Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஈராக்கிலும் சிரியாவிலும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐஎஸ் அமைப்பின் குடும்ப உறுப்பினர்களை விடுவிப்பதற்கான தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு அமைப்பின் தலைவர் அல் பக்தாதி தனது உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.. திங்கட்கிழமை வெளியாகியுள்ள ஒலிநாட பதிவொன்றில் அவரது இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது. உங்கள் சகோதர சகோதரிகளை விடுவிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்,அவர்களை அடைத்து வைத்துள்ள சுவர்களை இடித்து நொருக்கி அவர்களை காப்பாற்றுங்கள் என அல்பக்தாதி தனது அமைப்பின் உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார். சிலுவை போரில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களது சியா ஆதரவாளர்களால் முஸ்லீம் பெண்கள் அவமானசிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லீம்களால் எப்படி வாழ்…

    • 0 replies
    • 564 views
  2. பிரெக்ஸிற்றால் நெதர்லாந்து குடியுரிமையை பெற முயற்சிக்கும் பிரித்தானியர்கள்! ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான வாக்கெடுப்பில் பிரித்தானியா வாக்களித்ததிலிருந்து நெதர்லாந்தில் வசிக்கும் பிரித்தானிய பிரஜைகளின் குடியுரிமை விண்ணப்ப எண்ணிக்கை விரைவாக அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பொது மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளைப் பெறுவதற்கு உங்களின் தேசியத்தை தியாகம் செய்வீர்களா? என்று அந்த மக்களிடம் பி.பி.சி. கேள்வியெழுப்பியிருந்தது. அதற்கு பெரும்பாலானவர்கள் ‘ஆம்’ என்ற பதிலையே வழங்கியுள்ளனர். எனினும், பிரெக்ஸிற்றிக்கு முன்னதாக யாரும் இந்த முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. தங்களின் நலன் கருதியும், பிள்ளைகளின் எதிர்காலம் கருதியும் பெரும்பாலான பிரித்…

  3. இந்துசமுத்திர பகுதியில் சீனாவின் அணுவாயுத யுத்தக்கப்பல்கள் நடமாடியதை இந்திய கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்தியா டுடே தொலைக்காட்சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளதுடன் சீனாவின் கடற்படை கலங்களின் படங்களையும் வெளியிட்டுள்ளது. இந்திய கடற்படை தனது அமெரிக்க தயாரிப்பு பி81 நீர்மூழ்கி யுத்த வேவு விமானங்களையும் ஏனைய சாதனங்களையும் பயன்படுத்தி சீனாவின் கடற்படை கப்பலைக கண்காணித்துள்ளதுடன் படங்களை எடுத்துள்ளது. சீனாவின் ஜியான் -32 என்ற கடற்படை கப்பல் இந்து சமுத்திரத்தின் தென்பகுதி ஊடாக பயணித்த பின்னர் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளது. இதனை இந்திய கடற்படையின் பி81 நீர்மூழ்கி எதிர்ப்பு யுத்த மற்றும் நீண்ட தூர கண்காணிப்பு விமானங்கள் படம்பிடித்துள்ளன. இந்த…

    • 2 replies
    • 957 views
  4. சுவிட்சர்லாந்தில் மகாத்மா காந்தியின் சிலை திறந்து வைப்பு சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்துள்ள இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று (சனிக்கிழமை) மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்துள்ளார். சுவிட்சர்லாந்தின் வில்லினூவ் நகராட்சிக்கு உட்பட்ட பூங்காவிலேயே மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழாவில் பேசிய ஜனாதிபதி, ஜெனீவா ஆற்றங்கரையில் இந்த சிலையை அமைக்க அனுமதி அளித்து, அந்த இடத்துக்கு ‘காந்தி சதுக்கம்’ என்ற பெயரை சூட்டியுள்ள சுவிட்சர்லாந்து அரசுக்கு நன்றி தெரிவித்தார். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ரோமைன் ரோலான்டின் அழைப்பை ஏற்று கடந்த 1931 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி வில்லினூவ் நகருக்கு முன்னர் வந்து சென்றத…

