உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நோர்வே பெண்ணுக்கு டுபாயில் தண்டனை? 20 ஜூலை 2013 பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நோர்வே நாட்டுப் பெண் ஒருவருக்கு டுபாய் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பில் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்ததாகவும், தற்போது தமக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நோர்வேயைச் சேர்ந்த மார்டே டெபோரா டெலிவ் தெரிவித்துள்ளார். டெபோராவிற்கு டுபாய் நீதிமன்றம் பதினாறு மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்தத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தகாத உறவு பேணியதாகவும், மது அருந்தியதாகவும் தெரிவித்து டெபோராவிற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனைக்கு நோர்வே மனித உரிமை அமைப்புக்கள் கடும் எ…
-
- 1 reply
- 422 views
-
-
பிரேசில் சிறையில் கைதிகளுக்கிடையே மூண்ட கலவரத்தை அடக்கும் முயற்சியில் போலீசாரால் கைதிகள் கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 25 போலீசாருக்கு 624 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் உள்ளது சாவோ பவுலோஸ் என்ற ஜெயில். இங்கு 1992-ம் ஆண்டு கைதிகள் இடையே பயங்கர கலவரம் உண்டானது. கலவரத்தை அடக்க போலீசார் கடும் முயற்சிகள் மேற்கொண்டனர். இந்தக் கலவரத்தில் சுமார் 111 கைதிகள் பரிதாபமாக பலியானார்கள். அவர்களில் 52 கைதிகள் போலீசாரின் குண்டடியில் பலியானவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. எனவே, போலீசார் மிகவும் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டதாக, அவர்கள் மீது வழக்கு தொடரப் பட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலே நடைபெற்ற வழக்கில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. க…
-
- 1 reply
- 366 views
-
-
சிரியா மீது ரசாயண தாக்குதல் ஏற்படுத்திய ராணுவவீரர் – அதிர்ச்சியில் அதிபர் ஆசத் சிரியாவில் உள்ள அப்பாவி குடிமக்கள் மீது ரசாயன தாக்குதல் நடத்தியது அந்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் என தற்போது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் சில தினங்களுக்கு முன்னர் ரசாயன தாக்குதல் நிகழ்த்தியதில் 87 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு தங்களுடைய ராணுவம் காரணம் இல்லை என ரஷ்யா மற்றும் அமெரிக்கா மறுப்பு தெரிவித்தன. அதே சமயம், இந்த கொடூரமான தாக்குதலை நாங்கள் நிகழ்த்தவில்லை என சிரியா அரசும் மறுத்துள்ளது. இந்நிலையில், சிரியா மீது ரசாயன தாக்குதலை நடத்தியது அந்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் என்பது தற்போது ஆதாரப்பூர…
-
- 0 replies
- 417 views
-
-
ஜேர்மனியில்... கொரோனா, தொற்று வீதத்தில் வீழ்ச்சி. ஜேர்மனியில் கொரோனா தொற்று வீதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக சமீபத்தைய தரவுகள் காட்டுகின்றன. அதன்படி ஏழு நாட்களில் கொரோனா தொற்று வீதம் 100,000 பேரில் 13.2 ஆக பதிவாவதாகவும் இது கடந்த வாரத்தில் இது 20 க்கு மேல் இருந்தது என்றும் தரவுகள் காட்டுகின்றன. இருப்பினும் கொரோனா தொற்றுடன் தொடர்புடைய இறப்புகளின் எண்ணிக்கை 90,000 ஐ கடந்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 137 இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2021/1223054
-
- 0 replies
- 563 views
-
-
