உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26591 topics in this forum
-
13 APR, 2025 | 12:14 PM அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மின்னணு சாதனங்களுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்களித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 02 ஆம் திகதி இலங்கை உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு வரிகளை அறிவித்தார். இலங்கைப் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதேவேளை, அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு சீனாவும் பரஸ்பரம் வரி விதிப்பு மேற்கொண்டது. இதனால் சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் கைப்பேசிகள், கணினிகள் மற்றும் வேறு சில மின்னணு சாதனங்களுக்கு சீன இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் 125 சதவீத வரிகள் உள்ளிட்ட பரஸ்பர வரிகளிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் விலக்கு அளித்துள்ளது. இந்நிலைய…
-
- 1 reply
- 229 views
- 1 follower
-
-
சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு! சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 104 சதவீத வரிகள் நள்ளிரவுக்குப் பின்னர் விரைவில் அமலுக்கு வரும் என்று அமெரிக்கா செவ்வாயன்று (08) கூறியது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் கடுமையான வரிகளால் இலக்காகக் கொண்ட பிற வர்த்தக பங்காளிகளுடன் விரைவாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்க நகர்வுகளை முன்னெடுக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதனிடையே, கடந்த வாரம் ட்ரம்பின் கட்டண அறிவிப்புக்குப் பின்னர், செவ்வாய்க்கிழமை அமெரிக்க பங்குகள் தொடர்ந்து நான்காவது வர்த்தக நாளாக சரிந்தன. கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் முதல் முறையாக S&P உலகளாவிய மதிப்பீடு அளவுகள் 5,000 க்குக் கீழே முடிந்தது. பெப்ரவரி 19 அன்று அத…
-
-
- 17 replies
- 730 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,2024 இல் தானியங்கி கேமராவால் காட்டில் எடுக்கப்பட்ட படம் கட்டுரை தகவல் எழுதியவர், மார்கரிட்டா ரோட்ரிக்ஸ் பதவி, பிபிசி முண்டோ 13 ஏப்ரல் 2025, 08:55 GMT பழங்குடி மக்களிடம் பேசாமலும், அவர்களை நேரில் பார்க்காமலும் அவர்களை பற்றி அறிந்துக்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில், அமேசானில் இருக்கும் அந்த பழங்குடியின மக்களைத் தொடர்புகொள்வது சாத்தியமல்ல. பிரேசிலின் கிழக்குப் பகுதியில் உள்ள ரொண்டோனியா மாகாணத்தில் பொலிவியா எல்லைக்கு அருகே வாழும் ஒரு பழங்குடி குழுவின் படத்தைப் பெறுவதற்காக, தானியங்கி முறையில் செயல்படும் கேமராக்களை நிபுணர்கள் பயன்படுத்தினர். அந்த பழங்குடி இன மக்கள் மாசகோ என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால், ஆராய்ச்சியாளர்க…
-
-
- 1 reply
- 442 views
- 1 follower
-
-
வடகொரியாவை அணு ஆயுதங்களற்ற நாடாக்கவிருப்பதாக அமெரிக்காவும் அதன் ஆசிய கூட்டாளிகளும் கூறுவது அந்த நாடுகளின் பகல் கனவு என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். அடிக்கடி ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வரும் கொரிய நாடுகளில் வடகொரியா முன்னிலையில் உள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறியும் வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியா இந்த அளவிற்கு ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபடுவதற்கு மிக முக்கியமான காரணமே, தென்கொரிய நாடானது அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு…
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
பாலஸ்தீன நாட்டை பிரான்ஸ் அங்கீகரிக்கலாம்: அதிபர் இமானுவெல் மெக்ரோன் தகவல் பாரிஸ்: பாலஸ்தீன நாட்டை பிரான்ஸ் அங்கீகரிக்கலாம் என்று பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவெல் மெக்ரோன் நம்பிக்கை தெரிவித்தார் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறும் அனைத்துலக கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பிரான்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிடும் என்று அவர் கூறினார். இஸ்ரேல் - பாலஸ்தீன் விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வு செய்யப்படும் என்று பிரான்ஸ் நம்பிக்கை கொண்டுள்ளது சவூதி அரேபியாவுடன் பிரான்ஸ் இந்த கூட்டத்தை நடத்தும் வேளையில் அனைத்துலக சமூகத்தின் பார்வைகளைக் கொண்டு பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க முனைப்பு காட்டுவோம் என்று மெக்ரோன் சொன்னார் ஐநாவில் உறுப்பியம் கொண்ட 193 நாடுகளில் 147 நாடுகள் பாலஸ்தீன நாட்டை அங…