  5. மெக்ஸிகோவில் கிணறு ஒன்றிலிருந்து 44 உடல்கள் மீட்பு September 15, 2019 மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாநிலத்தில் கிணறு ஒன்றிலிருந்து 44 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்நாட்டுத் தடயவியலாளர்களால் இவை மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை கறுப்புப் பைகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், குவாடலஜாரா என்னும் நகருக்கு வெளியே 119 மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. துர்நாற்றம் வீசுவதாக பிரதேச மக்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இம்மாத ஆரம்பத்தில் இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #மெக்ஸிகோ #கிணறு #உடல்கள் #மீட்பு http://globaltamilnews.net/2019/130556/

  6. அமைதியாக நடந்து வந்த ஹாங்காங் போராட்டத்தில் கலவரம்.. களமிறங்கிய ராணுவம்.. சீனா அத்துமீறல்! அமைதியாக நடந்து வந்த ஹாங்காங் போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளது. ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது போலீசார் மற்றும் ராணுவத்தினர் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சீனாவின் அதிகாரத்திற்கு ஹாங்காங் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த வாரமே வாபஸ் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போராட்டம் தொடர்ந்து நடந்து வருவது சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஹாங்காங் சிறப்பு அதிகாரத்தை நீக்கிவிட்டு மொத்தமாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சீனா முயன்று கொண்டு இருக்கிறது.சீனாவில் புதிதாக நாடுகடத்தல் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். கடந்த ஜூன் மாதம் இ…

  7. படத்தின் காப்புரிமை AFP/Getty Images Image caption நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையை இந்த வழக்கு ஏற்படுத்தியுள்ளது. (எச்சரிக்கை: இந்த செய்தியில் வரும் விவரங்கள் உங்களுக்கு மன வருத்தத்தை உண்டாக்கலாம்.) அந்த பெண் குழந்தைக்கு இப்போது மூன்று வயது. அந்த குழந்தை பாலியல் வல்லுறவுக்கு ஆளானபோது, வயது இரண்டுதான். இவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகப்படுபவர் மீதான விசாரணையில் இந்த குழந்தை சாட்சியம் அளித்துள்ளது. தனக்கு என்ன நடந்தது? என்று சிறப்பாக பயிற்சி பெற்ற வழக்கறிஞர் உடனிருக்கும்போது விக்டோரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சுமார் இரண்டு மணிநேரம் சாட்சியம் …

  8. ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள பலூசிஸ்தானில் உள்ள சிறுபான்மை இந்துக்கள், சிந்தி இனத்தவர் மற்றும் சீக்கியர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் அத்துமீறல்களைக் கண்டித்து,ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கட்டடம் அருகே பலூசிஸ்தான் இயக்கத்தவர் தர்ணா போராட்டம் நடத்தினர். சிந்திக்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற முழக்கத்தை அவர்கள் எழுப்பினர்.பலூசிஸ்தானில் சீனாவின் ஏகாதியபத்தியத்தையும் அவர்கள் கண்டனம் செய்து கோஷங்களை எழுப்பினர். பலூசிஸ்தானில் ஏராளமான கிராமங்கள் ராணுவ அதிகாரிகளால் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.ராணுவ நடவடிக்கையால் சுமார் 6 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். https://www.polimer…

    • 0 replies
    • 478 views
  9. பயங்கரவாதிகளுக்கு பணம் கொடுத்ததே அமெரிக்கா தான்... பகீர் பழிபோடும் பாகிஸ்தான்..! முஜாகிதீன் அமைப்பினருக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்க அமெரிக்காவின் சிஐஏ நிதி உதவி அளித்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம்சாட்டி உள்ளார். ஜம்மு -காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அமெரிக்கா நாட்டாமை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. ஆனால், அதற்கு அமெரிக்கா முன் வராததால் தற்போது பாகிஸ்தான் விரக்தியில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் முரண்பட்ட நிலையால் பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியுள்ளனர் என்று இம்ரான்கான் தெரிவித்து உள்ளார். அமெரிக்காவின் முரண்பட்ட நிலையால் பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியுள்ளதாக பா…

  10. படத்தின் காப்புரிமை Getty Images பிரிட்டனில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் பல புதிய பரிந்துரைகளை அறிவித்துள்ளது. பிரிட்டனில் தங்கி படிக்கும் பல உலக நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படித்து பட்டம் பெற்றபின், இரண்டு ஆண்டுகள்வரை பிரிட்டனில் தங்கி வேலை தேடி கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், 2012ஆம் பிரிட்டன் உள்துறை செயலராக இருந்த தெரீசா மே எடுத்த முக்கிய முடிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தெரீசா மே காலத்தில், ஒரு வெளிநாட்டு மாணவர் பி…

