உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26870 topics in this forum
-
ஹொங்கொங் மீது அமெரிக்கா பொருளாதார தடை ஹொங்கொங் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றியுள்ளது. ஹொங்காங் போராட்டத்தில் தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையிலேயே இவ்வாறு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் முதல் சட்டமூலம் ஹொங்கொங் மீது தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்கவும் பொருளாதார தடைகளை விதிக்கவும் வழிவகுக்கும். அதே போல் “ஹொங்கொங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் 2019” என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றொரு சட்டமூலத்தில் ஹொங்கொங் பொலிஸ் படையினருக்கு அமெரிக்க நிறுவனங்கள் சில ஆயுதங்களை வணிக ரீதியாக ஏற்றுமதி செய்வதை தடைசெய்யும். அத்துடன் இந்த சட்டமூலங்கள் ஹொங்கொங்கில் மனித உரிமை மீறல்களுக்கு …
-
- 0 replies
- 485 views
-
-
அசாஞ் மீதான விசாரணையை ஸ்வீடன் கைவிடுகிறது விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ் மீது 2010 இல் சுமத்தப்பட்ட பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை ஸ்வீடனில் உள்ள வழக்குரைஞர்கள் கைவிட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் அசாஞ், 2012 இல் லண்டனில் உள்ள ஈக்வடோரியன் தூதரகத்தில் தஞ்சம் புகுந்து ஏழு ஆண்டுகளாக சுவீடனுக்கு ஒப்படைக்கப்படுவதைத் தவிர்த்துள்ளார். 48 வயதான ஆஸ்திரேலியர் ஜூலியன் அசாஞ் மே மாதம் ஈக்வடோர் தூதரகத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார். அத்துடன் பிணை நிபந்தனைகளை மீறியதற்காக அவருக்கு 50 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் (Belmarsh) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொது வழக்கு வ…
-
- 0 replies
- 411 views
-
-
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில், பிரித்தானியப் படைகளால் பொதுமக்கள் கொல்லப்பட்டதை பிரித்தானிய அரசாங்கமும், ஆயுதப் படைகளும் மறைத்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. பிரித்தானிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபன பனோரோமா, சண்டே டைம்ஸால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்றானது 11 பிரித்தானிய துப்பறிவாளர்களிடம் கதைத்திருந்த நிலையில், போர்க்குற்றங்களுக்கான நம்பத் தகுந்த ஆதாரங்களை தாங்கள் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளனர். கொலைகளுக்கு படைவீரர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என உள்வீட்டினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மேற்குறித்த குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக பாதுகாப்பமைச்சு கூறியுள்ளது. ஈராக்கில் இருந்தபோது பிரித்தானியப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை …
-
- 0 replies
- 922 views
-
-
தென் சீனக் கடல் பகுதியில் ராணுவ பலத்தை காட்டும் வேலையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்காவிடம் சீனா கூறியுள்ளது. சரக்கு போக்குவரத்திற்கு மிகமுக்கியமான கடல் வழியான தென் சீனக் கடலுக்கு, சீனா முழுஉரிமை கொண்டாடுவதை அமெரிக்கா ஏற்கவில்லை. இந்த நிலையில் சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும் நேற்று பாங்காக்கில் சந்தித்துப் பேசினர். அப்போது தென்சீனக் கடல், ஹாங்காங் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வூ கியான் ((Wu Qian)) தெரிவித்துள்ளார். தென்சீனக் கடலில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் சீனா உறுதியாக இருப்பதாகவும், அந்த பகுதியில் தனது ராணுவ பலத…
-
- 1 reply
- 682 views
-
-
