உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26689 topics in this forum
-
மும்பாயிலிருந்து – இங்கிலாந்து நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது 1942 ஆம் ஆண்டு ஜேர்மன் டொபிடோ தாக்குதல்களில் சேதமடைந்த சிட்டி ஒப் கய்ரோ கப்பலில் இருந்த 50 மில்லியன் டொலர் பெறுமதியான வெள்ளி காசுகள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 டொன் அளவிலான குறித்த வெள்ளிக் காசு தொகை கடலுக்கு அடியில் உள்ள கப்பலில் இருந்து கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட வெள்ளிக்காசுகள் உருக்கப்பட்டு பிரித்தானிய அரச நாணய சுற்றோட்டத்துடன் சேர்க்கப்பட்ட போதும், அந்த சம்பவத்தை வெளிப்படுத்துவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யுத்த சூழ்நிலையின் போது நிதிப் பற்றாக்குறை காரணமாக வெள்ளிக் காசுகள் இந்தியாவிலிருந்…
-
- 2 replies
- 558 views
-
-
இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி, மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்று மாலை கனடா ஒடாவா வந்தடைந்தார்.கடந்த 42 வருடங்களின் பின்னர் இந்திய பிரதம மந்திரி ஒருவர் மேற்கொள்ளும் முதல் இரு தரப்புப் பயணம் என்பதால், இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியப் பிரதம மந்திரியின் பயணத்தின்போது, பாதுகாப்பு, வணிகம், சுற்றுச் சூழல் என்பன உட்படப் பல விடயங்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளன.நரேந்திர மோடியை பாதுகாப்பு அமைச்சர் ஜேசன் கெனி ஒடாவா விமான நிலையத்தில் வரவேற்றார். நாளைய தினம் அவர் பிரதம மந்திரி ஹாப்பரைச் சந்திக்கவுள்ளர். ரொறன்றோ, வன்கூவர் ஆகிய நகரங்களுக்கும் பயணம் செய்யும் மோடி கனடாவில் உள்ள 1.2 மில்லியன் இந்திய வம்சாவளியினரில் சிலரையும் சந்திப்பார். அதேவேளை, அவருக்கு எதிராக ஆர…
-
- 1 reply
- 360 views
-
-
குர்கான்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், விமான விபத்தில் உயிரிழக்கவில்லை, அவர் கொல்லப்பட்டார் என அவரது முன்னாள் பாதுகாவலர் (வயது 93) ஜக்ராம் யாதவ் தெரிவித்துள்ள பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வெள்ளையர்களுக்கு எதிராக போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்த நிலையில், 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் இதை அவரது குடும்பத்தினரோ, ஆதரவாளர்களோ ஏற்கவில்லை. விமான விபத்து சம்பவத்துக்கு பிறகு நேதாஜி ரஷியாவில் காணப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதனால் இன்று வரை நேதாஜி இறந்தாரா, உயிரோடு இருக்கிறாரா? என்ற சர்ச்சை தொடர்ந்து வருகிறது. என…
-
- 3 replies
- 493 views
-
-
திருப்பதி: ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, தமிழகத்திலிருந்து திருப்பதி செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த வாரம் திருப்பதி வனப்பகுதியில் ஆந்திரா போலீசாரால் 20 தமிழக தொழிலாளர்கள் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட என்கவுண்டர் எனக் குற்றம் சாட்டப்பட்டதால் தமிழக - ஆந்திர எல்லையில் பதற்றம் உருவானது. ஆந்திர போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் தாக்கப்பட்டன. ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றன. கிட்டத்தட்ட நான்கு நாட்கள் இரு மாநிலங்களுக்கும் இடையேயான போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது. பின்னர், போலீசாரின் ப…
-
- 1 reply
- 366 views
-
-