-
- 3 replies
- 382 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 08 APR, 2025 | 11:15 AM தலைமறைவாக உள்ள இந்திய மதகுரு ஒருவர் தனக்கென ஒரு நாட்டை உருவாக்க முயல்கின்றார். அவரை பின்பற்றும் பலர் இலத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளில் புதிதாக தோன்றியுள்ளதுடன், ஈக்குவடோர் பராகுவே பொலிவியாவில் நிலங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைககளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வருடம் பொலிவியா அமேசனில் உள்ள பௌர் பழங்குடி இன மக்களின் பிரதிஒருவர் அவர்களின் பரந்தமழைக்காடுகளில் 60,000 ஹெக்டரை குத்தகைக்கு எடுக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். கயுபா பழங்குடி இனபிரதிநியொருவரும் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். வருடாந்தம் 55800 ஹெக்டயரை குத்தகைக்கு எடுத்தார். இந்த ஒப்பந்தங்கள் மூலம் இலாபம் சம்பாதித்த நாடு ஐக்கிய கைலாசா. இது பழங்குடி இனம…
-
-
- 2 replies
- 377 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 11 APR, 2025 | 03:26 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய வரிகளை 90 நாட்களிற்கு ஒத்திவைப்பதாக அறிவிப்பதற்கு முன்னர் தனது ஆதரவாளர்களை பங்குகளை கொள்வனவு செய்யுமாறு தூண்டியதன் மூலம் சந்தையை தனக்கு ஆதரவானவர்களிற்கு சாதகமான விதத்தில் பயன்படுத்தினாரா? என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என அமெரிக்காவின் பல செனெட்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். டிரம்ப் தனது வரிக்கொள்கையில் மாற்றங்களை அறிவிக்கப்போகின்றார் என்பது அவரது நிர்வாகத்தை சேர்ந்த யாருக்கு முன்கூட்டியே தெரியும் என கேள்வி எழுப்பியுள்ள கலிபோர்னியாவின் ஜனநாயக கட்சியின் செனெட்டர் அடம் ஷிப் யாராவது பங்குகளை கொள்வனவு செய்து விற்று இலாபம் சம்பாதித்தார்களா என கேள்வி எழுப்பியுள்ளார். இ…
-
- 1 reply
- 266 views
- 1 follower
-
-
டொமினிகன் குடியரசில் இரவு விடுதி ஒன்றில் கூரை இடிந்து வீழந்து ஏற்பட்ட 184 பேர் உயிரிழப்பு! டொமினிகன் குடியரசின் சாண்டோ டொமிங்கோவில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (08) கூரை இடிந்து வீழந்ததில் குறைந்தது 184 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த பேரழிவு தரும் இந்த அனர்த்தத்தில் குறைந்தது நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மோப்ப நாய்களின் உதவியுடன் 300க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தின் போது குறித்த இரவு விடுத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், விபத்தில் 500 முதல்…
-
- 4 replies
- 309 views
- 1 follower
-
-
நியூயோர்க்கின் ஹட்சன் ஆற்றில் ஹெலிகொப்டர் வீழ்ந்து விபத்து! நியூயோர்க்கில் உள்ள ஹட்சன் ஆற்றில் சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்தை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹெலிகொப்டரில் பயணித்த ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஸ்பெயினைச் சேர்ந்தது என்றும் ஆறாவது நபர் விமானி என்றும் நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் வியாழக்கிழமை (10) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1428323
-
- 2 replies
- 260 views
- 1 follower
-
-
ஜுவாலாபுரம்: ஆதிகால மனிதன் நடமாடிய அதிசய இடம், சான்றாக விளங்கும் சாம்பல் ரூ.1000க்கு விற்கப்படும் அவலம் படக்குறிப்பு,74,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் இந்தியாவில் சுற்றித் திரிந்ததாக ஜுவாலாபுரம் ஒரு கருதுகோளை முன்வைக்கிறது கட்டுரை தகவல் எழுதியவர், பல்லா சதீஷ் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆந்திராவில் ஆதிகால மனிதன் நடமாடிய அதிசய இடம் உள்ளது. இந்தியாவில் மனித கால் தடம் எப்போது பதிந்தது என்பதற்கான ஆதாரம், கண்டங்களைத் தாண்டி மனித இனம் பயணித்ததற்கான உறுதியான சான்று, நந்தியால் மாவட்டத்தின் சாம்பல்களில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வரலாற்றுத் தளங்கள் குறித்து அறியாதவர்கள், அந்த சாம்பலை ஒரு டன் ஆயிரம் ரூபாய் என விற்று வருகின்றனர். மனித வரலாற்றுக்கா…
