Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மெக்ஸிக்கோவின் மத்திய மாநிலமான குவானாஜுவாடோவில் (Guanajuato) கடந்த ஒரு வார காலப் பகுதியில் 12 பொலிஸ் அதிகாரிகள் பாதாள உலக குழுவினரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களில் ஒருவரான மரியா சோனியா அரேலானோ என்ற 47 வயதுடைய பெண் பொலிஸ் அதிகாரி, அவரது கணவர் மற்றும் மகனுடன் இராபுவாடோ என்ற நகரில் அவரது வீட்டில் வைத்து ஆயுதமேந்தியவர்களால் கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டார். அவரது 27 வயதுடைய மகன் மற்றும் கணவர் விடுவிக்கப்பட்ட நிலைலயில் அவர் உயிரிழந்த நிலையில் வீதியோரத்தில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/71170

  2. இரண்டு மணித்தியாலங்களில் 123 பதிவுகள் – தன்னிலை விளக்கமளிக்கும் ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டு மணித்தியாலங்களில் தனது டுவிட்டர் பக்கத்தில் 123 பதிவுகளை பதிவிட்டுள்ளார். ட்ரம்ப்பினை பதவியை விட்டு நீக்குவதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் 123 டிவிட்டர் பதிவுகளை வெளியிட்ட ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். தன்னை பதவியை விட்டு நீக்குவது நியாயமல்ல எனவும், தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் ட்ரம்ப் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். டுவிட்டரை தமது டைப் ரைட்டர் என அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி தனக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பதில் வழங்கியுள்ளார். அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்துக்காக தான் மேற்கொண்ட நடவடிக்கைகள…

  3. படத்தின் காப்புரிமை KATE MONTANA, INATURALIST CREATIVE COMMONS Image caption ஆண்குறியைப் போன்று தோற்றமளிக்கும் உயிரினம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பகுதியை ஒட்டியுள்ள கடற்கரையில் ஆண்குறியைப் போன்று தோற்றமளிக்கும் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் தென்பட்டன. இந்த உயிரினங்கள் 'யுரிசெஸ் காப்போ' என்றழைக்கப்படும் பருமனான புழுக்கள் ஆகும். இந்த வகை புழுக்கள் மண்ணுக்குள் புதைந்து கொள்ளும். சமீபத்தில் வந்த புயலின் காரணமாக சான்ஃப்ரான்சிஸ்கோவின் வடக்கு பகுதியிலுள்ள ட்ரேக்ஸ் கடற்கரையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் இந்த உயிரினங்கள் காணப்பட்டன. …

  4. சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீரை மோசடியில் குற்றவாளியாக நேற்று இனங்கண்டுள்ள அந்நாட்டு நீதிமன்றமொன்று அவரை இரண்டாண்டுகளுக்கு சீர்திருத்தல் மய்யமொன்றுக்கு அனுப்பியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீருக்கு 75 வயதென்பதால், அதைக் கருத்திற் கொண்டே சிறைச்சாலையை விடுத்து அவர் சீர்திருத்த மய்யத்துக்கு அனுப்பப்பட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீரின் 30 ஆண்டுகள் ஆட்சிக்கெதிரான மாதக்கணக்கான வீதி ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இராணுவத்தால் அவர் பதவி அகற்றப்பட்டிருந்தார். இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீர் பதவியிலிருந்து அகற்றப்படும்போது கண்டுபிடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான யூரோக்கள், சூடானிய பவ…

    • 0 replies
    • 380 views
  5. இத்தாலியின் பிருந்திசி (Brindisi) நகரில் 2ம் உலகப் போரின்போது பிரிட்டனால் வீசப்பட்ட வெடி குண்டை செயலிழக்கம் செய்யும் பணி நடைபெறுவதையொட்டி, அந்நகரில் வசிக்கும் 54 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். பிருந்திசி நகரில் 1941ம் ஆண்டு வீசப்பட்ட குண்டு, அண்மையில் அங்குள்ள திரையரங்க சீரமைப்பு பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரோபோட் மூலம் அதை செயலிழக்கம் செய்யும் பணியில் இத்தாலி ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கையாக குண்டு கிடக்கும் பகுதியிலிருந்து 1617 மீட்டர் சுற்றளவு பகுதியில் வசிக்கும் 54 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். அதேபோல் உள்ளூர் விமான நிலையம், ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/92954/2ம்-உ…

