Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரொறன்ரோ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வெடிபொருள் போன்ற சந்தேகத்திற்கு உரிய பொருள் ஒன்று நேற்று (திங்கட்கிழமை) மாலை கண்டெடுக்கப்பட்டது.Leslie Street and Eastern Avenue வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டில் மீள் திருத்த பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து ராணுவத்தினருடன் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வெடிபொருளை பாதுகாப்பாக அகற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தின் போது பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும்,அதைத் தொடர்ந்து அங்கு அழைக்கப்பட்ட கனேடிய இராணுவத்தினர், குண்டை அகற்றி, கனேடியப் படைத்தளம் ஒன்றுக்கு எடுத்துச் சென்றார்கள் எனவும் சந்தேகத்திற்குரிய வெடி பொருள் தொடர்பில் சோத…

    • 0 replies
    • 215 views
  2. அகற்றப்பட்ட பிரபாகரன் சிலையை அரசு செலவில் மீண்டும் அமைக்க வேண்டும்: - ராமதாஸ் [saturday 2015-06-06 14:00] வேளாங்கண்ணி அருகே பிரபாகரனின் உருவச்சிலையை காவல்துறையினர் இரவோடு இரவாக அகற்றியிருக்கின்றனர். பிரபாகரனின் சிலையை அகற்றப்பட்ட இடத்தில் தனது சொந்த செலவில் மீண்டும் அமைத்துத் தர அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது - நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்திலுள்ள கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஈழப்போராளி பிரபாகரனின் உருவச்சிலையை காவல்துறையினர் இரவோடு இரவாக அகற்றியிருக்கின்றனர். இதன் மூலம் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரச…

  3. வேளாங்கண்ணி: கையில் அரிவாளுடன் காவல் தெய்வம் கருப்பசாமிக்கு கோயில் கட்டி பார்த்திருப்போம். நாகை மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு கோவில் கட்டியுள்ளார் திமுக நிர்வாகி ஒருவர். இந்த கோவில்தான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளார். இந்த படம் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாங்கண்ணி அருகே உள்ளது தெற்கு பொய்கை நல்லூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். தி.மு.க. நிர்வாகியான இவர், தனது கிராமத்தில் பெரியாச்சி அம்மன் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். இந்த கோயிலில் இடது மற்றும் வலதுப் பக்கத்தில் இரண்டு குதிரைகளை வைத்துள்ளார். இந்த குதிரைகளுக்கு அருகில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ள…

    • 2 replies
    • 1.1k views
  4. நீங்கள் ஐந்து வருடங்களுக்குள் இறந்து விடுவீர்களா என்பதை ஆன்லைனில் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இதற்காக சுவீடன் விஞ்ஞானிகள் உருவாக்கிய வலைதளத்தில் ஆண்களுக்கு 11 கேள்விகளும், பெண்களுக்கு 13 கேள்விகளும் கேட்கப்படுகின்றன. இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்தால் நீங்கள் 5 வருடங்களில் இறப்பதற்கான வாய்ப்புகள் தெளிவாக தெரிந்துவிடும். புகை பிடிக்கும் பழக்கம், உடல்நலக்கோளாறு குறித்த வரலாறு, நீங்கள் நடக்கும் வேகம், நீங்கள் எத்தனை கார்களை வைத்துள்ளீர்கள் போன்ற கேள்விகள் அதில் இடம் பெற்றுள்ளன. எனினும் இதில் கலந்து கொள்ள உங்களுக்கு 40 வயது நிரம்பியிருக்கவேண்டும். ஸ்காட்லாந்து நாட்டில் இரு மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்ட 35 ஆயிரம் நோயாளிகளிடம் இந்த வலை…

  5. மேகி நூடுல்ஸை விற்பனையிலிருந்து இருந்து திரும்பப்பெறுவதாக நெஸ்லே இந்தியா நிறுவனம் இன்று அதிகாலை (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் காரீயத்தின் அளவு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட அதிகமாக உள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் மேகி நூடுல்ஸ் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் டெல்லி அரசு மேகிக்கு 15 நாள் தடை விதித்தது. தொடர்ந்து நேற்று உத்தராகண்ட், ஜம்மு-காஷ்மீர், குஜராத் மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் நடைபெறும் ஆய்வுகளைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸை விற்பனையிலிரு…

