உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
இஸ்லாமாபாத்: தாலிபான் தீவிரவாதிகளுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் பாகிஸ்தான் சிறைகளில் தற்போது தூக்குத் தண்டனை விதித்து அடைக்கப்பட்டுள்ள 3000 தீவிரவாதிகளையும் 48 மணி நேரத்திற்குள் தூக்கில் போட்டு விட வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷெரீப் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தாலிபான்களையும் முழுமையாக அழிப்போம் என்றும் அவர் சூளுரைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு வெளியே நடக்கும் குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் தீவிரவாதச் செயல்களை பெரும்பாலும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐதான் தூண்டி வருகிறது. நாட்டின் எல்லையிலோ பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறுகிறது, தீவிரவாதிகளையும் ஊடுறுவச் செய்கிறது. ஆனால் இன்று பாகிஸ்தானுக்குள் பிரச்சி…
-
- 0 replies
- 646 views
-
-
பாரீஸ்: பாலஸ்தீன தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்று இஸ்ரேல் முன்னாள் அதிபர் சிமோன் பெரஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனம் தற்போது 'பார்வையாளர்' அந்தஸ்தை மட்டுமே பெற்றுள்ளது. பாலஸ்தீனம் ஒரு தனிநாடாக ஐ.நாவில் முழுமையான உறுப்பினர் நாடாக இணைவதற்கான முயற்சிகளை அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஜோர்டான் நாடு ஒரு வரைவுத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தது. அதில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து 2017ஆம் ஆண்டுக்குள் விலகிக் கொள்ள வேண்டும்; பாலஸ்தீனமும் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; இதனடிப்படையில் கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு பாலஸ்தீ…
-
- 0 replies
- 435 views
-
-
அவுஸ்ரேலியா குயின்ஸ் லெண்ட் மாநிலத்தில் உள்ள மனோர என்னும் இடத்தில் ஒரு வீட்டுக்குள் இருந்த 18 மாதம் தொடக்கம் 15 வயது வரைக்கும் இடைப்பட சிறுவர்கள் 8 பேர் சடலமாக மீட்கப் பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முதல் கட்ட விசாரணைகள் நடத்தப் படுவதாக குயின்ஸ் லாண்ட் பொலிசார் தெரிவித்துள்ளனர் . குறித்த சம்பவம் இடம்பெற்ற வீட்டில் பலத்த காயங்களுடன் 34 வயது மதிக்கக்தக்க பெண் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அவரிடம் தொடர்ந்து விசாரணைகள மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். http://virakesari.lk/articles/2014/12/19/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0…
-
- 0 replies
- 478 views
-
-
பாட்னா: பீகாரில் வியாழக்கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களுக்கு ஓடி வந்தனர். நேபாள் மற்றும் இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள பீகார் மாவட்டங்களை மையமாகக் கொண்டு வியாழக்கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியிருந்தது. பாட்னா, தர்பங்கா, அராரியா, முங்கர், சுபுவால் மற்றும் மதுபானி உள்ளிட்ட இடங்களில் இரவு 9.02 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது. வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர். நேபாளத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். முன்பும் கூட அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டபோது அது பீகாரின் தர்பங்கா, மதுபானி உள்ளிட்ட பகுதிகளில்…
-
- 0 replies
- 665 views
-
-
Alan Gross was freed as part of a deal with Cuba that paves the way for changes in U.S. policy, officials say. The U.S. and Cuban presidents speak separately at noon. http://www.cnn.com/
-
- 4 replies
- 667 views
-
-
தங்களைத் திருமணம் செய்ய மறுத்த நிறைமாத கர்ப்பிணி உட்பட 150 இளம்பெண்களின் தலைகளை துண்டித்துக் கொடூரமாக ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஈராக் நாட்டின் மனித உரிமைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈராக் நாட்டில் தங்களது கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளில் தங்களைத் திருமணம் செய்ய மறுத்த கர்ப்பிணி உட்பட சுமார் 150 இளம்பெண்களின் தலைகளைத் துண்டித்து ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொலை செய்து உள்ளனர் என்றும், அவர்களை மொத்தமாக ஒரே இடத்தில் புதைத்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அபு அனஸ் அல்-லிபி என்ற தீவிரவாதியே இந்த பெண்களை கொன்றதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஐ.எஸ்.தீவிரவாதிகள் 50 ஆண்கள் மற்றும்…
