Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகம்மத் நசீதை கைது செய்ய அந் நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவர் அந் நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். அவருடன் 6 எம்.பிக்களும் இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதையடுத்து மாலே நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தை அந் நாட்டு கலவரத் தடுப்பு போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. கடந்த ஆண்டு அந் நாட்டு தலைமை நீதிபதி அப்துல்லா முகம்மத் கைது செய்யப்பட்டார். அதிபராக இருந்த நசீத்தீன் உத்தரவால் அவர் கைதானார். இதையடுத்து நாட்டில் புரட்சி வெடித்தது. நசீத் பதவியிலிருந்து விரப்பட்டார். நீதிபதி கைது செய்யப்பட்ட வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதில் கடந்த 10ம் தேதி நசீத் நீதிமன்றத்தி…

    • 2 replies
    • 461 views
  2. என்னை மருத்துவமனையில் சந்தித்த ஜேர்மனி அதிபருக்கு நன்றி: அலெக்ஸி நவால்னி நச்சு தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த போது, தன்னை சந்தித்த ஜேர்மனி அதிபருக்கு ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி நன்றி தெரிவித்துள்ளார். ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் அந்நாட்டு தலைநகர் பெர்லினில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரஷ்ய அரசியல் தலைவர் அலெக்ஸி நவால்னியை இரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியானது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான ஜேர்மனி வார இதழ் ஒன்றில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு எப்போது நடைபெற்றது என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்தத் தகவலை நவால்னி திங்கட்கிழமை உறுதிப்படுத்தினார். இதுகுறித்து அவர் தனது உத்தியோக…

  3. ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 2 ஆப்பிரிக்க கண்டத்தின் வரைபடத்தை ஒருமுறை பார்த்தீர்களானால், தேச எல்லைகள் பென்சிலால் கோடு கீறியது போல இருக்கும். உண்மையில் அப்படித்தான் ஐரோப்பிய வல்லரசுகள் ஆப்பிரிக்காவை தமக்குள் பங்கு பிரித்துக் கொண்டார்கள்! 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பாக் கண்டத்தில் தேசிய அரசுகள் உருவாக ஆரம்பித்திருந்தன. அப்போதெல்லாம் காலனிகள் வைத்துக் கொள்வது ஒரு கௌரவம். இங்கிலாந்து, பிரான்ஸ், போர்த்துக்கல், ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகள், ஆப்பிரிக்க வரைபடத்தை மேசை மீது வைத்து, தமக்கு தேவையான துண்டுகளை பென்சிலால் கீறி பெற்றுக் கொண்டார்கள். இந்த எல்லைக் கோடுகள் வகுக்கும் போது ஆப்பிரிக்க மக்களின் விருப்பம் புறக்கணிக்கப்பட்டது. அவர்களது தலைவிதியை, வடக்கே…

  4. காஸ்ஸெம் சோலேமானீ கொல்லப்பட்டதற்கு ட்ரம்ப் மட்டுமல்ல அமெரிக்க அரசாங்கமும் காரணம்: ஈரான்! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/10/61e12c26a0274693b02bc23d7d20fe3e_8-720x450.jpeg ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani) கொல்லப்பட்டதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மட்டுமல்ல, அமெரிக்க அரசாங்கத்தையும் ஈரான் குற்றம் சாட்டுகிறது. கடந்த ஜனவரி 3ஆம் திகதி பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூத்த ஈரான், ஈராக் அதிகாரிகளின் கார்களை குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலமாக அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இதில், ஈரான் உயர்மட்ட…

