உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26706 topics in this forum
-
ஈரானும் போட்டோஷொப் விளையாட்டுகளும்! ஈரான் அண்மையில் Qaher-313 என்ற போர் விமானத்தை அறிமுகப்படுத்தியது. இவ்விமானம் 'ஸ்டெல்த்' அதாவது ராடார்களுக்கு அகப்படாமல் பயணிக்ககூடிய தொழிநுட்பத்தை உபயோகப்படுத்தி உருவாக்கப்பட்டதென ஈரான் தெரிவித்திருந்தது. இது முழுமையாக தனது சொந்த நாட்டு தயாரிப்பு என ஈரான் அறிவித்திருந்தது. மேலும் அமெரிக்காவின் F-35, F-22 போர் விமானங்களின் வசதிகளையும் Qaher-313 கொண்டுள்ளதாக ஈரான் குறிப்பிட்டிருந்தது. இதன் படங்களும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இதன் படங்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இதன் உண்மைத்தன்மை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன. விமானம் மிகவும் சிறியதாக உள்ளமை, பிளாஸ்ரிக்கினால் உர…
-
- 3 replies
- 611 views
-
-
இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினையில் அமெரிக்காவை தலையிட வேண்டாம் என்கிறது சீனா! by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/10/1603864393125791-720x430.jpg இந்தியாவுக்கும் தங்களுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினையில் மூன்றாவதாக ஒரு நாடு தலையிட முடியாது என சீனா தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு விஜயம் செய்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ, லடாக் பிரச்சினையை பற்றி குறிப்பிடும் போது, இந்தியா தனது இறையாண்மையையும் சுதந்திரத்தையும் காக்க எடுக்கும் முயற்சிகளுக்கு அமெரிக்கா உறுதியான ஆதரவை அளிக்கும் என தெரிவித்தார். இது குறித்து சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவும் சீனாவும் எல்லைப் பிரச்சினையை ராஜ்ய, இராண…
-
- 1 reply
- 560 views
-
-
11 ஏப்ரல் 2013 இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியைக் கொலை செய்வதற்கு மூன்று முறை முயற்சி நடந்தது என்று அமெரிக்க தூதரக தகவலை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உத்தர பிரதேசத்திற்கு ஒருமுறை செஞ்சய் காந்தி வந்தபோது மிகவும் சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொல்ல முயற்சிக்கப்பட்டது என்றும் அந்த அமெரிக்க கேபிள் தகவல் தெரிவிக்கிறது. 1976ல் துப்பாக்கிச் சூடு 1976ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க தூதரகம் அனுப்பிய கடிதத்தில், பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியை அடையாளம் தெரியதா நபர் ஒருவர் கொலை செய்வதற்கு மிகவும் சாதுரியமான முறையில் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது என்று கூறப்பட்டுள்ளது. அவசர நிலை க…
-
- 0 replies
- 534 views
-
-
சிதம்பரம்: நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். ஜிகே மூப்பனார் தான் என்னை தேர்தல் களத்துக்கு கொண்டு வந்தவர். அந்த நன்றியை மறக்கமாட்டேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியின் சிதம்பரம் வேட்பாளர் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்து வேட்பாளர் திருமாவளவனை அறிமுகப்படுத்தினார். இதையடுத்து கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் ஜிகே மூப்பனார் தான் என்னை 1999ல் சிதம்பரம் தொகுதியில் தேர்தல் களத்தில் அறிமுகம் செய்தார். காங்கிரஸ் கட்சிக்கும் எங்களுக்கும் எந்த விரோதமும் கிடையாத…
-
- 11 replies
- 3.6k views
- 1 follower
-
-
