உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை அமெரிக்காவுக்கு காட்டி கொடுத்த டாக்டருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ஒருவரை நேற்று மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இந்த கொலையை தலிபான்களின் ஆதரவு இயக்கமான ஜுன்டாலா செய்ததாக பின்னர் அறிக்கை வெளியிட்டது.பாகிஸதானில் உள்ள அபோதாபாத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அல்கய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். அப்போது டாக்டர் ஷகில் அப்ரிடி என்பவர் அப்பகுதியில் போலி தடுப்பு ஊசி மருத்துவ முகாம்களை மேற்கொண்டு, பின்லேடன் தங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடித்தார். பின்னர் இதுகுறித்து அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த பகுதியை அமெரிக்க அதிரடி படையினர் …
-
- 1 reply
- 367 views
-
-
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அலுவலகத்தில் கடந்த வாரம் போலீசார் சென்று அங்க அடையாலங்கள் குறித்து விசாரணை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ராகுலை உளவு பார்ப்பதாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. மத்திய அரசை கண்டித்து நாடெங்கும் இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ராகுல் காந்தி பற்றிய விசாரணை சர்ச்சை இன்று பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் எழுப்பப்பட்டது. முன்னதாக டெல்லி மேல் சபையில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் சார்பில் நோட்டீசு கொடுக்கப்பட்டது. பகல் 11 மணிக்கு டெல்லி மேல் சபை கூடியதும் காங்கிரஸ் தலைவர் குலாம் நபிஆசாத் ராகுல்காந்தி ப…
-
- 5 replies
- 419 views
-
-
அமெரிக்காவில் அமெரிக்க பிரஜை ஒருவர் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று வாழ்ந்து வந்த ஒருவர் மீது இனவெறித் தாக்குதல் நடத்திய வழக்கில், அவர் மீது குற்றம் உள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி, எரிகா மெனெண்டெஸ் என்ற அமெரிக்கப் பெண்மனி, தி குவீன்ஸ் நகரின் ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்த 46 வயதான அமெரிக்க வாழ்-இந்தியர், சுனந்தோ சென் என்பவரை வேகமாக வந்த ரயில் மீது தள்ளி விட்டார். அடிபட்ட சுனந்தோ சென், படுகாயமுற்று சம்பவ இடத்திலேயே மாண்டு போனார். இதன் பின்னர் மெனெண்டஸ் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணைகளின் முடிவில், மெனெண்டஸ் அதிர்ச்சி அளிக்கு வாக்குமூலத்தை கொடுத்துள்ளார். இந்த வாக்குமூலத்தில், 2001ம…
-
- 5 replies
- 446 views
-
-
புதுடெல்லி: கிறிஸ்தவர்கள் தேவாலயங்களை கட்டுவதை நிறுத்தவில்லை என்றால் 1857 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது போல் மீண்டும் ஒரு மதகலவரம் முன்னெடுக்கப்படும் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயலாளர் சுரேந்திர ஜெயின் எச்சரித்து உள்ளார். மேற்குவங்க மாநிலம் நாடியாவில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயலாளர் சுரேந்திர ஜெயின் பேசும்போது, ''இது கிறிஸ்தவ ஆலயத்தின் சதித்திட்டம் ஆகும். கன்னியாஸ்திரிகள் மீதான பாலியல் தாக்குதல் கிறிஸ்தவர்களின் கலாசாரம், இந்துகளின் கலாசாரம் இல்லை. போப், கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் கவலை அடைந்திருந்தார் என்றால், ஓரினசேர்க்கையை ஊக்குவிப்பதை நிறுத்தட்டும்" என்றார். மேலும் ஹிசாரில் …
-
- 0 replies
- 480 views
-
-
