உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26706 topics in this forum
-
பெட்ரோலிய விற்பனையில் கோடிகளை குவிக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் இராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஎஸ் தீவிர வாதிகள் தங்கள் பிடியில் உள்ள இடங்களில் எடுக்கப்படும் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர். இப்பணத்தை கொண்டு ஆயுதம் வாங்குவது, இயக்கத்தில் சேர்பவர்களுக்கு சம்பளம் வழங்குவது போன்றவற்றை செய்து வருகின்றனர்.எண்ணெய் விற்பனை மூலம் மாதம்தோறும் சுமார் 300 கோடி ரூபாயை தீவிரவாதிகள் பெற்று வருவதாக ஈரான் உளவுத்துறையினரும், அமெரிக்க அதிகாரிகளும் உறுதிபடுத்தியுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே சிரியா, இராக்கில் பல எண்ணெய் கிணறுகளை ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்து விட்டனர். எண்ணெய…
-
- 1 reply
- 561 views
-
-
தகுதியற்ற அகதிகளை உடனடியாக நாடுகடத்த முடிவு: நிதியுதவியையும் குறைக்க அரசு திட்டம் [ சனிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2015, 06:29.14 மு.ப GMT ] ஜேர்மனி நாட்டில் குடியேற தகுதியற்ற வெளிநாட்டினர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் வகையில் புதிய சட்டத்தை அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலின் ராஜாங்க அதிகாரியான Peter Altmaier நேற்று அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜேர்மனியில் குடியேற ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட அகதிகள் மற்றும் தற்போது குடியேற முயற்சித்து தகுதியற்றதாக தீர்மானிக்கப்பட்ட வெளிநாட்டினர்களை கட்டுப்படுத்த அரசு இன்று(சனிக்கிழமை) கடுமையான புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்த புதிய ச…
-
- 0 replies
- 529 views
-
-
ஐ.நா-வின் 70-வது ஆண்டு விழா கொண்டாட்டம்: கண்டுகொள்ளப்படாத தாஜ்மஹால்! பன்னாட்டு அமைதியையும் பாதுகாப்பையும் பேணிக் காக்கவும், உலக நாடுகளுக்குள் இருக்கும் வேற்றுமைகளை நீக்கவும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தொடங்கப்பட்டு, உலகின் மிகப்பெரிய பொது அமைப்பாகக் கருதப்படும் ஐ.நா.சபையின் 70 வது ஆண்டு விழா, அக்டோபர் 24-ம் தேதி உலகம் முழுக்க வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இதன் ஒரு கட்டமாக பல நாடுகளில் உள்ள உலக நினைவுச் சின்னங்கள் நீல நிறத்தில் மிளிரவுள்ளன. இரண்டு உலகப் போர்களால் சிதையுண்டு, வேற்று கிரகத் தீவுகள் போல் ஆகிப்போன பல தேசங்களில், வேற்றுமை காரணமாக மூன்றாம் உலகப் போர் மூண்டால் மனித குலமே அழிந்துவிடும் எனக்கருதி வலிமை மிக்க ஒரு அமைப்பாக, பல்வேறு நாடுகள் …
-
- 0 replies
- 879 views
-
-
மாலைத்தீவுகள் உதவி ஜனாதிபதி கைது மாலைத் தீவு ஜனாதிபதியை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் அந்நாட்டின் உதவி ஜனாதிபதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாலைத்தீவுகளின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/157384/ம-ல-த-த-வ-கள-உதவ-ஜன-த-பத-க-த-#sthash.CXmClb58.dpuf
-
- 0 replies
- 1.1k views
-
-
