உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
வெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடிப்பு- ஆப்கானில் 62 பேர் பலி ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை மதிய தொழுகையின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பு காரணமாக 62 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள நன்ஹர்கர் பிராந்தியத்தில் உள்ள மசூதியொன்றிலேயே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. பாரிய சத்தம் கேட்டது அதன் பின்னர் மசூதியின் கூரை இடிந்து விழுந்தது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மனதை மிகவும் வேதனைப்படுத்தும் சம்பவம் இடம்பெற்றது அதனை நான் என் கண்களால் பார்த்தேன் என பழங்குடி இனத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தெரிவித்துள்ளார். மசூதியில் முல்லா ஒருவர் போதனை செய்துகொண்டிருந்த சத்தம் கேட்ட…
-
- 0 replies
- 316 views
-
-
உலகிலேயே முதல் முறையாக 20 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவை இன்று முதல் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. குவாண்டாஸ் போயிங்787 ரக விமானம் ஐம்பது பயணிகளுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு தொடர்ந்து 20 மணி நேரங்களுக்கு மேலாக பயணிக்க உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு புறப்படும் இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் பயணித்து ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகரை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்துறையில் புதிய வரலாற்றை படைக்கும் இந்த முயற்சியில் பயணிகளுக்கு தேவையான உணவு, உறக்கம், மருத்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளாதாக குவாண்டாஸ் போயிங் 787 நிறுவனத்தின் தலைமை அதிகார…
-
- 0 replies
- 556 views
-
-
மெக்சிக்கோ கடத்தல் மன்னன் எல் சாப்போவின் மகனை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவன் உடனடியாக விடுவிக்கப்பட்டான். மெக்ஸிக்கோவின் மேற்கு பகுதியில் உள்ள குலியாக்கன் நகரில் தேசிய பாதுகாப்பு படை மற்றும் ராணுவத்தை சேர்ந்த 30 வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீடு ஒன்றில் கடத்தல் கும்பல் பதுங்கியிருப்பதை அறிந்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர், துப்பாக்கிச்சூடு நடத்தி பிரபல கடத்தல் கும்பல் தலைவன் எல் சாப்போவின் மகன் ஒவிடியோ கஸ்மான் உள்ளிட்ட 4 பேரை சுற்றிவளைத்தனர். ஆனால் சத்தம் கேட்டு பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் பாதுகாப்பு படையை சுற்றி நின்றது. இதனால் நகரின் அமைதி சீர்குலைவதை விரும்பாத வீரர்கள், தங்களது சொந்த பாதுகாப்பை…
-
- 0 replies
- 765 views
-
-
திடீர் திருப்பம்: குர்திஷ் போராளிகள் மீதான தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டது துருக்கி வடக்கு சிரியாவில் குர்திஷ் மீதான எல்லை தாண்டிய தாக்குதலை நிறுத்துவதற்கு துருக்கி ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க துணைத் தலைவர் மைக் பென்ஸ் அறிவித்துள்ளார். பென்ஸ் மற்றும் துருக்கியின் ஜனாதிபதி தயிப் எர்டோகனுக்கு இடையே அங்காராவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் ஐந்து நாட்களுக்கு இடைநிறுத்தப்படும் எனவும், துருக்கியின் எல்லையில் இருந்து குர்திஷ் போராளிகள் பின்வாங்க வேண்டும் எனவும் துருக்கி வலியுறுத்தியது. இந்த நிலையில் குர்திஷ் தலைமையிலான போராளிகளை பின்வாங்கச் செய்வதற்கு அமெரிக்கா உதவும் என தெரிவிக்க…
-
- 3 replies
- 1.2k views
-
-