-
- 0 replies
- 3.2k views
-
-
இந்திய பெருங்கடலில் தமிழக, கேரளா மீனவர்கள் 102 பேரை... கைது செய்தது இங்கிலாந்து கடற்படை! கன்னியாகுமரி: இந்திய பெருங்கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 102 மீனவர்களை இங்கிலாந்து கடற்படை கைது செய்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக இந்திய பெருங்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்திய பெருங்கடலில் இங்கிலாந்துக்கு சொந்தமாக டியாகோ கார்சியோ தீவு உள்ளது. இந்தத் தீவை அமெரிக்கா குத்தகைக்கு எடுத்து கடற்படை தளம் அமைத்துள்ளது. இந்நிலையில் தமிழக, கேரளா மீனவர்கள் டியாகோ கார்சியோ தீவுப் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இங்கிலாந்து கடற்படை 102 மீனவர்களை கைது செய்துள்ளது. அண்…
-
- 1 reply
- 480 views
-
-
ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பை ஐரோப்பிய யூனியன் நிதிமன்றம் புதன்கிழமை நீக்கியது. எனினும், ஹமாஸ் இயக்கத்தின் சொத்துக்கள் முடக்கம் தொடரும் எனவும் அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஊடகங்களிலும், இணையதளங்களிலும் வெளியான செய்திகளின் அடிப்படையில்தான் 2001-ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ஹமாஸ் அமைப்பு சேர்க்கப்பட்டது. ஒரு அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்ப்பதற்குரிய சட்டப்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்படவில்லை. விதிமுறைகளின் அடிப்படையில்தான் அந்தப் பட்டியலிலிருந்து ஹமாஸ் அமைப்பின் பெயர் நீக்கப்படுகிறதே தவிர, ஹமாஸ் ஒரு பயங்கரவாத…
-
- 4 replies
- 444 views
-
-
புரட்சி மூலம் சுதந்திர போராட்டம் நிகழ்த்திய சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பது குறித்த சர்ச்சை இன்றளவும் தீராத ஒன்றாகவே இருந்து வருகிறது. அண்மையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிருடன் உள்ளதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கறிஞர் வி. ரமேஷ் தாக்கல் செய்திருந்த் இந்த மனுவில், நேதாஜி தொடர்பாக மத்திய அரசிடமுள்ள 41 கோப்புகளை பகிரங்கமாக வெளியிட வேண்டுமென்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை மதுரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக பாரதிய சுபாஷ் சேனாவின் ஒருங்கிணைப்பாளர் ஏ. அழகுமீனா (35) சார்பில் மதுரை நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவ…
-
- 5 replies
- 4.1k views
- 1 follower
-
-
பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவ பள்ளிக்குள் தாலிபான் தீவிரவாதிகள் நடந்த கோர காட்சியின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ஒரு பள்ளியில் தாலிபான்கள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 132 பள்ளிக் குழந்தைகள், 9 பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதிகளில் ஒருவர், உடலில் கட்டி வந்த குண்டுகளை வெடிக்கச்செய்து உடல் சிதறி உயிரிழந்தார். மற்ற 5 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானார்கள். இதையடுத்து தாக்குதல் முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளையும் சேர்த்து மொத்த 141 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் நடந்த சண்டை படங்கள் தற்போது வெளியா…
-
- 1 reply
- 736 views
-
-
இங்கிலாந்து திருச்சபை தனது முதல் பெண் ஆயரை நியமித்துள்ளது. இங்கிலாந்தின் முதல் பெண் ஆயர் எனும் பெருமையை பெற்றுள்ள லிப்பி லேன் அம்மையார் இதையடுத்து வணக்கத்துக்குரிய லிப்பி லேன் அம்மையார், ஸ்டாக்பார்ட் ஆயராக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்பார். இதன் மூலம் பல நூற்றாண்டுகளாக ஆண்கள் மட்டுமே ஆயராக வரமுடியும் எனும் நடைமுறை இங்கிலாந்தின் ஆங்லிக்கன் திருச்சபையில் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நியமனத்தின் மூலம் தான் மிகவும் உவகை அடையும் அதே நேரம் அயர்ச்சியும் அடைந்துள்ளதாகவும் ஆயராக நியமிக்கப்பட்டுள்ள லிப்பி லேன் அம்மையார் தெரிவித்துள்ளார். சர்ச் ஆஃப் இங்கிலாந்தில் முதல் முறையாக 1994 ஆம் ஆண்டு பெண்கள் மதகுருமார்களாக நியமிக்கப்பட்டனர். அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா உட்பட பல நாட…