இந்திய அரசாங்கம் புற்றுநோய் போன்ற உயிர் காக்கும் மருந்துகள் உட்பட 509 அத்தியாவசிய மருந்துகளின் விலையை ஏப்ரல் மாதம் முதல் 3.84 சதவிகிதத்திற்கு அதிகரித்து கொள்ளலாம் என்று மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. மேலும் 348 அத்தியாவசிய மருந்துகளை தவிர, மற்ற மற்ற மருந்துகளின் விலைகளை ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகிதம் வரை உயர்த்திக் கொள்ளலாம் என்ற அனுமதியையும் வழங்கியிருக்கிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாட்டு மருந்து நிறுவனங்கள், தனது அபரிதமான லாபங்களுக்காக இந்திய காப்புரிமை சட்டத்தை வலுவிழக்க செய்யும் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தால், மருந்துகளின் விலை அபரிதமாக உயர்ந்து, இந்தியா மட்டுமின்றி இந்திய மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 200 நாடுகளில் வசிக்கும் ஏழை எள…
-
- 0 replies
- 498 views
-
-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை மையமாகக் கொண்ட ‘ஈக்விலர்’ என்ற நிறுவனம் அந்நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் தலைமைச் செயல் அதிகாரிகளின் பட்டியலை வருடந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான பட்டியலில், தொழில் நுட்ப உலகின் ஜாம்பவானான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யா நாதெல்லா முதலிடம் பிடித்துள்ளார். இவரது மொத்த வருவாய் 84.3 மில்லியன் டாலராக உள்ளது (522 கோடி ரூபாய்). மொத்த வருவாய் என்பது சம்பளம், போனஸ், நிறுவனத்தில் உள்ள பங்குகளின் மதிப்பு என்று அனைத்தையும் சேர்த்து நிறுவனத்திடமிருந்து அவர் பெறும் வருவாய் ஆகும். சென்ற வருடம் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த, ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை செய…
-
- 0 replies
- 560 views
-
-
போர்க்கப்பல்களுக்காக பாகிஸ்தான் துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்தது சீனா APR 16, 2015 | 9:03by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் சீன நீர்மூழ்கிக் கப்பல்களை கொழும்புத் துறைமுகத்துக்குள் அனுமதிக்க மறுத்து விட்டதையடுத்து, இந்தியப் பெருங்கடலில், தமது போர்க்கப்பல்களின் பராமரிப்பு மற்றும் விநியோகத் தேவைகளுக்காக பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்துள்ளது. குவடார் துறைமுகத்தை சீன 40 ஆண்டு குத்தகைக்கு பாகிஸ்தானிடம் இருந்து பெற்றிருக்கிறது. இதுகுறித்து சீனாவின் குளோபல் ரைம் நாளிதழக்கு கருத்து வெளியிட்டுள்ள, அனைத்துலக கற்கைகளுக்கான சங்காய் நிறுவகத்தின், தெற்காசிய கற்கைகள் பிரிவின் பணிப்பாளர், சாவோ கன்செங், “இந்தியப் பெருங்கடலில் சீனாவின் க…
-
- 2 replies
- 529 views
-
-
சென்னையில் பிறந்து தனது 16வது வயதில் அமெரிக்காவுக்கு சென்றவரான ராஜ ராஜேஸ்வரி, நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். தற்போது 43 வயதாகும் ராஜ ராஜேஸ்வரி, ரிச்மாண்ட் கவுண்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் உதவி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அவரை நியூயார்க் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ரிச்மாண்ட் கவுண்டி மேயரான பில் டி பிளாசியோ பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் நியூயார்க் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக ராஜேஸ்வரி பொறுப்பேற்றார். நீதிபதியாக தான் பொறுப்பேற்றது குறித்து அவர் கூறுகையில், இது கனவு போல தோன்றுகிறது. நான் நினைத்ததை விட, மிக அதிகமான பதவி கிடைத்துள்ளது என்றார். இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து…
-
- 1 reply
- 324 views
-
-