சிரியாவின் வடக்கு பகுதியில் தாக்குதல் – 637 குர்திஷ் போராளிகள் உயிரிழப்பு! சிரியாவின் வடக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இதுவரை 637 குர்திஷ் போராளிகள் உயிரிழந்துள்ளனர். துருக்கி இராணுவத்தினை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இதுகுறித்த செய்தியினை வெளியிட்டுள்ளன. சிரியாவில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் இணைந்து குர்திஷ் போராளிகள் குழு போரிட்டது. மேலும், பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த போராளிகள் குழு தனி நாடு அமைக்கும் நோக்கில் சிரியாவில் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சி எ…
-
- 0 replies
- 433 views
-
-
ஹொங் கொங்கின் பிரதம நிறைவேற்றதிகாரி கரி லாமை ஹொங் கொங்கின் ஜனநாயகத்துக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்ததோடு, அவரைப் பதவி விலகுமாறு இன்று மீண்டும் மீண்டும் இடைநிறுத்தப்பட்ட சட்டசபை அமர்வொன்றில் கோரிய நிலையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டிருந்தனர். அந்தவகையில், இவ்வாறானதொரு நிலைமை நேற்றும் ஹொங் கொங் சட்டசபையில் ஏற்பட்டிருந்த நிலையில் காணொளி மூலம் தனது வருடாந்த கொள்கையை நிகழ்த்தியிருந்த பிரதம நிறைவேற்றதிகாரி கரி லாம், அது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்றபோதே நேற்று இரண்டாவது நாளாகவும் ஹொங் கொங் சட்டசபையில் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதேவேளை புதிய வீதி வன்முறையாக, கத்திகளையும், சுத்தியல்களையும் கொண்டிருந்த முகம…
-
- 0 replies
- 387 views
-
-
சிரியாவின் வடபகுதியில் உள்ள குர்திஸ் நிலைகள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ள துருக்கி தடைசெய்யப்பட்ட நேபாம் குண்டுகளையும் வெள்ளை பொஸ்பரசினையும் பயன்படுத்திவருவதாக குர்திஸ்அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். துருக்கியின் தாக்குதல் ஆரம்பித்து எட்டு நாள்களின் பின்னர் விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள குர்திஸ் அதிகாரிகள் முக்கிய எல்லைப்புற நகரான ரஸ் அல் அய்னில் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே துருக்கி படையினர் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர் என குர்திஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துருக்கி ஆக்கிரமிப்பாளர்கள் அனைத்து வகையான ஆயதங்களையும் பயன்படுத்துகின்றனர் என தெரிவித்துள்ள குர்திஸ் அதிகாரிகள் தனது திட்டம் தோல்வியடைய தொடங்கியுள்ளதால் துருக…
-
- 1 reply
- 331 views
-
-
சிரியா விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் எர்டகன் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டதாக, துருக்கி அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க, அந்நாட்டின் குர்து படைகளுடன் இணைந்து செயல்பட்ட அமெரிக்கா, தனது துருப்புகளை அண்மையில் திரும்பப் பெற்றது. அதுமுதல் வடக்கு சிரியா பகுதிகளில் வாழும் குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து துருக்கி அதிபர் எர்டகனுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில், முட்டாள்தனமாக செயல்படாமல், ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்வோம் என டிரம்ப் கூறியிருந்தார். மேலும் ஆயிர…
-
- 0 replies
- 399 views
-
-
