Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சென்னை: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் எல்லாம் சட்டப்படி நடக்கட்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக பா.ஜனதா தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுப்ரமணியன் சாமி ஆங்கில ஏடு ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், "இந்த வழக்கின் ஆரம்ப காலத்திலேயே தகுந்த உண்மையான ஆதாரங்களை முன்வைத்து தான் மனு தாக்கல் செய்திருந்தேன். வழக்கில் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று ஆரம்பத்திலேயே தெரியும். தீர்ப்பு சரியானபடியே வந்துள்ளது. இது நான் எதிர்பார்த்த தீர்ப்புதான். ஆனால் கொஞ்சம் தாமதமாக வந்துள்ளது. நான் போராடியது எனக்குத்தான் தெரியும் இந்த வழக்கைப் பொறுத்தவரை ஆதாரங்களை திரட்டுவதுதான் எனக்கு மிகப்பெரிய போராட்டமாக இருந்தது. தமிழகத்தின் முக்கியமான அரசியல் தலைவர் என்ப…

  2. ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் ஜாமீன் வழங்கக் கோரியும், தண்டனைக்கு தடை விதிக்கக் கோரியும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அவருடன் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது கர்நாடக உயர் நீதிமன்ற விடுமுறை அமர்வு முன்னர் நாளை விசாரணை நடைபெறுகிறது. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ரத்தினகலா முன் வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஜெயலலிதா சார்பில் அதிமுக வழக்கறிஞர்கள் அசோகன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் மனுவில், பெங்களூர் …

  3. இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் முயற்சி: தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்தது இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் முயற்சியென்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினையை தீர்ப்பதில் பிரதமர் மோடி தீவிரமாகவுள்ளார். தேர்தலுக்கு முன்பிருந்தே இது குறித்து அவர் பேசி வருகிறார். தனது பதவியே…

  4. தமிழகத்தில் நேற்றும் பரவலாக வன்முறைகள்! – இயல்பு நிலை பாதிப்பு. [Monday 2014-09-29 09:00] சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றம்,ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கியதை கண்டித்து மாநிலம் முழுவதும் பல இடங்களில் அதிமுகவினர் நேற்றும் கடையடைப்பு, பஸ்சுக்கு தீ வைப்பு, கல்வீச்சு என கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் ஆங்காங்கே சாலைமறியல், ஆர்ப்பாட்டம் மற்றும் சிறு சிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்தன. இதனால், பல மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் மேலான கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்தும் தடைபட்டது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மதியம் காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சு…

  5. இந்திய சீனா எல்லையில்..... https://www.facebook.com/video/video.php?v=1707100652847701

  6. இரண்டு லட்டு தின்றேன். தீர்ப்பு சொன்னதும் ஒன்று. தண்டனை அறிவிக்கப்பட்டதும் மற்றது. ஜெயலலிதா ஜெயிலுக்கு போனதைக் கொண்டாடவில்லை. எனக்கு ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும். காலை 11 மணிக்கு என்று சொன்னதால் 9 மணிக்கே பிரேக்ஃபஸ்ட் முடித்துவிட்டு டீவி முன் உட்கார்ந்தேன். 11 மணி தாண்டி 12, 1 என்று இழுத்துக் கொண்டே போனதில் சஸ்பென்ஸ் எகிறியது. தொடர்ந்து ஃபோன்கால் வந்து கொண்டிருந்ததால் வேறு டென்ஷன். லஞ்ச் சாப்பிட தோன்றவில்லை. பசி கிள்ளியது. ‘ஸ்பெஷல் எடிஷனா போடப்போறீங்க' என்ற கிண்டல்கூட காதில் ஏறவில்லை. அப்போதுதான் கன்னட சேனல்களில் ஃபிளாஷ் ஓடியது. நாளாகி விட்டதால் பாஷையை புரிந்து கொள்ள சிரமம் இருந்தது. ஆனால், திடீரென ஜெயலலிதா படத்தைக் காட்டி அவசரமாக வார்த்தைகளை உச்சரித்ததைப் பார்த்தபோது வி…

  7. வாருங்கள் நண்பர்களே! ஒரு களவாணி உள்ளே போன நிலையில், அடுத்த களவாணி கருணாநிதி குடும்பமும் கம்பி எண்ண தயாராகும் நிலையில், தமிழக அரசியல் எதிர்காலம் தான் என்ன? வைக்கோ, ஸ்டாலின், பாரதிய ஜனதா ஆதரவுடனான ரஜனி, விஜயகாந்த்..... அட நம்ம சீமான்.... சட்டம் புதிய பாதையினை போட்ட நிலையில்..... எழுதுங்கள் உங்கள் கருத்துகளையும், கணிப்புகளையும்....