தீவிரவாதத்திற்கு ஏதிராக உலகநாடுகள் ஒன்றுபட்டு போரிட ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கனடாவில் வலியுறுத்தி உள்ளார். பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று கனடா சென்றார். கடந்த 1973–ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்ற பிறகு, அங்கு செல்லும் இந்திய பிரதமர் மோடியே ஆவார். ஒட்டாவாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அவரது விமானம் தரை இறங்கியது. விமான நிலையத்தில் அவரை கனடா ராணுவ மந்திரி ஜேசன் கென்னடி, சர்வதேச வர்த்தக விவகாரங்களுக்கான மந்திரி எட் பாஸ்ட், கனடாவுக்கான இந்திய தூதர் விஷ்ணு பிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர். ஏராளமான இந்தியர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், கனடா பிரதமர் ஸ்…
-
- 0 replies
- 203 views
-
-
நைரோபி: உலகின் கடைசி வெள்ளை நிற ஆண் காண்டாமிருகத்தை வேட்டைக்காரர்களிடமிருந்து காப்பாற்ற, அதற்கு 24 மணி நேர கமாண்டோ பாதுகாப்பு வழங்கி பாதுகாத்து வருகிறது கென்யா. விலை மதிப்பு மிக்க அவற்றின் கொம்புகளுக்காக வெள்ளைக் காண்டாமிருகங்கள் சட்டவிரோதமான வகையில் வேட்டையாடிக் கொல்லப் படுகின்றன. இதனால், தற்போது அந்த இனமே அழிவின் விளிம்பில் உள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மிருகக்காட்சி சாலையில் இருந்த ஆங்கலீஃபூ என்ற ஆண் வெள்ளை காண்டாமிருகம் ஒன்று முதுமை காரணமாக 44 வயதில் உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது, உலகில் வெள்ளை காண்டாமிருகங்கள் மொத்தத்தில் ஐந்து மட்டுமே எஞ்சியுள்ளன. கென்யாவில் மூன்று... இவற்றில் ஒன்று கலிஃபோர்னியாவிலும், மற்றொன்று செக் குடியரசின் மிருகக்காட…
-
- 3 replies
- 548 views
-
-
பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்குவதாக அமெரிக்கா அறிவிப்பு! [Wednesday 2015-04-15 20:00] கியூபாவை பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து நீக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த நேற்று இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். கியூபாவிற்றும் அமெரிக்காவுக்கும் இடையில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பகை நிலவி வந்தது. எனினும் கடந்த வாரம் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி கியூப உயர் மட்டத் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். அதனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் கியூப தலைவர் ராகுஸ் கெஸ்ரோவிற்கும் இடையிலான நேரடி சந்திப்பு இடம்பெற்றது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்…
-
- 2 replies
- 359 views
-
-
வன்கூவர்- இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி இந்த வாரம் கனடாவிற்கு விஜயம் செய்கின்றார். இவரின் வருகையை இவரது ஆதரவாளர்களும் எதிரிகளும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக கூறப்படுகின்றது. 42-வருடங்களில் முதல் தடவையாக ஒரு பெரிய ஜனநாயகத்தின் தலைவர் கனடா வருகின்றார். செவ்வாய்கிழமை ரொறொன்ரோவில் உள்ள Ricoh Coliseum- த்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் 1985-ல் எயர் இந்திய குண்டு வெடிப்பில் பலியான 331-பேர்களின் நினைவுச்சின்னங்களிற்கும் சென்று மரியாதை செலுத்துவார். 2002-ல் குஜராத்தில் மரணமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மை முஸ்லீம்கள் மற்றும் சீக்கியரின் மரணத்தில் மோடியின் பங்கு குறித்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சீக்கியர்களின் சார்…
-
- 9 replies
- 559 views
-
-
கனடா- ஒன்ராறியோவின் புதிய பாலியல் கல்வி பாடத்திட்டத்தினால் கோபமடைந்த ஆயிரக்கணக்கான பெற்றோர் செவ்வாய்கிழமை குயின்ஸ் பார்க்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோக அட்டைகளை தாங்கிய வண்ணம் காணப்பட்டனர். மாகாண பாரளுமன்ற பிசி உறுப்பினரான ஜக் மக்லரனும் பேரணியில் கலந்து கொண்டார். புதிய திட்டத்தின் பிரகாரம் 3-ம் வகுப்பு மாணவர்கள் ஒரே- பாலின உறவுகள் கல்வியை பெறுவர். 4-ம் வகுப்பு மற்றும் மேற்பட்ட வகுப்பு மாணவர்கள் ஆன்லைனில் கொடுமைப் படுத்துதலின் ஆபத்துக்கள் குறித்தும் 9-ம் வகுப்பில் பாலியல் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் செய்திகளை செல் பேசி மூலம் அனுப்புவதன் ஆபத்துக்கள் குறித்தும் படிப்பார்கள் என கூறப்படுகின்றது. பூப்படைதல் பற்றிய பாடங்கள் 5-ம் வகுப்பில் இர…