    • 0 replies
    • 480 views
  6. கனடாவிற்குள் வருவதற்கு விசா தேவைப்படும் வெளிநாட்டு பயணிகளிற்கு மற்றொரு பாதுகாப்பு நடவடிக்கையை கூட்டுவதற்கு கனடா திட்டமிட்டுள்ளது.. உயிர்புள்ளியியல் சோதனை..{biometric screening}..இப்புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பிரதம மந்திரி Stephen Harper இன்று வியாழக்கிழமை அறிவிப்பார் என தெரியவந்துள்ளது. இந்த மேலதிக பாதுகாப்பு அடுக்கு குற்றவாளிகள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்கும் முயற்சி என கூறப்பட்டுள்ளது. கனடாவிற்கு வருவதற்கு விசா தேவைப்படும் பயணிகள் பயோமற்றிக் சோதனையை எதிர்கொள்ள வேண்டும். இந்த உயிர்புள்ளியல் சோதனை ஒரு உடலியல் சார்ந்த சோதனைகளை உள்ளடக்கியதாக அமைபும். கைரேகை பதிவு, முக அடையாளம், கை வடிவியல், கருவிழி அங்கீகாரம், விழித்திரைக்குரிய ஸ்கான் போன்ற பல இதற்குள் அடங்கும். ஆப்…

    • 0 replies
    • 371 views
  7. பிரேசில் நாட்டில் நோயாளி ஒருவர், தனக்கு மூளை அறுவை சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கிடார் வாசித்து மருத்துவர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளார். பிரேசிலில் வசித்து வரும் வங்கி ஊழியரான அந்தோணி குல்காம்ப் டியாஸ்(33) என்பவர் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இதனை அகற்றுவதற்காக மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவுசெய்தனர். மேலும், அறுவைசிகிச்சையின் போது மூளையின் செயல்பாடுகளை நவீன கருவியின் மூலம் கண்கணிப்பதற்காக, அந்தோணிக்கு மயக்க மருந்து அளிக்காமல், வலியை மட்டும் மறக்கச்செய்யும் மருந்தினை செலுத்த முடிவு செய்தனர். இதற்கு அந்தோணியும் சம்மதம் தெரிவித்துத்துள்ளார், மேலும் 20 ஆண்டுகளாக கிடார் வாசித்துவரும் இவர், அறுவைசிகிச்சையின் போது தான…

  8. தமிழகத்தை சேர்ந்தவர் ரேவ் ஜோசப் பழனிவேல் ஜெயபாலு (வயது 60) என்பவர் அமெரிக்காவில் உள்ள மின்னி சோட்டா என்ற பகுதியில் மத போதகராக இருந்து வந்தார். இவர் மீது 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த 16 வயது இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. இவர் 2005 ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு தப்பி ஓடி வந்து விட்டார். அமெரிக்காவில் இவர் மீது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குபதிவு செய்யபட்டது.இதை தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு இந்திய போலீசாரால் கைது செய்யபட்டார்.இவர் தன் மீதானா குற்றத்தை ஒப்பு கொண்டார். தற்போது பாதிக்கபட்ட பெண்ணுக்கு 25 வயது ஆகிறது.இந்த வழக்கில் வருகிற 15 ம் திகதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.ஜோசப் பழனிவேலுக்கு இந்த வழக்கில் 15 வ…

  9. இங்கிலாந்து ராணி மறைந்து விட்டதாக தவறான செய்தி... மன்னிப்பு கோரிய பி.பி.சி. லண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைந்தார் என்று பி.பி.சி., செய்தியாளர் வெளியிட்ட செய்தி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பி.பி.சி. செய்தியாளர் ஆமன் க்வாஜா டுவிட்டரில் இங்கிலாந்து ராணி மறைந்து விட்டதாக செய்தியை போட்டு விட்டார். இதனைக் கண்ட இங்கிலாந்து மக்கள் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் பரபரப்பிலும் ஆழ்ந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பி.பி.சி. நிறுவனம் உடனடியாக மன்னிப்பு கேட்டது. ஒத்திகைக்காக தமது நிருபர், அனுப்பிய தகவல், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சமூக வலைதளத்திற்கு நுழைந்து விட்டதாக பி.பி.சி. நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. தவறான செய்தி குறித்து விசாரணைக்கு உத்த…