மொகரம் ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 16 பேர் பலி! பாகிஸ்தானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் நடத்திய மொகரம் ஊர்வலத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 16 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் மொகரம் பண்டிகைக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் , சிந்து மாகாணத்தில் உள்ள ஜகோபாபாத் என்ற நகரில் இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், சம்பவ இடத்திலேயே 16 பேர் பலியாகினர். இதில் 2 பேர் குழந்தைகள். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சிந்து மாகாணத்தில் கடந்த இரு நாட்களில் நிகழ்த்தப்பட்ட இரண்டாவது பயங்கரவாத சம்பவம் இது. இந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில…
-
- 0 replies
- 932 views
-
-
மெக்ஸிகோவை நெருங்கும் பெரும் சூறாவளி bbc மெக்ஸிகோவை நெருங்கும் பெரும் சூறாவளி மெக்சிகோவில், பட்ரீஷியா சூறாவளி கரைகடக்கும் முன்னதாக தென் மேற்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர். மெக்சிகோவில், பட்ரீஷியா சூறாவளி கரைகடக்கும் முன்னதாக தப்பிபதற்காக மெக்சிகோவின் தென் மேற்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர். மணிக்கு முன்னூற்று இருபத்தைந்து கிலோமீட்டர் வேகமான இந்த சூறாவளிதான் இதுவரை பதியப்பட்டுள்ளவற்றிலேயே மிகவும் வலிமையான சூறாவளி என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த சூறாவளி தாக்கக் கூடிய மூன்று மெக்சிகோ மாகாணங்களில் அவசர நிலை அற…
-
- 1 reply
- 929 views
-
-
பிரான்சை உலுக்கிய மிகப்பெரிய சாலை விபத்து! பிரான்சில் நடந்த சாலை விபத்தில் 42 பேர் பலியாகியுள்ளனர். 1982 -ம் ஆண்டுக்கு பிறகு பிரான்சில் நடந்த மிகப் பெரிய சாலை விபத்து இதுவாகும். பிரான்சின் தென்மேற்கு பகுதியில் போர்டியாக்ஸ் நகரத்தின் அருகே இன்று அதிகாலை 7.30 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுற்றுலா பேருந்து மீது மரம் ஏற்றிச் சென்ற ட்ரக் மோதிய வேகத்தில், இரு வாகனங்களும் தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளன. இதில், பேருந்தில் இருந்த 41 பேர் சம்பவ இடத்திலேயே எரிந்து பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த 9 பேர் போர்டியாக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பெடிட் பெலாஸ் என்ற சிறிய நகரத்தை சேர்ந்த சில முதியவர்கள் பக்கத்து நக…
-
- 0 replies
- 840 views
-
-
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் கார்களுக்கு தடை! நார்வே தலைநகர் ஓஸ்லோவில், அனைத்து கார்களுக்கும் வரும் 2019-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்படுகிறது. இதனால் உலகில் கார்கள் ஓட்ட தடை விதிக்கப்பட்ட முதல் பெரிய நகரம் என்ற பெருமையை ஓஸ்லோ பெறவுள்ளது. நார்வேயின் மிகப் பெரிய நகரமான இங்கு 7 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். நகரில் 3 லட்சத்து 50 ஆயிரம் கார்கள் ஓடுகின்றன. போக்குவரத்து நெரிசலையும், காற்று மாசடைவதை தடுக்கும் வகையிலும் இங்கு அனைத்து கார்களுக்கும் தடை விதிக்க முடிவு செயயப்பட்டுள்ளது. வரும் 2019-ம் ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும்.பேருந்து போக்குவரத்து, ரயில் சேவை வசதியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு சைக்கிளில் செல்பவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு மாற…
-
- 0 replies
- 598 views
-
-
