உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 13 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் திடீரென சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 13 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலியான 14 வீரர்களில் 2 பேர் சி.ஆர்.பி.எப். படை அதிகாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த சுக்மா வனப்பகுதி தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ளது. கடந்த மாதம்தான் சுக்மா வனப்பகுதியில் மாவோயிடுகளுடன் சண்டையிட்டு காயமடைந்த சிஆர்பிஎப் வீரர்களை கொண்டு செல்ல அந்த இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மற்…
-
- 0 replies
- 374 views
-
-
மைனஸ் 61 டிகிரி குளிரில் நகராத விமானத்தை தள்ளிய பயணிகள் நம் ஊரில், நடுவழியில் செயலிழந்து நிற்கும் பஸ்களை, அதில் பயணிக்கும் பயணிகள் கீழே இறங்கி தள்ளுவதை சர்வ சாதாரணமாக பார்த்து இருக்கிறோம். ஆனால், ரஷியா அருகே உள்ள சைபீரியாவில், இதே பாணியில், ஒரு விமானத்தை தள்ளி பயணிகள் உதவி செய்துள்ளனர். சைபீரியாவில் உள்ள இகர்கா நகரில் இருந்து கிரஸ்னோயர்ஸ்க் நகருக்கு சைபீரிய விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அதில், 74 பயணிகள் இருந்தனர். அங்கு மைனஸ் 61 டிகிரி கடுங்குளிர் வீசி வருகிறது. இதனால் ஓடுபாதையே தெரியாத அளவுக்கு பனி மூடியிருந்தது. அந்த குளிரால், விமானத்தின் பிரேக் பகுதி உறைந்து விட்டது. இதனால், விமானம் இயங்க மறுத்து விட்டது. விமானத்தை கட்டி இழுத்துச் செல்லும் வாகனத்தையும் …
-
- 1 reply
- 520 views
-
-
மகனுடன் பயணித்த கார் விபத்தில் சிக்கியது டேவிட் பெக்காம் அதிர்ச்சி 2014-12-01 11:36:07 இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர் டேவிட் நேற்றுமுன்தினம் வாகன விபத்தொன்றில் சிக்கினார். 39 வயதான டேவிட் பெக்காம் தனது மூத்த மகனான புரூக்ளினை கால்பந்தாட்ட மைதானமொன்றிலிருந்து பயிற்சியின் பின்னர் அழைத்துக்கொண்டு சென்றபோது அவரின் கார் மற்றொரு காருடன் மோதியுள்ளது. லண்டன் ஹேர்ட்போர்ட்ஷயர் பகுதியில் இடம்பெற்ற இவ்விபத்தின் பின்னர் பொலிஸார் அழைக்கப்பட்டனர். டேவிட் பெக்காம் இவ்விபத்தில் சம்பந்தப்பட்டாரா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், அவ்டி ரக காரொன்றும் மிட்ஷுபிஷி கோல்ட் ரக காரொன்றும் விபத்தில் சிக்கியதா…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து டிசம்பர் மாதம் 3வது வாரத்தில் இந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என்ற ராக்கெட் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் தொடர்பான தொழில்நுட்ப வேலைகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. இதை பார்வையிட்டு ஆய்வு செய்யும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பிரசாத் உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பிரசாத் கூறுகையில், "இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளியில் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி என்ற 2 வகை ராக்கெட்டுகளை இந்திய தொழில்நுட்பத்தில் வடிவமைத்து செலுத்தி வருகிறது. இதன்மூலம் பல்வே…
-
- 6 replies
- 481 views
-
-