கொல்கத்தா: தன்னை வயது முதிர்ந்த கன்னியாஸ்திரி என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்களை மன்னித்துவிடுமாறு பாதிக்கப்பட்ட மேற்குவங்க மாநில கன்னியாஸ்திரி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டம் ரனாகட், ஜீசஸ் மேரி கான்வென்ட்டில் பலாத்காரம் செய்யப்பட்ட 72 வயது கன்னியாஸ்திரி தற்போது உடல்நலம் தேறி வருகிறார். ரனாகட் மருத்துவமனையில் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் அவரைப் பார்க்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவர் முகத்தில் சோகம் இல்லை. அமைதியாகவும் மிகவும் சோர்வாகவும் இருக்கிறார். "என் இதயம் நொறுங்கி விட்டது. அவர்களை மன்னித்து விட்டுவிடுங்கள்!" என்று குற்றவாளிகளுக்காக பிரார்த்தனை செய்கிறார். பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட கவலையை விட, அவரு…
-
- 0 replies
- 331 views
-
-
பாகிஸ்தானில் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட 12 பேருக்கு நாடெங்கிலும் உள்ள சிறைகளில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் 6 ஆண்டுகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தமை கடந்த டிசம்பரில் மாற்றப்பட்டதை அடுத்து, ஒரே நாளில் அதிகம் பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட தினம் இதுவேயாகும். தலிபான்களால் ஒரு பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, சுமார் 150 பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர், மரண தண்டனை நிறைவேற்றத்தை பாகிஸ்தான் மீண்டும் ஆரம்பித்ததை அடுத்து, இதுவரை 40 பேருக்கு அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. http://www.bbc.co.uk/tamil/global/2015/03/150317_pakistanhang
-
- 0 replies
- 317 views
-
-
ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் குழுவால் வெளியிடப்பட்டுள்ள நானாக்சகி நாட்காட்டியில், இந்திரா காந்தியை கொன்ற கொலையாளிகள் தியாகிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பஞ்சாபில் வெளியாகியுள்ள இந்த நாட்காட்டிக்கு பாஜகவிடம், காங்கிரஸ் கட்சி விளக்கம் கோரியுள்ளது. தியாகிகள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அந்த நாட்காட்டியில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற கொலையாளிகளும், ராணுவ முன்னாள் தளபதி வைத்யாவைக் கொன்றவர்களும் தியாகிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடுமையான கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=128423&category=IndianNews&language=tamil
-
- 3 replies
- 488 views
-
-
நல்வரவு, உறவுக்கு மரியாதை மோடியின் இலங்கைப் பயணம் குறித்து இலங்கையிலிருந்து ஒரு பார்வை இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு வருவது நீண்ட காலத்துக்குப் பிறகு நிகழ்ந்திருக்கிறது. ராஜீவ் காந்தி கடைசியாக வந்து சென்றது பல விதங்களிலும் எதிர்மறை பலன்களையே ஏற்படுத்தியது. இந்தியாவுக்கு வாருங்கள் என்று இலங்கையின் முன்னாள் அதிபர்கள் சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே போன்றோர் பலமுறை வற்புறுத்தி அழைத்ததுகூட இந்தியத் தலைவர்களின் காதுகளில் விழவில்லை. ஆனால், இந்திய அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் இந்தியத் தலைவர்கள் இலங்கைக்கு வருவது நிச்சயம் என்ற நம்பிக்கையைப் பல சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தினார்கள். தமிழ்நாட்டில் உள்ளவர்களைத் திருப்திப்பட…
