உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26710 topics in this forum
-
ஜோர்டான் எல்லையில் எந்த நாட்டுக்கும் சொந்தமற்ற நிலப்பரப்பில் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த சிரியா மக்களுக்கு உதவிகளை விநியோகம் செய்ய, ஜோர்டான் அரசு ஓப்புதல் வழங்கியுள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.கடந்த மாதம் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பு ஜோர்டான் நாட்டு சிப்பாய்கள் ஏழு பேரை முகாமிற்கு அருகில் தற்கொலை தாக்குதலில் கொன்றதையடுத்து, ஜோர்டன் தனது எல்லையை மூடியது. ஜோர்டான் குடியிருப்புவாசிகளின் நிலை குறித்து கவலைகள் வளர்ந்து வருகின்றன.ஆனால் ஐ.நாவின் உணவு முகமை, (WFP) , ஒரே ஒரு முறை உதவிகளை வழங்க ஜோர்டான் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. http://www.seithy.com/br…
-
- 0 replies
- 337 views
-
-
சிரியாவில் பாஷார் அல் ஆசாத் கடந்த 11 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வருகிறார். அவருக்கு எதிராக அந் நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க ராணுவமும் போலீசும் பயன் படுத்தப்பட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருந்தும் போராட்டம் குறையவில்லை. மாறாக தீவிரம் அடைந்துள்ளது. இதற்கிடையேபோராட்டத்தில் ஈடுபட்ட ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 40 வயது வாலிபரின் இறுதி ஊர்வலம் பனியாஸ் நகரில் நேற்று நடந்தது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் சென்ற பொது மக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பலர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து போராட்டம் …
-
- 0 replies
- 620 views
-
-
சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ் அமைப்பினை கட்டுப்படுத்துவது குறித்த சர்வதேசமாநாடு இன்று ரோமில் ஆரம்பம் 02 பெப்ரவரி 2016 சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ் அமைப்பினை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆராயும் சர்வதேச மாநாடு இன்று ரோமில் ஆரம்பமாகின்றது. 23 நாடுகள் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டில் லிபியாவில் எவ்வாறு ஐஎஸ் அமைப்பினை கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது. ரோமில் ஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் 23 நாடுகளும் ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் பிடியில் உள்ள பகுதிகளை எவ்வாறு மீட்பது என்பது குறித்து ஆராயவுள்ளன.. சமீபத்தில் ஐஎஸ் அமைப்பிடமிருந்து மீள கைப்பற்றப்பட்ட திக்ரித் நகரில் எவ்வாறு ஸ்திரதன்மையை ஏற்படுத்துவத…
-
- 0 replies
- 261 views
-
-
சிரியா மீதான அமெரிக்க ராணுவ நடவடிக்கை பிரதமர் மன்மோகன்சிங் எதிர்ப்பு! செயின்ட்பீட்டர்ஸ்பர்க்: சிரியா மீதான அமெரிக்க ராணுவ நடவடிக்கையை இந்தியா ஆதரிக்காது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் ஜி 20 உச்சி மாநாட்டில் சிரியா விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன்சிங், சிரியா ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதற்கான அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது. எந்த ஒரு நாட்டின் மீதுமான ராணுவ நடவடிக்கையால் மாற்றங்களைக் கொண்டுவந்துவிட முடியாது. சிரியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த ஒரு நடவடிக்கையும் ஐக்கிய நாட…
-
- 1 reply
- 467 views
-
-
சிரியாவில் அதிபர் பசார் அல் ஆசாத், பதவியை ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லரி கிளின்டன் நேற்று முன்தினம் எச்சரித்திருந்தார். ஆனால், சிரியா பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும். சிரியா மீது ராணுவ நடவடிக்கை கூடாது. அது நாடுகள் இடையே மோதலை ஏற்படுத்தும் என்று ஐ.நா.வில் இந்தியா சார்பில் நேற்று வலியுறுத்தப்பட்டது. http://www.seithy.co...&language=tamil ஸ்ரீலங்காவில் யுத்தம் நடந்தபோது இந்தியா ஏன் இவ்வாறன கருத்தை வெளியிடவில்லை ?