    • 0 replies
    • 671 views
  5. எகிப்து நாட்டின் இளவரசியாக இருந்த உலக பேரழகி கிளியோபாட்ராவின் தங்கை Arsinoe அவர்களின் எலும்புகள் கிரேக்க நாட்டில் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறை நிபுணர்கள் கூறியுள்ளனர். இளவரசியின் எலும்புகளை கண்டுபிடித்ததற்காக தங்கள் குழுவினர் பெருமைப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் எலும்புகளின் DNA டெஸ்ட் செய்து பார்த்து உறுதி செய்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, கிரேக்க நாட்டின் மிகப் பழமையான Ephesus என்ற நகரத்தில் உள்ள பாழடைந்த கோவில் ஒன்றில் இருந்து இளவரசி Arsinoeஅவர்களின் எலும்புகள் கிடைத்ததாகவும், அதன் DNA வை வைத்து கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் அவருடைய தோற்றத்தை வரைந்து தற்போது ஊடகங்களுக்கு வெளியிடுவதாகவும் தெரிவித்தனர். கிளியோபாட்ரா தங்கையின்…

  6. ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 4 முதன் முதல் ஐரோப்பிய வெள்ளையரைக் கண்ட ஆப்பிரிக்க கறுப்பர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? “நீலக் கண்களைக் கொண்ட, வெண்ணிற மேனியரைப் பார்த்த ஆப்பிரிக்கர்கள் கடவுள்கள் வந்து விட்டதாக நினைத்தார்கள்.” என்று ஐரோப்பிய மையவாத வரலாற்றாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். அதை அப்படியே நாமும் நம்பி வந்திருக்கிறோம். ஆனால் கடவுள் என்ற கற்பிதமே, அந்தந்த பிரதேச மக்களின் பிம்பமாக இருப்பது யதார்த்தம். வெள்ளையரின் கடவுள் வெள்ளையாக இருந்தார். அதே போல கறுப்பர்களின் கடவுளும் கறுப்பாக இருந்ததை, இப்போதும் காணப்படும் ஆப்பிரிக்க மத சிற்பங்கள் நிரூபிக்கின்றன. ஆகவே “கடவுளைக் கண்ட வரலாறு” ஒரு ஐரோப்பிய மையவாத கட்டுக்கதை. முதன்முதல் கறுப்பின ஆப்பிரிக்க …

  7. பிரஸ்சல்ஸ் தாக்குதல் குற்றவாளிக்கு பணம் வழங்கியவர்களுக்கு சிறை பெல்ஜியம் நாட்டின் பிரஸ்சல்ஸ் விமான நிலையம் மற்றும் மெட்ரோ புகையிரத நிலையம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிக்கு பணம் வழங்கியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு பிரித்தானிய நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி உள்ளது. கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற இந்த தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது அப்ரினி என்பவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பணம் வழங்கியதாக தெரிவித்து பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட முகமது அலி அகமது, ஜகாரியா போபா…

  8. சிரியாவில் பாடசாலை படிப்பை பாதியில் கைவிடும் சிறுவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிப்பு! by : Anojkiyan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/b3a54ecc0915f9347c3f53fa31d161fe_XL-720x450.jpg கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, சிரியாவில் பாடசாலை படிப்பை பாதியில் கைவிடும் சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக Save the Children தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஆசியர்களிடம் நாங்கள் நடத்திய கருத்து கணிப்பை முன்னிறுத்தி, இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சிரிய உள்நாட்டுப் போர் காரணமாக பல குழந்தைகள் தங்கள் பாடசாலை படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனார். …

  9. போப் பிரான்சிஸின் தனிப்பட்ட வைத்தியர் உயிரிழப்பு போப் பிரான்சிஸின் தனிப்பட்ட வைத்தியர் கொவிட் தொடர்பான சிக்கல்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாக வத்திக்கான் செய்தித்தாளான 'L'Osservatore Romano' ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் போப்பாண்டவரின் தனிப்பட்ட வைத்தியராக ஃபேப்ரிஜியோ சோகோர்சி நியமிக்கப்பட்டார். 78 வயதான வைத்தியர் ஃபேப்ரிஜியோ சோகோர்சி, ரோமில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். வத்திக்கான் பிரஜைகளுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போப் பிரான்சிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். …

