உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26872 topics in this forum
-
மணிலா: கொரோனா தடுப்பு மருந்துகளுடன் டோக்கியோவுக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையிலேயே தீப்பிடித்து எரிந்ததில், பிலிப்பைன்சில் 8 பேர் பலியாகினர். பிலிப்பைன்ஸ் நாட்டின் பசய் நகரில் உள்ள நினாய் அக்வினோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 8 மணியளவில் விமானம் ஓடுபாதையில் புறப்பட்டபோது திடீரென விபத்துக்குள்ளானது. விமானம் முற்றிலும் தீப்பற்றி எரிந்ததில் 8 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விமானம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு மருத்துவ பொருட்களை எடுத்து செல்ல புறப்பட்டபோது விபத்தில் சிக்கிக்கொண்டது.உயிரிழந்தவர்களில் ஆறு பேர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள்; ஒருவர் அமெரிக்கர், மற்றொருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர். அடையாளம் காணப்பட்டவர்களில் நிக்கோ பாடிஸ்டா என்ற இளம் மருத்துவரும் அ…
-
- 0 replies
- 309 views
-
-
கொரோனா நோயாளிகளுக்கு உதவிகரமாக இருக்கும் புதிய சுவாச கருவி ஒன்றை மெர்சிடிஸ் பார்முலா ஒன்னில் இடம்பெற்றுள்ள (Mercedes Formula One) குழுவினர் ஒரே வாரத்தில் உருவாக்கி உள்ளனர். இந்த கருவி இப்பொது லண்டன் மருத்துவமனைகளில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. CPAP எனப்படும் Continuous Positive Airway Pressure கருவி ஏற்கனவே சீனா மற்றும் இத்தாலியில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. வென்டிலேட்டர் தேவையின்றி, அதிக அழுத்தம் வாயிலாக காற்றையும், ஆக்சிஜனையும் இந்த கருவி வாயிலாக கொரோனா நோயாளிகளின் நுரையீரல்களுக்குள் செலுத்த முடியும். இந்த CPAP தொழில்நுடபத்தை மேம்படுத்தி அந்த குழுவினர் 100 சுவாசக் கருவிகளை உருவாக்கியுள்ளனர். விரைவில் தினமும் 1000 கருவிகளை …
-
- 4 replies
- 633 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றமின்றி இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறது. ஆம், ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் பனிக்காலம் முடிந்து இப்போதுதான் கோடைக்காலம் தலையை காட்ட ஆரம்பித்துள்ளது. அந்த நாட்டின் தலைநகரில் மக்கள் எப்போதும் போல் கோடைக்காலத்தை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். மரியாட்டர்கெட் பகுதியிலுள்ள தோர் சிலையின் அருகே மக்கள் குடும்பத்துடன் ஐஸ்கிரீமை சுவைத்துகொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் சாலையெங்கும் ’ஹாப்பி-ஹவரில்’ கடைகளில் வழங்கப்படும் தள்ளுபடிகளில் வேண்டியதை விரும்பி வாங்கிகொண்டிக்கிறார்கள். ஸ்வீடன் தலைநகரில் கடைகளும், இரவுநேர வீடுகளும் இன…
-
- 0 replies
- 785 views
-
-
அமெரிக்காவில் இரண்டு இலட்சம் பேரை கொரோனா காவுகொள்ளலாம்- ஆய்வில் அதிர்ச்சி by : Litharsan அமெரிக்காவில் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸிற்கு அங்கு, ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் பேர் வரை உயிரிழக்கக் கூடும் என அதிர்ச்சியளிக்கும் ஆய்வு வெளியாகியுள்ளது. வெள்ளை மாளிகையின் கொரோனா தடுப்புப் பிரிவைச் சேர்ந்த மூத்த தொற்று நோய் நிபுணர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் தேசிய நோய்களுக்கான ஆய்வு இயக்குநரகத்தின் மூத்த அதிகாரியான அந்தோனி ஃபாவுசி, பத்து இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் ஒன்று முதல் இரண்டு இலட்சம் பேர் வரை உயிரிழப்பார்கள் எனவும் தெர…
-
- 4 replies
- 647 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது என்றும் தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என்றும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணித்து உள்ளார். விஞ்ஞானி மைக்கேல் லெவிட் லாஸ்ஏஞ்சல்ஸ்: கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வுகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,21,412 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 33,956 பேர் உயிரிழந்துள்ளனர். 1,51,004 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும், வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் லெவிட் சர்வதேச ஊடகம் ஒன்று…
