Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஊழலுக்கு எதிராக நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்களை வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவது தொடர்பாக தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால், ஒருமித்த கருத்து எட்டப்படாததால், எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்ததாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. நிலுவை ஊழல் மசோதாக்கள்: தில்லியில் காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டம் அக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சுஷீல் குமார் ஷிண்டே, சிதம்பரம், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். உயர்நிலைக் குழுவில் இடம்பெ…

  2. குழப்பம் நிறைந்த பேரழிவிற்கு டரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையே முக்கிய காரணம்: ஒபாமா சாடல்! அமெரிக்காவில் தற்போது நிலவும் குழப்பம் நிறைந்த பேரழிவிற்கு ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையே முக்கிய காரணம் என முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கடுமையாக விமர்சித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. தற்போது வரை அங்கு 13 இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும், வைரஸ் பரவலை தடுப்பது என்பது அமெரிக்காவுக்கு மிகவும் கடினமான ஒரு விடயமாகவே உள்ளது. தினசரி பாதிப்பில் எவ்வித மாற்றமும் இல்லாம…

  3. குழி மனிதன் மரணம்: 26 ஆண்டுகள் காட்டுக்குள் தனிமையில் வாழ்ந்த மர்ம நபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VINCENT CARELLI/CORUMBIARA படக்குறிப்பு, முகம் தெரியும் குழி மனிதனின் ஒரே புகைப்படம் புற உலகத் தொடர்பில்லாத, பிரேசிலின் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்த கடைசி நபர் மரணமடைந்தார். இந்தத் தகவலை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். கடந்த 26 ஆண்டுகளாகப் பெயர் தெரியாத அந்த மனிதர் பிறருடன் எந்தத் தொடர்புமின்றித் தனிமையில் வாழ்ந்து வந்தார். அவர் குழி மனிதன் என்று அழைக்கப்பட்டார். காரணம் விலங்குகளைப் பிடிக்கவும் தான் பாதுகாப்பாகப் பதுங்கிக் கொள்ளவும் என ஆழமான குழிகளைத் தோண்டி வந்தார் இவர். …

  4. குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் ஜேர்மன் அகதிகள் முகாம் தீக்கிரை ஜேர்மனியின் அகதிகள் முகாம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முகாமின் பெரும்பகுதி தீக்கிரையானதுடன் அகதிகள் சிலர் காயமுற்றனர். ஜேர்மனியின் வட பகுதியின் டன்கிர்க்கில் உள்ள கிராண்ட்-சிந்த்தே என்ற அகதி முகாமிலேயே உள்ளூர் நேரப்படி நேற்றிரவு இவ்வனர்த்தம் ஏற்பட்டது. சுமார் ஒரு வருடத்துக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட இந்த முகாமின் பல பகுதிகள் மரப் பலகைகளால் ஆனவை. இதனால் தீ எளிதில் பரவியது. இந்த முகாமில் சுமார் ஆயிரத்து 500 பேர் தங்கியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குர்து இனத்தவர். எனினும், அண்மைக்காலமாக உள்நாட்டுப் பிரச்சினை காரணமாக அதிக எண்ணிக்கையிலான ஆப்கானிஸ்தான் அகதிகளும் இங…

  5. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், செப்டம்பர் 21ஆம் திகதி, ‘குவாட்’ எனப்படும் நான்கு நாடுகள் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையிலான உச்சநிலை மாநாட்டை ஏற்று நடத்தவிருக்கிறார். டெலவேர் நகரில் இந்த மாநாடு நடைபெறும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் ‘குவாட்’ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன. நான்காவது முறையாக நடைபெறும் இந்த மாநாடு உத்யோகபூர்வ ஒருங்கிணைப்பு, தடையற்ற, வெளிப்படையான இந்தோ – பசிஃபிக் வட்டாரம் குறித்த ஒருமித்த கருத்து ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டது. அவுஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை வரவேற்க அமெரிக்க ஜனாதிபதி ஆ…

