உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
ஏவுகணை தயாரிப்புத் திட்டத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது – ஈரான் ஈரானின் ஏவுகணைத் தயாரிப்புத் திட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று அந்நாட்டு ஜனாதிபதி ஹாசன் ரௌஹானி கூறியுள்ளார். ஈரானியப் புரட்சியின் 40ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். பகைமை பாராட்டும் நாடுகளின் நெருக்குதலுக்கு அடிபணியாமல், ஈரான் தொடர்ந்து அதன் இராணுவ வலிமையை விரிவுபடுத்துவதில் உறுதியாய் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அமெரிக்கா சென்ற ஆண்டு அணுச்சக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்ட பின்னர், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது மீண்டும் தடை விதித்ததற்கு ஈரானிய ஜனாதிபதி வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்…
-
- 0 replies
- 427 views
-
-
சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான வான்வழி தாக்குதலில் 70 பேர் பலி சிரியா நாட்டில் முன்னர் ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ்.பயங்கரவாதிகள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அடித்து விரட்டப்பட்டனர். எஞ்சியுள்ள சிலர் யூப்ரட்டஸ் நதிக்கரையின் ஓரத்தின் உள்ள மறைவிடங்களில் பதுங்கி வாழ்கின்றனர். அவ்வகையில், டேய்ர் அல் சவுர் மாகாணத்தில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்காக பாகோவ்ஸ் நகரம் உள்ளிட்ட இடங்களில் வசித்துவந்த சுமார் 20 ஆயிரம் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், இப்பகுதியில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான உள்நாட்டு விமானப்படை இன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின்போது அங்குள்ள தற்காலிக முகாமின் மீது குண்டுகள் விழுந்ததில் பொ…
-
- 0 replies
- 322 views
-
-
சவுதி இளவரசர் பாகிஸ்தானில் இரண்டு நாள் சுற்றுப்பயணம்- 5 டிரக்குகளில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் சவுதி நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இஸ்லாமாபாத்திற்கு வர இருக்கிறார். இந்த வார இறுதிக்குள் சவுதி இளவரசர் பாகிஸ்தான் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களினால் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து 5 டிரக்குகளில் இளவரசரின் பயிற்சி சாதனங்கள், மரப்பொருட்கள், நாற்காலி மற்றும் அவர் பயன்படுத்தும் பொருட்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் நேற்று இஸ்லாமாபாத்தை அடைந்தன. சவுதி இளவரசரின் பாதுகாப்பு குழுவினர் மற்றும் சவுதி பத்தி…
-
- 0 replies
- 312 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்க அரசாங்கத்திற்கு எல்லைச்சுவர் தொடர்பாக நிதியுதவி அளிப்பது மற்றும் மற்றொரு நாடு தழுவிய அரசுப்பணிகள் முடக்கத்தை தடுக்கவும் ஜனநாயக கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளனர். திங்கள்கிழமை இரவில் கேபிடல் ஹில்லில் நடந்த ஒரு சந்திப்பில் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக அரசு வழக்கறிஞர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். மத்திய நிதி ஆதரவு ஒப்பந்தம் காலாவதியாகின்ற, வரும் வெள்ளிக்கிழமைக்குள் சட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்ற இக்கட்டான நிலை இருந்த வேளையில் தற்போது இந்த முன்னேற்றம் ஏற்பட்ட…
-
- 0 replies
- 371 views
-
-
கஷோக்கியின் படுகொலையை நாங்களே விசாரணை செய்வோம்: சவுதி அரேபியா ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தவேண்டிய அவசியமில்லை எனவும் சவுதியின் திறமையான சட்ட அமைப்புமுறையால் இந்த விசாரணையை கையாள முடியுமெனவும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அடெல் அல்-ஜுபெய்ர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி இஸ்தான்புல்லில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கஷோக்கி கொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்ட அடெல் அல்-ஜுபெய்ர், அந்த படுகொலைக்கு சவுதி அரசுக்கும் தொடர்புள்ளது என்பதை மறுப்பு தெரிவித்தார். சவுதி இளவரசர் மொஹம்மட் பின் சல்மானின் ஒப்புதல் இல்லாமல் சவுதி அதிகாரிகள் இப்படுகொலையை முன்னெடுத்திருக்க வாய்ப்பில்லையென அமெரிக…
