உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டம் – ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்து! அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைக்குத் தீர்வு காணும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டார். இப் புதிய சட்டப்படி, பாடசாலைகளில் மாணவர்களுக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி மேம்படுத்தப்படும் எனவும், சட்டவிரோதமான துப்பாக்கிகள், ஸ்கேனர்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்களால் கண்டுபிடிக்க முடியாத 3-டி முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை கண்டறிந்து அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பைடன் தெரிவித்துள்ளார். அத்துடன் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களின் விற்பனையையும், கண்மூடித்தனமான பயன்பாட்டையும் கண்காணிக்க அதிரடிப…
-
- 0 replies
- 176 views
-
-
சவுதி அரேபியாவின் முடிவால் எண்ணெய் விலை சரிந்தது! சவுதி அரேபியாவின் முடிவால் சர்வதேச சந்தையில் நேற்றைய தினம் (26)எண்ணெய் விலைகள் 3 சதவீதத்துக்கு மேல் சரிவடைந்துள்ளதாக ஃபைனான்சியல் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகின் முதன்மையான மசகு எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, டிசம்பர் மாதத்தில் OPEC உறுப்பினர்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் சேர்ந்து உற்பத்தியை உயர்த்த தீர்மானித்ததன் பின்னர் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெ்ய் ஒரு பீப்பாய்க்கு $1.86 அல்லது 2.53% குறைந்து 71.60 அமெரிக்க டொலர்களாக பதிவானது. அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு $2.02 அல்லது 2.90% குறைந்து 67.67 அமெரிக்க டொலர்களாக பதிவானத…
-
- 0 replies
- 665 views
-
-
27 SEP, 2024 | 12:06 PM ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக இஸ்ரேலிய பிரதமர் நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அதேவேளை அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஐக்கியநாடுகள் தலைமையகத்திற்கு முன்னால் யுத்தத்தை எதிர்ப்பவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பாலஸ்தீன பகுதிகளில் யுத்தம் ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் யூத - இஸ்ரேலிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் என தங்களை தெரிவித்துக்கொண்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் யூதகொடியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றிய ஒருவர் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவின் ஏவுகணைகள் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி என்.ஜி & ஃப்ரான்செஸ் மாவோ பதவி, பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கண்டம் தாண்டிய இலக்குகளை நோக்கித் தாக்குதல் நடத்தும் தொலைதூர ஏவுகணைகளை (intercontinental ballistic missile - ICBM) வைத்துச் சோதனை நடத்தியுள்ளதாகக் கூறியிருக்கிறது சீனா. சர்வதேச கடல்பரப்பில் சீனா இத்தகைய சோதனையை மேற்கொண்டது அண்டை நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் முதன்முறையாக கடந்த புதன்கிழமை அன்று (செப்டம்பர் 25) இத்தகைய சோதனையை சீனா மேற்கொண்டுள்ளது. இது ஒரு வழக்கமான சோதனை ஓட்டம் தான் …
-
- 0 replies
- 392 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலால் கரும்புகை எழுந்த காட்சி கட்டுரை தகவல் எழுதியவர், ஓர்லா குரின் மற்றும் ஹென்றி ஆஸ்டியர் பதவி, பிபிசி செய்தியாளர்கள் 23 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் வான்வழித் தாக்குதல்களில் ஒரே நாளில் குறைந்தது 492 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நீடிக்கும் சண்டையில் அதிக உயிரிழப்பு நடந்த நாள் இதுதான். 2006-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு ஹெஸ்பொலா உருவாக்கியுள்ள ராணுவ கட்டமைப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவ…