  6. குவாட் கவனத்தை திருப்பிய சீனா By VISHNU 10 SEP, 2022 | 07:56 AM ஹரிகரன் “சீனா ‘யுவான் வாங் 5’ கப்பலை அம்பாந்தோட்டையில் நிறுத்திய அதேவேளை, தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, பசுபிக் பிராந்தியத்தில் உள்ள சொலமன் தீவுகளில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய போர்க்கப்பல்கள் நிறுத்துவதையும் தடுத்து நிறுத்தியது” அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுதிஸ்ரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் வெளிவிவகார அமைச்சுக்களின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் கடந்த 5ஆம், 6ஆம் திகதிகளில் புதுடில்லியில் இடம்பெற்றிருந்தது. இந்தக் கூட்டத்தில், மூன்று முக்கிய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதில் இ…

  7. குவாட்டமாலா: எரிமலை வெடித்ததில் 7 பேர் பலி படத்தின் காப்புரிமைGUATEMALA GOVERNMENT குவாட்டமாலாவிலுள்ள பேகோ என்ற எரிமலை வெடித்ததில் இதுவரை 7பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவாட்டமாலாவின் தலைநகரான குவாட்டமாலா சிட்டிக்கு தென்-மேற்கு திசையில் 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த எரிமலையானது வானத்தை நோக்கி கரும் புகையையும், சாம்பலையும் வெளியிட்டு வருகிறது. ஒரு பெரும் ஆறு போன்று வெளியேறிய எரிமலை குழம்பான லாவா அருகிலுள்ள எல் ரோடியோ என்ற கிராமத்தை சூழ்ந்து நகர்ந்ததில் அங்கிருந்த வீடுகளும், அதிலிருந்தவர்களும் தீயில் சிக்கி பலியாயினர் என்று அந்நா…

  8. குவாத்தமாலாவில் 115 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து; 55 பேர் உயிரிழப்பு! குவாத்தமாலா (Guatemala) தலைநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. திங்கட்கிழமை (10) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் குறைந்தது 55 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவ இடத்தில் 53 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு இருவர் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் பஸ் சாலையில் இருந்து விலகி பாலத்தின் கீழே உள்ள செங்குத்தான 115 அடி (35 மீட்டர்) பள்ளத்…

  9. குவாத்தமாலாவை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி - 150 இற்கும் மேற்பட்டோர் மாயம் குவாத்தமாலாவை தாக்கிய ‘ஈட்டா’ சூறாவளி காரணமாக அங்கு பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு நகரமொன்றும் முற்றாக மண்சரிவில் புதையுண்டதால் 150 பேர் பலியாகியிருக்கலாம் அல்லது காணாமல்போயிருக்கலாமென சர்வதேச ஊடகங்கள் அச்சம் தெரிவிக்கின்றன. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவின் வட மத்திய பகுதியில் உள்ள அல்டா வெர்பாஸ் பிராந்தியத்தை ஈட்டா என்கிற சக்தி வாய்ந்த சூறாவளி நேற்று முன்தினம் தாக்கியது. மணித்தியாலத்திற்கு 225 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய இந்த சூறாவளி காற்றில் பிராந்தியத்திலுள்ள பல்வேறு உடமைகளுக்கும் சேதமேற்பட்டுள்ளதோடு, புயலைத் தொடர்ந்து பெய்த …

  10. குவான்டனாமோ சிறைச்சாலை தொடர்ந்து இயங்கும் உத்தரவில் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார் அமெரிக்காவில் கைதிகளை கொடூரமான சித்திரவதைக்குள்ளாக்கப்படும் சிறைச்சாலையான குவான்டனாமோ சிறைச்சாலை தொடர்ந்து இயங்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார். அமெரிக்க அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற இந்த சிறைச்சாலை கியூபாவின் குவான்டனாமோ பகுதியில் உள்ளது. இங்குள்ள கைதிகளை சித்திரவதைக்குள்ளாக்கும் முறைகளை பற்றி உலகில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில், குவான்டனாமோ சிறைச்சாலை தொடர்ந்து திறந்திருக்கும் உத்தரவில் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார். இந்ததகவலை அவர் அமெரிக்க பாராளுமன்றத்தின் …