-
- 1 reply
- 215 views
-
-
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடற்கரை கழிமுகத்தில் ஓர் அழகான வீடு அமைந்திருக்கிறது. மரங்களை வைத்து நீரின் மேல் வீடு கட்டியிருக்கிறார்கள். அனைத்து வசதிகளும் கொண்ட பெரிய வீடு, பசுமைக்குடில்கள், கலங்கரை விளக்கம், விளையாட்டுத் திடல் எல்லாம் இங்கே இருக்கிறது. சூரிய சக்தியைக் கொண்டு தேவையான மின்சாரத்தைத் தயாரித்துக்கொள்கிறார்கள். மழை நாட்களில் தண்ணீரைச் சேமித்துக்கொள்கிறார்கள். பசுமைக்குடில்கள் மூலம் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்களை விளைவித்துக்கொள்கிறார்கள். வீட்டின் உரிமையாளர்கள் கிங், ஆடம்ஸ் இருவரும் நகர நெருக்கடி பிடிக்காமல், 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்து குடியேறிவிட்டனர். குழந்தைகளுடன் சேர்த்து நால்வர் மட்டுமே இந்தப் பெரிய வீட்டில் வசிக்…
-
- 0 replies
- 247 views
-
-
யு.எஸ்.-வாசிங்டன் நெடுஞ்சாலையில் இருந்து விழுந்த கான்கிரீட் பலகையால் இளம் தம்பதியர் மற்றும் அவர்களது எட்டுமாத குழந்தை மூவரும் கொல்லப்பட்ட துயர சம்பவம் நடந்துள்ளது. இவர்கள் அண்மையில் தங்கள் ஐந்தாவது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இவர்கள் இருவரும் கிறிஸ்தவ சமய இளைஞர்கள் பாதிரியார்களாவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜோஷ் மற்றும் வனெஸ்சா ஆகிய இருவரும் தங்கள் 20-ன் மத்திய வயதுடையவர்கள். தங்கள் பிக்அப் டிரக்கில் சென்றுகொண்டிருந்த போது ராக்கோமா பகுதியில் பொனி லேக் வழியாக பயணித்துக் கொண்டிருந்த போது பாரிய கான்கிரீட் பலகை டிரக் மீது விழுந்து இவர்களை நெரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்களது எட்டுமாத மகன் ஹட்சனும் பின் இருக்கையில் இருந்துள்ளான். மூவரும் கொல்லப்பட்டனர். - S…
-
- 0 replies
- 227 views
-
-
கனடா- வன்கூவரில் இருந்து பிறின்ஸ் ஜோர்ஜ் நோக்கி இரு விமானிகளுடன் சென்று கொண்டிருந்த எயர் விமான் 66 விமானம் திங்கள்கிழமை காலை காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இது வரை விமானம் கண்டு பிடிக்கப்படவில்லை. பசிபிக் நேரப்படி காலை 6.43-மணிக்கு வன்கூவர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் காலை 8மணிக்கு பிறின்ஸ் ஜோர்ஜ் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியது. காலை 7மணியளவில் இந்த சரக்கு விமானம் ரேடார் தொடர்பை இழந்து விட்டதாக நவ் கனடாவின் கம்லூப்ஸ் விமான தகவல் மையம் தெரிவித்துள்ளது. கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து விமானத்தை தேடும் முயற்சியில் வன்கூவர் மற்றும் பிறின்ஸ் ஜோர்ஜ் விமான நிலைய அதிகாரிகளும் விமானத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள…
-
- 0 replies
- 304 views
-
-
கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி தாக்குதல் போன்று அமெரிக்கா பற்றிஎரியும் என்று மிரட்டல் விடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வீடியோ வெளியிட்டு உள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தனிநாடு உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து நாசவேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதிகளை குறி வைத்து அமெரிக்கா போர் விமானங்கள் மூலமாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. உலகில் உள்ள அனைத்து அமெரிக்கர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று மிரட்டல் விடுத்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்பால் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது என்று ட…