-
- 0 replies
- 482 views
- 1 follower
-
-
10 APR, 2025 | 01:39 PM உக்ரைனிற்கு எதிராக 155 சீனர்கள் ரஸ்யாவுடன் இணைந்து போரிடுகின்றனர் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஸ்யாவுடன் இணைந்து போரிடும் சீனர்களின் கடவுச்சீட்டு விபரங்கள் பெயர்கள் என்னிடம் உள்ளன என தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி சீனாவிற்கு இவர்கள் போரிடுவது நன்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார். சீனா விடயம் பாரதூரமானது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சீனா இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளதுடன், இருவது கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. சீனா அரசாங்கம் தனது பிரஜைகள் போர்க்களங்களை தவிர்க்கவேண்டும், எந்த வித ஆயுதமோதலிலும் இணைந்துகொள்ளக்கூடாது என வேண்டுகோள…
-
- 0 replies
- 274 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 24 MAR, 2025 | 01:15 PM ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக கைவிடவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்வோல்ட்ஸ் தெரிவித்துள்ளார். உலகம் பார்க்கக்கூடிய விதத்தில் ஈரான் தனது திட்டத்தை கைவிடவேண்டும் என தெரிவித்துள்ள அவர் அணுவாயுதங்களை உருவாக்கவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து ஈரான் விலகுவதற்கான தருணம் இது, அவர்கள் அணு ஆயுத திட்டங்களை தொடர்வதற்கு அனுமதிக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய எந்த தாக்குதலிற்கும் ஈரானே காரணம் என கருதப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையிலேயே வெள்ளை மாளிகையின் த…
-
- 4 replies
- 391 views
- 1 follower
-
-
பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில், நூற்றுக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை, ராணுவம் சேமித்து வைத்துள்ள வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில், அணு ஆயுத உற்பத்தியை ஈரான் அதிகரித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப், அவர்களுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அணு ஆயுத உற்பத்தி பற்றிய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வரும் ஈரான், ஒப்பந்தத்தை புதுப்பிக்க முயற்சிகள் எடுத்து வருவதாகக் கூறியிருந்தது. இந்த நிலையில், ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுக்கும் விதமாக புதிய ஒப்பந்தத்தைக் கொண்ட…
-
- 5 replies
- 398 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ALAMY கட்டுரை தகவல் எழுதியவர், மைல்ஸ் பர்க் பதவி, 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 1966ஆம் ஆண்டில், தொலைதூர ஸ்பானிய கிராமமான பலோமரேஸ், "தெளிவான நீல வானத்தில் இருந்து, அணுகுண்டுகள் அதன் மீது விழுவதை" கண்டது. இந்தப் பயங்கரமான விபத்து நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா ஒரு ஹைட்ரஜன் குண்டை இழந்தபோது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய பிபிசி நிருபர் கிறிஸ் ப்ராஷர் அங்கு சென்றார். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, இதே வாரத்தில், 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதியன்று அமெரிக்க ராணுவம் 80 நாட்களாக தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்த, காணாமல் போன அணு ஆயுதம் இறுதியாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட குண்டின் சக்தியைவிட 100 மடங்கு அதிக சக்தி கொண்டது அந்த அணுகுண…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
ஹொலிவூட் திரைப்படங்களுக்குச் சீனாவில் தடை விதிக்கத் தீர்மானம்! சீன அரசு ஹொலிவூட் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 104% வரி விதிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் வணிகத்தில் திரைப்படத் துறை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக அமெரிக்காவில் எடுக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்கள், சீனாவில் அதிக அளவிலான வசூலைக் குவித்து வருகின்றன. இதன்காரணமாக ஏராளமான ஹொலிவூட் திரைப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாகத் திரையரங்குகளில்…
