உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27043 topics in this forum
-
நிலம் கையகப்படுத்துதல்: அவசர திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் தனியார் நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்வவது தொடர்பான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை திங்களன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிமத்திய அமைச்சரவையின் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இந்த தகவலை தெரிவித்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய தலைநகர் டில்லி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கைப்பட்டுள்ள குடியிருப்புகளை ஒழுங்குப்பட்டுதுதல் மற்றும் நாட்டில் நிலம் கையகப்படுத்துதல் முறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் என்று இந்த இரண்டு விவகாரங்களுக்காகவும் அ…
-
- 0 replies
- 395 views
-
-
சீனாவில் கூகிளின் 'ஜி மெயில்' முற்றாக முடக்கப்பட்டுள்ளது. கூகிள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவையான 'ஜி மெயிலை' பயன்படுத்துவதற்கு எஞ்சியிருந்த அனைத்து வழிகளையும் கிட்டத்தட்ட சீனா முடக்கி விட்டதாக கணினி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் கூகிளின் சேவைகளை முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்மூன்றாம் தரப்பு மூலமாக அங்கு ஜி மெயில் உபயோகப்படுத்தப்பட்டு வந்த வேளையில், அதை முடக்குவதற்கான நடவடிக்கைளை அதிகாரிகள் எடுத்தார்கள் என்று கூறப்படும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சீனாவில் 'ஜி மெயிலின்' பயன்பாடு முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு மிகமிகச் சொற்ப அளவிலான மின்னஞ்சல்கள் ஜி மெயில் மூலமாக சீனாவுக்குள் சென்றுள்ளன. கடந்த ஜூன் மாதம்…
-
- 0 replies
- 367 views
-
-
கனடாவில் இந்த வருடத்தில் மிகவும் அதிகமான எண்ணிக்கையானனோரை தாம் புதிதாக கனேடியர்களாக வரவேற்றுள்ளதாக கனேடிய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் இரண்டு இலட்சத்து அறுபது ஆயிரத்திற்கும் அதிகமானோர் புதிதாக கனேடிய குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ளதாக மத்திய குடிவரவு மற்றும் குடியுரிமை துறை அமைச்சர் கிறிஸ் அலெக்ஸ்சான்டர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் கனேடிய குடியுரிமையை பெற்றுக்கொண்டவர்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருட எண்ணிக்கை இரண்டு மடங்கினை விடவும் அதிகம் எனவும், கனேடிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த வருடத்திலேயே இவ்வளவு அதிகளவானோருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குடியுரிமைக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடைமுறைகளில்…
-
- 0 replies
- 271 views
-
-
பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப் பிராந்தியத் தில் இடம்பெற்ற பாரிய பனிப்பொழிவால் 15000 வாகனங்கள் நகர முடியாது ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதன் காரணமாக அந்த வாகனங்களின் சாரதிகள் சனிக்கிழமை இரவை தமது வாகனங்களிலேயே கழிக்க நேர்ந்துள்ளது. அல்ப்ஸ் பிராந்தியத்திலுள்ள பனிச் சறு க்கு தளங்களுக்கு விடுமுறையை கழிக்க பெருந்தொகையா னோர் பயணத்தை மேற்கொண்டிருந்த வேளையிலேயே இந்த பனிப்பொழிவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மேற்படி பிராந்தியத்தில் இரண்டாவது உயர்மட்ட செம்மஞ்சள் காலநிலை எச்சரிக்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இஸெரி பிராந்தியத்திலுள்ள மலைச்சரிவில் வாகனமொன்று வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளானதில் நபரொருவர் …
-
- 0 replies
