Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. காசாவில் (Gaza) போலியோவை ஏற்படுத்தும் வைரஸ் இருப்பது கண்டறிப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யுனிசெஃப் (UNICEF) நிறுவனத்துடன் இணைந்து கழிவுநீர் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் இது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கழிவுநீரில் வைரஸ் இருப்பதும், குடிநீரின் பற்றாக்குறையும் சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் இதன்படி, இஸ்ரேலின் (Israel) தாக்குதலை நிறுத்தவும், கழிவுநீர் அமைப்பை சீர் செய்யவும், இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்துள்ள நிரம்பிய முகாம்களுக்கு குடிநீரை வழங்கவும் இஸ்ரேலுக்கு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. …

  2. காசாவில் கவசவாகனத்திற்குள் பொருத்தப்பட்ட குண்டுவெடிப்பு - ஏழு இஸ்ரேலிய படையினர் பலி 25 JUN, 2025 | 10:57 AM காசாவின் கான்யூனிசில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ஏழு இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய இராணுவத்தினரின் கவசவாகனத்திற்குள் பொருத்தப்பட்டிருந்த குண்டுவெடித்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கவசவாகனம் தீப்பிடித்து எரிந்தது என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட இஸ்ரேலிய படையினரின் பெயர் விபரங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது அவர்கள் 19 முதல் 21 வயதிற்குட்பட்டவர்கள். https://www.virakesari.lk/article/218395

  3. 13 JUL, 2025 | 06:36 PM மத்திய காசாவில் நீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடல்களை நுசெரெய்த் அல் அவ்தா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள அவசரசேவை பிரிவினர் ஏழு சிறுவர்கள்; உட்பட 16 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். நுசெய்ரெத் அகதிமுகாமில் தண்ணீர்விநியோகத்தில் ஈடுபட்டிருந்த வாகனத்திற்கு அருகில் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல் இடம்பெற்றது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை தொழில்நுட்ப கோளாறினால் பொதுமக்கள் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இஸ்ரேல் இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாதி இலக்கு…

  4. ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க ஒப்புக்கொண்டது மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அமைதித் திட்டத்திற்கு ஆதரவளித்தது. நீடித்த அமைதிக்கான பாதையில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, காசாவில் குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்துமாறு டிரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டார் - வெளிநாட்டு ஊடகங்கள்- adaderana.lk BBC NewsLive updates: Trump tells Israel to stop bombing Gaza as...The US president says he believes Hamas is "ready for a lasting peace", as the group seeks further negotiations on his peace proposal.

  5. காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே 'ஒரு விளையாட்டு போல' காயப்படுத்துகிறார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார் ரிச்சர்ட் கில்சீன் சனி, ஜூலை 19, 2025 காலை 8:01 IDF வீரர்கள் வேண்டுமென்றே காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே 'ஒரு விளையாட்டு போல' காயப்படுத்துகிறார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார் காசாவில் உள்ள ஒரு பிரிட்டிஷ் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவ ஊழியர்கள் "தெளிவான காய வடிவங்களைக்" காண்கிறார்கள் என்றும், IDF வீரர்கள் வாரத்தின் நாளைப் பொறுத்து காசாவில் உள்ள குழந்தைகளை வெவ்வேறு உடல் பாகங்களில் வேண்டுமென்றே சுட்டுக் கொன்று வருவதாகவும் கூறுகிறார். பேராசிரியர் நிக் மேனார்ட் பிபிசி ரேடியோ 4 இடம், தானும் தனது சகாக்களும் உதவி விநியோக தளங்களை - முக்கியமாக டீனேஜ்…

  6. 26 MAY, 2024 | 01:12 PM காசாவின் வடபகுதியில் இடம்பெற்ற மோதலின் போது இஸ்ரேலிய இராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை வெளியிடாத ஹமாஸ் சுரங்கப்பாதைக்குள் இரத்தக்காயங்களுடன் நபர் ஒருவர் இழுத்துச்செல்லப்படும் வீடியோவை வெளியிட்டுள்ளது. சுரங்கப்பாதையொன்றிற்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்து தாக்குதலை மேற்கொள்ளும் விதத்தில் ஹமாஸ் உறுப்பினர்கள் செயற்பட்டனர் அல் ஹசாம் பிரிகேட்டின் பேச்சாளர் தங்கள் குழுவினர் தாக்குதலை மேற்கொண்டு இஸ்ரேலிய படையினரை கொலை செய்த பின்னர் கைதுசெய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் இராணுவம் இதனை நிராகர…