-
- 0 replies
- 407 views
-
-
லண்டனில் இருந்து துபாய் புறப்பட்ட பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானத்தில்கழிவு(Plane forced to return to Heathrow after 'smelly poo in the toilet') நாற்றம் பயணிகளை திணறடித்ததால், 30 நிமிடத்தில் மீண்டும் ஹீத்ரு விமான நிலையத்துக்கு திரும்ப நேரிட்டது. கடந்த வியாழனன்று குறித்த நேரத்தில் புறப்பட்ட அந்த விமானம் துபாய் நோக்கி வானில் பறந்து கொண்டிருந்தது. ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 30 நிமிடங்களில், விமானத்தில் கடுமையான கழிவு நாற்றம் பயணிகளை நிலை குலைய செய்தது. இதையடுத்து விமானத்தின் கழிவறை நிரம்பி வழிந்ததால் இந்த நாற்றம் வீசுவதாக அறிவித்த விமானி, மீண்டும் விமானம் ஹீத்ரு விமான நிலையத்திற்கு திரும்புவதாக கூறினார். இது குறித்து அந்த விமானத்தில் பயணம் செய்த ஹெர்ட்ஸ்மியர் க…
-
- 12 replies
- 756 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாகப் புகலிடம் கோரி வந்தவர்களில் ஒரு பகுதியினரை கம்போடியாவில் மீளக் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகள் ஒரு சில வாரங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக ஆஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் டத்தொன் தெரிவித்தார். கம்போடியா தலைநகரான புனொம் பென்னில் அந்தநாட்டு அதிகாரிகளைச் சந்தித்து உரையாடிய தைத் தொடர்ந்து பீற்றர்டத்தொன் இவ்வாறு தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் பிரகாரம் ஆஸ் திரேலியாவானது கம்போடியாவுடன் 40 மில்லியன் டொலர் பெறுமதியான உடன்படிக்கையை கடந்த செப்ரெம்பர் மாதம் கைச்சாத்திட்டிருந்தது. நவுறுவிலிருந்து கம்போடியாவில் மீளக் குடியமர்த்தப்படவுள்ள 5 இற்கும் அதிகமான புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான வாழ்க்கைச்…
-
- 0 replies
- 323 views
-
-
டுபாய் இல் உள்ள நகீல் (Nakheel property developers) கட்டுமான நிறுவனம் உலகில் மிக உயரமான (World's Tallest Skyscraper) கட்டுவதற்கு திட்டம். இந்த கட்டடம் கிடத்தட்ட 1400 மீட்டர் உயரம் உடையதாகக இருக்கும் என கூறப்பட்டு உள்ளது. மேலதிக தகவலுக்கு http://inhabitat.com/nakheel-tower-by-woods-bagot-will-be-worlds-tallest-tower/ http://www.architectureanddesign.com.au/news/dubai-tower-by-woods-bagot-is-world-s-tallest-unfi
-
- 4 replies
- 547 views
-
-
கனேடிய அரசாங்கம் முன்வைத்துள்ள தீவிரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் தொடர்பாக இன்று கனடாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த சட்டமூலத்தை எதிர்த்து டொரன்டோ பெரும்பாகத்திலும், ஏனைய பல நகரங்களிலும் Defend our freedom என்ற தலைப்பில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெவறுதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். அரசாங்கத்தின் இந்தப் பிரேரணை மிகவும் ஆபத்தானது என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஜனவரி மாதம் Bill C-15 எனப்படும் இந்த சட்டமூலப் பிரேரணையை கன்சவேற்றிவ் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இதன்கீழ் காவற்துறையினருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டு, அவர்கள் சந்தேகநபர்களைக் கைதுசெய்து தடுத்து வைக்கும் அதிகாரத்தை வழங்குகின்றது டொரன்டோவில் நேத்தன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நட…
-
- 1 reply
- 336 views
-
-