- 387 views
-
-
மும்பையின் தானே நகரைச் சேர்ந்த கிளிபோர்டு மைனேஜ் என்ற 27 வயது இளைஞர் ஹாலந்து அமெரிக்க லைன் கப்பலில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், புளோரிடா கடற்கரையில் உடல் ஒன்று கரை ஒதுங்கியதாக, கடற்கரை வழியாக நடந்து சென்ற சிலர் கொடுத்த தகவலின் படி உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது கிளிபோர்டு மைனேஜின் உடல் என்பது தெரியவந்தது ”ரைண்டாம்” என்ற பெயர் கொண்ட அந்த கரிபியன் கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாம்பா துறைமுகத்துக்கு வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மைனேஜ் கடலில் விழுந்து பலியாகி இருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர். எனினும் இந்த மைனேஜ் மாயமானது குறித்து கப்பல் கேப்டன், சம்பம் நடைபெற்ற நாளின் காலை வரை எந்த அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. கப்பலில…
-
- 1 reply
- 378 views
-
-
இபோலா: ஐரோப்பிய உதவிக் கப்பல் கினியை சென்றடைந்தது இபோலா கொள்ளை நோயினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிப் பொருட்கள் கினி துறைமுகத்தை சென்றடைந்துள்ளன. இதுவரை 7500க்கும் அதிகமானவர்கள் இபோலா நோய்க்குப் பலியாகியுள்ளனர்நெதர்லாந்து கடற்படையிடம் உள்ள மிகப்பெரிய கப்பலில் மருத்துவ உபகரணங்களும் உணவுப் பொருட்களும் ஆம்பியூலன்ஸ் வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அடுத்து லைபீரியா, சியேரா லியோன் உள்ளிட்ட நாடுகளுக்கான உதவிப் பொருட்களையும் இந்தக் கப்பல் கொண்டுசெல்லவுள்ளது. கடந்த நவம்பரிலும் இந்தக் கப்பலில் உதவிப் பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டன. இதனிடையே, ஐநாவின் இபோலா செயற்திட்டத்தின் பதவிவிலகிச் செல்லும் தலைவர…
-
- 0 replies
- 283 views
-
-
வெனிசுவேலா பொருளாதார நெருக்கடி: கின்னஸ் சாதனை ஐஸ்கிரீம் கடை பாதிப்பு 28 டிசம்பர் 2014 வெனிசுவேலாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருந்த அந்நாட்டின் ஐஸ்கிரீம் கடை ஒன்று தற்போது மூடப்பட வேண்டி வந்துள்ளது. மூடப்பட்ட ஐஸ்கிரீம் கடைமெரிடா என்ற ஊரில் உள்ள கொரொமொடோ என்ற இந்த ஐஸ்கிரீம் கடை 863 ருசிகளில் ஐஸ்கிரீம் விற்று சாதனை படைத்திருந்தது. பால் பற்றாக்குறை காரணமாய் தற்காலிகமாக கடையை மூடுவதாக அந்தக் கடையின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாக வேண்டும் என்பதற்காக அடிப்படையான பொருட்களையெல்லாம் எதிர்க்கட்சிகள் பதுக்கிவைத்துள்ளன என்று நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மடுரோ குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் நாணய மாற்று ப…
-
- 0 replies
- 422 views
-
-
பெங்களூரு: பெங்களூரு சர்ச் சாலையில் இன்று இரவு குண்டு வெடித்தது. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதில் தலையில் படுகாயமடைந்த சென்னையைச் சேர்ந்த பெண் பவானி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூர் நகரில் மக்கள் கூட்டம் நிறைந்த சர்ச் சாலையில் இன்று இரவு 8.45 மணியளவில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் பவானி. இவர் சென்னையைச் சேர்ந்தவர். மற்ற இருவரின் பெயர்கள் கார்த்திக், சந்தீப் என்று தெரிய வந்துள்ளது. தலையில் படுகாயத்துடன் பவானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் கடுமையான தலைக்…
-
- 1 reply
- 688 views
-
-