-
- 0 replies
- 517 views
-
-
தாய்லாந்தில் இளவரசி பிரதமர் பதவிக்கு போட்டி February 9, 2019 இராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்நாட்டின் இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது தாய்லாந்தில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் ஆட்சி கவிழ்க்கப்படுவதும், ராணுவம் அரியணை ஏறுவதும் வழமையாக நடைபெற்று வருகின்ற நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. பிரதமரை பதவி விலகக்கோரி நடைபெற்ற போராட்டங்களில் பெரும் வன்முறையும் வெடித்திருந்தது. இந்தநிலையில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட…
-
- 1 reply
- 648 views
-
-
EUவில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த, பிரித்தானிய மக்கள் விருப்பம்… February 11, 2019 ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் திடீர் திருப்பமாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை தாமதப்படுத்துவதற்கு பிரித்தானிய மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது என பிரித்தானியா முடிவெடுத்தநிலையில் அப்போது இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மையான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என வாக்களித்தனர். அதற்கேற்ப ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா முறைப்படி விலகுவதற்கான நடவடிக்கைய…
-
- 6 replies
- 1.2k views
-
-
இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் சவுதி அரேபியாவில் பல பிரிவுகள் உள்ளன. அவற்றுள் சன்னி மற்றும் ஷியா பிரிவு ஆகியவை முக்கியமானது. இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை சன்னிதான் மிகப்பெரும் பிரிவு. முகம்மது நபியின் வழிமுறையைப் பின்பற்றும் மக்கள் இந்தப் பிரிவைக் கடைப்பிடிப்பார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக உள்ளவர்களே ஷியா பிரிவினர். இவர்கள் முகமது நபியின் மருமகன்தான் அடுத்த வாரிசு என நம்புபவர்கள். அரேபியாவில் உள்ள அதிகமான மக்கள் ஷியா அமைப்பைச் சேர்ந்தவர்கள். கடந்த 7-ம் தேதி சவுதி அரேபியாவின், மதினா நகரில் உள்ள நபிகள் நாயகம் மசூதிக்கு ஸகாரியா அல் ஜபிர் என்ற 6 வயதுச் சிறுவன் தன் தாயுடன் சென்றுள்ளார். இது சன்னி அமைப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழுகை முடித்து சிறுவனும் தா…
-
- 0 replies
- 807 views
-
-
ஐ.எஸ் பயங்கரவாதிகளை முற்றாக ஒழிக்க அமெரிக்கா திட்டம் உலகையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தவர்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகள். அமெரிக்க நகரங்களில் விமானங்களை மோதி தாக்குதல்களை நடத்தி உலகையே பதற வைத்த அல்கொய்தா பயங்கரவாதிகளை விட ஐ.எஸ். பயங்கரவாதிகள் மோசமானவர்கள் என்று அமெரிக்கா தெரிவித்தது. 2ஆண்டுகளுக்கு முன்னர் சிரியா, ஈராக் நாடுகளின் முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். அவர்களை ஒழித்துக்கட்டுவது என்பது உள்நாட்டுப்படைகளுக்கு கடினமான காரியம் என்பதை அமெரிக்கா உணர்ந்தது. இதனால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் இவ்விரு நாடுகளிலும் களம் இறங்கின. உள்நாட்டுப்படைகளுட…
-
- 0 replies
- 678 views
-
-
சாரதி அனுமதி பத்திரத்தை மீளக்கையளித்தார் கோமகன் பிலிப்! கோமகன் பிலிப் பயணித்த கார் அண்மையில் விபத்துக்குள்ளாகியிருந்த நிலையில், அவர் தனது சாரதி அனுமதி பத்திரத்தை மீளக்கையளித்துள்ளார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான கோமகன் பிலிப் (97), ஓட்டிச் சென்ற கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இளவரசர் பிலிப் காயமின்றி உயிர் தப்பியபோதும், விபத்தில் சிக்கிய மற்றொரு காரை ஓட்டிச்சென்ற பெண்ணின் மணிக்கட்டு உடைந்தது. அவரது தோழியும் காயமடைந்தார். மணிக்கட்டு உடைந்த அந்த பெண், விபத்து தொடர்பாக கோமகன் பிலிப் தன்னிடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை என வேதனை தெரிவித்ததோடு, கோமகன் பிலிப் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் விசா…