-
-
- 21 replies
- 1.5k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சார்கோ சாதனத்தின் சமீபத்திய மாடல் - ஜூலை மாதம் சூரிச்சில் காட்சிப்படுத்தப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் இருக்கலாம்.) சுவிட்சர்லாந்தில் ஒரு பெண் `தற்கொலை பாட்’ என்ற சாதனத்தைப் பயன்படுத்தித் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பலரை காவல்துறை கைது செய்துள்ளது. திங்களன்று சார்கோ (Sarco) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தற்கொலை சாதனத்தைப் (suicide pod) பயன்படுத்தி ஒரு பெண் இறந்துள்ளார். அதைத் தொடர்ந்து, ஷாஃப்ஹவுசென் (Schaffhausen) பகுதியில் உ…
-
- 0 replies
- 343 views
- 1 follower
-
-
பாலஸ்தீனியர்களின் உடல்கள் நிரப்பப்பட்ட கொள்கலன்கள்! இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட சுமார் 90 பாலஸ்தீனியர்களின் சிதைந்த உடல்கள் நிரப்பப்பட்ட கொள்கலன்னை இஸ்ரேல் காசாவிற்கு அனுப்பியுள்ளது எனினும் கொள்கலன்னில் உள்ளவர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் எங்கே கொல்லப்பட்டார்கள் என்ற விபரங்களை இஸ்ரேல் முறையாக வெளியிடாத காரணத்தினால் அவற்றை பெறுப்பேடுப்பதற்கு ஹமாஸ் நடத்தும் காசா சுகாதார அமைச்சு மறுத்து விட்டது. இது குறித்து காசா சுகாதார அமைச்சின் ஊடக அதிகாரியான இயாத் கதீஹ் தெரிவிக்கையில் அடையாளம் தெரியாத சடலங்களுடன் ட்ரக் வண்டி காசாவுக்குள் வந்தமை இது ஐந்தாவது சந்தர்ப்பமாகும் என்றும் இனிமேல் சுகாதார அதிகாரிகள் எந்த ஒரு உடலையும் அடையாளம் காணாத நிலையில் ஏற்றுக்கொ…
-
- 0 replies
- 382 views
-
-
தாய்லாந்தில் அமுலுக்கு வரும் ஒரே பாலின சட்டமூலம்! தாய்லாந்தின் அரசர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரே பாலின திருமண சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், தென்கிழக்கு ஆசியாவில் அதிகாரப்பூர்வமாக குறித்த சட்டம் அமுல்படுத்தபடும் முதல் நாடாகவும், ஆசியாவில் மூன்றாவது நாடாகவும் தாய்லாந்து மாறியுள்ளது. புதிய சட்டமூலம் செவ்வாய்க்கிழமை (24) பிற்பகுதியில் அதிகாரப்பூர்வ அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. புதிய சட்டம் 2025 ஜனவரி 22 ஆம் திகதி நடைமுறைக்கு வரும். இரண்டு தசாப்தகால முயற்சிகளுக்கு பின்னர் ஒரே பாலின சட்டமூலம், ஜூன் மாதம் செனட்டால் அங்கீகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400989
-
- 0 replies
- 621 views
-
-
24 SEP, 2024 | 04:28 PM செனெகலின் கரையோர பகுதியில் படகொன்றிலிருந்து 30 சிதைந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தலைநகர் டக்கரிலிருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் படகொன்று தத்தளிப்பதாக தகவல் கிடைத்தாக தெரிவித்துள்ள செனெகல் கடற்படை இதனை தொடர்ந்து மரப்படகினை கரைக்கு கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளது. உடல்கள் மிக மோசமாக சிதைவடைந்து காணப்படுவதால் மீட்பு அடையாளம் காணும் நடவடிக்கைகள் மிகவும் மெதுவாக இடம்பெறுவதாக செனெகல் கடற்படை தெரிவித்துள்ளது. செனெகலில் இருந்து ஸ்பெயினின் கனரி தீவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளின் எண்ணி;க்கை அதிகரித்துள்ள நிலையிலேN இந்த சம்பவம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. உடல்கள் சிதைவடைந்துள்ள நிலையை பார்க்…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் ஃபீனிக்ஸை தாக்கிய வெப்ப அலை; நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு. அரிசோனாவின் ஃபீனிக்ஸ் என்ற பாலைவன நகரத்தில் கடந்த 113 நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் (38 டிகிரி செல்சியஸ்) அதிகமான வெப்பநிலை நிலவி வருகின்றது. அதிரகரித்த வெப்பநிலை காரணமாக இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் எனவும், இதனால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை குறித்த பகுதியில் பரவியுள்ள காட்டுத் தீ காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் தீக்கிரையாகியுள்ளதாகவும் இதனால் பல பிராணிகள் உயிரிழந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஃபீனிக்ஸ் மரிகோபா கவுண்டியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெப்ப அலை காரணமா…