கனடா ரொறன்றோ பல்கலைக் கழகம், உலகப் பல்கலைக் கழங்களில் 16 ஆவது இடத்தையும், கனடாவில் முதல் இடத்தையும் பெற்றதென Times Higher Education ஆய்வு குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, அனைத்துலக மட்டத்தில் ரொறன்றோ பல்கலைக்கழகம் நான்கு இடங்கள் முன்னேறியது. கனடாவில் இரண்டாவது இடத்தை வகிக்கும் மக்கில் பல்கலைக்கழகம், உலக பல்கலைக்கங்களில் 35 ஆவது இடத்தை வகிக்கின்றது. ஹாவேர்ட் பல்கலைக்கழகம், கேம்ப்றிட்ஜ் பல்கலைக்கழகம், மற்றும் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆகியன உலகத் தர வரிசையின் முதல் மூன்று இடங்களையும் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். - See more at: http://www.canadamirror.com/canada/39356.html#sthash.aLhbCRu7.dpuf
-
- 0 replies
- 336 views
-
-
பசுபிக் நாடான வனுவாட்டுவை புயல் தாக்கி பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், டஜன் கணக்கான மக்கள் பலியாகியுள்ளதாகவும் உதவி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. வனுவாட்டுவில் கடும் புயல் அந்த சமூகத்தினரின் பாராம்பரிய ஓலை வீடுகள் அனைத்தும் புயற்காற்றில் வீசி எறியப்பட்டுள்ளதுடன், நவீன அடுக்கு மாடித் தொகுதிகளும் உடைந்து வீழ்ந்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். வனுவாட்டுக்குச் சொந்தமான அறுபத்தைந்து தீவுக் கூட்டங்களிலும் புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னமும் முழுமையாக கணக்கெடுக்கப்படவில்லை என நிவாரணப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் தேவாலயங்களில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்துள்ளதாக கூறிய நிவாரணப் பணியாளர்கள் மேலும் அனேகமானோர் தலைந…
-
- 2 replies
- 428 views
-
-
உள்நாட்டு போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டு மக்களை, கருத்து வேறுபாட்டு காரணமாக ஐ.நா சபையால் காப்பாற்ற முடியவில்லை என்று பான் கி மூன் வருத்தம் தெரிவித்துள்ளார். 2011-ல் சிரியாவில் அமைதியான வழியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக ஆரம்பித்த மக்கள் போராட்டம் பெரும் உள்நாட்டு போராக வெடித்தது. இதன் காரணமாக இன்று வரை அந்நாட்டு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். நான்கு ஆண்டுகளையும் கடந்து ஐந்தாவது ஆண்டில் நுழையவிருக்கம் இப்போரில் இதுவரை 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், 4 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் அகதிகளாக பக்கத்து நாடுகளுக்கும், 7.6 மில்லியன் மக்கள் அந்நாட்டிற்குள்ளாகவே அகதிகளாகியிருப்பதாகவும் பான் கீ-மூன் வெளியிட்டுள்ள அறிக…
-
- 6 replies
- 466 views
-
-
கனடா- துண்டிக்கப்பட்ட பன்றி ஒன்றின் தலை மொன்றியல் பொலிஸ் சங்க அலுவலகத்தின் முன்னால் போடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பு காட்சிகளில் இருந்து வியாழக்கிழமை இரவு இது நடந்துள்ளதென விசாரனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். பொலிஸ் சேவைக்கும் பொலிஸ் அதிகாரிகளிற்கும் இது ஒரு “நேரடி அச்சுறுத்தல்” என Cmdr. Ian Lafreniere CTV செய்தியில் தெரிவித்துள்ளார். இதனால் தான் தாங்கள் இதனை மிகவும் தீவிரமானதாக எடுத்து கொள்கின்றோம் எனவும் கூறியுள்ளார். சங்க காரியாலயத்தின் வெளியே வெண்கட்டியினால் வரையப்பட்ட ஒரு ஐந்து முனைகளையுடைய நட்சத்திர-வடிவம் ஒன்றின் மத்தியில் இந்த தலை கண்டுபிடிக்கப்பட்டது. கதவி…
-
- 1 reply
- 409 views
-
-