டெல்லி: 2ஜி ஊழல், நிலக்கரி இறக்குமதி ஊழல் எல்லாம் ஜுஜுபியாக தெரிகிறது.... தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய பரபரப்பான ஊழல் விவகாரம். அதாவது ரூ. 60 லட்சம் கோடி மதிப்பிலான தோரியம் ஊழல்தான் இந்தப் புதிய பரபரப்பு. இந்தியக் கடல் பகுதியிலிருந்து ரூ. 60 லட்சம் கோடி மதிப்பிலான தோரியம் சுரண்டப்பட்டுள்ளதாக இந்தப் பரபரப்பு ஊழல் கூறுகிறது. நாட்டின் இயற்கை வளங்கள் எந்த அளவுக்கு மிக மோசமான முறையிலும், மகா மோசடியாகவும் சுரண்ட்டப்பட்டு வருகிறது என்பதற்கு இந்த ஊழல் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அமைந்துள்ளது. மேலும் அணு சக்தி எரிபொருளான தோரியம், தவறானவர்களின் கைகளுக்குப் போகும் மகா பயங்கரமான ஆபத்தும் இதில் மறைந்திருப்பது பெரும் கவலை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. வழக்கம…
-
- 0 replies
- 673 views
-
-
சென்னை: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இலங்கை-தமிழக மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யக் கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்குவதையும், கைது செய்வதையும் தடுக்கும் வகையில் தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதற்காக நான் தங்களுக்கு கடிதம் எழுகிறேன். கடந்த சில வருடங்களாக தமிழக மீனவர்களை தாக்குவது மற்றும் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பாக்ஜலசந்தி தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதியாகும். ஆனால் அதை தடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடந்து வருக…
-
- 0 replies
- 479 views
-
-
ஃபிரான்ஸ் அதிரடி: பெட்ரோல், டீசல் கார்களுக்கு வருகிறது ஒட்டுமொத்த தடை படத்தின் காப்புரிமைREUTERS வரும் 2040 ஆம் ஆண்டிற்குள், பெட்ரோல் அல்லது டீசலை எரிபொருளாக பயன்படுத்தும் எந்தவொரு கார் விற்பனையையும் ஃபிரான்ஸ் தடைவிதிக்க உள்ளது. இதனை ஒரு புரட்சி என்று சூழலியல்துறை அமைச்சர் அழைத்துள்ளார். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் மீதான திட்டமிடப்பட்ட தடையை நிகோலஸ் ஹுயுலோ அறிவித்துள்ளார். 2050 ஆம் ஆண்டிற்குள் கார்பன் வெளியீடு இல்லாத நாடாக ஃபிரான்ஸ் உருவாக திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஃபிரெஞ்சு சந்தையில் ஹைபிரிட் கார்களின் சந்தை 3.5% ஆக உள்ளது. அதில…
-
- 0 replies
- 258 views
-
-
காபூல் இராணுவ மருத்துவமனை மீது தாக்குதல் – 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இராணுவ மருத்துவமனையில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. 400 படுக்கைகள் கொண்ட சர்தார் தாவுத் கான் மருத்துவமனையை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்-கே, பொறுப்பேற்றுள்ளது. இதற்கு முன்னர் பொதுமக்கள் மற்றும் தலிபான் போராளிகளை குறிவைத்து நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்கும் குறித்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் தாக…
-
- 0 replies
- 297 views
-
-
திகில் சம்பவம் : விமானத்தின் முன்சக்கரத்தில் பயணித்த நபருக்கு என்ன நடந்தது.? டொமினிக் குடியரசிலிருந்து மியாமியை நோக்கிப் பயணித்த அமெரிக்கன் எயார்வேய்ஸ் விமானத்தின் முன் சக்கரங்களுக்கு இடையிலுள்ள இடைவெளியில் –-65 பாகை பரனைட் அளவான உறைய வைக்கும் குளிரில் மறைந்திருந்து ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரம் உயிராபத்தான பயணத்தை மேற்கொண்ட குடியேற்றவாசியொருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் தப்பியுள்ளார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. டொமினிக் குடியரசைச் சேர்ந்தவரான அந்த நபர், அமெரிக்கன் எயார்வேய்ஸ் எ…
-
- 0 replies
- 308 views
-
-
எர்மா போன்ற சூறாவளிகள் எவ்வாறு நகருகின்றன, எப்படியான ஆபத்தை அவை ஏற்படுத்தும் என்பதை அறிய விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் ஒரு ஆபத்தான வான் பயணம் குறித்த செய்தித் தொகுப்பு, கடந்த இரு வாரங்களில் மியான்மரில் இருந்து வங்கதேசத்துக்கு இரண்டு லட்சத்து எழுபதாயிரம் ரொஹிஞ்சாக்கள் வந்ததாக ஐநா கூறுகின்றது மற்றும் காஃபியின் பிறப்பிடமான எத்தியோப்பியாவில் அது அழிந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது - இது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 393 views