நேற்று, traffic cops டிவி நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன். உலகம் முழுவதும் விதி மீறலுக்காக சாலைகளில் மடக்கப்படும் வாகனங்களில் ஒளிப் படங்கள் காண்பிக்கப் படும். ஆவலுடன் பார்ப்பேன். இம் முறை newzeland ன் நிகழ்வுகளை காண்பித்தனர். தேன் நிலவுக்கு நியூசிலாந்து போன ஒரு இந்திய ஜோடி, கணவர் காரினை ஓட்டுகின்றார். 60 KM வீதியில் 141 KM வேகத்தில் ஓடி பொலிசாரினால் நிறுத்தப் படுகின்றார். அது ஒரு வாடகை கார். உனது செய்கைக்காக, 510 டொலர் அபதாரமும், 100 நாட்களுக்கு உனது 'சர்வதேச ஓட்டுனர் பத்திரம்' suspend பண்ணப் படுகின்றது என்கிறார் போலீஸ்காரர். ஐயா, நாம் தேனிலவு வந்துளோம், இந்த licence suspend எனது மனைவியின் licence மீது கொடுக்க முடியாதா என்று கேட்டாரே ஒரு கேள்வி. வீடியோ பதிவு ந…
-
- 4 replies
- 713 views
-
-
கனடா- ரொறொன்ரோவைச் சேர்ந்த மஸூத் சித்திக் என்பவரின் 7-வயது பெண் சிறுமியான அமீனா தேவையானவர்களிற்கு இலவச உணவு வழங்க வேண்டும் என நம்பவைத்ததை தொடர்ந்து அவளின் தந்தை 1998-ல் வினா என்ற உணவகம் ஒன்றை ஆரம்பித்தார். இந்த உணவகம் புளொர் வீதி தெற்கு மற்றும் லான்ட்ஸ்டவுன் அவெனியுவில் அமைந்துள்ளது. ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை கிறிஸ்மஸ் தினத்தன்று விடுமுறை இலவச உணவை சமூகத்தில் உள்ள தேவையான 1,000 பேர்களிற்கு வழங்கி வருகின்றது. அமீனா 7-வயதாக இருக்கும் போது அதிகமான மக்கள் சுற்றுப்புறங்களிலும் புகலிடங்களிலும் பசியால் வாடுவதை கவனித்ததால் அவர்களிற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அவளிற்கு தோன்றியது. இப்போது அமீனா யு.கே.யில் சட்டம் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கின்றாள். ஆனால…
-
- 1 reply
- 389 views
-
-
மசூதிகளை இடித்து விட்டு கோவில்களைக் கட்ட வேண்டும் - சு.சாமி சர்ச்சைப் பேச்சு. வாரணாசி: சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட வரலாற்றுப் புத்தகங்களை மாற்றி எழுத வேண்டும் என கருத்துத் தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி. அதேபோல், கோவில்கள் இருந்த இடத்தில் உள்ள மசூதிகளை இடித்து மீண்டும் இந்து கோவில்களை எழுப்ப வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக்கழக விழா ஒன்றில் கலந்து கொண்டார் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி. அப்போது அவர் பேசுகையில், ‘ சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட பள்ளி, கல்லூரி வரலாற்றுப் புத்தகங்களை மாற்றி அமைக்க வேண்டும். அவை திரித்து எழுதப்பட்டுள்ளன. இங்கிலாந்து எழுத்தாளர்களால் எழுதப்பட்ட ப…
-
- 1 reply
- 532 views
-
-
ஒட்டாவா அவுட்லெட் மோல் பகுதியில் பொக்சிங் தினத்தன்று துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின் போது காயமடைந்த ஒருவர் வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என பொலிசார் கருதுகின்றனர். Tanger அவுட்லெட் மோலின் பாதசாரிகள் நடக்கும் பாதையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3;45-மணியளவில் நடந்துள்ளது. ஒரு குண்டு மட்டுமே சுடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பல பொலிஸ் அதிகாரிகள் அவ்விடத்தை சுற்றிவளைத்து சந்தேக நபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மோலுக்குள் வாடிக்கையாளர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சகல கோணங்களிலும் விசாரனை நடைபெறுகின்றது. - See more at: http://www.canadamirror.com/canada/35874.html#sthash.cXScE1pU.dpuf
-
- 0 replies
- 383 views
-
-
புதுடெல்லி, 2014 பொதுத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை தழுவியுள்ள நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியானது நாளை 131-வது துவக்க தினத்தை கொண்டாடுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக திகழ்ந்து வந்த காங்கிரஸ் கட்சி கடந்த 1885-ஆம் ஆண்டு டிசம்பர் 28-நாள் துவங்கப்பட்டது. இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது முதல் பல்வேறு பாரம்பரியம் காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இந்நிலையில், நாளை 131-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பது, கட்சியை அடிமட்டத்திலிருந்து மீண்டும் வலுப்படுத்துவது உள்ளிட்ட தொலைநோக்கு திட்டங்களில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியி்ன் 130-வது ஆண்டையொட்டி நாளை தலைநகர் டெல்லியி…