  11. பசுபிக்கின் இராணுவசமநிலையை அமெரிக்காவிற்கு சாதகமாக மாற்றியமைக்க கூடிய நவீன ஏவுகணையொன்றுடன் அமெரிக்காவின் போர்க்கப்பலொன்று பசுபிக்கில் நடமாடுகின்றது என ஆய்வார்கள் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கப்பிரியலி கிவ்வொட்ஸ் என்ற போர்க்கப்பல் அமெரிக்க கடற்படையின் அதிநவீன ஏவுகணையுடனும் தாக்குதலிற்கு பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானத்துடனும் கடந்த மாதம் சான்டியாகோவிலிருந்து புறப்பட்டுள்ளது என சிஎன்என் தெரிவித்துள்ளது. புதிய ஏவுகணை ராடர்களின் கண்களில் மண்ணை தூவக்கூடியது எதிரிகளின் பாதுகாப்பு நிலைகளை தவிர்த்து செல்லக்கூடிய திறன் உடையது என அமெரிக்காவின் ஆயுததயாரிப்பு நிறுவனமான ராய்தியோன் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட புதிய ஏவுகணை 10…

    • 6 replies
    • 847 views
  12. அமெரிக்க பொருட்கள் மீது, சீனா வரிவிலக்கு. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 16 வகையான பொருட்களுக்கு சீனா வரிவிலக்கு அளித்துள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் நீடிக்கிறது. வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாத காரணத்தால், இருநாடுகளும் பரஸ்பரம் வரி விதித்து பதிலடி கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், வர்த்தகப் போர் தொடங்கியதில் இருந்து முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறால், பண்ணை விலங்குகளுக்கான மீன் உணவு, புற்றுநோய்க்கான மருந்து போன்ற 16 வகை பொருட்களுக்கு சீனா வரிவிலக்கு அளித்துள்ளது. இந்த வரிவிலக்கானது வரும் 17ஆம் திகதி அமலுக்கு வரும் என்றும், இது ஒரு ஆண்டுக்கு அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்…

  13. மியன்மாரில் உள்ள ஒட்டுமொத்த ரொஹிங்கிய முஸ்லிம்களின் கிராமங்களும் அழிக்கப்பட்டு அங்கு பொலிஸ் பாசறைகள், அரச கட்டடங்கள் மற்றும் அகதி முகாம்களாக மாற்றப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இது பற்றிய உண்மைகளை பி.பி.சி தொலைக்காட்சி கண்டறிந்துள்ளது. அரச சுற்றுப்பயணம் ஒன்றில் ரொஹிங்கிய குடியிருப்புகள் என செய்மதி படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்ட நான்கு இடங்களில் பாதுகாப்பு கட்டங்கள் அமைக்கப்பட்டிருப்பதை கண்டதாக பி.பி.சி குறிப்பிட்டுள்ளது. ரகினே மாநிலத்தின் கிராமங்களில் அந்தக் கட்டடங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறுவதை அதிகாரிகள் மறுத்துள்ளனர். 2017 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது 700,000க்கும் அதிகமான ரொஹிங்கியர்கள் மியன்மாரில் இருந்து தப்பிச் சென்றனர். இது ஒரு “பாடப்புத்தக…

    • 0 replies
    • 445 views
  14. வாஷிங்டன்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்போல்டனை நீக்கி அதிபர் டெனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார். ஈரான், வடகொரியா மற்றும் ஆப்கானிஸ்தான் உடனான வெளியுறவு கொள்கையில் சரியாக செய்யப்படவில்லை என நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525032

  15. காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு.. ராக்கெட் வீசி தலிபான் தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் ராக்கெட் வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வாக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் செப்டம்பர் 9 தீவிரவாதத் தாக்குதல் நடந்ததன் நினைவு நாளின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலால் பெரிய அளவில் பாதிப்பில்லை. காம்பவுண்டு வளாகத்தில் ராக்கெட் விழுந்து வெடித்தது. யாரும் இதில் காயமடையவில்லை.ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க தூதரக வளாகத்தில் பெரும் புகை சூழ்ந்தது. இதற்கு அருகில்தான் நேட்டோ அலுவலகம் உள்ளது. அங்கும் யாருக்கும் பாதிப்பில்லை. அமெரிக்கா - தலிபான் இடையில் நட…