-
-
இஸ்ரேலின் முன்னாள் பிரதமரான ஏரியல் ஷரோன் காலமானார். அவருக்கு வயது 85. அரசியல் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த காலத்தில், திடீரென்று தாக்கிய மூளை ரத்தக்கசிவு- ரத்த உறைவினால் ஏற்பட்ட பக்கவாதத்தால் 2006-ம் ஆண்டிலிருந்து ஏரியல் ஷரோன் கோமா நிலையிலேயே இருந்துவந்தார். சிறுநீரகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான உடல் உறுப்புகள் செயலிழந்துபோயிருந்த நிலையில் அண்மைய நாட்களாக அவரது நிலை மோசமடைந்தது. இஸ்ரேலிய வரலாற்றில் ஏரியல் ஷரோனுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இராணுவ ஜெனரலாக இருந்தவர், பின்னர் ஓர் அரசியல்வாதியாகவும் மாறினார். எனினும் மிகவும் சர்ச்சைக்குரிய நபராகவும் ஏரியல் ஷரோன் கருதப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.bbc.co.uk/tamil/global/2014/01/140111_arialsharon.shtml
-
- 1 reply
- 258 views
-
-
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மானை விமர்சனம் செய்த 20க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்களை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது. சவுதி அரேபியாவின் அரசராக சல்மான் உள்ளார். அங்கு பட்டத்து இளவரசராக அவரது மருமகன் முகமது பின் நயீப் இருந்தார். ஆனால் திடீரென அங்கு பட்டத்து இளவரசர் மாற்றி அமைக்கப்பட்டார். ஜூன் 20ல் நடந்த அரச குடும்பத்து கூட்டத்தில் புதிய பட்டத்து இளவரசராக அரசர் சல்மான் மகன், முகமது பின் சல்மான் தேர்வு செய்யப்பட்டார். அதோடு துணை பிரதமர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. ராணுவம், எண்ணெய் வளம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் கவனிக்கும் அனைத்து பொறுப்பும் ஒதுக்கப்பட்டது. ஒட்டுமொத்தத்தில் சவுதியில் மிகவும் சக்திவாய்ந்த அரச குடும்ப வாரிசாக அவர்…
-
- 0 replies
- 585 views
-
-
சர்வதேச கடற்பரப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு பொறுப்பேற்க முடியாது: மத்திய அரசு இந்திய எல்லைக்கு அப்பால் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டால் அதற்கு இந்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்று மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார். இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு அத்துமீறி வந்து சிறிலங்க கடற்படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு நியாயம் வழங்கக் கோரியும், அதற்குக் காரணமான சிறிலங்க கடற்படையினரை இந்தியாவிற்கு கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோரி கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்தார் தமிழக மனித உரிமைக் கழக்கதின் வழக்கறிஞர் பா. ப…
-
- 2 replies
- 476 views
-
-
நாடாளுமன்ற அமளி: இதயத்தில் ரத்தம் வடிவதாக மன்மோகன் சிங் ஆதங்கம்! புதுடெல்லி: தெலங்கானா பிரச்னை காரணமாக, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் நடந்துகொள்வதை பார்க்கும்போது தனது இதயத்திலிருந்து ரத்தம் வடிவதாக பிரதமர் மன்மோகன் சிங் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், தமிழக மீனவர் பிரச்னை மற்றும் தெலங்கானா விவகாரத்தால் ஏற்பட்ட அமளியால் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஐதே பிரச்னை காரணமாக கடும் அமளி நிலவியது. ஆந்திர மாநில எம்.பி.க்களின் கடும் கூச்சல் குழப்பங்களுக்கு இடையேதான் ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன் கார்கே, மக்களவையில் இன்று ரயில்வே இடைக்…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