c41cbedf0b76db5329fd8eeb0f7575c2
-
- 0 replies
- 355 views
-
-
லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்க ஜனாதிபதி, ஒபாமாவிடம் அதிநவீன வசதிகளை கொண்ட ஸ்மார்ட் போன் கிடையாது. அவர் செல்போனில் யாருக்கும் குறுந்தகவல், படங்கள் அனுப்புவது இல்லை என தெரிய வந்துள்ளது. ஏ.பி.சி. டி.வி.க்கு அளித்த பேட்டியில் ஒபாமா, இது பற்றி குறிப்பிடும்போது, நான் பொதுவாக டிவிட் (குறுந்தகவல்) வெளியிடுவதில்லை. நான் எஸ்.எம்.எஸ். அனுப்புவதில்லை. இப்போதும் என்னிடம் ஒரு பிளாக்பெர்ரி (செல்போன்) மட்டுமே உள்ளது என்றார். ஆனால், என் மகள்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தோழிகளுடன், நண்பர்களுடன் தகவல்கள் பரிமாறிக்கொள்கிறார்கள். நான் பாதுகாப்பு காரணங்களையட்டி குறிப்பிட்ட அளவே தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துகிறேன். ஒலிப்பதிவு செய்யும் வசதி கொண்ட போன்களை பயன்படுத்துவத…
-
- 0 replies
- 567 views
-
-
கனடாவில் கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் கனேடியர்களின் வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பின் அளவை விட, அவர்கள் பெற்ற கடன்களின் அளவில் நிலவிய அதிகரிப்பு அதிகமானதென கனடா புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிடுகிறது. கனேடியர்களின் செலவிடக்கூடிய வருமானத்தின் 163.3 சதவீதமாக அவர்களது கடன்கள் இருப்பதாக அது தெரிவித்தது. ஒவ்வொரு டொலர் வருமானத்திற்கும், கனேடியர்களக்கு சராசரியாக 163 சதம் கடன் இருந்ததென்பதை அது காட்டுகிறது,எனவும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிடுகிறது. - See more at: http://www.canadamirror.com/canada/39267.html#sthash.GqQMu9jU.dpuf
-
- 0 replies
- 384 views
-
-
அமெரிக்காவில் குப்பைகளை அகற்ற காலை நேரத்தில் பொழுதோடு பணிக்கு வந்த துப்புரவு தொழிலாளிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதிகாலையில் வந்து பொதுமக்களின் தூக்கத்துக்கு இடையூறு செய்ததால் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க மாகாணமான ஜியார்ஜியாவில் துப்புரவு தொழிலாளராக பணியாற்றுபவர் கெவின் மெக்கில், இவர் தனியார் நிறுவனத்தின் மூலம் பணி செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் காலை 5 மணிக்கே பணிக்கு வருவதால், தூக்கம் கெடுவதாக சாண்டி ஸ்ப்ரிங் நகர போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இவர் காலை நேரங்களில் பணியில் ஈடுபடுபட்டதற்கான ஆதாரங்களும் வழங்கப்பட்டன. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நகர மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பினார். விசாரணையின்போது, நிறுவனம்…
-
- 0 replies
- 305 views
-
-
இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் சவால்களை முறியடிக்குமா இந்தியா? MAR 13, 2015 | 10:53by நித்தியபாரதிin கட்டுரைகள் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் கை ஓங்கினால் அது இந்தியாவின் அதிகார சக்தியாக மிளிரவேண்டும் என்கின்ற இலட்சியத்தை முடிவுக்குக் கொண்டு வருவதையே குறித்து நிற்கும். இதன்பின்னர், இந்தியா இப்பிராந்தியத்தின் அதிகாரத்துவ சக்தியாக விளங்குவது கடினமானதாகும். இவ்வாறு “ஹிந்துஸ்தான் ரைம்ஸ்” நாளிதழில் Brahma Chellaney எழுதியுள்ள ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. இந்திய மாக்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த மூன்று நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணிப்பதானது வெளிச்சக்திகள் இப்பிராந்தியத்தில் தலையீடு …