-
- 4 replies
- 635 views
-
-
வாரணாசி, சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் உள்ள வரலாற்று புத்தகங்கள் பெரும்பாலானவை ஆங்கிலேயர்களால் எழுதப்பட்டது. அவற்றில் இந்தியாவை பற்றி திரித்து கூறப்பட்ட செய்திகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. எனவே அவற்றை நீக்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் கலந்துரையாடிய அவர் பேசுகையில், 'ஆங்கிலேயர்கள் எழுதிய வரலாற்று புத்தகத்தை நீக்கிவிட்டு இந்தியர்கள் எழுதிய வரலாற்று புத்தகங்களை பாடங்களாக கொண்டு வர வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டங்களில் கூட அவர்கள் எழுதிய புத்தகங்களே பாடமாக உள்ளன. அவற்றில் இந்து அரசர்கள் பற்றிய தகவல்களை காட்டிலும் அக்பர், அவுரங்கசிப் போன்ற முகலாய பேரரசர்களின் தகவல்கள் அ…
-
- 0 replies
- 519 views
-
-
லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு கோயில் மற்றும் சிலை அமைக்கும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. கடந்த 1948 ல் மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவுக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டது. சமீபத்தில் கோட்சே இந்த நாட்டின் தேசியவாதி என்று நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக எம்.பி,. மகராஜ் கருத்தால் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தனது பேச்சை திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்தார். இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் சிட்டாபூரில் இந்து மகா சபா அமைப்பினர் கோட்சேவுக்கு கோயில் கட்டும் பணியில் இறங்கியுள்ளனர். இந்தக் கோயிலானது அடுத்தாண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி, அதாவது காந்தியின் நினைவு நாளன்று திறக்கப் படும் என கோயில் …
-
- 5 replies
- 640 views
-
-
20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வருகிறது ஒரு ரூபாய் நோட்டு! டெல்லி: ஒரு ரூபாய் நோட்டுகள் புதிய வடிவில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அச்சடிக்கப்பட்டு வெளியாக உள்ளன. இதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நோட்டின் மதிப்பை விட, அதனை அச்சடிக்க அதிகம் செலவாவதால், ஒரு ரூபாய் மற்றும் இரண்டு, 5 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது 20 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டது. 1994ஆம் ஆண்டில் ஒரு ரூபாய் அச்சடிக்கும் பணியை நிறுத்திய மத்திய அரசு, 1995ஆம் ஆண்டில் இரண்டு மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்திவிட்டது. ஒன்று, இரண்டு, ஐந்து ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டதை அடுத்து நாணயங்கள் அதிக அளவில் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், மீண்டும் ஒரு ரூப…
-
- 2 replies
- 642 views
-
-
சீனா - வென்சோகு நகரத்தில் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை! [Friday 2014-12-26 13:00] சீனாவில் வென்சோகு நகரத்தில் செயல்பட்டு வரும், பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பாரம்பரிய திருவிழாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கல்வி துறை அதிகாரிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், ஆரம்ப, மழலையர் பள்ளிகளில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நிறுத்தி வைக்கலாம். இது, அமல்படுத்தப்படுகிறதா என்பது தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்படும், என, தெரிவித்துள்ளது. மேற்கத்திய பண்டிகைகளால், சீனாவின்…