    • 7 replies
    • 499 views
  10. கனடா- நியுபவுன்லாந்து மற்றும் லப்றடோர் லாட்டர் விளையாட்டாளர்களிற்கு இந்த வருடம் அதிஷ்டமான ஒரு வருடமாகும். 10நாட்களில் இந்த மாகாணத்தில் இவரது வெற்றி நான்காவது பெரிய வெற்றி என கூறப்பட்டுள்ளது. ஜிம் ஹைனஸ் என்ற இந்த வெற்றியாளர் ஞாயிற்றுகிழமை தனது பிறந்தநாளை கொண்டாடியபோது ஒரு சுரண்டும் ரிக்கெட்டில் 60டொலர்களை வென்றார். அப் பணத்தில் மீண்டும் மூன்று ரிக்கெட்டுக்களை வாங்கி முதல் இரண்டையும் சுரண்டியதில் வெற்றி பெறவில்லை. ஆனால் மூன்றாவது ரிக்கெட்டை சுரண்டிய போது அதில் 2மில்லியன் டொலர்களை வென்றார். வெற்றி பணத்தில் சிறு தொகையை தனது நாய்களிற்காக நீச்சல் தடாகத்தை புனரமைக்க போவதாக கூறினார். செவ்வாய்கிழமை அட்லாந்திக் லாட்டரி கூட்டுதாபனத்தினரிடமிருந்து தனது காசோலையை வாங்கிய ஹைனஷ் …

    • 9 replies
    • 1k views
  11. boko haram, கிளர்ச்சி அமைப்புக்கு எதிரா மேற்குலக சர்வதேச ஆதரவோடு (சிறீலங்கா இராணுவ ஆலோசனையும் பெறப்பட்டிருந்தது.).. நைஜிரியா எடுத்த இராணுவ நடவடிக்கையின் போது சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சிறுவர்கள்.. சுட்டும் பட்டினி போட்டும் நோயாலும் அந்த நாட்டு இராணுவத்தால்.. இறக்கச் செய்யப்பட்டுள்ளனர் அல்லது படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட நைஜிரிய இராணுவ அதிகாரிகளின் பெயர்களோடு விபரங்களை அம்னாஸ்ரி இன்ரநசனல் வெளியிட்டுள்ளதோடு.. இவர்களுக்கு எதிரா போர்க்குற்ற விசாரணைக்கு உத்தரவிட கோரியுள்ளது. இதில் சில படுகொலைக் காட்சிகள் அப்படியே தமிழீழம் வன்னியில் நிகழ்த்தப்பட்ட பாரிய இன அழிப்பை ஒத்த தன்மையுடையதாக இருப்பதைக் காணலாம். காட்சிகளுக்…

  12. புவனேஸ்வர்: இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்திற்குட்பட்ட குதார்ஷாய் என்ற இடத்தில் உள்ள நெல் வயலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிகள் லேசான காயம் அடைந்தனர். இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜெட் டிரெய்னர் போர் விமானம் இன்று தனது வழக்கமான பயிற்சி பணிக்காக காலைகுண்டா விமானப்படை தளத்தில் இருந்து கிளம்பியது. இந்த விமானம் கிளம்பி சென்ற சிறிது நேரத்தில் சுமார் 50 கிமீட்டர் தொலைவில் அங்குள்ள வயல்வெளி ஒன்றில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்குள் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் பாரசூட் மூலம் குதித்து தப்பினர். விமானத்தில் இருந்து குதித்து தப்பிய விமானிகள் இருவரும் விமானம் விழுந்…