-
- 0 replies
- 464 views
-
-
புதுடெல்லி, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுவதாக பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அறிவித்தார். பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, ஐ.எஸ். இயக்கத்தால் இந்தியாவுக்கு உள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றை ஒடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பேசுகையில், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியவுடன் அவற்றை நாங்கள் கவனத்தில் கொண்டோம். இந்த நிகழ்வுகள், எங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கின்றன. அதன் நடவடிக்கைகளை ஒடுக்க விரும்புகிறோம். ஆகவே, அந்த இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுகிறது. இந்திய வாலிப…
-
- 2 replies
- 381 views
-
-
ஏற்று காலை 9;45 மணியிலிருந்து நடந்துவந்த சிட்னி மார்ட்டீன் பிளேஸ் பணயக் கைதி நாடகம் இன்று அதிகாலை 2 மணிக்கு முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. நேற்று மாலை முதல் பணயக் கைதிகள் ஒவ்வொருவராக தப்பி வந்துகொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் மீதமிருந்த பணயக் கைதிகளை பயங்கரவாதி கொல்ல எத்தனித்த வேளை விசேட படையணி கட்டிடத்திற்குள் நுழைந்து அவனைச் சுட்டுக் கொன்றது. அவனால் கொல்லப்பட்ட ஒருவர் உற்பட மூவர் இதில் பலியாகியுள்ளனர். ஒரு பணயக் கைதி மாரடைப்பால் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த இஸ்லாமிய அடைப்படைவாதப் பயங்கரவாதை ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய குருவென்றும் பலமுறை அவுஸ்த்திரேலிய பொலிஸாரினல் கண்கானிக்கப்பட்டு வந்தவன் என்றும், தனது மனவி கொலை உற்பட அவுஸ்த்திர…
-
- 9 replies
- 2.1k views
-
-
உலகளவில் கச்சா எண்ணெயின் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. எண்ணெய் விலை வீழ்ச்சி பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அதன் விலைக் குறியீடான பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை, ஒரு பாரல் 59 டாலர்களுக்கு விழுந்துள்ளது. வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஏற்பட்டுள்ள மந்தமான வளர்ச்சியும், உற்பத்தி பெருகி வரும் வேளையில் தேவைகள் மிகவும் குறைந்துள்ளதும் இதற்கு ஒரு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஆண்டின் ஜூன் மாதம் மிகவும் உச்சமாக, பாரலுக்கு 115 டாலர்களை கச்ச எண்ணெயின் விலை எட்டியது. ஒரு பாரல் எண்ணெய் என்பது சுமார் 159 லிட்டர்களுக்கு சமமாகும். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில், எ…
-
- 0 replies
- 465 views
-
-
பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளிக்குள் நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெறித்தனமான கொடூரத் தாக்குதலில் 80 பள்ளி குழந்தைகள் உட்பட 104 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான பள்ளி குழந்தைகள் பிணைக் கைதிகளாக தலிபான் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளிக் கூடத்துக்குள் இன்று 7 தலிபான்கள் தீவிரவாதிகள் திடீரென உள்ளே நுழைந்தனர். பாகிஸ்தான் ராணுவ சீருடையுடன் உள்ளே நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் முதலில் பள்ளி வாகனத்துக்கு தீ வைத்தனர். அப்போது பள்ளிக்கூடத்தில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர்கள் அனைவரையும் துப்பாக்கி முனையில் கலையரங்கம் ஒன்றில் தலிபான…
-
- 6 replies
- 785 views
-
-
உலகில் வனவாழ் உயிர்களின் எண்ணிக்கை கடந்த நாற்பது வருடங்களில் பாதிக்கும் அதிகமாகக் குறைந்துவிட்டது என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. பாலூட்டி விலங்குகள், பறவைகள், நீரிலும் நிலத்திலும் வாழும் விலங்குகள், மீன்கள் போன்றவற்றின் எண்ணிக்கை இதுவரை கருதப்பட்டதை விட மோசமாகக் குறைந்துபோயுள்ளதாக இயற்கைக்கான உலகளாவிய நிதியம் என்ற அமைப்பு கூறுகிறது. இந்த எண்ணிக்கை வீழ்ச்சிக்கு மனிதச் செயல்களே காரணம் என அது குற்றஞ்சாட்டியுள்ளனர். விலங்குகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு, அவற்றின் வாழ்க்கை ஆதாரங்களான இயற்கை வளங்கள் - மறுபடியும் உருவாவதை விட வேகமான அளவில் - அழிக்கப்பட்டுவருவதும் இந்நிலைக்கு காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆப்பிரிக்காவின் காட்டு யானைகள், கடல்வாழ் ஆமைகள…