யூதர்களும் பாலஸ்தீனர்களும் சமாதான வாழ்க்கையால் மட்டுமே புராதனமான ஜெருசலேமைக் காப்பாற்ற முடியும். சில வாரங்களுக்கு முன்னால் ஜெருசலேம் நகரின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 2 பாலஸ்தீன இளைஞர்கள் நகரின் மேற்கு ஓரத்தில் இருந்த யூத வழிபாட்டுத் தலத்துக்குள் நுழைந்து தாக்கினார்கள். அங்கு வழிபட்டுக்கொண்டிருந்தவர்களில் 4 பேரைக் கொன்றார்கள், மேலும் பலரைக் காயப்படுத்தினார்கள். தாக்குதல் நடத்திய 2 இளைஞர்களும் பிறகு சுட்டுக்கொல்லப்பட்டார்கள். பாலஸ்தீனர்களில் பயங்கரவாதிகள் இந்தப் படுகொலையைக் கொண்டாடினார்கள். மிதவாதிகள் கண்டித்தார்கள். இதற்குப் பழிவாங்கும் வகையில் பயங்கரவாதிகளில் ஒருவரின் வீட்டை இஸ்ரேலிய ராணுவம் தரைமட்டமாக்கியது. மற்றவர்களின் வீட்டையும் தகர்க்கப்போவதாக எச்சரித்தது. …
-
- 0 replies
- 723 views
-
-
சுவிட்சர்லாந்தில் குடிவரவை பெரிய அளவில் குறைப்பதென்ற பிரேரணையை அந்நாட்டு மக்கள்கருத்தறியும் வாக்கெடுப்பில் நிராகரித்துள்ளதாகத் தெரிகிறது. குடியேறிகளின் நிகர எண்ணிக்கையை ஆண்டுக்கு 80 ஆயிரத்திலிருந்து 16 ஆயிரமாக குறைப்பது வாக்கெடுப்பின் நோக்கம் அந்நாட்டின் வருடாந்த நிகர குடிவரவை எண்பதாயிரத்திலிருந்து வெறும் பதினாறாயிரமாகக் குறைக்க முன்மொழியப்பட்ட பிரேரணையை வாக்களித்தவர்களில் 74 சதவீதம் பேர் நிராகரித்திருப்பதாக ஆரம்பகட்ட முடிவுகள் காட்டுகின்றன. சுவிட்சர்லாந்தில் பள்ளிக்கூடங்கள், வீட்டுவசதி, பொதுப்போக்குவரத்து போன்றவற்றில் காணப்படும் அழுத்தத்தை இந்த கொள்கையின் மூலமாக குறைக்கும் என இதனைக் கொண்டுவந்தவர்கள் வாதிட்டிருந்தனர். ஆனால் வேகமாக முன்னேற்றமடைந்துவரும் சுவிட்சர்லாந்தி…
-
- 0 replies
- 548 views
-
-
நாட்டில் தீவிரவாதத்தை தடுக்க ‘ஸ்மார்ட் போலீஸ் திட்டம் அவசியம் என டிஜிபிக்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அல்கய்தா தீவிரவாதிகள் அச்சுறுத்தல், ஐஎஸ் அமைப்பில் இந்திய வாலிபர்கள் இணைந்த விவகாரம், மேற்கு வங்க மாநிலம் பர்தவானில் நடந்த குண்டுவெடிப்பு உள்பட பல்வேறு பிரச்னைகள் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு குறித்த போலீஸ் டிஜிபிகளின் 2 நாள் மாநாடு அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் நேற்று ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘இந்தியாவில் நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதல்கள் அனைத்துக்கும் பாகிஸ்தான் அரசுத…
-
- 0 replies
- 408 views
-
-
புதுடெல்லி, அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சி சாத்தியம் இல்லை. எல்லைப்பகுதியில் வேண்டுமானால், சோதனை ரீதியில் அமல்படுத்தலாம் என டெல்லி மேல்-சபையில் மத்திய அரசு அறிவித்தது. நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை, டெல்லி மேல்-சபையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி., அவினாஷ்ராஜ் கன்னா, தனி நபர் மசோதாவாக தாக்கல் செய்தார். கட்டாய ராணுவ பயிற்சி மசோதா, 2012 என்ற இந்த மசோதாவின் மீது விவாதம் நடந்தது. உறுப்பினர்களின் விவாதத்தை பிறகு பேசிய மனோகர் பரிரீகார் கூறுகையில், “இதை முதலில் சோதனை ரீதியில் கொண்டு வருவோம். எல்லையில் உள்ள சில மாவட்டங்களில் இதைக் கொண்டு வரலாம். உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை செய்து விட்டு, அடுத்த…
-
- 1 reply
- 335 views
-
-
சென்னை: பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த மே மாதம் சென்னை, மண்ணடியில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டார். பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் இன்று நீதிபதி மோனி இன்று தீர்ப்பளித்தார். உளவாளி ஜாகீர் உசேனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 2 ஆயிரம் அபராதமும் விதித்ததோடு, அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். முன்னதாக, சென்னையில் சதிதிட்டத்துடன் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக மத்திய உளவு பிரிவு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, மாநில உளவு பிரிவு காவல்துறையினரும், கிய…