  16. தென் ஆப்பிரிக்கா நாட்டின் பல்வேறு பகுதிகளில் நைஜீரியா, எத்தியோப்பியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்கள் சிறு கடைகள் முதல் பெரு நிறுவனங்கள் வரை வைத்து பல்வேறு தொழில்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தங்கள் நாட்டவர்களுக்கு கிடைக்கவேண்டிய தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை வெளிநாட்டை சார்ந்தவர்கள் அபகரித்துக் கொள்வதாகவும், உள்நாட்டினருக்கு போதுமான தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை என கடந்த சில நாட்களாக தென் ஆப்பிரிக்கா முழுவதும் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், உள்ளூர் மக்கள் குழுக்களாக இணைந்து வெளிநாட்டினர் நடத்திவரும் சிறு கடைகள் முதல் பல்பொருள் அங்காடிகள் வரையிலான அனைத்து வணிக நிறுவனங்களையும் குறிவைத்து தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். வெளிநாட்டவர்கள் …

  17. ஒருவர் மீது ஒருவர் மோதி விபத்து.. 31 பேர் பலி.. 200 பேர் காயம்.. ஈராக்கில் இஸ்லாமிய விழாவில் சோகம். ஈராக்கில் அஷுரா விழா எனப்படும் இஸ்லாமிய விழா ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் பலியாகி உள்ளனர். ஈராக்கில் கர்பாலா பகுதியில் எல்லா வருடமும் அஷுரா விழா கொண்டாடப்படுவது வழக்கம். முகமது நபியின் பேரன் முகமது ஹுசைன் மரணத்தை இந்த விழாவில் நினைவு கூறுவார்கள். இவரின் மரணம்தான் இசுலாமியர்களின் சன்னி, ஷியா பிரிவின் பிளவிற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.இந்த அஷுரா விழாவில் ஈராக்கின் கர்பாலா பகுதியில் உள்ள ஹுசைன் மசூதியை நோக்கி மக்கள் எல்லோரும் வேகமாக ஓடுவார்கள். இதை ''துவாய்ரிஜ் ஓட்டம்'' என்று அழைக்கிறார்கள். 7ம் நூற்றாண்டில் இஸ்லாமிய அதிகாரத்தை கைப்பற்றுவதற்…

  18. பிரான்சில் ஜூன் – ஜூலை மாதங்களில் வீசிய அனல் காற்றில் 1,435 பேர் உயிரிழந்தனர்… September 9, 2019 பிரான்சில் இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வீசிய அனல் காற்றில் 1,435 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் அன்யஸ் புசாங், தெரிவித்துள்ளார். உள்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனத் தெரிவித்த அமைச்சர் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். பிரான்சில் கடந்த ஜுன் மாதத்தில் இதுவரை காலம் இல்லாத அளவுக்கு 46 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. ஏனைய ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா , பெல்ஜியம், ஜெர்மனி, லக்சர்ம்பெர்க் மற்றும் நெதர்லாந்திலும் காலம் இல்லாத அளவுக்கு வ…

  19. 4,000 கார்களை காவிச்சென்ற கப்பல் கவிழ்ந்ததில் நால்வரை காணவில்லை! தென்கொரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்று அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்திற்கு அருகேயுள்ள கடல்பகுதியில் கவிழ்ந்துள்ளது. மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு சுமார் 4,000 ஹூன்டாய் கோல்விஸ், கியா ரகக் கார்களை ஏற்றிச்சென்ற குறித்த கப்பல் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. சம்பவம் இடம்பெற்ற போது கப்பலில் 24 பேர் இருந்துள்ளதாகவும், அதில் 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் 4 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமல் போன நால்வரும் இயந்திர அறையில் இருந்ததாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மீட்கப்பட்டவர்களில் 13 பேர் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர…