-
- 0 replies
- 378 views
-
-
அமெரிக்காவுக்கு எதிராக கடல்வழி அணு ஆயுதத் தாக்குதலுக்கு தயாராகிறது சீனா. | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. அமெரிக்காவை கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகள் மூலம் மட்டுமே தாக்குதல் நடத்த தயாராக இருந்த சீனா, தற்போது கடல் வழியாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்தத் தயாராகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தங்களது நீர்முழ்கிக் கப்பல்களிலிருந்து கடல் வழியாக தாக்கும் பேலிஸ்டிக் அணு ஆயுத ஏவுகணைகளைத் தயாரிப்பதில் முன்னேறியிருப்பதாக அமெரிக்க-சீனா பாதுகாப்பு மறு-ஆய்வு கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவழித் தாக்குதல் தொடுக்கும் ஏவுகணைகளை அமெரிக்கா சுலபமாக அடையாளம் கண்டு முதல் ஏவுதலிலேயே முறியடிக்கும் திறன் கொண்டுள்ளதால் சீனா தற்போது எளிதில் அழிக்க முடியாத கடல்வழி அ…
-
- 0 replies
- 619 views
-
-
வாத்தியார் பிள்ளை மக்கு; போலீஸ் மகன் திருடன்' என்பதை நிரூபித்திருக்கிறார் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானின் மகன் ஜேஸிசான். 2009 ஆம் ஆண்டு, சீன அரசால் போதைப் பொருளுக்கு எதிராக 'Narcotics Control Ambassador' - ஆக நியமிக்கப்பட்டவர் ஜாக்கிசான். அவரது மகனோ, சென்ற ஆகஸ்ட் மாதம், போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக பீஜிங்கில் கைது செய்யப்பட்டது சீனாவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. ஜேஸிசானுடன், தைவான் நடிகர் கோ கைய் என்பவரும் கைது செய்யப்பட்டார். ஆனால், கைது செய்யப்பட்ட 14வது நாளில் கோ ஜாமீனில் வெளிவந்துவிட்டார். ஜேஸிசான் கைது செய்யப்பட்டு நான்கு மாதங்களுக்குப் பிறகு, நேற்று சீன நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், ‘‘போதைப் பொருள் கடத்துவத…
-
- 0 replies
- 313 views
-
-
மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகளுடன் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கும் உலகளாவிய ஆயுத விற்பனைக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் நேற்று புதன்கிழமை அமலுக்கு வந்தது. ஐ.நா. சபையால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உலக நாடுகளின் ஆயுத வர்த்தக நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக் கட்டுப்படுத்தும் முதல் ஒப்பந்தம் இது. இந்த ஒப்பந்ததில் 130 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம், இனப் படுகொலை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றில் ஈடுபடும் நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதைத் தவிர்க்க, அந்த நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. ஒப்பந்தத்தில் 130 நாடுகள் கையெழுத்திட்டிருந்தாலும், தற்போதைய நிலையில் 60 நாடுகள் மட்டு…
-
- 0 replies
- 239 views
-
-
சென்னை, அகில–உலக விமான அமைப்பின் உத்தரவை ஏற்று, அடுத்த ஆண்டு (2015) நவம்பர் 24–ந்தேதியோடு கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் கால அவகாசம் முடிவடைகிறது. இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டு உலகில் உள்ள அனைத்து நாட்டு விமான நிலையங்களிலும் வரும் ஆண்டுகளில் இருந்து எந்திரங்களே சரிபார்க்கும் பாஸ்போர்ட்டு (கடவு சீட்டு) வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க அகிலஉலக விமான அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ.) முடிவு செய்துள்ளது. எனவே கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, அதனுடைய கால அவகாசத்தை வரும் 2015–ம் ஆண்டு நவம்பர் 24–ந்தேதியோடு முடிவடைகிறது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு…