-
- 0 replies
- 1.5k views
-
-
கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் உலக நாடுகள் 20 சதவீதத்துக்கும் குறைவான அளவையே வெளிஉலகுக்கு சொல்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள் கண்ணுக்குத் தெரியாத இந்த கொரோனா வைரஸ் பிடியில் இருந்து எப்படித்தான் நாம் மீளப்போகிறோம், உயிர் வாழப்போகிறோம் என்று ஒரு வழி தெரியாமல் உலகமே கதிகலங்கிக் கொண்டிருக்கிறது. ஆளுக்கு ஒரு கணக்கு, ஆளுக்கு ஒரு விஞ்ஞானம், ஆளுக்கு ஒரு மருத்துவம் என்று ஊடகங்களில் அள்ளித்தெளிக்கிறார்கள். எதைப்படிப்பது, எதை விடுவது, எதை நம்புவது என தெரியாமல் மக்கள்கூட்டம் திணறித்தான் போகிறது. இந்த கட்…
-
- 2 replies
- 1k views
-
-
அமெரிக்கா வந்த இளவரசர் ஹாரி தம்பதி.. உங்களை பாதுகாப்பதற்கான கட்டணத்தை நீங்களே செலுத்துங்கள்- டிரம்ப் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடிபெயர்ந்துள்ள இளவரசர் ஹாரி மற்றும் மெகன் தம்பதிக்கான பாதுகாப்பு கட்டணத்தை அவர்கள்தான் செலுத்த வேண்டும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகையான மெகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஹாரியும் மெகனும் சுதந்திரமாக இருக்க விரும்பியதால் அவர்கள் அரச குடும்பத்தை விட்டு விலகுவதாக அறிவித்தனர்.இதற்கு நீண்ட ஆலோசனைக்கு பிறகு 2-ஆம் எலிசபெத் ராணி அனுமதி அளித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் அரச பட்டம், பதவிகளை துறக்கவும் முடிவு…
-
- 0 replies
- 343 views
-
-
சீனாவில் நான்காவது நாளாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி! வெளிநாட்டு பயணிகளுக்கான எல்லைகள் மூடுவதன் மூலமும் சர்வதேச விமான சேவைகளின் குறைத்தமையின் மூலமாக சீனாவில் தொடர்ந்தும், நான்காவது நாளாக கொரோனா வைரஸ் தோற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதன் பிரகாரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உள்நாட்டவர் உட்பட 31 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் இது அதற்கு முந்திய நாளில் 45 ஆக இருந்தது என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் நான்கு புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன, இது சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதில் இருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,304 ஆகவும் வைரஸ் தோற்றாளர்களின் எண்ணிக்கையை 81,470 ஆகவும் அதிகரி…
-
- 0 replies
- 649 views
-
-
மரணமடைந்த ஜெர்மானியர் ஒருவரின் இறுதிக் கிரியைகள் எப்படி நடந்தன என்பதை ஜெர்மானியத் தொலைக்காட்சியில் காட்டினார்கள். இது வழக்கத்துக்கு மாறானது. ஆனால், ஏன் காட்டினார்கள்? ‘அந்த மனிதர் கரோனா தொற்றால் இறந்ததால் தொலைக்காட்சி இடமளித்திருக்கிறது’ என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி அல்ல. அவர் கரோனா தொற்றால் இறக்கவில்லை; இயற்கையான மரணம். அப்படியென்றால், இறந்தவர் அவ்வளவு பிரபலமா? ம்ஹூம். அதுவும் கிடையாது. பிறகு, எதற்காகத் தொலைக்காட்சி இவ்வளவு முக்கியத்துவம் தந்தது? ஏன் தந்தது என்பதில்தான் இன்றைய ஜெர்மனியின் முழு நிலையும் தெரியவரும். கரோனா பாதிப்பு எந்த அளவுக்கு ஜெர்மனியைப் பாதித்திருக்கிறது என்பதும் புரியும். கரோனா தொற்றில் ஜெர்மனி நான்காம் படிநிலையை அடைந்திருக்கிறது. ஜெர்மனி மட்…
-
- 0 replies
- 424 views
-
-
