உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
25 MAR, 2025 | 10:38 AM நியூசிலாந்தின் தென்தீவு பகுதியில் கடுமையான பூகம்பம் தாக்கியுள்ளது. சுனாமி ஆபத்துள்ளதா என நாட்டின் பேரிடர் முகவர் அமைப்பு ஆராய்ந்து வருகின்றது. அந்த பகுதியில் வசிப்பவர்கள் கடற்கரையோரங்களை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுமார் 5000 மக்கள் பூகம்பத்தை உணர்ந்ததாகவும் பொருட்கள் விழுந்தன கட்டிடங்கள் குலுங்கின என நியுசிலாந்தின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/210121
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 24 MAR, 2025 | 01:15 PM ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக கைவிடவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்வோல்ட்ஸ் தெரிவித்துள்ளார். உலகம் பார்க்கக்கூடிய விதத்தில் ஈரான் தனது திட்டத்தை கைவிடவேண்டும் என தெரிவித்துள்ள அவர் அணுவாயுதங்களை உருவாக்கவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து ஈரான் விலகுவதற்கான தருணம் இது, அவர்கள் அணு ஆயுத திட்டங்களை தொடர்வதற்கு அனுமதிக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய எந்த தாக்குதலிற்கும் ஈரானே காரணம் என கருதப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையிலேயே வெள்ளை மாளிகையின் த…
-
- 4 replies
- 396 views
- 1 follower
-
-
உக்ரேன் போர்; அமெரிக்கா – ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை ஆரம்பம்! உக்ரேனில் ஒரு பரந்த போர் நிறுத்தத்தை நோக்கி முன்னேறுவதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்க, ரஷ்ய அதிகாரிகள் திங்களன்று (24) சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். கடந்த வாரம் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இருவருடனும் பேசிய பின்னர், மூன்று ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது முயற்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன. பேச்சுவார்த்தைகளுக்கான திட்டமிடல் குறித்து விளக்கப்பட்ட ஒரு வட்டாரம், அமெரிக்கத் தரப்பை வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த பணிப்பாளர் ஆண்ட்ர…
-
- 0 replies
- 289 views
-
-
நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக நெடும்போ பதவியேற்பு! ஆபிரிக்க நாடான நமீபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதில் தென்மேற்கு ஆபிரிக்க மக்கள் அமைப்பு கட்சி சார்பில் போட்டியிட்ட நெடும்போ நந்தி தைத்வா (Netumbo Nandi-Ndaitwah) 58 சதவீதம் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். 72 வயதான அவரை எதிர்த்து போட்டியிட்ட மாற்றத்திற்கான சுதந்திர தேசபக்தர்கள் கட்சியினால் 26 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இந்நிலையில் தலைநகர் விண்ட்ஹோயிக்கில் உள்ள நாடாளுமன்றத்தில் அண்மையில் அவரது பதவியேற்பு விழா நடைபெற்றது. இதன்போது, முன்னாள் ஜனாதிபதி நங்கோலா பும்பா அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் தான்சானியா ஜனாதிபதி சாமியா சுலுஹூ ஹாச…
-
- 0 replies
- 320 views
-
-
பட மூலாதாரம்,MEHA KUMAR/ SAVE THE ELEPHANTS படக்குறிப்பு, கென்யாவில், பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, யானைகளை விரட்டுவதற்கான ஒரு எளிமையான புத்திசாலித்தனமான தீர்வை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜெனாரோ டோமா பதவி, 24 மார்ச் 2025, 07:19 GMT யானைகள் தங்களது விவசாய நிலங்களுக்குள் புகுவதைக் தடுக்கும் வகையில், விவசாயிகள் தேனீக்களை புதிய உதவியாளர்களாக பயன்படுத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் விரிவடைந்து வரும் விவசாய நிலங்கள் யானை வாழிடங்களை குறுக்கிடுவதால் யானை - மனித மோதல்கள் தவிர்க்க இயலாததாகி வருகிறது. யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதம் விளைவிப்பதும், ஆபத்தான மோதல் சம்பவங்கள் நிகழ்வதும் அதிகரித்து வருகின்றது. கென்யாவில் பல …
-
-
- 1 reply