-
- 0 replies
- 203 views
-
-
Published By: RAJEEBAN 08 APR, 2025 | 04:23 PM இஸ்ரேலிய இராணுவத்திற்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் செயற்கை தொழில்நுட்பத்தினை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்காக இரண்டு பணியாளர்களை அந்த நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியுள்ளதாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பொன்று தெரிவித்துள்ளது. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் 50 வது வருடகொண்டாட்டத்தின் போது அந்த நிறுவனம் இஸ்ரேலிய இராணுவத்திற்கு செயற்கை தொழில்நுட்பத்தினை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரண்டுபெண் ஊழியர்களையே அந்த நிறுவனம் வேலை நீக்கம் செய்துள்ளது. ஒருவர், புகழ்பெறுவதற்காகவும், இந்த பெரும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வை அதிகபட்சமாக சீர்குலைப்பதற்காகவும் தவறான நடத்தையில்…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
கொங்கோவில் கனமழை; 33 பேர் உயிரிழப்பு. கொங்கோவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இக் கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டில் 13 மாவட்டகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், இதனால், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கினால் இது வரை 33 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடம் மீட்புக்குழுவினர், இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு ம…
-
- 0 replies
- 288 views
-
-
சீனா மீது புதிய 50% வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்! உலக சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருவதால், சீனா தனது 34% எதிர் வரியை திரும்பப் பெறாவிட்டால், அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிகமாக 50% வரி விதிக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார். கடந்த வாரம் ட்ரம்ப், சீன இறக்குமதிகள் மீது 34% வரி விதிக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, பீஜிங் ஞாயிற்றுக்கிழமை பதிலடி கொடுத்தது. அதன்படி, இது அமெரிக்காவின் கிட்டத்தட்ட அனைத்து வர்த்தக பங்காளிகள் மீதும் குறைந்தபட்சம் 10% வரியை நிர்ணயித்தது. திங்களன்று (07) ஒரு சமூக ஊடகப் பதிவில், ட்ரம்ப் சீனாவிற்கு அதன் எதிர் நடவடிக்கையை கைவிட அல்லது 50% வரியை எதிர்கொள்ள செவ்வாய்க்கிழமை (08) வரை அவகா…
-
- 3 replies
- 395 views
- 1 follower
-
-
கனடா அரசியலில் கலக்கும் குஜராத் வம்சாவளியினர்: 4 பேர் வேட்பாளர்களாக போட்டி! கனடாவின் பாராளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் பஞ்சாபிகளை பின்தள்ளி குஜராத் வம்சாவளியினர் வேட்பாளர்களாக களத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளனர். கனடாவில் 2025ம் ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், பிரதமராக பதவியில் இருந்த ஜெஸ்டின் ட்ரூடோவுக்கு ஆளும் லிபரல் கட்சியில் கடும் எதிர்ப்பு எழவே அரசியல் காட்சிகள் மாறின. தனது பதவியை ஜெஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்துவிட பெரும்பான்மை ஆதரவுடன் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைத்த அவர், ஏப்ரல் 28ல் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்…
-
- 0 replies
- 231 views
-
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே (Aceh) மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கடலில் சுனாமி அலைகள் எதுவும் எழவில்லை என்று இந்தோனேஷியாவின் நாட்டின் வானிலை மற்றும் புவியில் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில், நிலநடுக்கத்தின் அளவு 6.2 ஆக இருந்ததாக நிறுவனம் அறிவித்தது, பின்னர் அதை கீழ்நோக்கி திருத்தியது. இந்த நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை ஜகார்த்தா நேரப்படி அதிகாலை 2:48 மணிக்கு ஏற்பட்டது. இதன் மையம் சிமியூலு ரீஜென்சியில் உள்ள சினாபாங் நகரிலிருந்து தென்கிழக்கே 62 கி.மீ தொலைவில், கடற்பரப்பிலிருந்து 30 கி.மீ ஆழத்தில் அமைந்துள்ளது. நிலநடுக்கம் பெரிய அலைகளை உருவாக்க வாய்ப்பில்லை என்ப…