    • 0 replies
    • 268 views
  13. உலகில் எங்கு இனப்படுகொலை நடந்தாலும் முதலில் நியாயம் கேட்க பக்கத்து நாடுகளை அழைப்பார்கள். அப்பொது நியாயம் கிடைக்கவில்லை என்றால் ஐ.நா அல்லது அமெரிக்கா தலையிட வேண்டும் என்பார்கள். அப்படி உலகின் மிக பெரிய நாட்டாமையாக ‘அமெரிக்கா’ என்று எல்லோரையும் நம்ப வைத்திருக்கிறது. ஆபத்தான அணு அயுதங்கள் எல்லாம் தயாரித்து மற்ற நாடுகள் தயாரிக்கும் போது தீவிரவாதி நாடு என்று போர் தொடுக்கும். உள்ளூர் பிரச்சனைப் பற்றிக் கவலைப்படாது. என்ன நடந்தாலும் தனது ‘நாட்டாமை’ இமேஜ்யில் இருந்து இம்மி அளவுக் கூட இறங்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளது. ஆனால், ‘அமெரிக்கா’ என்ற தேசம் தயாரானது ‘செவ்விந்தியர்களின் இனப்படுகொலை’ யில் தான். அமெரிக்கா என்ற வல்லரசு உருவானதே ‘செவ்விந்தியர்’ என்று அழைக்கப்படும் பழகுட…

    • 7 replies
    • 14.4k views
  14. பிரபஞ்சம் பற்றி கூறி மனிதர்களை வியக்க வைத்த ஸ்டீபன் ஹாக்கிங்: மரணத்தின் பிடியில் தவிக்கும் பரிதாபம் [ புதன்கிழமை, 03 யூன் 2015, 09:10.44 மு.ப GMT ] உலகம் போற்றும் இயற்பியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங் தன் வாழ்க்கை பற்றி உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். கருந்துளைக் கதிர்வீச்சு குறித்து ஸ்டீபன் ஹாக்கிங் ஆய்வுக் கட்டுரை சமர்பித்தபோது உலகமே வியந்தது. பிரபஞ்சத்தின் பிறப்பு குறித்து கூறியுள்ள கருத்துக்கள், எழுதிய நூல்கள், மிகவும் பிரபலமானது. மோட்டார் நியூரான் நோயால் நீண்ட நெடுங்காலமாக சக்கர நாற்காலியுடன் முடங்கிப் போய் விட்ட ஹாக்கிங்(73), தனது மரணம் குறித்துப் கூறி உள்ளார். இது அனைவரையும் உருக வைத்துள்ளது. உடல் ரீதியாக முற்றிலும் செயலிழந்து போக…

  15. வங்குரோத்தடையும் மலேசிய விமான நிறுவனம். பல தடவைகள் வீழ்ந்து வீழ்ந்து எழுந்திருக்க முடியாத நிலையுடன் இதற்கு ஒரு பின்னூட்டமும் உண்டு.எமிரேட்ஸ் விமான நிறுவனம் தான்.இந்த எமிரேட்ஸ் நிறுவனம் விமானப் போக்குவரத்தையே தனது கட்டுபாட்டுக்குள் கொண்டுவர துடியாய் துடிக்கின்றது.மிகுதி விபரங்கள் விரைவில் இணைக்கப்படும் http://www.bbc.com/news/business-32955818

  16. ”மாணவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம்”: நாகப்பாம்பை பிடிக்க பொலிசார் தீவிரம் [ செவ்வாய்க்கிழமை, 02 யூன் 2015, 02:27.06 பி.ப GMT ] சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் மண்டலத்திற்குட்பட்ட பள்ளி அருகே நாகப்பாம்பு சுற்றி திரிவதால், மாணவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுவிஸின் Pratteln நகரில் அமைந்துள்ள Rudolf Steiner என்ற பள்ளிக்கு அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை நாகப்பாம்பு நபர் ஒருவரை தாக்கியுள்ளது. Spei என்ற அந்த நபரின் கண்ணில் அந்த நாகப்பாம்பு உமிழ்ந்ததால், அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். பேசல் பொலிசாருக்கு இந்த தகவல் அளித்ததும், விலங்குகளை கட்டுப்படுத்…

  17. ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட்டு 50% வெளிநாட்டவர்கள் வெளியேற விரும்புகிறார்களாம்.. அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் 50% பேர் அந்த நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேற விரும்புவதாக சமூக ஆய்வு நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்புகளையும் அதிக அளவு ஊதியத்தையும் வாரி வழங்கி வருகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்... இதனால் எமிரேட்ஸில் பணிபுரிய வெளிநாட்டவர் பலரும் குவிந்து கொண்டிருக்கின்றனர்.. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மொத்த மக்கள் தொகையில் 20% பேர் வேலைவாய்ப்புக்காக வந்த வெளிநாட்டவர்தான் என்பதை நினைவில் கொள்வோம்.. ஆனால் தற்போது இந்த நிலைமை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியுள்ளது.. எமிரேட்ஸில் பணிபுரியும் வெளிநாட்டவரில…