-
- 0 replies
- 238 views
-
-
பல சர்ச்சைகளுக்கு பின்னர் வட கொரிய அதிபர் கிம் ஜோங்கை சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள 'தி இன்டெர்வுயூ' திரைப்படத்தை சோனி நிறுவனம் நாளை வெளியிடுகிறது. சோனி நிறுவனத்தின் இந்த முடிவை அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நமது நாட்டில் கருத்துரிமைக்கு இடம் உள்ளது. சோனி பிக்சர்ஸின் முடிவு வரவேற்கத்தக்கது. திரைப்படத்தை பார்ப்பதும் பார்க்காமல் தவிர்ப்பதும் பார்வையாளர்களின் உரிமை. தயாரான படத்தை உரிய நேரத்தில் வெளியிடுவதே நிறுவனதின் மேன்மை" என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான ஹாலிவுட் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் 'தி இன்டெர்வியூ'. அமெரிக்க புலனாய்வு மையத்தின் உத்தரவோடு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன…
-
- 0 replies
- 252 views
-
-
மரண தண்டனையில் இருந்து தப்பிய தமிழக மீனவர்கள் கிறிஸ்மஸ்சை புறக்கணிப்பு இலங்கையில் மரண தண்டனையில் இருந்து தப்பிய ஐந்து மீனவர்கள், பொலிசாரின் நடவடிக்கையை கண்டித்து கிறிஸ்மஸ் பண்டிகையை புறக்கணிப்போம் என்று கூறியுள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தங்கச்சிமடம் மீனவர்கள் எமர்சன், வில்சன், பிரசாந்த், அகஸ்டஸ், லாங்லெட் ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்தன. பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் தண்டனை இரத்து செய்யப்பட்டு 5 பேரும் இந்தியாவுக்கு திரும்பினர். இவர்கள் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடப் போவதில்லை என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீனவர் பிரசாந்த் கூறுகையி…
-
- 0 replies
- 318 views
-
-
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா! புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் கல்வியாளர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வாஜ்பாய் இருமுறை பிரதமராக இருந்தவர். மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேந்தெடுக்கப்பட்டுள்ளார். இதேபோல், கல்வியாளர் மதன் மோகன் மாளவியாவுக்கும் பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சாரண இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான மதன் மோகன் மாளவியா சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://news.vikatan.com/article.php?module=news&aid=3654…
-
- 0 replies
- 335 views
-
-
ஜெர்மனிய நகரான ட்ரெஸ்டனில், இஸ்லாமுக்கு எதிராக நடந்த பேரணியில் சுமார் 17,500 பேர் கலந்துக்கொண்டதாக உள்ளூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பேரணியில் கலந்துக்கொண்ட போராட்டக்காரர்கள் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடுவதிலும், குடிவரவு மற்றும் புகலிடம் கோருவோர் பற்றிய உரைகளை கேட்பதிலும் ஈடுப்பட்டனர். ‘ஐரோப்பா இஸ்லாமிய மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தேசப்பற்று மிக்க ஐரோப்பியர்கள்’ அல்லது பெகிடா என்றழைக்கப்படும் இந்த அமைப்பினை சேர்ந்தவர்கள், கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரந்தோரும் இஸ்லாம் மதத்திற்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஜெர்மனியில் குடியேரும் இஸ்லாமியர்களால் ஜெர்மனிய மக்களின் இயல்பு வாழ்க்கை அச்சுறுத்தலுக்குள்ளாகிறது என்றும், இஸ்லாம் அமைதியான …
-
- 11 replies
- 919 views
-