உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26631 topics in this forum
-
தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of South – East Asian Nations)1967 ஆகஸ்து 8ம் நாள் தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று இந்த அமைப்பிற்கு 45 வயதாகிறது. இவ்வளவு காலமும் இல்லாத உறுப்பு நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகள் சென்ற வாரம் (யூலை 13-20,2012) வெளிப்பட்டன. ஆசியன் அமைப்பின் ஆரம்ப கால உறுப்பு நாடுகளாக தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர் என்பன இருக்கின்றன. இன்று கம்போடியா. பர்மா, வியற்நாம், லாவோஸ், புரூணை போன்றவை சேர்த்துக் கொண்டபடியால் உறுப்பு நாடுகள் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி. பிராந்திய அமைதி, பரஸ்பர உதவி, கல்வி தொடர்பான பயற்சி மற்றும் ஆராய்ச்சி, தொழில்சார் வளர்ச்சி, பிற பி…
-
- 0 replies
- 671 views
-
-
பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூனின் தாயார் மேரி கமெரூன் ஒரு குழந்தைகள் மையத்தில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில், தற்போது அவரிடமிருந்து பணி பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் கமெரூனின் தாயாரான மேரி கமெரூன் Oxfordshire நகரத்தில் உள்ளChieveley மற்றும் Area என்ற இரு குழந்தைகள் மையத்தில் கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பிரதமர் கமெரூன் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். நகரங்களில் உள்ள நிர்வாக கவுன்சில்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிதியில் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 2020ம் ஆண்டில் இருந்து தற்போது அளிக்கப்படும் நிதியை விட 24 சதவிகிதம் குறைவாக அளிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்…
-
- 0 replies
- 321 views
-
-
ஆப்கானிஸ்தானுக்கு இந்திய உயர்மட்டக் குழுவொன்று விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆப்கானில் இந்திய தூதரகத்திற்கருகில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலையடுத்து, அங்குள்ள நிலைமையை ஆராய்வதற்கே இந்த உயர் அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். காபூலிலுள்ள இந்தியத் தூதரகம் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இந்திய வெளிவிவகார அதிகாரி மற்றும் இராணுவ அதிகாரியும் அடங்குகின்றனர். இந்த தாக்குதலையடுத்து டில்லியில் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி ஆகியோர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெற்றது. இந்த நிலையில் தாக்குதல் இடம்பெற்ற இ…
-
- 0 replies
- 558 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், ஆப்கான் தலைநகர் காபூலில் குண்டுத்தாக்குதலில் இருபத்தெட்டு பேர் கொல்லப்பட்டு, முன்னூறுக்கும் அதிகமானோர் காயம்! புராதன காலத்தில், ஆண்டுக்கணக்கில் நிர்மாணிக்கப்பட்ட பல்மேய்ரா தோரணவாயிலை சில நாட்களிலேயே வடிக்கும் முப்பரிமாண அச்சு இயந்திரம்! விண்வெளிக்கு சென்றுவந்த விதைகளில் பிரிட்டிஷ் பிள்ளைகள் பரிசோதனைகளை செய்கிறார்கள்.