  11. வாஷிங்டன்: பெரும் சர்ச்சைக்குள்ளான குவான்டனாமோ தீவு முகாமை மூட அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஒரு ஆண்டில் இந்த தீவு முகாமின் செயல்பாடுகள் முழுமையாக முடிவுக்கு வரும். கியூப கடல் பகுதியில் உள்ள குவான்டனாமோ தீவில் அமெரிக்க கடற்படையின் சிறை முகாம் உள்ளது. இங்கு பல்வேறு கைதிகள் உள்ளனர். நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம் தொடர்பான கைதிகளும், ஈராக் கைதிகளும் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அமெரிக்க அதிகாரிகள் கொடூரமாக சித்திரவதை செய்வதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தன. இந்த சிறை முகாமை மூட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் இந்தக் கோரிக்கைகளை முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் நிராகரித்து வந்தார். ஆனால் அதிபர் தேர்தல் பிரசாரத்தின்ப…

  12. ஐக்கிய அமெரிக்கா, மேற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குவாம் (Guam) தீவுகளில் சுமார் 12.8 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மிகப் பிரமாண்ட இராணுவ தளமொன்றினை அமைத்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேற்படி தளமானது ஏவுகணை எதிர்ப்புக் கட்டமைப்பு , அணுச்சக்தி விமான தாங்கிகளுக்கான கப்பற்துறை உட்பட அதிநவீன கட்டமைப்புக்களை உள்ளடக்கவுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் இராணுவத் தளமொன்றுக்காக மேற்கொள்ளப்படும் மிகப்பாரிய முதலீடு இதுவாகும். அது மட்டுமல்ல, கடந்த காலங்களில் கடற்படை கட்டுமானங்களுக்கென செலவிடப்படவுள்ள மிகப்பெரிய தொகையும் இதுவாகும். எனினும் இந்நடவடிக்கை தமது சாதாரண வாழ்வினை பாதிக்கும் என குவாம் தீவு மக்கள் அச்…

  13. குவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி அயர்லாந்து நாட்டில் சுழன்றடித்த ஒபிலியா புயல் மிக மோசமான சேதத்தை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அப்பிள் தோட்ட விவசாயிகளுக்கு மட்டும் உதவி செய்திருக்கிறது. இந்த சீசனுக்கு விளைந்திருந்த அப்பிள்களைப் பறிப்பது என்பது பல வாரங்களுக்கு செய்ய வேண்டிய கடினமான பணி. கூலியாக பெருமளவு பணமும் செலவாகும் விடயமும் கூட. ஆனால் ஒபிலியா புயல் ஒரே இரவில் அனைத்து அப்பிள்களையும் நிலத்தில் விழுத்தி விட்டது. அப்பிள்கள் என்ன ஆகுமோ என்று பயந்திருந்த விவசாயிகள், மறுநாள் தோட்டங்களுக்குச் சென்று பார்த்தபோது மகிழ்ச்சியடைந்தார்கள். மழையில் ஆப்பிள்கள் அடித்துச் செல்லப்படவில்லை.…

    • 0 replies
    • 1.7k views
  14. குவைத் இளவரசர் சுட்டுக்கொலை கார்கள் குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் குவைத்தின் 19 ஆவது இளவரசர் சேக் பன்சல் அல் சலேம் அவரது மாமா முறையான உறவினர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர், 1965ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டு வரை குவைத்தை ஆண்ட 12ஆவது மன்னரான சேக் சபாவி்ன் பேரனாவார். மாளிகையில் உள்ள கார்களை உபயோகப்படுத்துவது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் காரணமாகவே இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. திகதி: 19.06.2010 // தமிழீழம் http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=9748&cntnt01origid=52&cntnt01returnid=51