  7. Published By: Rajeeban 03 Aug, 2025 | 05:22 PM காசாவில் உள்ள பாலஸ்தீன செம்பிறை சமூகத்தின் தலைமையகம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் தனது பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் பலர் காயமடைந்துள்ளனர் என செம்பிறை சமூகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலால் கட்டிடத்தில் தீ மூண்டுள்ளது என தெரிவித்துள்ள செம்பிறை சமூகம் கான் யூனிசில் உள்ள தனது கட்டிடத்தை இஸ்ரேல் வேண்டுமென்றே தாக்கியதாக தெரிவித்துள்ளது. எங்கள் தலைமையகம் என்பது இஸ்ரேலிற்கு நன்கு தெரியும் என பாலஸ்தீன செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது. கட்டிடம் தீப்பிடித்து எரிவதையும் புகைமண்டலம் காணப்படுவதையும் வெளியிட்டுள்ள செம்பிறை சங்கம்கட்டிடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதையும் இரத்;தக்கறை காணப்படுவதையும் காண்பிக்கும் படங்கள…

  8. காசாவில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையை முடிவிற்கு கொண்டுவாருங்கள் - இல்லாவிட்டால் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் - இஸ்ரேலிற்கு பிரிட்டிஸ் பிரதமர் எச்சரிக்கை 30 JUL, 2025 | 06:50 AM காசாவில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் கணிசமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால்" செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்து பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று பிரிட்டிஸ் பிரதமர் கெய்ர் ஸ்டாமெர் தெரிவித்துள்ளார். யுத்தநிறுத்தம்,இரண்டுதேசத்தினை உறுதி செய்யும் நீண்டகாலதீர்விற்கு அர்ப்பணித்தல்,ஐக்கியநாடுகள் காசாவில் மீண்டும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அனுமதித்தல் போன்ற நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள பிரிட்டிஸ் பிரதமர் இல்லாவிட்டால் எதிர்வரும் செப்டம்பர் ம…

  9. காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு August 23, 2025 7:43 am மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின் வல்லுநர்கள் கூறியுள்ளனர். ” காசாவில் நிலவும் உணவு பஞ்சம் நிச்சயம் தடுக்கக்கூடிய ஒன்றுதான். இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக பாலஸ்தீனத்தின் அந்த பகுதிக்கு உணவு கொண்ட செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.” என்று ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தலைமை பொறுப்பில் உள்ள தாமஸ் தெரிவித்துள்ளார். இதை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், காசாவில் உணவு பஞ்சம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. காசாவில் பஞ்சம் என்பது ஹமாஸ்…

  10. Published By: RAJEEBAN 13 MAR, 2024 | 12:00 PM காசாவில் பட்டினி ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார். காசாவிற்குள் போதியளவு மனிதாபிமான பொருட்கள் செல்ல முடியாமல் உள்ளதை மனிதர்கள் ஏற்படுத்திய பேரழிவு என ஜோசப்பொரொல் வர்ணித்துள்ளார். போதிய தரைப்பாதைகள் இல்லாததே காசாவில் உருவாகியுள்ள மனிதாபிமான நெருக்கடிக்கான காரணம் என ஐநாவில் உரையாற்றுகையி;ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார். மக்கள் தற்போது தங்களது உயிர்வாழ்தலிற்காக போராடுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செல்லவேண்டும் ஐரோப்ப…

  11. காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு! காசாவில் உள்ள பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று நடத்திய வான் தாக்குதலில் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவின் ராபா பகுதியை குறிவைத்து நடத்தப்பட்ட இத் தாக்குதலில் அங்குள்ள இஸ்லாமிய பாடசாலை உட்பட அப்பகுதியிலுள்ள பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த கோர தாக்குதலில் 45 பேர் உயிரிழந்தனர் எனவும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தின் இக் கொடூரத் தாக்குதலுக்கு உலக நாடுகளும் கண்டம் வெளியிட்டுள்ளன. காசா – இஸ்ரேல் இடையேயான போர் ஒப்பந்தம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் க…