-
- 0 replies
- 336 views
-
-
Published By: DIGITAL DESK 3 20 AUG, 2025 | 04:59 PM உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா மீது மறைமுக அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவின் மீது கடுமையான வரிகளை விதித்ததாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். யுத்தத்தை நிறுத்த மிகப் பெரிய அழுத்தத்தை டிரம்ப் அளித்துள்ளார். இதில் இந்தியா மீதான தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்து உள்ளார். ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று டிரம்ப் மிகவும் தெளிவாக கூறி உள்ளார். ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து வழிகளையும் அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவுடன் இ…
-
-
- 3 replies
- 307 views
- 1 follower
-
-
திடீர் அறிவிப்பு! இஸ்ரேலின் இருப்பு கேள்விக்குறி? [size=5]2012ல் பல நாடுகள் மோதிக்கொள்ளவிருக்கின்றன.அமெரிக்காவும் இஸ்ரேலும் பலமான அச்சுறுத்தல்களை ஈரான் மீது விட்டுகொண்டிருக்கிறார்கள்.இதில் இன்று ஈரான் முதல் முறையாக வெளிப்படையாக தக்க பதிலடியொன்றை கொடுத்துள்ளது.இது முழு உலகையே அதிர வைத்துள்ளது.இதில் இன்னுமொரு சுவாரிஸ்சயம் என்ன என்கிறீர்களா?ஏற்கனவே மேற்குலக நாடுகள் உட்பட பல நாடுகள் மொஸாட் என்ற அமைப்பால் பாதிக்கபட்டுள்ளன.ஆகவே இஸ்ரேல் இல்லாமல் போனால் கவலையில்லை என்பது தான்.ஈரானும் பல வழிகளில் முக்கியமாக வளைகுடா யுத்தங்களால் படிப்பினைகளை கற்றுகொண்டவர்கள்.கீழே படியுங்கள் அவர்களின் சுவரிஸ்யமான அறிக்கைகள்:-[/size] [size=5]ஈரான் நியூக்ளியர் குண்டுகள் பெறுவதை தடுப்பதற்கான …
-
- 5 replies
- 1.9k views
-
-
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது 110 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை 4200 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 24,000 பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த கொரோனா தொற்றுக்கு முதலில் சீனாவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிற நாடுகளில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இத்தாலி, இரான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் சீனாவிற்கு அடுத்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று எந்தளவு பரவி வருகிறது என்பதை வரைப்படங்கள் மூலம் இங்கே உங்களுக்கு விளக்குகிறோம். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்…
-
- 2 replies
- 983 views
-
-
சிரியாவில் குழந்தைகள் மருத்துவமனை மீது விமானத் தாக்குதல்.- 50 பேர் பரிதாப மரணம். சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் அரசுப்படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஐந்து ஆண்டுகளாக இடம்பெற்ற உள்நாட்டுப் போர் அமெரிக்கா, ரஷியா, உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் முடிவுக்கு வந்தது. அங்கு தற்போது சண்டை நிறுத்தம் அமுலில் இருந்து வந்தாலும், அதையும் மீறி சில தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ நகரை மீட்கும் முயற்சியில் அரசுப்படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதற்காக அரசுப்படைகள் நடத்தும் தாக்குதல்களில் அப்பாவி மக்களும்கொல்லப்படுகின்றன…
-
- 0 replies
- 355 views
-
-
ஈராக்கிலிருந்து வெளியேறும் அமெரிக்கப்படையினர்! ஈராக்கின் இராணுவத் தளங்களிலிருந்து அமெரிக்க இராணுவத்தினர் வெளியேறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Al-Qaim இராணுவத்தளம் உள்ளிட்ட 3 தளங்களிலிருந்து எதிர்வரும் இரண்டு வாரங்களில் இவர்கள் வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈராக்கிலுள்ள அமெரிக்காவின் 8 தளங்களின் 3 தளங்களிலிருந்து வௌியேறும் இந்த நடவடிக்கையானது, அந்தநாட்டிலிருந்து அமெரிக்க இராணுவத்தின் பிரசன்னத்தைக் குறைக்கும் சமிக்ஞையாக பார்க்கப்படுகின்றது. ஈரான் மற்றும் ஈராக்கிய அரசாங்கத்துடனான பதற்றநிலை அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஈராக்கின் இராணுவத் தளங்களிலிருந்து வெளியேறும் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்த தகவ…
-
- 0 replies
- 238 views
-
-