ட்ரோன்களின் விற்பனையை ஜோன் லூவிஸ் நிறுவனம் நிறுத்தியது பொதுமக்களால் ட்ரோன்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதனால் அவற்றின் விற்பனையை கடந்த மே மாதத்தில் இருந்து ஜோன் லூவிஸ் நிறுவனம் நிறுத்தியுள்ளது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கற்விக் விமான நிலையத்தில் ட்ரோன்கள் மூலம் இடையூறு ஏற்படுத்தப்பட்டதனால் அவற்றின் விற்பனை வீழ்ச்சியடைந்தது. நாடு முழுவதுமுள்ள குடியிருப்புப் பகுதிகளில் இந்தச் சாதனங்களை பறக்கவிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதனால் ட்ரோன்களின் விற்பனை சரிவுக்குள்ளானது. ட்ரோன்களின் விற்பனை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து தாம் இந்த முடிவை எடுத்ததாக பிரித்தானியாவின் மிகப்பெரிய பல்பொருள் விற்பனை நிறுவனமான ஜோன் லூவிஸின் தொழில்நுட்பப் பணிப்பாளர் லோரன்ஸ் மிச்செல்…
-
- 0 replies
- 395 views
-
-
2019 இல் சிறந்த வனவிலங்குப் ஔிப்படம் – Marmot அணிலை அதிர்ச்சியடையவைத்த திபெத்திய நரி! லண்டனில் இடம்பெற்ற இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் கண்காட்சியொன்றில், சீனாவில் எடுக்கப்பட்ட அரிய இயற்கை ஔிப்படம் முதலிடத்தை வென்றுள்ளது. சீனாவின் சிலியென் மலைப்பகுதியில் திபெத்திய நரியொன்று அணில் இனத்தைச் சேர்ந்த Marmot விலங்கை அதிர்ச்சியடையச் செய்ததைக் காட்டும் குறித்த ஔிப்படம் இந்த வருடத்தின் சிறந்த வனவிலங்குப் ஔிப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த போட்டியில் 100 நாடுகளிலிருந்து 48 ஆயிரத்துக்கும் அதிகமான ஔிப்படங்கள் பங்கேற்கச் செய்யப்பட்டிருந்தன. தனது மூன்று குட்டிகளின் உயிரைக் காக்க திபெத்தியப் பெண் …
-
- 0 replies
- 348 views
-
-
‘பிறெக்சிட்’ | ஜோன்சன் – ஐ.ஒன்றியம் உடன்படலாம்? ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஜோன்சன் சமரசம் பிரித்தானிய பிரதமர் போறிஸ் ஜோன்சன் பிறெக்சிட் இழுபறி ஒருவாறு முடிவுக்கு வரும்போலிருக்கிறது. அயர்லாந்து எல்லை, சுங்கத் தீர்வை விடயங்களில் முடிவு எட்டமுடியாமல் இதுவரை இழுபறியிலிருந்த பிறெக்சிட் பிரதமர் ஜோன்சனின் பல விட்டுக்கொடுப்புகளின் பின்னர் ஒரு சுமுகமான நிலையை எட்டியிருக்கிறது. பிரதமர் அலுவலகத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கிமிடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் வரைவு புதனன்று வெளியிடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. ஐரிஷ் கடலை சுங்க எல்லையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகோளை முன்னாள் பிரதமர் தெரேசா மே நிராகரித்திருந்…
-
- 5 replies
- 815 views
-
-
ஜேர்மனியின் சான்செலராக அங்கெலா மேர்க்கலை அனெகிரெட் கிராம்ப்-கரென்போர் பிரதியிடுவதானது கடந்தாண்டு டிசெம்பர் மாதத்தில் ஆளும் கிறிஸ்தவ ஜனநாயகச் சங்கக் கட்சியின் தலைவராக அவர் அங்கெலா மேர்க்கலை பிரதிட்டபோது தெளிவாக இருந்தது. ஆனால், தற்போது 10 மாதங்களின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் பலம் வாய்ந்த, மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜேர்மனியை வழிநடத்த தற்போது பாதுகாப்பமைச்சராக இருக்கும் அனெகிரெட் கிராம்ப்-கரென்போர் தகுதியானவரா என அவரது கட்சியின் உறுப்பினர்கள் விவாதிக்கின்றனர். சமபாலின மக்கள் மீதான வேடிக்கையான கருத்துத் தெரிவித்தது உள்ளடங்கலாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் பொதுவெளியில் பின்னடைவுகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து அனெகிரெட் கிராம்ப்-கரென்போரின் ஆதரவு மட்ட…
-
- 0 replies
- 688 views
-
-