றொஹிங்யா இனப்படுகொலை | குற்றவியல் நீதிமன்றத்திற்குத் தயாராகும் ஒங் சான் சூ சீ சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது துரத்தப்பட்டு இரண்டாவது வருடத்தை வங்காள தேசத்தில் கொக்ஸ் பஜாரில் நினைவுகூரும் றொஹிங்யா அகதிகள் – படம்: ரஹ்மான் / ராய்ட்டர்ஸ் மியான்மாரில் (பர்மா) ரொஹிங்யா சிறுபான்மையினருக்கு எதிராக இனவழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அந் நாட்டின் அரசு மற்றும் இராணுவத்தினர் மீது மனித உரிமை அமைப்புகள் நீணடகாலமாகக் குற்றஞ்சாட்டி வந்தன. அந்நாட்டின் தலைவர் ஓங் சான் சூ சி இக்குற்றங்களை மறுத்தது மட்டுமல்லாது அதுபற்றிய விசாரணைகளை மேற்கொள்ளவும் மறுத்து வருகிறார். அகிம்சை முறையில் ஜனநாயகத்தை மீட்கப் போராடியவர் எனக்கூறி இவருக்கு…
-
- 3 replies
- 848 views
-
-
அமெரிக்காவுடன் அர்த்தமற்ற பேச்சுவார்த்தைக்கு இடமில்லை- வடகொரியா திட்டவட்டம்! அமெரிக்காவுடன் இனிமேல் அர்த்தமற்ற பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று வடகொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கா – வடகொரியத் தலைவர்கள் இடையே சந்திப்பு நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது இந்த அறிவிப்பு குறித்து இன்று பதிலளித்துள்ள வடகொரியா, எங்களுக்கு அமெரிக்காவுடன் அர்த்தமற்ற பேச்சுவார்த்தை நடத்த எந்த ஆர்வமும் இல்லை என்றும் இதனால் எங்களுக்கு அமெரிக்காவிடம் திரும்ப ஏதும் கிடைக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்ட…
-
- 0 replies
- 283 views
-
-
வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனை, ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைவிட 17 மடங்கு வலிமை வாய்ந்தது என இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. வடகொரியா மாண்டாப் மலைப் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டில் சக்திவாய்ந்த அணுகுண்டு சோதனையை நடத்தியது. இதுகுறித்து இஸ்ரோவை சேர்ந்த 3 வல்லுநர்கள் குழு ஆராய்ச்சி நடத்தி ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட பகுதியில் தரைப்பரப்பு பெரும் சேதம் அடைந்ததையும், பக்கவாட்டில் உள்ள பகுதிகள் அரை மீட்டர் அளவுக்கு இடம்பெயர்ந்ததையும் ஜப்பானின் செயற்கைக்கோள் பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், வடகொரியா சோதனை செய்த அணுகுண்டு 245 முதல் 271 கிலோடன் வரை சக்திவாய்ந்தது என இஸ்ரோ வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இரண்டாம…
-
- 0 replies
- 478 views
-
-
ஹாங்காக் போராட்ட களத்தில் ராணுவத்தை சீனா முதன்முதலாக களமிறக்கியுள்ளது. சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்த்து தொடங்கப்பட்ட போராட்டம், அந்த மசோதா திரும்பப் பெறப்பட்ட பிறகும் நீடிக்கிறது. சீனாவிடம் இருந்த சுதந்திரம் வேண்டும் என்ற புதிய கோரிக்கையுடன் போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர். இந்நிலையில், ஹாங்காக் போராட்ட களத்தில் சீன ராணுவம் முதன்முதலாக களமிறக்கப்பட்டுள்ளது. வழக்கமான சீருடையில் அல்லாமல் டி-சர்ட், சாட்ஸ் அணிந்து தடுப்புகள் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணிகளில் வீரர்கள் ஈடுபட்டனர். https://www.polimernews.com/dnews/89033/ஹாங்காக்-போராட்ட-களத்தில்முதன்முதலாக-ராணுவத்தைகளமிறக்கியது-சீனா
-
- 3 replies
- 1.2k views
-
-
ஆஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்ட ஆப்கானிஸ்தான் அகதியின் உடலை ஆப்கானிஸ்தானில் உள்ள அவரது குடும்பத்திடம் ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு 15,000 டாலர்களை கேட்டுள்ளது. சயத் மிர்வாஸ் ரோஹனி என்ற 32 வயது அகதி, கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பத்தில் சிக்கல் நீடித்து வருகின்றது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மருத்துவராக பணியாற்றிய இவர், ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த நிலையில் மனுஸ்தீவில் நான்கு ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் மனநல பாதிப்பை எதிர்கொண்ட நிலையில, மேலதிக சிகிச்சைகாக ஆஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டிருந்தார். ஆறு மொழிகள் பேசும் திறன்கொண்ட ரோஹனி, 2017ம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு கொண்டு வர…
-
- 0 replies