-
- 16 replies
- 1.9k views
-
-
பாகிஸ்தானுடன் இந்தியா: ட்விட்டர் உலகை நெகிழவைத்த ஆறுதல் பயங்கரவாதத்துக்கு குழந்தைகளை பலிகொடுத்த அண்டை நாடான பாகிஸ்தானின் மக்களுக்கு, ட்விட்டர் மூலம் இந்தியர்கள் தெரிவித்த ஆறுதல் நெகிழவைக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான பள்ளிக்கூடத்தை குறிவைத்து தாலிபான் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியாகினர். தாக்குதல் தொடங்கியது முதலே ட்விட்டரில் #PeshawarAttack என்ற ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தது. இந்தக் கொடூரத் தாக்குதலின் தன்மை தொடர்பாக செய்திகள் வெளிவரத் தொடங்கியதும், ட்விட்டரில் பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தியர்கள் இட்ட …
-
- 0 replies
- 518 views
-
-
டோக்கியோ கடந்த மாதம் கலைக்கப்பட்ட ஜப்பான் பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் திடீர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பிரதமர் சின்சோ அபேவின் விடுதலை ஜனநாயக கட்சி கொமித்தோ கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. எதிர்த்தரப்பில் ஜப்பான் ஜனநாயக கட்சி கூட்டணி கடும் போட்டியை ஏற்படுத்தியது. திடீர் தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. மொத்தம் 53.3 சதவீத ஓட்டுகளே பதிவானது. 2012–ம் ஆண்டு நடந்த தேர்தலில் 59.3 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்தமுள்ள 475 தொகுதிகளில் சின்சோ அபேவின் கூட்டணிக்கு 328 தொகுதிகள் (3–ல் 2 மடங்கு) கிடைத்தன. இது அந்நாட்டில் ஆட்சியை எந்த வித சிக்கலும் இன்றி நடத்துவதற்கு கிடைத்த ‘‘சிறப்பு பெரும்பான்மை’’ என்பது குறிப்பிடத்த…
-
- 0 replies
- 295 views
-
-
இந்திய தேசத்துக்கு எதிரான அமைப்புக்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்புகளை கொண்டிருக்கிறதா? என்பது தொடர்பில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என்று இந்திய இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜம்மு காஸ்மீர் விடுதலை முன்னணியின் பிரித்தானிய பிரிவு, சீக்கியர் நடவடிக்கை வலைப்பின்னல் போன்றவற்றுடன் இந்த தொடர்புகள் பேணப்படுகிறதா? என்பது தொடர்பில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கப்பட வேண்டுமா? என்பது தொடர்பில் புதுடெல்லியில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் தீர்ப்பாயத்தில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் பா.சிதம்பரம் மற்றும் வி.நாராயணசாமி ஆகியோர் ம…
-
- 0 replies
- 479 views
-
-
அமெரிக்காவில் முன்னாள் கடற்படை அதிகாரி தனது குடும்பத்தில் உள்ள 6 பேரை சுட்டு கொன்றார் I பென்சில்வேனியா அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் பென்ஸ்பர்க்கை சேர்ந்த அதிகாரி பிரட்லி வில்லியம் ஸ்டோன் ( வயது 35) இவர் தனது குடும்பத்தை சேர்ந்த 6 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை 4 மணியளவில் முதல் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. . முதலாவதாக ஸ்டோம் தனது முன்னாள் மனைவி நிகோலே கில்லை கொலை செய்து உள்ளார். மேலும் தனது மகள் தனது பாட்டி பாட்டியின் தாயார் மற்றும் முன்னாள் அண்ணி பேட்ட்ரிகா பிலிக் மற்றும்அவரது 14 வயது மகளையும் துப்க்கியால் சுட்டு கொலை செய்து உள்ளார். மேலும் துப்பக்கி சூட்டில் 3 பேர் படுக…
-
- 0 replies
- 477 views
-
-
அவுஸ்திரேலிய பணயக்கைதிகள் விவகாரத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமைகோரியுள்ளது. இன்று காலை சிட்னி நகரிலுள்ள கபே கட்டடத்தொகுதியில் 20 பொதுமக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு பணயக்கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர். இந் நிலையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களில் ஐவர் தப்பியோடி வந்துவிட்டதாக அவுஸ்திரேலியச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் தப்பி வந்தனரா அல்லது விடுதலை செய்யப்பட்டனரா என்பது வெளிவரவில்லை. இருப்பினும் அவர்கள் தப்பி வந்திருக்கலாம் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவுஸ்திரேலிய செய்தி நிறுவனமான 9 நியூஸ் நிறுவனத்திற்கு பெண் பணயக்கைதிகள் இருவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளச்செய்து தீவிரவாதி தனது கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி…