-
- 0 replies
- 541 views
-
-
அமெரிக்காவில், தொடரும்... கறுப்பின மக்கள் போராட்டம்! வலைவிரிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்!! வாஷிங்டன்: அமெரிக்கால் வெள்ளை இனத்தவர் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கருப்பின மக்களின் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்த நிலையில் "கருப்பின மக்களே! உங்களை நாங்கள் பாதுகாக்கிறோம்" என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பகிரங்க அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் பெரும் பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், இஸ்லாமிய அரசை பிரகட்னாம் செய்துள்ளனர். தங்கள் இயக்கத்தில் சேருவற்கு உலகம் முழுவதும் உள்ள ஜிகாதிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். தற்போது அமெரிக்காவின் பெர்குசன் வன்முறையை பயன்படுத்தி கருப்பினத்தவரை தங்கள் இயக்கத்தில…
-
- 0 replies
- 918 views
-
-
மரண தண்டனை நிறைவேற்றத்தை உலக நாடுகள் தாற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து ஐ.நா. பொதுச் சபை முன் வைக்கப்பட்ட தீர்மானத்தை எதித்து இந்தியா வாக்களித்துள்ளது. தங்கள் சட்டங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளைத் தண்டிக்கும் நாடுகளின் உரிமையை அந்தத் தீர்மானம் புறக்கணிப்பதால் அதனை எதிர்த்ததாக இந்தியா விளக்கமளித்துள்ளது. சமூக, மனிதாபிமான, கலாசார விவகாரங்களை கவனித்து வரும் ஐ.நா.வின் மூன்றாவது குழு, குறிப்பிட்ட சிலருக்கான மரண தண்டனை நிறைவேற்றத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உலக நாடுகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது. 18 வயதுக்கு உள்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மன நலன் அல்லது அறிவுத் திறன் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கான மரண தண்டனை நிறைவேற்றத்தை உறுப்பு நாடுகள…
-
- 0 replies
- 585 views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பியபோது, பிரபாகரன் தம்மிடம் கருணாநிதிக்கு ஒரு கடிதம் கொடுத்துவிட்டதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 60 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கரூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் பரணி மணி வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வைகோ, “1954ம் ஆண்டு இதே நாளில் பிரபாகரன் பிறந்தார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இன்று பிரபாகரன் பிறந்த நாள் விழாவினை விமரிசையாக கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் இரவு 7.18 மணிக்கு, இனிப்புகள் வழங்கி, பட்ட…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வைத்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மனைவி கயல் விழியுடன் கேக் வெட்டி, பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடினார். இதில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். பிரபாகரன் பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளி மாணவ– மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், வழங்கப்பட்டன. 26 இடங்களில் ரத்ததான முகாம் நடைபெற்றது. குருதிக் கொடை பாசறை ஒருங்கிணைப்பாளர் அரிமாநாதன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பல இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெற்றது. மரக்க…