-
- 0 replies
- 669 views
-
-
படத்தின் காப்புரிமை AFP Image caption சிரியாவின் கடைசி ஐ.எஸ் பகுதியில் இருந்து வெளியேறும் குடும்பம். சிரியாவில் இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பகுதிகளில், ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், இராக் எல்லை அருகே கடுமையான எதிர்த் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ஆதரவு பெற்ற படைகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மணி நேரமாக நடந்து வரும் சண்டையில், இஸ்லாமிய அரசின் நிலைகள் மீது அமெரிக்கா தலைமையிலான படைகள் வான் மற்றும் தரை வழியாகத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. சிரியாவின் கிழக்கு மாகாணத்தில் …
-
- 0 replies
- 853 views
-
-
மனிதாபிமான உதவிகள் நிறுத்தம் – 14 சிறுவர்கள் உயிரிழப்பு மனிதாபிமான உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளமையினால் வெனிசுவேலாவில் இதுவரை 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெனிசுவேலாவிற்கு சர்வதேசத்தின் உதவி தேவையில்லை என தெரிவித்து, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ எல்லைகளை மூடியுள்ளார். இதனால் அங்குள்ள மக்கள் உணவு , நீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். பட்டிணியால் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பார்சிலோனாவிலுள்ள வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோய் தாக்கங்களுக்குட்பட்டுள்ள மக்களுக்கான மர…
-
- 0 replies
- 661 views
-
-
படத்தின் காப்புரிமை Eric Lafforgue/Art in All of Us Image caption எத்தியோப்பியாவில் 2016இல் நடந்த விருத்த சேதன சடங்கு ஒன்றின்போது எடுக்கப்பட்ட படம். தங்கள் ஆண்குறியின் நுனித்தோலை ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அகற்றியுள்ளார்களா இல்லையா என்று சோதனை செய்யப்பட வேண்டும் என்று தான்சானியாவில் உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். ஆண்குறியின் நுனித் தோல் நீக்கப்பட்டால் (விருத்த சேதனம்) எச்.ஐ.வி நோய்த்தொற்று பரவுவது குறையும். ஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்குவது எச்.ஐ.வி பரவும் வாய்ப்பை சுமார் 60% அளவுக்கு…
-
- 0 replies
- 1.2k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images சௌதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணம் குறித்து விசாரிக்கும், துருக்கியின் திறனை சௌதி அரேபியா "மிகவும் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக" ஐநா வல்லுநர் ஒருவர் கூறியிருக்கிறார். ஐமால் கஷோக்ஜி தூதரகத்திற்குள் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற 13 நாட்களுக்கு பிறகுதான் அங்கு சென்று விசாரிக்க துருக்கிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி, கசோக்ஜி சென்றபோது அவர் கொலை செய்யப்பட்டார். …
-
- 0 replies
- 972 views
-
-
ஐஎஸ் அமைப்பின் தலைவரை கொலை செய்வதற்கான முயற்சி தோல்வி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி அவரது அமைப்பை சேர்ந்தவர்கள்ட கொலை செய்வதற்கு மேற்கொண்ட முயற்சியிலிருந்து அவர் உயிர் தப்பியுள்ளார் கார்டியன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அல்பக்தாதி சிரியாவின் கிழக்கில் உள்ள பகுதியொன்றில் நடமாடுகின்றார் என புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ள என குறிப்பிட்டுள்ள கார்டியன் இந்தபகுதியில் செயற்படும் ஐஎஸ் அமைப்பின் வெளிநாட்டு போராளிகள் சிலர் அமைப்பின் தலைவரிற்கு எதிராக சதிபுரட்சியில் ஈடுபட்டனர் என புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது ஜனவரி 10 திகதி யூப்பிரட்டிஸ் ஆற்றின் அருகில் உள்ள ஹஜின் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளத…