  10. சற்று தாமதமான செய்தியாக இருந்தலும், என்னை போலவே பலருக்கும் புதிதாக இருக்கும் என நம்புகிறேன் ஈழப் பிரச்சினையைப் பேசத் தடையா? தேர்தல் ஆணையம் விளக்கம் ஈழத் தமிழர் பிரச்சினைப் பற்றி தேர்தல் களத்தில் பேசக் கூடாது என்றும், அது தொடர்பான வெளியீடுகளை அச்சகங்கள் வெளியிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் என்ற பெயரில் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்திருப்பது உண்மைதானா என்று தமிழக தேர்தல் ஆணையர் நரேந்திர குப்தாவிடம் வழக்கறிஞர்கள் குழுவாக சென்று நேரில் கேட்டபோது, தேர்தல் ஆணையம் அத்தகைய விதிமுறைகள் எதையும் அறிவிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். அப்படியானால் மறுப்பு அறிக்கை வெளியிடுங்கள் என்று, வழக்கறிஞர்கள் குழு க…

  11. அமெரிக்க மற்றும் சீன ஜனாதிபதிகள் தொலைபேசி வாயிலாக பேச்சு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் தொலைபேசி வாயிலாக பேசியதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சீன ஜனாதிபதியுடன் பேசிய ஜோ பைடன் இருநாட்டு வர்த்தகம் தொடருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா-சீன வர்த்தக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீட்பதற்கான முயற்சியாக இருதலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர். சீனாவின் முறையற்ற பொருளாதார நடவடிக்கைகள், ஹொங்கொங் மீதான அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற பிரச்சினைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி தமது கண்டனத்தை சீனாவுக்குத் தெரிவித்திருப்பதாக வெள்ளை மாளிகை விட…

  12. டொரொன்டோ நகரம் செய்த தவறுக்காக எனது வேலை செய்யுமிடம் அவர்களிடம் நஸ்ட ஈடு கோரியது. அதற்கு அவர்கள் அனுப்பிய பதிலில் ஏழு மொழிகளில் தமிழும் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.

  13. Financial bubbles creating conditions for new crash உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் முழுமையான நிலைமுறிவிற்கு உறுதியான அடையாளமாக நெருக்கடியை தடுக்க கொண்டுவரப்பட்ட அதே நடவடிக்கைகள்தாம் 2008 இன் அளவை விட அதிகமாக ஒரு நிதியக்கரைப்பிற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளன. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக உலகின் பெரிய மத்திய வங்கிகள் 7 டிரில்லியன் டாலர்களை நிதியச் சந்தைகளில் உட்செலுத்தியுள்ளன. அதன் நோக்கம் பொருளாதார மீட்சிக்கு அது தூண்டுதல் கொடுக்கும் என்பதாகும். ஆனால் உலகெங்கிலும் இருந்து வரும் பொருளாதாரத் தரவுகள் இது ஒரு தோல்வி என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்பதை குறிக்கின்றன. விலைவாசி அளவுகள் பற்றிய புள்ளிவிவரங்கள் மிகவும் முக்கியமானவை. இவை “சாதாரண” சூழலில் மீட்பிற்கு அடையாளமான விலை …

  14. சீனாவில் 24 வகையான வௌவால் கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிப்பு சீனாவில் கொரோனா வைரஸின் தோற்றம் பற்றிய ஆய்வில், 24 வகையான வௌவால் கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வௌவால் வைரஸ்கள் குறித்து சர்வதேச விஞ்ஞானிகள் பலர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றில் ஷான்டோங் மருத்துவ பல்கலை கழகத்தின் பேராசிரியர் ஷி வெய்போங் என்பவர் தலைமையில் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், தென்மேற்கு சீனாவில் இதற்கு முன்பு அறியப்படாத 24 வகையான வௌவால் கொரோனா வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் 4 வைரஸ்கள் உலக நாடுகளில் பெருந்தொற்றை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்களுடன் தொடர்புடையவை என தெரி…