    • 37 replies
    • 3.2k views
  8. தமிழகமெங்கும் தலைவிரித்தாடும் வன்முறை! - ஜெயலலிதா சிறைத்தண்டனையின் எதிரொலி . [saturday 2014-09-27 19:00] சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த தகவல் இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் வெளியானதையடுத்து தமிழகம் முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. அதிமுகவினர் பஸ் மறியல், கடையடைப்பு, கல்வீச்சு, கொடும்பாவி எரிப்பு, திமுக அலுவலங்கள், வீடுகள் மீது தாக்குதல் என வன்முறைகள் இடம்பெற்று வருகின்றனர். சென்னையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டப் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியம் சாமி உள்ளிட்டோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. சென்னையின் பல பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதலும் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. …

  9. பெங்களூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது. கடந்த 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்நிலையில், ப…

  10. புதுடெல்லி: டெல்லி உயிரியல் பூங்காவில் 22 வயது இளைஞர் ஒருவரை வெள்ளைப்புலி அடித்துக் கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று மதியம் 1.30 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். புலி அடைக்கப்பட்டிருந்த வேலிப்பகுதியின் அருகே நின்று அந்த இளைஞர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது உள்ளே இருந்த காய்ந்த தடாகத்தினுள் தவறி விழுந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அங்கிருந்த வெள்ளைப்புலி பாய்ந்து வந்து அந்த இளைஞரை அடித்து இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இளைஞர் எவ்வாறு உள்ளே விழுந்தார் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. சிலர் அந்த தடுப்பு வேலி மீது இளைஞர் அமர்ந்திருந்தபோது உள்ளே விழுந்ததாகவும், வேறு சிலர் தடுப்பு வே…

  11. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களுரூ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா ஜெ உட்பட குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கும் நான்கு வருட சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டதால் மக்கள் பிரதிநிதத்துவ சட்டத்தின் படி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்கிறார். தீர்ப்பு முதல்வருக்கு சாதகமாக வரும் என்று எதிர்பார்த்த அதிமுகவினர், பாதகமாக வந்ததையடுத்து கலவரத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். தீர்ப்பை வரவேற்ற தி.மு.கவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர் சில இடங்களில். சென்னை,கோவை,திருப்பூர் மற்றும் சி…

  12. மகாராஷ்டிரா முதல்வர் ராஜினாமா: ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது மகாராஷ்டிரா முதல்வர் ராஜினாமா: ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது. மும்பை, செப்.27 - மகாராஷ்டிராவில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து அம்மாநில முதல்வரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரித்விராஜ் சவாண் நேற்று தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது. 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு அக்டோபர் 15-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் எழுந்தது. இதனால் காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித…

  13. ஐ.நா. பொது அவையில் பிரதமர் மோடி பேச்சு பதிவு செய்த நாள்: சனி, செப்டம்பர் 27,2014, 9:35 PM IST நியூயார்க், 5 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று 69-வது ஐ.நா. பொது சபையில் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:- இந்தியா அமைதியான சூழ்நிலையில் வளர்ச்சி அடைவதையே விரும்புகிறது. ஒரு தேசத்தின் விதி என்பது அண்டை நாடுகளுடனான உறவிலேயே இருக்கிறது. அதனால்தான், எனது தலைமையிலான அரசு அண்டை நாடுகளின் நட்பு மற்றும் ஒற்றுமைக்கு முன்னுரிமை கொடுக்கிறது. பாகிஸ்தான் ஐ.நா. சபையில் பிரச்சனைகளை எழுப்புவதை விட ஜம்மு-காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பற்றி சிந்தித்து இருக்க வேண்டும். காஷ்மீரில் இந்தியா மாபெரும் வெள்ள மீட்பு பணிகளை மேற்கொண்…

  14. துபாய்: அரபு நாடுகள் வியந்து ஒரு பெண்மணியை பார்க்கின்றன. அப்பெண் மேஜர் மரியம் அல் மன்சூரி. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விமானப்படை வீராங்கனையான இவர், போர் விமானங்களை அனாயசமாக செலுத்துவதில் வல்லவர். இவர் எமிரேட்ஸின் முதல் பெண் விமானி என்ற பெருமைக்குரியவர் ஆவார். 38 வயதான மரியம் சிரியாவின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்திய அரபு நாட்டுக் கூட்டுப் படை போர் விமானத்தை செலுத்திய வி்மானிகளில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வாரத்தில் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்கப் படையினருடன் இணைந்து அரபு நாடுகளின் விமானப்படையினரும் அதிரடியாக குண்டு வீசித் தாக்குதல்களை நடத்தினர். எமிரேட்ஸ், சவூதி அரேபியா, ஜோர்டான், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளும் இத்தாக்கு…