பீஜிங்: உலகின் மிக உயரமான இடத்தில், ரயில் பாதையை அமைத்துள்ள சீனா, அந்த ரயில் பாதையை, இந்திய எல்லை வரை நீட்டித்துள்ளது. ரயில் பாதை அமைப்பதில், உலக நாடுகளில், சீனா முன்னோடியாக உள்ளது. மற்ற நாடுகளிலும், சீனா ரயில் பாதை அமைத்து தரும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, சீனா, ஷாங்காய் மற்றும் திபெத்திற்கு இடையில் அமைத்துள்ள ரயில் பாதையை, பஞ்சன் லாமாவில் இருந்து, ஷீகாஜ் வரை நீட்டித்துள்ளது. இந்தியாவின், சிக்கிம் மாநிலத்திற்கு அருகில், ஷீகாஜ் எல்லை உள்ளது. புதிய ரயில் தடத்தால், லுகாசாவில் இருந்து, 253 கி.மீ., தூரத்தில் உள்ள, ஷீகாஜ்ஜை, பயணிகள், இரண்டு மணி நேரத்தில் சென்றடைவர். அக்டோபர் முதல் வாரத்தில், செயல்படத் துவங்கும் இந்தப் பாதையின் பணிகள், 93 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக, சீ…
-
- 1 reply
- 513 views
-
-
எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதப் போர் மூளலாம்: ஐ.நா-வில் கறுவிய வடகொரியா ஐக்கிய நாடுகள் சபைக்கான வடகொரியாவின் துணைத் தூதர் கிம் இன் யாங், 'எந்தக் கணத்திலும் அணு ஆயுதப் போர் வெடிக்கலாம்' என்று எச்சரிக்கும் தொனியில் தெரிவித்துள்ளார். மேலும், '1970-களுக்குப் பிறகு அமெரிக்காவால் மிகத் தீவிரமான அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நாடு, வடகொரியா மட்டும்தான். ஆகையால், தற்காப்புக்காக அணு ஆயுதங்களை உருவாக்கிக்கொள்ள வடகொரியாவுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. கொரிய தீபகற்பத்தில் பிரச்னை மிகவும் தீவிரமாக இருக்கிறது. எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் அணு ஆயுதப் போர் மூள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது' என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் த…
-
- 0 replies
- 396 views
-
-
24 மணி நேரத்தில்... 694 உக்ரைன் போராளிகள், சரணடைவு – ரஷ்யா 694 உக்ரைன் போராளிகள் சரணடைந்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக ரஷ்யாவின் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மரியுபோலின் அசோவ்ஸ்டல் ஸ்டீல்வேர்க்கில் பதுங்கியிருந்தவர்களே இவ்வாறு சரணடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை முதல், தொழிற்சாலையில் தங்கியிருந்த மொத்தம் 959 போராளிகள் சரணடைந்துள்ளனர். அவர்களில் 80 பேர் காயமடைந்துள்ளனர் என ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2022/1282631
-
- 1 reply
- 320 views
-
-
இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பை, ஆரம்பித்து வைத்தார் ஜோ பைடன்! இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொடங்கி வைத்துள்ளார். பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஜப்பான் சென்றுள்ள ஜோ பைடன், நேற்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக தொடங்கி வைத்தார். அமெரிக்கா தலைமையிலான இந்த கட்டமைப்பில் ஜப்பான், அவுஸ்ரேலியா உட்பட 13 நாடுகளை அவர் இணைத்துள்ளார். அமெரிக்கா, அவுஸ்ரேலியா, புரூனே, இந்தியா, இந்தோனீசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம், தாய்வான் ஆகிய 13 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இவை ஆரம்பக்கட்ட உறுப்பு நாடுகள்தான் இந்த கட்டமைப்புக்குள் மேலும் சில நாடுகள் சேர வாய்ப்…
-
- 0 replies
- 285 views
-
-
தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்: இலங்கை போர்க்குற்றத்தை விசாரிக்கும் ஐ.நா.சபையின் நிபுணர் குழு தமிழ் மக்களுக்கும், நாளிதழ்களுக்கும் ஒரு வேண்டுகோள் இலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்ற செயல்களின் உண்மை நிலையை ஆராயும் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நிறுவியுள்ளது. இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்ணர், தென்னாபிக்காவின் உண்மை நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவில் பணியாற்றியவரும் அந்த நாட்டை சேர்ந்தவருமான யஸ்மின் சூகா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். http://www.un.org/news/ossg/hilites.htm எனவே ஒவ்வொரு தமிழர்களும் அக்குழுவினர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக போர்க்குற…