25 ஏப்ரல், 2013 வடமேற்கு பர்மாவில் சீனாவின் உதவியுடன் இயங்கும் தாமிரச் சுரங்கத்துக்கு அருகே உள்ள ஒரு சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போது, நடந்த வன்செயல்களில் 10 பேயர் காயமடைந்தனர். மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொனிவா பிரதேசத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களின்போது, உள்ளூர் மக்கள் , நிலத்தை உழுவதைத் தடுக்க போலிசார் தலையிட்ட பின்னர், ஒருவர் காலில் சுடப்பட்டார். இந்த நிலத்தை , பர்மிய சீன கூட்டு நிறுவனம் ஒன்றால் நடத்தப்படும் இந்த சுரங்க நிறுவனம், ஒரு சில உள்ளூர் விவசாயிகளுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து, கையெடுத்துக்கொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தினை சில விவசாயிகள் நிராகரித்தனர். கடந்த ஆண்டு நவம்பரில் போலிசார் இந்த சுரங்கத்தை மறிக…
-
- 0 replies
- 319 views
-
-
மே முதல் வாரம் மன்மோகன், சோனியா, ராகுல் தமிழகம் வருகை ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 26, 2009, 15:16 [iST] தமிழகத்தில் பிரசாரம் செய்வதற்காக மே முதல் வாரம் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் வருகின்றனர். சென்னையில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில், கட்சியின் தேர்தல் அறிக்கையின் தமிழாக்கம் வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர் வயலார் ரவி இதை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் தமிழகத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேச பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வருகின்றனர். மே முதல் வாரம் இவர்கள் வருகின்றனர். அவர்கள் வ…
-
- 10 replies
- 2.6k views
-
-
நைஜீரிய தற்கொலை குண்டு தாக்குதலில் 12 பேர் பலி இராணுவ பாசறை மற்றும் பிரான்ஸ் அரசால் நடத்தப்படும் யுரேனியம் சுரங்கத்தின் மீது நைஜீரியாவில் இயங்கி வரும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் தற்கொலை படை நேற்று நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். மாலியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திவரும் பிரெஞ்சு படைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக முஜ்வா தீவிரவாத இயக்கம் தெரிவித்துள்ளது. நைஜீரியாவின் அகாடேஸ் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மற்றும் அர்லிட் பகுதியில் உள்ள அரேவா யுரேனியம் சுரங்கம் ஆகிய இடங்களில் முஜ்வா இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 21 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 16 வீரர்கள் படு…
-
- 0 replies
- 404 views
-
-
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார்: அமெரிக்கா தகவல் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி, அமெரிக்காவின் வொஷங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசாங்கத்தையும் அந்நாட்டு மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரையும் விமர்சித்து செய்திகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வந்தார். இந்நிலையில் துருக்கி பெண் ஒருவரை ஜமால் கஷோக்கி திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்கு ஆவணங்களை பெறுவதற்காக சென்றார். அப்போது அவர் கொடூரமான முற…
-
- 0 replies
- 448 views
-
-
'பெண்கள் போல நடந்து கொள்ளுங்கள்!'- ட்ரம்பின் அதிரடி உத்தரவு அதிரடி உத்தரவுகளுக்குச் சொந்தக்காரர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்கள் நுழையக்கூடாது என்று தடை உத்தரவு போட்டு பலரின் வெறுப்புகளையும் சம்பாதிப்பவர், மறுபுறம் H1b விசாவை இறுக்கிப்பிடித்து ஒட்டுமொத்த பிறநாட்டு மக்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் வியாழன் அன்று ஒரு புது அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ட்ரம்ப். அதில் வெள்ளை மாளிகையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். வெள்ளை மாளிகைக்கு வேலைக்கு வரும் அனைத்து ஊழியர்களும் சிறப்பான ஆடை அணிந்து…
-
- 0 replies
- 658 views