நியூயார்க்: அமெரிக்காவில் பலி எண்ணிக்கை, 2,438; தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 1.38 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், 'நியூயார்க் நகரில், முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்' என, அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். 'கொரோனா' வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் அதைவிட வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, நியூயார்க் நகர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மறுப்பு: இதையடுத்து, 'நியூயார்க் நகரில், முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்' என, மருத்துவ துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், அதை, அதிபர், டொனால்டு டிரம்ப் ஏற்கவில்லை. 'முழு ஊரடங்கு உத்தரவு தேவையில்லை' என, அவர் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், அமெரிக்காவில், வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ண…
-
- 1 reply
- 513 views
-
-
சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோவில், 1 வயது நிரம்பாத குழந்தை, வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'கொரோனா' வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் அதைவிட வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 2,438; தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 1.38 லட்சத்தை தாண்டியுள்ளது. முதல் முறை: கொரோனா வைரஸ், அனைத்து வயதினரையும் தாக்கக் கூடியது. ஆனால், இதுவரை உயிரிழந்தோரில் பெரும்பாலானோர், வயதானவர்களே. இந்நிலையில், சிகாகோவில், 1 வயது கூட நிரம்பாத குழந்தைக்கு, வைரஸ் தொற்று இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், வைரஸ் பாதிப்பால், அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது. இதனை அம்மாகாண கவர்னர் உ…
-
- 0 replies
- 323 views
-
-
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் ரோம்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 199 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் …
-
- 1 reply
- 597 views
-
-
வாஷிங்டன்: உலகில் மற்ற எந்த நாட்டை விடவும், கொரோனா வைரஸ் தொற்றால் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகிறது அமெரிக்கா. இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால், அமெரிக்காவில் 33 லட்சம் பேர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். இதனால், பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் அரசிடம் நிவாரணம் கோரி வந்தனர். 10.9K people are talking about this கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களை மீட்க, 2 டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிவாரணத் தொகைக்கு கையெ…
-
- 0 replies
- 512 views
-
-
சீனாவில் கொரோனா பாதிப்பு மிகவும் தாமதமாக உலகுக்கு அறிவிக்கப்பட்டது தற்போது விவாதப்பொருள் ஆகி உள்ளது. சீனா திட்டமிட்டு இவ்வாறு செய்ததால் என பல நாடுகள் கேள்வி எழுப்பி வருகின்றன. சீனாவின் அரசியலும், ஆட்சி அதிகாரமும்தான் இதற்கு காரணம். மொத்த அதிகாரமும் அதிபர் ஜி ஜிங்பிங்கிடம் குவிந்துள்ளது. அவர் சொல்வதுதான் அங்கு சட்டம். அவரை மீறி யாரும் எதுவும் பேச முடியாத சூழ்நிலை. இதுதான் அங்கு வெளிப்படைத்தன்மை இல்லாமல் போனதற்கு காரணம். உலகம் மொத்தமும் மொத்தமாக நடுங்குவதற்கும் இதுதான் காரணம். இந்தியாபோல ஜனநாயக நாட்டில் எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகக் கூடும். சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி கிட்டத்தட்ட சர்வாதிகார ஆட்சிபோலவே செயல்படுகிறது. சில மாதங்களுக்…
-
- 0 replies
- 470 views
-
-
மே மாதம் கொரோனா உச்சம் பெறும், ஜெனரேஷன் சி. கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்? ஒபாமா பகிர்ந்த ஆய்வுக் கட்டுரை! தமிழில்: Shyamsundar நியூயார்க். கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி உள்ள நிலையில் இனி வரும் நாட்களில் உலகில் என்ன நடக்கும் என்று அமெரிக்க ஆய்வு கட்டுரை ஒன்று விளக்கி உள்ளது. மூன்று மாதத்திற்கு முன் அப்படி ஒரு வைரஸ் இருப்பது யாருக்குமே தெரியாது. சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த தொடக்க காலத்தில் SARS-CoV-2 என்று அழைக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க எல்லா நாடுகளையும் ஏறத்தாழ பாதித்து இருக்கிறது. உலகம் முழுக்க 471,820 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உலகம் முழுக்க 155 நாடுகளின் பொருளாதாரம் இதனால் அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது.…