  15. தந்தையின் கண் முன்பாக இரண்டு மகள்களை பலாத்காரம் செய்த ஐவர் கைது அதிசொகுசு வாகனம் ஒன்றில் வைத்து இரண்டு சிறுமிகளை அவர்களது தந்தையின் கண் முன்னால் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தரும் சம்பவம் குஜராத்தின் தாஹோட் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய பதினொரு பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்பக்லா என்ற கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தனது கடையை மூடிவிட்டு இரண்டு பிள்ளைகளுடன் வீடு திரும்ப முயற்சித்தார். அப்போது திடீரென அதிசொகுசு வாகனம் ஒன்றில் வந்த சிலர், குடும்பஸ்தரையும் அவரது இரண்டு மகள்களையும் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அவர்களுக்குக் காவலாக மேலும் ஆறு பேர் மோட்டார் சைக்கிள்களில் அ…

    • 0 replies
    • 441 views
  16. தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கியதால் ஆந்திராவில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியால் எழவே முடியாது என்று அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி கவலை தெரிவித்துள்ளார். தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதை எதிர்த்து எஞ்சிய ஆந்திர பிரதேச எம்.பி, எம்.எல்.ஏக்கள் பலரும் ராஜினாமா செய்து வருகின்றனர். இதனால் காங்கிரஸின் எதிர்காலமே அங்கு கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி இது பற்றி கூறுகையில், காங்கிரஸ் மேலிடத்தின் முடிவு மிகவும் துயரமானது என்பதை மாநில பொறுப்பாளர் திக்விஜய்சிங்கிடம் தெரிவித்துவிட்டேன். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. என்னைப் பொறுத்தவரை நான் காங்கிரஸில் பிறந்தவன்.. …

    • 12 replies
    • 877 views
  17. ஜம்மு காஷ்மீர் மாநில அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங், பணம் கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அது ஆட்சியைக் கவிழ்க்க கொடுக்கப்படவில்லை. மாறாக சமூக நலத்திற்காக கொடுக்கப்பட்ட பணம் என்றும் அவர் விளக்கியுள்ளார். ராணுவத்தின் ரகசிய நிதியிலிருந்து இது கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தவறான நோக்கத்திற்கு இது பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். சமூக நலத் திட்டங்களுக்காக மட்டுமே இந்த நிதியிலிருந்து பணம் செலவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் டெல்லி கூட்டம் ஒன்றில் நான் கலந்து கொண்டதால் என் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தப் பிரச்சினை கிளப்ப்பட்டுள்ள…

  18. பிரான்ஸ்: காரில் ஆயுதங்களுடன் போலீஸ் வேன் மீது வேண்டுமென்றே மோதிய மர்மநபர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மர்மநபர் ஒருவர் காரில் ஆயுதங்களுடன் போலீஸ் வேன் மீது வேண்டுமென்றே மோதி தாக்குதல் நடத்தியுள்ளார். பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மர்மநபர் ஒருவர் காரில் ஆயுதங்களுடன் போலீஸ் வேன் மீது வேண்டுமென்றே மோதி தாக்குதல் நடத்தியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் உள்ள சாம்ப்ஸ் லையீஸ் பகுதியில் இன்று மர்மநபர் ஒருவர் வெள்ளை நிற காரில் ஆயுதங்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வேன் மீது வேண்டுமென்றே மோதி தாக்குதல் நிகழ்த்தியுள்ளார். இதையடுத்து, மர்மநபர் வந்த …

  19. திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமாவின் அருணாச்சல பிரதேச பயணத்துக்கு, பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சகமும் அனுமதி அளித்து விட்டதாக, அருணாச்சல் முதல்வர் தோர்ஜீ காண்டு தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம், அருணாச்சல பிரதேசத்திலுள்ள தவாங் பகுதிக்கு புத்த மதத் தலைவர் தலாய்லாமா செல்கிறார். அங்கு கட்டப்பட்டு வரும் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையைத் திறந்து வைக்கிறார். அருணாச்சல பிரதேசம் தனது பகுதி என்று கூறிவரும் சீனா, தலாய்லாமா அங்கு வரக் கூடாது என்று எச்சரித்துள்ளது. சர்ச்சைக்குரிய பகுதி என்கிறது. இந்நிலையில், அருணாச்சல் முதல்வர் காண்டு பிரதமரை சந்தித்தார். சீன அருணாச்சல் பிரதேச எல்லைப் பிரச்னையில் உறுதியான முடிவு எடுக்க வேண்டும் என்று, பிரதமரைக் கேட்டுக்கொண்ட அவர், தல…