-
- 0 replies
- 465 views
-
-
ரஷ்ய அதிபர் புதினின் ஒரே எதிரி தேர்தலில் போட்டியிட தடை ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி, அடுத்த வருடம் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால், தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழந்துவிட்டார் என ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால், இந்த முடிவு அரசியல் நோக்கம் கொண்டது என அலெக்ஸி நவால்னி கூறுகிறார். அடுத்த வருடம் மார்ச் மாதம் நடக்க உள்ள வாக்குப்பதிவைப் புறக்கணிக்குமாறு தனது ஆதரவாளர்களை நவால்னி கேட்டுக்கொண்டுள்ளார். 41 வயதான அலெக்ஸி நவால்னி அதிபர் புதினுக்கு சவாலாக இருக்கக்கூடிய ஒரே வேட்பாளராகப் பரவலாக கருதப்பட்டார். ''வாக்கா…
-
- 0 replies
- 305 views
-
-
. தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 அதிமுகவினரையும் அக். 8ம் தேதி தூக்கிலிட உத்தரவு சேலம்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட நெடுஞ்செழியன் , மாது, முனியப்பன் ஆகிய மூன்று முன்னாள் அதிமுகவினரையும் வருகிற அக்டோபர்8ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றுமாறு சேலம் செஷன்ஸ் கோர்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதற்கான வாரண்ட்டை வேலூர் சிறைக்கு சேலம் முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ராகவன் அனுப்பியுள்ளார். கடந்த 2000மாவது ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதா தண்டனை வழங்கி சென்னை தனி கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து தமிழகத்தில் வன்முறை வெடித்தது. தர்மபுரி அருகே நடந்த போராட்டத்தின்போது கோவை வ…
-
- 0 replies
- 590 views
-
-
நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / காதலியிடம் / நிச்சயம் முடிக்கப்பட்ட பெண்ணிடம் தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங்களை பேசி விடுகிறோம். இது யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றோ அல்லது யாரும் இந்த பேச்சுகளை ஒட்டு கேட்க முடியாது என்றோ நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி நீங்கள் யாரேனும் நினைத்திருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். “அறிவியல் வளர வளர சௌகரியங்கள் வளரும், ஆனால் இறுதியில் அந்த அறிவியல் அழிவுக்கே வழிவகுக்கும்”. இது எப்படி அழிவுக்கு வழி வகுக்கும் என…
-
- 0 replies
- 1.8k views
-
-
http://tamil.oneindia.in/news/tamilnadu/tn-cm-jayalalithaa-warns-clubs-on-dhoti-issue-206087.html
-
- 3 replies
- 481 views
-
-
உக்கிரேனிய பிரதமர் அர்ஸெனி யட்ஸெனியுக் வியாழக்கிழமை பதவி விலகியுள்ளார். சக்தி வளத்துறையின் கட்டுப்பாட்டை பொறுப்பேற்பதற்கான சட்டமொன்றை அந்நாட்டு பாராளுமன்றம் நிறைவேற்ற தவறியதையடுத்தே அவர் பதவி விலகியுள்ளார். அதேசமயம் அவரின் பதவி விலகல் இடம்பெறுவதற்கு முன்னர் அன்றைய தினம் இரு கட்சிகள் ஆளும் கூட்டமைப்பில் இருந்து விலகியிருந்தன. ரஷ்யாவின் முகவர்களாகவுள்ள உறுப்பினர்களை பாராளுமன்றத்திலிருந்து அகற்றும் வகையில் புதிய தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு வழிவகை செய்யும் முகமாகவே அந்த கட்சிகள் விலகியிருந்தன. மேற்படி, கட்சிகளின் நடவடிக்கைக்கு உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ வரவேற்பளித்துள்ளார். பிரதமர் அர்ஸெனியின் பதவி விலகலானது கிழக்கு உக்ரேனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள…
-
- 0 replies
- 418 views
-