-
- 0 replies
- 1k views
-
-
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் வரும் 29-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டி, பிரச்சாரம் என இந்திய வம்சாவளியினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். விக்டோரியா மாகாணத்தில் 1.10 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். இம்மாகாணத்தில் அதி வேகமாக வளர்ச்சியடைந்து வரும் சமூகமாக இந்திய சமூகம் உள்ளது. பஞ்சாபி வேகமாக பரவி வரும் மொழியாகவும், இந்துமதம் வேகமாக பரவும் மதமாகவும் உள்ளது. இந்திய வம்சவாளியினர் இங்கு அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றனர். தேர்தலில் புறநகர்ப்பகுதிகளில் ஏராளமான இந்தியர்கள் போட்டியிடுகின்றனர். லிபரல், லேபர், கிரீன்ஸ்,ஆஸ்திரேலின் கிறிஸ்டியன்ஸ் என பல்வேறு கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் ஏராளமான இந்தியர்கள் போட்டியிடு…
-
- 2 replies
- 565 views
-
-
ஈராக் மற்றும் சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முகாமிட்டுள்ள பகுதிகளில், கடந்த சில நாட்களாக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன்படி, ஒவ்வொரு நாளும் எட்டு பயங்கரவாதிகளை கொல்வது என, திட்டமிட்டு, அதை செயல்படுத்தி வருகின்றனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கர வாதிகள், அதை, 'இஸ்லாமிய நாடு' என, அறிவித்துள்ளனர். இந்த பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்ட, எஸ்.ஏ.எஸ்., என, அழைக்கப்படும், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது இந்தப் படையினர், தினமும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் எட்டுப் பேரை கொல்வது என்ற முடிவோடு, புதுவ…
-
- 2 replies
- 881 views
-
-
கவுகாத்தி: இந்தியா, சீனா, வங்கதேசம், மியான்மர் நாடுகள் வழியே திட்டமிடப்பட்டுள்ள, பொருளாதார விரைவு நெடுஞ்சாலை, அந்நாடுகளை சேர்ந்த பல மாநிலங்களின் சிறப்பான பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக பாதுகாப்பிற்கும் துணை புரியும் என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசம், சீனா, இந்தியா, மியான்மர் இந்தியா நாடுகளின் பிராந்திய கூட்டுறவுக்கான கூட்டமைப்பு (பி.சி.ஐ.எம்.,), வங்கதேசம், மியான்மர் வழியாக, இந்தியாவையும் சீனாவையும் இணைக்கும் பிரமாண்ட பொருளாதார விரைவுசாலை திட்டத்தை உருவாக்கியுள்ளது.இது செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில், இந்தியா - சீனா இடையிலான முதல் விரைவு நெடுஞ்சாலை என்ற சிறப்பை பெறும். கோல்கட்டாவையும், சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங் நகரையும் இச்சாலை இண…
-
- 0 replies
- 636 views
-
-
டெல்லி: இந்தியக் குடியரசுத் தின விழாவின் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை அழைத்த செயல் உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியதாகும். இருப்பினும், உலக அளவில் தூதரக அளவிலும், அரசியல் அரங்கிலும் வளரும் சக்தியாக இந்தியா உருவெடுத்து வரும் நிலையில் அண்டை நாடுகளுடனான சில முக்கியப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பது கவலை தருகிறது. இந்தியாவுக்கு எதிரான நாடாகவே பாகிஸ்தான் வளர்ந்து நிற்பது புதிய விஷயமல்ல. அதேசமயம் பாகிஸ்தானுக்குள் பாதுகாப்பு நிலைமை சீர்கெட்டு வருவது இந்தியாவுக்கு ஆபத்தானது. மேலும் அங்கு தீவிரவாத குழுக்கள் பலம் பெற்று வருவதும், தீவிரவாதிகள் அதிகரித்து வருவதும் ஆபத்தானதாகும். குறிப்பாக பாகிஸ்தான் ராணுவத்தில் தீவிரவாத ஆதரவு அதிகாரிகளும் வீரர்களும் பெருக…