கடல்வழி தகவல் தொடர்புகளை கண்டறியும் அமைப்புகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு, சீனக் கப்பல்கள், ஈரானின் கச்சா எண்ணெயை ரகசியமாக எடுத்துச் செல்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துக்கும் அணு ஏவுகணைத் திட்டத்துக்கும் முட்டுக்கட்டை போடும் விதத்தில், அந்நாட்டின் மீது அமெரிக்கா கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் ஈரான் கச்சா எண்ணெயை சீனக்கப்பல்கள் ரகசியமாக எடுத்துச் செல்வதாகக் கூறி, அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது . இரண்டு சீனக் கப்பல்கள் ஈரான் எண்ணெயை ரகசியமாக ஈராக் வழியாக எடுத்துச்சென்றிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. தனது திருட்டுத்தனத்தை மறைக்க சீனக் கப்பல்கள், கடல்வழி தகவல் தொடர்புகளை கண்டறியும் அமைப…
-
- 0 replies
- 230 views
-
-
கனடாவைச் சேர்ந்த 79 வயது பெண் எழுத்தாளர் மார்க்கரெட் ஆட்வுட், பிரிட்டனைச் சேர்ந்த 60 வயது பெண் எழுத்தாளர் பெர்னர்டீன் எவரிஸ்டோ ஆகிய இருவருக்கு இந்த ஆண்டிற்கான கௌரவம் மிக்க புக்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1992ம் ஆண்டில்தான் இருவருக்கு புக்கர் விருது பகிர்ந்தளிக்கப்பட்டது.அதன் பின்னர் ஒருவருக்குத்தான் விருது என விதிமுறை வகுக்கப்பட்டது. ஆயினும் இந்த ஆண்டு தீவிரமான பரிசீலனைகளுக்குப் பிறகு மார்க்கரெட் ஆட்வுட் எழுதிய தி டெஸ்டமென்ட்ஸ் (The Testaments), எவரிஸ்டோ எழுதிய Girl Woman, Other ஆகிய இரண்டு நாவல்களும் சம அளவிலான தகுதி பெற்றன. இரண்டில் ஒன்றையும் தள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனவே விதியை தளர்த்தி இருவருக்கும் புக்கர் விருதை பகிர்ந்தளி…
-
- 0 replies
- 254 views
-
-
துருக்கியின் தாக்குதல்களை அனுமதிக்க முடியாது : ரஷ்யா சூளுரை வடக்கு சிரியாவில் துருக்கி ராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் நிலையில் துருக்கி மற்றும் சிரியப் படைகளுக்கு இடையிலான மோதல்களை அனுமதிக்க முடியாது என்று ரஷ்யா சூளுரைத்துள்ளது. இந்தத் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம் என்றும் சிரியாவிற்கான மொஸ்கோவின் சிறப்புத் தூதர் அலெக்சாண்டர் லாவ்ரென்டேவ் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான உத்தியோகபூர்வப் பயணத்தின்போது, துருக்கியின் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அலெக்சாண்டர் லாவ்ரென்டேவ் விவரித்துள்ளார். 2015 இல் இருந்து சிரியாவில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்யப் படைகள், சிரிய மற்றும் துருக்கிப் படைகளுக்கு இடை…
-
- 2 replies
- 563 views
-
-
ஜெர்மனியில் குழந்தைகளின் ஆபாசப்படம் குறித்த சர்வதேச கும்பலுடன் தொடர்புடைய 7 இந்தியர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது ஜெர்மனியின் லுபெக் நகரில் சாச்சே ட்ரெப்கே என்பவன் குழந்தைகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டதுடன், அதை வீடியோவாக எடுத்து விநியோகித்தது ஆகிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டான். அவன் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் பகிரப்படும் 29 வாட்ஸ் ஆப் குழுக்கள் இருந்ததும், அதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 483 பேர் உறுப்பினராக இருந்ததும் கண்டறியப்பட்டது. அதில் 7 இந்தியர்களின் வாட்ஸ் ஆப் எண்களும் இருப்பதாகக் கூறி கடந்த ஜனவரியில் ஜெர்மனி தூதரகம் மூலம் இந்தியாவுக்கு தகவல் அனுப்பப்பட்டது. செப்டம்பர் மாத இ…
-
- 1 reply
- 377 views
-
-
துருக்கி மீது டிரம்ப் பொருளாதார தடைகளை விதித்தார்… October 15, 2019 சிரியா மீதான துருக்கியின் போர் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக துருக்கி மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்த பிறகு அங்குள்ள குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் குர்து போராளிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் பலியாகினர். துருக்கியின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில், துருக்கியின் பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்படும் என 4 தினங்களுக்கு முன்பு…