  15. பெய்ஜிங்: இந்தியாவின் மங்கள்யான் விண்கலத்தின் வெற்றிக்கு சீனா புகழாரம் சூட்டியுள்ளது. இது இந்தியாவின் பெருமை மட்டுமல்ல, ஆசியாவின் பெருமை என்றும் அது வர்ணித்துள்ளது. மனித குலத்தின் மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்றாகவும் இது பதியப்படும் என்றும் சீனா பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவின் செவ்வாய் கிரக ஆய்வு செயற்கைக் கோளான மங்கள்யான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் நுழைந்திருப்பது குறித்த செய்தி அறிந்தோம். இதற்காக இந்தியாவை வாழ்த்துகிறோம். Read more at: http://tamil.oneindia.in/news/international/china-hails-india-s-mars-mission-success-as-landmark-progres-211644.…

  16. அமெரிக்காவில் சந்திக்க மறுத்த அயல்நாட்டுத் தலைவாகள்! மோடி - நவாஸ் செரீப் இடையே விரிசல்! [Friday 2014-09-26 19:00] நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா.பொதுசபை கூட்டத் தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா சென்றுள்ளார். நாளை (27–ந் தேதி) ஐ.நா.சபை கூட்டத்தில் பேசுகிறார். அப்போது, இடையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரை சந்திக்கிறார். அதே நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். அது குறித்த தகவல் பாகிஸ்தான் வெளியுறவு துறையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், நவாஸ் செரீப்பை சந்திக்க பிரதமர் நரேந்திரமோடி மறுத்து விட்டார். இது குறித்து பாகிஸ்த…

  17. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் 1000 இந்தியர்கள் இணைந்திருக்கலாம்! - இந்தியாவுக்கு தலையிடி..! [Friday 2014-09-26 20:00] உலகில் சர்வதேச பயங்கரவாத இயக்கமாக விஸ்வரூபம் எடுத்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் 1000 இந்தியர்கள் இணைந்திருக்கலாம் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் பல நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், புனிதப் போர் எனும் பெயரில் தினந்தோறும் பல மக்களை கொன்று குவித்து வருகின்றனர். ஈராக்கின் ரக்கா நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தங்களது இயக்கத்தில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் வாயிலாக ஆள் சேர்த்து வருகின்றனர். இவர்கள் செய்யும் மூளை சலவையால் பெரும்ப…

  18. பொக்கோ ஹராம் அமைப்பின் தலை­வ­ரான அபூபக்கர் ஷேகோ தம்மால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்­ள­தாக நைஜீ­ரிய இரா­ணுவம் தெரி­வித்­துள்­ளது. போர்னோ மாநி­லத்தின் கொன்­டுகா நகரில் நடை­பெற்ற மோத­லொன்­றின்­போது அவர் சுட்­டு­க­கொல்­லப்­பட்­ட­தாக நைஜீ­ரிய பாது­காப்பு பேச்­சாளர் கிறிஸ் ஒலு­கொ­லாடே செய்­தி­யா­ளர்­க­ளிடம் நேற்­று­முன்­தினம் கூறினார். பொக்கோ ஹராம் இயக்­கத்தின் தலைவர் மொஹமட் பஷீர் என அறி­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் அபூபக்கர் ஷேகோ உட்­பட பல்­வேறு பெயர்­களில் செயற்­பட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. இவர் வீடி­யோக்­களில் பொக்போ ஹராம் தலைவர் அபூபக்கர் ஷேகோ­வாக தோன்­றி­யவர் என கிறிஸ் ஒலு­கொ­லாடே மேலும் கூறினார். எனினும் அப+பக்கர் ஷேகோ எப்­போது கொல்­லப்­பட்டார் எ…

  19. உலகின் மிகப்பெரிய நிதி நிறுவன ஆலோசகராக இருந்த ஒருவர் தனது பத்து வயது மகளுக்காக வேலையை உதறிவிட்டு, தனது மகள் மற்றும் மனைவியுடன் இனி ஜாலியாக காலத்தை கழிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் பல முன்னணி நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 56 வயது Mohamed El-Erian, என்பவர் உலகின் மிகப்பெரிய நிதிநிறுவனமான PIMCO investment என்ற நிறுவனம் உள்பட பல நிதி நிறுவனங்களுக்கு நிதி ஆலோசனை செய்து வருகிறார். இவருடைய ஆலோசனையை நம்பி நிதி நிறுவனங்கள் $2 டிரில்லியன் பணத்தை பலவகையிலும் முதலீடு செய்துள்ளன. இவருடைய வருட வருமானம் $100 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பத்து வயது ஒரே மகள் எழுதிய கடித்தத்தில் இதுவரை தான் 28 நிகழ்ச்சியில் தந்தையின் அருகில்…