- 261 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2019-ஆம் ஆண்டு ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது, டிரம்பும் புதினும் சந்தித்துக் கொண்டனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் லாண்டேல், ஹன்னா சோர்னஸ் பதவி, 24 மார்ச் 2025, 03:58 GMT கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியை டொனால்ட் டிரம்ப் சந்தித்த போது, அவர் அமெரிக்கத் தேர்தலில் அதிபர் வேட்பாளராக இருந்தார் . யுக்ரேனில் போரை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று டிரம்ப் அப்போது நம்பிக்கை தெரிவித்தார். "நாங்கள் வெற்றி பெற்றால், நாங்கள் போரை மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம் என நான் நினைக்கிறேன்" என்று டிரம்ப் கூறினார். அவர் குறிப்பிட்ட 'விரைவு' என்பதன் அர்த்தம் காலப்போக்…
-
- 0 replies
- 411 views
- 1 follower
-
-
திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த கனேடிய பிரதமர்! கனடாவின் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), எதிர்வரும் ஏப்ரல் 28 அன்று ஒரு திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கனடா அமெரிக்காவுடன் வர்த்தகப் போரை எதிர்கொண்டு, 51 ஆவது அமெரிக்க மாநிலமாக மாற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. இது வாக்காளர்களின் மனதில் முதன்மையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜஸ்டின் ட்ரூடோவின் இராஜினாமாவைத் தொடர்ந்து, லிபரல் கட்சியைச் சேர்ந்த கார்னி, கனடாவின் பிரதமராகப் பதவியேற்ற ஒன்பது நாட்களுக்குப் பின்னர் இந்த தேர்தல் அழைப்பு வந்துள்ளது. கார்னி இப்போது கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரேவை எதிர்கொள்ள வேண்டும், அ…
-
- 2 replies
- 283 views
- 1 follower
-
-
ரஸ்யாவின் புலனாய்வு பிரிவில் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு மிக முக்கிய தகவல்களை வழங்கி பனிப்போரின் பாதையை மாற்றிய கோர்வ்டிஸ்கி காலமானார் - ரஸ்யா அணுவாயு தாக்குதலில் ஈடுபடலாம் என எச்சரித்தவர் Published By: RAJEEBAN 23 MAR, 2025 | 01:29 PM ரஸ்யாவின் புலனாய்வு பிரிவான கேஜிபிக்குள் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு மிகமுக்கியமான புலனாய்வு தகவல்களை வழங்கி பனிப்போரின் பாதையை மாற்றிய ஒலெக் கோர்வ்டிஸ்கி தனது 86 வயதில் காலமானார். 1985 இல் ரஸ்யாவிலிருந் தப்பிவந்து பிரிட்டனில் வாழ்ந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ள அவரின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளனர். பனிப்போர் யுத்த காலத்தின் மிக முக்கியமான உளவாளிகளில் ஒருவர் இவர் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுக…
-
- 1 reply
- 312 views
- 1 follower
-
-
பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு ஐ.நா வலியுறுத்தல்! ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு ஐ.நா வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதற்கும் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் ‘மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் பெண்கள் குழந்தைகளின் உரிமைகள் மீறப்பட்டு வருவதாகவும், அனைத்து பெண் பிள்ளைகளும் பாடசாலை செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், திறமையான, புத்திசாலியான இளம் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டால் அதன் விளைவுகள் பல தலைமுறைகளுக்கு …
-
- 0 replies
- 214 views
-
-
இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு! தெற்கு காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது. ஜனவரி மாதம் ஆரம்பமான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாகப் பாலஸ்தீன சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் அலுவலகத்தில் உறுப்பினராக இருக்கும் பர்தவீலுடன் சேர்ந்த…
-
-
- 9 replies
- 638 views
- 1 follower
-
-