-
- 4 replies
- 730 views
-
-
சிரியா மீதான தாக்குதலில் இந்தியா மெளனம் காப்பது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து சிரியாவின் பல இடங்களில் ஏவுகணை தாக்குதல்களை சனிக்கிழமை காலையில் நடத்தின. கடந்த வாரம் அரசுப் படைகள் சிரியாவில் நடத்திய ரசாயனத் தாக்குதலுக்குப் பதிலடி நடவடிக்கை இது. சர்வதேச சட்டங்கள் கடுமையாக மீறப…
-
- 0 replies
- 418 views
-
-
தடை செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்களை சிரியா பயன்படுத்தியது சட்டவிரோதமானது என கூறி அந்நாட்டிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முடிவு செய்தது. அதில் ஜனாதிபதி ஒபாமா உறுதியாக இருக்கிறார். சிரியா மீது குறைந்தபட்ச தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் கூறி வருகிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பிரான்சு, துருக்கி, ஜெர்மனி நாடுகள் ஆதரவு கொடுத்தன. சிரியா விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை திரட்ட அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜேன் கெர்ரி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஐரோப்பிய யூனியன் மந்திரிகளை சந்தித்து பேசினார். இதற்கிடையில் ஐரோப்பிய யூனியனில் இடமபெற்றுள்ள 28 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதில் சிரியா அரசாங்கம் கடந்த 21ந் தே…
-
- 0 replies
- 545 views
-
-
சிரியா மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதல் நடத்தினால், அது புதிய ஒரு தீவிரவாத அலையை உருவாக்கி சர்வதேச அளவில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை பெரும் சிக்கலாக்கிவிடும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். அமெரிக்க தினசரி ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையிலேயே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். சிரியாவின் ரசாயன ஆயுதங்களை சர்வதேசத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைப்பது குறித்த ரஷ்யாவின் பிரேரணைகளை விவாதிக்க, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாஃபராவை ஜெனீவாவில் இன்று சந்தித்து பேசவுள்ள நிலையில், புடினின் கட்டுரை வெளியாகியுள்ளது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில், உலகெங்கும் உள்ள லட்சக் கணக்கான மக்கள் அமெரிக்கா…
-
- 0 replies
- 316 views
-
-
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: சிரியா நாட்டின் மீது அமெரிக்கா தலைமையில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் சர்வதேச பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிப்படையும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டுக்காக ரஷ்யா சென்றுள்ள சீனாவின் துணை நிதி அமைச்சர் ஜூ குயாங்யோ செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிரியா ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு ஐக்கிய நாடுகள் சபைதான் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அதைவிடுத்து சர்வதேச நாடுகள் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் நிச்சயமாக சர்வதேச பொருளாதாரத்தில் குறிப்பாக எண்ணெய் விலையில் பெரும் எதிர்விளைவுகளே உருவாகும் என்றார். http://tamil.oneindia.in/news/2013/09/05/world-china-…
-
- 0 replies
- 392 views
-
-
சிரியா மீது அடுத்த ராணுவ நடவடிக்கைக்கு தயார் : அமெரிக்கா ரசாயன ஆயுதங்களை சிரியா பயன்படுத்தியதால், அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுத்த அமெரிக்கா, தனது நலனைக் காப்பதற்காக, அடுத்த நடவடிக்கைக்கும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசிரியாவில் நடக்கும் போரில் பாதிக்கப்பட்ட நபரை தூக்கி செல்லும் வெயிட் ஹெல்மெட் என்ற சிரிய சிவில் பாதுகாப்பு தொண்டர்கள் சிரியாவின் விமானதளத்தின் மீது நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய பிறகு புதிய தாக்குதல் பற்றி பேசியுள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற அவரச கூட்டத்தில் பேசிய அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தேசத்…