    • 0 replies
    • 331 views
  6. அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவியை விட்டு நீக்குவதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இரண்டு மணி நேரத்தில் 123 டிவிட்டர் பதிவுகளை வெளியிட்ட டிரம்ப் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். தன்னை பதவியை விட்டு நீக்குவது நியாயமல்ல என்றும், தாம் எந்த தவறும் செய்யவில்லை எனவும் டிரம்ப் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். டிவிட்டரை தமது டைப் ரைட்டர் என அறிவித்த அமெரிக்க அதிபர் தமக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பதில் அளித்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்துக்காக தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டுள்ளார். தமக்கு எதிராக செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்களின் நம்பகத்தன்மையை விமர்சித்துள்ள டிரம்ப், அமெரிக்க அதிபர்கள் அனைவரையும் இனி பதவி நீக்கம் …

    • 0 replies
    • 564 views
  7. பப்புவா நியூ கினியாவின் ஓர் அங்கமாக இருந்து வரும் போகைன்வில், தனி சுதந்திர நாடாக பிரியவுள்ளது. இயற்கை வளங்கள் நிறைந்த பிராந்தியமான போகைன்வில்லில், இன ரீதியாக பாரபட்சம் காட்டப்படுவதாகவும், பொருளாதார ரீதியாக சுரண்டப்படுவதாகவும் கூறி, தனி நாடு கோரிக்கை எழுந்தது. இதற்காக 1988ஆம் ஆண்டு முதல் 1997 வரை நடந்த உள்நாட்டு போரில் சுமார் 20ஆயிரம் பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 2005ஆம் ஆண்டு போகைன்வில் தன்னாட்சி அதிகாரத்தை பெற்ற நிலையில், தனி நாடு அமைப்பது தொடர்பாக அண்மையில் மக்களிடம் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தனி நாடு கோரும் முடிவுக்கு ஆதரவாக ஏராளமானோர் வாக்களித்தனர். இதனால் போகைன்வில் புதிய தனி நாடாக அமையவுள்ளது. போகைன்வில்லின் மக்கள் தொகை, சுமார் மூன்று லட்சம் பேர…

  8. துருக்கிக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க அனுமதி! துருக்கிக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக் கொள்கைகளுக்கான குழு இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது. சிரியாவில் துருக்கியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை கொள்வனவு செய்தமை ஆகியவற்றுக்காக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விடயத்தை முழுமையான செனட் உறுப்பினர்கள் அடங்கிய சபையில் வாக்கெடுப்புக்கு விடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக அமெரிக்காவிற்கும், துருக்கிக்கும் இடையிலான உறவில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/துருக்கிக்கு-எதிராக-பொரு/

  9. ஐரோப்பிய நாடான, பிரிட்டனில், நேற்று நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவதால், கடும் தோல்விக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஜெரமி கார்பின் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிரிட்டனில், பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக, போரிஸ் ஜான்சன் உருவாக்கிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு, பார்லி.,யில் ஒருமித்த ஆதரவு கிடைக்கவில்லை. அதனால், ஏற்கனவே அறிவித்தபடி, அக்., 31ல், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற முடியவில்லை.இதன் காரணமாக, பார்லி.,யை கலைத்து விட்டு, முன்கூட்டியே தேர்தல் நடத்துவதாக, போரிஸ் ஜான்…

    • 2 replies
    • 1.2k views
  10. பிரித்தானியாவின் பொதுத்தேர்தல் இன்றைய தினம் நடை பெறுகின்றது. இம்முறை அந்த நாட்டின் பொதுத் தேர்தலில் இலங்கையை பகடைக் காயாக வைத்தே இரண்டு பிரதான கட்சிகள் தேர்தல் காலத்தில் குதித்துள்ளன. அதனடிப்படையில் பிரித்தானிய தொழிலாளர் கட்சியானது தாம் இம்முறை ஆட்சியை கைப்பற்றினால் இலங்கையை இரண்டாக பிளவுபடுத்துவதாக தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்திருந்தனர். இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வை பெற்றுக் கொடுப்பது என்றால் அது இலங்கை நாட்டை இரண்டாக பிரிப்பதன் மூலமே பெற்றுக்கொடுக்க முடியும் என பிரித்தானிய தொழிலாளர் கட்சி கூறியிருந்தது. இந்நிலையில் பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சியானது தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஐக்கிய இலங்கையை கட்டிக் காப்பதற்காக தாம் நடவடிக்கை எ…