-
- 0 replies
- 540 views
-
-
ஏமனுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை February 8, 2019 உள்நாட்டுப் போர் நடைபெறும் ஏமனுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச்சபை கோரியுள்ளது. இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கையில் உள்நாட்டுப் போர் நடைபெறும் ஏமனில் சண்டையிடும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரித்தானியாவும் அமெரிக்காவும் நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இங்கு நினைத்துப்பார்க்க முடியாத இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர் என்பதுடன் இது அந்த நாட்டின் மக்கள் தொகைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும் ஷியா …
-
- 0 replies
- 445 views
-
-
காணாமல் போயிருந்த சலாவின் சடலம் மீட்பு February 8, 2019 ஆர்ஜன்ரினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சலா பயணித்த விமானம் காணாமல் போயிருந்த நிலையில் தற்போது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடி வந்த இவரைஇ வேல்ஸ் நாட்டின் கார்டிப் கழக அணி அண்மையில் வாங்கியிருந்த கடந்த ஜனவரி 21ம்திகதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக கார்டிப் சென்சு விட்டு தனியார் விமானம் ஒன்றில் பிரான்சுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது சானல் தீவுகளுக்கு அருகே விமானத்துடன் சேர்ந்து காணாமல் போயிருந்தார். விமானத்தில் பயணம் செய்த சலா மற்றும் விமானி குறித்து தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தநி…
-
- 0 replies
- 448 views
-
-
ஜமால் கஷோக்கி கொலை விவகாரம் : முதல்கட்ட ஆய்வறிக்கை! சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலை பற்றி விசாரிக்கும், துருக்கியின் திறனை சவுதி அரேபியா மிக குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐமால் கஷோக்ஜி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்குள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்ற 13 நாட்களுக்கு பிறகே அங்கு சென்று விசாரிப்பதற்கு துருக்கிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த வருடம் ஒக்டோபர் 2 ஆம் திகதி, கஷோக்கி சென்றபோது அவர் படுகொலை செய்யப்பட்டார். சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சிக்கும் முக்கிய ஊடகவியலாளராக அவர் கருதப்பட்டார். இவ்…
-
- 0 replies
- 414 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption அதிபரின் உரை எல்லோரையும் கட்டிப்போடவில்லை செவ்வாய்க்கிழமையன்று அதிபர் டிரம்ப் ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையாற்றும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா மற்றும் அதிபர் டிரம்பின் அழைப்பில் பேரில் அழைக்கப்பட்டிருந்த 11 வயது சிறுவன், அதிபர் உரையாற்றும் நிகழ்வில் கலந்து கொண்டபோது தூங்கிவிட்டார். அந்த 11 வயது சிறுவனின் பெயர் ஜோஷ்வா டிரம்ப். அதிபர் டொனால்டு டிரம்புக்கும் இந்த சிறுவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் ஜோஷ்வாவுக்கு கடைசி பெயராக டிரம்ப் இருப்பதால் …
-
- 1 reply
- 610 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்காவுடன் தாலிபன்கள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தாலிபன் சார்பாக இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட குழுவை வழிநடத்திய தாலிபன் அதிகாரியை பிபிசி நேர்காணல் கண்டது. அந்த நேர்காணலில் அவர், ஆயுத பலம் மூலம் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றும் நோக்கம் தாலிபன்களுக்கு இல்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார். ஷெர் முகம்மது அப்பாஸ்தான் தாலிபன் குழுவை வழிநடத்தியவர். Image caption ஷெர் முகம்மது அப்பாஸ் …
-
- 0 replies
- 648 views
-
-