-
- 0 replies
- 359 views
-
-
சிரியாவில் இருந்து வந்த மோட்டார் குண்டுகள் கோலான் குன்றுகளில் உள்ள இஸ்ரேலிய காவல்நிலைகளை தாக்கியதாகக் கூறி, சிரியாவுக்குள் தாம் எச்சரிக்கை வேட்டுக்களை சுட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. [size=3][size=4]1973 ஆம் ஆண்டு போருக்குப் பின்னர், தற்போதுதான் இஸ்ரேலிய இராணுவம் சிரியாவுக்குள் சுட்டுள்ளதாக இஸ்ரேலிய வானொலி கூறியுள்ளது.[/size][/size] [size=3][size=4]சிரியாவில் சிரிய அரசாங்கப் படைகளுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இஐயில் நடக்கும் மோதலில் இலக்கு தவறி வந்த செல் ஒன்றே இஸ்ரேலுக்குள் வந்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.[/size][/size] [size=3][size=4]போர் இலக்கணப்படி பார்த்தால் சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான பழைய போர் இன்னமும் முடிவுக்கு வ…
-
- 0 replies
- 787 views
-
-
சிரியா மீது இஸ்ரேல் வான் தாக்குதல் areசிரியாவின் டமாஸ்காஸ் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இத் தாக்குதல் காரணமாக டமாஸ்காஸ் பகுதியிலுள்ள இராணுவக் கிடங்கொன்று தாக்குதலுக்கிலக்கானதில் மூன்று இராணுவத்தினர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். அத்துடன் இஸ்ரேலின் பெரும்பாலான ஏவுகணைகள் தடுத்து அழிக்கப்பட்டுள்ளதாக சிரிய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் இத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. மேலும் விமானங்களை வானில் தாக்கி அழிக்கும் ஏவுகணை சிரியாவில் இருந்து ஏவப்பட்டதைத் தொடர்ந்து தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் ப…
-
- 0 replies
- 506 views
-
-
சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; மூவர் உயிரிழப்பு, 34 பேர் காயம்! சிரியாவின் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகம், ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள ஒரு நிலையம், இராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் என்பவற்றை குறிவைத்து புதன்கிழமை (16) அதிகாலை இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல், அண்மைய ஆண்டுகளில் சிரிய தலைநகர் டமாஸ்கஸின் மையப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய நேரடித் தாக்குதல்களில் ஒன்றாகும். இந்த தாக்குதல்களின் விளைவாக மூன்று பேர் உயிரிழந்ததாகவும், 34 பேர் காயமடைந்ததாகவும் சிரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் மற்றும் சிரிய ஊடகங்கள் இரண்டும் வெளியிட்ட வீடியோ காட்சிகள், மத்திய டமாஸ்கஸில் உள்ள கட்டிடத்தின் மீது வான்வழித் தாக்குதல்கள் ந…
-
- 0 replies
- 141 views
-
-
சிரியா மீது ஐக்கிய இராச்சியம் வீசிய ஏவுகணையில் எழுதப்பட்டிருந்த வசனம்...! சிரியாவில் ஐ.எஸ். நிலைகள் மீது எறிவதற்காக ரோயல் எயார் ஃபோர்சஸ் எடுத்துச் சென்ற ஒரு ஏவுகணையில், பழிக்குப் பழி என்பதைக் குறிப்பிடும் வகையில் ‘மென்ச்செஸ்டரில் இருந்து அன்புடன்...’ என்ற எழுதப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மென்ச்செஸ்டரில், பிரபல பொப் பாடகி அரியானா கிராண்டேயின் இசை நிகழ்ச்சியின்போது ஐ.எஸ். தற்கொலைப் படை இளைஞன் ஒருவன் நடத்திய தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் - குறிப்பாக இளைஞர், யுவதிகள் மற்றும் சிறுவர், சிறுமியர் - 22 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, சிரியாவில் நிலைகொண்டிருக்கும் ஐ.எஸ். இயக்கத்தின் முகாம்கள் மீது ஐக்கிய இராச்சியத்தின் ரோயல்…