-
- 0 replies
- 263 views
-
-
இந்தியாவிற்கு செல்ல விரும்பும் இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ள முடியும். கடந்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயத்தின் போது விசா தொடர்பாக வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இந்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தியா 43 நாடுகளுக்கு ‘ஒன் அரைவல் விசா’ அதாவது விமான நிலையத்தில் வீசா பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. அதனடிப்படையில் இலங்கை 44 ஆவது நாடாக அந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் புதுடில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சின் மற்றும் கோவா ஆகிய விமான நிலையங்களில் வைத்து இலங்கையர்கள் 30 நாட்களுக்கு விசா பெற்றுக்கொள்ள முடியும். இந்த சந்தர்ப்…
-
- 4 replies
- 776 views
-
-
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ருமிநாத்| கோப்புப் படம். கார் கொள்ளை கும்பலுடன் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட அசாம் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ருமிநாத் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் கூறும்போது, "காங்கிரஸ் எம்.எல்.ஏ. ருமிநாத் இன்று காலை 7 மணியளவில் எம்.எல்.ஏ. விடுதியில் இருந்து கைது செய்யப்பட்டார். கார் கொள்ளை கும்பலுடன் தொடர்பு இருப்பதாக அவர் மீது புகார் வந்தது. அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் அவரை திஸ்பூர் காவல் நிலையத்த்துக்கு கொண்டு சென்றோம். விரைவில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். ருமிநாத் மீது கிரிமினல் சதிதிட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றங்களின் கீ…
-
- 4 replies
- 630 views
-
-
பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து 126 போர்விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என தெரியவந்துள்ளது. இந்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு நடுத்தர வகையை சேர்ந்த 126 போர்விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தாஸ்சால்ட் விமான தயாரிப்பு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 25 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புதுறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் புதிதாக 36 ராபேல் ஜெட் போர் விமானங்கள் பிரான்சிடமிருந்து வாங்கப்படவிருப்பதால், 126 போர்விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார். மேலும் இனிமேல் ராப…
-
- 1 reply
- 357 views
-
-
ஆர்மீனிய கத்தோலிக்கருடன் பாப்பரசர் ஒட்டமன் துருக்கிய ஆட்சியில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டமைதான் இருபதாம் நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை என்று பாப்பரஸர் பிரான்ஸிஸ் பகிரங்கமாக விபரித்துள்ளார். அந்தப் படுகொலையின் நூறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலான பூசை வழிபாடு ஒன்றில் உரையாற்றிய பாப்பரசர், ''நடந்த தீயதை மறுதலித்தல், காயங்களுக்கு மருந்திட மறுத்தலுக்கு சமனாகும்'' என்று கூறினார். இரு வருடங்களுக்கு முன்னதாக இந்த சம்பவத்தை பாப்பரசர் இனப்படுகொலை என்று கூறியபோது, துருக்கி அதனை கடுமையாக எதிர்த்தது. முதலாம் உலகப் போரால் தூண்டப்பட்ட, உள்நாட்டு மோதல்களின் ஒரு பகுதியே இந்த மரணங்கள் என்று அது கூறியது. ஒட்டமன் படைகளால், திட்டமிட்ட வகையில், தமது மக்கள் 15 லட்சம் பேர்வ…