-
- 0 replies
- 505 views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், ஓர்லா குரின் மற்றும் ஹென்றி ஆஸ்டியர் பதவி, பிபிசி செய்தியாளர்கள் 23 செப்டெம்பர் 2024, 07:44 GMT புதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலா ஆகிய இருதரப்பும் ஞாயிற்றுக்கிழமை தங்கள் எல்லை தாண்டிய தாக்குதல்களை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவியது. போரிலிருந்து பின்வாங்குமாறு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும் தாக்குதல்கள் தொடர்கின்றன. இஸ்ரேலிய ராணுவத்தின் கூற்றுப்படி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சுமார் 150 ராக்கெட்டு…
-
- 0 replies
- 310 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், லாரா பிக்கர் பதவி, சீன செய்தியாளர் 21 செப்டெம்பர் 2024 "ஒரே கிராமம், இரு நாடுகள்" இப்படித்தான் சீனாவின் தென்மேற்கு எல்லையில் உள்ள யின்ஜிங் கிராமம் அறியப்பட்டது. மியான்மருடனான எல்லை "மூங்கில் வேலிகள், சாக்கடைகள் மற்றும் மண் மேடுகள்" கொண்டது என்று பழைய சுற்றுலா பலகை ஒன்று குறிப்பிடுகிறது. பெய்ஜிங் தனது அண்டை நாட்டுடன் கட்டமைக்க முயன்ற எளிதான பொருளாதார உறவின் அடையாளம் இது. ஆனால் இப்போது, பிபிசி பார்வையிட்ட எல்லை யுனான் மாகாணத்தின் ருய்லி மாவட்டத்தில் உயர்ந்த உலோக வேலியால் குறிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் முள்கம்பிகள் மற்றும் கண்காணிப்பு…
-
- 0 replies
- 410 views
- 1 follower
-
-
ஹிஸ்புல்லா நிலையங்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை! இஸ்ரேல் இராணுவம் தனது போர் விமானங்களைக் கொண்டு லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா (Hezbollah )நிலைகளின் மீது நேற்றைய தினம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) அறிக்கைகளின்படி, ஹிஸ்புல்லா அமைப்புக்குச் சொந்தமான சுமார் 1,000 ரொக்கெட் லாஞ்சர் பீப்பாய்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், ”நாட்டைப் பாதுகாப்பதற்காக ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் உள்கட்டமைப்பு மற்றும் இலக்குகள் மீதான தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளன. எனினும் இத்தாக்குதலினால் ஏற்பட்ட உயிரிழப்புகள்…
-
- 1 reply
- 615 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கலீத் மிஷால், யஹ்யா அய்யாஷ், முகத்தை மறைத்தபடி இருக்கும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரர் கட்டுரை தகவல் எழுதியவர், தௌபா கலிஃபி பதவி, பிபிசி நியூஸ் அராபிக் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒரு அதிர்ச்சியூட்டும் நடவடிக்கையாக ஹெஸ்பொலா அமைப்பின் உறுப்பினர்கள் பயன்படுத்தும் பேஜர்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள் வெடிகுண்டுகளாக மாற்றப்பட்டன. இஸ்ரேலின் மேம்பட்ட கண்காணிப்பில் இருந்து தப்பிக்க ஹெஸ்பொலா அமைப்பினர் பயன்படுத்திய தகவல் தொடர்பு சாதனங்கள் வெடித்ததன் காரணமாக டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், பல ஆயிரம் பேர் காயமடைந்தனர். இது இஸ்ரேல் நடத்திய "திட்டமிட்ட தாக்க…
-
- 0 replies
- 410 views
- 1 follower
-