    • 1 reply
    • 932 views
  20. கத்தார் மீதான நிபந்தனைகளை கைவிட்டது செளதி கூட்டணி; 6 புதிய கொள்கைகளை ஏற்க கோரிக்கை படத்தின் காப்புரிமைREUTERS Image captionதனது இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமான எந்த நடவடிக்கையினையும் ஏற்றுக்கொள்ள கத்தார் மறுக்கிறது கத்தார் மீதான தடையை முன்னெடுத்துள்ள நான்கு அரபு நாடுகள், கடந்த மாதம் தாங்கள் வைத்த 13 குறிப்பிட்ட நிபந்தனைகளை கத்தார் நிறைவேற்ற வேண்டும் என மேற்கொண்டு வலியுறுத்தப் போவதில்லை. ஐக்கிய நாடுகள் சபையில் செய்தியாளர்களிடம் பேசிய சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகல், கத்தார் தற்போது ஆறு முக்கிய கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதம் மற…

  21. தென்காசி, டிச. 4: திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் சுதந்திரப் போராட்டத் தியாகி வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் அமைக்க முன்னாள் முதல்வர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டு 52 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அத் திட்டம் நிறைவேறவில்லை. இந்தியா, ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்தபோது, சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளில் செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் குறிப்பிடத்தக்கவர். 10-ம் வகுப்பு வரை செங்கோட்டையில் படித் தார். பின்னர் திருவனந்தபுரத்தில் பி.ஏ. படித்துக்கொண்டிருந்த போதே வனத்துறையில் வேலை கிடைத்ததால், பாதியில் படிப்பைவிட்டு புனலூரில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது, ஆங்கிலேயர்களை விரட்ட தர்மபரிபாலன சங்கம் செயல்பட்டு வந்தது. அதில் தன்னையும் இணைத்துகொண்…

    • 4 replies
    • 1.1k views
  22. லண்டன் சுரங்க ரயில் வெடிப்புச் சம்பவத்தை ஒரு பயங்கரவாத சம்பவமாக கருதுவதாக லண்டன் காவல் துறை தெரிவித்துள்ளது, வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனையை சீனா கண்டித்துள்ளது மற்றும் பாகிஸ்தான் இடைத்தேர்தல் குறித்த ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  23. உக்ரைனின்... நகர மேயர்கள், கடத்தப்பட்ட விவகாரம்: ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்! உக்ரைனின் நகர மேயர்கள் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஃபோன்டெல்லெஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். தென்கிழக்கு நகரமான டினிப்ரோ நகர மேயரான யேவென் மட்வியேவ் என்பவரை, ஆயுதமேந்திய நபர்கள் கடத்திச் சென்றதாக உக்ரைனிய அதிகாரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர். அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமையன்று மெலிடோபோலின் மேயர் இவான் ஃபெடோரோவ் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஃபோன்டெல்ல…

  24. சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி 22ம் திகதி தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்! [Tuesday, 2014-03-11 18:49:05] இலங்கையில் நடந்த ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஜெனீவாவில் ஐ.நா. மனிதஉரிமை ஆணையத்தில் மத்திய அரசு முன் மொழிய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் கார்த்திக், அருண்குமார், ஜெயபிரகாஷ், சிவராஜ், யுவராஜ் ஆகிய 5 பேர்கள் தஞ்சை முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக கும்பகோணம் அன்னை கல்லூரி மா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.