நெதர்லாந்தில் மர்மமான முறையில் 20,000 கடல் பறவைகள் உயிரிழப்பு! நெதர்லாந்து கடற்கரைப் பகுதிகளில் மர்மமான வகையில் சுமார் 20 ஆயிரம் வட துருவ கடற்பறவையில் உயிரிழந்துள்ளமை தொடர்பாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். guillemot எனப்படும் கறுப்பு மற்றும் வெண்ணிற மேற்தோலைக் கொண்ட வடதுருவ பறவைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பறவைகள் அனைத்தும் உடல் மெலிந்த நிலையில் இருந்ததுடன், அவை ஏதேனும் நோய் காரணியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அச்சம் வௌியிடப்பட்டுள்ளது. அண்மையில் எம்.எஸ்.சி. ஸொயி கொள்கலன் கப்பலில் இருந்து கசிந்த இரசாயனப் பொருட்கள் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஒரு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடலில் ஏற்பட்ட புயல் பாத…
-
- 1 reply
- 459 views
-
-
லண்டனில் காரல்மார்க்ஸின் கல்லறை சேதப்படுத்தப்பட்டுள்ளது February 6, 2019 லண்டனில் நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வந்த தத்துவமேதை காரல்மார்க்ஸ் கல்லறையை இனந்தெரியாதோர் சேதப்படுத்தியுள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த புரட்சிகர தத்துவமேதை காரல் மார்க்ஸின் கருத்துக்கள் கம்யூனிசத்தை அடிப்படையாக கொண்டவை. இவர் கடந்த 1849-ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேறி தங்கியிருந்த நிலையில் 1885-ம் ஆண்டு 64-வது வயதில் மரணமடைந்திருந்தார். இதனையடுத்து வடக்கு லண்டனில் உள்ள கல்லறை அங்கு நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருவதுடன் பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மார்க்ஸ் கிரேவ் டிரஸ்டுக்கு சொந்தமான இந்த கல…
-
- 0 replies
- 575 views
-
-
ஏவுகணைகளை பாதுகாக்க விமான நிலையங்களை பயன்படுத்துகிறது வடகொரியா:ஐ.நா குற்றச்சாட்டு அணு ஆயுதங்களை தயாரித்து உலக நாடுகளை தொடர்ந்து மிரட்டி வந்த வடகொரியா, சமீபத்தில் அமெரிக்காவுடன் இணக்கமான உறவை காட்டியது. இதன் தொடர்ச்சியாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆகிய இருவரும் சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சந்தித்தனர். குறித்த சந்திப்பில்,வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார். இச் சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. …
-
- 0 replies
- 335 views
-
-
பிரெக்ஸிற்றை ஊக்குவித்தவர்கள் நரகத்துக்கு அனுப்பப்பட வேண்டும்: டொனால்ட் ரஸ்க் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு எவ்வாறு பிரித்தானியா வெளியேற வேண்டுமென்ற எவ்விதமான திட்டங்களுமில்லாமல் பிரெக்ஸிற்றை ஊக்குவித்தவர்கள் நரகத்துக்கு அனுப்பப்பட வேண்டுமென ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் ரஸ்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸ்க்கு விஜயம் செய்துள்ள ஐரிஷ் பிரதமர் லியோ வராத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே டொனால்ட் ரஸ்க் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாளை பிரஸ்ஸல்ஸ் பயணிக்கவுள்ள பிரதமர் தெரேசா மே-யிடமிருந்து இந்த பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பதற்கான யதார்த்தமான ஆலோசனையை எதிர்பார்ப்பதாகவும் பொதுவான தீர்வொன்று சாத்தியம் என்பதை தாம் உறுதியாக ந…
-
- 1 reply
- 555 views
-
-
கன்னியாஸ்த்திரிகளை பாலியல் அடிமைகளாக நடத்திய கத்தோலிக்க ஆயர்களும் குருமாரும் - பாப்பாண்டவர் தகவல் தற்போதைய கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரும், உயர் குருவுமான பாபாண்டவர் பிரான்ஸிஸ் அவர்கள், கத்தோலிக்க ஆயர்களும் குருக்களும் பல கன்னியாஸ்த்திரிகளை பாலியல் அடிமைகளக நடத்திவந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார். அவரது கருத்துப்படி, தனக்கு முன்னால் ப்பாப்பாண்டவராகக் கடமை புரிந்த பெனெடிக்ட் அவர்கள் இந்தப் பாலியல்க் கொடுமைகள் நிமித்தம் ஒரு கன்னியாஸ்த்திர்கள் சபையையே கலைத்துவிட நிர்ப்பந்திக்கப்பட்டதாக கூறுகிறார். கத்தோலிக்கத் திருச்சபையினுள் கன்னியாஸ்த்திரிகளுக்கெதிரான வன்கொடுமைகள் பற்றி இதுவே முதன் முதலாக ஒரு பாப்பாணடவரால் வெளிக்கொண்டுவரப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. …
-
- 1 reply
- 826 views
-