-
- 1 reply
- 809 views
-
-
பிரிட்டனில் கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை 20,000ற்குள் கட்டுப்படுத்த முடியும் என்றால் அதனை வெற்றிகரமான நடவடிக்கையாக கருத முடியும் என பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் தேசிய மருத்துவ இயக்குநர் பேராசிரியர் ஸ்டீபன் பொவிஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவும் இத்தாலியின் பாதையில் பயணிக்கின்றதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உயிரிழப்புகளை 20,000ற்குள் கட்டுப்படுத்தினோம் என்றால் நாங்கள் இந்த உலகளாவிய நோய் தொற்றை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயற்பட்டிருக்கின்றோம் என அர்த்தம் என அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மரணமும் துயரம் என்றபோதிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 20,000ற்குள் கட்டுப்படுத்தினால் அது சிறந்த…
-
- 16 replies
- 1.3k views
-
-
கொரோனா வைரஸ் காரணமாக தன்னை தனிமைப்படுத்தியுள்ள பிரிட்டனின் பிரதமர் பொறிஸ்ஜோன்சன் பிரிட்டனிற்கு செயற்கை சுவாசக்கருவிகள் வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை பொறிஸ்ஜோன்சனை தொலைபேசியில் தொடர்புகொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். நான் ஹலோ என தெரிவிப்பதற்கு முன்னரே எங்களிற்கு வென்டிலேட்டர்கள் - செயற்கை சுவாசக்கருவிகள் வேண்டும் என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்தார் என டிரம்ப் தெரிவித்துள்ளார். பொறிஸ் துரதிஸ்டவசமாக கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் இது மோசமான விடயம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் சிறந்த நிலைக்கு திரும்புவார் என டிரம்ப் தெரிவித்துள்ளார். https:/…
-
- 2 replies
- 610 views
-
-
கடந்த 24 மணிநேரத்தில் 300 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். பிரான்சின் சுகாதார அதிகாரசபையின் தலைவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பிரான்சில் மேலும் 3809 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 32, 964 ஆக அதிகரித்துள்ளது என அதிகரித்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் 299 பேர் உயிரிழந்துள்ளனர் தெரிவித்துள்ள அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1995 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனைகளில் 15372 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,இவர்களில் மூன்றில் ஒருவர் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் ஐசியுவில் உள்ளவர்களில் 42 வீதமானவர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர் htt…
-
- 0 replies
- 296 views
-
-
ஆப்பிரிக்காவின் துனிசியாவில் தொழிற்சாலை ஊழியர்கள் 150 பேர், தொழிற்சாலையின் உள்ளே சென்று தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு முகக்கவசம் தயாரிப்பதற்கான பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள். முகக்கவசம் தயாரிப்பதற்காக தொழிற்சாலைக்குலேயே தங்களை ஒரு மாதத்திற்கு தனிமைப்படுத்திக் கொள்வதாக அவர்கள் கூறியுள்ளனர். வட ஆப்பிரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை 227 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு முகக்கவசம் செய்வதில் ஈடுபட்டுள்ள பெரும்பாலனவர்கள் கிராமபுரத்தை சேர்ந்தவர்கள். குறிப்பிடப்பட்டுள்ள தொழிற்சாலையி…
-
- 0 replies
- 322 views
-
-