ஸ்லோவீனியாவுக்குள் பெருந்திரளான குடியேறிகள் வருகை ஸ்லொவீனியாவுக்குள் கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் 12,000க்கும் மேற்பட்ட குடியேறிகள் வந்திறங்கியுள்ளதாக, அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது. குடியேறிகள் வருகையை ஸ்லொவீனியா சமாளிப்பதில், ஐரோப்பிய ஒன்றியம் எப்படி உதவ வேண்டும் என்பது தொடர்பிலான பேச்சு வார்த்தைகளுக்காக, குடியேற்றத்துக்கான ஐரோப்பிய ஆணையர் டிமிட்ரிஸ் அப்ரம்போலிஸ் இன்று ஸ்லொவீனியா செல்லும் நிலையில், இந்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. மக்களின் வருகையை சமாளிப்பதில் ஐரோப்பிய ஒன்றித்தின் உதவி வேண்டும் என்று ஸ்லொவீனியாவின் உள்துறை அமைச்சர் வெஸ்னா யோர்கோஸ் நிந்தார் கோரியுள்ளார். ஐரோப்பாவுக்கு பயணிக்கும் குடியேறிகளின் பெரும் எண்ணிக்கையை கையாள ஒருங்கிணைந்த ஐர…
-
- 2 replies
- 751 views
-
-
சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கோல்ஃப் விளையாடத் தடை சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி, ஊழலை ஒழிக்கும் தனது நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அதன் கட்சி உறுப்பினர்கள் கோல்ஃப் கிளப்புகளில் உறுப்பினர்களாக இருப்பதை தடை செய்துள்ளது. கம்யுனிஸ்ட் கட்சியின் மொத்த உறுப்பினர்ள் 88 மில்லியன் பேரும், கோல்ஃப் கழகங்களில் சேர்வதிலிருந்து தடைவிதித்துள்ளதாக, அந்தக் கட்சியின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆடம்பர உணவு உண்பது, மற்றும் முறையற்ற பாலியல் உறவுகளில் ஈடுபடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. 2012 முதல், சீனா ஊழலுக்கு எதிராக ஒரு கடுமையான நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. சீனத் தலைவர்கள், சட்டத்தை விடவும் தமது கட்சியின் ஒழுக்கம் கடுமையாக இருக்க வேண்டும் என…
-
- 0 replies
- 288 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆணுறை வெடிகுண்டுகள்: அலறும் ரஷ்யா! (வீடியோ) டமாஸ்கஸ்: ரஷ்யாவின் போர் விமானங்களை தாக்கி அழிக்க, ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆணுறை வெடிகுண்டுகளை தயாரித்து பறக்கவிட்டு, நெருக்கடி கொடுத்து வரும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன. சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதேபோல் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா, ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் சிரியாவில் கடும் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் சிரியாவின் லடக்கியா மாகாணத்தில…
-
- 7 replies
- 1.3k views
-
-
சர்வதேச ஊடகங்கள் வர்ணித்த இந்த 'நூற்றாண்டின் விவாகரத்து விவாகரத்து பெற்ற தம்பதி. | படம்: ராய்ட்டர்ஸ். ரஷ்ய கோடீஸ்வரர் செய்திருக்கும் உறவு முறிவை இந்த நூற்றாண்டின் விவாகரத்தாக சர்வதேச ஊடகங்கள் வர்ணித்துள்ளன. இவர் தனது முன்னாள் மனைவிக்கு உலகின் அதிகபட்ச ஜீவனாம்சம் தந்திருப்பதே இதற்கு காரணம். ரஷ்ய கோடீஸ்வரரான டிமிட்ரி ரைபோலேவேவ்(47) - எலினா தம்பதிக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. அப்போது எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள 4.2 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 26 ஆயிரத்து 400 கோடி) ஜீவனாம்சத்தை விவாகரத்து செய்ய முன்வந்த தனது கணவர் டிமிட்ரி அளிக்க வேண்டும் என்று எலினா கோரியிருந்தார். இதனை தற்போது டிமிட்ரி ஏற்றுக் கொண்டுள…
-
- 0 replies
- 591 views
-
-