-
- 0 replies
- 233 views
-
-
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை அர்த்தமற்றது – ஈரான்! இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்காவுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை “அர்த்தமற்றது” என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) விவரித்துள்ளார். கடந்த மாதம் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனிக்கு அனுப்பிய கடிதத்தில், தெஹ்ரான் அணு ஆயுதங்களை வாங்குவதைத் தடுக்கும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று நம்புவதாக ட்ரம்ப் கூறியதை அடுத்து ஈரான் வெளிவிகார அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. கடந்த வாரம் தனது கருத்தை மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப், ஈரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து நே…
-
- 1 reply
- 248 views
-
-
07 APR, 2025 | 10:39 AM சிட்னிக்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவினை ஜோர்தானிய பிரஜையொருவர் திறக்கமுயன்றதால் விமானத்தில் குழப்பநிலை ஏற்பட்டமை குறித்து ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. ஏஎவ்பி இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது. சனிக்கிழமை சிட்னியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவை ஜோர்தானிய பிரஜையொருவர் திறக்க முயன்றார், ஏனைய பயணிகள் அவரை கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்தினர். விமானம் தரையிறங்கியதும் விமான பணியாளர்கள் பொலிஸாரின் உதவியை நாடினர். ஜோர்தானை சேர்ந்த 45 வயதுடைய நபர் விமானத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியமை, விமான பணியாளரை தாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கின்றார். எயர்ஏசியா விமானத்தின் பின்பக்கத…
-
-
- 4 replies
- 404 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 07 APR, 2025 | 03:26 PM காசாவில் இரண்டு மருத்துவமனைகளிற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் செய்தியாளர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள மருத்துவர்கள் ஆறு செய்தியாளர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த கூடாரங்களை இலக்குவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. காசாவின் தென்பகுதியில் உள்ள கான்யூனிசின் நாசெர் மருத்துவமனைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக அந்த கூடாரங்கள் தீப்பற்றி எரிந்தன. இதன் போது பாலஸ்தீன் டுடே தொலைக்காட்சியின் உள்ளுர் செய்தியாளரான யூசெவ் அல் பஹாவி கொல்லப்பட்டார் . வ…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை! சவுதி அரேபியா அரசாங்கம் புதிய பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு சில விசாக்கள் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. ஹஜ் யாத்திரை காரணமாக ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல ஊடக அறிக்கைகளின்படி, ஹஜ் யாத்திரை முடிவடையவுள்ள ஜூன் நடுப்பகுதி வரை இந்தத் தடை அமுலில் இருக்கும். புதிய வழிகாட்டுதல்களின் கீழ், உம்ரா விசாக்கள், வணிக வருகை விசாக்கள் மற்றும் குடும்ப வருகை விசாக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும் இந்தியா, பாகிஸ்தான் மற்று…
-
- 0 replies
- 292 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீனா வரி விதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால், மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ள அமெரிக்கப் பங்குச் சந்தைகள் கட்டுரை தகவல் எழுதியவர், நடாலி ஷெர்மன் பதவி, பிபிசி, நியூயார்க் 5 ஏப்ரல் 2025, 12:46 GMT அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு சீனா பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தை தீவிரமாக சரிந்தது. இது நீடித்த வர்த்தகப் போர் நடைபெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி, உலக பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயத்தையும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் மூன்று முக்கிய பங்குச்சந்தை குறியீடுகளும் 5 சதவிகிதத்துக்கும் மேலாக சரிந்தன. இதில் எஸ்&பி 500 கிட்டத்தட்ட 6 சதவிகிதம் சரிந்தது. இது …
-
- 3 replies
- 417 views
- 1 follower
-