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு! வேலை செய்யும் இடங்களில் சாப்பாடு இடைவேளை மற்றும் தேநீர் இடைவேளையை உடலுறவுக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு ரஷ்ய மக்களுக்கு புட்டின் வலியுறுத்தியதாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வரும் நிலையில், உக்ரைனுக்கு எதிராக போர் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு இது மிகப்பெரிய கவலையை அளித்துள்ளது. இதனால் மக்கள் குழந்தைகள் அதிக அளவில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், நம்முடைய முன்னோர்கள் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்ற வரலாறு உண்டு எனவும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் பணிபுரியும் இடத்தில் இடைவேளையின்போது உடலுறவு…
-
-
- 80 replies
- 4.5k views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 19 SEP, 2024 | 02:14 PM கனடாவிற்குள் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை அடுத்தவருடம் குறைக்கப்போவதாக தெரிவித்துள்ள கனடா அரசாங்கம் வெளிநாட்டு தொழிலாளர்கள் குறித்த விதிமுறைகளை இறுக்கமாக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளது. கனடாவில் உள்ள தற்காலிகமாக வசிப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. இந்த வருடம் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு கனடாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையிலேயே புதிய அறிவிப்பினை கனடா அரசாங்கம் வெளியிட்டுள்ளது. பெருமளவானவர்கள் குடியேறுவது நாட்டின் வீட்டு வசத…
-
-
- 4 replies
- 523 views
- 1 follower
-
-
இஸ்ரேல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம்! பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதை 12 மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் 124 நாடுகளின் ஒப்பந்தத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணைக்கு எதிராக 14 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், 43 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தன. மேலும் கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400194
-
- 3 replies
- 254 views
- 1 follower
-
-
19 SEP, 2024 | 11:53 AM அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தகவல்களை ஹக்செய்த ஈரான் அதனை ஜோபைடனின் பிரச்சார குழுவிற்கு அனுப்பியது என எவ்பிஐ தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோபைடன் போட்டியிட்டவேளை ஈரானை சேர்ந்த ஹக்கர்கள் டொனால்ட் டிரம்பின் பிரச்சாரகுழுவின் தகவல்களை திருடி வேண்டுகோள் விடுக்கப்படாத மின்னஞ்சல்களை பைடனின் பிரச்சாரத்துடன் தொடர்புடையவர்களிற்கு அனுப்பினார்கள் என எவ்பிஐ தெரிவித்துள்ளது. இதன் மூலம் பைடனின் பிரச்சார குழுவின் ஆர்வத்தை தூண்டுவதற்கு முயற்சி செய்தார்கள் 2024 ஜனாதிபதி தேர்தலில் தலையிட முயன்றார்கள் என எவ்பிஐ தெரிவித்துள்ளது. ஈரான் ஹக்கிங்கில் ஈடுபட்டு முக்கியமான தகவல்களை த…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
அமெரிக்க தேர்தலில் ஈரானின் செல்வாக்கு: ட்ரம்பின் தகவல்களைத் திருடிய ஹேக்கர்கள். நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. குறித்த தேர்தலில் ஆரம்பத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய ஜனாதிபதியான பைடனும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுவதாக அறிவித்தனர். எனினும் பின் நாட்களில் உடல் நலக்குறைவு காரணமாக ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவதாக பைடன் அறிவித்தார். இதனையடுத்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் போட்டியிடுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வர…
-
- 0 replies
- 206 views
-
-