அட்லாண்டிக் சமுத்திரத்தில் உள்ள கெனரி தீவுகளைச் சேர்ந்த El Hierro வுக்கு பிபிசி சென்றது. அந்தக் குட்டித்தீவில் குடிநீருக்கும் மின்சாரத்துக்கும் மக்கள் எதை நம்பியிருக்கிறார்கள்? http://www.bbc.com/tamil/arts_and_culture/2015/10/151020_island_wind
-
- 0 replies
- 557 views
-
-
மனைவியுடன் கொங் ஹீ சிங்கப்பூரின் மிகப்பெரிய திருச்சபை ஒன்றின் ஆறு பொறுப்புதாரிகள், மோசடி வேலைகள் செய்ததாக நீதிமன்றம் ஒன்று குற்றத்தை உறுதிசெய்துள்ளது. 'சிட்டி ஹார்வெஸ்ட்' என்ற திருச்சபையின் தோற்றுநரான கொங் ஹீ, தனது மனைவியை ஒரு பாப் இசை நட்சத்திரமாக மாற்றுவதற்காக செய்த பலன் அளிக்காத முயற்சிகளில் செலவுசெய்வதற்காக திருச்சபை நிதியிலிருந்து ஒருகோடியே எழுபது லட்சம் டாலர்களை, ஹீயும் அவருடைய திருச்சபை சகாக்கள் வேறு ஐந்து பேருமாக சேர்ந்து கையாடியிருந்தனர் என்று குற்றங்காணப்பட்டுள்ளது. தாங்கள் செய்த தப்பு வெளியில் வரக்கூடாது என்பதற்காக மேலும் ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் டாலர்களை அவர்கள் பயன்படுத்தியிருந்தனர் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்தவரல்லாதவர்களை தாம் ஈர்ப்பதற்கான வ…
-
- 2 replies
- 613 views
-
-
ஐ.எஸ்ஸுக்கு எதிரான தாக்குதலிலிருந்து விலகுவதாக கனேடிய பிரதமர் அறிவிப்பு ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபடுவதிலிருந்து விலகுவதாக கனடாவின் புதிய பிரதமர் அறிவித்துள்ளார். ஐ.எஸ். அமைப்பின் செயற்பாடுகளை ஒடுக்கும் பொருட்டு, ஈராக் மற்றும் சிரியா நாடுகளில், சர்வதேச நாடுகளின் படைகள் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளன. கனடா சார்பில், ஜெட் ரக போர்விமானங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, கனடாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜஸ்டின் டிரிடியூ, ஈராக் மற்றும் சிரியா நாடுகளிலிருந்து போர்விமான பாதுகாப்பை மீளப் பெற உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு கா…
-
- 2 replies
- 477 views
-
-
சுவாரசியம் பெறும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் அமெரிக்காவின் 58ஆவது ஜனாதிபதித் தேர்தல், நவம்பர் 8, 2016இல் இடம்பெறவுள்ள நிலையில், அத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான பிரசாரங்களும் போட்டிகளும் சூடுபிடித்து வருகின்றன. இப்போதைக்கு, ஜனநாயகக் கட்சியினதும் குடியரசுக் கட்சியினதும் வேட்பாளர்கள், தங்களுக்கிடையில் மோதி வருகின்றார்கள். ஆனால், குறித்த இரண்டு கட்சிகளினதும் வேட்புமனு கிடைத்தாவர்களில் சிலர், சுயாதீன வேட்பாளர்களாகப் போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயகக் கட்சி சார்பான வேட்பாளராகத் தெரிவாகுவதற்கான முதலாவது விவாதத்திலும் கூட பங்குபற்றிய ஜிம் வெப், அப்போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளதோடு மாத்திரமல்லாமல், சுய…
-
- 0 replies
- 487 views
-
-
சிரிய நெருக்கடி: ரஷ்ய அதிரடி எல்லாக் கதைகளும் எதிர்பார்த்தபடி முடிவதில்லை. சில கதைகளில் எதிர்பாராத திருப்பங்கள் எதிர்பாராதபோது ஏற்படலாம். அவை சில சமயம் கதைகளின் முடிவுகளையே மாற்றிவிடும். அதனால் அத் திருப்பத்துக்காகவே அக் கதை காத்துக்கொண்டிருந்தது போன்ற மயக்கம் ஏற்படலாம். எனினும் பொதுவாகவே திருப்பங்கள் சுவாரசியமானவை. நான்கு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் சிரிய நெருக்கடியும் அதையொட்டிப் பல்முனைகளில் வெடித்த சிரிய உள்நாட்டு யுத்தமும் இப்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளன. சிரியாவில் பஷர் அல் அசாத் ஆட்சியை அகற்ற அமெரிக்காவினதும் மேற்குலகினதும் நேரடி ஆதரவுடன் களமிறங்கிய 'சிரிய விடுதலை இராணுவம்' என்ற கிளர்ச்சிப் படைகளுடன் அல் நுஸ்ரா, ஐ.எஸ்.ஐ.எஸ். ஆகியன கைகோர்த்து சிரிய இராணு…