கொரோனா வைரஸ்: வெளவால், எறும்புத்தின்னி, புனுகுப்பூனை - எந்த விலங்கிடமிருந்து பரவியது? துப்பறியும் கதை போல நீளும் ஆய்வு ஹெலன் பிரிக்ஸ் பிபிசி நியூஸ் Getty Images உலகை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் எப்படி விலங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது என்பதைத் தெரிந்து கொள்ள ஹெலன் பிரிக்ஸ் விஞ்ஞானிகளிடம் சென்றார். சீனாவில் ஓர் இடத்தில், வானில் பறந்து கொண்டிருந்த நோய் தொற்று கொண்டிருந்த வௌவால் மேலிருந்து கீழே மலத்தைக் கழித்தது. அது ஒரு காட்டில் விழுந்தது. அங்கேயே இருக்கும் ஒரு விலங்கு, (ஒரு எறும்புத்தின்னி) இரையைத் தேடும்போது அந்த மலத்திலிருந்த வைரஸ் தொற்று அதற்குப் பரவியது. அது காட்டிலிருக்கும் பிற விலங்குகளுக்கும் பரவியது . அந்த விலங்கு ஒரு மனித…
-
- 13 replies
- 1.8k views
-
-
பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காலமானார். மார்க் ப்ளம் பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். அவருக்கு வயது 69. இது ஹாலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மார்க் ப்ளம் 1970-ம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். 1985-ல் வெளியான ‘டெஸ்பரேட்லி சிக்கிங் சூஸன்’ என்ற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததாக பாராட்டப்பட்டார். ‘ஜஸ்ட் பிட்வீன் பிரண்ட்ஸ்’, ‘க்ரொக்கடைல் டண்டி’, ‘பிளசண்ட் டே’, ‘லவ்சிக்’, …
-
- 0 replies
- 408 views
-
-
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவிலும் உடனடி மருத்துவமனை கட்டிக்கொடுக்க தயார் என சீனா அறிவித்துள்ளது. சீனாவில் 10 நாளில் கட்டப்பட்ட கொரோனா சிகிச்சை மருத்துவமனை பீஜிங்: சீனாவில் முதன் முதலில் வுகான் நகரில் தான் கொரோனா நோய் பரவியது. அங்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை சென்றதும் அவசர அவசரமாக புதிய மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு வுகான் நகரில் சீன ரெயில்வே கட்டுமான கழகம் 10 நாளில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை கட்டி முடித்தது. இதில் 1600 படுக்கைகள் இருந்தன.இப்போது இதேபோன்ற மருத்துவமனையை இந்தியாவிலும் கட்டிக் கொடுக்க தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது. …
-
- 0 replies
- 658 views
-
-
இன்று பின்லாந்தின் சரித்திரத்தில் முக்கிய நாளாகும். (27.03.2020) 1710 ஆண்டு பின்லாந்தின் முக்கிய நகராக அப்போதுஇருந்த் Helsinki யில் மக்கள் தொகையேஎ 3555 மட்டுமே அதி மூன்றில் ஒரு விகிதத்தினர் தொற்றுநோய் காரணமாக இறத்துவிட அவர்களைப் புதைத்த இடமே என இப்போகும் "Roottopuisto" என அழைக்கப்படுகிறது தவிர அதற்குப்பின்வந்த கொடுமையான பஞ்சத்தின்போது பின்லாந்தில் வாழும் அனேகர் இறந்துவிட ஒருவரை ஒருவர் கொன்று சாப்பிடும் நிலைக்கு மக்கள் இருந்ததாக அறியப்படுகிறது அவ்வேளையில் வறுமையின் காரணமாக கணிபலிஸம் தோன்றியதா என இப்போதும் ஆராச்சியாளர்கள் ஆதாரங்களைத் தேடிக்கொண்டேயிருக்கிறார்கள் அதன்போது இறந்தவர்களையும் தொற்றுநோயின்போது இறந்தவர்களை புதைத்த இடத்திலேயே புதைத்தனர் இப்பே…
-
- 0 replies
- 468 views
-
-
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஸ்பெயின் நாட்டில் 569 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவிலும் 182 பேர் பலியாகினர். கொரோனாவுக்கு உயிரிழந்த நபரை கொண்டு செல்லும் காட்சி நியூயார்க்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 79 ஆயிரத்து 892 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 26 ஆயிரத்து 518 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 லட்சத்து 22 ஆயிரத்து 698 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில…
-
- 1 reply
- 473 views
-
-
கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்துக்கு செல்லும் கப்பலில் கொரோனா இல்லாத நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மற்ற நோயாளிகளுக்கான சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 1000 படுக்கைகள் கொண்ட மருத்துமனையை யு.எஸ்.என்.எஸ். மெர்சி கப்பல் மாலுமிகள் உருவாக்கியுள்ளனர். கப்பல் துறைமுகத்தை அடைந்தவுடன் மருத்துவமனையாக செயல்பட தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.polimernews.com/dnews/105084/கொரோனா-இல்லாத-நோயாளிக்குசிகிச்சை-அளிக்க-சிறப்புமருத்துவமனை
-
- 2 replies
- 771 views
-