  18. சீனாவில் மத்திய பிராந்தியத்தில் சுமார் 450 பயணிகளுடன் பயணித்த உல்லாசக் கப்பல் நீரிழ் மூழ்கியதையடுத்து நூற்றுக்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன. படங்கள்: ரொய்டர் - See more at: http://www.tamilmirror.lk/147421#sthash.m1BoY1S1.dpuf

    • 0 replies
    • 269 views
  19. ஆப்பிள் நிறுவனம் பற்றி உங்களுக்கு தெரிந்திராத அம்சங்கள் ஆப்பிள் நிறுவனம் என்றாலே ஐபோன், ஐபேட், ஐமேக், ஸ்டீவ் ஜாப்ஸ் என்று நினைக்காதீர்கள். ஆப்பிள் நிறுவனம் பற்றி உங்களுக்கு தெரிந்திராத பல விஷயங்கள் இருக்கின்றது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் விஷயங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்... ஆப்பிள் நிறுவனத்தின் காலாண்டு லாபம் ஐபோன்களில் இருந்து மட்டும் சுமார் 51.2 பில்லியன் டாலர்கள், இது யாஹூவின் மொத்த லாபத்தை விட அதிகம் ஆகும். யாஹூ நிறுவனத்தின் மொத்த லாபம் சுமார் 45.5 பில்லியன் டாலர்கள் தான். ஆப்பிள் ஐபோன் காலாண்டு லாபம் கூகுளின் மொத்த வருமானத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கின்றது. மைக்ரோசாப…

  20. பிரித்தானியாவில் சரிந்து விழுந்த ரோலர் கோஸ்டர்: 4 பேர் படுகாயம் (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 03 யூன் 2015, 05:51.54 மு.ப GMT ] பிரித்தானியவில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தின் ஆல்டன் டவர்ஸ் பூங்காவில்(Alton Tower Theme park) உள்ள ரோலர் கோஸ்டரில் வழக்கம் போல பலர் சவாரி செய்து விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருந்தனர். அப்போது,ரோலர் கோஸ்டரானது தரையிலிருந்து 25 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது அப்படியே சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது 16 பேர் ரோலர் கோஸ்டரில் இருந்ததாக கூறப்படுகிறது, இதில் 4 பேர் படுகாயமடைந்தனர், மேலும் பலர் இடிபாடுக்குள் சிக்கிக் கொண்டனர். …

  21. ”ரொஹிங்யா மக்களிடம் பாரபட்சம் காட்டுவதை நிறுத்துங்கள்”: மியான்மர் அரசிற்கு ஒபாமா வலியுறுத்தல் [ செவ்வாய்க்கிழமை, 02 யூன் 2015, 08:26.33 மு.ப GMT ] மியான்மர் நாட்டில் பல இன்னல்களுக்கு உள்ளாகி வரும் ரொஹிங்யா சிறுபான்மையின மக்களிடம் பாரபட்சம் காட்டுவதை நிறுத்தங்கள் என அமெரிக்க அதிபரான ஒபாமா அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளார். மியான்மர் நாட்டில் பிறந்து வளர்ந்த ‘ரொஹிங்யா’ இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க மறுத்துள்ள மியான்மரின் பெளத்த மத அரசாங்கம், அவர்களை மறைமுகமாக நாட்டை விட்டு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆதரவற்ற சூழலில் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஆயிரக்கணக்கான ரொஹிங்யா மக்கள் கும்பல் கும்பலாக கடல் மார்க்கமாக ஆபத…