அமெரிக்க கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் டரம்ப்! அமெரிக்க கல்வித் துறையை கலைக்கக் கோரும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (20) கையெழுத்திட்டார். இது பழமைவாதிகளின் நீண்டகால இலக்காக இருந்த ஒரு நிறுவனத்தை பிரிப்பதற்கான ட்ரம்பின் பிரச்சார வாக்குறுதியை நிறைவேற்றுகிறது. கல்வித் துறையை வீணானது மற்றும் தாராளவாத சித்தாந்தத்தால் மாசுபட்டது என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இருப்பினும், 1979 ஆம் ஆண்டில் இந்தத் துறையை உருவாக்கிய காங்கிரஸின் நடவடிக்கை இல்லாமல் அதை அகற்றுவது பெரும்பாலும் சாத்தியமற்றது. குடியரசுக் கட்சியினர் அதை அடைய சட்டத்தை அறிமுகப்படுத்துவதாகக் கூறினர். அதேநேரத்தில், ஜனநாயகக் கட்சியினர் இந்த யோசனையை எதிர்க்க விரைவாக முயற்சிகளை முன…
-
- 3 replies
- 438 views
- 1 follower
-
-
மின்சார துண்டிப்பால் மூடப்பட்ட ஹீத்ரோ விமான நிலையம்! அருகிலுள்ள மின்சார துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்து காரணமாக, லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் வெள்ளிக்கிழமை (21) முழுவதும் மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக விமான நிலையம் “குறிப்பிடத்தக்க மின் தடையை” சந்தித்து வருவதாக ஹீத்ரோவின் அறிக்கை தெரிவித்துள்ளது. “எங்கள் பயணிகள் மற்றும் சக ஊழியர்களின் பாதுகாப்பைப் பராமரிக்க, ஹீத்ரோ விமான நிலையம் மார்ச் 21 இரவு 11:59 வரை மூடப்படும்” என்றும் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியது. அத்துடன், பயணிகள் விமான நிலையத்திற்கு பயணிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் தகவலுக்கு அவர்களின் விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் சிரமத்திற்கு நாங்கள்…
-
-
- 3 replies
- 397 views
- 1 follower
-
-
பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே காசா மீது மீண்டும் விமானதாக்குதல்களில் ஈடுபட்டார் - இஸ்ரேலிய ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றச்சாட்டு Published By: RAJEEBAN 19 MAR, 2025 | 10:15 AM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே காசா மீது மீண்டும் விமானதாக்குதல்களில் ஈடுபட்டார் என இஸ்ரேலை சேர்ந்த ஆர்ப்பாட்டக்காராகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் ஜனநாயக முறைமையை செயல் இழக்கச் செய்து அதிகாரத்தின் மீதான தனது பிடியை தொடர்ந்தும் வைத்திருப்பதற்காகவே யுத்தநிறுத்தத்தை சிதறடித்த விமானதாக்குதல்களிற்கு பெஞ்சமின் நெட்டன்யாகு உத்தரவிட்டார் என இஸ்ரேலிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்ப…
-
- 1 reply
- 281 views
- 1 follower
-
-
அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மீதும் போர்க் கப்பல் மீதும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்! செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மீதும் போர்க் கப்பல் மீதும் யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. கடந்த 48 மணி நேரத்தில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலைக் குறிவைத்து ஹூதிக்கள் மூன்றாவது தடவையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். வடக்கு செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஹாரி ட்ரூமன் எனும் விமானம் தாங்கிக் கப்பல் மீதே ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செங்கடல் பகுதியில் செயல்பட்டுக்கொண்டிரு…
-
- 0 replies
- 400 views
-
-
இன சார்பு வழக்கு தீர்வுக்காக $28 மில்லியனை செலுத்த கூகுள் ஒப்புதல்! கூகுள் நிறுவனம் தனது ஊதியம் மற்றும் தொழில் முன்னேற்ற நடைமுறைகளில் இன சார்பு இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கைத் தீர்ப்பதற்கு 28 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. ஹிஸ்பானிக், லத்தீன், பூர்வீக அமெரிக்க மற்றும் பிற சிறுபான்மை பணியாளர்களை விட வெள்ளை மற்றும் ஆசிய ஊழியர்களுக்கு சிறந்த ஊதியம் மற்றும் தொழில் வாய்ப்புகளை தொழில்நுட்ப நிறுவனமான நிறுவனம் வழங்கியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு முன்னாள் கூகிள் ஊழியர் ஒருவர் இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தார். சில இனப் பின்னணியைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒரே மாதிரியான வேலையைச் செய்த போதிலும், அவர்களின் …