    • 15 replies
    • 1.2k views
  11. நியூஸிலாந்தின் வைட் தீவிலிருந்து ஆறு சடலங்கள் மீட்பு! நியூசிலாந்தில் சுற்றுலா தளமான வைட் தீவில் அமைந்துள்ள எரிமலை, வெடிப்பில் சிக்குண்ட 6 பேரின் சடலங்களை மீட்புப் படையினர் இன்றைய தினம் மீட்டெடுத்துள்ளனர். இவ்வாறு மீட்க்கப்பட்ட சடலங்களை அடையாளம் காண்பதற்காக அங்கிருந்து கப்பல் மூலம் வெலிங்டனுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் காணாமல்போனோர் இருவரையும் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த எரிமாலையானது மீண்டும் வெடிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவித்துள்ள படையினர், மீட்பு பணிகளை முமமுரமாக ஆரம்பித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த எரிமலை வெடிப்பின்போது …

  12. ரஷ்யாவுக்கு டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை! அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் அதில் தலையிடக் கூடாது என ரஷ்யாவுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவுக்கு சென்றுள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்து உரையாடிய போதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “செர்ஜி லவ்ரோவுடன், உக்ரைன் விவகாரம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ட்ரம்ப் ஆலோசனை நடத்தினார். இதன்போது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தலையிடுவதற்கு ரஷ்யா எந்தவொரு முயற்சிகளையும் …

  13. நைஜரில் பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல் – 71 இராணுவத்தினர் உயிரிழப்பு! ஆப்பிரிக்கா கண்டத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நைஜரில் பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலில் இராணுவ வீரர்கள் 71 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜரின், உவால்லம் பகுதியில் முகாமிட்டிருந்த இராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நேற்று (புதன்கிழமை) மாலை கடும் தாக்குதல் நடத்தியதிலேயே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் குறித்து அறிவித்த நைஜரின் இராணுவ செய்தித் தொடர்பாளர் பவுக்கர் ஹசன், 10 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவித்தார். குறித்த பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இயக்கத்தினரின் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் அவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியி…

  14. தாய்க்கு ஓட்டுநர் உரிமம் வாங்கிக்கொடுப்பதற்காக பெண்போல வேடமிட்ட மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வடக்கு பிரேசிலின் போர்டோ வெல்ஹோ பகுதியை சேர்ந்த 60 வயதான மரியா என்கிற பெண், மூன்று முறை முயற்சித்தும் ஓட்டுநர் சோதனையில் தோல்வியடைந்துள்ளார். இதனால் அவர் சோகமானதை பார்த்த அவருடைய மகன் ஹீட்டர் ஷியாவே (43), நான்காவது முறை எப்படியும் தாய்க்கு ஓட்டுநர் உரிமம் வாங்கிக்கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளார். இதற்காக அவர் தன்னுடைய தாய் போல உடை, அலங்காரங்கள் செய்து ஓட்டுநர் சோதனையை மேற்கொண்டுள்ளார். ஏறக்குறைய அங்கிருந்த அதிகாரிகளை அவர் ஏமாற்றிவிட்டார் என்று கூட கூறலாம். இருப்பினும், கார் ஓட்டும் போது வழக்கத்திற்கு மாறாக அவருடைய கை நீளமாகவும், குரல் வலிமை வாய்ந்ததாகவும் இருந…

  15. இராணுவ நடவடிக்கையில் இனப்படுகொலை நோக்கம் இருக்கவில்லை – சர்வதேச நீதிமன்றில் ஆங் சாங் சூகி வாதம் மியான்மாரில் சிறுபான்மையின மக்களை இனப் படுகொலை செய்யும் நோக்கத்தில் அரசாங்கம் செயற்பட்டதில்லை என சர்வதேச நீதிமன்றத்தில் மியன்மாரின் தலைவர் ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார். மியன்மார் அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) ஆஜராகி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், “நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா போராளிகளின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் மட்டுமே மியான்மார் இராணுவம் ஈடுபட்டது. இந்நிலையில் ரக்கினே மாநிலத்தில் உள்ள நிலைவரம் தொடர்பாக முழுமையற்றது…

