பாக, இன்னும் முக்கியமாக, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவ…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நெப்போலியன் கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 13 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 14 மே 2025 வாட்டர்லூ போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகு ஐரோப்பாவில் தனக்கு வருங்காலம் இல்லை என்று முடிவு செய்த நெப்போலியன், அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார். ஆனால், ஃபிரான்ஸின் அட்லாண்டிக் கடற்கரையை பிரிட்டனின் போர்க்கப்பல்கள் சூழ்ந்து இருந்ததால் அங்கிருந்து தப்பிப்பது இயலாத காரியமானது. பிரிட்டன் கடற்படையிடம் சரணடைந்து, பிரிட்டனிடம் அரசியல் அடைக்கலம் பெறலாம் என்று முடிவு செய்தார் நெப்போலியன். ஆனால், நெப்போலியனுக்கு எந்த சலுகையும் காட்டும் முடிவில் பிரிட்டன் இல்லை. "பிரிட்டன் பொதுமக்களின் பார்வையில் பார்த்தால் நெப்போலியன் ஒரு குற்றவாளி. பாதிக…

  18. வொஷிங்டன் டிசி நகரில் துப்பாக்கி சூடு; இஸ்ரேலிய தூதரக ஊழியர் இருவர் உயிரிழப்பு! வொஷிங்டன் டிசி நகர மையத்தில் அமைந்துள்ள ஒரு யூத அருங்காட்சியகத்திற்கு வெளியே இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem) தெரிவித்துள்ளார். தலைநகர் யூத அருங்காட்சியகத்தில் நடந்த ஒரு நிகழ்விலிருந்து வெளியேறும் போது பாதிக்கப்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த தாக்குதல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக சந்தேகிக்கப்படுகின்றது. அந் நாட்டு நேரப்படி புதன்கிழமை (21) இரவு 9:05 மணிக்கு எஃப் தெருக் வடமேற்கில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இது ஏராளமான சுற…

  19. 20 MAY, 2025 | 02:04 PM மனிதாபிமான உதவிகள் இல்லாததன் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் காசாவில் 14000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயநிலை உருவாகியுள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானவிவகாரங்களிற்கான தலைவர் டொம்பிளெச்சர் இதனை பிபிசிக்கு தெரிவித்துள்ளார். காசாவிற்குள் நேற்று ஐந்து டிரக்குகளில் மனிதாபிமான உதவிகள் சென்றன ஆனால் இது சமுத்திரத்தில் சிறுதுளியே இது அங்குள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முற்றிலும் போதாது என அவர் தெரிவித்துள்ளார். குழந்தைகளிற்கான உணவு சத்துணவு ஏற்றப்பட்ட லொறிகள் காசாவில் நிற்கின்றன ஆனால் அவை எல்லையில் காத்திருப்பதால் பொதுமக்களை சென்றடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/215226

  20. காசா முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7- ஆம் தேதி முதல் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இஸ்ரேல் – காசா இடையேயான முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மார்ச் 1ஆம் தேதி முடிவுக்கு வந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்த காலத்தை ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கலாம் என்று அமெரிக்கா யோசனை தெரிவித்தது. இதனை நிராகரித்துவிட்ட ஹமாஸ் அமைப்பு தங்கள் வசம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கவும் மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. கடந்த மார்ச் 19ஆம் தேதி காசா பகுதியில் இஸ்…

  21. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் அச்சுறுத்தல்; எண்ணெய் விலை உயர்வு! ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் புதன்கிழமை (21) எண்ணெய் விலைகள் 1% க்கும் அதிகமாக உயர்ந்தன. இது மத்திய கிழக்கு உற்பத்தி செய்யும் முக்கிய பிராந்தியத்தில் விநியோக கிடைப்பைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 00.03 GMT மணியளவில் 86 காசுகள் அல்லது 1.32% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு $66.24 ஆக இருந்தது. அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) மசகு எண்ணெய் 90 காசுகள் அல்லது 1.45% உயர்ந்து $62.93 ஆக இருந்தது. அமெரிக்காவிற்கு கிடைத்த புதிய உளவுத்துறை தகவல்கள், இ…

  22. அரிசியை இலவசமாகப் பெற்ற விவகாரம்: ஜப்பானின் விவசாய அமைச்சர் இராஜினாமா! ஜப்பானின் விவசாய அமைச்சராக இருந்த டகு எடோ(Taku Eto) , “நான் அரிசியை வாங்குவதில்லை; ஆதரவாளர்களிடம் இருந்து இலவசமாகவே பெறுகிறேன்” எனத் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஜப்பானில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அமைச்சரின் இந்த கருத்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை அவரது கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தன. அத்துடன் தாகு எதோவை பதவியில் இருந்து நீக்க நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு கோரிக்கை விடுத…

  23. காசா விடயத்தில் இஸ்ரேலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் கனடா எச்சரிக்கை! காசாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை மிகவும் மோசமாக விரிவுபடுத்தினால், “உறுதியான நடவடிக்கைகளை” எடுப்போம் என்று இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை எச்சரித்துள்ளன. மேலும், இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், பிரெஞ்சு மற்றும் கனேடிய தலைவர்களுடன் சேர்ந்து இஸ்ரேலிய அரசாங்கத்தை “அதன் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த” மற்றும் “உடனடியாக மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் நுழைய அனுமதிக்கவும்” அழைப்பு விடுத்தார். கடந்த மார்ச் 2 முதல் காசாவிற்குள் உணவு, எரிபொருள் அல்லது மருந்து எதுவும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலைமை பாலஸ்தீன மக்களுக்கு “பேரழிவை” ஏற்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை முன்னர் விவரித்தது. அதேநேர…

  24. அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழப்பு! அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென சூறாவளி ஏற்பட்ட நிலையில் கென்டக்கி, மிசோரி மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது கென்டக்கி, மிசோரியில் மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இதுவரை சூறாவளியால் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிசோரி மாகாணத்தில் சென்ட் லூயிஸ் (St. Louis) நகரில் மாத்திரம் சுமார் 5,000 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் சூறாவளி தாக்கியதில் ஏராளமா…

  25. ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் புதிய உடன்பாடு! பிரெக்ஸிட்க்குப் பின்னர் பல மாத பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து புதிய வர்த்தக ஒப்பந்தத்தை மறுசீரமைக்க பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக் கொண்டுள்ளன. இது மொத்தத்தில் அனைத்து தரப்பினருக்குமான பயன் மிக்க ஒப்பந்தம் என்று பிரித்தானிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரெக்ஸிட்டிற்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளில் மிக முக்கியமான மறுசீரமைப்பை திங்களன்று (19) பிரித்தானியா ஒப்புக் கொண்டது. அதன்படி, சில வர்த்தக தடைகளை நீக்கி, அதன் பொருளாதாரத்தை வளர்க்கவும் கண்டத்தில் பாதுகாப்பை அதிகரிக்கவும் பாதுகாப்புத் துறையில் அது ஒத்துழைத்தது. ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் திங்களன்று (19) நடைபெறும் EU-UK உச்சிமாநாட்டி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.