-
- 3 replies
- 399 views
-
-
ஒன்ராறியோவின் தென்மேற்கு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஒட்டாவாவில் உள்ள பாராளுமன்ற கட்டிடங்களை தகர்க்க போவதாக பயமுறுத்தியதை தொடர்ந்து பொலிசார் அந்நபரை கைது செய்துள்ளனர். இந்த நபர் பாராளுமன்ற நூலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராளுமன்றத்திற்கெதிரான “புரட்சியின்” ஒரு பகுதியாக பாராளுமன்றத்தை தகர்க்கப் போவதாக மிரட்டியுள்ளார். 49-வயதுடைய குறிப்பிட்ட நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். இவர் மீது ஏமாற்றும் தன்மை கொண்ட பயங்கரவாத நடவடிக்கை மற்றும் பயமுறுத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்த விசாரனை தொடர்வதாக பொலிசார் தெரிவித்தனர். - See more at: http://www.canadamirror.com/canada/40944.html#sthash.afV29SpT.dpuf
-
- 0 replies
- 200 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 3 நாடுகளுக்கு 9 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக, பிரான்ஸ் நாட்டில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். கடந்த 9-ம் தேதி இரவு பிரான்சுக்கு போய்ச் சேர்ந்த மோடிக்கு நேற்று முன்தினம் எலிசி அரண்மனையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரெஞ்சு வீரர்களின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், பிரான்ஸ் பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று, டவ்லவுசில் உள்ள பிரெஞ்சு விண்வெளி நிறுவனத்தை அவர் பார்வையிட்டார். அப்போது தேசிய விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இந்திய மாணவர்கள் “மோடி”…”மோடி” என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தபடி பிரதமர் நரேந்திர மோடியை சூழ்ந்து கொண்டனர். மாணவர்களின் விருப்பத்திற்கிணங்க அவர்களுடன் புன்ன…
-
- 0 replies
- 178 views
-
-
அமெரிக்காவின் வோஷிங்டன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, U.S.Capital கட்டிடத்தைச் சூழவுள்ள பகுதிகள் மூடப்பட்டுள்ளன அமெரிக்காவின் வோஷிங்டன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, U.S.Capitol கட்டிடத்தைச் சூழவுள்ள பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு ஒரு தற்கொலையென காவற்துறையினர் அறிவித்திருக்கின்றனர். எனினும் முற்பாதுகாப்பிற்காக அந்தப் பகுதி மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கப்பிற்றல் கட்டிடத்தின் கீழ்ப் பகுதியில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதி தொடர்பாகவும் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். அமெரிக்க கொங்கிரஸ் இன்று செயற்படாததால், அங்கு பெருமளவிலான உறுப்பினர்கள் இருக்கவ…
-
- 0 replies
- 263 views
-
-
அரசி மார்கெரெத்தே டென்மார்க்கில் வந்து குடியேறியுள்ளவர்கள் முழுமையாக அந்நாட்டு வாழ்க்கைமுறையை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என நாட்டின் அரசி மார்கெரெத்தே கோரியுள்ளார். குடியேறிகளை வரவேற்கும் கடமை தமது நாட்டுக்கு உள்ளது என்றாலும், அப்படி வருபவர்கள் நாட்டில் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தினருக்கு ஒவ்வாத விஷயங்களைச் செய்யக் கூடாது எனவும் டென்மார்க் அரசி கூறியுள்ளார். தலைநகர் கோப்பன்ஹேகனிலுள்ள யூத வழிபாட்டு மையத்தில் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்பது தொடர்பிலான ஒரு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு புகுந்த இஸ்லாமியக் குழுவொன்றின் உறுப்பினர், இருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்கள் ஆன நிலையில் அரசியின் இந்தக் கருத்து வந்துள்ளது. தினசரி பத்திரிகை ஒன்றுக்க…
-
- 0 replies
- 206 views
-