-
- 0 replies
- 487 views
-
-
துருக்கிக்கான ஆயுத விற்பனையை நிறுத்தியது பிரான்ஸ்! துருக்கிக்கான ஆயுத விற்பனையை நிறுத்த பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிரியாவின் வடபகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் குர்திஷ் இனப் போராளிகளை குறிவைத்து, துருக்கி இராணுவம் கடந்த 9ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் குறித்த பகுதிகளில் இருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரானும், சிரியா மீதான துருக்கியின் ஒருதலைபட்சமான தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பிரான்ஸ் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், சிரியா மீதான தாக்குதலில் பயன்படுத்தப்படலாம் என்ற கா…
-
- 2 replies
- 796 views
-
-
வடக்கு சிரியாவில் துருக்கி மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், துருக்கியின் இரண்டு அமைச்சகங்களுக்கும், மூன்று மூத்த அரசு அதிகாரிகளுக்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது. துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானோடு தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென கோரியதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்தார். அந்தப் பிராந்தியத்திற்கு மிக விரைவில் தான் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் பென்ஸ் கூறியுள்ளார். வடகிழக்குப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள சிரியா ஜனநாயகப் படை என்ற குர்து ஆயுதக் குழுவை அழிக்கும் நோக்கத்துடன் துருக்கி தங்கள் எல்லைப்புறத்தில் இருந்து சிரியா மீது தாக்குதல் தொடுத்து…
-
- 1 reply
- 336 views
-
-
கட்டலோனியாவின் பிரிவினை போராட்ட தலைவர்கள் ஒன்பது பேரிற்கு எதிராகதேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தியுள்ள ஸ்பெயின் நீதிமன்றம் அவர்களிற்கு நீண்ட கால சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2017 இல் இடம் பெற்ற சுதந்திரத்திற்கான சர்வஜனவாக்கெடுப்பின் போது அவர்களின் நடவடிக்கைகளிற்காகவே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கட்டலோனியா பிராந்தியத்தின் முன்னாள் துணை ஜனாதிபதி ஒரியோல் ஜன்குயரசிற்கு தேசத்துரோகம் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஸ்பெயின் நீதிமன்றம் 13 வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது. அவர் 13 வருடங்களிற்கு அரசியல்ரீதியிலான பதவிகளை வகிக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கட்டலானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரிற்கும் …
-
- 0 replies
- 277 views
-
-
கிழக்கு உத்தர பிரதேசத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், பலர் ஈடிபாடுகளில் சிக்கியிருக்க கூடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கிழக்கு உத்தர பிரதேசத்தின் மாவே மாவட்டத்தில் முகமதாபாத் பகுதியில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஒரு சிலிண்டர் வெடித்துள்ளது. இதன் தாக்கம் மிக வலுவாக இருந்துள்ளது. இதனால், அந்த முழு கட்டிடமே இடிந்து விழுந்தது. இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள மக்கள் கூறும்போது, பெரும் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து, அந்த கட்டிடத்தில் இருந்த பெரும் தீ பற்றி எரிந்தது என்று தெரிவித்துள்ளனர். இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளா…
-
- 1 reply
- 324 views
-
-