-
-
பிரித்தானியாவில், 70 சதவீத பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயம்! கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாடுகள் காரணமாக பிரித்தானியாவில் 70 சதவீத பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்களிடையே பொருட்கள் வாங்கும் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் குறிப்பாக ஒன்லைனில் பொருட்கள் வாங்குவதால் பல்பொருள் அங்காடிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பல்பொருள் அங்காடிகளில் உள்ள அத்தியாவசியமற்ற கடைகள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் சுமார் 700 பல்பொருள் அங்காடிகள் உள்ளன. இவற்றில் 10 சதவீதம் முற்றிலுமாக மூடப்படும் சூழலில் உள்ளன. சில பல்பொருள் அங்காடிகள் பகுதியளவில் குடியிருப்புகளாகவும், அலுவலகங்களாகவும் மாற்…
-
- 6 replies
- 566 views
-
-
வீரகேசரி இணையம் - பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90. சிறிது காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் பட்டம்மாள். தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் என்கிற டி.கே.பட்டம்மாள் பிறந்தது காஞ்சிபுரம் நகரில். இவரது தந்தை பெயர் தாமல் கிருஷ்ணசாமி தீக்ஷிதர். பட்டம்மாளின் தாயார் காந்திமதி என்ற ராஜம்மாவும் ஒரு கர்நாடகப் பாடகியே. மிகப்பெரிய பாடகி என்றாலும், பட்டம்மாள் முறையாக சங்கீதம் கற்கவில்லை. கச்சேரிகளில் பாடல்களைக் கேட்டே தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சுயம்புவாக சங்கீதத்தில் பாண்டித்யம் பெற்றவர் பட்டம்மாள். கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் கர்நாடக இசையில் கொடிகட்டிப் பறந்தார். இவரது சம கால கலைஞர்களான எம்.எஸ்.சுப்புல…
-
- 3 replies
- 1.2k views
-
-
பரபரப்பான ஃபிரான்ஸ் அதிபர் தேர்தல்: முதல் சுற்று வாக்குப்பதிவு துவங்கவுள்ளது ஃபிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவுக்கு, இன்னும் சற்று நேரத்தில் வாக்குச் சாவடிகள் திறக்கப்படவுள்ளன. படத்தின் காப்புரிமைAFP/GETTY Image captionஃபிரான்ஸ் அதிபர் தேர்தல்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் 11 வேட்பாளர்கள் போட்டியிடும் பிரான்ஸ் அதிபர் தேர்தலில், முதல் நான்கு வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி மிகவும் நெருக்கமானதாக பார்க்கப்படுகிறது. இது வரை அரசு பதவிகளில் அங்கம் வகித்திராத தாராளவாத மையவாதியான இமானுவேல் மக்ரோங், தேசியவாத வலது சாரியான மர்ரீன் ல பென் மற்றும் இடதுசாரியான ஷான்-லூக் மெலாங்ஷாங் ஆகிய வேட்பாளர்…
-
- 5 replies
- 1.1k views
-
-
இன்றைய (12/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டம்; மோசமடையும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக தெருவில் இறங்கி போராடும் வெனிசூவேலா மக்கள். * போக்கோ ஹராமால் விடுவிக்கப்பட்டாலும், தம் குடும்பங்களுடன் மீண்டும் இணைய முடியாமல் சிரமப்படும் நைஜீரிய சிறுமிகள். * புவி வெப்பமடைவதால் பாதிக்கப்படும் ஆப்ரிக்க ஆப்பிள் விவசாயிகள்; ஏற்றுமதி சந்தைகளில் வந்து குவியும் வேற்றுநாட்டு ஆப்பிள்களால் கூடுதல் பாதிப்பு.
-
- 0 replies
- 259 views
-
-
இன்றைய (17/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்க அதிபர் மீது மேலும் ஒரு மோசமான குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. இதையடுத்து ஆறுமாதங்களில் இல்லாத வகையில் டாலரின் மதிப்பு வீழ்ச்சி. * இரான் அதிபர் தேர்தலுக்கான இறுதி பிரச்சார நாள். முன்னணி வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி. * முரண்பாடுகளால் சிதறுண்டிருக்கும் மத்திய கிழக்கில் ஒரு முன்மாதிரி ஆய்வு நிலையம். ஜோர்தானில் எதிரி நாடுகளின் விஞ்ஞானிகள் இணைந்து பணியாற்றுகின்றனர்.