  16. பிரிட்டனின் அதிகாரமிக்க அடுத்த பிரதமரை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் இன்று விறுவிறுப்பாக இடம்பெற்ற வேளை வாக்களிப்பு நிலையத்திற்கு சென்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் நாயுடன் சென்று வாக்களித்துள்ளார். ப்ரெண்ட்ஸ் அப் அனிமல்ஸ் வேல்ஸ் என்ற தொண்டு நிறுவனத்திலிருந்து ஜாக் ரஸ்ஸல் குறுக்கு இனம் நாயை போரிஸ் ஜோன்சன் மற்றும் அவரது நண்பர் கேரி சைமண்ட்ஸ் தத்தெடுத்துள்ளனர். இந்த நாயுடன் சென்றே போரிஸ் ஜோன்சன் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/70919

  17. அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் விநாயக் பானர்ஜி, இந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார். அதேபோல, அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ சேலை அணிந்து கொண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டார். பொருளாதார நிபுணர்கள் அபிஜித் விநாயக் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரெமர் ஆகியோர் இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். வறுமையை ஒழிப்பதற்கான முன்னோடித் திட்டங்களை வகுத்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சுவீடனில் நடந்த நோபல் பரிசளிப்பு விழாவில் இந்தியப் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து அபிஜித் விநாயக் பானர்ஜி நோபல் பரிசைப் பெற்றுக்கொண்…

  18. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும், உக்ரேன் ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கியும் சந்தித்த பின்னர் கிழக்கு உக்ரேனில் முழுமையான யுத்தநிறுத்தத்தை அமுல்படுத்த ரஷ்யாவும் உக்ரேனும் இணங்கியுள்ளன. பிரான்ஸ் தலைநகர் பரிஸில், ஜனாதிபதி புட்டினும், ஜனாதிபதி ஸிலென்ஸ்கியும் நேற்று சந்தித்திருந்தனர். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், ஜேர்மனி சான்செலர் அங்கெலா மேர்க்கலின் அனுசரணையில் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இந்நிலையிலேயே, மோதலுடன் தொடர்புபட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை இவ்வாண்டு இறுதிக்குள் விடுதலை செய்து பரிமாறுவதற்கு ரஷ்யாவும், உக்ரேனும் இணங்கியுள்ளன. இதுதவிர, அடுத்தாண்டு மார்ச் மாத முடிவுக்குள், உக்ரேனின் மூன்று மேலதிக பிராந்தியங்களிலிருந்து இராணுவத்தை அகற்று…

  19. தி ஹேக்: ஆசிய நாடான மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது இனப் படுகொலை செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மர் அரசின் ஆலோசகரான ஆன் சான் சூகி நேரில் ஆஜராகியுள்ளார். மியான்மரில் வசித்து வரும் ரோஹிங்யா முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக அறிவித்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின்போது ரோஹிங்யா முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டனர். அதைத் தவிர 7.40 லட்சம் பேர் அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக இனப் படுகொலையில் ஈடுபட்டதாக மியான்மர் மீது புகார் கூறப்பட்டது. ஐ.நா. குழுவும் 'இது இனப் படுகொலை' என அறிவித்தது. ஆப்பிரிக்க நாடான …

    • 0 replies
    • 433 views
  20. சர்வதேச அளவில் ஆயுத விற்பனை 5 சதவீதம் அதிகரிப்பு : சுவீடன் ஆராய்ச்சி நிறுவனம் தகவல்! சர்வதேச அளவில் ஆயுத விற்பனை கடந்த ஆண்டு 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக, சுவீடனை சேர்ந்த ஸ்ரொக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று (திங்கள்கிழமை) குறித்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘உலகம் முழுவதும் நாடுகளுக்கிடையிலான ஆயுத விற்பனை, கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2018ஆம் ஆண்டில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகின் மிகப் பெரிய 100 ஆயுதத் தளவாட உற்பத்தியாளர்கள் கடந்த ஆண்டில் ஆயுத விற்பனை மூலம் 42,000 கோடி டொலர்கள் வருவாய் ஈட்டியுள்ளனர். இந்…