  12. காசாவில் பொதுமக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்துகின்றோம், காரணம் இல்லாமல் கட்டிடங்களை தீயிட்டு எரிக்கின்றோம் - சிபிஎஸ் நியுசிற்கு இஸ்ரேலிய இராணுவவீரர் தெரிவிப்பு Published By: RAJEEBAN 27 MAR, 2025 | 01:44 PM கட்டிடங்களிற்குள் வெடிபொருட்கள் கண்ணிவெடிகள் உள்ளனவா என பார்ப்பதற்கான காசாவில் இஸ்ரேலிய படையினர் பாலஸ்தீனியர்களையே பயன்படுத்துகின்றனர் என சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவவீரர் ஒருவர் காசாவில் பொதுமக்களை தாங்கள் மனிதக்கேடயங்களாக பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். காசாவிற்கு மீண்டும் யுத்தம் வந்துள்ளது,மார்ச் 17ம் திகதி யுத்தநிறுத்தத்தை கைவிட்டது முதல் இஸ்ரேலிய படையினர் பாலஸ்தீன பகுதி மீது உயிரிழப்பை ஏற்படுத்தும் கடும் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றன…

  13. காசாவில் மயானங்களை கனரக வாகனங்கள் கொண்டு உழுது அழிக்கும் இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸ் தீவிரவாதக் குழுவினர் மீதான காசா யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை பதினாறு மயானங்களை இஸ்ரேலிய இராணுவ அழித்து நாசம் செய்திருப்பதாகத் தெரியந்திருக்கிறது. இவ்வாறு அழிக்கப்பட்டுள்ள மயானங்களின் நினைவுக் கற்கள் புரட்டப்பட்டு, குழிகள் தோண்டப்பட்டு, மனித எச்சங்களும் வெளியே எடுத்து விச்சப்பட்டிருப்பதை அமெரிக்காவின் சி.என்.என் செய்திச்சேவை ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டிருக்கிறது. இறுதியாகக் கான் யூனிஸ் பகுதியில் அமைந்திருந்த மயானத்தை அழித்து, புதைகுழிகளைத் தோண்டிய இஸ்ரேலிய இராணுவம் இஸ்ரேலியர்களை ஹமாஸ் இங்கு ஒளித்து வைத்திருக்கலாம் என்பதனால் மயானத்தை அழிக்கவேண்டி வந்ததாகக் கூறியிருக்கிறது. ய…

  14. Published By: RAJEEBAN 18 DEC, 2023 | 12:15 PM வடகாசாவில் உள்ள மருத்துவமனையொன்றின் நோயாளிகளை இஸ்ரேலிய படையினர் புல்டோசர்களை பயன்படுத்தி நசுக்கிகொலை செய்தனர் என வெளியானகுற்றச்சாட்டுகள் குறித்து பாலஸ்தீன அதிகார சபை விசாரணைகளை கோரியுள்ளது. வடகாசாவில் உள்ள கமால் அட்வான் மருத்துவமனையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மருத்துவமனைக்குஅருகில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்களை இஸ்ரேலிய படையினர் புல்டோசர்களை பயன்படுத்தி அழித்தனர் இதன்போது நோயாளிகள் உட்பட பொதுமக்களை கொலை செய்தனர் என வைத்தியர்களும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் குறிப்பிட்டனர். பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்குவைக்கப்பட்டனர் புல்டோச…

  15. காசாவில் மேலும் 10 பேர் பட்டினியால் மரணம் - உதவிக்காக காத்திருந்த 31 பலஸ்தீனர்கள் பலி sachinthaJuly 24, 2025 காசாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தொடர்புபட்டு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படை நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களை அதிகரித்திருக்கும் நிலையில், அங்கு குண்டு வீச்சுகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளுக்கு அப்பால் பட்டினியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. காசாவுக்காக உதவி விநியோகங்களை இஸ்ரேல் முற்றாக கட்டுப்படுத்தி வருவதோடு கடந்த மார்…