அவுஸ்திரேலிய தொலைக்காட்சி இலங்கைக்கு சாட்டையடி: நேரடி ஆதாரங்களை வெளியிட்டது ! நாளுக்கு நாள், படகுகள் மூலம் தமிழர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துகொண்டு இருக்கும் இவ்வேளை, அவர்கள் உண்மையில் அகதிகள் அல்லர் என்றும் சுகபோக வாழ்விற்காகவே அவர்கள் அவுஸ்திரேலியா வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. கடும் சட்டங்களை அமுலுக்கு கொண்டுவந்துள்ள அவுஸ்திரேலிய அரசின் நடைமுறைகளை உடைக்கும் வண்ணம், அந் நாட்டு தொலைக்காட்சி நேற்றையதினம் ஒரு நிகழ்சியை ஒளிபரப்பியுள்ளது. தாயகத்தில் இறுதிப் போரில் நின்று பல செய்திகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்த ஊடகவியலாளர்களை முன் நிறுத்தி இன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2009ம் ஆண்டும் தமிழர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள், எவ்வகையான குண்டுகள் இலங்கை அரசால் பா…
-
- 0 replies
- 654 views
-
-
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் வுகான் நகரத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதமே மர்மக்காய்ச்சல் இருப்பதாக அங்குள்ள மருத்துவர் ஒருவர் சக மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். வுகானின் இறைச்சிக் கூடத்துக்கு அருகே வசிப்பவர்களுக்கு நான்குபேருக்கு ஒரேவிதமான காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே, நோயாளிகளைக் கையாளும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சமூகஊடகம் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையறிந்த சீன அரசாங்கம் அந்த மருத்துவரை எச்சரித்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மூச்சுவிட்டால் கட…
-
- 13 replies
- 1k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * சீன அதிகாரிகள் மரியாதை இல்லாமல் நடப்பவர்கள்'' என்கிற பிரிட்டிஷ் அரசியின் கருத்தை ஒளிபரப்பிய போது சீனாவில் பிபிசி தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யப்பட்டது! * அடையாளம் இடப்படாத நூற்றுக்கணக்கான அகதிகளின் கல்லறைகள்; ஐரோப்பாவுக்கான பயணம் அவர்களுக்கு கைகூடவில்லை என்பதன் அடையாளம் இவை! * ஆழக்கடலின் மடியில் அழகான பொக்கிஷம்; நேரடியாக படம்பிடித்து ஒளிபரப்பிய நீர்மூழ்கி ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 269 views
-
-
நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த படகிலிருந்து 382 ரோகிங்யா அகதிகள் மீட்பு- 24பேர் பட்டினியால் மரணம் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த படகிலிருந்து 382 ரோகிங்யா அகதிகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள பங்களாதேஸ் கரையோர காவல் படையினர் குறிப்பிட்டபடகிலிருந்த 24 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர். 382 ரோகிங்யா இனத்தவர்களை மீன்பிடிப்படகிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளோம் என கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் பட்டினியால் வாடிய நிலையில் காணப்பட்டனர்,கடந்த 58 நாட்களாக அவர்கள் கடலில் காணப்பட்டுள்ளனர், ஏழு நாட்களாக அவர்களது படகு எங்கள் கடற்பகுதியில் காணப்பட்டுள்ளது என பங்களாதேஸ் அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். மீன்பிடிப்…
-
- 0 replies
- 307 views
-
-
பரிஸ் நகர மக்களிற்கு இலவசமாக 22 மில்லியன் முகக்கவசங்களை வழங்க பரிஸ் நகரசபை முடிவு! பிரான்ஸில் உள்ள பரிஸ் நகர மக்களிற்கு, மேலதிகமாக 22 மில்லியன் முகக்கவசங்களை இலவசமாக கொடுக்க பரிஸ் நகர சபை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ கூறுகையில், ‘இந்த முகக்கவசங்கள் மருத்துவர்களுக்கும், பராமரிப்பாளர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட உள்ளன. இது முக்கியமான பாதுகாப்பு கருவி. அவசியம் தேவையான ஒன்று. பரிஸ் மக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்’ என கூறினார். இதுவரை பரிஸ் நகர மருத்துவமனைகளுக்கு ஆறு மில்லியனுக்கும் மேலான முகக் கவசங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலதிகமாக, 22 மில்லியன் முகக்கவசங்கள் வாங்க …
-
- 0 replies
- 349 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுமுன் நாடாளுமன்ற ஒப்புதல் கோரி பிரிட்டிஷ் அரசுக்கு நோட்டிஸ் பிரிட்டன் , ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் வழிமுறையை, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் தொடங்கமாட்டோம் என்ற உறுதிமொழிகளை பிரிட்டிஷ் அரசிடம் கோரி கடிதம் எழுதியுள்ளதாக, லண்டனிலிருந்து செயல்படும் சட்ட நிறுவனம் ஒன்று கூறுகிறது. அத்தகைய ஒரு நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாத நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது என்று நோட்டிஸ் கொடுப்பது சட்டபூர்வமற்றதாக இருக்கும் என்றும் அத்தகைய முடிவு சட்டச்சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் என்றும், மிஷ்கான் தெ ரேயா என்ற இந்த நிறுவனம் கூறுகிறது. அது பெயர் குறிப்பிடப்படாத வர்த்தகர்கள் மற்றும் கல்வியாளர்கள…