    • 0 replies
    • 406 views
  22. கனடா- ரொறொன்ரோ பெரும்பாகம் பூராகவும் பொலிசார் நடாத்திய 25 அதிரடி சோதனைகளில் 18 பேர்கள் வரையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எற்றோபிக்கோவில் இருவர் மற்றும் வாகனில் ஒருவரும் அடங்குவர். செவ்வாய்கிழமை காலை இந்த அதிரடி நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இத்திடீர் சோதனை சிறப்பு அமுலாக்க பிரிவினரின் முயற்சியின் ஒரு பகுதியாக நடாத்தப் பட்டதென்றும், ஆர்சிஎம்பி மற்றும் ஒன்ராறியோ பொலிஸ் சேவையை சேர்ந்த பல அதிகாரிகளும் இதில் ஈடுபட்டனர். யோர்க் பிராந்திய கனரக ஆயுதமேந்திய தந்திரோபாய பிரிவினர் மற்றும் பொலிஸ் நாய்களுடன் அதிகாரிகள் ஆகிய பிரிவினரும் இந்த அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர். குறைந்தது ஐந்து பேர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே சமயம் இவான் அவெனியுவில் மிக …

    • 0 replies
    • 351 views
  23. 1995 அளவில் கியுபெக்கை கிட்டத்தட்ட இறையாண்மைக்கு இட்டுச்சென்றவரும் கியுபெக்கின் முன்னாள் முதல்வருமான Jacques Parizeau தனது 84-வது வயதில் காலமானார். இச்செய்தியை திங்கள்கிழமை பிற்பகல் எட்டு மணிக்கு சிறிது முன்னராக அவரது மனைவி Lisette Lapointe முகநூலில் எழுதியுள்ளார். 1995ல் இவரது தலைமையின் கீழ் நடாத்தப்பட்ட கருத்து கணிப்பில் 50.6% வாக்குகள் இல்லை எனவும் 49.4 %ஆம் எனவும் கிடைக்கப்பெற பணம் மற்றும் இனவழி வாக்குகளும் தோல் விக்கு காரணமென தெரிவித்து அடுத்த நாள் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இவரது தலைமுறையினரில் கியுபெக்கினரிடையே மிகவும் செல்வாக்கு மிக்கவர்.ஒரு போதும் வார்த்தைகளை துண்டு துண்டாக வெட்டமாட்டார். இவருக்கு இசபெல்லா -ஒரு வழக்கறிஞர் மற்றும் பேனாட்- ஒரு டா…

    • 0 replies
    • 428 views
  24. புகையிலை நிறுவனங்களுக்கு எதிராக வரலாறு காணாத வழக்கும் தீர்ப்பும் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பகிர்க சிகரெட்டுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் புகை பிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து போதிய எச்சரிக்கை விடுக்காததால் மூன்று புகையிலை நிறுவனங்களுக்கு 12 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நட்ட ஈடு வழங்கி கனடா நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார். லட்சக் கணக்கானோருக்கு கோடிக் கணக்கான டாலர்கள் நட்ட ஈடு வழங்கி கனடா நீதிமன்றம் தீர்ப்புபுகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தங்களுக்கு போதிய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று கூறி, புகை பிடிப்பவர்கள் கனடாவின் க்யூபெக் மாகாணத்தில் இந்த வழக்கை முன்னெடுத்தனர். கனேடிய நீதிமன்ற சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில் பத்…

  25. தாய்ப்பால் கொடுப்பதை... குறைகூறிய நபரை, உணவகத்தை விட்டு வெளியேற்றிய உரிமையாளர்கள். பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் உள்ள உணவகத்தில் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தது குறித்து புகார் தெரிவித்த நபரை கடையின் உரிமையாளர்கள் வெளியேற்றியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லேண்டில் இருக்கும் ராக்ஹாம்ப்டன் நகரில் உள்ளது சீஸ் அன்ட் பிஸ்கட்ஸ் உணவகம். அந்த கடையை குழந்தை இல்லாத தம்பதியான ஸ்டீபன்-ஜெசிகா ஆன் ஆலன் ஆகியோர் நடத்தி வருகிறார்கள். கடந்த புதன்கிழமை கடைக்கு வந்த நடுத்தர வயது நபர் காபி ஆர்டர் செய்துவிட்டு ஒரு நாற்காலியில் அமர சென்றுள்ளார். அங்கு ஒரு பெண் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். இதை பார்த்த அந்த நபர் கடை உரிமையாளர்களிடம் வந்து அந்த …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.