- 507 views
-
-
படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionரோஜர் ஸ்டோன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை காக்கும் வகையில் அவரது ஆலோசகர் ரோஜர் ஸ்டோன் அந்நாட்டு நாடாளுமன்ற குழு விசாரணையின்போது பொய் சொன்னார் என்றும் சாட்சியங்களை அளித்தார் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாட்சியங்களை அழித்ததற்கு 20 ஆண்டுகள் வர சிறை தண்டனை விதிக்கப்படும். பிற குற்றங்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்று அவர் கூறியுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் மீதான நன்மதிப்பை சேதப்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் பதிப்பிப்பதற்கு முன்னதாக, அதுகுறித்த மேலதிக தகவல்களை தெரிந்துகொள்வதற்கு தான் எடுத்த…
-
- 1 reply
- 611 views
-
-
முன்னாள் துணை அதிபரை அவதூறாகப் பேசிய வழக்கில் அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இதையடுத்து அவரை பதவி நீக்கக் கோரும் தொலைக்காட்சி விவாதம் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இவரது மகன் ஹன்டர் பிடென் உக்ரைனில் உள்ள இயற்கை எரிவாயு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளார். இந்த எரிவாயு நிறுவனத்தில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரித்த அரசு வழக்கறிஞரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என அந்நாட்டு அதிபரிடம் ஜோ பிடன் வலியுறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்ட…
-
- 0 replies
- 362 views
-
-
-
- 0 replies
- 523 views
-
-
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர், வெறிநாய் போல் அடித்து கொள்ளபட வேண்டுமென வடகொரிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா-அமெரிக்கா இடையேயான உறவு தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங்கை கொலைகார சர்வாதிகாரி என, அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள வடகொரிய அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம், அதிகாரத்தின் மீது ஆசைகொண்ட ஜோ பிடன் போன்ற வெறிநாயை விட்டுவைப்பது பலருக்கும் ஆபத்தானது, தாமதிக்காமல் அவரை அடித்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. https://www.polimernews.com/dnews/88830/அமெரிக்காவின்-முன்னாள்துணை-அதிபரை-வெறிநாய்-போல்அடி…
-
- 3 replies
- 586 views
-
-
சிலி நாட்டில் போலீஸாரால் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா டிரோன் குட்டி விமானத்தை லேசர் வெளிச்சத்தை செலுத்தி போராட்டக்காரர்கள் கீழே விழச் செய்தனர். சான்டியாகோவில் மெட்ரோ கட்டணத்தை சிலி அரசு உயர்த்தியதைக் கண்டித்து, அக்டோபர் மாதம் முதல் போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், போராட்டக்காரர்களை ஆளில்லா டிரோன் குட்டி விமானம் சிலி போலீஸார் கண்காணித்தனர். இதை கண்ட போராட்டக்காரர்கள், தங்களிடம் இருந்த 50 கையடக்க லேசர் சாதனங்களில் இருந்து வெளிச்சத்தை டிரோனை நோக்கி இயக்கினர். லேசர் சாதனங்களில் இருந்து ஒரே நேரத்தில் வெளிச்சம் பாய்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்து டிரோன் கீழே விழுந்தது. இந்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாக பரவி வருகிறது. https://www.polim…
-
- 0 replies
- 439 views
-
-
பிரெக்ஸிட் நடவடிக்கைக்குப் பிறகு, உலகில் பிரிட்டன் 2ம் தர நாடாகி விடும் என்று ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை, பிரெக்ஸிட் என பரவலாக அழைக்கப்படுகிறது. இதுகுறித்து பெல்ஜியத்தில் புருக்ஸ் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் பேசினார். அப்போது அவர், பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு பிறகு பிரிட்டன் உலகில் 2ம் தர நாடாக ஆகி விடும் என்றும், சர்வதேச விவகாரங்களில் செலுத்தும் ஆளுமையை பிரிட்டன் இழந்து விடும் என்றும் தெரிவித்தார். பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் சீனாவை ஒன்றுபட்ட ஐ…
-
- 10 replies