-
- 0 replies
- 133 views
-
-
கேரள இளைஞர் காணாமல் போன இலங்கை மதவழிபாட்டுத் தளம் அடையாளம் காணப்பட்டுள்ளது: கேரள இளைஞர் காணாமல் போன இலங்கை மதவழிபாட்டுத் தளம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கேரளாவைச் சேர்ந்த சிலர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்து கொண்டுள்ளதாக அண்மைய நாட்களில் இந்திய ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலர் இலங்கையின் ஊடாக ஐ.எஸ் தீவிரவாதிகளை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கேரள இளைஞர் ஒருவர் மதம் பற்றிக் கற்றுக் கொள்வதற்காக இலங்கைக்கு சென்றிருந்ததாகவும் அங்கிருந்து அவர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு இலங்கையில் மதம் பற்றிக் கற்றுக்கொண்ட வழிபாட்டுத்…
-
- 0 replies
- 219 views
-
-
துப்பாக்கி தாரி சுட்டதில் மூவர் பலி A GUNMAN with known psychiatric and drug problems has opened fire in a village in southern Switzerland, killing three women and injuring two men, authorities say. News.com
-
- 5 replies
- 968 views
-
-
நீதிமன்றம் மற்றும் காவல் துறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள முதல் 10 ஐரோப்பிய நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. சமீபகாலமாக எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலை ஒப்பிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஐரோப்பிய நாடுகளில் சட்டம் மற்றும் காவல் துறை மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதில் பின்லாந்து நாடு முதல் இடத்தில் உள்ளது. முதல் 10 நாடுகளின் பட்டியலின் விவரம் பின்லாந்து (94%) டென்மார்க் (91) நோர்வே (87) சுவிட்சர்லாந்து (87) சுவீடன் (84) லக்ஸம்பேர்க் (81) பிரான்ஸ் (81) ஆஸ்திரியா (81) எஸ்டோனியா (80) பிரித்தானியா (79) …
-
- 0 replies
- 267 views
-
-
சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் அமைச்சரவை இன்று பதவியேற்பு.. தமிழர்களுக்கு வாய்ப்பு.. சிங்கப்பூர்: பிரதமர் லீ சியென் லூங் அமைச்சரவை சிங்கப்பூரில் இன்று பதவியேற்கிறது. இதில் நிறைய தமிழர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் சர்ச்சைகள் இன்றி நடந்து முடிந்தது. இதில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையில் அமைந்த மக்கள் செயல் கட்சியின் ஆட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மொத்தம் 26.5 லட்சம் வாக்காளர்கள் இத்தேர்தல் மூலம் 93 எம்பிக்களைத் தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில் பிரதமர் லீ சியென் லூங் வெள்ளிக்கிழமை தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார், இந்த அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் மட்டுமின்றி புதிதாக…
-
- 0 replies
- 732 views
-
-
சிறிதாக்கப்பட்ட அணு சாதனங்களை உருவாக்குகிறதா வடகொரியா? ஐ.நா சந்தேகம்! வட கொரியா தனது அணு ஆயுதத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதாகவும், பாலிஸ்டிக் ஏவுகணைகளின் போர்க்கப்பல்களுக்கு பொருந்தும் வகையில் சிறிதாக்கப்பட்ட (miniaturised) அணு சாதனங்களை உருவாக்கியிருக்கலாம் எனவும் ஐ.நா சந்தேகம் வெளியிட்டுள்ளது. ஐ.நா. பொருளாதாரத் தடைகளை கண்காணிக்கும் சுயாதீன வல்லுநர்கள் குழுவின் அறிக்கை இந்த தகவலை தெரிவிக்கின்றது. வட கொரியாவின் கடைசி ஆறு அணுசக்தி சோதனைகள், சிறிதாக்கப்பட்ட அணு சாதனங்களை உருவாக்க உதவியிருக்கலாம் எனவும் சில நாடுகள் நம்புகின்றன. இந்த அறிக்கையினை, 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.பாதுகாப்புக் குழு, வட கொரியா பொருளாதாரத்…
-
- 0 replies
- 587 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இஸ்லாமிய அரசு என்று அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பிடியில் இருக்கும் நூற்றுக்கணக்கான யசிடி குழந்தைகளுக்கு குண்டு தயாரிக்கும் பயிற்சி; அவர்களிடமிருந்து தப்பி வந்த சிறுமி,, பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி. * சீனாவில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் கருத்தொற்றுமை சாத்தியமா? மோசமான பொருளாதாரம், பயங்கரவாத அச்சுறுத்தல், அகதிகள் பிரச்சனை, வர்த்தக உறவு சிக்கல்கள் தீர்க்கப்படுமா? * பிறக்கும்போதே அகதியாக பிறக்கும் அவலம்; சர்வதேச முகாம்களே வீடுகளாக வாழும் ஆயிரக்கணக்கான சிரியாவின் போர்க்கால குழந்தைகள்.