-
- 0 replies
- 259 views
-
-
அமெரிக்காவை எதிர்க்க அவுஸ்திரேலியாவுடன் கை கோர்த்த கனடா! ஆர்க்டிக் பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் விதமாக கனடா அரசு பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அவுஸ்திரேலிய அரசிடம் ரேடார் தொழில் நுட்ப சாதனங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குறித்த திட்டத்தின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியாவுடன் இணைந்து இராணுவ ரேடார் தொழில் நுட்ப அமைப்பை உருவாக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்க்டிக் பகுதிகளில் அமெரிக்க அரசு தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் நிலையில், கனடா அரசு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425726
-
- 0 replies
- 282 views
-
-
எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் எலோன் மஸ்க்கின் சர்ச்சைக்குரிய பங்கு குறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்ததால், அமெரிக்காவில் உள்ள ஒரு சேவை மையத்தில் பல டெஸ்லா வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அதே நேரத்தில் கார் உரிமையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் ஒரு டாக்ஸிங் வலைத்தளத்தில் கசிந்தன. லாஸ் வேகாஸில் அமைந்துள்ள டெஸ்லா சேவை மையத்தில் பல டெஸ்லா வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (18) தீக்கிரையாக்கப்பட்டன. இது தவிர கன்சாஸில் மேலும் பல டெஸ்லா வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவத்தை பயங்கரவாதச் செயலாக அமெரிக்க புலனாய்வுப் பிரிவி விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை…
-
-
- 12 replies
- 606 views
-
-
மற்றுமொரு கோர விமான விபத்து: 12 பேர் உயிரிழப்பு. மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில், (Honduras) 18 சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த சிறிய ரக விமானமொன்று நேற்றைய தினம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை இவ்விபத்தில் ஐந்து பேர் உயிர் தப்பியுள்ளனர் எனவும் ஒருவர் மாயமாகியுள்ளார் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2025/1425697
-
- 0 replies
- 240 views
-
-
Published By: RAJEEBAN 19 MAR, 2025 | 06:37 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான பேச்சுவார்த்தைகளின் போது உடனடி யுத்தநிறுத்தத்திற்கான வேண்டுகோளை நிராகரித்துள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனின் வலுசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு இணங்கியுள்ளார். உக்ரைன் சமீபத்தில் சவுதி அரேபிய பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொண்ட ஒருமாதகால யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள புட்டின் வெளிநாடுகள் இராணுவ புலனாய்வு உதவிகளை உக்ரைனிற்கு வழங்குவதை நிறுத்தினால் மாத்திரம் முழுமையான யுத்த நிறுத்தம் வெற்றிபெறும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/209604
-
- 2 replies
- 302 views
- 1 follower
-
-
காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை வான்தாக்குதல்-200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்தப்பட்ட வான்தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100 அதிகம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சமீபத்திய சமாதான கலந்துரையாடல்கள் தோல்வியடைந்ததை அடுத்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். எவ்வாறாயினும், ஹமாஸ் இலக்குகளை மட்டுமே தாக்குவதாகவும், பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படாமல் தடுக்க நடவடிக…
-
- 4 replies
- 378 views
- 1 follower
-
-