- 781 views
-
-
சிரியாவின் வடக்கு பகுதியிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அப்பகுதியில் ஹெலிகாப்டர் தளத்தை அமைக்கும் பணியில் ரஷியா ஈடுபட்டுள்ளது. சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் அமைப்பை ஒடுக்கிய பிறகு, அங்கிருந்து அமெரிக்க ராணுவத்தினரை அதிபர் டிரம்ப் திரும்ப அழைத்தார். இதையடுத்து அங்குள்ள குவாமிஸ்லி (Qamishli) பகுதியில் ரஷியா ஹெலிகாப்டர் தளத்தை அமைத்து வருகிறது. ரஷியா பாதுகாப்பு அமைச்சக தொலைக்காட்சியான வேஸ்தா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும் ரஷிய ஹெலிகாப்டர்கள் வருகை தொடர்பான வீடியோ காட்சியையும் அத்தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. https://www.polimernews.com/dnews/88793/சிரியாவின்-வடபகுதியில்ஹெலிகாப்டர்-தளம்அமைக்கிறது-ரஷியா
-
- 1 reply
- 438 views
-
-
அம்புகளும் வில்லுகளும் பண்டைய புராண கால மோதல்களின் போது பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் என்பது பலரதும் கருத்தாகவுள்ளது. ஆனால் ஹொங்கொங் நகரில் நேற்று புதன்கிழமை சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் குழுவினர் அந்தக் கருத்து தவறு என்பதை நிரூபிக்கும் வகையில் புதுவித தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். அவர்கள் தீப்பந்தமாக கொழுந்து விட்டு எரியச்செய்யப்பட்ட அம்புகளை வில்லுகள் மூலம் ஏவி அந்நகரிலிருந்த சீனப் பல்கலைக்கழகமொன்றின் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அருகி லிருந்த புகையிரதமொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. https://www.virakesari.lk/article/68945
-
- 0 replies
- 469 views
-
-
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உயர்தரப்பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். லொஸ்ஏஞ்சல்சிற்கு வடக்கே உள்ள சன்டா கிளரிட்டாவின் சவுகஸ் உயர் தரப்பாடசாலையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை ஆரம்பமாவதற்கு சற்று முன்னர் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. கறுப்பு உடையணிந்த ஆசிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 15 வயது மாணவனே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டான் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரிகள் உடனடியாக பாடசாலைக்குள் நுழைவதையும் காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் மூலம் வெளியேற்றப்படுவதையும் காண்பிக்கும் வீ…
-
- 0 replies
- 395 views
-
-
இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், செயின்ட் சதுக்கத்தில் உள்ள பேராலயத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வெனிஸ் நகரில் அண்மையில் பெய்த கனமழையால், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வெனிஸ் நகரத்தின் 85 சதவீதம் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அதிகபட்சமாக, 187 சென்டிமீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. இதற்கு முன்பு 1966ம் ஆண்டு 194 சென்டிமீட்டர் அளவில் வெள்ளம் ஏற்பட்டது. இந்தநிலையில், செயின்ட் மார்க் சதுக்கத்தில் உள்ள செயின்ட் பேராலயத்தில், ஒரு மீட்டருக்கு அதிகமான உயரத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அங்குள்ள பொருட்களை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழை-வெள்ளம் காரணமாக, வ…
-
- 2 replies
- 982 views
-
-
ஐ.எஸ் தீவிரவாதிகளின் புதிய தலைவர் இருக்குமிடம் தெரியும் என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி! அமெரிக்கா உள்ளிட்ட பல வல்லரசு நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவன் அபுபக்கர் அல் பக்தாதி (வயது 48) கடந்த மாதம் உயிரிழந்த நிலையில், அந்த அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடத்தை கண்காணித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பக்தாதி உயிரிழந்ததை அடுத்து அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரேஷி என்பவர் ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்தது. மேலும் பக்தாதி உயிரிழந்தமைக்கு உரிய பதிலடி வழங்கப்படவுள்ளதாகவும் ஐ.எஸ் அமைப்பு அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில், ஐ.எஸ் அமைப்பி…