-
- 0 replies
- 617 views
-
-
பிரிட்டனின் பல பாகங்களில் வெள்ளம். போக்குவரத்து பாதிப்பு பிரிட்டனில் திடீரென பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல பாகங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பாகங்கள் வெள்ளத்தினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மில்ரன் நீஸூக்கும் மத்திய லண்டனின் யூஸ்ரனுக்கும் இடையேயான தொடரூந்து வற்ஃபோர்ட் பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரூந்து நிலையங்கள் பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் வெள்ளம் புகுந்துள்ளதாகவும் பல இடங்களில் மின்னல் தாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. …
-
- 3 replies
- 385 views
-
-
டொரண்டோ கல்வித்துறை இயக்ககம் எடுத்த அதிரடி நடவடிக்கையால் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கல்வித்துறை தங்களது பட்ஜெட்டில் $55 மில்லியன் டாலர்கள் மதிப்பில் தற்போது ஆசிரியர்கள் அனுபவித்து வரும் சலுகைகளை அதிரடியாக நீக்கியது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். கல்வித்துறையின்சலுகை பறிப்பு நடவடிக்கையால் 115 முழுநேர ஆசிரியர்கள், 133 மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நூலக அலுவலர்கள், பிரின்சிபால் மற்றும் சில கல்வித்துறை அலுவலர்களும் பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிகிறது. பள்ளி கல்வித்துறையின் பட்ஜெட்டில் மற்ற எல்லா செலவினங்களை விட ஊழியர்களுக்கு சம்பள் வகையில்தான் அதிக செலவு…
-
- 0 replies
- 395 views
-
-
மாலியில் கிளர்ச்சியாளர்களுக்கும், மாலிராணுவம், பிரான்ஸ் கூட்டுப்படைக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டயில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். மாலியில், அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய மெக்ரூப் என்ற கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு கெதிராக போர் தொடுத்து வருகின்றனர். மாலி ராணுவத்திற்கு கடந்த ஜனவரி முதல்பிரான்ஸ் உதவிசெய்து வருகிறது. மாலியின் வடகிழக்கே கோவா நகரில் , கிளர்ச்சியாளர்களுக்கும், பிரான்ஸ், மாலிராணுவ கூட்டுப்படைக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் பிரான்ஸ் வீரர்கள் உள்பட 10 பேர் பலியானதாக பிரான்ஸ் ராணு செய்தி தொடர்பாளர் கூறினார். தொடர்ந்து அங்கு துப்பாக்கிச்சண்ட நடந்து வருகிறது. http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%A…
-
- 1 reply
- 530 views
-
-
ஃபைசெர் கோவிட் தடுப்பு மருந்து வறிய நாடுகளுக்கு உதவாது மில்லியன் அளவுகளைக் கனடா வாங்கியுள்ளது ஜேர்மனியைத் தளமாகக் கொண்டியங்கும் மருந்து தயாரிக்கும் நிறுவனமான ஃபைசெர் (Pfizer), BioNtech எனும் கோவிட் நோய்க்கான தடுப்பு மருந்தொன்றைத் தயாரித்துள்ளதாகவும் அது நோய்த்தடுப்பில் 90% வெற்றியைத் தருமெனவும் கடந்த திங்களன்று அறிவித்திருந்தது. ஆனால் அது அறிவிக்காத முக்கிய விடயம், அம் மருந்தைப் பாதுகாக்க 70 பாகை செல்சியஸுக்குக்கீழ் உறை நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை. நோய்த் தடுப்புக்கான மருந்தைத் தயாரிக்கும் போட்டியில் பல உலக மருந்து நிறுவனங்கள் இரவு பகலாக உழைக்கின்றன. மக்களின் பாதுகாப்பை முன்நிறுத்தாமல் பணம் சம்பாதிப்பதையே குறியாகக் கொண்டு இந் நிறுவனங்கள் செயற்படுகின…
-
- 1 reply
- 675 views
-