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரப்புரை செய்யவிருந்த இடத்திற்கு அருகில் இருந்த காரில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டிரம்பும், தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்கான பரப்புரை தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த பரப்புரையில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது இருமுறை துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நியூயோர்க்கில் யூனியண்டாலே என்ற இடத்தில் டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்யவுள்ள நிலையில், அங்கிருந்த வாக…
-
- 1 reply
- 332 views
- 1 follower
-
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு சர்வதேச கோல்ப் கிளப்புக்கு சென்று, டிரம்ப் கோல்ப் விளையாடி கொண்டு இருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். வாஷிங்டன் டி.சி. அமெரிக்கா அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். https://www.dailythanthi.com/News/World/usa-suspects-shoot-at-trumps-golf-course-1122421
-
-
- 56 replies
- 3.2k views
- 2 followers
-
-
அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டால் நேட்டோ எங்களுடன் நேரடி யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக கருதுவோம் - புட்டின் 13 SEP, 2024 | 02:12 PM ரஸ்யா மீது உக்ரைன் நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நேட்டோ நீக்கினால் உக்ரைன் ரஸ்ய யுத்தத்தில் நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது என தான் கருதுவேன் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணையை உக்ரைன் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேற்குலக அமெரிக்க இராஜதந்திரிகள் தயாராக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே புட்டின் இந்…
-
-
- 11 replies
- 792 views
- 1 follower
-
-
புதிய வகை கொரோனா தொற்று-27 நாடுகளில் பரவியுள்ளது! எக்ஸ். இ. சி. புதிய வகை கொரோனா தொற்று தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி போலந்து, நார்வே, லக்சம்பர்க், உக்ரைன், போர்ச்சுகல், சீனா உள்ளிட்ட 27 நாடுகளைச் சேர்ந்த 500 மாதிரிகளில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் யுனைடெட் கிங்டத்தில் புதிய வகை கொரோனா மாறுபாடு வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. https://athavannews.com/2024/1399981 @Kapithan , @ரசோதரன் 😂
-
-
- 8 replies
- 799 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மிட்செல் ராபர்ட்ஸ் பதவி, டிஜிட்டல் சுகாதார ஆசிரியர், பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கொரோனா வைரஸின் புதிய திரிபால் மேற்கத்திய நாடுகளில் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் நாட்களில் அதன் தீவிரம் இன்னும் அதிகமாகும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்ட எக்ஸ்.இ.சி (XEC) எனும் கோவிட் வைரஸின் புதிய திரிபு, இதுவரை பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளதாக, எக்ஸ் சமூக வலைதள பயனர்கள் தெரிவிக்கின்றனர். குளிர் காலத்தில் வேகமாக பரவத்தக்க …
-
- 0 replies
- 375 views
- 1 follower
-
-
டொலரை கைவிட்டு புதிய கட்டண முறைக்கு செல்லும் பிரிக்ஸ்! பிரிக்ஸ் அதன் வர்த்தகத்தில் அமெரிக்க டொலரை ஒருங்கிணைக்காமல் ஒரு புதிய கட்டண முறையை உருவாக்கும் நோக்கில் செயல்படுகிறது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உறுதிப்படுத்தினார். புதிய கட்டண முறையானது எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளைத் தீர்ப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்படாது, இது முழுமையான நிதி அமைப்பாக செயல்படும் என்றும் அவர் மேலும் கூறினார். புதிய பிரிக்ஸ் கட்டண முறையானது உலகளாவிய நிதித்துறையில் ஒரு முன்னுதாரண மாற்றத்திற்கு வழிவகுக்கும். அதேநேரம், டொலர் வர்த்தகம் நிறுத்தப்படுமானால் அது அமெரிக்காவில் பல துறைகளில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. பிரிக்ஸ் முன்னணி வளர்ந்த…
-
- 0 replies
- 860 views
-