-
- 0 replies
- 711 views
-
-
அமெரிக்காவில் கிளேவ்லாண்ட் நகரிலுள்ள விளையாட்டு மைதானமொன்றில் போலி துப்பாக்கியுடன் விளையாடிய 12 வயதுச் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.தாமிர் ரைஸ் என்ற மேற்படி சிறுவன் விளையாட்டு மைதானத்தில் விளையாடிய வேளை, தனது கையில் இருந்த விளையாட்டுத்துப்பாக்கியை ஏனையவர்களை குறிபார்ப்பது போன்று தூக்கிப்பிடித்துள்ளான். இந்நிலையில் தாமிர் ரைஸ்ஸின் கரத்தில் நிஜ துப்பாக்கி இருப்பதாக தவறதாக கருதிய ஒருவர் பொலிஸாருக்கு அது தொடர்பில் அறிவிக்கவும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தாமிர் மீது …
-
- 0 replies
- 537 views
-
-
திபெத்தில் பிரம்மபுத்திரா நதியில் சீனா கட்டியுள்ள புதிய அணை, படம் - ஏஎப்பி. தீபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டி மின் உற்பத்தியை தொடங்கியது சீனா. 2900 கி.மீ. பாயும் பிரம்மபுத்திரா நதி, திபெத்தில் இமயமலை பகுதியில் உற்பத்தியாகி இந்தி யாவில் அசாம், அருணாசலப் பிரதேசத்திலும், அண்டை நாடான வங்கதேசத்திலும் பாய்கிறது. நாடுகளுக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களில் பிரம்மபுத்திரா அழைக்கப்படுகிறது. இதனிடையே திபெத்தில் பிரம்மபுத்திராவின் குறுக்கே பல்வேறு அணைகளைக் கட்டி நீர் மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த சீனா முடிவு செய்தது. இதன்படி முதல் நீர் மின்நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. பிரம்மபுத்திராவில் சீனா அணைகளை கட்டினால், இந்தியா வுக்கு வர…
-
- 2 replies
- 423 views
-
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், அவருடைய மனைவி பெங் லிவுவனும் காதலித்து திருமணம் செய்தவர்கள். அவர்களின் காதல் கதை, சீனாவில் பிரசித்தி பெற்றது. சீன கம்யூனிஸ்டு கட்சியில் தனிநபர் துதி பாடும் வழக்கம் கிடையாது. அதையும் மீறி, மனைவியுடனான சீன அதிபரின் காதல் வீடியோவை அரசு இணையதளமே வெளியிட்டுள்ளது. ”ஜி தடா லவ்ஸ் பெங் மாமா” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோ, 3 நிமிடம் 21 வினாடிகள் ஓடுகிறது. அதில், இந்த தம்பதியின் 33 புகைப்படங்களும், 2 கேலிச்சித்திரங்களும் இடம்பெற்றுள்ளன. பின்னணியில் இரண்டு பாடல்கள் ஒலிக்கின்றன. குஜராத் உள்பட உலகின் பல நாடுகளில் இந்த தம்பதிகள் மேற்கொண்ட பயண காட்சிகள், இதில் இடம்பெற்றுள்ளன. குஜராத்தில், இருவரும் கை கோர்த்தபடி ஊஞ்சலில் அமர்ந்துள்ள காட்சிய…
-
- 2 replies
- 2k views
-
-
சீனாவுடன் பேச்சுக்கு தோவல் நியமனம் புதுடில்லி : சீனாவுடனான எல்லைப் பேச்சுக்கான சிறப்பு பிரதிநிதியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சு, மீண்டும் துவங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை உள்ளது. இந்தப் பிரச்னை குறித்தும், செயல்திட்ட ரீதியான மற்ற விஷயங்கள் குறித்து, சீனாவுடன் பேச்சு நடத்துவதற்கான சிறப்பு பிரதிநிதியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். தன் பணியின் ஒரு பகுதியாக, எல்லை பேச்சுக்களை அவர் நடத்துவார்.இவ்வாறு, பிரதமர் அலுவலகம் கூறிஉள்ளது. இதற்கு முன் பதவி வகித்த தேசிய பாதுகாப்பு…