  20. அமெரிக்கா அதிக உயிரிழப்புக்களை சந்திக்க நேரிடும் தலிபான்கள் எச்சரிக்கை! தலிபான் போராளிகளுடனான பேச்சுவார்த்தையை இரத்து செய்துவிட்டதாக அமெரிக்க ஜனாபதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நிலையில், அமெரிக்கா அதிக உயிரிழப்புக்களை சந்திக்க நேரிடும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையைில் தலிபான்கள் பேச்சுவார்த்தையை இரத்துச் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தலிபான் இயக்கம் விமர்சனம் செய்து வருகின்றது. அத்தோடு ட்ரம்பின் இம்முடிவிற்கு அமெரிக்கா அதிகமான உயிரிழப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் , அமைதி, சொத்து இழப்புகள் அதிகரிக்கும் என தலிபான் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் தலிபான் பயங்கரவாத இயக்க…

  21. சீனாவின் பிடியில் இருந்து தங்களை விடுவிக்கும்படி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு ஹாங்காங் போராட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹாங்காங்கில் குற்றம் செய்பவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையம், விமான நிலையம், பல்கலைக் கழகம், தூதரகம் ஆகியவற்றின் முன், கருப்பு வெள்ளை முகமூடி, மஞ்சள் நிற ஆடை, குடை போராட்டம் உள்ளிட்ட பலவகை போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகின்றனர்.இதையடுத்து, மசோதாவை திரும்ப பெற்று கொள்வதாக ஹாங்காங் அரசு கடந்த வாரம் உறுதி அளித்தது. ஆனால் போராட்டக் குழுவினர், தற்போது பெரும் ஜன…

    • 2 replies
    • 365 views
  22. இந்திய தூதரத்தை முட்டைகளை வீசி தாக்கிய பாகிஸ்தானியர்கள்.. ஒன்றுபட்டு சுத்தம் செய்த இந்தியர்கள் லண்டனில் இந்திய தூதரகத்தின் முன் பாகிஸ்தானியர்கள் முட்டைகளை வீசி போராட்டம் நடத்திய நிலையில் அங்கு குவிந்த இந்தியர்கள் அதனை ஒற்றுமையை இணைந்து சுத்தம் செய்தனர். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் 5ம் தேதி நீக்கியது. அத்துடன் அம்மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானியர்கள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது இந்திய தேசிய கொடியை கிழித்து ஆவேச முழக்கம் எழுப்பினர். மேலும் இந்தியர்கள் மீது தாக…

  23. தலிபான்களுடன் மேற்கொள்ளப்படவிருந்த அமைதி உடன்படிக்கை ரத்து – டிரம்ப்: September 8, 2019 தலிபான் அமைப்பினருடன் மேற்கொள்ளப்படவிருந்த அமைதி உடன்படிக்கை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இன்று, ஞாயிறுக்கிழமை, கேம்ப் டேவிட்டில் தலிபான் தலைவர்களை டிரம்ப் சந்திக்க இருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு அமெரிக்க ராணுவ வீரர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றதனையடுத்து இவ்வாறு திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பை ரத்து செய்த டிரம்ப், அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்தும் விலகியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தற்போது சுமார் 14,000 அமெரிக்கப் படையினர் உள்ள நிலையில் தலிபான் அமைப்புடன் செய்துகொள்ளப்படவிருந்த ஒ…

  24. ENTERTAINMENT பொழுதுபோக்கு NEWS இத்தாலிய அழகுராணிப் போட்டியில் இலங்கை வம்சாவளிப் பெண் 30 வருடங்களுக்கு முன்னர் இத்தாலியில் குடியேறிய இலங்கைத் தம்பதிகைன் மகள் செவ்மி தாருகா பெர்ணாண்டோ, இத்தாலிய அழகுராணிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கிறார். அழகு கலாச்சாரக் கல்வியில் டிப்ளோமாவைப் பெற்றிருக்கும் 20 வயதுடைய தாருகா, ‘மொடல்’ ஆகப் பணிபுரிகிறார். அவர் வசிக்கும் வெனேற்றோ மாகாணத்தின் அழகுராணியாக முடிசூடப்பட்டிருந்த தாருகா நேற்றிரவு நடைபெற்ற இத்தாலிய அழகுராணிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கிறார். பிராந்தியங்களிலிருந்து பங்கு பற்றிய 187 பேரில் இருந்து தெரிவாகிப் பின்னர் நேற்றிரவு பங்கு பற்றிய 80 பேர்களில் இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.