-
- 2 replies
- 468 views
-
-
சிரியா அரசுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் மிகவும் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் நிகழ்ந்த ரசாயன ஆயுதத் தாக்குதலில் ஏராளமானோர் பலியான சம்பவம் உலகளாவிய கண்டனத்துக்குள்ளானது. இந்நிலையில் சிரியா அரசுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. இதற்கு ரஷ்யா எதிப்புத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோ, அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஜான் கெர்ரியை ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, சிரியாவில…
-
- 4 replies
- 703 views
-
-
சிரியாவில் அரசுப்படைகள் இரசாயனக் குண்டுகளை வீசி ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களைக் கொன்றுள்ள நிலையில், அமெரிக்காவின் ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் ஒன்று மத்தியத்தரைக்கடல் விரைகிறது. ஏற்கனவே அப்பிராந்தியத்தில் மூன்று அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பல் மூலம் அதன் எண்ணிக்கை நான்காக உயர்கிறது. இருந்தும் சிரியாவிற்கு எதிராக எந்த தாக்குதலையும் தொடுக்க ஆயுத்தமாக இருக்கும்படி எங்களுக்கு உத்தரவும் வரவில்லை என்று அங்குள்ள அமெரிக்க கப்பற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிரியாவில் பொதுமக்களுக்கு எதிராக ரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா சிரியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்த தீர்மானித்துக் …
-
- 22 replies
- 1.4k views
-
-
வாஷிங்டன்: சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்கா மும்முரம் காட்டி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் நட்பு நாடுகள் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தராமல் நழுவி வருவதால் அமெரிக்க அதிபர் ஒபாமா அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சிரியாவில் புரட்சி நடத்துவோரை அதிபர் ஆசாத்தின் ராணுவம் கடுமையாக ஒடுக்கி வருகிறது. கடந்த 21-ந் தேதி தலைநகர் டமாஸ்கஸ் அருகே ரசாயன குண்டுகளை வீசி குழந்தைகள் உள்பட 1,429 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சிரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்தன. இதற்காக மத்திய தரைக்கடல் பகுதியில் போர் கப்பல்கள் குவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பிரான்சு, ஜெர்ம…
-
- 8 replies
- 1.1k views
-
-
வடக்கு சிரியாவில் துருக்கி மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், துருக்கியின் இரண்டு அமைச்சகங்களுக்கும், மூன்று மூத்த அரசு அதிகாரிகளுக்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது. துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானோடு தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென கோரியதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்தார். அந்தப் பிராந்தியத்திற்கு மிக விரைவில் தான் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் பென்ஸ் கூறியுள்ளார். வடகிழக்குப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள சிரியா ஜனநாயகப் படை என்ற குர்து ஆயுதக் குழுவை அழிக்கும் நோக்கத்துடன் துருக்கி தங்கள் எல்லைப்புறத்தில் இருந்து சிரியா மீது தாக்குதல் தொடுத்து…
-
- 1 reply
- 336 views
-
-
இன்று துருக்கி மீது சிரியாவில் இருந்து ஏவப்பட்ட எவுகணைத்தாக்குதலில் 5 பேர் பலியானதுக்கான பதிலடி என துருக்கி அறிவித்துள்ளது. மேலதிகாமான தகவல் தெரிந்தவர்கள் இணைக்கவும்.