-
- 0 replies
- 559 views
-
-
லண்டன் மாநகரக் காவல்துறையில் சற்று வித்தியாசமான திறன் படைத்தவர்கள் இருக்கின்றனர். தாங்கள் பார்க்கின்ற கிட்டத்தட்ட எல்லா முகங்களையும் நினைவில் வைத்துக்கொள்ளும் அசாத்திய திறமை இந்த சூப்பர் ரெக்கக்னைசர்களுக்கு (Super Recogniser) உள்ளது. மக்கள் கூட்டங்களுக்குள்ளே குற்றவாளிகளையும் சந்தேகநபர்களையும் தங்களின் கழுகுக் கண்களைக் கொண்டு கண்டுபிடிப்பது தான் அவர்களின் வேலை. http://www.bbc.com/tamil/global/2015/10/151021_super_recognisers
-
- 0 replies
- 618 views
-
-
புட்டினும் அசாடும் திடீர் சந்திப்பு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட் இருவரும், மொஸ்கோவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான தகவல்களை, ரஷ்யப் பேச்சாளரொருவர் இன்று வெளியிட்டார். செவ்வாயன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும், ரஷ்ய ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே அவர் பயணித்ததாகவும் அறிவிக்கப்படுகின்றது. வெளிநாடுகளுக்கு அதிகம் பயணிக்காத பஷார், 2011ஆம் ஆண்டுக்கு மோதல்கள் ஆரம்பித்த பின்னர் வெளிநாடொன்றுக் சென்ற முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்தது. சிரிய ஜனாதிபதி அசாடுக்கு ஆதரவாக, சிரியாவில் தாக்குதல்களை மேற்கொள்ள ரஷ்யா ஆரம்பித்துள்ள இந்தப் பின்னணியில், இச்சந்த…
-
- 7 replies
- 1.3k views
-
-
மக்களின் வாழ்க்கைமுறையில் எத்தனையோ வேறுபாடுகளும் வினோதங்களும் உலகின் பல பகுதிகளிலும் இருப்பதை வலைதள வசதிகள் வந்த பிறகு, மிக எளிதாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியான போர்னியோவில் பஜாவு என்ற ஆயிரக்கணக்கான பழங்குடி இன மக்கள் கடலிலேயே வாழ்கின்றனர். ’கடல் நாடோடிகள்’ என்றே இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். பசிபிக் கடல் போர்னியோவில் ஒரு பெரிய நில வளைவுக்குள் இப்பகுதி அமைந்துள்ளது. அதனால், அங்கு பெரிய அலைகள், ஆரவாரம் ஏதுமின்றி, அமைதியான கடல் பகுதியாக காணப்படுகிறது. இந்த கடல்பகுதியில் பஜாவு என்ற பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் கடல்மீது மரங்களாலும் பலகைகளாலும் ஆன சிறிய குடில்களை கடல் மட்டத்துக்கு உயரத்தில் அமைத்து அதில் வச…
-
- 2 replies
- 1.7k views
-
-
கடந்த 1953-ம் ஆண்டு போரில் பிரிந்த வட, தென் கொரிய மக்கள் உருக்கமான சந்திப்பு வடகொரியாவைச் சேர்ந்த தனது சகோதரி கிம் ஜோன் சூனை சந்தித்த மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடிக்கும் தென்கொரிய முதியவர் போக் பேக். படம்: கெத்தி கடந்த 1953-ம் ஆண்டு கொரிய போரின்போது பிரிந்த குடும்பத்தினர் நேற்று சந்தித்துப் பேசினர். கடந்த 1950-53 போரின் விளைவாக கொரிய தீபகற்பம் வடகொரியா, தென்கொரியா என இரு நாடுகளாகப் பிரிந்தது. வடகொரியாவில் கம்யூனிச ஆட்சியும் தென்கொரியாவில் ஜனநாயக ஆட்சியும் நடைபெறுகிறது. இருநாடுகளிடையே அவ்வப்போது உரசல்கள் நீடித்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக 1953 போரின் பிரிந்த இருநாடுகளைச் சேர்ந்த குடும்பத்தினர் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டத…