-
- 0 replies
- 558 views
-
-
செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழிப் பயணமாகச் செல்ல, உலகெங்கிலிருந்தும் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக, இந்தத் திட்டத்தின் பின்னால் இருப்பவர்கள் கூறுகிறார்கள். சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாயில் ஒரு நிரந்திர தளத்தை அமைக்க 'மார்ஸ் ஒன்' எனப்படும் அந்தத் திட்டக் குழுவினர் எண்ணியுள்ளனர். மிகவும் ஆபத்தான, ஏழு மாதப் பயணத்தை விண்வெளியாளர்களால் எதிர்கொள்ள முடியும் என்றால், செவ்வாய் கிரகத்தில் இந்த நிரந்தரத் தளம் அமைக்கப்படும் . திட்டம் உள்ளது, தொழில்நுட்பம் தேவை செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் க்யூரியாசிட்டி விண்கலன். இந்தத் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் டச்சு பொறியாளர் ஒருவர், 2023 ஆம் ஆண்டு சுமார் நாற்…
-
- 0 replies
- 292 views
-
-
உலகளவில்... கொரோனாவால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 இலட்சத்தைக் கடந்தது உலகளவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 இலட்சத்தைக் கடந்தது. அதன்படி, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 இலட்சத்து 8 ஆயிரத்து 160ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 21.67 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19.36 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், தொற்றுக்கு உள்ளான 1.85 கோடிக்கும் அதிகமானோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 1.13 இலட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அம…
-
- 0 replies
- 362 views
-
-
அண்ணாநகர் : கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று மதியம் 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், கூடையுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தான். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவனைப் பிடித்து விசாரித்தனர். சிறுவனின் பாக்கெட்டில் சுமார் ரூ.2 ஆயிரம் பணம் இருந்தது. அதுபற்றி விசாரித்தபோது, ‘லவ் பேர்ட்ஸ்’ உள்ளிட்ட வளர்ப்பு பறவைகள் விற்பதாக தெரிவித்தான். 13 வயதில் வியாபாரமா? அதுவும் தனி ஒருவனாகவா? நம்ப முடியாமல் போலீசார், அவனை தீவிரமாக விசாரிக்க தொடங்கிய நேரத்தில், வேலூருக்கு செல்லும் தனியார் பஸ் டிரைவர்கள் சிலர் போலீசாரிடம் ஓடி வந்தனர். "சார்.. இவனை எங்களுக்கு ரொம்ப நல்லா தெரியும். தினமும் எங்க வண்டியிலதான் வருவான். நல்ல பையன் சார். வளர்ப்பு பறவைகள் விற்கிறதுதான் இவனோட தொழில். தப்பான பையன…
-
- 9 replies
- 4k views
-
-
பிரேசின் காட்டுத் தீ சம்பவங்கள்: 1.7 கோடி உயிரினங்கள் பலி - மனித குலத்துக்கான எச்சரிக்கை விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CENAP-ICMBIO 2020ஆம் ஆண்டின் இருளுக்கு மத்தியில் பிரேசிலில் உள்ள விஞ்ஞானிகள் ஒரு முக்கிய ஆய்வின் கவலை தரும் முடிவை அறிவித்துள்ளனர். பன்டானல் நீர்நிலை பகுதிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவத்தால் எத்தனை உயிரினங்கள் அழிந்தன என்பதுதான் அந்த ஆய்வு. இந்த ஆய்வில் ஊர்வன, பறவைகள் மற்றும் ப்ரைமேட் வகை விலங்களுகள் என மொத்தம் 1.7 கோடி உயிரினங்கள் உயிரிழந்துள்ளன என கண்டறியப்பட்டுள்ளது. ஜனவரி மற்றும்…
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
முடக்கப்பட்ட நிதியின் பாதித் தொகையை... ஆப்கானின், மனிதாபிமான உதவிகளுக்கு விடுவிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு! தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முடக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் 7 பில்லியன் டொலர்கள் நிதியின் பாதித் தொகையை மனிதாபிமான நிவாரணத்துக்கு விடுவிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் மீதித் தொகையை 2001ஆம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நிவாரணத்துக்கும் விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் ஆப்கானை தலிபான்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டபோது, அந்நாட்டின் வெளிநாட்டு நிதி முடக்கப்பட்டது. இந்த நிதி பெரும்பாலும் அமெரிக்க வங்கிகளில் உள்ளது. முந்தைய ஆப்கான் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்துக்கான நிதி சர்வதேச சமுதாயத்திடம் …