  15. குவைத் செல்லும் பணிப்பெண்களிற்கு காத்திருக்கும் புதிய ஆபத்து- அடிமைகளாக சமூக ஊடகங்கள் மூலம் விற்பனை பணிப்பெண்களை சமூக ஊடங்கள் மூலம் அடிமைகளாக விற்க முயன்ற நபர்களை விசாரணைகளிற்கு வருமாறு குவைத் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். பிபிசியின் அராபிய செய்தி பிரிவு பணிப்பெண்கள் அடிமைகளாக சமூக ஊடகங்கள் மூலமாக விற்கப்படுவதை அம்பலப்படுத்திய பின்னரேகுவைத் அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அடிமை சந்தை குறித்த அப்ஸ் காணப்படுவதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது. பணிப்பெண்கள் மாற்றம் ,பணிப்பெண்கள் விற்பனைக்கு போன்ற ஹாஸ்டாக்குகள் மூலமாக பணிப்பெண்களை அடிமைகளாக விற்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக பிபிசிதெரிவித்துள்ளது. பிபிசி இதனை அம்பலப்படுத்த…

  16. பட மூலாதாரம்,AFP 16 டிசம்பர் 2023, 12:56 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகள் வரிசையில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் எண்ணெய் வளம் மிகுந்த நாடாகப் பார்க்கப்படும் குவைத்தின் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா வயது முதிர்வு காரணமாக இன்று மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. குவைத் நாட்டை 263 ஆண்டுகளாக ஆண்டு வரும் சபா குடும்பத்தின் தொடர்ச்சியாக கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்நாட்டின் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத். இவர் யார்? அவரது வரலாறு என்ன? இங்கு விரிவாகப் பார்க்கலாம். ஷேக் நவாஃப் பிறப்பு குவைத்தில், “அமைதியான அதே நேரம் தேவ…

  17. குவைத் தேர்தலில் 27 பெண்கள் போட்டி குவைத் நாட்டில் பாராளுமன்றத்துக்கு நாளை தேர்தல் நடக்கிறது. 50 உறுப்பினர்கள் கொண்ட இந்த சபைக்கு கடந்த 2006-ம் ஆண்டு முதன் முதலாக பெண்கள் போட்டியிட்டனர். ஆனால் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து 2 பெண்கள் மந்திரிகளாக நியமிக்கப்பட்டனர். இப்போது மீண்டும் தேர்தல் நடக்கிறது. இதில் 246 ஆண்களும் அவர்களை எதிர்த்து 27 பெண்களும் போட்டியிடுகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ரோலா தஷ்டி குறிப்பிடத்தக்கவர். இவர் 40களின் மத்தியில் இருக்கிறார். ஒரு பொருளாதார நிபுணர் ஆவார். 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெண்களிலேயே அதிக எண்ணிக்கையில் ஓட்டுக்கள் பெற்றார். http://www.tamilnews.dk/article/worldnews/2181/

    • 0 replies
    • 768 views
  18. குவைத் நீதிபதிகள் 7 பேருக்கு 7 வருட சிறை By DIGITAL DESK 5 28 OCT, 2022 | 05:14 PM குவைத்தின் நீதிபதிகள் 7 பேருக்கு 7 வருடங்களுக்கு அதிகமான சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. லஞ்சம் மற்றும் பணச்சலவை குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் குவைத் மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதிபதிகளுக்கு இத்தண்டனைகளை விதித்துள்ளது. நீதிபதிகள் 7 பேருக்கு 7 முதல் 15 வருடங்கள் வரையான சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டதாக குவைத் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நீதிபதிகள் இருவரை பணியிலிருந்து நீக்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. மற்றொரு நீதிபதி நிராபராதி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபத…

  19. குவைத்தின் தலைநகரில் உள்ள ஒரு ஷியா மசூதியில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலர் இறந்திருப்பதாகச் சொல்லப்பட்டாலும், எவ்வளவு பெரிய தாக்குதல் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. தாக்குதல் நடந்தபோது மசூதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள இமாம் சாதிக் மசூதியில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மசூதிக்கு வெளியில் ரத்த காயங்களுடன் அமர்ந்திருக்கும் பொதுமக்கள்.இம்மாதிரியான தாக்குதல்கள் குவைத்தில் மிக அரிதாகவே நடந்திருக்கின்றன. இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்தக் க…