-
- 2 replies
- 360 views
-
-
அணு ஆயுத தயாரிப்பில் பாகிஸ்தான் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. உலக அளவில் அணு ஆயுத திட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக பாகிஸ்தான் மாறி வருகிறது. 2020 ஆம் ஆண்டுக்குள் அந்நாடு, 200 அணு ஆயுதங்களை தயாரிக்க கூடிய மூலப் பொருட்களை சேகரித்து வைத்துள்ளதாக அமெரிக்காவின் வெளிவிவகாரங்களுக்கான கவுன்சில் கூறியுள்ளது. மேலும் அதன் அறிக்கையில், உலகின் பல நாடுகளில் அணு ஆயுதங்களை குறைக்க வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும், ஆசியாவில் மட்டும் அணு ஆயுத பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் அணு ஆயுத தயாரிப்பில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியா, 90 முதல் 110 அணு ஆயுதங்களை தயாரிக்க தேவையான மூலப்பொருட்களையும், ச…
-
- 0 replies
- 574 views
-
-
ஹாலிவுட்டில் மிகப்பிரபலமான நடிகர் அர்னால்ட். ஏழு முறை உலக ஆணழகன் பட்டம் வென்ற இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.. இவருக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த செப்டம்பர் மாதம் ஷங்கர் இயக்கியுள்ள ‘ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார். அப்போது நேரமின்மையால் நிகழ்ச்சியின் பாதியிலேயே கிளம்பி சென்றுவிட்டார். மீண்டும் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் இந்தியா வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் அர்னால்டு கூறியதாவது :- நான் திரைத்துறை, உடற்பயிற்சி உள்ளிட்டவைகளை ஊக்குவிக்க பல முறை இந்தியா வந்துள்ளேன். மிகச்சிறந்த நாடான இந்த…
-
- 0 replies
- 553 views
-
-
அமெரிக்க ராணுவ அமைச்சர் ராஜினாமா வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ அமைச்சர் செக் ஹேகல் திடீரென ராஜினாமா செய்தார். அமெரிக்க அதிபர் ஒபாமா அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக உள்ளவர் செக் ஹேகல், இன்று ராணுவ தலைமையகமான பென்டகன் வந்தார்.உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அமைச்சராக பணியாற்றிட தனக்கு ஆதரவு அளித்த அதிபர் ஒபாமா உள்ளிட்டோருக்கு தான் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார். ஹேகல் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஒபாமாவும் அங்கிகரீத்து முறையாக அறிவித்தார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1122799
-
- 0 replies
- 419 views
-
-
லைபீரியாவில் நடந்த 14 ஆண்டு உள்நாட்டுப் போரைக்கூட அதிக ஆள்சேதம் இல்லாமல் தாக்குப்பிடித்துவிட்டது கைசர் டௌரின் குடும்பம். ஆனால் பாழாய்ப்போன இந்த எபோலா வைரஸுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பலியானதுதான் கொடுந்துயரம். மன்ரோவியா நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலை சந்திப்பு அது. ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்காமல் வீதியில் நடமாடிக்கொண்டிருந்தனர். எஸ்தர் என்ற 5 வயதுச் சிறுமி எபோலா காய்ச்சலின் கடுமையைத் தாங்க முடியாமல் வீதியில் விழுந்த ஒரு மலர் போல தரையில் படுத்திருந்தாள். கடுமை யான வெயில் அடிக்கிறதே, இந்தக் குழந்தை சிணுங்கக்கூட காணோமே என்று மனம் பதைத்தது. அதைவிடப் பலமடங்கு வெப்பத்துடன் உள்ளே அடித்துக்கொண் டிருந்த காய்ச்சல் காரணமாக முனகக்கூட சக்த…
-
- 0 replies
- 753 views
-