-
- 3 replies
- 1.1k views
-
-
சிரியா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் முடிவு: டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சிரியா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து "விரைவில் முடிவெடுக்கப்படும்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES சிரியாவின் டூமா நகரில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அதை தொடர்ந்து தங்கள் குழு, ந…
-
- 2 replies
- 462 views
-
-
சிரியா மீது நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்? ஏஞ்சலினா ஜோலி சொல்லும் 5 காரணங்கள்! 'அழகான உதடுகளைக் கொண்டவர்' என உலகம் முழுக்க ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியைக் கொண்டாடுவார்கள். ஆனால், அவருடைய அழகான உதடுகள் பேசுவதெல்லாம் உலகில் கைவிடப்பட்ட மக்களுக்காக என்பதே உண்மை. சிரியா அகதிகள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஏஞ்சலினா பேசிய உரை, உலகின் மனசாட்சியை இன்றளவும் உலுக்கி வருகிறது. அந்த உரையின் முக்கியமான 5 பாயிண்ட்கள் இங்கே... 1) " ‘உலக நாடுகளின் தலைவர்களே, குடிமக்களே... உங்களின் நாய்க்குட்டிகள் கூட உச்சபட்ச பாதுகாப்பில் தூங்கும் நேரத்தில்தான், 'என் மகளைத் துப்பாக்கி முனையில் ஒருவன் பாலியல் அடிமையாகக் கடத்திப் போனதைத் தடுக்க வழியின்றி வேடிக்…
-
- 0 replies
- 560 views
-
-
சிரியாவில் போராளிகள் வசமுள்ள பகுதிகளில் நூற்றூக்கணக்கான பொதுமக்கள் இரசாயனக் குண்டுவீச்சுக்குப் பலியானதை அடுத்து, சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதையடுத்து மத்திய தரைக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் ஆயத்த நிலையில் உள்ளன. அமெரிக்க தலைமையில் இப்பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ் படைகள் தாக்குதலை தொடுக்க தயாராகி வருகின்றன. அமெரிக்காவின் ஏவுகணை தாங்கி கப்பல் மத்தியதரைக்கடலுக்கு விரைகிறது. மத்தியத்தரைக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள யூ.எஸ்.எஸ். ஹாரி எஸ். ட்ரூமான் என்ற விமானந்தாங்கி கப்பல் சூயஸ் கால்வாய் வழியாக செங்கடலுக்கு விரைகிறது. இது அங்கிருந்து சிரியா மீது தாக்குதல் நடத்தும். இ…
-
- 10 replies
- 914 views
-
-
சிரியா மீது மானிடப் படுகொலைக் குற்றம் ஐ.நாவின் உத்தியோகப்பற்றற்ற குழுவினர் சிரியா இராணுவம் மானிடப் படுகொலைக் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளதாக அறிவித்துள்ளனர். சிரிய இராணுவத்தினர் பொது மக்களால் நடாத்தப்பட்ட ஆர்பாட்டங்களை அடக்க நயவஞ்சகமான, மனித குலத்திற்கு விரோதமான அழிவு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்பதை ஊர்ஜிதம் செய்யும் திட்டவட்டமான ஆதாரங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒரு நாட்டின் இராணுவம் என்பதை மறந்து சிரிய இராணுவத்தினர் நடக்கும் நடத்தைகள் தமக்கு பெரும் கவலை தருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஐ.நாவின் குழுவினர் மொத்தம் 223 பேரிடம் இது குறித்த விசாரணைகளையும் தகவல்களையும் திரட்டியிருந்தனர். பெருந்தொகையான கைதுகள், சிறைச்சாலைச் சித்திரவதைகள், படுக…
-
- 3 replies
- 668 views
-
-
டெல்லி: சிரியா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் இந்திய பொருளாதாரம் மிகப் பெரும் வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடல் நாடான சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ரசாயன குண்டுகளை சிரியா அரசு பயன்படுத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்றது என்று புகார் சொல்கிறது அமெரிக்கா. இந்த புகார் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினர் சிரியாவுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.தற்போது ஐ.நா. குழு ஆய்வு நடத்தி வந்தாலும் சிரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. இது குறித்து நட்பு நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது. ஆன…
-
- 2 replies
- 811 views
-
-
சிரியா மீது ரசாயண தாக்குதல் ஏற்படுத்திய ராணுவவீரர் – அதிர்ச்சியில் அதிபர் ஆசத் சிரியாவில் உள்ள அப்பாவி குடிமக்கள் மீது ரசாயன தாக்குதல் நடத்தியது அந்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் என தற்போது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் சில தினங்களுக்கு முன்னர் ரசாயன தாக்குதல் நிகழ்த்தியதில் 87 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு தங்களுடைய ராணுவம் காரணம் இல்லை என ரஷ்யா மற்றும் அமெரிக்கா மறுப்பு தெரிவித்தன. அதே சமயம், இந்த கொடூரமான தாக்குதலை நாங்கள் நிகழ்த்தவில்லை என சிரியா அரசும் மறுத்துள்ளது. இந்நிலையில், சிரியா மீது ரசாயன தாக்குதலை நடத்தியது அந்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் என்பது தற்போது ஆதாரப்பூர…
-
- 0 replies
- 417 views
-