-
- 2 replies
- 782 views
-
-
400 ஆண்டுகளாக நீரில் மூழ்கிய தேவாலயம்: மீண்டும் தெரிவதால் மக்கள் பரவசம்! மெக்சிகோ: மெக்சிக்கோ நாட்டில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய தேவாலயம் ஒன்று ஆற்றுக்குள் இருந்து மீண்டும் வெளியே தெரிவதால் மெக்சிகோ மக்கள் பரவசத்தில் திளைத்துள்ளனர். மெக்சிகோவின் நெசஹுவால்கோயோட்ல் நீர்த்தேக்கத்தில், வறட்சியால் 82 அடிக்கு நீர் குறைந்து போனது. அதனால் 16 ம் நூற்றாண்டின் மத்தியில், ப்ரெய்ர் பார்ட்டோலோம் டி லா கஸாஸ் என்கிற பாதிரியாரின் தலைமையில், இப்பகுதியைச் சேர்ந்த மக்களால் நிறுவப்பட்ட 183 அடி உயரமுள்ள இந்த தேவாலயம் தற்போது வெளியில் தெரிகிறது. கடந்த 1773 மற்றும் 1776 ம் ஆண்டுகளில் இப்பகுதியில் ஏற்பட்ட பிளேக் நோயால் இந்த தேவாலயம் கைவிடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தேவா…
-
- 0 replies
- 927 views
-
-
கனடாவில், பத்தாண்டு கால கன்சர்வேட்டிவ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, லிபரல் கட்சித் தலைவர் ஜஸ்டின் ட்ருடோ ஆட்சியை பிடித்துள்ளார். அவரது தந்தை பியர் ட்ருடோ 60களில் பிரதமராக இருந்தவர். அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கெனடியை போன்றவர் என்று ஒப்பிட்டு பேசப்பட்டவர். கனடாவின் பெரும் அரசியல் மாற்றத்துக்கு நடுவே, அவரது மகனை யாருடன் ஒப்பிடுவது என்பது தான் பலருக்கும் இப்போதுள்ள கேள்வி. http://www.bbc.com/tamil/global/2015/10/151020_canada_election
-
- 5 replies
- 2.1k views
-
-
காதலி கொலை வழக்கில் பிஸ்டோரியஸுக்கு பரோல் பிஸ்டோரியஸ். காதலி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாரா ஒலிம்பிக் வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் ஓராண்டுக்கு பின்னர் பரோலில் விடுவிக்கப்பட்டார். பாரா ஒலிம்பிக் வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் பரோலில் விடுதலை ஆன நிலையில், அவர் சிறையிலிருந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 5 ஆண்டு கால தண்டனையை சீர்திருத்த கண்காணிப்பில் வீட்டு சிறையில் அனுபவிக்கும்படியாக தென் ஆப்பிரிக்காவின் பரோல் சபை தெரிவித்துள்ளது. பிஸ்டோரியஸ் அவரது காதலியான ரீவா ஸ்டீன்காம்பை கொன்றதற்காக கடந்த ஆண்டு அக்டோபரில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. வீட்டுக்குள் யாரோ புகுந்துள்ளார்கள் என்று நினைத்து குளியலறை வழியாக தான் மேற்கொண்ட துப்பாக்கி…
-
- 0 replies
- 1.6k views
-
-
விமானத்தில் பயணியை கடித்துக் கொன்றதாக போர்ச்சுகல் பெண் கைது போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனிலிருந்து டப்ளினுக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தில் சக பயணியை பெண் கடித்துக் கொன்றதாக அவரை போலீஸார் கைது செய்தனர். லிஸ்பனில் இருந்து டப்ளினுக்கு ஏர் லிங்கஸ் என்ற பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 165 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் இருந்த பிரேசிலைச் சேர்ந்த இளைஞருக்கும், அவரது அருகே அமர்ந்திருந்த பெண் பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி தகறாரில் கோபமடைந்த அந்தப் பெண், இளைஞரைக் கடித்துக் குதறியதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து காயமடைந்த அந்த இளைஞர் மயங்கி விழுந்தார். உடனடியாக விரைந்த விமானத்திலிருந்த…
-
- 8 replies
- 1.5k views
-