சீனாவை பிரிக்க முயற்சிப்போர் இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்படுவார்கள் என நேபாள பயணத்தின் போது சீன அதிபர் ஜின்பிங் எச்சரித்துள்ளார். மாமல்லபுரம் பயணத்தை முடித்துக் கொண்டு நேபாளம் சென்ற சீன அதிபர், அந்நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி, பிரதமர் கே.பி.சர்மா ஒலி ஆகியோரை சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்திய அவர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடப்பட்டது. கடந்த 23 ஆண்டுகளில் சீன அதிபர் ஒருவர் நேபாள நாட்டுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் நேபாள அதிபருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, அந்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக நேபாள மதிப்பில் 5 ஆயிரத்து 637 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்…
-
- 2 replies
- 405 views
-
-
துருக்கியின் ராணுவத் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக சிரியா அரசுடன், குர்து போராளிகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். தனி நாடு கேட்கும் குர்து இன மக்கள், எல்லையில் இருப்பது தங்கள் நாட்டுக்கு ஆபத்து என துருக்கி அதிபர் டயீப் எர்டோகன் கருதுகிறார். குர்து இனப் போராளிகளை ஒழித்துக் கட்ட தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், சிரியாவில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிடும் வீரர்களை அமெரிக்கா திரும்ப அழைத்து கொண்டதை பயன்படுத்திக் கொண்டு குர்துக்கள் மீது தாக்குதல் நடத்த எர்டோகன் உத்தரவிட்டார். இதை அடுத்து சிரியாவின் வடக்கே உள்ள குர்துக்கள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஐந்து நாட்களாக தாக்குதல் தொடரும் நிலையில், தங்கள…
-
- 2 replies
- 759 views
-
-
பொருளாதாரத்திற்கான நோபல் இந்தியாவில் பிறந்தவர் உள்ளிட்ட மூன்று பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு அபிஜித் பேனர்ஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு கொல்கத்தாவில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற அபிஜித் பேனர்ஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு நோபல் பரிசு உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான அணுகுமுறைகளை வழங்கியதற்காக அபிஜித் பேனர்ஜி உள்ளிட்டோருக்கு நோபல் பரிசு அபிஜித் பேனர்ஜி, எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரமெர் உள்ளிட்ட மூன்று பேர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர் https://www.polimernews.com/dnews/84703/இந்தியாவில்-பிறந்தவர்உள்ளிட்ட-மூன்று-பேருக்குபொருளாதாரத்திற்கான-நோபல்பரிசு-அறிவிப்ப…
-
- 3 replies
- 419 views
-
-
முன்னாள் பரா ஒலிம்பிக் வீரருக்கு விமான நிலைய வளாகத்துள் நுழையத்தடை காலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் இடம்பெற்றுவரும் போராட்டங்களின் போது விமானம் மீதேறிய முன்னாள் பரா ஒலிம்பிக் வீரருக்கு நாட்டின் எந்தவொரு விமான நிலையத்திற்குள்ளும் நுழைய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எக்ஸ்ரிங்சன் ரெபெல்லியன் குழு மேற்கொண்டுவரும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டங்களின் நான்காம் நாளான கடந்த வியாழக்கிழமை ஜேம்ஸ் பிரவுண் என்ற 55 வயதான குறித்த நபர், லண்டன் சிற்றி விமான நிலையத்தில் தரித்திருந்த பிரிட்டிஷ் ஏர்வேய்ஸூக்கு சொந்தமான விமானத்தின் மேல் ஏறினார். அவரை அதிலிருந்து இறக்கிய பொலிஸார் கைது செய்து வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் முன்;னிலைப்படுத்தினர். இதன்போது, தன…
-
- 0 replies
- 392 views
-