  20. குஜராத் கலவர வழக்கு: இந்தியப் பிரதமர் மோடிக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்! [Friday 2014-09-26 10:00] குஜராத் கலவர வழக்கு தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த மதகலவரத்தில் அப்போதைய முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடிக்கு தொடர்பு உள்ளது என்று குற்றம்சாட்டி தொடரப்பட்ட வழக்கிலேயே, இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக நியூயார்க் கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது. அவர் தற்போது, நியூயார்க் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=117526&category=WorldNews&language=tamil

  21. பிரியங்காவின் மகனை ராகுல்காந்தி தத்து எடுத்துக் கொண்டதாக டெல்லி பத்திரிகைகளில் செய்தி - பிரியங்கா மறுப்பு. [Thursday 2014-09-25 13:00] காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா காந்தி தொழில் அதிபர் ராபர்ட் வதேரா தம்பதிக்கு ரெய்கான் என்ற மகனும், மிராயா என்ற மகளும் உள்ளனர். பிரியங்காவின் மூத்த சகோதரரான ராகுல் காந்திக்கு 44 வயதாகிறது. அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதற் கிடையே பிரியங்காவின் 13 வயது மகன் ரெய்கானை ராகுல்காந்தி தத்து எடுத்துக் கொண்டதாக டெல்லி பத்திரிகைகளில் செய்தி வெளியாகியது. ரெய்கானை ராகுல்காந்தி தத்து எடுத்து பள்ளியில் சேர்த்து இருப்பதாகவும், தன்னை ரெய்கானின் பாது காவலர் என்று குறிப்பிட்டு இருப்பதாக அதில் தெரிவிக் கப்பட்டு உள்…

  22. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கத்தார் அணியினர் ஹிஜாப்புடன் தென் கொரியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருந்த கத்தார் நாட்டுப் பெண்கள் கூடைப்பந்து அணியினர், போட்டிகளின் போது, இஸ்லாமிய முறைப்படி அவர்கள் அணியும் தலை அங்கிகளை அகற்றுமாறு கோரப்பட்டதை அடுத்து போட்டிகளிலிருந்து விலகிவிட்டனர். ஹிஜாப் என்ற இந்தத் தலை அங்கியை அவர்கள் மங்கோலியாவுக்கு எதிராக நடந்த போட்டியின்போது அகற்றுமாறு கோரப்பட்டனர். அவர்கள் அதைச் செய்ய மறுத்ததை அடுத்து, இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தனர். உலகக் கூடைப்பந்து விதிகள் இதுபோன்ற தலை அங்கிகளை ஆடுகளத்தில் அணிவதைத் தடை செய்கின்றன. ஆனால் இந்த விதியைத் தளர்த்த வேண்டுமா என்பது குறித்து இந்த விளையாட்டை நிர…

  23. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை ஒழிக்க அமெரிக்கா உறுதி! – ஐ.நாவில் ஒபாமா கர்ஜனை. [Thursday 2014-09-25 09:00] வன்முறையால் உலகின் பல நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.சபை பொதுக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். போருக்கும் சமாதானத்துக்கும் இடையே உலகம் சிக்கி தவிக்கிறது.ம் ஒழுங்கின்மைக்கும் ஒருங்கிணைப்புக்கும் இடையே உலகம் சிக்குண்டுள்ளது. ஈராக், சரியாவில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புகள் அழிக்கப்பட்டாக வேண்டும். அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை ஒழிக்க பாடுபட வேண்டும். ஒழிக்க ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை ஒழிக்க அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. கெடுபிடிப் போர் காலத்துக்குப் பிந்தைய நிலையை ரஷிய நடவடிக்கை மாற்றிவிட்டது. உக…

  24. ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்ட பிரெஞ்சுப் பிணைக் கைதி ஹெர்வே கோர்டெல். | ராய்ட்டர்ஸ் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிணைக் கைதியின் தலையை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் துண்டித்தனர். பிரான்ஸ் நாட்டு அதிபர் ஹாலண்டே இதனை உறுதிசெய்துள்ளார். அல்ஜீரியாவில், ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களால் ஹெர்வே கோர்டெல் (55) பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரது தலையை துண்டித்து ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் படுகொலை செய்ததாக தகவல் வெளியானது. தகவலை உறுதி செய்த பிரான்ஸ் நாட்டு அதிபர் ஹாலண்டே: இச்செயல் மிகவும் கொடூரமானது, கோழைத்தனமானது என கண்டித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள நியூயார்க் சென்றுள்ள பிரான்ஸ் அதிபர், ஐ.எஸ். செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.