-
- 0 replies
- 314 views
-
-
இத்தாலிய கிராமமொன்றில் ஒரே நாளில் 100 அங்குல (சுமார் 8 அடி) உயரத்திற்கு பனிப்பொழிவு இடம்பெற்றுள்ளது. ரோம் நகரின் கிழக்கே சுமார் 125 மைல் தொலைவிலுள்ள கப்ரகொதா கிராமத்தில் இடம்பெற்ற இந்த பனிப்பொழிவானது தனியொரு நாளில் இடம்பெற்ற அதிகளவான பனிப்பொழிவு என்ற உலக சாதனையை படைத்துள்ளது. மேற்படி பனிப்பொழிவையடுத்து மக்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறுவதற்கு பனிக் குவியலினூடாக சுரங்கப்பாதைகளை தோண்ட நேர்ந்துள்ளது. இந்தப் பனிப்பொழிவு 1921 ஆம் ஆண்டு அமெரிக்க கொலராடோ மாநிலத்தில் சில்வர் லேக் பிராந்தியத்தில் இடம்பெற்ற 76 அங்குல பனிப் பொழிவால் நிறைவேற்றப்பட்ட உலக சாதனையை முறியடித்துள்ளது. http://www.virakesari.lk/ar…
-
- 0 replies
- 320 views
-
-
நியூயார்க் : சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் அரசு படைகள் தாக்கியதில் 600க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பலியாகி இருக்கலாம் என நியூயார்க்கைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில், மருத்துவமனைகளைக் கூட விட்டு வைக்காமல் அரசு படைகள் தாக்குதல் நடத்தியதாக தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலின் போது, போரினால் மோசமாக காயமடைந்து சிகிச்சை பெற்றவர்களும், அவர்களுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த 600-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பு கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்…
-
- 0 replies
- 471 views
-
-
எரிமலை வெடித்து சிதறியதில் பசிபிக் பெருங்கடலில் புதிய தீவு உருவாகியுள்ளது இது விரைவில் மறைந்து போகலாம் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து உள்ளார். பசிபிக் பெருங்கடலில் உள்ள மிகப்பெரிய தீவு நாடான டோங்கோவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்து இந்த தீவு உருவாகியுள்ளது. நிகோபோலோவிற்கு வடமேற்கே எரிமலை வெடித்து கடந்த ஜனவரி மாதம் பெரும் புகைவெளியாகியது. ஜனவரியில் எரிமலை வெடித்து சிதறியபோதே இந்த தீவு உருவாகத் தொடங்கியது. புதிய தீவானது கடல்மட்டத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் உள்ளது என்றும் 1.8 கிலோமீட்டர் நீளமும் 1.5 கிலோமீட்டர் அகலத்திலும் புதிய தீவு உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். நிகோபோலோவில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தீவுக்கு சென்ற …
-
- 0 replies
- 475 views
-
-
கனடா- மார்க்கம் தொடக்க பள்ளி உட்பட யோர்க்பிராந்தியத்தின் பல பாடசாலைகள் வியாழக்கிழமை காலை பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பாடசாலைகளிற்கு பொலிசார் அனுப்பி வைக்கப்பட்டதாக யோரக் பிராந்திய பொலிசார் உறுதிப்படுத்திய போதும் சாத்தியமான அச்சுறுத்தல் தன்மை குறித்து எதுவும் வெளியிடவில்லை என கூறப்பட்டது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மதியத்திற்கு சிறிது முன்பாக நீக்கப்பட்டது ஆனால் பாடசாலைகளில் பொலிசாரின் பிரசன்னம் இருந்துள்ளது. இது ஒரு வெடிகுண்டு மிரட்டல் அல்ல என தெரிவித்த கான்ஸ்டபிள் லோறா நிக்கோல் மேலும் விளக்கமளிக்க முடியாத நிலை என கூறியுள்ளார். மிரட்டலில் வெளியிப்பட்ட பாடசாலையின் பெயரை அவர் வெளியிடவில்லை. அதே பெயர் கொண்ட பல பாடசாலைகள் …
-
- 0 replies
- 239 views
-