17 MAR, 2025 | 03:27 PM கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ள பரிசுத்த பாப்பரசர் இதன் மூலம் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள போதிலும் தனது பதவியில் தொடர்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிரான்சின் ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அங்கிருந்தவாறே சீர்திருத்த தி;ட்டங்களிற்கு அனுமதி வழங்கும் ஆவணத்தில் கைச்சாத்திட்டார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது. பெப்ரவரி 14 முதல் பாப்பரசர் மருத்துவமனையில் உள்ளார். கடந்த 12 வருடகாலப்பகுதியில் அவர் நீண்டநாட்கள் மருத்துவமனையில் உள்ளமை இதுவே முதல் தடவை. கத்தோலிக்க திருச்சபையில் பெண்களிற்கு அதிகளவு பங்களிப்பினை வழங்குவது,ஆட்சி மற்றும் தீர்மானம் எடுப்பதில் பாமர மக்களை அதிகளவில் ச…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
வெனிசுலாவைச் சேர்ந்த 200 பேரை எல் சால்வடார் நாட்டு சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா! வெனிசுலாவைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களையும், சட்டவிரோத குடியேற்ற வாசிகளையும் எல் சால்வடாரில் உள்ள சிறைக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவரவர் சொந்த நாடுகளுக்கு டொனால்ட் ரம்ப் தலைமையிலான அரசு திருப்பி அனுப்பி வருகிறது. மேலும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், வெனிசுலாவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள், போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களை ட்ரம்ப் தலைமையிலான அரசு அனுப்பி வைத்துள்ளது. அமெரிக்காவில் கடுமையான குற்றச் செயல்…
-
-
- 9 replies
- 606 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா முகமையை மூடும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா செய்தி நிறுவனத்தை மூடுவதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்நிறுவனம் டிரம்ப் எதிர்ப்பு மனநிலையுடன் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், வரிசெலுத்துபவர்கள் இத்தகைய பிரசாரங்களுக்கு இலக்காவதை தடுக்கும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதோடு, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா மீதான அரசியல்வாதிகள் மற்றும் வலதுசாரி ஊடகங்களின் விமர்சனங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப்போ…
-
- 2 replies
- 298 views
- 1 follower
-
-
மாசிடோனிய இரவு விடுதியில் தீ விபத்து; 51 பேர் மரணம்! வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஸ்கோப்ஜியிலிருந்து கிழக்கே 100 கிமீ (60 மைல்) தொலைவில் உள்ள கோக்கானி (Kocani) நகரில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றிலேயே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. நாட்டில் பிரபலமான ஹிப்-ஹாப் இரட்டையர்களான ADN இசைக்குழுவின் நிகழ்ச்சியின் போது அதிகாலை 03:00 மணியளவில் (02:00 GMT) தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்தினை அடுத்து, சில மணிநேரங்களுக்குப் பின்னரும் அந்த இடம் எரிந்து கொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டது. இசை நிக…
-
- 1 reply
- 204 views
-
-
அமெரிக்க கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள்; அனிமேஷன் வீடியோவை வெளியிட்ட ஹவுத்தி! அழிக்கப்பட்ட கடற்படைக் கப்பல்களுக்கு அருகில் அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் மிதப்பதை சித்தரிக்கும் ஒரு அனிமேஷன் வீடியோவை ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ இசையுடன் தொடங்கி, அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட ஒரு சவப்பெட்டி தண்ணீரில் மிதப்பதை சித்தரிக்கிறது. பின்னர் அது அழிக்கப்பட்ட போர்க்கப்பல்களில் இருந்து விலகிச் செல்லும் பல எண்ணிக்கை அதே கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகளைக் காண்பிக்கும் வகையில் சித்தரிக்கப்படுகிறது. செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் மீது அமெரிக்க ஜனாதிபதி…
-
- 0 replies
- 299 views
-