    • 0 replies
    • 261 views
  20. குவைத் மன்னர் அப்துல்லாஹ் அல் ஷபாஹ் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றப்போவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின்போது தெரிவித்துள்ளார். தான் முழு மனதுடன் கிறிஸ்தாவ மதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக அந் நிகழ்ச்சியின்போதுதெரிவித்துள்ளார். கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்ட காரணத்திற்காக தான் கொல்லப்படலாம் என்றும் மன்னர் தெரிவித்துள்ளார். இவரது அறிவிப்பு குவைத் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.ilankainet.com/2013/07/blog-post_23.html

  21. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விபத்தில் 4 தமிழர்கள் பலி குவைத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் 4 தமிழர்கள் பலியாயினர். குவைத்தில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்று மினா அல் அகமதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 4,60,000 பேரல் எண்ணெய் சுத்திகரிக்கப்படும் நிலையில், நிலையத்தில் உள்ள எரிவாயு ஆலையில் பராமரிப்பு பணிகள் நடந்தபோது கேஸ் பைப் தீடீர் என வெடித்தது. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ராஜாராம் லக்ஷ்மையா ரெட்டி, லோகநாதன் பொன்னையா செந்திவேல், ஜானகிராமன் அர்ஜுனன் மற்றும் சிவச்சந்திரன்ஷண்முகம் ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். இதனை உறுதிபடுத்தியுள்ள இந்திய தூதரக…

  22. குவைத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் – 43 பேர் பாதிப்பு! குவைத்தில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அத்தோடு இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஈரானுக்குச் சென்றவர்கள் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஹுபேயில் 65 ஆயிரத்திற்கும் க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகியும், 2,600 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது. அத்தோடு உலகளவில், இறப்பு எண்ணிக்கை சுமார் 2,800 அதிகரித்துள்ளதுடன், சுமார் 80,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். http://athavannews.com/kuwait-has-43-confirmed-cases-of-coronavirus-health-ministry/

  23. குவைத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம் By DIGITAL DESK 2 17 NOV, 2022 | 04:33 PM குவைத்தில் 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக 2 பெண்கள் உட்பட 7 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகளும் இந்த தண்டனை நிறைவேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவந்த நிலையிலும், அரசு தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இது குறித்து குவைத் அரசுக்குச் சொந்தமான 'குனா' செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, பல்வேறு குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் குவைத் மத்திய சிறைச்சாலையில் நேற்று (16) தூக்கிலிடப்பட்டனா். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டவா்கள…

  24. குவைத்தில் தீ விபத்து – இந்தியர்கள் உட்பட 35 பேர் உயிரிழப்பு! குவைத் நாட்டில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட பயங்க தீ விபத்தில் சிக்கி, குறைந்தது 35 பேர் வரை உயிரிழந்ததாக அந்நாட்டு அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தெற்கு குவைத்தில் மங்காப்(Mangaf) நகரிலுள்ள தொழிலாளர்கள் குடியிருப்பொன்றில், அந்நாட்டு நேரப்படி, இன்று அதிகாலை 6.00 மணிக்கு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தில் உயரிழந்தவர்களில் 4 இந்தியர்களும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், தீ விபத்துக்குள்ளான குறித்த கட்டடத் தொகுதியில் அதிகளவில் மலையால மக்களே வசிப்பதாகவும் தெரியவருகின்றது. இந்நிலையில், விபத்தில் காயமடைந்துவர்களை உடனடியாக மீட்டு அருகிலுள்…

  25. குவைத்துக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா! குவைத்துக்கு 8 அப்பாச்சி ஹெலிகொப்டர்கள் உட்பட 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க இராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குவைத்துக்கு 8 அப்பாச்சி ஏ.எச்.64இ ரக ஹெலிகொப்டர்களை வாங்கவும், 16 அப்பாச்சி ஏ.எச்.64டி ரக ஹெலிகொப்டர்களை மறு உற்பத்தி செய்யவும் கோரியுள்ளது. இதுதவிர பல்வேறு அதிநவீன ஆயுதங்களை வாங்கவும் கோரியுள்ளது. இதன் மொத்த மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்’ எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல் சவுதி அரேபியாவுக்கு 290 மில்லியன் அமெரிக்க டொலர் மதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.