  21. வெள்ளை வான்களில் கடத்தப்படும் பெண்கள் பாலியல் வன்கொடுமையின் பின்னர் கொலை? அமெரிக்காவில் பெண்கள் வெள்ளை வான்களில் கடத்தப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் மக்கள் மத்தியில் அச்சத்தினை தோற்றுவித்துள்ளது. வெள்ளை வான்களில் வரும் மர்மநபர்கள் பெண்களை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அவர்களை கொலை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கொலை செய்ததன் பின்னர் அவர்களது உடல் உறுப்புகளை விற்பனை செய்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதுகுறித்த தகவல்கள் கடந்த சில தினங்களாகவே அமெரிக்காவில் பேஸ்புக் பக்கங்களில் வேகமாக பரப்பட்டுவருகின்றன. இதேவேளை, இதுகுறித்து எந்தவித அதிகாரபூர்வ முறைப்பாடுகளும் தங்களுக்கு இதவரையில் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். …

  22. செக் குடியரசின் ஓஸ்ட்ராவா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு செக் குடியரசின் ஓஸ்ட்ராவாவில் உள்ள மருத்துவமனையின் நோயாளிகள் காத்திருப்பு அறையில் 6 பேரை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் தன்னைத் தானே சுட்டு இறந்து கிடப்பதை மூன்று மணி நேரத்தின் பின்னர் பொலிஸார் கண்டுபிடித்தனர். 6 பேரைச் சுட்டுக் கொன்ற நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. எனினும் அவரது நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை. இன்று காலை 7:19 க்கு ஓஸ்ட்ராவாவில் உள்ள மருத்துவமனைக்கு பொலிஸார் அழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் அதிர்ச்சிப் பாதிப்பு சிகிச்சைப் பிரிவி…

  23. அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லை பிரச்சினை: ட்ரம்பின் 3.6 பில்லியன் ஒதுக்கீட்டுக்கு தடை! அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லையில் சுவரைக் கட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒதுக்கீடு செய்த 3.6 பில்லியன் டொலர் நிதிக்கு நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸின் எல் பாஸோவில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி டேவிட் பிரையன்ஸ் 21 பக்க தீர்ப்பில் தடை உத்தரவை பிறப்பித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டார். இந்நிலையில் குறித்த தடை உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த நீதித்துறை செய்தித் தொடர்பாளர், ட்ரம்ப் நிர்வாகம் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யும் எனக் கூறினார். இந்த தீர்ப்பு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகின்றது. ஏனெனில் 2…

  24. அண்டார்டிகாவுக்கு 38 பேருடன் சென்றபோது காணாமல் போன சிலி நாட்டு சரக்கு விமானத்தை தேடும் பணி நடைபெறுகிறது. பன்டா ஏரேனாஸில் இருந்து மாலை 4. 55 மணிக்கு ஹெர்குலிஸ் சி 130 விமானம், அண்டார்டிகாவில் உள்ள சிலி தளத்துக்கு தளவாட பொருள்களை ஏற்றிக் கொண்டு சென்றது. அதில் 17 சிப்பந்திகள் உள்ளிட்ட 38 பேர் பயணித்தனர். இந்நிலையில், சுமார் 1 மணி நேரத்தில் விமானத்துடன் தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு அதிலிருந்து எந்த தகவலும் வரவில்லை. இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் சிலி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். https://www.polimernews.com/dnews/92141/அண்டார்டிகாவுக்கு-38பேருடன்-சென்ற-சிலி-விமானம்மாயம்

    • 0 replies
    • 375 views
  25. சௌதியில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடு: உலகநாடுகள் வரவேற்பு சௌதி அரேபியாவில் இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த, ஆண்கள் – பெண்களுக்கான தனித் தனி நுழைவாயில் கட்டுப்பாடை தளர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுவரை, அந்நாட்டில் உள்ள உணவகங்கள் குடும்பங்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழை வாயிலும் தனியாக வரும் ஆண்களுக்கு மட்டும் தனியாக ஒரு நுழைவாயிலும் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று இருந்தது. இந்நிலையில், இனி இந்த, தனித் தனி நுழைவாயில் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே சௌதி அரேபியாவில் இருந்த பல கட்டுபாடுகளையும், குறிப்பாக பெண்களுக்கான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்தி வருகின்ற நிலையில், அரசின் இந்த ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.