-
- 0 replies
- 395 views
-
-
யார் இந்த கஞ்சா கன்னியாஸ்திரிகள்? – யேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா அதன் எண்ணற்ற திராட்சைத் தோட்டங்களுக்கும் பழத்தோட்டங்களுக்கும் பெயர் பெற்றது. ஆனால் இவற்றையெல்லாம் விடவும் இப்போது வட கலிபோர்னியாவின் மெர்சிட் கவுண்டியில் உள்ள ஒரு சாதாரண பண்ணை வீடும் சிறிய பண்ணையும் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் பள்ளத்தாக்கின் சகோதரிகள் (sisters of the valley) எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் சிறிய கன்னியாஸ்திரிகள் குழுவொன்று தங்களது மிகச்சிறந்த கலிபோர்னியா கஞ்சா தயாரிப்புப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது இங்கிருந்துதான். கஞ்சா கன்னியாஸ்திரிகள் என அழைக்கப்படும் இவர்கள் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. தாங்கள் எந…
-
- 21 replies
- 2.4k views
- 2 followers
-
-
ஐக்கிய அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சவாலுக்குட்படுத்துமாறு மிகுந்த அழுத்தத்துக்குள் உள்ளதாக, ஐக்கிய அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். யாரிடமிருந்து அழுத்தத்தை எதிர்கொள்வதாக ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் முதற்பெண்மணியுமான ஹிலாரி கிளின்டன் வெளிப்படுத்தியிருக்கவில்லை. அந்தவகையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளரான ஹிலாரி கிளின்டன் மறுக்கவில்லை. கடந்த 2016ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைத் தான் வென்றி…
-
- 0 replies
- 441 views
-
-
இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கடலில் கொட்டும் குப்பைகள் அமெரிக்க நகரங்களுக்கு கரை ஒதுங்குவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளில் பருவநிலை மாறுபாடும், கழிவுகள் மேலாண்மையும் முக்கிய பங்கை வகிக்கின்றன. குறிப்பாக Electronics கழிவுகளை அப்புறப்படுத்துவது என்பது வளர்ந்த நாடுகளுக்கே பெரும் சவாலாக இருக்கிறது. இதனால், பெரிய நாடுகள் அவற்றின் மின்னணு கழிவுகளை அவ்வப்போது கடலில் கொட்டி விடுவதாக செய்திகள் அவ்வப்போது வருவதை பார்க்கலாம். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நியூயார்க்கில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது- இந…
-
- 0 replies
- 511 views
-
-
மொசாட்டிற்கு வந்த எச்சரிக்கை.. காஸாவை தாக்கிய 200 இஸ்ரேல் ராக்கெட்டுகள்.. பற்றி எரியும் பாலஸ்தீனம்! இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரண்டு நாடுகளும் மாறி மாறி ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காஸா மீண்டும் போர் பூமியாக மாறியுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே பல வருடங்களாக அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது. பாலத்தீனம் மீது இஸ்ரேல் செய்து வரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக பாலஸ்தீன போராளி குழுக்கள் போர் செய்து வருகிறது. காஸாவில்தான் இந்த போர் நடந்து வருகிறது. காஸா பாலஸ்தீனத்திற்கு சொந்தமான மாகாணங்களில் ஒன்றாகும். இங்குதான் பாலஸ்தீன போராளி குழுக்கள் இருக்கிறார்கள்.நேற்று இந்த போர் பெரிதானனது. இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாட்டிற்கு வந்த உளவ…
-
- 1 reply
- 587 views
-
-
கருணை தினம்: இரக்க குணம் உடையவரா நீங்கள்? நிச்சயம் உங்கள் ஆயுள் அதிகரிக்கலாம் லாரன் டர்னர்பிபிசி நியூஸ், வாஷிங்டன் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES நீங்கள் கருணையுடன் நடந்து கொண்டால் உங்களுக்கு என்ன கிடைக்கும்? உங்கள் முகம் பிரகாசமாக தோன்றலாம் அல்லது நீங்கள் திருப்தியாக உணரலாம்…ஆனா…
-
- 0 replies
- 395 views
- 1 follower
-