  16. காசாவில் யுத்த நிறுத்தம் - வீதிகளில் மக்களும் ஹமாஸ் உறுப்பினர்களும் - குடும்பத்தவர்களின் கல்லறைகளிற்கு செல்லும் சிலர் –ரொய்ட்டர் Published By: Rajeeban 19 Jan, 2025 | 08:04 PM இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையிலான யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து காசாவில் மக்கள் வீதிகளிற்கு வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேவேளை சிலர் தங்கள் குடும்பத்தவர்களிற்கு கல்லறைகளிற்கு சென்றுகொண்டிருக்கின்ற அதேவேளை ஏனையவர்கள் தங்கள் இஸ்ரேலின் தாக்குதலின் பின்னர் என்ன எஞ்சியிருக்கின்றது என பார்ப்பதற்காக தங்கள் பகுதிகளிற்கு சென்றுகொண்டிருக்கின்றனர். 15மாதங்கள…

  17. Published By: RAJEEBAN 23 FEB, 2025 | 02:09 PM காசாவில் யுத்தத்தில் சிக்கிய ஒரு சிறுவனின் வாழ்க்கையை சித்தரிக்கும் விவரணச்சித்திரத்தை பிபிசி அகற்றியுள்ளதை தொடர்ந்து இஸ்ரேலின்அழுத்தங்கள்காரணமாகவே பிபிசி அதனை அகற்றியதுஎன குற்றச்சாட்டுகள்எழுந்துள்ளன. காசா - போர்க்களத்தில் எப்படி உயிர்தப்புவது என்ற வீடியோவை சில நாட்களிற்கு முன்னர் பிபிசி வெளியிட்டிருந்தது. காசாவின் மீதான இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குதலின் மத்தியில் தப்பிபிழைத்து வாழும் 13 வயது சிறுவனின் வாழ்க்கை பற்றியது இந்த விவரணச்சித்திரம். காசாவில் இடம்பெற்ற பேரழிவு பற்றிய குழந்தைகளின் பார்வை குறித்த கருத்தே இந்த விவரணச்சித்திரம் என தெரிவித்திருந்த பிபிசி ,இது அவர்களின் அனுபவங்களிற்கான விலைமதிப்பற்ற சான்று என நாங்கள் …

  18. காசாவுக்கு அனுப்பப்பட்ட நிவாரணக் கப்பல்கள் மீது இஸ்ரேலியக் கொமாண்டோக்கள் தாக்குதல் இஸ்ரேலிய பொருளாதார மற்றும் ராணுவ முற்றுகைக்குள் அகப்பட்டிருக்கும் காசாப் பகுதி பலஸ்த்தீனியர்களைக் காப்பாற்றும் முயற்சியாக உலகெங்குமுள்ள மனித நேய அமைப்புக்கள், இஸ்லாமிய நிவாரண அமைப்புக்களால் ஒழுங்குசெய்யப்பட்ட நிவாறணக் கப்பல்த் தொகுதி மீது நேற்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளின் கொமாண்டோக்கள் நடத்திய திடீர் தாக்குதலில் இதுவரை 19 நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நிராயுத பாணிகளாக இருந்த கப்பல் சிப்பந்திகள் மீது இக்கொடுமையான தாக்குதலை நடத்திவிட்டு, "கப்பலிலிருந்து எம்மை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன, அதனால்த்தான் திருப்பித் தாக்க வேண்டி ஏற்பட்டத்" என்ற வழமையான அடக்கு…

  19. காசாவுக்கு கிரேட்டா துன்பெர்க் சென்ற கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் 09 Sep, 2025 | 09:57 AM காசாவிற்கு உதவிப் பொருட்களை அனுப்பும் குளோபல் சுமுத் புளோட்டிலா என்ற கப்பல், துனிசியா கடற்கரையில் செவ்வாய்க்கிழமை (09) ட்ரோன் மூலம் தாக்கப்பட்டுள்ளது. காசா பகுதியில் இஸ்ரேலிய முற்றுகையை முறியடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, காலநிலை தொடர்பான சமூக செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் உட்பட 44 நாடுகளைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களை இந்த கப்பல் ஏற்றிச் சென்றுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் அவர்களும் இந்த கப்பலில் சென்றுள்ளார். “குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களை ஏற்றிச் செ…