-
- 5 replies
- 984 views
-
-
நேபாளத்தில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் மதமாற்றம் குறித்த தேவையில்லாதக் கருத்துக்களைக் கூறியதற்காக காட்மாண்டுவிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை நேபாள அரசு எச்சரித்துள்ளது. மதம் மாறுவதற்கு சுதந்திரம் வேண்டும் என்று பிரிட்டிஷ் தூதரகம் தெரிவித்திருந்ததற்கே இந்தக் கண்டனம் வந்துள்ளது. இப்படியான கருத்துக்கள் நாட்டின் சமூகத் ஸ்திரத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் என்று நேபாள அரசு கூறுகிறது. நேபாளத்தில் புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் சாசனத்தில், மதம் மாறுவதற்கான உரிமை உள்வாங்கப்பட வேண்டும் என்று நேபாளத்துக்கான பிரிட்டிஷ் தூதர் அண்மையில் ஒரு கட்டுரையில் கூறியிருந்தார். அதற்கு நேபாளிய அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் அக்கட்டுரையில் கோரியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெ…
-
- 2 replies
- 554 views
-
-
ரூபிளின் மதிப்பில் வீழ்ச்சி, பணவீக்கம் அதிகரிப்பு, நெருக்கடியில் பொருளாதாரம் ரஷ்ய நாணயமான ரூபிலின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக இதுவரை இல்லாத மோசமான வீழ்ச்சி கண்டுள்ளது. 60 ரூபில் சேர்ந்தால்தான் 1 அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு முதல் முறையாக ரூபில் வீழ்ந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் டாலருக்கு எதிரான ரூபிலின் மதிப்பு 45 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. ரஷ்ய மத்திய வங்கி தனது நாணயத்தை ஸ்திரப்படுத்த முயற்சிகளை எடுத்தாலும், அது சாத்தியப்படவில்லை என்று கூறுகிறார் பிபிசியின் பொருளாதார செய்தியாளர். ரஷ்யாவின் முக்கிய ஏற்றுமதிகளில் ஒன்றான கச்சா எண்ணெயின் விலை உலகளவில் விழுந்துள்ளதும், உக்ரைனில் ஏற்பட்ட மோதல்களால், ரஷ்யாவுக்கு எதிரான சர்வதேசத் தடைகள் காரணமாக பங்குச் ச…
-
- 0 replies
- 560 views
-
-
பிரஸ்சல்ஸ்: ஆஸி., சிட்னியில் உள்ள ஒரு ஓட்டலில் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் சிறை வைத்துள்ள சம்பவம் இன்னும் முடிவுக்கு வருவதற்கு முன்னர் பெல்ஜியத்தில் மேலும் அதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கியுடன் வந்தது பயங்கரவாதிகளா என்ற விவரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சிட்னி ஓட்டலில் சிக்கி உள்ள பிணைக்கைதிகளை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. பயங்கரவாதிகளுடன் கை தேர்ந்த அதிகாரிகள் பேசி வருவதாக ஆஸி., போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும் சிட்னியில் பிணை வைத்துள்ள பயங்கரவாதிகள் சிரியாவை அல் நுஷ்ரா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. சிட்னி ஓட்டல் பயங்கரவாதிகள் பிடியில் ஒரு இந்தியாவின் இன்போசிஸ் ஊழியரும் சிக்கியுள்ளதாக இன்போசிஸ் அலுவலக வட…
-
- 5 replies
- 963 views
-
-
அவுஸ்த்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபல உணவு விடுதியொன்றினுள் புகுந்துகொண்டுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளான ஐஸிஸ் குழுவினர், அங்கேயிருந்த மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதுடன், வெளியிலிருந்து பொலிஸார் நடத்தவிருக்கும் எந்தவிதமான தாக்குதல்களையும் தடுப்பதற்காக பணயக்கைதிகளை கண்ணாடி யன்னல்களின் முன்னால் கைகளை உயர்த்தியபடி நிற்க வைத்திருக்கிறார்கள். யன்னல் ஒன்றின் முன்னால், "அல்லாவே ஒரே கடவுள், வெறொருவரில்லை" என்கிற இஸ்லாமிய அடிப்படைவாதப் பதாதையும் தொங்கவிடப்பட்டிருக்கிறது. சிட்னியின் பிரபல சனநடமாட்டம் மிகுந்த மார்ட்டீன் பிளேஸ் எனும் பகுதியில் அமைந்திருந்த இந்த உணவகத்தினுள் காலை 10 மணிக்குச் சற்றுமுண்ணர் நுழைந்த பயங்கரவாதிகள் இந்த பணயக்கைத்திகளை…
-
- 35 replies
- 2.7k views
-