-
- 0 replies
- 142 views
-
-
அகதிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் - பழ. நெடுமாறன் கடும் கண்டனம் செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என பழ.நெடுமாறன் கண்டனம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் குறைகளைத் தீர்ப்பதாக …
-
- 1 reply
- 810 views
-
-
உக்ரைனுக்கு எதிரான... இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு! உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த தீர்ப்பை உக்ரைன் வரவேற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு இந்த உத்தரவு பயனுள்ளதாக இருக்கும் எனவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. இதேவேளை, ரஷ்யாவின் தாக்குதல்கள் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1272225
-
- 0 replies
- 169 views
-
-
ரஷ்யாவில் இருந்து வடகொரியா எரிபொருள் கடத்தல்? தம்மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை மீறி எட்டு வடகொரிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களில் ரஷ்யாவில் இருந்து எரிபொருளை ஏற்றிச் சென்றிருக்கின்றன என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கப்பல்கள் ரஷ்யாவில் இருந்து புறப்பட்டதையும், இடைநடுவில் பாதையை மாற்றி வடகொரியா நோக்கிச் சென்றதையும் கப்பல் பயணத்தை ஆராயும் தமது தொழில்நுட்பம் உறுதிப்படுத்தியிருப்பதாகக் கூறியிருக்கும் ரொய்ட்டர் செய்தி நிறுவனம், வடகொரியாவில் எரிபொருளை இறக்கியதா என்பது குறித்து உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்று தெரிவித்துள்ளது. எனினும், பயணத்தின் நடுவில் பாதை மாற்றிச் செல்வது வடகொரியாவின் ஏமாற்றுத் தந்திரங்…
-
- 0 replies
- 426 views
-
-
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியின் விடுதலை [^] குறித்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தனது முடிவை அறிவிக்கவுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக புதிதாக சிறை ஆலோசனைக் குழுவை அமைத்து பரிசீலனை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சிறை ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு நளினியை சந்தித்து விசாரணை நடத்தியது. பின்னர் மாநில அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில், ந…
-
- 0 replies
- 378 views
-
-
மரணச் சடங்கு செலவு 90 மில்லியன் டொலர்! தாய்லாந்தின் காலஞ்சென்ற முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யதேஜின் மரணச் சடங்குகளை சுமார் 90 மில்லியன் டொலர் - இலங்கை நாணய மதிப்பில் சுமார் 137 கோடி - செலவில் நடத்துவதற்கு அந்நாட்டு அரசு தயாராகிவருகிறது. மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் கடந்த ஆண்டு ஒக்டோபர் 13ஆம் திகதி காலமானார். எனினும், அவரது உடல் அந்நாட்டு மன்னர்குல வழக்கப்படி ஓராண்டு காலத்தின் பின் எரித்துப் பின் புதைக்கப்படவுள்ளது. அதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதி அவரது உடல் எரிக்கப்படவும், மறுநாள் 27ஆம் திகதி அவரது அஸ்தி புதைக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டுகாலமாக, மன்னரின் இறுதிக் கிரியைகளுக்கான திட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வந்துள்ள…
-
- 0 replies
- 603 views
-
-
நவீன துபாயை கட்டமைக்க ரத்தமும் வேர்வையும் சிந்திய இந்தியர்கள் யாரேனும் தனியாகப் பேசும்போது துபாய் அமைத்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை கட்டமைத்தது யார் எனும் விவாதம் அங்குள்ள அனைவரின் மத்தியிலும் நீடித்துக்கொண்டே இருக்கும். ஆனால், பொது வெளியில் யாரும் பேச மாட்டார்கள். பேசினால் அதிகாரிகளின் கோபத்துக்கு அவர்கள் ஆளாக நேரிடும். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபுர்ஜ் கலீஃபா அங்கு வாழும் இந்தியர்கள் அல்லது தெற்காசியர்களிடம் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டால், தாங்கள்தான் அந்நாட்டை கட்டமைத்ததாகக் கூறுவார்கள். அங்கு வாழும் அரேபியர்களிடம் கேட்டால், தங்கள் தலைவர்களும் அவர்களின் தொலைநோக்கு பார்வையுமே பல நாட்டவர்களும் வந்து செல்லும் அந்…
-
- 3 replies
- 716 views
-