  20. அக்டோபரில் இருந்து காசாவுக்கு 12 லாரிகளில் மட்டுமே உணவு, தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆக்ஸ்ஃபாம் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டப்பட்ட அறிக்கையில், “வடக்கு காசாவுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட 34 லாரிகளில் கடந்த இரண்டரை மாதத்தில் வெறும் 12 லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் ராணுவம் வேண்டுமென்றே காட்டிய கெடுபிடிகளால் உணவு, தண்ணீரை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது. இத்தகைய கெடுபிடிகளால் காசாவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் ஆக்ஸ்ஃபாம் சுட்டிக் காட்டுகிறது. மேலும், “மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் ராணுவம் இரக்கமின்றி நடந்து கொள்கிறத…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் காசாவை மீண்டும் ஆக்கிரமித்தால் அது மிகப்பெரும் தவறாக அமைந்துவிடும், என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தொலைக்காட்சி சேனலான சி.பி.எஸ்.ஸிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்தச் சேனலில் ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "இஸ்ரேல் மீண்டும் காசாவை ஆக்கிரமிப்பது தவறு," என்று கூறினார். ஆனால், "தீவிரவாதிகளை" அகற்றுவது "மிகவும் அவசியமானது" என்று அவர் கூறினார். மேலும், ஹமாஸ் ‘முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமா’ என்று கேட்கப்பட்டக் கேள்விக்கு, ‘ஆம்’ என்று பைடன் பதிலளித்தார். மேலும் பேசிய அவர், "பாலத்தீனத்தி…

  22. காசா முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7- ஆம் தேதி முதல் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இஸ்ரேல் – காசா இடையேயான முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மார்ச் 1ஆம் தேதி முடிவுக்கு வந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்த காலத்தை ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கலாம் என்று அமெரிக்கா யோசனை தெரிவித்தது. இதனை நிராகரித்துவிட்ட ஹமாஸ் அமைப்பு தங்கள் வசம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கவும் மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. கடந்த மார்ச் 19ஆம் தேதி காசா பகுதியில் இஸ்…

  23. காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; 60,000 ரிசர்வ் வீரர்களுக்கு அழைப்பு! காசா நகரைக் கைப்பற்றுவதற்கான திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் அளித்துள்ளார். அதைச் செயல்படுத்த சுமார் 60,000 ரிசர்வ் வீரர்களை அழைக்கவும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக அவரது அமைச்சு புதன்கிழமை (20) உறுதிப்படுத்தியது. இந்த உத்தரவுகள் உடனடியாக வழங்கப்படவில்லை, மாறாக பல கட்டங்களாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டன. அவற்றுள் சுமார் 40,000-50,000 வீரர்கள் எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி பணிக்கு வர உத்தரவிடப்படுவார்கள். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மற்றொரு கட்டத்தின் கீழும், 2026 பிப்ரவரி-மார்ச் இல் மூன்றாவது கட்டத்தின் கீழும் வீரர்கள் பணிக்கு வர உத்தரவிடப்படுவார்…

  24. Published By: RAJEEBAN 03 MAR, 2024 | 12:07 PM காசாவின் மீது அமெரிக்கா வான்வழியாக மனிதாபிமான உதவிகளை வீசியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று விமானங்கள் பராசூட்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன. ஜோர்தான் விமானப்படையுடன் இணைந்து அமெரிக்கா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. உணவுவாகன தொடரணியை சூழ்ந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 110க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து காசாவிற்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையிலேயே அமெரிக்கா இந்த நடவடிக்கையைமேற்கொண்டுள்ளது. சி130 …

  25. Published By: Rajeeban 05 Aug, 2025 | 11:15 AM காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தனது படையினருக்கு உத்தரவிடவுள்ளார் என சிஎன்என் தெரிவித்துள்ளது. இது குறித்து சிஎன்என் மேலும் தெரிவித்துள்ளதாவது- இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு இராணுவநடவடிக்கைகளை விரிவுபடுத்துவது குறித்து தீவிர ஆர்வத்துடன் உள்ளதாலும்,பேச்சுவார்த்தைகளிற்கு முன்னர் மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வை காணவேண்டும் என ஹமாஸ் வேண்டுகோள் விடுத்துவருவதாலும்,காசாவில் யுத்த நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் முட்டுகட்டைநிலைக்குள் சிக்குண்டுள்ளன. இன்று செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ள பாதுகாப்பு அமைச்சரவையின் கூட்டத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு காசாவை முழுமையாக கைப்பற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.